கணபதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கணபதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 31 ஆகஸ்ட், 2022

உச்சிஷ்ட கணபதி

உச்சிட்ட கணபதி (சமக்கிருதம்उच्छिष्ट-गणपतिUcchiṣṭa Gaṇapatiவிநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 8வது திருவுருவம் ஆகும். காணாபத்தியத்தின் ஆறு முக்கிய பிரிவுகளுள் ஒன்றான உச்சிட்ட காணாபத்தியம் என்னும் காணாபத்தியப் பிரிவின் முதன்மைக் கடவுள் இவராகும்.

உச்சிட்ட கணபதி, 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் படம்.

திருவுருவ அமைப்புதொகு

இந்தத் திருவுருவத்தின் நிறம் குறித்து நூல்களில் வெவ்வேறு தகவல்கள் காணப்படுகின்றன. "மந்திர மகார்ணவம்" என்னும் நூலில் உச்சிட்ட கணபதியின் நிறம் சிவப்பு எனக் காணப்பட, உத்தர காமிகாகமம் கருமை என்கிறது.[1] வேறு சில நூல்கள் இத்திருவுருவத்தின் நிறம் நீலம் என்கின்றன.[2] உச்சிட்ட கணபதி வடிவத்தில் கணபதிக்கு இடப்புறத்தில் தேவியின் உருவம் காணப்படும். பல எடுத்துக்காட்டுகளில் தேவியின் உருவம் கணபதியின் இடது தொடைமீது இருக்கும் நிலையில் காட்டப்பட்டுள்ளது. பெரும்பாலும் தேவியின் உருவம் ஆடைகள் அற்ற நிலையிலேயே இருக்கும். மிக அரிதாக ஆடை அணிந்தபடி இருப்பதும் உண்டு. இவ்வடிவத்தில் கணபதிக்கு ஆறு கைகள் உள்ளன. இவற்றுள் ஐந்து கைகளில் நீலோற்பலம், மாதுளம் பழம்வீணைநெற்கதிர், அட்சமாலை என்பவற்றை ஏந்தியிருப்பார். ஆறாவது கை தேவியைத் தழுவியிருக்கும்.

- விக்கிப்பீடியாவில் இருந்து

வியாழன், 30 மே, 2019

ஆபாசத்தின் மூலம் எது? (வல்லப கணபதி)



இங்கே திறக்கப்பட்ட கண்காட்சியைப் பற்றி நண்பர் வீரமணி குறிப்பிட்டார். "இங்கேயிருக் கிற வல்லப கணபதி படத்தைப் போய் பாருங்கள். இது சிதம்பரத்திலே இல்லையா? அங்கே போய்ப் பார்த்து நாங்கள் சொல்வது சரியா இல்லையா என்று சொல்லுங்கள் என்று வீரமணி கேட்டார். நீங்கள் சிதம்பரத்தில் போய்ப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும் என்று சொன்னார். அங்கே இதே படம் சிலை வடிவத்திலே இருக்கிறது. ஆனால் அங்கேயிருக்கிற குருக்கள்மார்கள் துணியைப் போட்டு எந்த இடத்தை மறைக்கவேண்டுமோ, அதை மறைத்து வைத்திருக்கிறார்கள். ஆகவே நீங்கள் போய் பார்த்தால்கூட தெரியாது, திருவாரூர் கோயிலிலே சூடகமலாம்பிகை சன்னிதானத்தில் உத்திஷ்ட கணபதியைப் பார்த்த ஞாபகம் இருக்கிறது. வல்லப கணபதி போலத் தான் - உத்திஷ்ட கணபதியும். ஆனால் இவைகளுக்கெல்லாம் கதைகள் உண்டு, என்ன கதை?

ஆபாச விநாயகன் கதை


சூரபத்மனுக்கும் சுப்பிரமணியனுக்கும் சண்டை நடந்தது. சூரபத்மனுடைய அக்ரோணிக் கணக்கான சைன்யங்களை சுப்பிரமணியரால் தோற்கடிக்க முடிய வில்லை. காரணம் ஒரு அசுரன் செத்தால் இன்னொரு அசுரன் பிறந்து கொண்டே இருக்கிறான். சூரனுடைய தாயார் வல்லபை அவளுடைய வயிற்றுக்குள்ளேயிருந்து, பிள்ளைகள் வந்து கொண்டேயிருக்கிறார்கள். அப்படி வருகின்ற பிள்ளைகளை கொன்று குவிக்க முடியாமல் சுப்பிரமணியர் மயங்குகிறார், தவிக்கிறார், திணறுகிறார். கடைசியாக முடியாத காரணத்தால் தன்னுடைய அண்ணனை "விநாயகா என்னை வந்து காப்பாற்று" என்று அழைக்கிறார். உடனே விநாயகர் யானை முகத்துடன் ஓடோடி வந்து வல்லபையைத் தூக்கி மடியிலே உட்கார வைத்துக்கொண்டு அந்தப் பிள் ளைகள் வெளியே வர முடியாமல் தடுத்து விடுகிறார். அவ்வளவு தான் கதையை நான் சூசகமாகச் சொல்லமுடியும்.

இதை ஒரு கதை ஆக்கிப்படிக்க வேண்டுமா? ஆலயத்தில் சிலையாகவடிக்கவேண்டுமா?'' என்று நான். படித்த பிராமண வாலிபர்களைக் கேட்கிறேன். ஆஸ்தீ கர்களைக் கேட்கிறேன். ஆண்டவன் ஒன்று என்று நம்புங்கள். நான் வேண்டாமென்று சொல்லவில்லை. திருமந்திரம் எழுதிய திருமூலர் கூடச் சொன்னார் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று. இதிலே எங்களுக்கும் திராவிடர் கழக நண்பர்களுக்கும் கூடவேறுபாடு இருக்கலாம். அது வேறு விவகாரம் - ஆனால் கடவுளின் பெயரால் மக்களை இன்றைக்கு திராவிடர் கழகத்தார் கண்காட்சி நடத்தி புண்படுத்து கிறார்கள் என்று யாராவது சொல்வார்களேயானால் இன்றைக்கு அவைகளை சிலைகளாக, ஓவியங்களாக கோயில்களிலேயே வைத்து மக்கள் பார்க்கின்ற கண்காட்சிகளாக ஆக்கியிருக்கிறீர்கள். ஆண்டவன் சாபம் கொடுப்பதாக இருந்தால் முதலில் உங்களுக்கு சாபம் கொடுத்துவிட்டு அல்லவா, பிறகு திராவிடர் கழகத்தாருக்குச் சாபம் கொடுக்க வேண்டும். அந்த அளவுக்கு அல்லவா, ஆண்டவர்களை ஆபாசப்படுத்தி வைத்திருக்கிறோம். இந்த மதத்திலே அவ்வளவு பெரிய கொடுமை செய்ய என்ன காரணம்? ஏன் இவ்வளவு ஆயிரக் கணக்கான கடவுள்கள்? இவ்வளவு கடவுள்களை வைத்துக் கொண்டு இந்தச் சமுதாயம் பெற்ற பயன் என்ன? முரண்பாடு இல்லாத எந்தக் கதையாவது எந்த வழிமுறையாவது எந்த மார்க்கமாவது இருக்கிறதா?

-  கலைஞர்

- விடுதலை: 15.10.1974, பக்கம் 3

- விடுதலை ஞாயிறு மலர் 25. 5. 2019