புதன், 24 மே, 2017

பெரியபுராணம் (ஈ.வெ.ரா)

02-10-1943 - குடிஅரசிலிருந்து...

பெரியபுராணத்தில் உள்ள விஷயங்கள் உண் மையாய் நடந்த செய்திகளா? அல்லது மக்களுக்குச் சிவபக்தி உண்டாக வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு சைவ சமயவாதிகளால் கற்பனை செய்யப்பட்ட செய்திகளா? சிவனுக்கு மனித உருவமும் மாட்டு வாகனமும் பெண்ஜாதி பிள்ளை களும் உண்மையாகவே இருந்து வருகிறதா? அல்லது சிவபக்தர்கள் கற்பனை செய்த கருத்துக் களா? சிவன்தான் முழு முதல் கடவுள் என்றால், முழுமுதல் கடவுள் என்பதற்கு உருவம், பெண்டு, பிள்ளை கற்பிப்பது பொருத்தமாகுமா?

கைலாயம் முதலிய இடங்கள் உண்மையிலேயே இருக்கின்றனவா? அல்லது சைவ மதவாதிகள் கற்பனையா? உண்மையாய் கைலாயம் என்கின்ற இடம் ஒன்று இருக்குமானால் சாஸ்திரப்படி அதற்கு ஆதாரம் இருக்கிறதா? சிவன், விஷ்ணு, பிர்மா, இந்திரன் முதலியவர்கள் உண்மையிலேயே அவர் களைப்பற்றிச் சொல்லப்படுகிற பெரிய புராணம் முதலிய மத ஆதாரங்களின்படி இருந்த வர்களா? அல்லது மதவாதிகளால் கற்பிக்கப்பட்டவர்களா?

அகஸ்தியனென்றும், நாரதனென்றும் மற்றும், மனிதத் தன்மைக்கும் விஞ்ஞான உண்மைக்கும் மேற்பட்டவர்கள் என்றும், சொல்லப்பட்டவர்களை யெல்லாம் உண்மையாய் இருந்தவர்கள் என்றும் அவர்கள் சங்கதி எல்லாம் உண்மையாய் நடந்தவைகள் என்றும் பெரிய புராணக்காரர்கள் நம்புகிறார்களா?

பெரிய புராணச் செய்திகள் உண்மையாக நடந்தவைகள் என்றால் ஒரு ஆயிரம் வருஷங்களுக்குள்ளாகக் கடவுள்கள் நேரில் வந்து காட்சி கொடுத்ததாக அருத்தமாகவில்லையா!

கைலாயத்தில் இருந்து மாட்டின் மேல் வந்து பக்தனையும் அவன் மனைவியையும் அந்த மாட்டின் மேல் ஏற்றிக்கொண்டு கைலாயத்துக்குப் போய் விட்டார்கள் என்றால் அது உண்மையாகவே நடந்திருக்குமா?

மாடு இரண்டாகி வந்ததும், மாடு ஆகாயத்தில் ஏறிச் சென்றதும் கற்பனையா? அல்லது உண் மையா?    உண்மையானால் அது கடவுள் தன்மைக்கு ஏற்றதா? அல்லது மனிதத் தன்மைக்கு ஏற்றதா?

இந்த மாதிரிக் கடவுள் அற்புதங்கள், பக்தர்கள் அற்புதங்கள் எல்லாம் இப்போது சைவத்தில் நடைபெறாமல் இருப்பதற்குக் காரணம் என்ன?

சாயிபாபா, ராமகிருஷ்ணர், ரமண ரிஷி, காந்தியார், சொரக்காய் சாமியார், பாம்பன் சாமியார், மெய்வழி ஆண்டவன், மவுன சாமியார், பட்டி னத்தார், பத்திரகிரியார், அருணகிரியார் முதலியவர்களைப்பற்றிச் சொல்லப்படும் அற் புதங்கள் எல்லாம் பெரியபுராண பக்தர்களது அற்புதங்களோடு சேர்ந்தவைகளா? அல்லது அதை விட மட்ட ரகமானவையா, அல்லது கற்பனை களா?

