நவராத்திரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நவராத்திரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 4 அக்டோபர், 2024

ஏ, சரஸ்வதியே உனக்கு… கல்வி நிறைந்த மேனாட்ல் பூசையில்லையே! கல்வி மறுக்கப்படும் இங்கே விழா எதற்கு?


 – கைவல்யம்

விடுதலை நாளேடு
Published September 29, 2024

“நவராத்திரி” என்ற பதம் ஒன்பது இரவு எனப் பொருள் படும். இது புரட்டாசி அமாவாசைக்குப் பின் உள்ள நவமியை இறுதியாக உடைய ஒன்பது நாள்கள் – இரவிலும் கொண்டாடப்படும் உற்சவம். இது சில ஆண்டுகளில் அய்ப்பசி மாதத்துக்குள்ளும் வரும். இந்நாள்களின் ஆரம்பத்தில் எல்லோர் வீட்டிலும் அவரவர்கள் நிலைக்கேற்ப பொம்மைகள் கடவுள்களின் உருவான படங்கள் வைத்து, ஒவ்வொரு சாயங்காலமும் ஒன்பது நாள் வரையில் பாட்டு முதலியவை பாடி, ஆரத்தி முதலியவைகள் சுற்றி, இந்த உற்சவத்தைப் பெண்கள் கொண்டாடுவது வழக்கம். இதில் புருஷர்கள் கொலு முதலியவைகளைக் கவனியாவிட்டாலும் நவராத்திரியைக் கொண்டாடுகிறார்கள்.

வேத பாராயணம், சூரியநமஸ்காரம் முதலியவைகளை நடத்த பார்ப்பனர்களை ஏற்படுத்தி, இந்த ஒன்பது நாள்களில் நமது வீடு வேத முழக்கத்தில் நிறைந்து மங்களகரமாகும் படியாகச் செய்ய வேண்டுமாம். ஆனால் இந்த விதி பார்ப் பானுக்கும், அதிகாரம் படைத்த இராஜாக்களுக்கும், பணம் படைத்த வைசியனுக்கும் மாத்திரமாம்; மற்றவர்கள் பக்தி யோடு சுந்தரகாண்டம் பாராயணம் செய்து முடித்து பார்ப் பானுக்குச் சாப்பாடு, தட்சணை கொடுத்து ஆசீர்வாதம் பெற வேண்டுமாம்.

சரஸ்வதி பூஜை அல்லது ஆயுத பூஜை
நவராத்திரியில் கடைசி நாளாகிய நவமி தினத்தில் புருஷர்கள் தமது வீட்டிலிருக்கும் புத்தகங்களை ஒழுங்காக அடுக்கிவைத்து, காலை முதல் உபவாசமிருந்து சரஸ்வதியை பூசை செய்யவேண்டும்.

இந்த நவமி அன்றைய தினமாவது அல்லது அடுத்த தினமாவது, தொழிலாளிகள் ஆயுதத்தையுடையவர்கள் ஆகியவர்கள் தங்கள் தங்கள் ஆயுதங்களை வைத்து பூசை செய்வது வழக்கம். அதனாலேயே இந்தப்பூசைக்கு ‘ஆயுதபூசை’ என்றொரு பெயரும் உண்டு.
இந்த நவராத்திரியை இந்துமதப்பிரிவுகள் என்று சொல்லும் எல்லா மதத்தவர்களும் கொண்டாடுகிறார்கள். அன்றியும் சிவ, விஷ்ணு ஆலயங்களிலும் இதைப் பெரும் உற்சவமாகக் கொண்டாடுகிறார்கள். அங்கு அம்மனை அலங்கரித்து அநேக தீப அலங்காரங்கள் செய்து, ஒன்பது நாள் இரவும் ஆராதனை நடத்துவார்கள்.

இந்த வேடிக்கைகளைப் பார்க்கவே அனேகர் மைசூருக்குப் போவது வழக்கம். இதனால் கடவுள் பக்தி பரப்பும் தொழிலையுடைய பார்ப்பனரும் இவ்வுற்சவத்தால் தங்களுக்கு இலாபமிருப்பதால் அவர்களே ஊர் ஊராய் நவராத்திரி உற்சவத்தைப் பற்றி விளம்பரப்படுத்துவார்கள். நிற்க; இதைச் சைவர், ஸ்மார்த்தர், வைஷ்ணவர், மாத்வர் முதலிய எல்லா மதத்தவர்களும் கொண்டாடக் காரணம் என்னவென்றால், கல்வியும் ஆயுதமும் அதற்குக் கற்பிக் கப்பட்ட தேவதையான துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி என்று சொல்லப்பட்டவர்கள் – ஒவ்வொரு மதத்தினுடைய தெய்வங் களின் அம்மன்களானதனாலும், இந்து மதத்தவர்களுக்கெல் லாம் இது சம்பந்தப்பட்ட புராணக் கதைகளிலிருப்பதாலுமே யாகும். துர்க்கை முதலிய அம்மன்களை வைஷ்ணவர்கள் பூசிக்காவிட்டாலும் இது சம்பந்தமான கதைகள் அவர்களி டையேயும் உண்டு.
மற்றவர்கள் ‘சரஸ்வதிபூசை’யன்று ‘துர்க்கா லட்சுமி ‘ஸரஸ்வதீப்யோ நம’ என்று கூறிப் பூசை தொடங்குவார்கள்.

முன்னொரு காலத்தில் மகிஷாசூரன் என்ற எருமை ரூபமான அசுரனும் அவன் பரிவாரங் களும் விருத்தியாகி கடவுள் வரத்தால் சிறந்த பதவியை அடைந்து உலகை இம்சித்துக் கொண்டிருந்ததால், இந்தக் கஷ்டம் பொறுக்க முடியாமல் தேவர்கள் பார்வதியிடம் முறையிட, பார்வதி ஒன்பது நாள் சிவபிரானைக் குறித்துத் தவமிருந்து, அவரிடமிருந்து தகுந்த சக்திபெற்று, ஒன்பதாம் நாள் மகிஷாசூரனைக் கொன்று, பரிவாரங்களை நாசம் செய்து சாந்தமடைந்தார். மகிஷாசூரனைக் கொன்றதனால் பார்வதி தேவிக்கு மகிஷா சூரமர்த்தினி என்கிற பெயரும் வந்தது என்பர். எனவே இந்தக் கதையின் ஆதாரத்தைக் கொண்டு அம்மன் தவமிருந்து விழித்த ஒன்பதாம் நாள் வேண்டிய வரங்கள் கொடுப்பார் என்னும் கருத்தை கொண்டே இவர்கள் இந்த உற்சவத்தைக் கொண்டாடுகிறார்கள்.

புராணக் கதைகள்
நம்முடைய உற்சவத்திற்கும் மூடநம்பிக்கைகளுக்கும் புராணக் கதைகளுக்கும் பாமரர்களே பங்காளிகள். படித்தவர்களுக்கு இதில் வயிறு வளர்க்கும் பிரத்தியட்ச அனுகூலமிருந்தாலும் கூட இதுபோன்ற கதைகளைப் பற்றிய விவகாரங்கள் எழும்போது “தங்களுக்கெல்லாம் வேறு கருத்தை இதில் பெரியவர்கள் அமைத்திருக்கிறார்கள்” என்று எதற்கும் ‘தத்துவ’ நியாயம் சொல்வது போல் இதற்கும் ஒரு ரகசிய அர்த்தம் உண்டாம்! வேத பாராயணம், கோயிலில் நடக்கும் பூசை, ஆராதனைகள், ஒன்பது நாளும் பார்ப்பானுக்குப் போடும் சோறு, அம்மன் விழித்தவுடன் செய்யும் தானம் முதலியவைகளால் பாமரர்களுக்கு இகலோக சுகம் சித்திக்க வேண்டுமாம். அதனால் மனம் சுத்தப்பட்டுப் பின்னால் மோட்சத்திற்கு வருவார்களாம்.

