திங்கள், 30 மே, 2016

திரிமூர்த்திகள் என்ற பெயரே புராணப் புரட்டு

(சித்தாக்காடு கே.ராமையா)

22.9.1929 குடிஅரசிலிருந்து...
சிவ மதஸ்தர் சிவனையும், விஷ்ணு மதஸ்தர் விஷ்ணு வையும், ஸ்மார்த்தர்கள் பிரம்மாவையும் வழிபடுவதின் மூலம் ஏற்படும் சமயக்குறிச் சண்டைகள் நீதிமன்றம் வரை நிகழ்ந்தாலும், மேற்படி மூன்று கடவுளின் பெயரால் கொள் ளை கொண்டு வரும் ஒரு சாரார், தங்கள் சுயநலத்திற்கு ஆதரவாகவும், சண்டையிட்டுக் கொள்ளுகிறவர்களுக்குச் சாந்தியாகவும் இம்மூன்று பெயரைக்கொண்ட கடவுள்களும் ஒருவரே என்று தத்துவார்த்தம் புரித்துகொண்டு மக்களை பாழ்படுத்தி வருகிறார்கள்.
என்ன தத்துவார்த்ததும் புரிந்தாலும் திரிமூர்த்தி என்ற பெயர் பாமர மக்களை ஏமாற்ற படித்த கூட்டத்தார் தங்கள் தங்கள் மனோபாவப்படியும், கொள்கைப் படியும் எழுதி விளம்பரப் படுத்திக்கொண்ட புரட்டு என்பதை அடியில் வரும் விவரங்கள் ருசிப்பிக்கும்.
வராக புராணத்தில் ஆண் திரிமூர்த்திகளிலிருந்து ஒரு சக்தியுண்டாகி மூன்று பகுதிப்பட்டு லட்சுமி, சரஸ்வதி, காளியென்ற பெண் திரிமூர்த்திகளுண்டானார்கள் என்று வரையப்பட்டிருக்கிறது. இப்புராணத்திற்கு நேர்முரணாய் மார்க்கண்ட புராணத்தில் மேற்படி அம்மன் திரிமூர்த்தி களிலிருந்து சாமி திரிமூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு,
சிவனுற்பத்தியானதாக எழுதப்பட்டிருக்கிறது. லிங்க புராணத் தில் சிவனுடைய இடது பக்கத்திலிருந்து விஷ்ணுவும், லட்சுமியும், வலது பக்கத்திலிருந்து பிரம்மாவும், சரஸ்வதியும் தோன்றினார்களென்று சொல்லப்பட்டிருக்கிறது.
அதே லிங்க புராணத்தில் பிரிதோரிடத்தில் சிருஷ்டிப்பு கிரியை நடத்த சக்தியில்லாமல் பிரம்மா அழுத கண்ணீரிலிருந்து சிவனுற் பத்தியாகி அவ்விருவர்களுமாக கிருஷ்டிப்பு கிரியை நடத்தினார்களென்றும் புகல்கின்றது. மச்சபுராணத்தில் பிரம்மாவிலிருந்தே சிவனுற்பத்தியானதாக அறியக் கிடக் கின்றது.
எல்லா வற்றையும் பொய்மைப்படுத்தகூடிய வகை யில், நாரத புராணத்தில், நாராயணனுடைய வலது பக்கத்தில் பிரம்மாவும், இடது பக்கத்தில் விஷ்ணுவும், நடுவில் சிவனும் தோன்றினதாக புகல்கின்றது. நாராயணன் என்ற பெயரே பிரம்மாவுக்கு எற்பட்ட காரணப் பெயர் என்பதாக மனுஸ் மிருதி அ. 1. 10ல் புகல்கின்றது. பிரம்மா ஜலத்தில் அசைவாடிக் கொண்டிருந்ததால், (நாரம் - ஜலம், அயனம் - அசைவாடிக் கொண்டிருந்ததால்) நாராயணமென்ற பெயர் உண்டாயிற்றாம்! விஷ்ணுவுக்கும் நாராயணன் என்ற பெயரிருப்பதாக பல புத்தகங்கள் வெளியிடுகின்றன.
மேலே லிங்க புராணீகர் சொல்லியபடி சிவனுடைய இடது பக்கத்தில் தோன்றிய லட்சுமியும், மகாபாரதத்தில் அமுதம் கடையும் தருணத்தில் அமுதம் பிறப்பதற்கு முன் தோன்றிய சங்க நிதி, பதுமநிதி, சிந்தாமணி, இரதி, அகலிகை, இந்திராணி, அறுபதினாயிரம் ரம்பாஸ்திரீகள், காமதேனு, கற்பகவிருட்சம், அயிராவதம்,
வெள்ளைக் குதிரை முதலானவர்களோடு தோன்றிய லட்சுமியும் ஒன்றா? வேறா? என்பதை ஆஸ்திகர்கள் தான் சொல்ல வேண்டும். அண்ணாமலை புராணத்தில், சிவனிடத்தில் குடிலை என்னும் சக்தி தோன்றி அதில் பிரம்மன், விஷ்ணு, உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன், முதலிய பஞ்சகிருத்தியங்களுக்குரியவர்கள் தோன்றினார் களாம்! அப்படியானால் சிவனும், ருத்திரனும் தனித்தனி தெய்வங்களாகிறதே! விஷ்ணுவை தக்கனுடைய தாயென்றும்,
மகளென்றும் சொல்லப்படுகிற அதிதியின் குமாரரிலொரு வராக சில புத்தகங்கள் வெளியிடுகின்றன. விஷ்ணுவின் உந்திக்கமலத்திலிருந்து (தொப்பிளில் தோன்றிய தாமரைக் கொடியிலிருத்து) பிரம்மா தோன்றினதாக மகாபாரதம் புகல்கின்றது. பிரம்மாவை சிருஷ்டிகர்த்தாலென்று சொல் வதற்கு முரணாக, பூர்வீக இருக்கு, அதர்வன வேதங்களில் சிருஷ்டி கர்த்தாவுக்கு விஸ் வகர்மா, இரண்யகர்ப, பிரஜாபதி என்ற பெயர்களிடப் பட்டிக்கிறதே தவிர பிரம்மா என்கிற வார்த்தையே வேதங்களிலும், பிராமாணங்களிலும் காணப்பட வில்லை.
மேலும் இருக்கு வேதத்தின் நர்ககுந்த வியாக்கி யானத்தில் அக்கினி, இந்திரன், சூரியன் என்ற மூவரை தேவர்களாக சொல்லப்பட்டிருக்கிறதே தவிர தேவர்களுள் முக்கிஸ்தர் ஜாப்தாவில் விஷ்ணுவின் பெயரைக் காணோம். நாலு வேதத்திலும் பயங்கரமான ஊளை சப்தமிடுகிற ருத்திர னுடைய பெயர் வருகிறதேயொழிய சிவன் என்ற வார்தையே கிடையாது. பரமசிவனுக்கு விநாயகர் சிரேஷ்ட புத்திரர் என்பது உலகமறிந்த ரகசியமாய் இருக்கிறது.
