சிவராத்திரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிவராத்திரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 1 மார்ச், 2020

மகா சிவராத்திரியின் மகா யோக்கியதை!!

-  தந்தை பெரியார்

ல பிராணிகளை வேட்டையாடி கொன்று தின்பது வழக்கம், அந்தப்படி ஒரு நாள் காட்டில் வேட்டையாடி இரை தேட சென்றதில் அவனுக்குக் கொல்ல ஒரு பிராணியும் கிடைக்கவில்லை. அவன் மனக் கலக்கமடைந்து சோர்ந்து திரிந்தான். அந்நேரத்தில் அந்தக் காட்டில் ஒரு புலி, அவன் கண்ணுக்குத் தென்பட்டது. நேரமும் சற்று இருட்டி விட்டது. என்றாலும் வேடன் புலியைக் கண்டு ஓடினான். புலி விரட்டிற்று. வேடன் உடனே அங்கு இருந்த ஒரு மரத்தின்மீது அவசரமாக ஏறிக் கொண்டான்.

புலி அவனைப் பார்த்த வண்ணமே மரத்தடியில் சிறிது நின்று கொண்டிருந்து படுத்துக் கொண்டது. வேடன் அந்தப் புலியை விரட்டுவதற்காக ஆக மரத்திலிருந்த சிறு கிளைகள் தழைகள் முதலியவற்றைப் பிடுங்கி கீழே எறிந்தான். அப்போது சிறு மழைத்தூரல் விழுந்து கொண்டு இருந்ததால் அத்தழைகள் சிறிது நனைந்து விழுந்தன. இப்படியே பயந்து கொண்டு இரவு முழுதும் தூங்காமல் செய்து கொண்டு இருந்தான். சிறிது வெளிச்சம் படும்படி வானம் வெளுக்க ஆரம்பித்தவுடன் புலி ஓடிவிட்டது. இந்த நிலையில் வேடன் கீழிறங்கி வீட்டிற்குப் போய்விட்டான். பிறகு அதேதொழிலாக இருந்து சில நாள் பொறுத்துச் செத்தான். சிவன் உடனே அவனுக்குக் கைலாயத்தில் இடம் கொடுத்துவிட்டார். காரணம் என்னவென்றால்,

அந்த வேடன் தினம் உயிர்களைக் கொன்று வதை செய்து சாப்பிடுபவனாகவும், விற்பவனாகவும் இருந்தாலும், அவன் அன்றிரவு தான் பறித்துப் போடுகின்ற தழை, வில்வத்தழை என்று அறியா திருந்ததாலும், அப்போது அந்த மரத்தடியில் இருந்த ஒரு சிவலிங்கத்தின் மீது விழுகிறது என்பது தெரியாமல் போட்டிருந்ததாலும், அவனுக்குச் சிவ பக்தி, ஒழுக்கம் என்பவை சிறிதும், இல்லாமல் இருந்தாலும், அவனுக்குத் தெரியாமல் வில்வத்தழை நீரில் நினைந்து சிவலிங்கத்தின் மீது பட்டிருப்பதால், அவனுக்குக் கைலாயத்தில் இடம் கொடுக்க வேண்டியது அவசியம் என்று சிவன் கருதி மோட்சம் கொடுத்தான் என்பது இதன் கருத்து.

எதற்கு ஆக இக்கதை கற்பிக்கப்பட்டது என்றால், எவ்வளவு அயோக்கியனானாலும் இந்த விரதத்தை கொண்டாடினால் மோட்சம் கிடைக்கும் என்று மக்கள் கருதி இந்த விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்பதேயாகும். இதனால் நாம் அறியக்கிடப்பது என்னவென்றால், எவ்வளவு அயோக்கியனும் ஆரியமதத்தில் சேர்ந்தால் நன்மை அடைவான் என்கின்ற அளவுக்கு இது மதப்பிரசாரமாகும் என்பதுதான்.

இப்படியானால் ஆரிய (இந்து) மதம் காரணமாக எவனுக்காவது ஒழுக்கமேற்பட முடியுமா? எவனாவது ஒழுக்கத்தைப் பற்றிக் கவலைப்பட முடியுமா?