படித்த பண்டிதர்கள் இந்த ஆடம்பரத்தில் சோறும் தட்சணையும் வாங்கிக் கொண்டாலும் அவர்கள் சொல்லும் உள் கருத்தென்னவென்றால் மகிஷாசூரன், அவன் பரிவாரங்கள் முதலியவைகள் என் பதை அஞ்ஞானமும் அதன் காரியங்களுமாக வும், பார்வதியை சித்சக்தியாகவும் அது பரம் பொருளாகிய ஆத்ம ஸாசாத்கார விசேடத்தால் அஞ்ஞானத்தை வேரறுப்பதாகவும் கொள்ள வேண்டுமாம். ‘துர்க்காலட்சுமி சரஸ்வதீப்யோ நம’ என்னும் மந்திர மடத்து சாஸ்திரிகள் வரையிலும் மக்களிடமிருந்து கிடைக்கும் வரையிலும் தங்கள் லவுகீக சுகத்திற்காக அவர் களை வேரறுக்கிறார்களே ஒழிய, அவர்களது அஞ்ஞானத்தை வேரறுப்பதாகத் தத்து வார்த்தம் சொல்லும் சமயவாதிகளெல்லாம் மகிஷா சூரனிடமல்லவா (அதாவது ஆசையில்) மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்?

முன்னொரு காலத்தில் லட்சுமிதேவி உலகில் அலர்மேலுமங்கையாக வந்து, பரம பதவாசியாகிய விஷ்ணுவான திருப்பதி பெரு மாளை அடைந்து ஆனந்திக்க இந்த ஒன்பது நாள் தவமிருந்தாராம். இதன் முடிவில் அவர் எண்ணம் முற்றுபெற விவாகம் பெரிய ஆடம் பரமாக முடிந்ததாம். இந்த விசேடத்தை முன் னிட்டுதான் வைணவ மாத்வர்கள் இந்நாளைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். இந்நாள் களில் திருப்பதியில் பிரம்மோற்சவம் நடக்கிறது. பிரம்மாவின் பத்தினியான சரசுவதியும் இந்த தவமிருந்தாள் என்னும் கதையைக் கொண்டு, கடைசி மூன்று நாள்களும் சரசுவதிக்கு முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. பத்தாம் நாள் விஜயதசமி வாசிப்போருக்குக் கல்வி நன்றாக வருமாம். தொழில் செய்கிறவர்கட்குக் காரியங்கள் கைகூடி வருமாம்.

மேனாட்டில் உண்டா?
இதை நம்பி நடக்கும் நம்மை விட, மற்றத் தேசங்களில் எல்லாம் சரஸ்வதி எந்நாளும் திருப்தியோடு கூடின சந்தோஷத்துடன் இருக்கிறாள். நம் தேசத்தில் ஆண்டுக்கு ஒரு நாள்தான் கண்ணைத் திறந்து திருப்திப்படுகிறாள். இதற்குக் காரணம், பார்ப்பானுக்குக் கொடுப்பது சரியாகக் கொடுக்கப்படுகிறதா என்று பார்ப்பதற்காகவோ அல்லது பூசையின் திருப்திக் குறைவாலோ அல்லது நம்மிடம் ஆயிரமாயிரம் வருடமாக வாங்கியுண்ட நன்றிகெட்ட குணத்தை மறைப்பதற்கோ அல்லது தன் மொழியான சமஸ்கிருத இலக்கணத்தை தன் முதற் பிள்ளைகள், மற்றப் பிள்ளைகளுக்கு எங்கே சொல்லி வைத்து விடுவார்களோ? என்னும் அஞ்ஞானத்தாலோ என்பதை நாம் அறியோம்.
கிரேதாயுகத்தில் சுகேது என்னும் ஒரு அரசன் இருந்த தாகவும், அவன் சத்துருக்களால் அடிபட்டு காட்டை அடைந்து, காயத்தாலும், பசிப்பிணியாலும் நோய்வாய்ப் பட்டு அவதிப்பட்டதாகவும், அங்கு வந்த அங்கிரஸ் என்னும் ரிஷி, அரசன் பெண்சாதியான சுவேதி என்பவ ளுக்கு லட்சுமி, சரஸ்வதி, பார்வதி என்கிற இவர்கள் செய்த மாதிரி நீயும் தவம் செய்வாய் என்று இந்தப் பூசையை உபதேசித்ததாகவும், அவ்வாறே அவள் செய்து அரங்கிரஸ் என்னும் புத்திரனும் பிறந்து அவன் சத்துருக்களை ஜெயித் துத் தகப்பனுக்கு ராஜ்யத்தை வாங்கிக்கொடுத்தாகவும் சொல்லப்படுகின்றது.

நவராத்திரிக்கு இன்னும் இதுபோன்ற பல கதைகளும் உண்டு.
கிரேதாயுகம் முதற்கொண்டு, இதுநாள் பரியந்தம் செய்த பூசைகளும், மந்திரங்களும் அதைச் செய்த ஜன சமூ கங்களும் நம் நாடும், அதை ஏற்றுக் கொண்ட தெய்வங்களும் அய்நூறு ஆண்டுகளாக அன்னியர் படையெடுப்பால் சின்னாபின்னப்பட்டு, வெள்ளைக்கார மந்திரத்தால் வெளி யேற்றப்பட்டிருக்கையில் நமது ‘சரஸ்வதியும், லட்சுமியும் , பார்வதியும்’ அவர்களுக்குப் பூசையும், அதற்காகப் பார்ப்பனனுக்குப் பணமும், தட்சணையும் எதற்கு என்று ‘குடிஅரசு’ கேட்டு விட்டால் சமயவாதியும், சாஸ்திரவாதியும் ‘அது சமயத்தை அடியோடு தூஷிக்கின்றது’ என்று சொல்லுவதானாலும் படித்தவர்கள் என்பவர்களான ஆங்கில, சரித்திர, சயின்ஸ் பி.ஏ, எம்.ஏ, வாதிகளுக்குப் புத்தி இருக்கிறதா, இல்லையா? என்றுதான் கேட்கிறோம்.

விஜயதசமி
மேலும் விஜயதசமி அன்று சிவன் கோயிலில் ‘பரிவேட்டை உற்சவம்’ என்பதாக ஒன்று நடத்துகின்ற வழக்கமுண்டு. அன்று ‘பகவான்’ எழுந்தருளி வன்னி மரத்தில் அம்பு போடுவது வழக்கம். வன்னி மரத்தில் நெருப்பிருக்கிறதாம். அதில் அம்பு பாய்ச்சினால் அந்த வேகத்தால் நெருப்புண்டாகி, அந்த மரத்தை எரித்து விடுமாம். அதனால் வேடடையாடுவோருக்கும், ராஜாக்களுக்கும் எளிதில் ஜெயத்தைக் கொடுக்குமாம். இந்த காரணத்தால், இந்த வேட்டைத் தினத்திற்கு விஜயதசமி அதாவது, ஜெயத்தைக் கொடுக்கும் நாள் என்று பெயர். என்றாலும் இதற்கும் உள்கருத்தை வைத்து வைத்துத் தான் நம் நாடு உள்ளேயே போயிற்று . பாமரர்களுக்கு உள்கருத்து ஸ்தூலமாகவும் படித்தவர்களுக்குச் சூட்சுமமாகவும் இருப்ப தாகச் சொல்லுகிறார்கள். (எந்த சூட்சுமமும் பாமரர்களைப் படித்தவன் ஏமாற்றவே உபயோகப்படுகிறதே ஒழிய, காரியத்திற்கு ஒன்றும் உபயோகப்படுவதில்லை) அதாவது, நெருப்பிலடங்கிய வன்னி மரத்தையே ஆத்மாவோடு கூடிய தேசமாகவும், அம்பை ஞானமாகவும், வேட்டையில் அம்புவிடுவதை ஞானோபதேசமாகவும், மரம் எரிந்து விழுவதை கரும சம்பந்தமானவைகளை ஞானத்தணல் சுட்டு வெண்ணீறாக்குவதாகவும் கொள்ள வேண்டு மென்பார்கள். இந்த உள்கருத்து உபதேசம் கேட்டுத்தான் ராஜவம்சமெல்லாம் நடுத்தெருவில் நின்ற தான வடதேசத்துக் கதைகள் அநேகம்.

மைசூர் மகாராஜா பரிவேட்டையால் அய்தருக்கு அடிமையானார். ஆனால், வெள்ளைக்காரப் பரிவேட்டைதான் அதை விடுவித்துக் கொடுத்தது. தஞ்சாவூர் ராஜா செய்த சரஸ்வதி பூசையும், ஆடிய பரிவேட்டையும், சரஸ்வதி மகாலில் அடுக்கி வைத்த குப்பைக் கூள ஏடுகளும், ஆயுதங்களும், முன்வாயிலில் துளசியைக் கொட்டி விட்டு, பின் வாயிலில் ராஜாவை ஓடச் செய்து விட்டது. அது போலவே திப்பு காலத்தில் திருவனந்தபுரத்து ராஜாவிற்கு வெள்ளைக் காரர்கள் அபயம் கொடுத் தார்களே ஒழிய சரஸ்வதி பூசையும், பரி வேட்டையும் ஒன்றும் செய்யவே இல்லை. அந்தப்படி அபயம் கொடுத்திராவிடில் அனந்த சயனப் பிரபுவும், அவர் பெண் சாதியும், அவர் மருமகளும் ஓடிப்போ யன்றோ இருக்க வேண்டும்? அனந்தசயனப் பிரபு பின்னும் ஓடி வந்து தங்கள் சொத்தென்று அங்கு சயனித்துக் கொண்டிருப்பதாக இப்பொழுதும் சொல் கிறார்கள்.