அற்புதங்கள் இல்லாத கடவுள்களோ - மதமோ - பக்தர்களோ - மதித்து வணங்கத்தக்கவர்களோ - சைவத்தில் - பெரியபுராணத்தில் ஏன் இருப் பதில்லை.

பெரியபுராணம் நிஜமானால் பக்தலீலா மிருகமும் நிஜமாய்த்தான் இருக்கவேண்டுமா? அல்லது அது கற்பனையா? சிவன் என்கின்ற ஒரு கடவுள் ரிஷபாரூடராய்ப் பார்வதி சமேதராய்க் கைலாயத்தில் இருக்கின்றார் என்றால், விஷ்ணு என்பதாக ஒரு கடவுள் கருட ஆரூடராய், லட்சுமி சமேதராய் வைகுண்டத்தில் இருக்கிறார் என்பது மெய்யா? அல்லது கற்பனையா? நாயன்மார்கள் நால்வர்களுடைய கதையும் மெய்யானால், ஆழ்வாராதிகள் பன்னிருவர்கள் கதைகளும் மெய்யா? கற்பனையா?

தேவார திருவாசகங்களுக்கும், நாலாயிரப் பிரபந்தங்களுக்கும் என்ன வித்தியாசம்? எது முந்தியது? எது உண்மை? எது சிறந்தது? பெரிய புராணம் இன்றைய சைவர்களுக்குப் பொருத்த மானதா? இன்று அது சைவர்களுக்குள் பரப்பப் படுவது கடவுள் பெருமை, பக்தர் பெருமை ஆகியவை தெரிவதற்கு ஆகவா? அல்லது அதைப் பின்பற்றச் செய்வதற்கு ஆகவா? பெரியபுராணம் ஒழுக்க நூலாகுமா?

பெரிய புராண சிவன் முழுமுதற் கடவுளாக இருக்க முடியுமா?     முழுமுதற் கடவுள் என்பதற்கு ஏதாவது லட்சணம் உண்டா? அந்த லட்சணப்படி பெரிய புராண சிவன் இருக்கிறாரா?

சிவபிரான் முழுமுதற் கடவுள் என்பதை கிறிஸ்தவர், முஸ்லிம்கள் ஒப்புக்கொள்ளுகிறார்களா? அவர்கள் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் வை ணவர், மாத்துவர் ஸ்மார்த்தர்களாவது ஒப்புக் கொள் ளுகிறார்களா?

---------------


திராவிடர் கழகம் என்று சொல்லப்படுவது இந்துக்களில் 100-க்குத் 97 பேராக இருக்கிற பார்ப்பனரல்லாத மக்கள் அனை வருக்குமான கழகமாகும். அதன் கொள்கை திராவிட மக்களை முன்னேறச் செய்வதும் அவர்களுக்கு இருக்கிற இழிவைப் போக்கி உலக மக்களைப் போல வாழச் செய்வதுமாகும்.  - -
- தந்தை பெரியார்

-விடுதலை,19.5.17

பெண்களை புராணக் கதைகளைப் படிக்கவிடக் கூடாது


15-6-1943, விடுதலையிலிருந்து...

பெண்களுக்கு இன்றுள்ள புராணக் கதைகளைக் கேட்கவோ படிக்கவோ சிறிதும் இடம் கொடுக்கப்படாது. கற்பு என்றால் அதற்கு அறிவுக்கேற்ற அல்லது இருவர் நலனுக்கேற்ற கருத்துக் கொள்வதே இல்லை. கற்பு என்றால் நடைப்பிணமாய் இருக்க வேண்டும். வாய், கண், செவி ஆகிய மூன்று யந்திர உணர்ச்சிகூட இருக்கக் கூடாது என்ற பொருளே கொடுக்கப்படுகிறது. இதனால் யாருக்காவது பயன் உண்டா? கற்பு என்பதற்கு இது அழுத்த மானால் குருட்டுப் பெண்ணும் மொண்டி ஊமைப்பெண்ணும் மேலானதாகும்.
-விடுதலை,19.5.!7

