கடவுள், மதம், சாதி மற்றும் வேதம் குறித்து பகுத்தறிவு விளக்கங்கள் இப்பகுதியில் இடம்பெறும்.
ஞாயிறு, 18 அக்டோபர், 2020
சரஸ்வதி யார்? - தந்தை மகள் தகாத உறவு - கேவலங்கெட்ட இந்து மதம்..
சனி, 22 பிப்ரவரி, 2020
சரஸ்வதி குறித்து அபிதான சிந்தாமணி
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
கூறும் புராண சரஸ்வதியின்
கும்பியைப் புரட்டும் ஆபாசக் கதை இதுதான்
சரஸ்வதி குறித்து அபிதான சிந்தாமணியில் கூறப்பட்டுள்ளதாவது:
சரஸ்வதி - A
1. பிரமனால் சிருட்டிக்கப்பட்டு அவனால் மணக்கப்பட்டவள். வித்யாதிஷ்டான தேவதை. இவள் வெண்ணிறமாய், வெள்ளை வஸ்திரம் கைகளில் ஜப மாலை, புத்தகம், வீணை, எழுத் தாணி தரித்து எழுந்தருளியிருப்பள் எ-ம்., இவளுக்கு ஒரு கரத்தில் ஜபமணி, மற்றொன்றில் புத்தகம், இருகரங்களில் வீணை எ-ம், இவட்குப் பிரமவித்தை முகம், நான்கு வேதமும் கரங்கள், எண்ணும் எழுத்தும் கண்கள், சங்கீதசாகித்தியம் தனங்கள், ஸ்மிருதி வயிறு, புராண இதிகாசங்கள் பாதங்கள், ஓங்காரம் யாழ் எனவுங் கூறுப.
2. தக்ஷயாகத்தில் காளியால் மூக்கறுப்புண்டு மீண்டும் பெற்றவள்.
3. இவள் தன்னைச் சிருட்டித்துத் தன்னுடன்கூடப் பிரமன் வருகையில் பிரமனுக்கு அஞ்சிப் பெண்மான் உருக்கொண்டு ஓடினள். பிரமன் ஆண்மான் உருக் கொண்டு தொடர்ந்து சிவமூர்த் தியால் தடையடையக் கண்டு சிவமூர்த்தியை வேண்டிப் பிரமனைக் கணவனாகப் பெற்றவள்.
4. பிரமன் தன்னை நீக்கி யாகஞ்செய்ததால் நதி யுருவாய் யாகத்தை அழிக்க வந்தவள்.
5. ஒரு காலத்து அகத்தியரிடம் பிறந்தவள்.
6. பிரமன் காயத்திரி, சாவித்திரி, சரஸ்வதி மூவரு டன் கூடிக் கங்காஸ்நானத்திற்குப் போக சரஸ்வதி ஆகாய வழியில் பாடிக்கொண்டிருந்த வித்யாதர ஸ்திரீயின் இசையில் மனம் வைத்திருந்தனள். சரஸ்வதி ஒழிந்த இருவரும் தம் நாயகருடன் கங்கையடைந்து ஸ்நானஞ் செய்தனர். சரஸ்வதி சற்றுத் தாமதித்துப் பிரம தேவனிடஞ்சென்று தான் வருமுன் ஸ்னானஞ் செய்தது பற்றிக் கோபித்தனள். பிரமன் உன்மீது குற்றம் இருக்க என்மீது பயனிலாது கோபித்தலால் (48) அக்ஷரவடிவாகிய நீ உலகத்தில் நாற்பத்தெட்டுப் புலவர் உருவாகத் தோன்றிச் சிவமூர்த்தியை பணிந்து அவர் தந்த சங்கப்பலகையில் இருந்து வருக எனச் சாபம் ஏற்றவள்.
7. ஒரு யாகத்தில் இவள் வரத் தாமதித்ததால் பிரமன் இடைக்குலக் கன்னிகையைத் தாரமாகப் பெற்ற தால் இவளால் தேவர் சபிக்கப்பட்டனர் என்ப.
8. இவளும் இலக்குமியும் மாறு கொண்டு தங்களில் உயர்ந்தார் யாரென்று பிரமனைக் கேட்கப் பிரமன் இலஷ்மிதேவி என்ன மாறுகொண்டு நதியுருவாயினள்.