ஆரிய மதமும் ஒன்றே தான் என்பது அறியத்தக்கது. ஆதலால் திராவிட மக்கள், இந்த முட்டாள் தனமானதும் அயோக்கியத் தனமானதுமான இப்படிப்பட்ட மதம், சாஸ்திரம், கடவுள், பக்தி, விரதம், பூசை முதலியவற்றை நன்றாய் வெறுக்க வேண்டுமென்பது, இதனால் விளங்குகிறது.

-தந்தை பெரியார்  - “விடுதலை”, 9.2.1953

- - - - -

புலித்தோல் அரைக்கு இசைத்து வெள்ளெருக்கம்பூ சடைக்கு முடிந்து

சுடலைப் பொடிப்பூசி கொன்றைப் பூச்சூடி தும்பை மாலை அணிந்து

மண்டை ஓடு கையேந்தி எலும்பு வடம் தாங்கி

மான், மழு, ஈட்டி, சூலம் கைபிடித்து

கோவண ஆண்டியாய் விடை (மாடு) ஏறி

ஒரு காலைத் தூக்கிக்கொண்டு பேயோடு ஆடுகிறவன்.. காட்டுமிராண்டியாய் இல்லாமல் நகரவாசி, நாகரிகக்காரனாக இருக்க முடியுமா ?

லம்பாடி நரிக் குறவனுக்கும், இந்தச் சிவனுக்கும் என்ன மாற்றம் ?

சைவர்களே..!

சைவப் புலவர்களே..!

அருள்கூர்ந்து கூறுங்கள்.

இந்தக் காட்டுமிராண்டிக்கால சிவனுக்குத்தான் மகா சிவராத்திரி யாம்..!!

இவன் யோக்கியதை என்ன தெரியுமா ?

தாரு காவனத்து ரிஷிப் பத்தினி களின் கற்பைச் சூறை யாடியதால், ரிஷிகள் கொடுத்த சாபத்தினால் அவன் சிசுனம் (ஆண் குறி) அறுந்து வீழ, அதனைப் பார்வதி தாங்கிக் கொண்டாளாம் -அது தான் சிவலிங்க உருவம் என்பது..!!

- ஈ.வெ.ரா.

(விடுதலை,18.7.1956)