ஞாயிறு, 21 மே, 2017

கேரளாவில் பாலியல் வன்கலவி செய்ய முயன்ற சாமியாரின் பிறப்புறுப்பை துண்டித்த இளம்பெண்: முதல்வர் பாராட்டு

திருவனந்தபுரம், மே 21- தன்னை கற்பழிக்க முயன்ற சாமியாரின் பிறப்பு உறுப்பை இளம்பெண் துண்டித்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரின் தைரியத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டி உள்ளார்.
கேரள தலைநகர் திருவனந் தபுரம் அருகே உள்ள பேட்டை பகுதியில் 23 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவரது தந்தை நீண்டகாலமாக படுக்கையாக உள்ளார். இத னால் வேதனையில் இருந்த இந்த குடும்பத்துக்கு கணேசா னந்தா தீர்த்தபாடம் என்கிற ஹரிசுவாமி (வயது 54) என்ற சாமியார் கடந்த சில ஆண்டு களுக்கு முன் அறிமுகமானார்.
கொல்லத்தில் உள்ள சட்டம்பி சுவாமி ஆசிரமத்தை சேர்ந்தவர் என்று அந்த இளம் பெண்ணின் தாயிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த சாமியார் அடிக்கடி இளம் பெண்ணின் வீட்டுக்கு சென்று வந்தார். அவரை நம்பிய இளம் பெண்ணின் தாயும், தங்கள் வீட்டில் அடிக்கடி பூஜை செய் யுமாறு சாமியாரை கேட்டுக் கொண்டார்.
அதன்பேரில் அந்த வீட் டுக்கு சென்று பூஜைகள் செய்து வந்த சாமியார், அந்த இளம் பெண்ணுக்கு அடிக்கடி பாலி யல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், இது குறித்து தனது தாயிடம் தெரிவித்துள் ளார். ஆனால் அவர் அதை அலட்சியம் செய்து வந்ததாக தெரிகிறது.
இதனால் வேதனைக்குள் ளான அந்த இளம்பெண், காம வெறி பிடித்த சாமியாருக்கு தக்க தண்டனை வழங்க முடிவு செய்தார். இதற்கான தருணம் பார்த்து அவர் காத்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவிலும் சாமியார் அந்த இளம்பெண்ணின் வீட் டுக்கு சென்றார். அங்கு அவர் இளம்பெண்ணை வலுக்கட் டாயமாக பாலியல் வன்கலவி செய்ய முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் வீட்டில் இருந்த கத்தி ஒன்றை எடுத்து சாமியாரின் பிறப்பு உறுப்பை துண்டித்தார்.
இதை எதிர்பாராத ஹரி சுவாமி வலி தாங்காமல் அல றித்துடித்தார். இதனால் அதிர்ச் சியடைந்த அந்த இளம்பெண், சாமியார் தன்னை கொன்று விடுவார் என்ற நோக்கில் உடனே அவசர எண் 100 மூலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் அங்கு வந்த காவல்துறையினர் சாமியாரை மீட்டு திருவனந்தபுரம் மருத் துவக்கல்லூரியில் சிகிச்சைக் காக சேர்த்தனர். அங்கு அவ ருக்கு அறுவை சிகிச்சை மூலம் சிறுநீர் குழாய் சீரமைக்கப்பட் டது.
பின்னர் சாமியார் ஹரி சுவாமி குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் குறித்து மேலும் நடத்தப்பட்ட விசார ணையில், அந்த இளம்பெண் 10ஆம் வகுப்பிலிருந்தே சாமி யாரின் இந்த கொடுமைக்கு ஆளாகி வந்ததாக தெரிய வந் தது. எனவே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சாமியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் இந்த குற்றத்தை மறைக்க முயன்றதாக இளம் பெண்ணின் தாய் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் கேர ளாவில் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே தன்னை பாலியல் வன்கலவி செய்ய முயன்ற சாமியாரின் பிறப்பு உறுப்பை துண்டித்த அந்த இளம்பெண்ணுக்கு பாராட்டு கள் குவிகிறது. கேரள முதல்-வர் பினராயி விஜயன் இளம் பெண்ணின் தீரச்செயலை பாராட்டியுள்ளார்.
-விடுதலை,21.5.17