பிள்ளையார் புராணத்தில் விக்கிர துண்ட விநாயகருக்கு இராசதம், தாமதம், சாத்வீதம் என்ற முக்குணங்களிருப்பதாகவும், இராட்சத குணத்தில் பிரம்மாவும், தாமதகுணத்தில் விஷ்ணுவும், சாத்வீக குணத்தில் சிவனும் தோன்றினதாக அறியக்கிடக் கின்றது. மற்றொரு புராணத்தில் ஆதி சக்தியிலிருந்து திரிமூர்த்திகளும் தோன்றினார்கள்யென்றும், அப்பால் இந்த ஆதிசக்தி இம் மூவர்களையும் புருஷர்களாக வைத்துக் கொண்டாளென்றும் தெரியவருகிறது.
இத்திரிமூர்த்திகளில் ஒருவராகிய விஷ்ணு 10 அவதார மெடுத்ததாக புகலும் பல புத்தகங்களுக்கு முரணாக, பாகவத புராணத்தில் 21 என்று சொல்லப்பட்டிருக்கிறது. சிவனுக்கு 5 தலை இருக்கும்போது 10 கண்கள் இருக்கவேண்டியதை மறந்து முக்கண்ணன் என்று சொல்வதெப்படியோ! இராமாயணக் கதையில் சிவனை விஷ்ணுவுக்கு அடுத்த ஸ்தானத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
மகாபாரதத்தில் சில இடத்தில் விஷ்ணு தான் பெரியவரென்றும், சில இடத்தில் சிவன்தான் பெரிவன்ரென்றும், முன்னுக்குப் பின் முரணாக சொல்லப்பட்டிருக்கிறது. பிரபஞ்ச சிருஷ்டிக்கு சிவனே மூலகர்த்தா என்று புகலும்,
லிங்க புராணம்-அண்ணாமலை புராணம் போன்ற சிவபுராணங்களுக்கு புறம்பாய் மகாபாரதம் ஆதிபர்வம் பிரபஞ்ச சிருஷ்டி சருக்கத்தில் பிரம்மாவே சகலத்தையும் சிருஷ்டித்ததாக புகலப்பட்டிருக்கிறது. மானிடர் களைப்போல் திரிமூர்த்தி களாகிய தெய்வங்களுக்கும், நட்சத்திரன்கள் சொல்லப் பட்டிருக்கிறது. பிரம்மாவுக்கு  ரோகிணியும், விஷ்ணுவுக்கு திருவோணமும், சிவனுக்கு திருவாதிரையும் சென்ம நட்சத்திரமாமே!
சிவனுக்கு பிரமஹத்தி சனியன் பிடித்து 12 வருஷம் சுடலை சுற்றி திரிந்து பலவித கோரணிகளும் செய்தாராமே! திரிமூர்த்திகளும் சேர்ந்து செய்த துர்கிர்த்தியத்தால் அங சூயையின் சாபமடைந்து சிறிய பாலகர்களாய் அவளண் டையில் அநேக காலம் தங்களுடைய சிருஷ்டி திதி, சங்காரமென்னும் தொழிலை இழந்து விட்டு இருந்ததும், கண்டகி தாசியால் இம்மூர்த்திகள் இரண்ய கர்ப்பம் சாளக்கிராமம் சிவனாகமென்ற கல்லுகளாக சபிக்கப்பட்டது,
நாகவல்லியாலும் கல்லாக சபிக்கப்பட்டதும், அரிகரன் பிறந்தது போன்ற பல ஆபாசக் கதைகள், புராணங்களில் காணப்படுகின்றன. அக்கதைகளில் அடங்கி இருக்கும் வார்த்தைகளை, இக்காலத்திய ஒரு இழிதகைமை யுடையவன்கூட வாயில் வைத்துப் போசவே மாட்டான். தமிழ்நாட்டு சகோதரர்களே! மேலே எழுதப்பட்டிருப்பவை எல்லாம் தெய்வீகத் தன்மை பொருந்திய புராண இதிகாசங் களிலிருப்பவைகளே தவிர எங்களால் எழுதப்பட்டதல்ல.
இத்தியாதி காரணங்களால் திரிமூர்த்திகள் என்ற பெயரே புராணீகர்களுடைய புரட்டுகளுக்குக் கீழ் சிருஷ்டிக்கப் பட்டதென்பது தெற்றென விளங்கவில்லையா? திரிமூர்த்திகள் என்ற பெயருடன் ஊர் தவறாது கோயில்களிலும், வீடுகளிலும், உலவிக்கொண்டு, தமிழர்களுடைய இரத்தத்தை உறிஞ்சி அடிமைக்கு ஆளாகிவிட்டதென்பதற்குக் கோயில் கட்டிய அரசர்கள் அரசுரிமை இழந்ததும்,
திரிமூர்த்திகளுக்கு புறம்பாய் உள்ள அன்னிய மதங்கள் வலுவடைந்து வருவதும், வயிற்றுக் கஞ்சிக்கு வகையில்லாமல் தினம் தினம் ஆயிரக் கணக்கான மக்கள் அன்னியநாடு சென்று வெள்ளைத் தோட்டத்தில் சாவதும், திரிமூர்த்திகள் அவதரித்திருக்கும் இந்நாட்டில் 100க்கு 75 பேர்கள் பிச்சை எடுப்பதுமே போதிய சான்றாகும். திரிமூர்த்திகள் என்ற பெயரையே ஜனசமூகம் அறியும்படி சுயநலங்கொண்ட ஒரு சாரார் எழுதிய புரட்டு புராணங்கள்,
நாட்டில் மலிந்து கிடப்பதின் உட்கருத்தை கல்வி நாகரீகமடைந்த இக்காலத்தியவர்கள் கூட வெளியிடாமல், பாமரமக்கள் திரிமூர்த்திகளின் பெயரால் அறியாமை காரண மாக செலவுசெய்யும் லட்சக்கணக்கான பொருளையும், பார்ப்பனர்களுக்கு அடிமைப்பட்டு கெட்டுப்போன பண் டைய ராஜாக்களின் அறியாமை காரணமாக எழுதி வைக்கப் பட்ட சர்வமான்யங்களையும், தன்நலத்துக்கு உபயோகப் படுத்தக் கருதி மனதறிந்த வஞ்சகம் செய்து வருகிறார்கள்.
கஷ்டப்படும் இளைத்த கூட்டத்தாரை, வலுத்த பணக்கார, படித்த கூட்டத்தார் அழுத்துவதற்கு இத்திரிமூர்த்திகள் என்ற புரட்டு புராணங்களையும் கருவியாக உபயோகப்படுத்தி வரும் சூழ்ச்சியை நன்கறிந்த ஈரோடு ராமசாமிப் பெரியார் குடி அரசின் மூலம் தனக்குத்தானே நாயகனாக இருக்க வேண்டுமென்றும் புராணக்கட்டுக்கும், கோயில் கட்டுக்கும் தலை வணங்காமல் தன் மதிப்பைக் காத்துக்கொள்ள வேண்டு மென்று ஜனசமூகத்திற் கெடுத்துரைக்கிறார். அதற்காகவே சுயமரியாதை இயக்கத்தையும் தோற்றுவித்திருக்கிறர்.
திரிமூர்த்திகள் என்ற பெயரே புராணப்புரட்டு என்ப தையும் பார்ப்பனர்கள் பிழைக்கச்செய்த சூழ்ச்சி என்பதையும், அறிந்து கொள்வதற்கு மேலே எழுதப்பட்டிருப்பவைகளைக் கூர்ந்து கவனித்து சுயமரியாதை இயக்கத்திற்குத் தக்க பேராதரவு கொடுத்து பிறநாடுகளை போல் ஆக வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
-விடுதலை,11.3.16

