கந்தசஷ்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கந்தசஷ்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 9 நவம்பர், 2018

கந்தசஷ்டி என்பது என்ன?

சிவன், பிரம்மன், விஷ்ணு ஆகிய கடவுளர்கள்குறித்து எழுதப்பட்ட பல்வேறு ஆபாசங்கயைளக்கொண்ட கற்ப னைக் கட்டுக்கதைகளின் தொகுப்புகளே புராணங்கள்.

18 புராணங்கள்: பிரம்ம புராணம், பத்ம புராணம், விட்ணு புராணம், சிவ புராணம், லிங்க புராணம், கருட புராணம், நாரத புராணம், பாகவத புராணம், அக்னி புராணம், கந்த புராணம், பவிசிய புராணம், பிரம்ம வைவர்த்த புராணம், மார்க்கண்டேய புராணம், வாமன புராணம், வராக புராணம், மச்ச புராணம், கூர்ம புராணம், பிரம்மாண்ட புராணம் இதுபோக வாயுப்புராணம் உள்ளிட்ட புராணங்களும் உள்ளன.

ஸ்கந்த புராணம் கந்த புராணமானது


காஞ்சிபுரத்தில்  குமரக் கோட்டத்தின் அர்ச்சகர் காளத்தியப்ப சிவாசாரியார் மகன் கச்சியப்ப சிவாசாரியார் என்பவர் வடமொழிப் புராணத்திலிருந்து தமிழில் மொழி யாக்கம் செய்து வெளியிடப்பட்டதே கந்த புராணம். ஸ்கந்த புராணத்தின் சங்கர சங்கிதையில் சிவரகசிய கண்டத்தில் வரும் முதல் ஆறுகாண்டங்களின் தமிழ் மொழிபெயர்ப்பே கந்த புராணம்.

ஸ்கந்த புராணம் சிவபுராணங்கள் பத்தில் ஒன்றாகும். இது நூறாயிரம் சுலோகங்களால் ஆனது. அது ஆறு சங்கிதைகளைக் கொண்டது. இதில் சங்கர சங்கிதையும் ஒன்றாகும். சங்கர சங்கிதையில் உள்ள பல கண்டங்களில் சிவரகசிய கண்டமும் ஒன்றாகும். இக்கண்டத்தில் ஏழு காண்டங்கள் காணப்படுகின்றன. இவற்றில் உபதேச காண்டம் தவிர ஏனைய ஆறு காண்டங்களதும் தமிழ்த் தொகுப்பே கந்தபுராணமாகும்.

உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண் டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம் என்று ஆறு காண்டங்களை உடையது. இது 91 படலங் களையும், 10345 பாடல்களையும் உடைய இது

கந்த புராணமும் கம்பராமாயணமும்


கந்த புராணமும் கம்ப ராமாயணமும் ஒரேமாதிரியான காப்பிய அமைப்பினைப் பெற்றவை. பலவிதங்களில் இரண்டுக்கும் ஒப்புமை கூறி விளக்கிடுவர் தமிழ்ச் சான்றோர்.

இரண்டின் காலமும் பனிரெண்டாம் நூற்றாண்டு.

இரண்டிலும் காண்டங்கள் ஆறு.

ஒன்றில் முருகன் தலைவன்; மற்றதில் இராமன்.

இதில் வீரபாகு துணைவன்; மற்றதில் இலக்குவன்.

இதில் சூரபத்மன் பகைவன்; மற்றதில் இராவணன்.

இதிலே பூதகணங்கள் படைகள்; மற்றதில் குரங் கினமே படைகள்.

இரண்டிலும் பகைவனுக்கு மைந்தர்கள்.

ஒன்றில் சிறையிருந்தது சயந்தன், மற்றதில் சீதை.

இதிலே போருக்குக் காரணம் அசமுகி; மற்றதில் சூர்ப் பனகை

இதுபோல் நிறைய ஒப்பீடுகளுடன் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன.