கல்வி கற்றவர்கள்
கடவுளையும் பெரியவர்களையும் தூஷிக்கிறவர்கள் காட்டும் ஆதாரங் களையும், அதன் நியாயவாதங்களையும் கூட்டி ஆலோசியுங்கள், சரஸ்வதியைக் கொலுவிருத்தி, பெரிய உற்சவங்கள் செய்யும் நமது நாட்டில் ஆயிரத்துக்கு 50 பேருக்குக் கூட கல்வி இல்லை. சரஸ்வதியே இல்லாத நாட்டில் ஆயிரத்துக்கு 996 பேர்கள் கல்வி கற்றவர்களாக இருக்கிறார்கள்.

நாம் சரஸ்வதிக்குச் செய்த தொண்டு சாமானியமல்லவே! ஒரு ஏட்டைக் கிழியோம்; ஒரு எழுத்தை மிதியோம்; இறைந்து கிடக்கும் இதழில் துப்போம்; கால்பட்டால் தொட்டுக் கும்பிடுவோம்; கைப்பட்டால் கண்ணில் ஒத்திக் கொள்வோம்; எந்த ஏட்டிற்கும் காப்பு சொல்வோம்; செல்லரித்த ஏட்டையும் ‘புண்ணிய தீர்த்தத்தில்’ கொண்டு போய் போடுவோமே ஒழிய தெருவில் போடோம்; கற்றவர் நாவின் கருத்தும் கம்பன் கவித்திறனும் அவளே என்போம். இத்த னையும் போதாமல் ஆண்டுக்கு ஒரு தரம் பத்து நாள் பள்ளி யறையில் வைத்துக் கும்பிடவும் செய்கிறோம். இத்தனையும் நாம் இங்கு செய்ய,இந்த சரஸ்வதி கொஞ்சமும் நன்றி விசுவாசம் இல்லாமல் மேனாட்டில் குடிபுகுந்த காரணம் என்ன என்பதை வாசகர்கள் சரஸ்வதியையே கேட்கட்டும் ‘ஏ சரஸ்வதி! மேனாட்டில் உனக்கு என்ன மரியாதை இருக்கிறது? உன்னைப் படித்து எறிகிறார்கள்; காலில் மிதிக்கிறார்கள்; செருப்புக் கட்டு கிறார்கள்; மலம் துடைக்கிறார்கள்; உன் பெயர் சொல்லுவதில்லை; நீ ஒருத்தி இருக்கின்றாய் என்று கூட நினைப்பதில்லை; உனக்கு பூசை இல்லை; புருஷன் இல்லை; வீணை இல்லை; எல்லா வித்தைக்கும் அவர்கள் தாங்களே எஜமானர்கள் என்கிறார்கள். எனவே, நீ செய்வது நியாயமாகுமா?’ என்று நாங்கள் சொல்லிவிட்டால் உன் பாஷையான சமஸ் கிருத இலக்கணத்தை எங்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்படாதென்று நீ சொன்னதாகச் சொல்லும் சாஸ்திரிகளே எங்களை நாஸ்தி கர்கள் என்று சொல்லுகிறார்கள். உன் முதற் பிள்ளையான பார்ப்பனர்களின் தாசிப்பிள்ளை, அடிமை, வேலையாள், ஒழுக்க மற்றவன் என்று எங்களில் படித்த உணர்ச்சியற்ற பண்டிதர்களையும் கூட நீ சொல்லியிருப்பதாக உன் முதற்பிள்ளைகள் சொல்லும் ஏட்டைக் கூட கிழித்தெறி யாமல் சற்றும் விசுவாசமற்றுப் போனாயே என்று நாங்கள் சொல்லி விட்டால், தூஷித்தவர்களாகி விடுவோமா? நீயே சொல்லு?

கோயிலும் பூசையும் எதற்கு?
நீ வாசம் செய்யும் மேனாட்டில் உனக்குப் பூசையில்லை. நைவேத்தியமில்லை. பூசாரி, குருக்களுக்குக் காணிக்கையு மில்லை. பஞ்சமும் படியாமையுமுடைய இந்த நாட்டின் பேரில் மாத்திரம் உனக்கு வந்த வயிற்றெரிச்சல் என்ன? உன் முதற் பிள்ளை களுக்கெல்லாம் உன் பேராலேயே அளித்தளித்து ஆண்டியானோமே என்று நாங்கள் சொல்லு வதாலேயே உன் பக்தகோடிகள், உன் புருஷனுடைய பிரம்மலோகத்திற்கும் உன் மாமனுடைய வைகுண்டத்திற் கும் உன் பாட்டனும் மகனுமான சிவனுடைய கைலாசத் திற்குப் போகும் கதவுகளை (சமயதூஷணையால்) சாத்தினவர்களாகி விடுகிறோமாம். நீயும் உன் குடும்பத்துப் பெண்களும் குடி போயிருக்கும் நாட்டில் உங்கள் புருஷர் களுக்குக் கோயில் கிடையாது. கும்பாபிஷேகமில்லை. அப்படியிருக்க, நீங்களில்லாத நாட்டில் உங்களுக்குக் கோயிலும் கும்பாபிஷேகமும் பூசையும் எதற்கு?

இருக்கிற கோயில்களில் நீங்கள் குடியிருந்தால் போதாதா? காணிக்கையையும் நிறுத்தி, கும்பாபிஷேகத் தையும் விட்டு, கோயிலுக்கு எழுதி வைப்பதையும் நிறுத்திப் பணத்தையெல்லாம் படிப்பிற்கே வைத்துவிட்டுப் போங்கள் என்றால், பாமர மக்களுக்காக ஏற்பாடு செய்து வைத்த சமய ஒழுக்கங்களையெல்லாம் தடுத்து மோட்ச வாசலை அடைக்கும் தாசர்களென்று எங்களை ராஜீயவாதிகள் கூடச் சொல்லலாமா?
ஆச்சாரிகளுக்கும் குருக்களுக்கும் அதைச் சேர்ந்த பார்ப்பனர்களுக்கும் கொடுப்பதை நிறுத்திவிட்டுப் பக்கத்து ஏழைக்குப் படிப்பும், தொழிலும் கற்பியுங்களென்றால் ஆச்சாரிகளையும் பெரியவர்களையும் நாங்கள் குற்றம் சொல்லு கிறவர்களாகி விடுவோமா?

ஆயுத பூஜை
அறுப்பறுக்கும் காலத்தில் கருக்கரிவாள் கூட ஒரு மூலையில் கவலையற்றுத் தூங்குகிறதே! வருண பக வானுக்கும் சூரிய பகவானுக்கும் ஏற்பட்ட சண்டையில் வருண பகவான் முறியடிக்கப்பட்டு, ஓடி மறைந்து விட்டானே! சூரியனே இப்போது கழனியில் உள்ள எல்லாவற்றையும் காய்ந்து தொலைத்துவிட்டானே!

உன் ஆயுதங்களுக்குக் காட்டிலும் கழனியிலும் கூட வேலையில்லை என்றால், பின்னை கருமார் வீட்டிலும் வேலை என்ன? எனவே வேலையில்லா ஆயுதத்திற்குப் பூசை ஏன்?

சரஸ்வதி மகாலும், லட்சுமி விலாசமும், பார்வதி மண்டபமும் கட்டி வைத்த தஞ்சாவூர் மகாராஜா குடும்பம் எங்கே? தப்பித் தவறி அந்த வம்சத்திற்கு ஒரு டிப்டி சூப்ரண்டெண்டெண்ட் வேலைக்குக்கூட எவ்வளவு கஷ்டமாய் இருக்கிறது? காரணமென்ன? வீண் பூசைகளும் கோயில் கும்பாபிஷேகமும் அல்லவா? அவர்கள் செய்த பிராமண போஜனமும், தட்சணையும், கோயில் பூசையும் என்ன பலனை அளித்தது? சரஸ்வதி பூசையின் கொலுவால் அல்லவா நாயுடுகளின் அரசாட்சி தஞ்சாவூரில் ஒழிந்தது? கிளைவும், டூப்ளேயும் எந்தச் சரஸ்வதியைப் பூசித்தார்கள்? அவரவர்கள் முயற்சியும் கடமையும் எந்தக் கஷ்டத்திலும் செய்து முடிக்கும் தைரியமும் இருந்தால் எல்லா லட்சுமியும் அங்கே வந்து தீர்வார்கள் . இதுவே உலக அனுபோகமும் சாஸ்திரத்தின் கருத்துமாகும்.

