துக்ளக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துக்ளக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 2 அக்டோபர், 2023

தேவநாதன், பத்ரிநாத், சாமியார் ஆசாராம் யார்? யார்?"துக்ளக்" பதில் சொல்லுமா?

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

தேவநாதன், பத்ரிநாத், சாமியார் ஆசாராம் யார்? யார்?

"துக்ளக்" பதில் சொல்லுமா?

கவிஞர் கலி.பூங்குன்றன்

5

4.10.2023 நாளிட்ட ‘துக்ளக்'கில் வெளி வந்துள்ள கேள்வி - பதில்களுக்கு இங்கு பதிலடிகள் தரப்படுகின்றன.

கேள்வி: நீங்கள் இந்தியனா, பாரதியனா?

பதில்: பாஸ்போர்ட்டில் இந்தியன், மனதில் பாரதியன்.

நமது பதிலடி: அப்பா யார் என்று கேட்டால் இப்படிதான் பதில் சொல்லுவார்களோ!

- - - - -

கேள்வி: குலம் கோத்திரம் பார்க்கப்படுவதன் நோக்கம் என்ன?

பதில்: குலம், கோத்திரம் என்பது ஒருவரின் கலாசார விலாசம். கலாசார முறையில் உறவு தேடுபவர்களுக்கு அவசியமானது அது.

நமது பதிலடி: அது என்ன கலாசாரம்? பார்ப்பான் பிச்சை எடுத்து சாப்பிட வேண்டும். கும்பகோணத்தில் பிச்சைக்காரப் பார்ப்பனத் தெரு என்றே ஒன்று இருக்கிறதே!

இதுபற்றி குருமூர்த்தியின் மகா பெரியவாள் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி கூறியுள்ளாரே! (காஞ்சி காமக்கோடி சங்கராச் சாரியார் உபந்நியாசங்கள் முற்பகுதி).

குருமூர்த்தி அய்யர் உட்பட குடுமி வைத்துக் கொள்வதில்லை. பஞ்சகச்சம் வைத்து வேட்டிக் கட்டுவதில்லை. சர்.சி.பி.ராமசாமி அய்யர் மாட்டு நாக்கைத்தான் ருசித்து சாப்பிடுவாராம்.

கணவனை இழந்த பாப்பாத்தி அம்மாள் மொட்டை பாப்பாத்தி என்று அழைக்கப்படுவதுண்டா?

"வேலைக்குச் செல்லும் பெண்கள் ஒழுக்கக் குறைவானவர்கள்" என்று மறைந்த சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கூறினாரே - பார்ப்பனப் பெண்களும் அந்தப் பட்டியலில் வரமாட்டார்களா?

பெண்களில் 30 சதவீதத்தினர் தான் பெண்மை உள்ளவர்கள் என்று இதே குருமூர்த்தி சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்ளவில்லையா?

இவற்றில் எதுவெல்லாம் குலம், கோத்திரம் என்று சீர்புரிந்து வாய்ப்பாடு கூறுமா ‘துக்ளக்'?

"கிரேதாயுகக் காலங்களில் ராக்ஷதர்கள் எல்லாம் கலியுகக் காலத்திலும் பாப்பார ஜாதியில் பிறப்பார்கள், கெட்ட அசிங்கங்களைச் செய்வார்கள்! என்று தேவி பாகவதத்தில் பரமேஸ்வரராலும், மகாபாரத்தில் பீஷ் மாச்சாரியாராலும் கூறப்பட்டிருக்கிறது. அவ்வாக்கி யங்களை இக்காலத்துப் பார்ப்பனர்கள் நிர்ணயப்படுத்து கிறார்கள் போலும்! மேற்படி நூல்களைப் பற்றி யானெ ழுதுவது மிகையே! ஏனெனில் ‘குடிஅரசில்' நமது கைவல்யம் கை வலியாது கணக்கற்றவை வரைந்து கொண்டே வருகிறார்" - ஒரு நிருபர் (‘குடிஅரசு', 13.1.1929).

இங்கே எல்லாம் கோத்திரம் எங்கே போயிற்று?

சதாசிவம் - எம்.எஸ்.சுப்புலட்சுமி கல்யாணம் எந்தக் கோத்திரத்தைச் சார்ந்தது? ராஜகோபாலாச்சாரி யாரும் - காந்தியாரும் சம்பந்தியானது எந்த வகைக் கோத்திரம்?