9. பிரமன் யாகஞ்செய்ய அந்த யாக கலசத்துக்குள் தோன் றியவள், புலத்தியரை அரக்கனாகச் சபித் தவள். சரத் காலத்தில் பூசிக்கப்படுதலால் சாரதை எனவும் பெயர்.
10. இவள் பிரமனால் சிருட்டிக்கப்பட்டு அவரால் மோகிப்பக்கண்டு, அந்தமோகவார்த்தையு ரைத்த முகத்தை நோக்கி நீ இவ்வாறு தூஷித் துக் கொண்டிருந்ததால் ஒரு காலத்தில் சிவ பெருமானையும் அவ்வாறு தூஷித்து அவரால் சிரம் அறுபடக் கடவையெனச் சபித்தனள். (சிவமகா புராணம்)
11. இவளும், கங்கை, லஷ்மி முதலியவர்களும் விஷ்ணுபத்னிகள். ஒரு கால் விஷ்ணு கங்கை யிடம்அதிக ஆசை கொண்டு அவளுடன் நகைமுகமாயிருந்தலைக் கண்ட சரஸ்வதி, பொறாமை கொண்டு லஷுமியை நோக்க லஷ்மி கங்கைக்குச் சார்பாயிருத்தலைக் கண்டு இவள் லஷ்மியைச் செடியாகவும் நதியாகவும் போகச் சபித்தாள். கங்கை சரஸ்வதியை நதியுரு வமாகவெனச் சபித்தாள். பின் ஸரஸ்வதி கங்கையை நோக்கி நீயும் நதியுருவமாய் உலகத்தவரது பாபத்தைச் சுமக்க என்றனள். லஷ்மியிதனால் தர்மத்வஜருக்கு குமாரியாகித் துளசியாகவும், பத்மாவதியெனும் நதியாகவும் பிறந்தனள். கங்கையும் சரஸ்வதியும் நதிகளாகப் பிரவகித்தனர். லஷ்மி சங்கசூடனை மணந்தனள். கங்கை சந்தனுவை மணந்தனள். சரஸ்வதி பிரம பத்தினி ஆயினள். சரஸ்வதி பாரத வருஷத்தில் நதியாக வந்தபடியால், பாரதி, பிரமனுக்குப் பத்தினியானதால் பிராம்மி, வாக்குகளுக்குத் தேவியாதலால் வாணி, அக்னியைப்போல் பாவத்தைக் கொளுத்தி யாவருங்காண மஞ்சணிறம் பெற்றிருத்தலின் சரஸ்வதியென அழைக்கப்படுகின்றனள். இந்த (3) தேவியரும் பூலோகத்தில் கலி (5000) வருஷஞ்சென்றபின் தங்கள் பதமடைவர். (தேவி-பா.)
- "அபிதான சிந்தாமணி", பக்கம் 723-724
புதன், 31 ஜனவரி, 2018
கல்விக் கடவுள் சரசுவதியின் யோக்கியதை பாரீர்!
கல்விக் கடவுள் சரசுவதியின் யோக்கியதை பாரீர்!
இவள்தான் சரசுவதி.
பிரம்மனால் சிருஷ்டிக்கப்பட்டு அவனால் மணக்கப்பட்டவள். ஒரு காலத்து - அகத்தியரிடம் பிறந்தவள்.
பிரம்மன் தன்னை நீக்கி யாகம் செய்ததால் நதியுருவாய் யாகத்தை அழிக்க வந்தவள்.
இவள், தன்னைச் சிருஷ்டித்துத் தன்னுடன் கூடப் பிரம்மன் வருகையில், பிரம்மனுக்கு அஞ்சி பெண் மான் உருக்கொண்டு ஓடினாள். பிரம்மன் ஆண் மான் உருக்கொண்டு தொடர, சிவமூர்த்தியால் தடையடையக் கண்டு சிவமூர்த்தியை வேண்டி, பிரம்மனைக் கணவனாகப் பெற்றவள்.