கந்தசஷ்டி


இந்த சுப்ரமணியன் பிறப்பு அல்லது கந்தசஷ்டி என்பது புராண ஆபாசங்களில் மோசமான ஒன்றாகும். ஒருசமயம் தேவர்கள் எல்லாம் போய் சிவனிடம் கேட்டார்களாம்:

உலகில் ராட்சதர் கொடுமை அதிகமாய்விட்டது. அதை எங்களால் தாங்க முடியவில்லை. ஆகவே அதைத் தாங்கக் கூடிய அளவுக்கு அவர்களை அழிக்கக் கூடிய வல்லமை பொருந்திய ஒரு பிள்ளையைப் பெற்றுத் தர வேண்டும் என்று வேண்டினார்கள். அதற்குச் சிவனும் இணங்கி பார்வதியைத் திருமணம் செய்து கொண்டு பிள்ளை பெறும் முயற்சியில் அவளோடு கலவி செய்ய இறங்கினானாம்.

தொடர்ந்து 1,000 வருடங்கள் கலவி செய்து கொண்டே சிவனும் பார்வதியும் இருந்தார்களாம். ஆனால், குழந்தை பிறக்காததைக் கண்டு தேவர்கள், இனி பிள்ளை பிறந்தால் இந்த உலகமே தாங்காது; அவ்வளவு வலிமை உள்ளதாக இருக்கும். அது இந்த உலகத்தையே அழித்தாலும் அழித்து விடும் என்று தேவர்கள் கருதி, சிவனிடம் சென்று வேண் டிக் கலவி செய்வதை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டனர்.

அதற்கு சிவன், நீங்கள் சொல்லுவதுபோல் நிறுத்திக் கொள்வதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. நிறுத்தினால் அதிலிருந்து வரும் வீரியத்தை என் செய் வது? என்றதும், உடனே தேவர்கள் தங்களை கைகளை ஏந்தி அதில் விடும்படி கேட்டார்களாம். அதன்படி தேவர்கள் அனைவரின் கையிலும் வீரியத்தை விட்டு, சிவன் குடிக்கும்படி கூற அவர்களும் குடித்தனராம். மீதி வீரியத்தை சிவன் கங்கையில் விட்டானாம்.

கங்கை அதைத் தாங்காமல் கொதிக்க ஆரம்பித்து விட்டதாம். வீரியத்தைக் குடித்த தேவர்களுக்குக் கர்ப்ப நோய் வந்து விட்டதாம்.

அவர்கள் சிவபிரானிடம் சென்று வணங்கி, தங்கள் கர்ப்ப நோய்க்கு மருந்து கேட்க, அவர் அதற்கு, காஞ்சிபுரத்திலுள்ள சுரகரீஸ்வரர் குளத்தில் மூழ்கினால் கர்ப்பம் கலையும் என்று கூறினாராம். அதன்படி தேவர் கள் அக்குளத்தில் மூழ்கிக் கர்ப்பத்தைக் கலைத்துக் கொண்டார்களாம்.

கங்கையில் ஓடிய சிவ வீரியமானது, ஆறு கிளைகளா கப் பிரிந்து ஓடியதால், ஆறு குழந்தைகள் ஆயிற்றாம். அதனை ஆறு பெண்கள் எடுத்துப் பால் கொடுத்து வளர்த்தனராம். ஆறு பேர்கள் பால் கொடுப்பது என்பது சிரமமாக இருப்பதாக எண்ணி அவர்கள் ஆறு பேரையும் ஒன்றாக அணைத்துப் பால் கொடுக்கையில், முகம் 6 ஆகவும் (தலைகள்) கைகள் 12 ஆகவும், உடல் ஒன்றா கவும் ஆனதுதான் ஆறுமுகத்தின் கதையாம். ஸ்கலிதத்தி லிருந்து உதித்ததால், ஸ்கந்தன் என்று பெயர் உண்டாயிற் றாம்.

ஸ்கந்தம் என்றால், விந்து என்று பொருள். கந்தன் என்ற சுப்பிரமணியக் கடவுளின் பிறப்பு யோக்கியதைக் கண்டீர்களா!
- விடுதலை நாளேடு, 9.11.18