அமெரிக்கா சென்று ‘பிராமணிசத்தை' பரப்புரை செய்து வந்த விவேகானந்தர் மனோன்மணியம் சுந் தரனாரின் விருந்தினராகத் தங்கியிருந்தபோது ‘நீங்கள் எந்தக் கோத்திரம்'? என்று விவேகானந்தர் கேட்க ‘திராவிடக் கோத்திரம்' என்று முகத்திலடித்தாற்போல சுந்தரனார் பதிலடி கொடுத்தாரே - இதற்கு என்ன பதில் குருமூர்த்தியாரே?

- - - - -

கேள்வி: பெண்களிடம் நீங்கள் வியந்தது என்ன?

துக்ளக் பதில்: குடும்பம் குழந்தைகள்தான் வாழ்க்கை என்று நினைப்பதிலிருந்து திருமணம் இல்லாமல் ஒரு ஆணுடன் சேர்ந்து வாழ்வது வரை, உடல் முழுவதும் மறைத்து உடை உடுப்பதிலிருந்து, உடல் முழுவதும் தெரியும்படி உடை உடுப்பது வரை - பெண்கள்தான் எத்தனை விதமாக இருக்கிறார்கள் என்று வியந்திருக்கிறேன்.

நமது பதிலடி: பெண்கள் எப்படி உடை உடுத்து கிறார்கள், உடல் பாகங்கள் தெரிகிறதா என்பது வரை உற்றுப் பார்ப்பதுதான்  குருமூர்த்தி வேலையா?

6

சின்ன வயதில் வெண்ணெய்யைத் திருடி வாலிப வயதில் பெண்ணைத் திருடியவன் தானே இவாளின் கிருஷ்ண பகவான்.

ஆடைகளை அவிழ்த்துக் கரையில் வைத்துவிட்டு, குளத்தில் குளிக்கப் போன பெண்களின் உடைகளைத் திருடி, மரக் கிளையில் ஏறி உட்கார்ந்து கொண்டு பெண்களை இரசித்த காமுகனைக் கடவுள் என்று கொண்டாடி அத்தகைய படங்களை அசூயை இன்றி வீட்டில் மாட்டி வைத்து பூமாலை சாத்தி நமஸ்காரம் செய்யும் கும்பல் பெண்களின் தனிப்பட்ட உடைகளைப் பற்றி ஆராய்ச்சியில் மூழ்குவது வெட்கக்கேடு அல்லவா!

சாமியார் ஆசாராம் ஆசிரமத்தின் யோக்கியதை என்ன? 

"எங்கள் கடவுள் கிருஷ்ணன் செய்ததைத்தான் நான் செய்தேன்" என்று நீதிமன்றத்திலேயே சொல்ல வில்லையா? மன உளைச்சல் ஏற்படும்போது எல்லாம் சாமியார் ஆசிரமத்துக்குச் செல்லுவதாக மோடிஜி சொல்லவில்லையா?

காஞ்சிபுரத்தில் கோயில் கருவறைக்குள்ளேயே பெண்களைக் கரு உறச் செய்பவன் தா«ன் இவர் களுக்குத் தேவநாதன்.

மடத்துக்கு வந்த பெண்ணின் கையைப் பிடித்து இழுத்தவர்தானே இவாளுக்கு ஜெகத்குரு. வெட்கக் கேடு. அவருக்கான விழாவில்தானே ஆளுநர் கலந்து கொண்டு ஆன்மிகம் பேசுகிறார்.

- - - - -

கேள்வி: ஏன் என்ற கேள்வி இல்லாமல் வாழ்க்கை இல்லை என்கிறது தத்துவம். உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனையாக ஏற்பட்ட ‘ஏன்' தாக்கம் பற்றி?

துக்ளக் பதில்: ஏன் என்ற கேள்வி தொடர்கதை. அதனால் வாழ்க்கைத் திருப்பமும் தொடர் கதை. ஏன் என்ற கேள்வி நின்றால்தான் அதனால் ஏற்படும் வாழ்க்கைத் திருப்பங்களும் நிற்கும். மனிதன் சிந்திக்கும் வரையில் அந்தக் கேள்வி தொடர்கதை. வாழ்க்கைத் திருப்பங்களும் தொடர்கிறது.

நமது பதிலடி: ஏன், எதற்கு, எப்படி, என்று கேள்வி கேள் என்று தந்தை பெரியார் சொன்னபோது கசந்தது; இப்பொழுது அது இனிக்கிறதோ - எங்கு முட்டியும் கடைசியில் ஈரோட்டுச் சந்திப்பில் வந்துதான் சேர வேண்டும்.