பிரம்மன் காயத்ரி, சாவித்திரி, சரசுவதி ஆகிய மூவருடன் கூடிக் கங்கா ஸ்நானத்திற்குப் போக சரசுவதி ஆகாய வழியில் பாடிக் கொண்டிருந்த வித்யாதர ஸ்திரீயின் இசையில் மனம் வைத்தனள். சரசுவதி ஒழிந்த இருவரும் தம் நாயகருடன் கங்கை அடைந்து ஸ்நானம் செய்தனர். சரசுவதி சற்று தாமதித்துப் பிரம்மதேவனிடம் சென்று, தான் வருமுன் ஸ்நானம் செய்ததுபற்றிக் கோபித்தனள்
பிரம்மன் குற்றம் உன்மீது இருக்க என்மீது பயனிலாது கோபித்தலால்...
இவள் பிரம்மனால் சிருஷ்டிக்கப்பட்டு, அவனால் மோகிப்பது கண்டு, அந்த மோக வார்த்தையுரைத்த முகத்தை நோக்கி நீ இவ்வாறு தூஷித்துக்கொண்டு இருந்ததால், ஒரு காலத்தில் சிவபெருமானையும் அவ்வாறு தூஷித்து அவரால் சிரம் அறுக்கக் கடவாய் எனச் சபித்தனள் (சிவமகா புராணம்).
(ஆதாரம்: சிங்காரவேலு முதலியார் தொகுத்துள்ள அபிதான சிந்தாமணி எனும் பெருநூலில் - பக்கம்-598).
பிரம்மனால் சிருஷ்டிக்கப்பட்டவள் சரசுவதி என்றால், அவள் பிரம்மனுக்கு மகள் அல்லவா ஆகிறாள்? மகள் சரசுவதியை அப்பன் பிரம்மன் மணப்பது எவ்வகையில் நியாயம்?
பிரம்மனால் சிருஷ்டிக்கப்பட்டவள் சரசுவதி என்று ஒரு பக்கம் சொல்லிக்கொண்டு, மறுபக்கம் ஒரு காலத்து அகத்தியரிடம் பிறந்தாள் என்றும், பிரம்மனின் யாகக் கலசத்துள் பிறந்தாள் என்றும் முரண்படக் கூறப்படும் கதைக் கருத்தின் நியாயம் என்ன?
பிரம்மனால் பெண்டாளப்படுவதை விரும்பாது, அவனை வெறுத்து ஒதுக்கி, அவனின் காம வேட்கையிலிருந்து தப்பிக்கப் பெண் மான் உருக்கொண்டு ஓடிய சரசுவதி, பின்னர் சிவமூர்த்தியை வலிய வேண்டிப் பிரம்மனைக் கணவனாகப் பெறுவானேன்?
பிரம்மனால் சிருஷ்டிக்கப்பட்டவள் ஒரு சரசுவதி - பிரம்மனின் யாகக் கலசத்துள் அவதரித்தவள் ஒரு சரசுவதி - அகத்தியருக்குப் பிறந்தவள் ஒரு சரசுவதி.
ஆக, சரசுவதி என்பது மூவரா - அல்லது ஒருவரா? சரசுவதி மூவர் எனில் - இதில் கல்விக் கடவுள் சரசுவதி யார்? கலவிக் கடவுள் சரசுவதி யார்?
ஒருத்திதான் சரசுவதி எனில், அவளுக்கு மூன்று வரலாற்றுப் பிறப்புக் கதைகள் ஏன்?
படைப்புக் கடவுள் பிரம்மனுக்கு காயத்ரி, சாவித்திரி, சரசுவதி என மூன்று மனைவியர் இருப்பது ஏற்புடைத்ததா? ஒருபுறம் சிவமூர்த்தியை வேண்டிப் பிரம்மனைக் கணவனாக அடையப் பெற்றவள் சரசுவதி எனக் கூறிக்கொண்டே - மறுபுறம் தன்னைக் காம இச்சையால் மோகிக்க வந்த பிரம்மனை சிவமூர்த்தியால் சிரம் அறுக்கக் கடவாய் என்று சரசுவதி சபித்ததாக சிவமகா புராணம் கூறுவானேன்?
எந்த ஒன்றிலும் கணவனும், மனைவியும் கலந்து பேசி - கூடி விவாதித்துக் காரியமாற்றுவதே குடும்ப உயர்வுக்கும், பெருமைக்கும் உகந்தது என்கிற இந்த எளிய உண்மை மனித இயல்பாக இருக்க - பிரம்மன் கடவுள் தன் மனைவி சரசுவதியைக் கலக்காமல் யாகம் செய்தார் என்பதும், அதற்காகக் கோபித்துக்கொண்ட சரசுவதிக் கடவுள் அந்த யாகத்தை அழித்தனள் என்பதும் கடவுள் இலக்கணத்திற்கும் - குடும்ப இலக்கணத்திற்கும் பொருத்தமுடையவைதானா?
