மகாபாரதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மகாபாரதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

மகாபாரதம் உண்மை வரலாறா? கற்பனைக் கதையா? -இலக்குவனார் திருவள்ளுவன்

 

வேதகால இலக்கியங்களில் கவுரவர்கள் மட்டும்தான் குறிப்பிடப்படுகிறார்கள் என்று மகாபாரத ஆராய்ச்சியாளர் எட்டுவேடு ஆங்கின்சு (Edward Angnes) குறிப்பிடுகிறார். பாண்டவர்களைப் பற்றிய குறிப்பு வேதகால இலக்கியங்களில் இல்லை. பிராமணங்களிலோ, சூத்திரங்களிலோ பாண்டவர்களைப் பற்றிய குறிப்பு எங்குமே காணப்படவில்லை. மார்க்குசு முல்லர் என்னும் ஆராய்ச்சியாளரின் கருத்தும் இதேதான். இதிலிருந்து கி.மு 5ஆம் நூற்றாண்டில் பாண்டவர்கள் பற்றிய குறிப்பு இல்லை என்பது தெரிகிறது.

மகாபாரதப் போருக்கு ஆதாரம் இல்லை

(இ)ரிக்கு வேதத்திலே பரதவர்களின் அரசன் சுதாசுகும், இரவி நதிக்கரையில் அமைந்த 10 அரசுகளின் கூட்டாட்சிக்கும் நடைபெற்று போரைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிய அளவில் நடைபெற்ற இந்தப் போர் பற்றி குறிப்பிடப்படும் பொழுது, தேசிய அளவில் நடைபெற்றதாக சொல்லப்படுகின்ற மகாபாரதப் போர் பற்றி எந்தக் குறிப்பும் (இ)ரிக்கு வேதத்திலே இல்லை. மகாபாராதப் போர் நடைபெற்று இருந்தால் நிச்சயமாக அது (இ)ரிக்கு வேதத்திலோ  மற்றைய வேத கால இலக்கியங்களிலோ குறிப்பிடப்பட்டு இருக்கும்.

மகாபாரதப் போர் நடைபெற்ற இடம் என்று சொல்லப்படுகின்ற குருசேத்திரத்தை ஒரு புனித இடம் என்று மட்டுமே வேத இலக்கியங்கள் சுட்டிக் காட்டுகின்றனவே தவிர ஒரு போர் நடை பெற்ற இடமாக அஃது எந்த இடத்திலும் சுட்டிக்காட்டப் படவில்லை.

இவற்றைவிட மகாபாரதப் பாத்திரங்கள் குறித்தும் மகாபாரதப் போர் குறித்தும் பல முரண்பாடான தகவல்கள் மகாபாரதக் கதையிலும், வேறு இலக்கியங்களிலும் காணப்படுகின்றன.

மகாபாரதத்தில் அருச்சுனன் இந்திரனின் புதல்வனாவான். ஆனால் சதபத பிராமணத்தில் இந்திரனும் அருச்சுனனும் ஒன்றே என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

வேடிக்கை, வியப்பான கணக்குகள்

இதைவிடப் போரில் பங்கு பற்றிய படைகள் குறித்து மகாபாரதத்தில் தெரிவிக்கப்படுகின்ற கணக்குகள் மிகவும் வேடிக்கையானவை.

மகாபாரதப் போரில் 18 “அக்குரோணிப்” படைகள் பங்கு பற்றியதாக மகாபாரதம் கூறுகிறது. இதில் 11 அக்குரோணிப் படைகள் கவுரவரவர்களுடையதும், 7 பாண்டவர்களுடையதும் ஆகும்.

ஓர் அக்குரோணிப் படை என்பது பின்வரும் கணக்கைக் கொண்டது.