- - - - -

கேள்வி: அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கம்யூனிஸ்ட்டுகள், வேலையின்மை, விலைவாசி உயர்வு என்ற பிரச்சினைகளையே சொல்கிறார்களே, வேறு பிரச்சினைகள் எதுவும் இல்லையா?

துக்ளக் பதில்:  அதனால்தான் 60 ஆண்டுகளுக்கு முன் நாட்டில் காங்கிரஸுக்கு அடுத்த கட்சியாக இருந்த அவர்கள் இன்று சரிந்து திமுகவிடம் பணமும் கேட்கும் கட்சியாக விட்டார்கள்.

நமது பதிலடி: நீங்களும்தான் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கடவுள், மதம், பக்தி, யோகம், சம்பாராதனை, ஸநாதனம் என்று பேசி வருகிறீர்கள்.

கடைசியில் என்ன? உங்களின் குருநாதர் ‘சோ' ராமசாமி சொன்னாரே - கோயிலுக்கு எதுக்குப் போறான் ‘சைட்' அடிக்கத்தானே போகிறான்.

(‘துக்ளக்', 1.6.1981, பக். 32)

கம்யூனிஸ்ட்டுகள் வேலை வாயப்பு, விலைவாசி உயர்வு பற்றி பேசுவது, போராடுவது மக்கள் நலனைச் சார்ந்தது. குருமூர்த்தி கூட்டம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலமாகக் கூவுவது பக்தியின் பெயரால் ஒழுக்கக் கேட்டை வளர்ப்பதும், சுரண்டல் கொள்ளை நடத்துவதும்தானே!

- - - - -

7

கேள்வி: தமிழகத்தில் முதன்முதலாக மூன்று பெண் அர்ச்சகர்கள் தேர்வானதை, "கருவைச் சுமக்கும் பெண்கள் கருவறைக்குள்" என்று முதல்வர் புகழ்ந் திருக்கிறாரே?

துக்ளக் பதில்: கருவைச் சுமக்கும் பெண் அர்ச்சகர்கள் கருவறையில் இருக்கும் கோயிலில் ஸ்டாலின் குடும்பத்தினர் நேர்த்திக்கடன் செய்தபிறகு, ஸ்டாலின் பேசியது உண்மையா அல்லது எதுகை மோனைக்காகவா என்பது தெரிந்து விடும்.

நமது பதிலடி: கேள்விக்கும் - பதிலுக்கும் ஏதாவது சம்பந்தா சம்பந்தம் இருக்கிறதா? இந்தப் பாணிக்குப் பெயர்தான் பார்ப்பனத்தனம் என்பது.

கோயிலுக்குப் பெண்கள் செல்லுவதற்குத் தடையில்லை. ஆனால் கோயில் கருவறைக்குள் பெண்கள் செல்லத் தடை இருக்கிறது இவாளின் ஸநாதனத்தில். அதை உடைத்துப் பெண்கள் கருவறைக்குள் செல்ல வைத்தது என்பது ஸநாதனத்துக்கு விழுந்த சவுக்கடி தானே!

கோயிலுக்குள் ஆண் சாமி, பெண் சாமி இருக்கிறதே - அது எப்படியாம்?

தேவநாதன் (காஞ்சிபுரம்), சிறீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பத்ரிநாத் கதைகளுக்கு என்ன பதில்?

குஜராத் மாநிலம் தபோயில் உள்ள சுவாமி நாராய ணன் கோயில் - அக்கோயிலுக்குள்ளேயே இருந்த குடிலிலேயே அர்ச்சகப் பார்ப்பனர் சந்த் தேவ்வல்லம், பக்தைகளிடம் ஆடிய சல்லாபம் சாதாரணமா? 

‘சந்தோஷ்' பத்திரிகை படத்துடன் வெளியிட்டதே!

- - - - -

8
கேள்வி: இறைவனை நாம் அடைய வேண்டுமா? இறைவன் நம்மை அடைய வேண்டுமா?

பதில்: எங்கும் வியாபித்த பிரும்மம் (எனும் இறைவன்) நம்முள் இருக்கிறான் என்ற நிலையை நாம் அடையும்போது, இறைவன் நம்முள் உறைகிறான். இறைவனுள் நாம் உறைகிறோம். இதை இரண்டறக் கலந்த நிலை என்கிறார்கள் - ஆன்மிகப் பெரியோர்கள்.

நமது பதிலடி: நேரடியாகப் பதில் சொல்ல முடியாவிட்டால் யாரோ ஆன்மிகப் பெரியோர்கள் என்று தப்பித்துக் கொள்வது அறிவு நாணயமா?