‘இந்துமதப் பண்டிகைகள்’ நூலிலிருந்து…

வியாழன், 3 அக்டோபர், 2019

இதுதான் நவராத்திரி விரதமாம்!

அபிதானசிந்தாமணி கூறுகிறது


நவராத்திரி விரதம் - 1. ருதுக்களில் வசந்தருது, சரத்ருது என்னும் இரண்டு ருதுக்களும் மனிதருக்கு ரோகத்தை விளைத்து நோய் செய்வதால் யமனுடைய இரண்டு கோரப்பற்களுக்குச் சமானமாகக் கூறப்பட்டி ருக்கின்றன. ஆகையால், அவற்றால் உண்டாகும் துன்பத்தினின்றும் நீங்க வேண்டிய மனுஷர் இந்த நவராத்திரி விரதத்தை செய்தல் வேண்டும்.

பூஜைக்கு வேண்டியவைகளை அமாவாசை தினத்திலேயே சேகரித்துக் கொண்டு அன்று ஒரு வேளை போஜனத்துடன் உபவாசியாய் இருந்து மறுநாள் பிரதமை முதல் பூஜைக்கு ஆரம்பித்தல் வேண்டும்.

நான்கு முழ நீளமும் ஒரு முழ உயரமுள்ள வேதி கையமைந்த அலங்கரித்த மண்டபத்தில் அமைத்துத் தான் வேதம் உணர்ந்த வேதியர் ஒன்பதின்மர் அல்லது அய்வர், மூவர், ஒருவருடன் மண்டபத்திற்குச் சென்று ஆசனத்தில் சங்கு, சக்ர, கதா பத்மத்துடன் கூடிச் சதுர்ப்புஜத்துடன் ஆயினும், பதினெண்கரத் துடன் கூடியவளாகவே தேவியின் திருவுருவத்தைத் தாபித்து அலங்கரித்துக் கும்பபூஜையின் நிமித்தம் கலசம் தாபித்து அதில் கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்களை நிரப்பி மாவிலை முதலிய அய்ந்து வகைத் தளிர்களை மேலே வைத்துப் பூஜித்தல் வேண்டும்.

பின் சங்கற்பஞ் செய்துகொண்டு வாசனைத் திரவி யங்களாலும்; பலவகை மண மலர்களாலும் தேவியைத் தூபதீபங்களால் மந்திரபூர்வமாய் விதிப்படி பூசித்து நவாவரண பூஜையுஞ் செய்து அர்க்கியங் கொடுத்துப் பலவகை நிவேதனங்கள் செய்தல் வேண்டும்.

பின் ஹோமார்த்தமாய் யோனிகுண்டம் அமைத் துத் தண்டிலம் இட்டு ஓமத்தைப் பூர்த்தி செய்தல் வேண்டும். பூஜிப்போன் சயன சகாதிகளை விட்டுத் தரையில் படுத்து உறங்க வேண்டும். பிரதமையில் அஸ்த நக்ஷத்திரங் கூடில் விசேஷமென்றும் அத்தி னத்தில் தேவியைப் பூஜிக்கின் சகலாக்ஷ்டங்களையுந் தருவள் எனக் கூறுவர்.

கும்ப பூசைமுதல் ஓமாந்தம் வரையிற் செய்யத் தருவனவற்றைச் செய்து பின் கன்னிகைகளைப் பூஜித்தல் வேண்டும். கன்னிகைகள் யாவரெனின் இரண்டு வயது முதல் பத்து வயது அளவுள்ளவர்களாம். இக்கன்னியர்களுக்கு முறையே குமாரி, திரிமூர்த்தி, ரோகணி, காளிகா, சண்டிகா, சாம்பரா, துர்க்கா, சுபத்திரா என்று ஒவ்வொரு பெயராகும். இவர்களை வேத மந்திரங்களால் பூஜித்தல் வேண்டும். மேற் சொன்ன கன்னிகையரைத் தினம் ஒவ்வொருவராக வேனும், அல்லது முதனாள் தொடங்கி ஒவ்வொன்று அதிகமாகவேனும், பூஜை நடத்தல் வேண்டும். ஒருவன் நவராத்திரி முழுதும் பூசிக்க அசந்தனாவனேல்  அஷ்டமியில் அவசியம் பூஜித்தல் வேண்டும். என்னென்னின் பூர்வம் தக்ஷயாகத்தை அழித்த பத்திரகாளி தோன்றிய தினமாகையால் என்க. அசக்தரானோர் சப்தமி, அஷ்டமி, நவமி இம்மூன்று தினத்திலும் பூசிப்பரேல் ஒன்பது தினத்திலும் பூசித்த பலனை அடைவர். இவ்விரதத்தை மேற்கொண்டவ ரெல்லாச் செல்வங்களையும் அடைந்து உயர்பதம் அடைவர். இதனை அநுட்டித்தோர் சுசீலன் சுகேது முதலியோர்.

2. விரதங்களில் ஒன்று. இது புரட்டாசி மாதம் பூர்வ பக்ஷப் பிரதமை, முதல் திரிதிகை வரையில் உருத்திரியையும், சதுர்த்தி முதல் ஷஷ்டி வரையில் இலக்குமியையும், சப்தமி முதல் நவமி வரையில் சரஸ்வதியையும், பூசித்துத் தசமியில் முடிப்பது. இதனை சுகேது என்னும் அரசன், அரசாட்சி யிழந்து வருந்தியதால் அவன் மனைவியாகிய துவேதியை ஆங்கீரச முனிவர் இவ்விரதம் அநுட்டிக்கக் கற்பித் தனர். அவ்வகை அவள் அநுட்டிக்க அவ்வநுட்டானத் திற்குப் பின் அவள் வயிற்றில் பிறந்த குமரனாகிய சூரியபிரதாபன் இழந்த நாட்டைப் பகைவரிடமிருந்து மீட்டனன் என்பர்.

இவ்வாறு அபிதானசிந்தாமணியில் கூறப்பட்டுள்ளது.

ஜாதியின் பெயரால் பிறவி பேதங்களைக் கற்பித்து மக்களை ஒன்றுபட விடாமல் செய்து, தன்னைத்தானே உயர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் நிலைகொண்டிருப்பதற்கு காரணம் மக்களின் அறியாமையே. நம் மக்களின் அறியாமைக்கு காரணம் அவர்களை சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும் ஆக்கிவிட்டு, கல்வி உரிமையை மறுத்துவந்ததே முதன்மையான காரணமாகும்.

கடவுள், மதம், பக்தியைக் காட்டி, அப்பாவி பாமர மக்களை அச்சுறுத்தியே பார்ப்பனர்களின் சுரண்டல் தொடர்ந்துகொண்டிருக்கிறது. சுரண்டிப் பிழைத்து வருவதற்கான  அறுவடையின்மீதே பார்ப்பனர்கள் கவனமாக இருந்து வருகிறார்கள்.

சவுண்டிப் பார்ப்பனர் முதல் சங்கராச்சாரி பார்ப் பனர்வரை வருணாசிரமத்தைப் பாதுகாப்பதிலேயே குறியாக இருந்து வருகிறார்கள். மனுதர்மம், பகவத் கீதை உள்ளிட்டவற்றை வருணாசிரமத்தை பாது காக்கும் கருவிகளாகக் கொண்டுள்ளார்கள்.

நம்மக்கள் விழிப்படைந்துவிட்டால், தங்களின் ஆதிக்கபுரி தகர்ந்துவிடும் என்பதாலேயே வஞ்சகப் பார்ப்பனர்கள், அவ்வப்போது வீடணர்களை உருவாக்கி வந்துள்ளனர்.