கல்வி என்பது அறிவையும், அன்பையும், பண்பையும், பாசத்தையும், நியாயத்தையும், நேர்மையையும், உண்மையையும், ஒழுக்கத்தையும் போதிக்கின்ற ஒன்று. இந்தக் கல்விக்குக் காமாந்திரக் கிறுக்கியும், செக்ஸ் தலைவியும், மோகக் கள்ளியும், போக மினுக்கியும் ஆன குச்சு சரசுவதி எப்படிக் கடவுள் ஆக முடியும்? அவள்தான் ஆனாலும், மானமும் அறிவுமுள்ள மனித சமுதாயம் எப்படி அவளைக் கடவுளாக ஏற்றுக்கொள்ள முடியும்?
அறிவு, நாணயம், ஒழுக்கம், நேர்மை, பண்பு ஆகிய இவற்றிற்கும் சரசுவதி பற்றிய ஈனக் கதை கருத்துக்கும் எள்முனை அளவேனும் தொடர்புளதா?
அபிதான சிந்தாமணியின் தொகுப்பாசிரியர் திருவாளர் ஆ. சிங்காரவேலு (முதலியார்) பெரியார் தொண்டர் அல்லவே - திராவிடர் இயக்கத்தைச் சார்ந்தவர் அல்லவே - நாத்திகக் கொள்கையினர் அல்லவே! இவர் நூலைத் தொகுக்க - எழுதத் தொடங்கும் முன்னும், முடிக்கும்போதும் பகவானை அதாவது சிவபெருமானைத் துணைக்கு அழைத்தல்லவா காரியமாற்றி இருக்கிறார்?
இவரால், நம்மால் கல்விக் கடவுள் என்று நம்பப்படுகிற - போற்றப்படுகிற - சொல்லப்படுகிற சரசுவதிபற்றி மேற்கூறப்பட்ட கருத்துகளைத்தாதனே சொல்ல முடிகிறது?
இவரும் தானாக இட்டுக்கட்டி - கற்பனையில் சொல்லவில்லையே!
நம் முன்னோர்களால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற புராண வழிக் கருத்துகளையும் - சமய மத வழிக் கருத்துகளையும் அறிந்தும், ஆய்ந்தும், சுவைத்தும், தோய்ந்தும், உணர்ந்தும்தானே தொகுத்துரைக்கிறார்.
ஏ! பக்தத் தமிழா! இனியேனும் இவைகளைப் படித்து அறிந்தேனும் திருந்துவாயா? உலக நடப்புகளோடு பொருந்துவாயா? உன் அறியாமையையும், தவற்றையும் எண்ணி வருந்துவாயா?
----------------- குடந்தய் வய்.மு. கும்பலிங்கன் ------"விடுதலை” 16-10-2010
http://thamizhoviya.blogspot.com/2010/10/blog-post_16.html
வியாழன், 25 ஜனவரி, 2018

சரஸ்வதி பிரம்மனால் உண்டானவளா?
அகத்தியரிடத்தில் உற்பத்தியானவளா?
சரசுவதி என்பது மூவரா - அல்லது ஒருவரா? சரசுவதி மூவர் எனில் - இதில் கல்விக் கடவுள் சரசுவதி யார்? கலவிக் கடவுள் சரசுவதி யார்? கல்விக் கடவுள் சரசுவதியின் யோக்கியதை பாரீர்!
கல்வி என்பது அறிவையும், அன்பையும், பண்பையும், பாசத்தையும், நியாயத்தையும், நேர்மையையும், உண்மையையும், ஒழுக்கத்தையும் போதிக்கின்ற ஒன்று. இந்தக் கல்விக்குக் காமாந்திரக் கிறுக்கியும், செக்ஸ் தலைவியும், மோகக் கள்ளியும், போக மினுக்கியும் ஆன குச்சு சரசுவதி எப்படிக் கடவுள் ஆக முடியும்? அவள்தான் ஆனாலும், மானமும் அறிவுமுள்ள மனித சமுதாயம் எப்படி அவளைக் கடவுளாக ஏற்றுக்கொள்ள முடியும்?