எங்கும் வியாபித்த இறைவனுக்குக் கோயில் கட்டுவானேன் - அர்ச்சகர் ஏன்? ஆறுகால பூஜை ஏன்? கடவுளுக்கு மனைவி, வைப்பாட்டி ஏன்? குழந்தைகள், குட்டிகள் ஏன்? கடவுள்களுக்குள் சண்டைச் சச்சரவுகள் ஏன்? கொலைகள் ஏன்?

இப்படி இறைவனைப் பற்றிக் கூறும் கூட்டத் திற்கிடையே மதமாச்சாரியங்கள் ஏன்? ஒரே மதத்தில் அடி தடிகள் ஏ ன்? நாமச் சண்டைகள் ஏன்? ஏன்? ஏன்? ஏன்?

ஊரை ஏமாற்றுவதற்கும், சுரண்டலுக்குமான ஏற்பாடுகள்தான் இவை என்று நாணயமாக ஒத்துக் கொள்ளட்டும்!

புதன், 4 செப்டம்பர், 2019

"வீரமணி என்ன நினைத்திருப்பார்?" குருமூர்த்தி பதிலுக்குப் பதிலடி!



கேள்வி: அத்திவரதரையே சுற்றி வந்த தமிழக மக்களின் கூட்டத்தைப் பார்க்கும்போது வீரமணி என்ன நினைத்திருப்பார்?

பதில்: ஒரு ஆயிரம் கருப்புச் சட்டை போட்டவர்கள்கூட இல்லாத தி.க.வின் ஹிந்து கடவுள் எதிர்ப்பு, எப்படி அத்திவரதரையும், அய்யப் பனையும் சுற்றும் கோடிக்கணக்கான பக்தர்களை உருவாக்கியிருக்கிறது என்று நினைத்து, நினைத்து ஆச் சரியப்பட்டிருப்பார்.

('துக்ளக்' 4.9.2019, பக்கம் 17)

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி என்ன நினைத்திருப்பார்?

கல்லையும், மரத்தையும் காட்டி மக்களைச் சுரண்டும் இந்தப் பார்ப் பனீயத்தின் பித்தலாட்டத்தைப் பற்றி நினைத்திருப்பார்.  இந்தப் புரோகித சுரண்டலுக்கு எப்படி முடிவு கட்ட லாம் என்று யோசித்திருப்பார். பக்தி தனிச் சொத்து ஒழுக்கம் பொதுச் சொத்து என்ற தந்தை பெரியாரின் கருத்தினை மக்கள் மத்தியில் மேலும் கொண்டு செல்ல வேண்டும் என்று திட்டம் போட்டிருப்பார்.

பக்திப் போதையேறி சுருண்டு கிடக்கும் மக்களின் நிலையை எண்ணிப் பரிதாபப்பட்டு இருப்பார்.

பக்தியின் பெயரால் பொருளும், பொழுதும் இப்படி நாசமாக்கப்பட்டு வருகிறதே என்று பொறுப்புடன் சிந்தித்துப் பார்த்திருப்பார்.

அத்திவரதரை மய்யப்படுத்தி நடந்த கொள்ளைதான் எத்தனை எத்தனை! அத்திவரதரைத் தரிசிக்க சிறப்புப் பாஸ்கள் என்று சொல்லி கள்ளச் சந்தையில் ரூ.8000/-க்கு விற்கப்பட்டதே,  47 நாள்களில் இந்த வகையில் ரூ.1175 கோடி கொள்ளை நடந்துள்ளதே, அத்திவரதர் என்னும் மரக்கட்டைக்கு முன் அமர வைக்க ரூ.50 ஆயிரம், நிற்க வைப்பதற்கு ரூ.20 ஆயிரம், போட்டோ எடுத்துக் கொள்வதற்கு ரூ.10 ஆயிரம் என்று வசூல் வேட்டை நடந்திருக்கிறதே - இந்தப் பக்தியைப்பற்றி பெருமைப் பேசுவதற்குக் கிஞ்சிற்றும் 'துக்ளக்' வகையறாக்களுக்கு வெட்கம் இல்லையே!

பக்திஒழுக்கக் கேட்டைத்தானே வளர்த்து வருகிறது - இந்த மக்களை நேர் வழிக்கு - பகுத்தறிவுப் பாட் டைக்கு எப்படி கொண்டு வருவது என்பதுபற்றி சிந்தித்து இருப்பார்.