21,870 இரதங்கள்

21,800 யானைகள்

65,610 குதிரைகள்

1,09,350 காலாட்படையினர்

ஆகவே குருசேத்திரத்தில் அணிவகுத்து நின்ற படைகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

21,870 இரதங்கள் X 18 = 393,660 இரதங்கள்

21,800 யானைகள் X 18 = 392,400 யானைகள்

65,610 குதிரைகள் X 18 = 1,180,980 குதிரைகள்

1,09,350 கலாட்படையினர் X 18 = 19,78,300 வீரர்கள்

எந்த ஒரு நாட்டிலாவது இத்தனை பெரிய படைகள் நிற்கக் கூடிய போர்க்களத் திடல் உண்டா? இத்தனை பெரிய படை கி.மு 5ஆம் நூற்றாண்டில் இருந்திருக்க முடியுமா? கி.மு 5ஆம் நூற்றாண்டில் இருந்த மிகக் குறைந்த மக்கள் தொகையில் இவ்வளவு பேர் படைகளில் இருந்திருக்க வாய்ப்பு உண்டா? அக் காலத்தின் போக்குவரத்து வசதிகள் இத்தனை பெரிய படைகள் வருவதை அனுமதித்து இருக்குமா? ஆகவே மகாபாரதம் என்பது ஓர் அதீத கற்பனை அல்லாமல் வேறு ஒன்றும் இல்லை.

எப்படி சாத்தியமாகும்?

அத்துடன் மகாபாரதப் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை பற்றி கூறப்பட்டது பகுத்தறிவுக்கு எவ்விதத்தில் ஒவ்வாதது. 1660 பேராயிரம்(மில்லியன்) மக்கள் இறந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. இது எப்படிச் சாத்தியமாகும்?

அக் காலத்தில் இருந்த போர்க்கருவிகள் எப்படிப்பட்டவை என்பதைத் தொல்பொருள் ஆராய்சியாளர்கள் பல சான்றுகளுடன் மெய்ப்பித்திருக்கிறார்கள். அரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகக் காலத்தின் ஆயுதங்களாகக் கற்கருவிகள், கோடரிகள், சிறிய ஈட்டிகள் போன்றவை விளங்குகின்றன. இவ்வாறான நிலையில் குருசேத்திரப் போர் நடைபெற்று இருந்தால், போர்க்கருவிகளும் இவற்றை விடத் தரம் குறைந்தவைகயாகவே இருந்திருக்க முடியும்.

கீதையின் பொய்மை

‘கீதையைப் பற்றிய உண்மைகள்’ என்ற ஆங்கில நூல் இன்னும் ஒரு வேடிக்கையான விடயத்தைப் பற்றி கூறுகிறது.

பாரதப் போரில் பங்கு பற்றிய சேனைகள் – 18 அக்குரோணிப் படைகள்

போர் நடைபெற்ற நாட்கள் – 18

பாரதப் போர் வருணிக்கப்படும் காண்டங்கள் – 18

பகவத்து கீதையின் அத்தியாயங்கள் – 18

போரின் பின்பு பாண்டவர் தரப்பில் எஞ்சியவர் – 6 இது 18இல் மூன்றில் ஒரு பங்கு

கவுரவர் தரப்பில் எஞ்சியவர் – 3 இது 18 இல் ஆறில் ஒரு பங்கு

யுதிட்டிரர் ஆண்ட ஆண்டுகள் – 36 இது 18இன் இரு மடங்கு

போர் முடிந்து கிருட்டிணன் வாழ்ந்த ஆண்டுகள் – 36 இதுவும் 18இன் இரு மடங்குகள்.

இப்படி இந்த 18 என்ற இலக்கம் மகாபாரதக் கதையில் முதன்மைத்துவம் பெற்ற இலக்கமாக மீண்டும் மீண்டும் சுற்றி வருகிறது. பாரதக் கதை எழுதியவர் எண்சோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர் போலும்.

பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை

இந்த மகாபாரதம், இராமாயணம் எல்லாமே சுத்தப் புரட்டு என்று தந்தை பெரியார் சொல்வார். இராமாயணம் “திரேதாயுகத்தில்” நடந்ததாகச் சொல்லப்படுகிறது. ஒரு யுகம் என்பது 12,96,000 வருடங்கள் என்று கணக்கு சொல்லப்படுகிறது. ஆனால் இராமன் 50,00,000 வருடங்கள் ஆண்டான் என்று இராமாயணம் சொல்லுகிறது. இப்படி பகுத்தறிவுக்கு எந்த வகையிலும் பொருந்தாத கணக்குகள் மகாபாரதத்தலும் , இராமாயணத்திலும் விரவிக் கிடக்கின்றன.