உழைக்கும் நம் மக்களை சிந்திக்க விடாமல், காலம், பொருள் உள்ளிட்ட அனைத்தையும் வீணடிக்கும் படியாக ஆண்டு முழுவதும் விநாயகன், ராமன், கிருஷ்ணன் என பிறக்காத கடவுள்களுக்கும் பிறந்த நாளைக் கொண்டாடச் செய்வது மற்றும் பிற பண்டிகைகளைக் கொண்டு பார்ப்பனர்களின் சுரண்டல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

பண்டிகைகள், மதச்சடங்குகள், சாஸ்திர, சம்பிர தாயங்கள் என கடவுள், மதம், பக்தியின் பெயரால்  அறிவுக்கு ஒவ்வாத கருத்துகளை நம் மக்களிடையே மூடத்தனத்தை தொடர்ச்சியாக பார்ப்பனர்கள் பரப் பியே வந்துள்ளனர்.  அந்த வகையில்தான் மாதந் தோறும் பண்டிகைகள் தொடர்ந்து கொண்டிருக் கின்றன. அனைத்தையும் திட்டமிட்டு பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

நவராத்திரிக்குச் சொல்லப்படும் கதை கொஞ்சமாவது அறிவுக்குப் பொருந்துமா? கள் குடித்த பைத்தியக்காரன் உளறுவது போல் இல்லையா?

பகுத்தறிவு வெளிச்சக்கீற்று நம் மக்களிடையே வெள்ளமென பாய்ந்தால், பஞ்சகச்சங்கள் ஓட்டம் பிடித்துவிடும்.

- விடுதலை நாளேடு, 3. 10. 19

வியாழன், 11 அக்டோபர், 2018

ரோக  நோயுற்றவர்களே நவராத்திரி பூஜைகளை செய்ய வேண்டியவர்கள்

நவராத்திரி பண்டிகை பூஜைகளை யார் செய்ய வேண்டும் என்றால், மரணத்துக்கு இட்டுச் செல்லும் ரோக  நோயுற்றவர்களே நவராத்திரி பூஜைகளை செய்ய வேண்டியவர்கள் என்று அபிதான சிந்தாமணியில் கூறப் பட்டுள்ளது.


அபிதானசிந்தாமணி என்ன கூறுகிறது?

நவராத்திரி விரதம் - 1. ருதுக்களில் வசந்தருது, சரத்ருது என்னும் இரண்டு ருதுக்களும் மனிதருக்கு ரோகத்தை விளைத்து நோய் செய்வதால் யமனுடைய இரண்டு கோரப்பற்களுக்குச் சமானமாகக் கூறப்பட்டிருக் கின்றன. ஆகையால், அவற்றால் உண்டாகும் துன்பத்தி னின்றும் நீங்க வேண்டிய மனுஷர் இந்த நவராத்திரி விரதத்தை செய்தல் வேண்டும்.

பூஜைக்கு வேண்டியவைகளை அமாவாசை தினத்தி லேயே சேகரித்துக் கொண்டு அன்று ஒரு வேளை போஜனத்துடன் உபவாசியாய் இருந்து மறுநாள் பிரதமை முதல் பூஜைக்கு ஆரம்பித்தல் வேண்டும். நான்கு முழ நீளமும் ஒரு முழ உயரமுள்ள வேதிகை யமைந்த அலங்கரித்த மண்டபத்தில் அமைத்துத் தான் வேதம் உணர்ந்த வேதியர் ஒன்பதின்மர் அல்லது அய்வர், மூவர், ஒருவருடன் மண்டபத்திற்குச் சென்று ஆசனத்தில் சங்கு, சக்ர, கதா பத்மத்துடன் கூடிச் சதுர்ப் புஜத்துடன் ஆயினும், பதினெண்கரத்துடன் கூடிய வளாகவே தேவியின் திருவுருவத்தைத் தாபித்து அலங்கரித்துக் கும்பபூஜையின் நிமித்தம் கலசம் தாபித்து அதில் கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்களை நிரப்பி மாவிலை முதலிய அய்ந்துவகைத் தளிர்களை மேலே வைத்துப் பூஜித்தல் வேண்டும்.

பின் சங்கற்பஞ் செய்துகொண்டு வாசனைத் திரவி யங்களாலும்; பலவகை மண மலர்களாலும் தேவியைத் தூபதீபங்களால் மந்திரபூர்வமாய் விதிப்படி பூசித்து நவாவரண பூஜையுஞ் செய்து அர்க்கியங் கொடுத்துப் பலவகை நிவேதனங்கள் செய்தல் வேண்டும். பின் ஹோமார்த்தமாய் யோனிகுண்டம் அமைத்துத் தண்டிலம் இட்டு ஓமத்தைப் பூர்த்தி செய்தல் வேண்டும். பூஜிப்போன் சயன சகாதிகளை விட்டுத் தரையில் படுத்து உறங்க வேண்டும். பிரதமையில் அஸ்த நக்ஷத்திரங் கூடில் விசேஷமென்றும் அத்தினத்தில் தேவியைப் பூஜிக்கின் சகலாக்ஷ்டங்களையுந் தருவள் எனக் கூறுவர். கும்ப பூசைமுதல் ஓமாந்தம் வரையிற் செய்யத் தரு வனவற்றைச் செய்து பின் கன்னிகைகளைப் பூஜித்தல் வேண்டும்.

கன்னிகைகள் யாவரெனின் இரண்டு வயது முதல் பத்து வயது அளவுள்ளவர்களாம். இக்கன்னியர்க ளுக்கு முறையே குமாரி, திரிமூர்த்தி, ரோகணி, காளிகா, சண்டிகா, சாம்பரா, துர்க்கா, சுபத்திரா என்று ஒவ்வொரு பெயராகும். இவர்களை வேத மந்திரங்களால் பூஜித்தல் வேண்டும். மேற்சொன்ன கன்னிகையரைத் தினம் ஒவ் வொருவராகவேனும், அல்லது முதனாள் தொடங்கி ஒவ்வொன்று அதிகமாகவேனும், பூஜை நடத்தல் வேண்டும். ஒருவன் நவராத்திரி முழுதும் பூசிக்க அசந்தனாவ னேல்  அஷ்டமியில் அவசியம் பூஜித்தல் வேண்டும். என்னென்னின் பூர்வம் தக்ஷயாகத்தை அழித்த பத்திரகாளி தோன்றிய தினமாகையால் என்க. அசக்தரானோர் சப்தமி, அஷ்டமி, நவமி இம்மூன்று தினத்திலும் பூசிப் பரேல் ஒன்பது தினத்திலும் பூசித்த பலனை அடைவர். இவ்விரதத்தை மேற்கொண்டவரெல்லாச் செல்வங் களையும் அடைந்து உயர்பதம் அடைவர். இதனை அநுட்டித்தோர் சுசீலன் சுகேது முதலியோர்.

2. விரதங்களில் ஒன்று. இது புரட்டாசி மாதம் பூர்வ பக்ஷப் பிரதமை, முதல் திரிதிகை வரையில் உருத்திரி யையும், சதுர்த்தி முதல் ஷஷ்டி வரையில் இலக்குமியை யும், சப்தமி முதல் நவமி வரையில் சரஸ்வதியையும், பூசித்துத் தசமியில் முடிப்பது. இதனை சுகேது என்னும் அரசன், அரசாட்சி யிழந்து வருந்தியதால் அவன் மனை வியாகிய துவேதியை ஆங்கீரச முனிவர் இவ்விரதம் அநுட்டிக்கக் கற்பித்தனர். அவ்வகை அவள் அநுட்டிக்க அவ்வநுட்டானத்திற்குப் பின் அவள் வயிற்றில் பிறந்த குமரனாகிய சூரியபிரதாபன் இழந்த நாட்டைப் பகை வரிடமிருந்து மீட்டனன் என்பர்.

இவ்வாறு அபிதானசிந்தாமணியில் கூறப்பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 11.10.18

புதன், 10 அக்டோபர், 2018

நவராத்திரி (2)

சாமி கைவல்யம்


நேற்றைய தொடர்ச்சி....