மகா மகக் குளத்தில் 28 சதம் மலக் கழிவும், 40 சதம் சிறுநீர்க் கழிவும் இருந்தது என்று தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவரே அறிக்கை கொடுத்துள்ளதையும் நினைத்துப் பார்த்து, நம் மக்களின் மூளை இப்படி சுகாதாரமற்ற சகதியாகி இருக்கிறதே - இதற்கு என்ன மாற்று என்றும்  திட்டம் போட்டிருப்பார்.

மருத்துவமனைகள் பெருகி என்ன பயன்? நோயாளிகள் அதிகரிக்கத் தானே செய்கிறார்கள் என்று குருமூர்த் திகளால் விளக்கம் சொல்ல முடியுமா?

பக்தியின் நடப்பும், யோக்கியமும் தான் எத்தகையன? இதோ அவாள் ஆதாரத்தைக் கொண்டே நொறுக்கித் தள்ளுவோம்!

'சோ'வின் பார்வையில் பக்தி

கேள்வி: அரசியல்வாதி ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்? ஆன்மிக வாதி ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்? நடிகராவதற்கு என்ன தகுதி வேண்டும்?

சோவின் பதில்: அரசியல்வாதி ஆவதற்குப் பொய் சொல்லத் தெரிய வேண்டும். ஆன்மிகவாதியாவதற்கு பொய்யை அருள் வாக்காக்க தெரிந் திருக்க வேண்டும். நடிகராவதற்கு உண்மையாகவே நடிக்கத் தெரிந் திருக்க வேண்டும்.

('துக்ளக்' 26.10.2016 பக்கம் 23)

இதைவிடஆன்மிகத்தைக் கேவலப்படுத்த முடியுமா?

கேள்வி: நீங்க முன்னே பார்த்த மாதிரி ஜனங்களிடம் பக்தி இருக் கிறதா இப்பொழுது?

சோவின் பதில்: பக்தியாவது ஒண்ணாவது? கோவிலுக்கு வர்றவன் சாமி தரிசனத்துக்கா வர்றான்? சைட் அடிக்கன்னா வர்றான். பொம் மனாட்டிகள் மட்டும் என்ன யோக் கியம்! அவாளும் புடவை, நகை, நட்டு இதெல்லாம் போக நேரம் இருந்தா சுவாமி அம்பாளை நெனச்சுக்கிறா!

('துக்ளக்' 1.6.1981 பக்கம் 32)

ஆயிரம் கருப்புச்சட்டை போட் டவர்கள்கூட இல்லாத தி.க. என்று எழுதி அற்ப சந்தோஷப்படும் 'துக்ளக்குகள்' திருச்சி கருஞ்சட்டைப் பேரணியையும், குடந்தை திராவிடர் மாணவர் கழக பவள விழா மாநாட்டுப் பேரணியையும், சேலம் திராவிடர் கழகப் பவள விழா மாநாட் டையும் பார்க்காத - அறிந்திராத  குருடர்களே!

தொகுப்பு: மின்சாரம்
-  விடுதலை நாளேடு, 1. 9 .19

புதன், 24 அக்டோபர், 2018

துக்ளக் (24.10.2018) பதிலுக்குப் பதிலடி!

கேள்வி: நாத்திகர்களை அடையாளம் காண்பதெப்படி?


துக்ளக் பதில்: ஹிந்து கடவுள்களையும், ஹிந்து நம்பிக்கைகளையும் கேவலப்படுத்தி, மற்ற மதங்களைப் பெருமைப்படுத்தி, தங்கள் தலைவர்களையும், அவர்களின் சிலையையும், சமாதியையும் வழிபடுகிறவர்களை நாத்திகர்கள் என்று அடையாளம் கண்டுகொள்ளலாம்.

நமது பதிலடி: ஹிந்து மதப்படி ஹிந்துக் கடவுள்களை கேவலப்படுத்தினால் அது நாத்திகமல்ல, அப்படியானால் எதுதான் நாத்திகம்?

வேதம் (சுருதி), தரும சாஸ்திரம் (ஸ்மிருதி) இவ்விரண்டையும் தர்க்க யுக்தியைக் கொண்டு மறுப்பவன் நாஸ்திகனாகின்றான்.

(மனுதர்மம், அத்தியாயம் 2; சுலோகம் 11)

இதைத்தான் மறைந்த சூப்பர் சீனியர் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரசுவதியும் வழிமொழிகிறார். (‘‘தெய்வத்தின் குரல், தொகுதி-2, பக்கம் 407-408)

“நாஸ்திகம் என்றால் ஸ்வாமியில்லை என்று சொல்கிற நிரீச்வரவாதம் என்றுதானே இப்போது நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது தப்பு. ஸ்வாமியில்லை என்று சொல்லிக் கொண்டே கூட ஆஸ்திகர்களாக இருக்க முடியும்.’’