ஜோதிபாபுலே பார்வையில் பிர்மாஜாதி ஏற்றத்தாழ்வுகள் குறித்த சித்திர கதைகள்
மாட்டிறைச்சி தடை செய்யப்படு கிறது. மாதவிலக்கு விலக்கப்படுகிறது. அன்றாடம் வெளியாகின்ற செய்திகள் குறித்து எண்ணிப்பார்த்தால், 1873ஆம் ஆண்டில் இதேபோன்றுதான் செய் திகள் வெளிவந்தன. அந்த ஆண்டில் தான் மகாராட்டிர மாநிலத்தில் மாபெரும் சமூக சீர்திருத்தவாதியான ஜோதிராவ் கோவிந்த்ராவ் புலே வேதங்களையும், பார்ப்பனீயத்தையும் கண்டித்து அடிமைத்தனம் (குலாம்கிரி) குறித்து எழுதினார்.

தரிசு நிலத்தில் தோட்டக்காரர் எனும் சித்திரக்கதை நாவலாக ஜோதி புலேவின் விடுதலைப் போராட்டங் களை விளக்குகிறது.
நூற்றாண்டுகளுக்குப்பின்னர் எழுத்தாளர் சிறீவித்யா நடராஜன் மற்றும் ஓவியர் அபராஜிதா நினன் இணைந்து சித்திர நாவல் உருவாக்கி கொடுத்துள்ளார்கள். தரிசு நிலத்தில் தோட்டக்காரர்: ஜோதி புலேவின் விடுதலைப் போராட்டம்Õ நூல் உள்ளார்ந்த கற்பனைகளுடன்கூடிய பணியாக அமைந்துள்ளது.
நினன் கூறும்போது, “புலே சமூகப் படப்பிடிப்பாக அப்பட்டமாக எழுதினார்.  அவர் எழுதியவற்றிலி ருந்து சித்திரக்கதை (கிராபிக் நாவல்) மூலமாக விதைத்துள்ளோம். இந்நூலின் மூலமாக தாழ்த்தப்பட்டவர்களின் நிலைகுறித்து முழுவதுமாக இளைய தலைமுறையினர் எளிதாக புரிந்து கொள்ள முடியும்’’ என்றார்.
ஜாதியை எதிர்க்கின்ற வகையில் ஜாதிப்பிரச்சினைகள் குறித்து நவயனா பதிப்பகத்தார் முதல்முறையாக தனித் துவத்துடன் வெளியிட்டுள்ளனர்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக வழக்கத்துக்கு மாறாக நூல் வெளியீட்டு விழாவில் மாட்டுக்கறி விருந்து (ஜமா மஸ்ஜித்தில் அளிக்கப்படுகின்ற பஃப் கபாப்) அளிக்கப்பட்டது.