விஜயதசமி அன்று சிவன் கோயிலில் பரிவேட்டை உற்சவம் என்பதாக ஒன்று நடத்துகின்ற வழக்கமுண்டு. அன்று பகவான் எழுந்தருளி வன்னி மரத்தில் அம்பு போடுவது வழக்கம். வன்னிமரத்தில் நெருப்பிருக்கிறதாம். அதில் அம்பு பாய்ச்சினால் அந்த வேகத்தால் நெருப்புண்டாகி, அந்த மரத்தை எரித்துவிடுமாம். அதனால் வேட்டையாடுவோருக்கும், ராஜாக்களுக்கும் எளிதில் ஜெயத்தைக் கொடுக்குமாம். இந்தக் கார ணத்தால், இந்த வேட்டைத் தினத்திற்கு விஜயதசமி அதாவது, ஜெயத்தைக் கொடுக்கும் நாள் என்று பெயர். என்றாலும், இதற்கும் உள்கருத்துண்டாம். உள்கருத்தை வைத்து வைத்துத்தான் நம் நாடு உள்ளேயே போயிற்று. பாமரர்களுக்கு உள்கருத்து ஸ்தூலமாகவும், படித்தவர் களுக்குச் சூட்சமமாகவும் இருப்பதாகச் சொல்லுகிறார்கள். (எந்தச் சூட்சுமமும் பாமரர்களைப் படித்தவன் ஏமாற்றவே உபயோகப்படுகிறதே ஒழிய, காரியத்திற்கு ஒன்றும் உபயோகப்படுவதில்லை). அதாவது, நெருப் பிலடங்கிய வன்னி மரத்தையே ஆத்மாவோடு கூடிய தேகமாகவும், அம்பை ஞானமாகவும், வேட்டையில் அம்புவிடுவதை ஞானோபதேசமாகவும், மரம் எரிந்து விழுவதை கரும சம்பந்தமானவைகளை ஞானத்தணல் சுட்டு வெண்ணீறாக்குவதாகவும் கொள்ள வேண்டு மென்பார்கள். இந்த உள்கருத்து உபதேசம் கேட்டுத்தான் ராஜவம்சமெல்லாம் நடுத்தெருவில் நின்றதான வட தேசத்துக் கதைகள் அநேகம்.

ராஜாக்களின் நிலை


மைசூர் மகாராஜா பரிவேட்டையால் அய்தருக்கு அடிமையானார். ஆனால், வெள்ளைக்காரப் பரிவேட்டைதான் அதை விடுவித்துக் கொடுத்தது. தஞ்சாவூர் ராஜா செய்த சரஸ்வதி பூசையும், ஆரிய பரிவேட்டையும் சரஸ்வதி மகாலில் அடுக்கி வைத்த குப்பைக் கூள ஏடுகளும், ஆயுதங்களும், முன்வாயிலில் துளசியைக் கொட்டி விட்டு, பின்வாயிலில் ராஜாவை ஓடச் செய்து விட்டது. அதுபோலவே, திப்பு காலத்தில் திருவனந்தபுரத்து ராஜாவிற்கு வெள்ளைக்காரர்கள் அபயம் கொடுத்தார்களே ஒழிய, சரஸ்வதி பூசையும், பரிவேட்டையும் ஒன்றும் செய்யவே இல்லை. அந்தப்படி அபயம் கொடுத்திராவிடில், அனந்த சயனப் பிரபுவும், அவர் பெண்சாதியும், அவர் மருமகளும் ஓடிப் போயன்றோ இருக்க வேண்டும்? அனந்தசயனப் பிரபு பின்னும் ஓடிவந்து தங்கள் சொத்தென்று, அங்கு சயனித்துக் கொண்டிருப்பதாக இப்பொழுதும் சொல்லுகிறார்கள்.

சரஸ்வதி இல்லாத நாடுகளில்  கல்வி பெருகியது


கடவுளையும், பெரியவர்களையும் தூஷிக்கிறவர்கள் காட்டும் ஆதாரங் களையும், அதன் நியாய வாதங்களை யும் கூட்டி ஆலோசியுங்கள். சரஸ் வதியைக் கொலு விருத்தி, பெரிய உற்சவங்கள் செய்யும் நமது நாட்டில் ஆயிரத்திற்கு 50 பேருக்குக்கூட கல்வி இல்லை. சரஸ்வதியே இல்லாத நாட்டில் ஆயிரத் திற்கு 996 பேர்கள் கல்வி கற்றவர்களாக இருக்கிறார்கள்.

நாம் சரஸ்வதிக்குச் செய்த தொண்டு சாமானிய மல்லவே! ஒரு ஏட்டைக் கிழியோம்; ஒரு எழுத்தை மிதியோம்; இறைந்து கிடக்கும் இதழில் துப்போம்; படித்த ஒரு பழைய ஏட்டையும் வீசி எறியோம்; கால்பட்டால் தொட்டுக் கும்பிடுவோம்; கைபட்டால் கண்ணில் ஒத்திக் கொள்வோம்; எந்த ஏட்டிற்கும் காப்பு சொல்வோம்; செல்லரித்த ஏட்டையும் புண்ணிய தீர்த்தத்தில் கொண்டு போய் போடுவோமே ஒழிய தெருவில் போடோம்; கற்றவர் நாவின் கருத்தும், கம்பன் கவித்திறனும் அவளே என்போம். இத்தனையும் போதாமல் வருடம் ஒருதரம் பத்து நாள் பள்ளியறையில் வைத்துக் கும்பிடவும் செய்கிறோம். இத்தனையும் நாம் இங்கு செய்ய, இந்த சரஸ்வதி கொஞ்சமும் நன்றி விசுவாசம் இல்லாமல் மேனாட்டில் குடிபுகுந்த காரணம் என்ன? என்பதை வாசகர்கள் சரஸ்வதியையே கேட்கட்டும். ஏ சரஸ்வதி! மேனாட்டில் உனக்கு என்ன மரியாதை இருக்கிறது? உன்னைப் படித்து எறிகிறார்கள்; காலில் மிதிக்கிறார்கள்; செருப்புக் கட்டுகிறார்கள்; மலம் துடைக்கிறார்கள்; உன் பெயர் சொல்லுவதில்லை; நீ ஒருத்தி இருக்கின்றாய் என்றுகூட நினைப்பதில்லை; உனக்குப் பூசை இல்லை; புருஷன் இல்லை; வீணை இல்லை; எல்லா வித்தைக்கும் அவர்கள் தாங்களே எஜமானர்கள் என்கிறார்கள். எனவே நீ செய்வது நியாயமாகுமா? என்று நாங்கள் சொல்லி விட்டால், உன் பாஷையான சமஸ்கிருத இலக் கணத்தை எங்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்படாதென்று நீ சொன்னதாகச் சொல்லும் சாஸ்திரிகளே எங்களை நாஸ் திகர்கள் என்று சொல்கிறார்கள். உன் முதற்பிள்ளை யான பார்ப்பனர்களின் தாசிப் பிள்ளை, அடிமை, வேலையாள், ஒழுக்கமற்றவன் என்று எங்களில் படித்த உணர்ச்சியற்ற பண்டிதர்களையும்கூட நீ சொல்லியிருப் பதாக உன் முதற் பிள்ளைகள் சொல்லும் ஏட்டைக்கூட கிழித்தெறியாமல் சற்றும் விசுவாசமற்றுப் போனாயே என்று நாங்கள் சொல்லிவிட்டால், தூஷித்தவர்களாகி விடுவோமா? நீயே சொல்லு!

நீ வாசம் செய்யும் மேனாட்டில் உனக்குப் பூசை யில்லை. நைவேத்தியமில்லை. பூசாரி, குருக்களுக்குக் காணிக்கையு மில்லை. பஞ்சமும் படியாமையுமுடைய இந்த நாட்டின் பேரில் மாத்திரம் உனக்கு வந்த வயிற் றெரிச்சல் என்ன? உன் முதற்பிள்ளைகளுக்கெல்லாம் உன் பேராலேயே அளித்தளித்து ஆண்டியானோமே என்று நாங்கள் சொல்லுவதாலேயே உன் பக்த கோடிகள், உன் புருஷனுடைய பிரம்மலோகத்திற்கும் உன் மாமனுடைய வைகுண்டத்திற்கும் உன் பாட்டனும் மகனு மான சிவனுடைய கைலாசத்திற்குப் போகும் கதவுகளை (சமயதூஷணையால்) சாத்தினவர்களாகி விடுகிறோமாம். நீயும் உன் குடும்பத்துப் பெண்களும் குடிபோயிருக்கும் நாட்டில் உங்கள் புருஷர்களுக்குக் கோயில் கிடையாது. கும்பாபிஷேகமில்லை. அப்படியிருக்க, நீங்களில்லாத நாட்டில் உங்களுக்குக் கோயிலும், கும்பாபிஷேகமும், பூசையும் எதற்கு? இருக்கிற கோயில்களில் நீங்கள் குடியிருந்தால் போதாதா? காணிக்கையையும் நிறுத்தி, கும்பாபிஷேகத்தையும் விட்டு, கோயிலுக்கு எழுதி வைப்பதையும் நிறுத்திப் பணத்தையெல்லாம் படிப் பிற்கே வைத்துவிட்டுப் போங்கள் என்றால், பாமர மக்களுக்காக ஏற்பாடு செய்து வைத்த சமய ஒழுக்கங் களையெல்லாம் தடுத்து மோட்ச வாசலை அடைக்கும் தாசர்களென்று எங்களை ராஜீயவாதிகள்கூடச் சொல் லலாமா?