“அப்படிப்பட்ட பல பேர் இருக்கிறார்கள். இது என்ன வேடிக்கையாக இருக்கிறது? அப்படியானால் ஆஸ்திகம் என்றால் என்ன? ஆஸ்திகம் என்றால் வேதத்தில் நம்பிக்கை இருப்பது என்றுதான் அர்த்தம்.’’

“வைதீக வழக்கை ஆட்சேபிப்பதுதான் நாஸ்திகம் என்பதே ஞானசம்பந்தரின் கொள்கையாகவும் இருந்திருக்கிறது. ஈசுவர பக்தி இல்லாமலிருப்பதுங்கூட அல்ல” என்று சூப்பர் சீனியர் காஞ்சி சங்கராச்சாரியார் கூறுகின்றார்.

கடவுள் இல்லை என்பதைக் கூடப் பார்ப்பனர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். அதே நேரத்தில் வேதத்தை எதிர்ப்பதையும், அறிவு கொண்டு ஆராய்வதையும் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

காரணம் வேதங்கள்தானே பிரம்மாவின் படைப்பில் பார்ப்பானுக்கு ஒசந்த இடம்!

ஹிந்துக் கடவுள்களைக் கேவலப்படுத்துவது பற்றியும் ‘துக்ளக்‘ பேசுகிறது.

உண்மையிலேயே ஹிந்துக் கடவுள்களைக் கேவலப்படுத்துபவர்கள் ஹிந்துக்களே! அவர்களால் கற்பிக்கப்பட்ட கடவுள்கள் ஆயிரக்கணக்கில் - ஒன்றையாவது ஆபாசமற்றதாக - ஒழுக்கமுள்ளதாக அவர்களால் படைக்க முடிந்திருக்கிறதா?

முழு முதற்கடவுளான சிவன் தாருகாவனத்து ரிஷிப் பத்தினிகளைக் கற்பழித்தான் - முனிவர்கள் சாபமிட, சிவனின் சிசுனம் (ஆண்குறி) அறுந்து விழ - அதனை பார்வதி பெண்ணுறுப்பால் தாங்கிப் பிடிக்க சிவலிங்கமானது என்று எழுதியவர்கள் நாத்திகர்களா?

படைப்புக் கடவுள் என்று கூறும் பிரம்மாவின் மனைவியும், மகளும் சரசுவதியே! காத்தல் கடவுள் என்று கூறிக் கொள்ளும் விஷ்ணு - பிருந்தா கதை சென்னைக் கூவம்தான். விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணனைப்பற்றிக் கேட்கவே வேண்டாம். பதினாயிரம் மனைவிகளாம் -

ஹிந்து மதத்தில் இப்படியெல்லாம் கடவுளை ஆபாசமாகவும், அருவருப்பாகவும் கற்பித்துவிட்டு, நாம் ஏதோ அந்தக் கடவுள்களை தூஷிக்கிறோம் என்பது எத்தகைய அருவருப்பான குற்றச்சாட்டு.

உண்மையிலேயே கடவுள்களைக் கேவலப்படுத்துபவர்கள்  ஹிந்துக்களே!

தலைவர்களின் சிலைகளை நாத்திகர்கள் ஒன்றும் வழிபடுவதில்லை. இன்னும் சொல்லப்போனால், மூட நம்பிக்கை ஒழிப்பு வாசகங்களையும், பகுத்தறிவுச் சிந்தனைகளையும், அந்தத் தலைவர்களின் சிலைகளின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளன என்பதுதான் உண்மை. இதுதான் இவர்களின் கண்களை உறுத்தோ உறுத்தென்று உறுத்துகிறது.

***


கேள்வி: பகவானை சதா வழிபடுபவர் களுக்குக்கூட கிடைக்காத ‘ஏகாதசி’யில் மறைந்து துவாதசியில் அடக்கம் செய்கிற பாக்கியம் கலைஞருக்குக் கிடைத்துள்ளதாக, நாத்திகம் பேசுபவர்கள் மேடைதோறும் பெருமை பீற்றிக் கொள்கிறார்களே, இதுபற்றி...

துக்ளக் பதில்: ‘நாத்திகராக இருந்தும் எங்கள் தலைவருக்குக் கடவுள் எப்படி அருளியிருக்கிறார் பார்த்தீர்களா?’ என்று சொல்லி அவர்களின் ‘பகுத்தறிவை’ வெளிப்படுத்துகிறார்கள்.