அதேபோல், பிரம்மனுக்கு மாத விலக்கு ஏற்படுவதாகக் கூறி பிரம் மனுக்கு Ôபிரம்மா சானிட்டரி நாப்கின்Õ களை அறிமுகம் செய்தார்கள். (பிரம்மன் படைப்புக்கடவுள் என்றால், அவனுக்கும் மாதவிலக்கு உண்டா? என்று புலே கேள்வி எழுப்பினார்) இதுபோன்று பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தி வந்த போதும், அதன் தாக்கம் என்பது தொடர்ந்து நீடிக்காமல்தான் உள்ளது. ஜாதி பிறப்பு முதல் இறப்பு வரை தொடர்கிறது என்பதை நவீன இந்தியாவில் திடுக்கிடும் முறையில் நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது. ஜாதிய அமைப்பு முறைகள் தொடர்ந்து கொண்டு இருப்பதுடன், ஜாதி குறித்து விவாதிக்கப்படாதவரை, வாழ்விலிருந்து சாவுவரையிலும் ஜாதியே எல்லாவற் றுக்கும் காரணமாகவே அமைந்துவிடு கின்றது என்பதில் அண்மையில் 17.1.2016 அன்று ரோகித் வெமுலாவின் தற்கொலை நிரூபித்துள்ளது.
நவயானா பதிப்பகத்தின் சார்பில் எஸ்.ஆனந்த் கூறும்போது, “புலேவின் எழுத்துகளை படிக்கும்போது, எப் போதுமில்லாத நிலையில் இதுபோன்ற நேரங்களில் அதிக அளவில் விழிப்பு ஏற்பட்டுவருகிறதுÕÕ என்றார்.
அப்பதிப்பதிகத்தின் சார்பில் மேலும் ஒரு நூல் வெளிவந்துள்ளது. எழுத் தாளர் கோண்ட் மற்றும் ஓவியக் கலை ஞர்கள் துர்காபாய் மற்றும்  சுபாஷ் வியாம் இணைந்து டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்று சம்பவங்களை சித்திரக்காட்சிகளாக ÔபீமாயணாÕ என்கிற நூலாக வெளிக் கொணர்ந்துள்ளனர்.

பீமாயணா நூல்குறித்து பதிப்ப கத்தைச் சேர்ந்த ஆனந்த் கூறும்போது, Òசில ஆண்டுகளாக டில்லி பல்கலைக் கழகத்தில் பொது ஆங்கிலப் பாடத்தில் ÔபீமாயணாÕ நூல் வைக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டவனாக இருக்கின்ற என்னைப் பொறுத்தவரையில் தாழ்த் தப்பட்டவர்கள் அல்லாதோரிடையே இந்தக்கருத்துகளைக் கொண்டு செல்வது சவாலாக உள்ளது. அவர்கள் புலே, அம்பேத்கர் சிந்தனைகளை அறியாமல் இருந்தால், இதுபோன்ற ஜாதியால் ஏற்பட்டுவருகின்ற  பிரச் சினைகளில் மாற்றத்தைக் கொண்டுவர இயலாது’’ என்றார்.
சித்திரக் கதாசிரியர் சார்நாத் பானர்ஜியின் Ôவிசாகபுரியில் அனை வரும் அடங்கிவிட்டார்கள்Õ என்கிற நூலில், புதிய ஜாதிய வகுப்பைக் காண லாம். அந்நூலில் டில்லியில் தண்ணீருக் கான சண்டைகள் நடைபெறுவதைக் காணலாம்.
சித்திரக்கதாசிரியர் சார்னாத் பானர்ஜி கூறும்போது,
“நீங்கள் நல்லவராக இருந்தாலும், சிறந்த மருத்துவராக இருந்தாலும், உங்களின் ஜாதிப்பெயர் உங்களைக் காட்டிக்கொடுத்துவிடும். அதிலிருந்து நீங்கள் தப்பிவிட முடியாது. உங்களு டைய பெயரில் தாழ்த்தப்பட்டவர் என்று தெரியவரும்போது,  மக்கள் உங்களின் தகுதிநிலைகுறித்து சந்தேகப்படுவார்கள். இடஒதுக்கீட்டு முறையால் அந்த நிலையை நீங்கள் அடைந்தீர்கள் என்று அதிசயப் படுவார்கள். ஜாதிகளை ஒருங்கிணைப் பது குறித்து பேசப்பட்டுவருகிறது. இந்தியர்கள் முட்டாள்கள் அல்லர்.
உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் நன்கு அறிந்தவர்கள். ஆனாலும், ஜாதிபேதங்களை தொடர்ந்து பின்பற்றி வருகிறார்கள்.    என்னையே எடுத்துக் கொண்டால், நான் உயர்ஜாதியைச் சேர்ந்தவன். அதனால், என்னுடைய பணிகளில் ஜாதிய வேறுபடுகளுடன் பிரச்சினை வரும்போது, என்னுடைய மனிதநேயத்தை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். அதேநேரத்தில், நான் ஒரு தாழ்த்தப்பட்டவனாக இருந்தால், நான் போராடுவதாக கூறுவார்கள்’’.
சித்திரக்கதைகள் போன்ற காட்சிப்படுத்தும் ஊடகங்களில் ஜாதிய வேறுபாடுகளை காட்டக் கூடாது. பார்ப்பனர்கள் அழகுடன் இருப்பதாக எப்போதும் காட்டப்படுகிறது. ராட்சசர்கள் அல்லது வில்லன்கள் என்று காட்டும்போது எப்போதும் கருப்பாகவே காட்டப்படுகிறார்கள். இந்த கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்க முடியாது’’ என்கிறார் சார்னாத் பானர்ஜி.
ஆனால், நினன் கூறும்போது, Òஎன் னுடைய சித்திரங்களில் எல்லோரையும் ஒன்றுபோலவே காட்டுகிறோம். பானர் ஜியின் பார்வை ஒரு பொருட்டல்ல. என்னுடைய கதாபாத்திரங்கள் தோற்றத் தில் எப்படி இருக்கின்றன என்பதை நான் கருத்தில் கொள்வதில்லை. ஆனால், கீழ்ஜாதி தொழிலாளிதான் என்னுடைய கதாநாயகன், அழகானவன்’’ என்றார்.
பன்னாட்டளவிலான இந்திய சித்திரக்கதை அமைப்பின் நிறுவனர் சரத் சர்மா கடந்த 20 ஆண்டுகளாக மக்களிடையே பணியாற்றிவருகிறார். அவர் கூறும்போது, “சித்திரக்கதைகளின்  துணிவுக்கான ஆணிவேர் இந்தியாவில் இருந்துள்ளது. சித்திரக்கதைக்கான பணிகளில் ரிக்ஷா இழுப்பவர் முதல் பேராசிரியர் வரை கதைகளுக்கேற்ப சித்திரங்கள் பாலியல் பேதங்கள், ஜாதிப்பிரச்சினைகள் ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளன. மக்களிடையே பாகுபாடுகளை ஒழிக்க ஒரே வழி  பாதிப்புக்குள்ளாகும் மக்களின் பிரச்சினைகளை கவனிப்பதில்தான் உள்ளது. இராஜஸ்தான் மாநிலத்தில் பார்மர் பகுதியில் சிறுவன் ஒருவன் பள்ளியில் பூஜை செய்வதற்கு அவன் அனுமதிக்கப்படவில்லை என்பதை விளக்கி உள்ளான்.
அவன் கதையை ஒவ்வொரு சம்பவத்தையும் சித்திரங் களாக காட்சிப்படுத்துகிறான். அவனு டைய சித்திரக்கதையிலிருந்து படங் களை நாங்கள் ஒளிப்படமாக எடுத்து, கிராமங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தும்வண்ணம் மக்களிடையே வழங்கி வருகிறோம்/
இந்த பிரச்சினைகள் கிராமங்களில் மட்டுமல்ல. தாழ்த்தப்பட்டவர்கள் இடஒதுக்கீட்டின்படி, மாநகர்களில் அரசு பணி வாய்ப்பு கிடைத்து செல்லும்போது, சிறப்பாக பணிகளை செய்தபோதிலும், ஜாதிரீதியிலான ஒதுக்குதல் தொடர்கின்றது. பியூனாக இருக்கின்ற ஒருவர் கோப்புகளை மரியாதையுடன் கொடுக்காமல், தாழ்த்தப்பட்டவர்களைத் தொடக் கூடாது என்பதற்காக மேசையின்மீது தூக்கி வீச முடிகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் வெளிப்படுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது. அதற்கு சித்திரக்கதை மிகவும் சரியான வழியாக உள்ளது’’ என்றார் சர்மா.
அவர் மேலும் கூறுகையில், “அண்மையில் டில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் ஜாதி பாகுபாடுகள் ஆராயப்பட்டன. அந்நிகழ்வில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ள மாணவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் ஆகியோரிடையே வறிய நிலையில் உள்ள தாழ்த்தப்பட்ட ஒரு குழந்தையின் கல்லூரிவரையிலான பயணத்தை சர்மாவின் சித்திரக்கதைகள்மூலமாக விவரிக்கப்பட்டது. சித்திரக்கதைகளின் வாயிலாக புரிந்து கொள்வது மிக எளிமையாக உள்ளது’’ என்றார்.
_டைம்ஸ் ஆப் இந்தியா, 7.2.2016