மகாபாரதம் எழுதப்பட்ட காலம் காட்டுமிராண்டிக் காலம். நீதி, ஒழுக்கம், கற்பு, அகிம்சை போன்ற சிந்தனைகள் வளராத காலம். ஆனால் பிற்காலத்தில் கற்பு, ஒழுக்கம் போன்ற சிந்தனைகள் வளர்ந்தன. இராமாயணம் புனையப்பட்டதன் காரணங்களில் ஒன்றாக இதையும் தந்தை பெரியார் சுட்டிக்காட்டுவார்.

மொத்தத்தில் மகாபாரதமோ, இராமாயணமோ, புராணக் கதைகளோ நடந்த வரலாறுகள் அல்ல. இதை எமது மக்கள் பகுத்தறிந்து உணர்ந்து கொள்ள வேண்டும்.

– புலோலியூரான்-வன்னியிலிருந்து

‘‘இலக்குவனார் திருவள்ளுவன்
ஸநாதனம் – பொய்யும் மெய்யும்’’ பக். 185-188

- விடுதலை நாளேடு, 25.07.25

திங்கள், 15 ஜூன், 2020

இதுதான்.. மகாபாரத,, கதை.. - பகுதி 1

கங்காதேவியை இன்னும் எத்தனை பேரு வச்சிருப்பாங்க..? - சாந்துனுவும் கங்காவும் - இதுதான்.. மகாபாரத,, கதை.. - பகுதி 1
பிரதீபன் மன்னனின் நீண்டநாள் போராட்டத்திற்கு பிறகு சாந்துனு னு ஒரு பையன் பிறந்தான். சாந்துனு வளர்ந்து வாலிபம் ஆனதும் ஒரு தேவ மங்கையை கட்டுவானு ஜோதிட கட்டம் சொல்லுது.
ஒருநாள் சாந்தனு ஆத்தோரமா நடந்து போகும் போது கண்ணுல ஒரு பொண்ணு படுது. பாத்த உடனே அவனுக்கு மூடு வந்து, அவட்ட போயி கட்டுனா உன்னாத்தான் கட்டுவேன் இல்ல ஒத்தகாலுல நிப்பேன் னு சொல்லிட்டான். அவளும் நான் கட்டிக்கிறேன், ஆனா நான் என்ன பண்ணாலும் நீ கண்டுக்க கூடாதுனு ஸ்டிர்ட்டா ஆர்டர் போட்டாள். இவனும் சரின்னு கட்டிக்கிட்டான்.
கொஞ்சநாள் போராட்டத்துக்கு பிறகு ஒரு குழந்தை பிறந்ததிருக்கு. சாந்தனு சந்தோசத்துல துள்ளி குதிக்கிறான். ஆனா கங்கா பிறந்த குழந்தையை தூக்கிக்கிட்டு போயி கங்கை ஆத்துல வீசிட்டா. அவ எது பண்ணுனாலும் கேள்வி கேட்க கூடாது னு ஆர்டர் போட்டதால இவனும் பாத்துட்டு கம்முனு இருந்துட்டான்.
குழந்தை பிறக்க பிறக்க வரிசையா ஏழு குழந்தைகள ஆத்துல வீசிபுட்டா. ஒவ்வொரு டயமும் சாந்தனு பார்த்துட்டு கோவத்த அடக்கிட்டு கம்முன்னு இருந்துட்டான். அப்பறம் ஒரு குழந்தை பிறக்குது.
அதையும் ஆத்துல வீச கிளம்பிட்டா. இந்த முறை விடுறதா இல்ல. ஏய்.. கிறுக்கு ............. உனக்கு மனசாட்சி னு ஒன்னு இல்லையா. பிறக்குற குழந்தைகள எல்லாம் இப்படி ஆத்துல போட்டு கொல்லற... னு கோவமா திட்டி. ஆத்துல போட போன குழந்தைய அவட்ட இருந்து புடிக்கிட்டான்.
அவளுக்கும் கோவம் வந்துருச்சு. நான் என்ன செஞ்சாலும் கேள்வி கேட்க கூடாதுன்னு நீ வாக்கு கொடுத்தது மறந்துருச்சாடா மக்குப் பயலே னு திட்டிட்டு.. நீ முதல நான் யாருன்னு தெரிஞ்சிக்கோ. நான்தான் தேவர்கள், முனிவர்கள் போற்றும் கங்காதேவி.
ஒரு மகாமுனிவர் விட்ட சாபத்தால 7 குழந்தைகள பெத்து ஆத்துல வீசிருக்கேன். அதெல்லாம் முனிவர்களா மாறி ஆதத்துக்குள்ள தவம் செஞ்சுக்கிட்டு கிடக்கு. இந்த எட்டாவது பிள்ளையையும் ஆத்துல போடும் போது நீ தடுத்துட்ட. நான் போடுறத நீ தடுத்ததால உனக்கு இனி என்னை போடுற பாக்கியம் இல்ல
உனக்கு மேட்டர் ஆசை போயி குழந்தை ஆசை வந்துருச்சி, இனி உன்கூட சேர்ந்து வாழ முடியாது. இந்த எட்டாவது குழந்தைய தேவிவிருதன் னு பேரு வச்சி கொஞ்ச காலம் நான் வளக்குறேன். இவன் வருங்காலத்தில பீஷ்மன் னு போற்ற படுவான் னு சொல்லிட்டு குழந்தைய புடிக்கிட்டு மறைஞ்சுட்டா.
சாந்தனு மன்னன் சோகமா.. " இந்த கிறுக்கு............ இவளவு நாளா நம்மல எம்மாத்திட்டாலே"னு அரண்மனை திரும்பிட்டான்.
- தொடரும்........
குறிப்பு :-
இந்த கங்காதேவி தான் சிவனின் இரண்டாவது பொண்டாட்டி, பார்வதியோட சக்கலாத்தி. இந்து புரணாத்துல பொண்டாட்டிய மாத்தி மாத்தி விட்டுருவாங்க போல.. இந்து கடவுள் பத்தின புராண நெடுகிலும் இதே கதைகளாதான் இருக்கு ..
- டக்லசு முத்துகுமார் மகநூல் பதிவு, 11.6.18