சரசுவதியின் கதையை இப்போது அறிந்து கொள்.அதன்பின் சரசுவதி பூஜை கொண்டாடியது எவ்வளவு அசிங்கமான செயல் எனபதை உணர்வாய்!. இதோ சரசுவதியின் கதை:
சரஸ்வதியா? சரசவதியா?
கல்வித்துறையின் கடவுளாகக் கற்பிக்கப்பட்டுள்ள கலைவாணி (சரஸ்வதி)யின் பிறப்புக் கதையும் குளறுபடியாகவே இருக்கிறது. மற்றத் தெய்வங்களின் விரசமான கதைக்கு எந்த விதத்திலும் குறைச்சல் இல்லை இது!
இவளின் பிறப்புப்பற்றி 'அபிதான சிந்தாமணி'யின்
588- ஆம் பக்கம் தரும் செய்திகள் வருமாறு.
1. பிரம்மனால் சிருஷ்டிக்கப்பட்டவள்.
2. ஒருகாலத்து அகத்தியரிடம் பிறந்தவள்.
3. பிரம்மன் யாகம் செய்யும்போது, யாக கலசத்தில் தோன்றியவள்.
பிறப்புப் பற்றிய மூன்று செய்திகள் இவை.
இவளின் நன்னடத்தை(!)களைப் பற்றிப் புராணங்கள் தாங்கும் புத்திசாலித்தனமான கதைகளையும் கொஞ்சம் நினைவூட்டிக்
கொள்வோம்.
பிரம்மனின் சிருஷ்டியில் உருவான சரஸ்வதி அழகியென்றால் அழகி! கொள்ளை அழகி!! அந்த அழகில் இளகிய படைப்புக் கடவுளின் தாபவெள்ளம் உடைப்பெடுத்தது. பிறக்கும் போதே வெறும்மேனியுடன் பிறக்கவில்லை இவள்! வெண்ணிற ஆடை யுடனான மேனி, ஜெபமாலை தாங்கிய கை, இன்னொரு கையில் புத்தகம், இருந்த மீதி கரங்கள் இரண்டிலும் வீணை.
இந்த கோலத்தில் வந்துவிட்ட தனது சிருஷ்டியில் தானே திருஷ்டி போட பிரம்மனுக்கு மனம் உசுப்பியது. 'காமம் கண்ணறியாது' என்ற மொழிக்கு ஒரு ஸ்தானமாகப் பிரம்மனின் செயல் விளங்கியது.
"பெற்ற மகளோ! செத்த நாயோ!" போன்ற கொச்சை மொழியின் துவக்கத்தை இங்கிருந்துதான் துவக்கியிருக்கவேண்டும். அந்தத் தேவ மங்கை அவ்வளவு இலகுவில் இணங்க விடுவாளா? பிகு இல்லாமல் சுவை கிடையாது என்ற 'தொழில் சூத்திரத்தை'உணர்ந்த சகல கலாவாணி ஆயிற்றே அவள்! ஓடிவரட்டுமே என ஓட்டம் பிடித்தாள் எப்படி? தானாக அல்ல! தண்ணீராக!
உருமாறி, திசையெட்டும் திக் விஜயம் செய்தவளை திரும்பித் திரும்பிப் பார்த்தான் பிரம்மன். ஒரு தலையால் ஆகிய காரியமல்ல இது என்று முளைக்க வைத்தான் மேலும் மூன்று தலைகளை.
ஒரு முகப் பிரம்மா, சதுர் (நான்கு) முகப்பிரம்மாவானான். நதியை வளைத்துப் பிடித்து, பழைய நிலைக்குத் தளதள மேனியாக்கி, தழுவிக் கழித்தான் பிரம்மன் நழுவி ஓடிவிடாமல் கழுத்தில் தாலிச் சரட்டையும் தவழவிட்டு தாரமாக்கிக் கொண்டான். தாலி கட்டித் தாரமாக்கி, திறமை காட்டி ஈரமாக்கினால் மட்டும் ஒரு மனைவி நம்மிடம் நீடிப்பாளா, நிலைப்பாளா என்று பிரம்மன் மனத்தைப் போட்டு அலட்டிக் கொண்டான்.