-விடுதலை

சிவலிங்க ரஹசியமும் தமிழ் மக்களின் அறியாமையும்


(24.2.1929 - குடிஅரசிலிருந்து)
அறியாமையும், மூடநம்பிக்கையும் ஆகிய இவை இரண்டும் செய்விக்காத கெட்டசெய்கை கிடையாது. உதாரணமாக சாம்பலையும் மண்ணையும் முகத்திலும் உடம்பிலும் பூசிவிட்டு கழுத்திலும் கைகளிலும் ஏதேதோ கொட்டை மாலைகளை மாட்டி வெளியில் அனுப்பி வேடிக்கை பார்க்கிறது.
இன்னும் பார்ப்பனர்கள் காமபித்து அதிகமாய்ப் போய் ஆண்குறியும் பெண்குறியும் பிரஜாவிருத்தி, சரீரசுகம் இல் வாழ்க்கை இவைகளுக்கு முக்கியமான காரணமாக இருப்பதால் இவைதான் கடவுளர் பூஜிக்கப்பட வேண்டுமென்று சுமார் 2000 வருஷங்களுக்குமுன் ஒரு வழக்கத்தை ஏற்படுத்தி னார்களாம்.
அப்பொழுது அறிவாளிகளான நம்மவர்கள் இந்தத் தீச்செயலை எல்லாவித உபாயங்களாலும் தடுக்கத் தொடங் கினார்கள். நம்மவர்களுக்கு பயந்து சிலர் இந்த கடவுள் வணக் கத்தை ரகசியமாகவும், சிலர் பிரத்தியட்சக் கடவுளை விட்டு மண் ணாலும், கல்லாலும் பெண்குறி ஆண்குறி இரண்டும் சேர்ந்தி ருக்கும் விதமாகச் செய்வது அதை வணங்கியும் மற்றுஞ்சிலர் முழுமனித வடிவம் நிர்வாணமாகச் செய்தது அதை வணங்கி வந்தார்களாம். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இந்தக்கடவுள்கள் உயர்ந்த விலையுள்ள புடவை உடுத்துகிறதும் விபசார உற்சவம் செய் கிறதுமான சாமிகளாக மாறிவிட்டன. ஆஹா இந்த சாமி களுக்குத்தான் நம்மவர்கள் வருஷாவருஷம் கோடிக்கணக் கான ரூபாய் செலவு செய்து நாசமாக்குகிறார்கள்.
பெரிய மதில் தின்ன பிராகாரம் கட்டி தங்கள் அறியாமையின் ஞாபகச்சின்னத்தை நிலைநாட்டுகிறார்கள். பால் பழம் சர்க்கரை கொண்டு தினம் 5 வேளை பூஜை செய்து ஆண் பெண் குறிகளுக்கு தடவி வழித்துக் கொடுக்கிற பஞ்சாமிர்தத்தை கொஞ்சம் போதும் (மிகவும் கொஞ்சமாக, ஏனென்றால் பார்ப்பன பூசாரி கணக்காகத்தான் கொடுப்பான்) தின்று கடைத்தேறி விட்டதாக நினைக்கிறார்கள்.
தமிழர்களே! சுயபுத்திக்கு மேன்மைகொடுத்து பட்சபாத மில்லாமல் தினமும் 2 நாழி நேரமாவது சாம்பல் பூசுதல், யானைத் தலை கடவுள், மூன்று தலைச்சாமி, ஒத்தைக்கால் தெய்வம், முதலியவற்றை அராய்ந்து பார்த்தால் இந்த ஆபாசத்தின் உண்மை விளங்காமல் போகாது.
இனிமேலாவது ஒவ்வொரு ஊரிலும் கோவில் என்பவற்றில் உள்ள சாமி என்பவற்றை பெய்ர்த்து தூரவைத்து விட்டு அதனுடைய வருமானத்தைக் கொண்டு ஏழைப்பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடமும் அறிவு வளர்ச்சிக்காக புத்தகாரியமும் ஏற்படுத்தி நாட்டை சயமரியாதை உள்ளதாகச் செய்யுங்கள். இன்னும் இந்த ஆண்குறி பெண்குறி தெய்வங்களை கும்பிட்டுக் கொண்டும் சாம்பலை பூசியும் சாணியைத்தின்று கொண்டுமே இருந்தால் பின்னால் இன்னும் எதைத்தான் தின்ன நேரிடுமோ தெரியாது. இவ்வளவு காலம் அறியாமையில் கிடந்து நஷ்டமும் கஷ்டமும் பட்டது போதும்,போதும். கடைசியில் நீங்கள் பூசிக்கும் லிங்கம் என்ன என்பதை மேனாட்டார் தெரிந்து கொண்டு உங்களை பரிகாசம் செய்கிறார்கள் என்பதை நினைப்பூட்டுகிறேன். பிறர் சொல்லுவானேன். நமக்கே நம்முடைய இந்த வெட்கக்கேடான ஆசாரத்தில் அவமானத்தினால் தலை குனிந்து போகிறதில்லை. ஏன்! இது அறியாமை! மூடநம்பிக்கை!
-விடுதலை,12.2.16