- விடுதலை நாளேடு 20 2 20


ஞாயிறு, 3 மார்ச், 2019

சிவராத்திரியின் யோக்கியதை

தந்தை பெரியார்
சிவராத்திரி என்பது ஒரு பட்டினித் துக்கநாள் ஆகும். வைஷ்ணவர்கள் சுவர்க்கம் வேண்டி, பட்டினி கிடக்கும் வைகுண்ட ஏகாதசியைப்போல சைவர்கள் என்று கருதக்கூடியவர்கள் சிவன் ராத்திரியும் (கைலாச யாத்திரை, சமாதி) பட்டினி விரத விழா. தை, மாசி போன்ற காலங்களில் குளிர் நிறைந்துள்ள படியால், உடல் அங்கங்கள் இயக்கம் தடுமாறும்; உண்ணும் உணவு போன் றவை சரியானபடி ஜீரணம் ஆகாமல் இருக்கும்; வயிற்று இரைச்சல் போன்ற வயிற்றுக் கோளாறு உண்டாகும்.
ஆனால், இந்தச் சிவராத்திரி விரத மகிமைப்பற்றிக் கூறப்படும் புராணக் கதைகளோ அறிவுக்கும், இயற் கைக்கும், மக்கள் நடப்பு-பண்பாடுகளுக்கும் பொருந் தாதவை ஆகும். இந்த விரதம் பற்றிக் கூறப்படும் புராணக் கதையைப் பாருங்கள்!
முன்னொரு சமயம் ஊரும் பேரும் இல்லாத ஒரு வேடன் வேட்டைக்குச் சென்றானாம். அவனுக்குக் காலைமுதல் இரவு வரை காட்டில் அலைந்தும் எந்த விலங்கும் அவனுக்குத் தென்படவில்லையாம். இரவு நெருங்கும் நேரமானதால் விலங்குகள் நடமாட்டம் ஆரம்பித்தது. ஒரு புலி இந்த வேடனைக் கண்டு விட்டது. இவனைப் பின் தொடர்ந்து வந்தபடியால், அவன் உயிர் தப்ப ஓடி, ஒரு பெரிய வில்வமரத்தின் மேல் ஏறிக்கொண்டானாம். அப்போது மழையும் பெய்தது. அந்தப் புலியும் விடாமல் துரத்தி வந்து அவன் ஏறியிருந்த மரத்தின் கீழ் தங்கல் போட்டது. புலியும் அவன் இறங்கு கிறானா என்று பார்த்து கொண்டே கீழே படுத்து இருந்தது. வேடன் பசி மயக்கத்தில் அதிகக்களைப்பு அடைந்து, வீடு செல்ல எண்ணியபடியால், அந்தப் புலியை விரட்ட, அந்த வில்வமர இலைகளைக் கொத்து கொத்தாய் பறித்து அந்தப் புலியின் மேல் வீசினான். மழை யின் காரணத்தால் அந்த இலைகளில் உள்ள ஈரப்பசையால் புலிக்குப் பக்கத்தில் உள்ள குத்துக்கல் மீது அந்த இலைகள் விழுந்தன. அது ஒரு சிவலிங்கமாம்; அன்று இரவு வேட்டை கிடைக்காததால் அந்த வேடன் பகல் முழுதும் பட்டினி.
(வேடர்கள் பொதுவாக காலையில் பழைய உணவு சாப்பிட்டு விட்டு வேட்டைக்கு வந்து வேட்டையாடிய விலங்கைக் கொண்டுசென்று, இரவு சமைத்துச் சாப்பிடுவது வாடிக்கையாதலால், பகல் முழுதும் பட்டினி என்பது சாதாரணம் தான்)
அவன் மாலை மழையில் நனைந்து குளித்தது போல் ஆயிற்றாம்; அவன் புலியை விரட்ட மரத்திலிருந்து கீழே போட்ட வில்வ இலைகள் மழையின் நீரால் நனைந்து, அவனை அறியாமல் , அவன் அறியாத லிங்கத்தின் மீது விழுந்தனவாம். எனவேதான் அன்று சிவராத்திரி, இரவில் லிங்கபூசை செய்தது போல் ஆயிற்றாம். அவன் இவ்விதம் செய்தது சிவனைக் கும்பிடவேண்டும் என்ற எண்ணமில்லாமல் போனாலும், சந்தர்ப்ப வசத்தால் பகல் முழுதும் பட்டினி கிடந்தது, சிவராத்திரி - பகல் உபவாசம் இருந்தது போல் ஆயிற்றாம். புலியை விரட்ட மழைத் தண்ணீ ரால் நனைந்த வில்வ இலைகள் லிங்கத்தின் மீது தற்செயலாய் விழுந்தபடியால், அதைக் குளிப்பாட்டி, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ததுபோல் ஆயிற்றாம். இதனால் அவன் வான் உலகை அடைந் தானாம்.
அடுத்த கதை - ஒரு பார்ப்பன வாலிபனைப் பற்றியது. இவன் சுத்த அயேக்கியனும் ஒழுக்கக் கேடனும் ஆவானாம். இதனால் ஊரை விட்டுத் துரத்தப்பட்டானாம். காலை முதல் இரவு முடிய உண்ண உணவு இல்லாமல், பசியால் வாடிய அவன் இரவு வந்ததும் ஒரு சிவன் கோயிலை அடைந்தானாம். அப்போது அந்த கோயில் அர்ச்சகன் பொங்கல் படையலை அந்த ஈசுவரன் சிலை முன் வைத்து விட்டு வெளியில் சென்று இருந்தான். இந்தப் பார்ப்பன வாலிபன் யாரும் இல்லாத சமயம் அங்கு சென்றபடியால் அவற்றை எடுத்து உண்ண ஆசைப்பட்டு, என்னென்ன பலகாரங்கள் இருக்கின்றன என்பது தெரியாதபடியால், இருண்ட வெளிச்சமாக இருந்ததைக் கருதி, கோயிலில் இருந்த விளக்கின் திரியை தூண்டிவிட்டானாம். அப்போது திரும்பி வந்த அர்ச்சகன் பார்ப்பன இளைஞன் பலகாரங்களை மூட்டை கட்டுவதைக் கண்டு ஆத்திரத்தில் அவனை அடித்துக் கொன்றான். அன்று மகாசிவராத்திரியாம்.
ஒழுக்கங்கெட்ட அந்தப் பார்ப்பான், காலை முதல் இரவு வரை பட்டினி இருந்தது மகாசிவராத்திரி பகல் உபவாசம் ஆனதாம். திருட எண்ணி, பிரசாதங்களை பார்ப்பதற்கு விளக்கு வெளிச்சத்தைத் தூண்டியது சிவராத்திரியில் ஈசுவரலிங்க சிலைக்கு தீபாராதனை செய்தது போலவும், பிரசாத நிவேதனம் செய்தது போலவும் ஆனதாம். இதனால் பார்ப்பன பூசாரியால் கொல்லப்பட்டதும் நேராக சிவலோகம் சென்றானாம். சிவராத்திரியில் மனிதக்கொலை; அவன் கொலை செய்தது எந்தப் புண்ணியத்தைச் சேர்ந்ததோ? கொலை செய்த அர்ச்சகனுக்கு எந்த லோகம் அளிப்பதோ? என்பது எல்லாம் அதில் கூறப்படவில்லை.
மனிதனுக்குப் பிறப்பு அடுத்து இறப்பு வருவது இயற்கைத் தத்துவம் என்பது உண்மை. உலகில் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வெருவருக்கும் இயல்பாய் தெரிந்த உண்மையாகும். ஆனால், இந்த சிவராத்திரிகள் விரதங்களின் முக்கிய அடிப்படை, பகலை அடுத்து இரவு வருவதுபோல் , மனிதருக்குப் பிறப்பை அடுத்து இறப்பு வருவது என்பதுதானாம். இதைத் தெரிந்து கொள்ள பூசையும் விரதமும் வேண்டுமா? என்று தான் நாம் கேட்கின்றோம்.
இந்த பாழும் அர்த்தமற்ற-பொய்யான - ஒரு காசுக்கும் உதவாத நமக்கு இழிவையும் அவ மானத் தையும் தருவதான பண்டிகைகளுக்கும், உற்சவத் திற்கும், பூசைக்கும், சடங்குக்குமாகப் பொரு ளையும் பணத்தையும் விரயப் படுத்துவது மக்களின் அறியா மையும், சுயநலக்காரர்களின் சூழ்ச்சியும், புரோகிதர் களின் ஆதிக்கமும், தந்திரமுமே ஆகும். இவைகளை உடனடியாக ஒழிக்க வேண்டும்.
- விடுதலை நாளேடு, 3.3.19

வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

கபாலி!

வைஷ்ணவர்கள் சுவர்க்கம் வேண்டி பட்டினி கிடக்கும் வைகுண்ட ஏகாதசியைப்போல சைவர்கள் என்று கருதக் கூடியவர்களின் சிவராத்திரியை தை, மாசி குளிர்காலங்களில் கொண்டாடுவார்கள்.

சைவம்-வைணவம்என் பதுஇந்துமதத்துக்குள்போட் டிக் கடைகள்தான். பெயரள வில்தான்இந்துமதம்-அதற்குள் ஆயிரத்தெட்டு போட்டிகள், முரண்பாடுகள், அடிதடிகளுக்குப் பஞ்சமே இல்லை.

அதுவும் இந்த சிவன் இருக்கிறானே - அவன் உருவத் தைப் பார்த்தாலே தெரிந்துவிடும் - ஒரு காட்டுமிராண்டிக் கடவுள் என்பது.

சிவன்பற்றி தந்தை பெரியார் படம் பிடிக்கிறார்.

புலித்தோல் தரைக்கு இசைத்து

வெள் ளெ ருக்கம்பூ சடைக்கு முடிந்து

சுடலைப் பொடிப் பூசி

கொன்றைப் பூச்சூடி

தும்பை மாலை அணிந்து

மண்டை ஓடு கையேந்தி

எலும்பு வடந்தாங்கி

மான், மழு, ஈட்டி, சூலம் கைபிடித்து

கோவண ஆண்டியாய் விடை(மாடு) ஏறி

ஒரு காலைத் தூக்கிக் கொண்டு

பேயோடு ஆடுகிறவன்

காட்டுமிராண்டியாய் இல்லாமல்

நகரவாசி - நாகரீகக்

காரனாய் இருக்க முடியுமா?