நமது பதிலடி: அப்படிப் பேசியவர்கள், பேசுபவர்கள் யார் என்று அறிவு நாணயத்துடன் தெரிவிக்கவேண்டும்.

சரி... அவர்கள் வழியிலேயே சொல்லுவோம் - நாத்திகர்களாக இருந்தால், நல்ல பாக்கியம் கிடைக்கும் என்பதுதான் அவர்களின் பதிலானால், அவர்களும் தாராளமாக நாத்திகர்களாக வேண்டியதுதானே! யார் கையைப் பிடித்து இழுத்துத் தடுத்தது?

***


கேள்வி: கிறித்துவ மத போதகர் ஒருவர் ஹிந்து மதம்பற்றியும், வழிபாடு குறித்தும் இழிவாகப் பேசியுள்ளார். இதுவும் பேச்சு சுதந்திரம் என்பார்களா அறிவுஜீவிகள்?

துக்ளக் பதில்: தி.க.., தி.மு.க.வைச் சேர்ந்த நாத்திகவாதிகள் ஹிந்து மதம், அதன் நம்பிக்கைகளைக் கேவலப்படுத்திப் பேசுவதை பகுத்தறிவு என்றும், பேச்சு, சுதந்திரம் என்றும் கொண்டாடும் அறிவுஜீவிகள் மற்ற மதத்தவர்கள் ஹிந்து மதத்தைக் கேவலமாகப் பேசுவதை ஏன் நியாயப்படுத்தமாட்டார்கள்?

நமது பதிலடி: ஹிந்து மதத்தை தி.க., தி.மு.க. நாத்திகர்கள் ஏன் பேசுகிறார்கள்? இந்த ஹிந்து மதம்தானே பிறப்பு அடிப்படையில் மனிதர்களைக் கேவலப்படுத்துகிறது!

ஓர் ஆண் கடவுளான பிரம்மாவின் நெற்றியிலிருந்து பிராமணன் பிறந்தான், காலிலிருந்து சூத்திரன் பிறந்தான் என்று எழுதி வைத்திருப்பது ஹிந்து மதம்தானே. பிராமணனுக்காகவே இந்த உலகத்தைப் பிரம்மா படைத்தான் என்பதும், அந்தப் பிராமணனுக்குப் பணிவிடை செய்து கிடப்பதே சூத்திரனின் தர்மம் என்றும், அந்த சூத்திரன் ஏழுவகைப்படுவான் - அதில் ஒன்று விபச்சாரி மகன் என்றும் எழுதி வைத்துள்ள ஹிந்து மதத்தை தலையில் தூக்கி வைத்துக் கொஞ்ச வேண்டுமா?

இன்னும் சொல்லப்போனால் இந்த இழிநிலையை எதிர்த்து இன்னும் வேகமாக எரிமலையாக வெடித்துக் கிளம்பியிருக்கவேண்டும்.

இங்கர்சாலும், ரசலும் கிறித்துவ மதத்தைப்பற்றித்தான் விமர்சிக்கிறார்கள்? நீங்கள் ஏன் இந்து மதத்தை விமர்சிக்கவில்லை என்று அவர்களிடம் யாரும் கேட்டதில்லையே!

அதையும் கடந்து, இங்கர்சாலின் ‘கடவுள்’, ஜீன்மஸ்லியரின் ‘‘மரண சாசனம்‘’, ரசலின் ‘நான் ஏன் கிறித்தவன் அல்ல’ என்பது போன்ற நூல்களையும் திராவிடர் கழகம் வெளியிட்டுக் கொண்டுதானே வருகிறது. எந்த விவரமும் இல்லாமல் எழுதுவதுதான் ‘துக்ளக்‘ கும்பலின் துன்மார்க்க புத்தி!

உ.பி.யில் என் கவுண்டர்களும், ‘துக்ளக்‘கின் பொய் மூட்டையும்


கேள்வி: உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவியேற்றது முதல் இதுநாள் வரை 1,500 என்கவுண்டர்கள் நடந்துள்ளனவே?

துக்ளக் பதில்: 15 ஆண்டுகளாக சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் அரசுகள் செய்யத் தவறியதைச் சேர்த்து செய்யவேண்டியிருப்பதால், யோகி அரசின் என்கவுண்டர் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம்.

நமது பதிலடி: என்கவுண்டர் குற்றத்திற்காக சிறையில் இருந்து வந்தவர்தானே இன்றைய பி.ஜே.பி.யின் தேசிய தலைவர் அமித்ஷா.