புதன், 25 மே, 2016

காகத்திற்குக் கண் பொட்டையானது ஏன்?

Corvus corax (FWS).jpg
காகத்திற்குக் கண் பொட்டையானது ஏன்?
இராமனது மனைவியான சீதை மேலாடையின்றி ஸ்தனத் தைத் (மார்பு) திறந்து போட்டுக்கொண்டு பாலிப் பெண்களைப் போல் காட்டில் திரிந்து கொண்டிருந்தாள். ஒரு காகமானது அவளுடைய பருத்துத் திரண்டுருண்டு மிருதுவாகவிருந்த ஸ்தனத்தை மாங்கனி என்று கருதிக் கொத்திவிட்டது. இராமன் இந்தக் கண்றாவியைப் பார்க்கச் சகிக்காதவனாய் உடனே தன் கையிலிருந்த தர்ப்பைப் புல்லால் அதன் கண்னைக் குத்தி விட்டானாம் அதிலிருந்து தான் காகத்திற்கு ஒரு கண் பொட் டையாகி விட்டதாம். எப்படி?
27.11.1943, குடி அரசிலிருந்து...
புரோகிதர்: ஓய், சுப்பரமணிய முதலியாரே! நாளைக்கு
8 ஆம் நாள் உங்கப்பாவுக்கு திதி வருகிறது. திதியை அதிகாலையிலேயே முடித்து விட்டால் நன்றாய் இருக்கும். ஏன் என்றால், நான் அன்று காலை 10 மணிக்கு நாயக்கர் வீட்டுக்கும் போக வேண்டும். அங்கு கர்ணபூஷண முகூர்த்தம். அல்லாமலும் அதிகாலையில் திதி செய்வது மிகவும் விசேஷமானது முதலியார்.
சரி சுவாமி, அப்படியே ஆகட்டும். தாங்கள் மாத்திரம் அதிகாலையில் வந்து விடுங்கள். நாங்கள் ஸ்நானம் செய்து விட்டு சாமக்கிரிகைகளோடு தயாராய் இருக்கிறோம். (முதலியார் தன் மனைவியை அழைக்கிறார்) அடீ!
அண்ணியார்: (பெரிய வீட்டுப் பெண்களை அண்ணியார் என்று தான் கூப்பிடுவது) ஏனுங்கோ
முதலியார்: சாமி சொன்னதைக் கேட்டாயா?
அண்ணியார்: ஆமா, நானும் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன்.
முதலியார்: இன்னைக்கு எட்டாம் நாள் ஞாபகமிருக்கட்டும். காலமே நேரமே ஸ்நானம் செய்து விட்டு சாமிக்குக் கொடுக்கும் சாமான்கள் எல்லாம் தாராளமாய் ரெடியாய் வைத்து இருக்க வேண்டும்.
தம்பி: (பக்கத்தில் இதைக்கேட்டுக் கொண்டிருந்த முதலியார் மகன் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கிறவர்) என்னப்பா என்னமோ சொன்னீங்களே, என்னத்திற்கு தாராளமாய், ரெடியாய் இருக்க வேண்டும்?
முதலியார்: உங்க தாத்தாவுக்கு, எட்டாம் நாள் திதி சாமி காலமே எங்கேயோ போகணுமாமா. அதற்காகக் காலையிலேயே எல்லாம் தயாராய் இருக்க வேண்டும் என்று சொன்னேன். காலம் பஞ்சகாலம் சாமிக்குத் தாராளமாய்க் கொடுப்பமே அவர் ஒரு 2, 3 மாதத்துக்கு ஆவது சாப்பிடட்டும்.
தம்பி: அதற்கு இந்த ஆசாமி (அய்யர்) என்னத்துக்கு வந்தாரு? எதற்காக கொடுக்கிறது? யாருக்குப் பஞ்சம்?
முதலியார்: அடே அவர் சாமிடா. அப்படி எல்லாம் சொல்லாதே. மரியாதையாய்ப் பேசு.
தம்பி: என்னப்பா கோவிலிலே இருக்கிறதும் சாமி, இந்தத் தடிராயனும் சாமியா? அப்படின்னாக்க கோயிலிலே இருக்கிற சாமிக்குத்தான் என்ன மரியாதை இருக்கிறது. ஒரு நாயை முதலியாரே, முதலியாரே என்று கூப்பிட்டால் நமக்குக் கோபம் வராதாப்பா? அது போல் இந்தப் பிச்சை எடுக்கிற மனுஷனை சாமிண்ணு கூப்பிட்டால் கோயிலில் இருக்கிற சாமி கோபித்துக் கொள்ளாதா?
முதலியார்: என்னடா, அதிகப்பிரசங்கிப் பயலே இப்படி ஆய்விட்டாயே. இதெல்லாம் எங்கடா படிச்சே? இந்த சுயமரியாதைகாரப் பயல்களோடே சேர்ந்து கெட்டுப் போய் விட்டாப்லே இருக்கிறதே. மட்டு மரியாதை, மனுஷாள் கினுஷாள் ஒண்ணும் இல்லாமேப் போச்சே இனிமேல் இப்படியெல்லாம் பேசினால் பார்த்துக்கோ அப்புறம் என்ன நடக்கும் என்று. 
-விடுதலை,6.5.16

சந்திரன்-தேய்வது ஏன்?