புனித’ கங்கை என்னும் சாக்கடை


பார்ப்பனர்கள் தங்கள் சுயநலத்திற்காக இந்திய மக்களை அறியாமைக்குழியில் பல்லாயிரம் ஆண்டு களாக ஆழ்த்திவருகிறார்கள். புண்ணியம் என்று ஆசை காட்டியும், பாபம் என்று அச்சுறுத்தியும் மக்களை மடமையினின்றும் மீள வழிஇல்லாமல் செய்துவருகிறார்கள். கல்வி, வேறு நாடுகளில் அறிவைப் பரப்பும் சாதனம்; ஆனால் இங்கு மூடநம்பிக்கைக்குத் துணைபோகிறது. ரேடியோ, டி.வி. போன்றவை மக்களை மேலும் பகுத்தறிவுள்ளவர்களாக ஆக்க மேலை நாடு களில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த விஞ்ஞான சாதனங்கள் நம் நாட்டில் மக்களை மேலும் மடையர்களாக்கவே பயன் படுத்தப்படுகின்றன.
பசுவை கோமாதா என்றும், மாட்டு மூத்திர வகையை பஞ்ச கவ்யம் என்றும், பெருச்சாளியை கணபதியின் வாகனம் என்றும், யானையை பிள்ளையாரின் அவதாரம் என்றும், புலியை அய்யப்பனின் வாகனம் என்றும், மயிலை முருகனின் வாகனம் என்றும், சேவலை அவனதுவெற்றிக்கொடி என்றும், காகத்தை சனிபகவான் வாகனம் என்றும் பலகாறும் திரும்பத் திரும்பச் சொல்லிச் சொல்லி கல்வி அறிவற்ற , சூத்திர, பஞ்சமர்களை அஞ்சி அஞ்சிச் சாகும்படி செய்து வருகிறார்கள் பார்ப்பனர்கள்
இத்தகைய முழு மூட நம்பிக்கைகளில் ஒன்றுதான் கங்கை புனிதமான நதி என்று பார்ப்பனர்கள் புளுகுவதும்.
சாக்கடையெல்லாம் கங்கையில்
கங்கை என்றும் புனித ஆறு, யாராலும் களங்கப்படுத்த முடியாதது; கங்கை நீர் எந்தக் கிருமியாலும் அசுத்தப்படுத்த முடியாதது என்ற மூடநம்பிக்கை மக்களிடையே உள்ளது.
இது உற்பத்தியாகும் இடத்திலிருந்து கடலில் கலக்கும் நிலை வரையில் 2,525 கி. மீ. தூரம் பாய்கிறது.
‘பாபம் போக்கும்‘ காசி நகரத்தின் சாக்கடை நீர் முழுதும் கங்கையில் தான் நாள்தோறும் கலக்கிறது. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் காசியில் மட்டும் 20 மில்லியன் காலன் சாக்கடை நீர் கங்கையில் கலக்கிறது. நாள்தோறும் 400 பிணங்கள் கங்கைக் கரையில் எரிக்கப்பட்டு, கங்கை நதியில் கரைக்கப்படுகின்றன. ஆண்டுதோறும், பயன் படுத்தப்பட முடியாத 9,000 கிழட்டுப் பசுக்கள் கங்கையில் வீசி எறியப்படுகின்றன. காசியில் 2 லட்சம் மக்கள் பட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலில் உண்டாகும் ரசாயனக் கழிவுநீர் முழுவதும் கங்கையில்தான் நாள் தோறும் கலக்கிறது.