இவர்கள் நடத்திய போலி என்கவுண்டர்தான் சிரிப்பாய்ச் சிரிக்கிறதே!

நொய்டாவை சேர்ந்த ஜித்தேந்தர் யாதவ் முன்னாள் உடற்கட்டு வீரர் ஆவார். அவருடைய சகோதரியின் திருமண விழாவில் கலந்துகொண்ட பிறகு தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அந்தவழியே மாருதி காரில் நான்கு காவல்துறையினர் வந்துள்ளனர்.

அவர்கள் ஜித்தேந்தர் யாதவ் மற்றும் நண்பர்களிடம் அவர்கள் எதற்கு இங்கே நிற்கின்றனர் என அதட்டி உள்ளனர். ஜித்தேந்திர யாதவ் நடந்ததைக் கூறி உள்ளார்.   அப்போது அந்த காவலர்களில் ஒருவர், “யோகி ஆதித்ய நாத்தின் புதிய சட்டத்தின் படி நான்கு பேர் ஒன்றாக நடு இரவில் நின்று பேசக்கூடாது. நீங்கள் சட்டத்தை மீறுகிறீர்கள்” என்று கூறி உள்ளார். அந்தக் காவலர்கள் குடிபோதையில் இருந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும்  ஜித்தேந்தர் யாதவ் மற்றும் அவருடைய நண்பர்களை பின் இருக்கையில் அமர வைத்து அவர்கள் காரை செலுத்திக் கொண்டு சென்றுள் ளனர். யாதவ் அதுபோல ஒரு சட்டம் புதியதாக இயற்றப் பட்டதாக தமக்குத் தெரியாது என கூறி உள்ளார்.

மேலும் தங்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். அதற்கு அந்த காவலர், “நான் உன்னை காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்கிறேன். அதற்கு முன்பு என் பதவி உயர்வுக்காக உங்களில் ஒருவர் அல்லது இருவரை என்கவுண்டர் செய்கிறேன்” எனச் சொல்லி பின்னால் திரும்பிப் பார்க்காமலே துப்பாக்கியால் சுட்டுள்ளார். அந்த குண்டு யாதவின் கழுத்தில் பாய்ந்து முதுகுத் தண்டு வழியே வெளி வந்துள்ளது.

பிறகு வேண்டுமென்றே வாகனத்தை மெதுவாக செலுத்தி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.   அதற்குள் யாதவ் இறந்து விடுவார் என நம்பியவர்களுக்கு அதிர்ச்சியாக அவர் பிழைத்துள்ளார். ஆனால் கழுத்துக்கு கீழே இயக்கத்தை இழந்ததால் தற்போது படுத்த படுக்கையாக இருக்கிறார்.

போலி என்கவுண்டருக்கு ஆளான ஜித்தேந்திர யாதவ் நீண்ட காலமாக படுத்த படுக்கையாக உள்ளார். இந்த நிலையில் இது தொடர்பாக விசாரணை செய்த காவல்துறையினர் என்கவுண்டர் செய்த விஜய்தர்ஷன் சர்மா என்ற உதவி காவல் ஆய்வாளரை பணி இடைநீக்கம் செய்துள்ளனர்.மேலும் இந்த என்கவுண்ட தொடர்பாக 3 காவலர்களும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேசம் நொய்டாவில் பணிபுரியும் விஜய்தர்ஷன் சர்மா கடந்த 2017ஆம் ஆண்டு 22 என்கவுண்டர்களைச் செய்துள்ளார். இவரால் சுட்டுக் கொல்லப்பட்ட பலர் மீது காவல் நிலையத்தில் எந்த ஒரு குற்றவழக்கும் கிடையாது, அனைவரும் ஏழைகள் மற்றும் அப்பாவிகள் ஆவார்கள். மேலும் உத்தரப் பிரதேச காவல்துறையினரால் இதர பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர்கள் மட்டுமே காவல்துறையினரால் என்கவுண்டர் மூலம் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பொதுநல அமைப்புகள் விசாரணை நடத்த வேண்டும் என்றும் என்கவுண்டரில் கொல்லப்பட்டவர்களின் பின்னணி குறித்த உண்மையை அரசு வெளியிடவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

தற்போது உத்தரப்பிரதேசத்தில் போலி என் கவுண்டர்கள் அதிகமாகியுள்ளதால் மனித உரிமை ஆணையம் இவ்விவகாரத்தில் தலையிடவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
-  விடுதலை நாளேடு, 24.10.18