வியாழன், 16 ஆகஸ்ட், 2018

மகாபாரதத்தில் சத்தியவதி கதை


#சத்தியவதி

இந்த கதை மகாபாரதத்தில் ஆதிபர்வத்தில் ஆதிவம்சாவதரணப் பர்வத்தில் கூறப்படுகிறது. மகாபாரதத்தை நம்புபவர்கள் இதையும் நம்பித்தான் ஆகவேண்டும்.

ஒரு நாள் மன்னன் உபரிசரன் தனது தேரில் வானத்தில் பறந்து சென்றுகொண்டிருக்கும்போது,

அவனது தலைநகரத்தின் அருகிலே சுக்திமதி என்ற ஆறு ஓடியது. அந்த ஆறானது, காமத்தால் பித்துப்பிடித்ததும், உயிரையுடையதுமான கோலாஹல மலையால் தாக்கி அணைக்கப்பட்டிருந்தது.

மலையின் தவறான முயற்சியைக் கண்ட உபரிசரன், தனது காலால் அந்த கோலாஹல மலையை ஓங்கி உதைத்தான். மன்னன் உதைத்ததனால் கோலாஹல மலையின் அணைப்பிலிருந்து ஆறு வெளியே வந்தது. ஆனாலும் அந்த மலை, அந்த நதியிடம் இரட்டையரான ஒரு மகனையும் ஒரு மகளையும் பெற்றெடுத்தது.

கோலாஹலத்தின் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்த உபரிசரனுக்கு நன்றிக்கடனாக, தன் பிள்ளைகளை அந்த ஆறு அவனுக்கே கொடுத்தது.

உபரிசரன் அந்த ஆற்றின் மகனைத் தனது படைகளுக்குத் தலைவனாக நியமித்தான். மகள் கிரிகையை உபரிசரன் மணந்துகொண்டான்.

மனைவி கிரிகை, தனது தீட்டுக்காலம் முடிந்து, குளித்துத் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, உடலுறவுக்கான தனது நிலையை உபரிசரனிடம் தெரிவித்தாள். ஆனால், அதே நாளில் பித்ருக்கள், உபரிசரனிடம் வந்து, தங்கள் சிரார்த்தத்திற்காக ஒரு மானைக் கொன்று கொடுக்கச் சொன்னார்கள்.