"சிறைக்காக்கும் காப்பு எவன் செய்யும்?" என்றாலும் அதைவிடக் கதி இல்லை என்று கருதினானோ என்னவோ, கல்விக்கு அதிபதியான அவளை வாய்க்குள் போட்டுக் கொண்டான். காவலுக்கு ஆள் வேண்டுமே! பற்களை உயிர்பித்துப் போர் வீரர்களாக்கிவிட்டான்.
கிளர்ச்சியை மனம் கிளப்பும்போது, பள்ளியறையிலும் நாடி தளர்ந்து ஆடிக் குலைந்ததும் பிரம்மனின் வாயாகிய சிறைச்சாலையிலும் படுக்கையறைப் பாவையாகக் காலந்தள்ளினாள் சரஸ்வதி. இப்படி இருந்தது ஒரு நாளோ , ஒன்பது நாளோ அல்ல ; நூறு தேவ வருடம் இதே வேலை. ஆசைக்கும் மோகத்திற்கும் அத்தனை நாள், இத்தனை நாள் என்ற கணக்கையெல்லாம் பிரம்மன் பொய்யடித்து விட்டான்.
இத்தனை நாளைக்குபின் பிரம்மனுக்கு லேசான ஒரு சலிப்பு! மகனை அழைத்து , மனைவிக்கு மணாளனாக்கி வைத்தான். மகனே என்று அழைக்கவேண்டியவனிடம், மன்மத சுகங்காண கலைவாணியும் 'காலெடுத்து' நடந்தாள். 'சித்தி' முறையாயிற்றே என்ற வெட்கம் சிறிதுமின்றி சிருங்காரத்தைப் பிழிந்தான் பிரம்மபுத்திரனும்-பிரம்மனின் மகன் பெயர் சுவாயம்பு.
பல புராணங்களில் இருந்து சலித்தெடுத்த பல ருசிகரக் கதைகளை இப்படியாகச் சொல்லிப் போகின்றது அபிதான சிந்தாமணி.
பரிதாபத்திற்குரிய பக்தர்களை ஒரு பார்வை பார்ப்போம். அருமை பக்தர்களே, வினாவுக்கு விடை கொடுங்கள்!
1. சரஸ்வதி பிரம்மனால் உண்டானவளா? அகத்தியரிடத்தில் உற்பத்தியானவளா?
2. பிறக்கும்போதே ஜெபமாலை, புத்தகம், வீணை , வெண்ணிற ஆடை, இத்யாதி இத்யாதி சர்வலங்கார மேக்கப்புடன் எப்படிப் பிறக்க முடியும்?
3. மகன் முறை கொண்டாட வேண்டியவனிடம், மையல் கொள்பவள் தான் தெய்வப் பிறவியா?
4 தழுவ வந்ததும் தண்ணீராய் ஓடிய விந்தை, நான்கு புறமும்ஓட நான்காய்த் தலைகள் ஆன கதை நம்பமுடிகிறதா
நண்பர்களே!
5. தாலிகட்டி மனைவியான பின்பும், சிறைவைக்கும் நிலைக்குத்தரங்கெட்டவனாக வர்ணிக்கப்படுபவனைத் தெய்வமாக
ஏற்க முடியுமா?
6. அதைக் கிழிப்பான்- இதைக் கிழிப்பான் என்று பிரம்மன்புகழ்பாடும் பக்தர்களே! தன்னால் உருவானவளே தனக்குத்
தண்ணீர் காட்டினாள் என்று சொல்லும் நிலைக்கு பலவீனப் பேர்வழியாகிவிட்ட கடவுளின் சக்தியில் நம்பிக்கைக் கொள்ள
எப்படித் துணிகிறீர்கள்?
7. இப்படியெல்லாம் அயோக்கியத்தனம் பண்ணியதால் தான்பிரம்மனை நாங்கள் கோவில் கட்டி கும்பிடுவதில்லை என்றுநொண்டிச் சமாதானம் கூறுபவர்களே!
8. மொத்தமாக ஒரு கேள்வி.
இக்கதையில் எந்த ஒரு வரியை நம்ப முடியும்? இந்த மாதிரி கடவுளையும்-அதன் லீலைகளுக்கு இலக்கான அம்மணியையும்
வணங்கும் போக்கு எதைக் காட்டும்?
-------------------நன்றி : நூல்: "கடவுளர் கதைகள்" பக்கம் 32 -35
http://thamizhoviya.blogspot.com/2008/10/blog-post_7213.html