லம்பாடி நரிக்குறவனுக்கும்

இந்தச் சிவனுக்கும் என்ன

மாற்றம் சைவர்களே!

சைவப் புலவர்களே

அருள்கூர்ந்து கூறுங்கள்.

- ஈ.வெ.ரா.

(‘விடுதலை', 18.5.1956)

இடுப்பில்புலித்தோல்,உடல் முழுவதும்சுடுகாட்டுச்சாம்பல், மண்டை ஓடு கையில், மழு, ஈட்டி, சூலம் வகையறாக்கள் ஆயுதங்கள்-காளைமாட்டு வாகனம்- இப்படி இருப்ப வன்மனிதக்காட்டுவிலங் காண்டிக்காலத்தில் உருவகப் படுத்தப்படுபவனாகத் தானே இருக்க முடியும். கபாலி என்றால் மண்டை ஓட்டைக் கையில் ஏந்தியவன் என்று பொருள்?

Man Created God in his own image - மனிதன் தன் னைப் போலவே தன்னால் உண்டாக்கப்பட்ட கடவுளையும் கற்பித்தான் என்பது இதுதான்.

மகாவிஷ்ணு பிற்காலத்தில் தோற்றுவிக்கப்பட்டவன்; அவன் கையில் சங்கு சக்கரம் இருக்கிறது. கொஞ்சம் வளர்ச்சி அடைந்த காலகட்டத்தில் இவன் உருவாக்கப்பட்டவன் என்கிறார் தந்தை பெரியார்.

மனிதன் மிருகங்களோடு மிருகமாய் காட்டுக் குகைகளில் வாழ்ந்து வேட்டையாடிப் புசித்துக் கொண்டிருந்த காட்டு விலங்காண்டிக் காலத்தில் உருவகப்படுத்தப்பட்ட கட வுளை, ஒரு நாள் கண் விழித்து, விரதம் இருந்து பூஜித்தால் சொர்க்கம் கிடைக்கும் என் றால், இதன் பொருள் என்ன? இவன் சிந்தனை இன்னும் காட்டுவிலங்காண்டிக் காலத்தில் சஞ்சரித்துக் கொண்டு கிடக்கிறது என்பதுதானே!

- மயிலாடன்
- விடுதலை நாளேடு, 16.2.18

வியாழன், 15 பிப்ரவரி, 2018

மகாசிவராத்திரி

முதல் கதை

‘மகாசிவராத்திரி' தொடர் புடைய இரு புராணக் கதை களைப் பார்ப்போம்...

ஏழைக் குடியானவன் ஒரு வன் விறகு பொறுக்க காட்டுக்குச் சென்றான். வேலையில் கண் ணும் கருத்துமாய் இருந்ததால் நேரம் போனது தெரியவில்லை. இருட்டிவிட்டது. விலங்குகளின் சத்தம் கேட்டு பயந்தவன், ஒரு மரத்தின் மீது ஏறினான். கிளைகளுக்கு நடுவில் அமர்ந் தான். 'தூங்கினால் கீழே விழுந்து விடுவோமே?' என்று பயந்தான்.

தூக்கம் வராமல் இருக்க... மரத்தில் இருந்த இலைகளைப் பறித்து சிவனின் பெயரை உச்சரித்தபடி கீழே போட ஆரம்பித்தான். இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்தவன், பொழுது புலர்ந்ததும் மரத்தைப் பார்த்தான். அமர்ந்திருந்தது ‘வில்வம்'.

அவன் போட்ட இலைகள் அனைத்தும் மரத்தின் கீழ் லிங்கத்தின் மீது குவிந்திருந்தது. அன்று மகாசிவராத்திரி என்பதும் அவனுக்குத் தெரியாது. பலனை எதிர்பார்க்காமல் செய்த பூஜை, இறைவனை மனம் குளிரச் செய் தது. அவனுக்கு காட்சித் தந்து அருளினார். அவன் பெரும்பேறு பெற்றான் என்கிறது புராணம்..