மன்னனும் பித்ருக்களின் கட்டளையை மதிக்காமல் இருக்கக்கூடாது என்று எண்ணி, லட்சுமிபோன்ற அழகுடைய கிரிகையை நினைத்துக் கொண்டே தனியாக வேட்டைக்குக் கிளம்பிப் போனான்.

வேட்டைக்கு சென்ற மன்னனுக்கு கிரிகையின் நினைப்பால் காமம் தலைக்கேறி இன்புற்றபோது அவன் வீரியம் வெளிப்பட்டது. வெளிப்பட்ட வீரியம் வீணாகக் கூடாது என்று நினைத்து, உடனே அதனை இலையில் ஏந்தினான். அதை மூடி கட்டினான்.

துரிதமாகச் செல்லக்கூடிய ஒரு பருந்து, தனக்கு மிக அருகே ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதை மன்னன் கண்டான். பருந்திடம் சென்று, இனிமையானவனே, இந்த எனது விந்தை எனது மனைவி கிரிகைக்காக எடுத்துச் சென்று, அவளிடம் இதைக் கொடுப்பாயாக. அவளது பருவம் வந்துவிட்டது என்றான்.

பருந்து, மன்னனிடம் அதைப் பெற்றுக் கொண்டு, வானத்தில் வேகமாகப் பறந்தது. அப்படிப் பறந்து செல்கையில், மற்றொரு பருந்தால் இது பார்க்கப்பட்டது. முதலில் சென்ற பருந்து இறைச்சியையெடுத்துச் செல்கிறது என்று நினைத்து, இரண்டாம் பருந்து அதை நோக்கிப் பறந்தது. இரு பருந்துகளும் வானத்தில் தங்கள் அலகால் சண்டையிட்டுக் கொண்டன. அப்படி அவை சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, அந்த விந்து யமுனையின் நீரில் விழுந்தது.

அத்ரிகை என்ற பெயர் கொண்ட அப்சரஸ் ஒருத்தி ஒரு #பிராமணனின் சாபத்தால் மீனாகப் பிறந்து அந்த நீரில் வசித்து வந்தாள். உபரிசரனின் விந்து பருந்தின் பிடியில் இருந்து நீரில் விழுந்ததும், அந்த மீன் அதை விழுங்கிவிட்டது.

சில காலங்களுக்குப் பிறகு, அந்த மீன், மீனவர்களால் பிடிக்கப்பட்டது. அப்பொழுது அந்த மீன் விந்தை விழுங்கிப் பத்து மாதங்கள் ஆகியிருந்தன. அந்த மீனின் வயிற்றிலிருந்து, ஓர் ஆணும், ஒரு பெண்ணுமாக மனித வடிவில் குழந்தைகள் வெளியே வந்தன. இதை மீனவர்கள் உபரிசரனிடம் கூறினார்கள்.

ஆண் குழந்தை உபரிசரனால் எடுத்துக் கொள்ளப்பட்டான். பெண் குழந்தையை எடுக்க மறுத்துவிட்டான். அந்த குழந்தையை மீனவர்களே வளர்த்தார்கள். அந்த குழந்தைதான் சத்தியவதி.

இந்த சத்தியவதிதான் நதியை படகில் கடக்கும்போது பராச முனிவனால்
"எனது ஆசைக்கு இணங்கினாலும், நீ கன்னியாகவே இருப்பாய்" என்றுகூறி
ஏமாற்றப்பட்டு அதன்பலனாக வேதவியாசனை பெற்றெடுத்த தாய். இதையும் அந்த மகாபாரதமே கூறுகிறது.

இந்த மகாபாரதம்தான் கிருஸ்ணன் என்ற பாத்திரத்தையும் கூறுகிறது. மேலே உள்ள கதையை உண்மை என்று ஏற்றுக்கொண்டவர்கள், கிருஸ்ணனை கடவுள் என்று ஏற்றுக்கொண்டதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

- வேணுகோபால சங்கர் - ஆறாம் அறிவு முகநூல் பதிவு (25.2.18)