இரவில் முழு நிலவின் தோற்றம். It is patterned with a mix of light-tone regions and darker, irregular blotches, and scattered with varying sizes of impact craters, circles surrounded by out-thrown rays of bright ejecta.

இதுதான் இந்துமதம்: சந்திரன்-தேய்வது ஏன்?
சந்திரனின் குரு வியாழன் பகவான் என்ற தேவகுரு குரு ஊரில் இல்லாத சமயம் குருவின் பத்தினியாகியதாரை என்பவளுடன் உடலுறவு கொண்டான் இப்படி குரு இல்லாத சமயத்தில் எல்லாம் காரியம் நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் குருவே நேரில் பார்த்துவிட்டான்.
ஆத்திரங்கொண்டு,  உனது கலை நாளுக்கொன்றாய் குறைந்து  போகக்கடவது என்று சந்திர னுக்குச் சாபமிட்டு விட்டான் குரு. அதிலிருந்துதான்! தேய்பிறை ஏற்பட்டதாம். மீண்டும் சிவபெருமானை நோக்கி சந்திரன் தவம் இருந்து. அடுத்த பதினைந்து நாள் தனது கலை வளர வரம் பெற்று விட்டானாம். அதுதான் வளர் பிறையாம்.
எப்படி?
காகத்திற்குக் கண் பொட்டையானது ஏன்?
இராமனது மனைவியான சீதை மேலாடையின்றி ஸ்தனத் தைத் (மார்பு) திறந்து போட்டுக்கொண்டு பாலிப் பெண்களைப் போல் காட்டில் திரிந்து கொண்டிருந்தாள். ஒரு காகமானது அவளுடைய பருத்துத் திரண்டுருண்டு மிருதுவாகவிருந்த ஸ்தனத்தை மாங்கனி என்று கருதிக் கொத்திவிட்டது. இராமன் இந்தக் கண்றாவியைப் பார்க்கச் சகிக்காதவனாய் உடனே தன் கையிலிருந்த தர்ப்பைப் புல்லால் அதன் கண்னைக் குத்தி விட்டானாம் அதிலிருந்து தான் காகத்திற்கு ஒரு கண் பொட் டையாகி விட்டதாம். எப்படி?
27.11.1943, குடி அரசிலிருந்து...
புரோகிதர்: ஓய், சுப்பரமணிய முதலியாரே! நாளைக்கு
8 ஆம் நாள் உங்கப்பாவுக்கு திதி வருகிறது. திதியை அதிகாலையிலேயே முடித்து விட்டால் நன்றாய் இருக்கும். ஏன் என்றால், நான் அன்று காலை 10 மணிக்கு நாயக்கர் வீட்டுக்கும் போக வேண்டும். அங்கு கர்ணபூஷண முகூர்த்தம். அல்லாமலும் அதிகாலையில் திதி செய்வது மிகவும் விசேஷமானது முதலியார்.
சரி சுவாமி, அப்படியே ஆகட்டும். தாங்கள் மாத்திரம் அதிகாலையில் வந்து விடுங்கள். நாங்கள் ஸ்நானம் செய்து விட்டு சாமக்கிரிகைகளோடு தயாராய் இருக்கிறோம். (முதலியார் தன் மனைவியை அழைக்கிறார்) அடீ!
அண்ணியார்: (பெரிய வீட்டுப் பெண்களை அண்ணியார் என்று தான் கூப்பிடுவது) ஏனுங்கோ
முதலியார்: சாமி சொன்னதைக் கேட்டாயா?
அண்ணியார்: ஆமா, நானும் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன்.
முதலியார்: இன்னைக்கு எட்டாம் நாள் ஞாபகமிருக்கட்டும். காலமே நேரமே ஸ்நானம் செய்து விட்டு சாமிக்குக் கொடுக்கும் சாமான்கள் எல்லாம் தாராளமாய் ரெடியாய் வைத்து இருக்க வேண்டும்.
தம்பி: (பக்கத்தில் இதைக்கேட்டுக் கொண்டிருந்த முதலியார் மகன் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கிறவர்) என்னப்பா என்னமோ சொன்னீங்களே, என்னத்திற்கு தாராளமாய், ரெடியாய் இருக்க வேண்டும்?
முதலியார்: உங்க தாத்தாவுக்கு, எட்டாம் நாள் திதி சாமி காலமே எங்கேயோ போகணுமாமா. அதற்காகக் காலையிலேயே எல்லாம் தயாராய் இருக்க வேண்டும் என்று சொன்னேன். காலம் பஞ்சகாலம் சாமிக்குத் தாராளமாய்க் கொடுப்பமே அவர் ஒரு 2, 3 மாதத்துக்கு ஆவது சாப்பிடட்டும்.
தம்பி: அதற்கு இந்த ஆசாமி (அய்யர்) என்னத்துக்கு வந்தாரு? எதற்காக கொடுக்கிறது? யாருக்குப் பஞ்சம்?
முதலியார்: அடே அவர் சாமிடா. அப்படி எல்லாம் சொல்லாதே. மரியாதையாய்ப் பேசு.
தம்பி: என்னப்பா கோவிலிலே இருக்கிறதும் சாமி, இந்தத் தடிராயனும் சாமியா? அப்படின்னாக்க கோயிலிலே இருக்கிற சாமிக்குத்தான் என்ன மரியாதை இருக்கிறது. ஒரு நாயை முதலியாரே, முதலியாரே என்று கூப்பிட்டால் நமக்குக் கோபம் வராதாப்பா? அது போல் இந்தப் பிச்சை எடுக்கிற மனுஷனை சாமிண்ணு கூப்பிட்டால் கோயிலில் இருக்கிற சாமி கோபித்துக் கொள்ளாதா?
முதலியார்: என்னடா, அதிகப்பிரசங்கிப் பயலே இப்படி ஆய்விட்டாயே. இதெல்லாம் எங்கடா படிச்சே? இந்த சுயமரியாதைகாரப் பயல்களோடே சேர்ந்து கெட்டுப் போய் விட்டாப்லே இருக்கிறதே. மட்டு மரியாதை, மனுஷாள் கினுஷாள் ஒண்ணும் இல்லாமேப் போச்சே இனிமேல் இப்படியெல்லாம் பேசினால் பார்த்துக்கோ அப்புறம் என்ன நடக்கும் என்று. 
-விடுதலை,6.5.16

பெண்ணுக்குத் தாடி மீசை முளைக்காதது ஏன்?