மற்றொரு கதை

ஒருமுறை பிரம்மனும், மகா விஷ்ணுவும் தங்களுக்குள் யார் சிறந்தவர் என்று விவாதித்தனர். அது அவர்களுடைக்கிடையே சண்டையாகமாறியது.அப் போது, எதிரில் லிங்கத் திருமேனி தோன்றியது. அதன் உச்சி அல்லது அடி பாகத்தை காண்பவரே உயர்ந்தவர் என்று லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட அசரீரி கூறியது.

லிங்கத்தின் மேல் பகுதியை நோக்கி சென்றார் பிரம்மன். விஷ்ணு பகவான், கீழ் பாகத்தை நோக்கினார். இருவராலும் எங்கே முடிகிறது என்பதைக் காண முடியவில்லை. மகாவிஷ்ணு இதனை ஒத்துக்கொண்டார். ஆனால், பிரம்மன்... லிங்கத்தின் மேல் பாகத்தை தான் கண்ட தாக பொய் சொல்ல, அதற்குச் சாட்சியாக தாழம்பூவை கொண்டு வந்தார்.

இதனைக் கேட்டு சிவ பெருமான் கோபமுற்று, ‘இனி பூலோகத்தில் உன்னை வணங்க மாட்டார்கள்' என்று சபித்தார். அனைத்துக்கும் தொடக்கமாக (ஆதி) விளங்கும் அவருக்கு முடிவே (அந்தம்) இல்லை, என்று புராணம் கூறுகிறது.

மகாசிவராத்திரி தரிசன பலன்

ரிஷிகளும், மன்னர்களும் நடத்தும் ‘அசுவமேதயாக' புண் ணியத்தை மகாசிவராத்திரி தரிசனம் தரும்.

வாழ்நாளில் ஒருவர் செய்த பாவங்கள், சிவனை நான்கு கால பூஜை செய்து வழிபடுவதால் நீங்கும்.

தொடர்ந்து 24 ஆண்டு கள்மகாசிவராத்திரிவிரதம் இருப்பவரின் 21 தலைமுறை களும் நற்கதி அடைந்து முக்தி அடைவார்கள்.

- வாராந்திர ‘ராணி‘ 18.2.2018, பக்கம் 30

இந்த இரு கதைகளும் எதைக் காட்டுகின்றன?

முதல் கதை கடவுள் தற் பெருமைக்காரர் என்பதைக் காட்டவில்லையா?

இரண்டாவது கதை கடவுள் களுக்குள்ளும் போட்டி உண்டு என்பதையும், கடவுள் பொய் சொல்லக் கூடியவர் என்பதையும் விளக்கவில்லையா?

மும்மலங்களையும் அறுப் பது (ஆணவம், கன்மம், மாயை) என்ற யோக்கியதை இந்துக் கடவுள்களுக்குக் கிடையாதா?

பக்தி ஒழுக்கத்தை வளர்க் குமா சொல்லுங்கள்!

- மயிலாடன்

- விடுதலை நாளேடு, 13.2.18

மடமைகளைப் பரப்பவே சிவராத்திரி



மகா பிரளயம் ஏற்பட்டதால் உலகமே மூழ்கிப் போனது. திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை மீட்டான். அதன்பொருட்டு சற்றே கர்வமும் கொண்டான். மீண்டும் பூலோகத்தில் உயிர்களை உற்பத்தி செய்ய நினைத்த திருமால், தன் நாபிக் கமலத்திலிருந்து பிரம்மாவைத் தோற்றுவித்தான்.  படைக்கும் திறனை பிரம்மாவுக்கு அளித்துவிட்டு பரமதிருப்தியுடன் பாற்கடலுக்குச் சென்று உறக்கத்தில் ஆழ்ந்தான். விஷ்ணுவின் கட்டளைப்படி பிரம்மா சகல ஜீவராசிகளையும் படைத்து உலகத்தை நிரப் பினான். பின்னர், மூவுலகங்களையும் சுற்றிப்பார்த்து தன் படைப்பின் வினோதங்களைக் கண்டு மகிழ்ச் சியடைந்தான்.

இத்தனை உயிர் வர்க்கங்களைப் படைத்த தன்னை விட, இந்த உலகத்தில் வேறு யாரும் சிறந்த வரில்லை என்று ஆணவம் ஏற்பட்டது.

பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும்

ஏற்பட்ட மோதல்

நானே முழுமுதற் கடவுள் என்று மார்தட்டிக் கொண்டான் பிரம்மா. இதனால் பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் சண்டை ஏற்பட்டது. பிரம்மனே ! வீண் அகங்காரம் பிடித்து அலையாதே. உலகங்களில் உயிர்களைத் தோற்றுவித்தது நீதான். அதில் சந் தேகமில்லை. ஆனால், கடலையும் கடல் சூழ்ந்த பூமியையும், திசைகளையும் மலைகளையும், இன்னும் பல உலகங்களையும் மேலான உயிர்களையும் படைத்தவன் நான்தான். ஏன், பிரம்மனாகிய உன்னை உருவாக்கியவனும் நான்தான். உயிர்களைப் படைக்கும் சக்தியை உனக்குத் தந்தவனும் நான்தான். எனவே, என்னுடன் மோதாதே. உன்னிலும் பெரியவன் நான்தான் என்பதைப் புரிந்து கொள்' என்றான் விஷ்ணு. மோதலால் இந்த. வாக்குவாதம் நீண்டு கொண்டே போனது. இந்திரன் முதலான தேவர்களும், வசிஷ்டர் முதலான ரிஷிகளும் சமாதானம் செய்து வைக்க முயற்சித்து தோற்றுப்போனார்கள்.

வாக்குவாதம் முற்றி, பிரம்மனும் விஷ்ணுவும் யுத்தம் செய்யவே தொடங்கிவிட்டார்கள். இருவரும் ஒருவர்மீது ஒருவர் அஸ்திரங்களைச் செலுத்திக் கொண்டிருந்த போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

இருவருக்கும் இடையே ஒரு பெரியஅக்னிப் பிழம்புவானளாவத்தோன்றியது.அந்தஅக்னிப் பிழம்பில் பிரம்மா, விஷ்ணு இருவரின் அஸ்திரங் களும், பாணங்களும் கலந்து மறைந்தன.

ஆதியும் அந்தமும் தெரியாத அந்த ஜோதிப் பிழம்பைக் கண்டு விஷ்ணுவும், பிரம்மனும் கலக்க மடைந்தார்கள். அப்போது அந்த அக்னிப் பிழம்பின் நடுவிலிருந்து ஓர் அசரீரி குரல் கேட்டது.

‘உங்களில் யார் இந்த ஜோதியின் அடியையோ முடியையோ முதலில் கண்டு வருகிறீர்களோ அவரே பெரியவர். அவரே பரப்பிரம்மம்' என்று கூறியது.

திருமால் வராக (பன்றி) அவதாரம் எடுத்து பூமியைத் துளைத்துக் கொண்டு அக்னிப் பிழம்பின் அடியைக் காணப் புறப்பட்டதுபோல், பிரம்மன் அன்னப் பறவை உருவம் கொண்டு ஜோதியின் முடியைக் காணப்பறந்தான்.

இருவரும் போய்க்கொண்டே இருந்தபோதிலும்,  அடியையும், முடியையும் இருவராலும் காண முடிய வில்லை. விஷ்ணு தன் தோல்வியை ஒப்புக்கொண்டு பாதாளத்திலிருந்து பூலோகத்துக்குத் திரும்பிவிட்டான்.

அன்னப்பறவையாக மாறிப் பறந்து கொண்டிருந்த பிரம்மனும் சோர்ந்து போனான்.

அப்போது தாழம்பூ மடல் ஒன்று மேலிருந்து கீழே விழுந்து கொண்டிருந்தது. அது ஜோதி வடி வாகிய சிவனின் சிரசிலிருந்துதான் கீழே வந்து கொண்டிருந்தது.

பிரம்மன் அந்தத் தாழம்பூவிடம், ஜோதியின் முடியைத்தான் கண்டுவிட்டதாகத் தன்னுடன் வந்து பொய்சாட்சி கூறுமாறு கேட்டுக்கொண்டு திரும்பவும் புறப்பட்ட இடத்துக்கே வந்து சேர்ந்தான்.

விஷ்ணுவிடம், அக்னிப் பிழம்பின் முடியைத் தரிசித்து விட்டதாக பிரம்மன் பொய்யுரைத்தான்.