ஆச்சாரிகளுக்கும், குருக்களுக்கும் அதைச் சேர்ந்த பார்ப்பனர்களுக்கும் கொடுப்பதை நிறுத்திவிட்டுப் பக்கத்து ஏழைக்குப் படிப்பும், தொழிலும் கற்பியுங் களென்றால் ஆச்சாரிகளையும், பெரியவர்களையும் நாங்கள் குற்றம் சொல்லுகிறவர்களாகி விடுவோமா? அறுப்பறுக்கும் காலத்தில் கருக்கரிவாள்கூட ஒரு மூலையில் கவலையற்றுத் தூங்குகிறதே! வருண பகவானுக்கும் சூரிய பகவானுக்கும் ஏற்பட்ட சண்டை யில் வருண பகவான் முறியடிக்கப்பட்டு, ஓடி மறைந்த விட்டானே! சூரியனே இப்போது கழனியில் உள்ள எல்லாவற்றையும் காய்ந்து தொலைத்து விட்டானே! உன் ஆயுதங்களுக்குக் காட்டிலும் கழனியிலும்கூட வேலை யில்லை என்றால், பின்னை கருமார் வீட்டிலும் வேலை என்ன? எனவே வேலையில்லா ஆயுதத்திற்குப் பூசை ஏன்?

சரஸ்வதி மகாலும், லட்சுமி விலாசமும், பார்வதி மண்டபமும் கட்டி வைத்த தஞ்சாவூர் மகாராஜா குடும்பம் எங்கே? தப்பித் தவறி அந்த வம்சத்திற்கு ஒரு டிப்டி சூப்ரண்டெண்ட் வேலைக்குக்கூட எவ்வளவு கஷ்டமாய் இருக்கிறது? காரணமென்ன? வீண் பூசைகளும், கோயில் கும்பாபிஷேகமும் அல்லவா? அவர்கள் செய்த பிராமண போஜனமும், தட்சணையும், கோயில் பூசையும் என்ன பலனை அளித்தது? சரஸ்வதி பூசையின் கொலுவால் அல்லவா நாயுடுகளின் அரசாட்சி தஞ்சாவூரில் ஒழிந்தது? கிளைவும், டூப்ளேயும் எந்தச் சரஸ்வதியைப் பூசித்தார்கள்? அவரவர்கள் முயற்சியும், கடமையும், எந்தக் கஷ்டத்திலும் செய்து முடிக்கும் தைரியமும் இருந்தால் எல்லா லட்சுமியும் அங்கே வந்து தீர்வார்கள். இதுவே உலக அனுபோகமும் சாஸ்திரத்தின் கருத்துமாகும்.

- விடுதலை நாளேடு, 10.10.18

செவ்வாய், 9 அக்டோபர், 2018

நவராத்திரி

***கைவல்யம்***


நவராத்திரி என்ற பதம் ஒன்பது இரவு எனப் பொருள்படும். இது புரட்டாசி அமாவாசைக்குப் பின் உள்ள நவமியை இறுதியாக உடைய ஒன்பது நாள்கள் இரவிலும் கொண்டாடப்படும் உற்சவம். இது சில வருடங்களில் அய்ப்பசி மாதத்துக்குள்ளும் வரும். இந்நாள்களின் ஆரம்பத்தில் எல்லோர் வீட்டிலும் அவரவர்கள் நிலைக்கேற்ப பொம்மைகள் கடவுள்களின் உருவமான படங்கள் வைத்து, ஒவ்வொரு சாயங்காலமும் ஒன்பது நாள் வரையில் பாட்டு முதலியவை பாடி, ஆரத்தி முதலியவைகள் சுற்றி, இந்த உற்சவத்தைப் பெண்கள் கொண்டாடுவது வழக்கம். இதில் புருஷர்கள் கொலு முதலியவைகளைக் கவனியாவிட்டாலும் நவராத்திரியைக் கொண்டாடுகிறார்கள். வேதபாராயணம், சூரிய நமஸ்காரம் முதலிய வைகளை நடத்த பார்ப்பனர்களை ஏற்படுத்தி, இந்த ஒன்பது நாளில் நமது வீடு வேத கோஷத்தில் நிறைந்து மங்களகரமாகும்படியாகச் செய்ய வேண்டுமாம். ஆனால் இந்த விதி பார்ப்பானுக்கும், அதிகாரம் படைத்த இராஜாக்களுக்கும், பணம் படைத்த வைசியனுக்கும் மாத்திரமாம்; மற்றவர்கள் பக்தியோடு சுந்தரகாண்டம் பாராயணம் செய்து முடித்து பார்ப்பனனுக்குச் சாப்பாடு, தட்சணை கொடுத்து, ஆசீர்வாதம் பெற வேண்டுமாம்.

ஒன்பதாம் நாளில்...


நவராத்திரியில் கடைசி நாளாகிய நவமி தினத்தில் புருஷர்கள் தமது வீட்டிலிருக்கும் புத்தகங்களை ஒழுங்காக அடுக்கி வைத்து, காலை முதல் உபவாசமிருந்து சரஸ்வதியை பூசை செய்ய வேண்டும். இந்த நவமி அன்றைய தினமாவது அல்லது அடுத்த தினமாவது, தொழிலாளிகள் ஆயுதத்தையுடையவர்கள் ஆகிய வர்கள் தங்கள் தங்கள் ஆயுதங்களை வைத்துப் பூசை செய்வது வழக்கம். அதனாலேயே இந்தப் பூசைக்கு ஆயுத பூசை என்றொரு பெயரும் உண்டு. இந்த நவராத்திரியை இந்துமதப் பிரிவுகள் என்று சொல்லும் எல்லா மதத்தவர்களும் கொண்டாடுகிறார்கள். அன் றியும் சிவ, விஷ்ணு ஆலயங்களிலும் இதைப் பெரும் உற்சவமாகக் கொண்டாடுகிறார்கள். அங்கு அம்மனை அலங்கரித்து அநேக தீப அலங்காரங்கள் செய்து, ஒன்பது நாள் இரவும் ஆராதனை நடத்துவார்கள். இந்த வேடிக்கைகளைப் பார்க்கவே அநேகர் மைசூருக்குப் போவது வழக்கம்.

இலாபமிருப்பதால் பரப்பும் பார்ப்பனர்கள்


இதனால் கடவுள் பக்தி பரப்பும் தொழிலையுடைய பார்ப்பனரும் இவ்வுற்சவத்தால் தங்களுக்கு இலாபமிருப்பதால் அவர்களே ஊர் ஊராய் நவராத்திரி உற்சவத்தைப் பற்றி விளம்பரப்படுத்துவார்கள். நிற்க; இதைச் சைவர், ஸ்மார்த்தர், வைஷ்ணவர், மாத்வர் முதலிய எல்லா மதத்தவர்களும் கொண்டாடக் காரணம் என்னவென்றால், கல்வியும், ஆயுதமும் அதற்குக் கற்பிக்கப்பட்ட தேவதையான துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி என்று சொல்லப்பட்டவர்கள் - ஒவ்வொரு மதத்தினுடைய தெய்வங்களின் அம்மன்களானதனாலும், இந்து மதத்தவர்களுக்கெல்லாம் இது சம்பந்தப் படுத்தப்பட்ட புராணக் கதைகளிலிருப்பதாலுமேயாகும். துர்க்கை முதலிய அம்மன்களை வைஷ்ணவர்கள் பூசிக்கா விட்டாலும், இது சம்பந்தமான கதைகள் அவர் களிடையேயும் உண்டு. மற்றவர்கள் சரஸ்வதி பூசை யன்று துர்க்காலட்சுமி ஸரஸ்வதீப்யோ நம என்று கூறி பூசை தொடங்குவார்கள்.