இப்படிச் சாக்கடைநீரும், ரசாயனக் கழிவுநீரும், செத்த மனிதர்களும், ஆடுமாடுகளும் மிதக்கும் “புனித” கங்கை நீரைத்தான் சொம்புகளில் அடைத்து, நாடு முழுதும் மக்கள் எடுத்துச் செல்கிறார்கள். நாள் ஒன்றுக்கு இந்தச் சாக்கடை கங்கையில் 70 ஆயிரம் பேர் மோட்சத்திற்குப் போவதற்காக நீராடுகிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், காசிவாசிகள் மருந்து கலக்கப்பட்ட சாக்கடை நீரைத்தான் குடிக்கிறார்கள் .
இதன் விளைவாகத்தான் 1927, 1963, 1970 ஆகிய ஆண்டுகளில் காசியிலும், சுற்றுப்புறங்களிலும் மிகக் கொடுமையான தொத்து நோய்கள் வெடித்துப் பரவின.
கங்கோத்ரியிலேயே கலப்படம்
பாவம்போக்கும் காசியில்தான் கங்கை இந்தப் பாடு படுகிறது என்று நினைக்காதீர்கள். அதன் உற்பத்தி இடமான கங்கோத்ரியில் இதை விட அதிகமான அசிங்கம் கலக்கிறது. அங்கு வசிக்கும் மலைவாழ் மக்கள் அனைவருக்கும் கக்கூசாகப் பயன்படுவது இந்தப் புனித கங்கை தான்!
இந்தச் சாக்கடைக் கங்கையின் யோக்கியதையை இந்திய அரசின் இன்னொரு புள்ளிவிவரமும் அம்பலப் படுத்துகிறது. இந்தியாவில் குழந்தைகள் மரணம் 1000-க்கு 94 சதவீதமாகும். ஆனால் காசியையும், அதைச்சுற்றி யுள்ள பகுதிகளிலும் குழந்தை மரண விகிதம் 1000-க்கு 133.94 ஆகும். இதற்குக் காரணம் ‘கங்கை மாதாவின்’ சாக்கடை மகிமைதான்.
காசியை அடுத்து, கங்கையை மேலும் சாக் கடைஆக்குவதுகாஜியாபாத்நகரிலுள்ளபொதுத் துறை நிறுவனங்களாகும். இந்நகரிலுள்ள தொழிற்சாலை களிலிருந்து கழிவுப்பொருள்களில் ‘ஓபியம்‘ மிக உயர்ந்த அளவில் உள்ளது. இந்தப் பகுதியில் ஒடும் கங்கை நீரைத் தொடர்ந்து குடிக்கும் குரங்குகள் கூட போதைப்பழக்கத்திற்கு அடிமைப்பட்ட மனிதர்களைப் போல ஆகிவிடுகின்றன என்றால் இந்த நீர் மனித உபயோகத்திற்கு லாயக்கானதா என்பதைச் சிந்தித்துப்பாருங்கள்.
பீகார் மாநிலத்தில் கங்கை பாய்கையில் துர்காபூர், பொகரோ, பிலாய், டாடா ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய தொழிற்சாலைகளிலிருந்தும், இன்னபிற உரத் தொழிற் சாலைகளிலிருந்தும் ஏராளமான அளவில் அம்மோனியா, சயனைடு, நைட்ரேட், நைட்ரைட் பீனால் முதலியவை ஏராளமான அளவில் கங்கையில் கலக்கின்றன. இத னால் பீகார் மாநிலத்தில் விவசாயம் பெருமளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது.
சடலங்களின் மிதப்புகள் 