அக்னிப் பிழம்பிலிருந்து சிவன் தோன்றி விஷ் ணுவுக்கு சக்ராயுத வரம் அளித்து, பொய்யுரைத்த பிரம்மனுக்கு என தனியே வழிபடும் கோயில் பூலோகத்தில் இருக்காது என்றும்,  தாழம்பூ பூஜைகளில் பயன்படுத்த கூடாது என்றும் சாபமிட்டானாம்.

பிரம்மா, விஷ்ணு இருவருமே இந்த ஜோதி சொரூபம் தங்களுக்கும் மேலான சக்தியே என்பதை மட்டும் தெளிவாகப் புரிந்து கொண்டார்களாம்.

‘அனைத்துக்கும் மேலான பரம்பொருளே! தங்களின் பெருமையையும் சக்தியையும் நாங்கள் உணர்ந்து கொண்டோம். கருணையுடன் தாங்கள் எங்களுக்குத் தரிசனம் தந்து அருள்பாலிக்க வேண்டும் பெருமானே' என்று அடிபணிந்தனராம்.

ஜோதியின் சுடர் ஒளிக்குள்ளிருந்து சூலமும் உடுக் கையும் ஏந்தியவனாக, புலியாடை அணிந்தவனாக, சந்திரனை ஆபரணமாகக் கொண்டு, சிரசில் கங்கை யைத் தாங்கியவனாக அருள்பாலிக்கும் வடிவுடன் சிவன் அவர்களுக்குக் காட்சி கொடுத்தானாம்.

திருமாலே! நான்முகனே! உங்களுக்குள் எதற்காக இந்த வீண் சச்சரவு? தேவையற்ற அகந்தையை மனத்தில்வளர்த்துக்கொண்டுமற்றவருடன் நம்மை ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கினால், கலக்கமும் குழப்பமுமே மிஞ்சும். நிர்மலமான மனத்துடன் தத்தம் கடமையைச் சரிவரச் செய்பவர் எல்லோருமே பெரியவர்கள்தான்' என்று அறிவுரை கூறி ஆசீர்வதித் தானாம்.

அத்துடன் சிவதத்துவத்தையும் திருமாலுக்கு உபதேசித்தானாம். திருமால் அதை பிரம்மனுக்கு உபதேசித்தானாம். இந்தவிதமாக விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் இடையே ஒளி வடிவாக, சிவன் விசுவரூப தரிசனம் தந்த காலம் மாசி மாதமும் தேய்பிறைச் சதுர்த்தசியும் கூடிய இரவுக் காலம். அதாவது, அதுதான் மகா சிவராத்திரி காலம் என்று புராணக்கதை அளந்துள்ளனர்.

திருமாலும், பிரம்மனும் பூமியை மய்யமாகக் கொண்டே அடிமுடியைத் தேடினார்களாம்.  அறி வியல் வளர்ச்சிக்கு முந்தைய காலகட்டத்தில் அறிவுக்கு பொருத்தமில்லாத புரட்டுகளை, மக்க ளின் அறிவைப் பாழ்படுத்தும் வகையில் அளந்த கதையாகத்தான் புராணக் கதைகள் உள்ளன.

அறிவுக்கு பொருத்தமில்லாதது

அண்டவெளியில்கோள்கள் யாவும் சூரியனை மய்யமாகக்கொண்டு சுற்றி வருகின்றன. அப்படி இருக்கையில், பூமியைமட்டுமே மய்யப் புள்ளியாகக் கொண்டு அடிமுடி தேடிய கதை அறிவுக்கு பொருத்தமில்லாததுதானே.

புவியில் உள்ள அனைத்துவித கனிமங்கள் குறித்தும் செயற்கைக்கோள் பதிவுகள் படம்பிடித்து காட்டுகின்றன.

அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள நிலையில், இன்னமும் அடி, முடி காண முடியாதவன் என்று கூறிக்கொண்டு, அதற்கு கற்பனைக் கதை களைக் கூறிக்கொண்டு, அதற்காக வழிபாடுகள் என்று காலத்தையும், பொருளையும், சிந்தனையையும் பாழாக்கலாமா?
- விடுதலை நாளேடு, 13.2.18