மகிஷாசூரன்


முன்னொரு காலத்தில் மகிஷாசூரன் என்ற எருமை ரூபமான அசுரனும் அவன் பரிவாரங்களும் விருத்தி யாகி கடவுள் வரத்தால் சிறந்த பதவியை அடைந்து உலகை இம்சித்துக் கொண்டிருந்ததால்; இந்தக் கஷ்டம் பொறுக்க முடியாமல் தேவர்கள் பார்வதியிடம் முறையிட, பார்வதி ஒன்பது நாள் சிவபிரானைக் குறித்துத் தவமிருந்து, அவரிடமிருந்து தகுந்த சக்தி பெற்று, ஒன்ப தாம் நாள் மகிஷாசூரனைக் கொன்று, பரிவாரங்களை நாசம் செய்து சாந்தமடைந்தார். மகிஷாசூரனைக் கொன்றதனால் பார்வதிதேவிக்கு மகிஷாசூரமர்த்தினி என்கிற பெயரும் வந்தது என்பர். எனவே, இந்தக் கதையின் ஆதாரத்தைக் கொண்டு அம்மன் தவமிருந்து விழித்த ஒன்பதாம் நாள் வேண்டிய வரங்கள் கொடுப்பார் என்னும் கருத்தைக் கொண்டே இவர்கள் இந்த உற்சவத்தைக் கொண்டாடுகிறார்கள்.

நம்முடைய உற்சவத்திற்கும் மூடநம்பிக்கைகளுக்கும் புராணக்கதைகளுக்கும் பாமரர்களே பங்காளிகள். படித்தவர்களுக்கு இதில் வயிறு வளர்க்கும் பிரத்தியட்ச அனுகூலமிருந்தாலும் கூட இதுபோன்ற கதைகளைப் பற்றிய விவகாரங்கள் எழும்போது, தங்களுக்கெல்லாம் வேறு கருத்தை இதில் பெரியவர்கள் அமைத்திருக் கிறார்கள் என்று எதற்கும் தத்துவ நியாயம் சொல்வது போல், இதற்கும் ஒரு ரகசிய அர்த்தம் உண்டாம்! வேதபாராயணம், கோயிலில் நடக்கும் பூசை, ஆரா தனைகள், ஒன்பது நாளும் பார்ப்பானுக்குப் போடும் சோறு, அம்மன் விழித்தவுடன் செய்யும் தானம் முதலியவைகளால் பாமரர்களுக்கு இகலோக சுகம் சித்திக்க வேண்டுமாம். அதனால் மனம் சுத்தப்பட்டுப் பின்னால் மோட்சத்திற்கு வருவார்களாம். படித்த பண்டிதர்கள் இந்த ஆடம்பரத்தில் சோறும் தட்சணையும் வாங்கிக் கொண்டாலும் அவர்கள் சொல்லும் உள் கருத்தென்னவென்றால் மகிஷாசூரன், அவன் பரிவாரங்கள் முதலியவைகள் என்பதை அஞ்ஞானமும் அதன் காரியங்களுமாகவும், பார்வதியை சித் சக்தி யாகவும் அது பரம்பொருளாகிய ஆத்ம ஸாக்ஷாத்கார விசேடத்தால் அஞ்ஞானத்தை வேரறுப்பதாகவும் கொள்ள வேண்டுமாம். துர்க்காலட்சுமீ சரஸ்வதீப்யோ நம என்னும் மந்திரத்தைப் பார்ப்பானிலிருந்து அம் மனையே பிரதானமாகப் பூசிக்கும் சங்கரமடத்து சாஸ்திரிகள் வரையிலும், மக்களிடமிருந்து கிடைக்கும் வரையிலும், தங்கள் லவுகீக சுகத்திற்காக அவர்களை வேரறுக்கிறார்களே ஒழிய, அவர்களது அஞ்ஞானத்தை வேரறுப்பதாகத் தத்துவார்த்தம் சொல்லும் சமயவாதிக ளெல்லாம் மகிஷாசூரனிடமல்லவா (அதாவது ஆசை யில்) மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்?

அலர்மேலு மங்கையாக லட்சுமியின் விரதம்


முன்னொரு காலத்தில், லட்சுமிதேவி உலகில் அலர்மேலு மங்கையாக வந்து, பரமதபதவாசியாகிய விஷ்ணுவான திருப்பதி பெருமாளை அடைந்து ஆனந்திக்க, இந்த ஒன்பது நாள் தவமிருந்தாராம். இதன் முடிவில் அவர் எண்ணம் முற்றுப்பெற விவாகம் பெரிய ஆடம்பரமாக முடிந்ததாம். இந்த விசேடத்தை முன்னிட் டுத்தான் வைணவ மாத்வர்கள் இந்நாளைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். இந்நாள்களில் திருப்பதியில் பிரம்மோற்சவம் நடக்கிறது.

சரஸ்வதியின் தவம்


பிரம்மாவின் பத்தினியான சரசுவதியும் இந்த நவராத்திரியில் தன் நாயகனை அடைந்து நிலைபெறத் தவமிருந்தாள் என்னும் கதையைக் கொண்டு, கடைசி மூன்று நாளும் சரசுவதிக்கு முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. பத்தாம் நாள் விஜயதசமி அன்று சரஸ்வதி தவம் முடிந்து சந்துஷ்டியாயிருப்பதால், அன்று வாசிப்போருக்குக் கல்வி நன்றாக வருமாம்; தொழில் செய்கிறவர்கட்குக் காரியங்கள் கைகூடி வருமாம்.

இதை நம்பி நடக்கும் நம்மைவிட, மற்றத் தேசங்களில் எல்லாம் சரஸ்வதி எந்நாளும் திருப்தியோடு கூடின சந்தோஷத்துடன் இருக்கிறாள். நம் தேசத்தில் வருடத்திற்கு ஒருநாள் தான் கண்ணைத் திறந்து திருப்திப்படுகிறாள். இதற்குக் காரணம், பார்ப்பானுக்குக் கொடுப்பது சரியாகக் கொடுக்கப்படுகிறதா? என்று பார்ப்பதற் காகவோ அல்லது பூசையின் திருப்திக் குறை வாலோ அல்லது நம்மிடம் ஆயிரமாயிரம் வருடமாக வாங்கியுண்ட நன்றி கெட்ட குணத்தை மறைப்பதற்கோ அல்லது தன் மொழியான சமஸ்கிருத இலக்கணத்தைத் தன் முதற்பிள்ளைகள், மற்றப் பிள்ளைகளுக்கு எங்கே சொல்லி வைத்து விடுவார்களோ என்னும் அஞ்ஞானத்தாலோ என்பதை நாம் அறியோம்.

கிரேதாயுகத்தில் சுகேது என்னும் ஒரு அரசன் இருந் ததாகவும், அவன் சத்துருக்களால் அடிபட்டு காட்டை அடைந்து, காயத்தாலும், பசிப்பிணியாலும் நோய்வாய்ப் பட்டு அவதிப்பட்டதாகவும், அங்கு வந்த அங்கிரஸ் என்னும் ரிஷி, அரசன் பெண்சாதியான சுவேதி என்பவளுக்கு லட்சுமி, சரஸ்வதி, பார்வதி இவர்கள் செய்த மாதிரி நீயும் தவம் செய்வாய் என்று இந்தப் பூசையை உபதேசித் ததாகவும், அவ்வாறே அவள் செய்து அங்கிரஸ் என்னும் புத்திரனும் பிறந்து, அவன் சத்துருக்களை ஜெயித்துத் தகப்பனுக்கு ராஜ்யத்தை வாங்கிக் கொடுத்ததாகவும் சொல்லப்படுகின்றது. நவராத்திரிக்கு இன்னும் இது போன்ற பல கதைகளும் உண்டு.

படித்தவர்களுக்கு புத்தி இருக்கிறதா?


கிரேதாயுகம் முதற்கொண்டு, இதுநாள் பரியந்தம் செய்த பூசைகளும், மந்திரங்களும், அதைச் செய்த ஜன சமூகங் களும், நம் நாடும், அதை ஏற்றுக்கொண்ட தெய்வங்களும் அய்ந்நூறு வருடங்களாக அன்னியர் படையெடுப்பால் சின்னாபின்னப் பட்டு, வெள்ளைக்கார மந்திரத்தால் வெளியேற்றப் பட்டிருக்கையில், நமது சரஸ்வதியும், லட்சுமியும், பார்வதியும் அவர்களுக்குப் பூசையும், அதற்காகப் பார்ப்பனனுக்குப் பணமும், தட்சணையும் எதற்கு? என்று குடிஅரசு கேட்டு விட்டால், சமயவாதியும், சாஸ்திரவாதியும், அது சமயத்தை அடியோடு தூஷிக்கின்றது என்று சொல்லுவதனாலும், படித்தவர்கள் என்பவர்களான ஆங்கில, சரித்திர, சயின்ஸ், பி.ஏ., எம்.ஏ.,வாதிகளுக்குப் புத்தி இருக்கிறதா? இல்லையா? என்றுதான் கேட்கிறோம்!

(தொடரும்)

- விடுதலை நாளேடு, 9.10.18