பாட்னாவில் மட்டும், ஒவ்வொரு நிமிடமும் 34 முதல் 41 வரை உடல்கள் எரிக்கப்பட்டுக் கங்கையில் கலக்க விடப்படுகின்றன.
பாட்டா செருப்புத் தொழிற்சாலையிலிருந்தும் , மக்வெல் சாராய வடிகட்டும் தொழிற்சாலையிலிருந்தும் வெளியாகும் கழிவுகள் யாவும் கங்கையில்தான் கலக்கின்றன. எனவே, தண்ணீர் அசுத்தத்தைத் தடுக்கும் கழகம் (ஷ்ணீtமீக்ஷீ றிஷீறீறீutவீஷீஸீ சிஷீஸீtக்ஷீஷீறீ ஙிஷீணீக்ஷீபீ)  மேற்படி தொழிற்சாலைகள் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறது.
இன்னொரு பயங்கரமான உண்மை தாபா என்ற நகரில் நடத்திய பரிசோதனையில் வெளியாகி இருக்கிறது
அதாவது, இங்கு கழிவுநீரைக்கொண்டு உற்பத்தியாகும் காய்கறிகளிலுள்ள பூச்சிகளும், புழுக்களும் தண்ணீரில் வேக வைத்த பிறகுகூடச் சாவதில்லையாம்! எத்துணைக் கொடுமை!
பீகாரை அடுத்து கங்கை பாயும் மாநிலம் மேற்கு வங்கம் இங்கு சிமிதிஸிமி (சிமீஸீtக்ஷீணீறீ மிsறீணீஸீபீ திவீsலீமீக்ஷீவீமீs ஸிமீsமீணீக்ஷீநீலீ மிஸீstவீtutமீ) என்ற ஆராய்ச்சி நிலையம் இருக்கிறது. இதனுடைய ரகசிய அறிக்கையின்படி, ஹூக்ளி ஆற்றில் பிடிக்கப்படும் மீன்களைச் சாப்பிட்டால் பயங்கர விளைவுகள் ஏற்படும் என்று தெரிகிறது. காரணம், இந்த மீன்கள் எல்லாம் அந்த அளவுக்கு கழிவு, ரசாயனப் பொருள்களால் பாதிக்கப் பட்டுள்ளதே ஆகும். இந்த அறிக்கையை வெளியிட்டால் மக்களிடையே ஏற்படும் விளைவு களை எண்ணி அதிகாரிகள் இந்த அறிக்கையை இன்னும் ரகசியமாகவே வைத்திருக்கிறார்கள்.
கங்கை நதியினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நகரம் கல்கத்தாதான்! இங்கு கங்கை பாயும் சமவெளி யில் மட்டும் 296 தொழிற்சாலைகள் உள்ளன. இந்த ஆலைகளின் கழிவுப் பொருள்கள் அனைத்தும் கங்கையில் கலப்பதால் அதன் விளைவுகளை எண்ணிப் பார்த்தால் உள்ளம் நடுங்கவே செய்யும்,
மக்களின் சுகாதாரத்திற்குப் பயங்கரக் கெடுதலை விளைவிக்கும் கங்கையைப் புனித ஆறு என்றுமக்களை ஏமாற்றிப் பல்லாயிரம் பார்ப்பனர்கள் வயிறு பிழைத்து வருகின்றனர். இதைப் போலவே, மக்களின் பகுத்தறி வுக்குப் படுபயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் புராணப் புளுகுகளை சமயம், பக்தி என்ற பெயரால் பரப்பி இந்தியாவை மீளா அடிமைப்படுகுழியில்ஆழ்த்தித் தங்கள் வயிற்றை நிரப்புவதுடன், தங்கள் ஆதிக்கத்தையும் பலப்படுத்தி வருகின்றனர்.
- டாக்டர் ஹஷ்மீ
தமிழில்: ம.வீ.கி.சாமி
‘விடுதலை‘, 6.7.1985
-விடுதலை,21.5.17