வியாழன், 22 ஜூலை, 2021

தேவாரப் பெருமை இதுதானா?

 

12.08.1944 -குடிஅரசிலிருந்து....

மூன்றாம் திருமுறை திருஞான சம்பந்தர் தேவாரப் பதிகங்களின் திருவாலவாய்ப்பண் - கவுசிகம் என்னும் தலைப்பில், 3ஆம் பாட்டு

மண்ணகத்திலும் வானிலும் எங்குமாம்

திண்ணகத் திருவாலவா யாயருள்

பெண்ணகத்தெழிற் சாக்கியப் பேயமண்

டெண்ணற் கற்பழிக்கத் திருஉள் ளமே

என்பதாகும்இதன் கருத்து என்ன?

திருஞானசம்பந்தர் தமிழ்நாட்டில் ஆரியப் பிரசாரம் செய்தவற்கு முன்புதமிழ்நாட்டில் இருந்த மக்கள் யார்திராவிடர்கள்தானா - அல்லவா?

அந்தத் திராவிட மக்கள்தானே இந்தச் சம்பந்தர் முதலிய பார்ப்பனர்கள் பிரசாரத்தாலும்ஜாலவித்தைகளாலும் பலாத்கார கொடுமைச் செயல்களாலும் சைவர்களாக ஆனார்கள்.

இந்தத் திராவிடர்களின் (பெண்களைமனைவிகளைத்தானே கற்பழிக்கத்திரு உளமே என்று சம்பந்தர் பாடினதுஅல்லது வேறு யாரையாவதாஅல்லது இதற்கு வேறு பொருளாஎன்கின்ற விபரத்தைப் பண்டிதர்கள்சைவப் பண்டிதர்கள் அல்லது கிருபானந்த வாரியார்திரு.வி.கலியாண சுந்தர முதலியார் போன்ற சைவ அன்பர்கள் விளக்கினால் கட்டுப்பாடுடையவனாக இருப்பேன்.