நம்ப முடியுமா?
பெண்ணுக்குத் தாடி மீசை
முளைக்காதது ஏன்?
மாண்டவ்விய முனிவரும் அவர் மனைவி டிண்டிகையும், காசி யாத்திரை போகவேண்டித் தனது பக்குவமடைந்த பெண்ணை வேறு யாரிடத்திலும் விட்டு விட்டுப் போக பயந்து கொண்டு எமதர்மராசன் நல்ல உத்தமனென்றும் உலகத் திலுள்ள சகல ஜீவராசிகளுக்கும் நீதி பரிபாலனம் செய்து வரும் தர்மராஜ னென்றும் கருதி அவனிடத்தில் அப் பெண்ணை அடைக்கலமாக வைத்து விட்டுப் போனார்கள்.
அப்படி நம்பி வைத்து விட்டுப் போன பெண் மீது சகல ஜீவராசிகளின் பாப புண்ணியங் களையெல்லாம் நீதி வழுவாது, விசாரித்துத் துஷ்ட நிக்ரக சிஷ்ட பரிபாலனம் செய்யும் அந்தக் காலனே காதல் கொண்டு இரவானவுடன் அப்பெண் மணியிடத்தில் சுகபோக இன்பத்தை அனு பவிப்பதும் விடிய ஒரு நாழிகைக்கெல்லாம் அம்மடவன் னத்தை வாயில் போட்டு விழுங்கி விடுவதுமாகவிருந்தான் ஒரு நாள் குளிக்கச் சென்றவன் தடாகத்தின் கரையில் அவளை உமிழ்ந்து மடத்தில் உட்கரவைத்துவிட்டு குளிக்கப் போய் விட்டான்
தற்செயலாய் அங்கு வந்த அக்கினி பகவான் அவளைக் கண்டு மோகித்து அவளைக் கூடும்படியாகிவிட்டது. எம தர்மன் வரும் நிலையில் அக்கினிபகவானை அவள் விழுங்கி விட்டாள்; எமதர்மராஜனும் அவள் தனித்திருப்பதாகக் கருதி அவளை எடுத்து விழுங்கி விட்டான்.
இப்பொழுது எமன் வயிற்றுக்குள் ஒரு பெண் அவள் வயிற்றுக்குள் அக்னிபகவான் அக்கினி பக வான் பெண்ணின் வயிற்றில் மாட்டிக் கொண்டதால் யாகம் செய்பவர்களும் தேவர்களும் அக்கினி இல்லாமல் தவித்துப் போனார்கள். ஆகையால் தேவர்களெல்லாம் ஒன்று கூடி வாயு பக வானிடத்தில் அக்கினி பகவானைக் கண்டுபிடிக்குமாறு கட்ட ளையிட வாயுபகவான் அட்டத்திக்குப்பாலர்களுக்கு ஒரு விருந்து ஏற்பாடு செய்தான் தேவர்களும் நவக்கிரகாதிபதிகளும் விருந்துக்கு வந்திருந்தனர்.
எமனுக்குப் பக்கத்தில் மட்டும் இரண்டு இலைகள் தனியே போடப்பட்டிருந்தன. எமன் வாயுபகவானை நோக்கி ஏன் இரண்டு இலை பிரபுவே உங்கள் வயிற்றிலிருக்கும் கன்னிகை பசியால் வருந்துவாளாகையால் அவளையும் உம்முடன் வைத்துக் கொண்டு சாப்பிடும் என்று கூறினான். உடனே எமதர்மராஜனும் கன்னிகையைக் கக்கி  விட்டான்.
சரி, இன்னொரு இலைக்கு ஆள் எங்கே என்று கேட்கவும். வாயுதேவன் கன்னிகையை நோக்கி கன்னிகையே அக்கினி பகவான் பசி தாங்காதவராயிற்றே ! அவரையும் உன் பக்கத்தில் வைத்துக்கொண்டு எல்லோரும் சாப்பிடலாமே என்றான். அப் பெண்மணியும் கக்கிவிட்டாள்.
அக்கினிபகவான் பசிக் கொடுமையால் அகோர சுவாலை யுடன் வெளி வந்தபடியால் கோபாக்கினியால் அவள் முகத்திலிருந்த மீசை, தாடியெல்லாம் பொசுங்கிப் போய்விட்டனவாம்! அதிலிருந்துதான். பெண்களுக்கு மீசை, தாடி முளைக்க வில்லையாம். எப்படி?
-விடுதலை,6.5.16

ஞாயிறு, 22 மே, 2016

மகாலட்சுமி குடியிருக்கும் இடமாம்

மகாலட்சுமி குடியிருக்கும் இடமாம்
பிரம்ம தேவன் உபதேசித்த மோகினி கவசம் பவிஷ் யோத்ர புராணத்தில் உள்ளது.
“கரௌ மஹாலயா ரக்ஷேதங்குளிர் பக்த வத்ஸலா
வைஷ்ணவீபாது ஜங்கேச மாயா மேட்ரம் குதம் தாதா”
பொருள்: மஹாலய தொடைகளையும் வத்ஸலா கை விரல்களையும் வைஷ்ணவி ஆடு தசைகளையும், மாயா
ஆண், பெண் குறியையும் மலத்துவாரத்தையும் காத்து ரட்சிக்க வேண்டும்.
“ஆரண்யே ப்ராந்தரே கோரே ஸத்ரு ஸங்கே மஹாஹவே
ஸஸ்த்ர காதே விஷே பீதே ஜபன் ஸித்தி மாவப்னுயாத்”
பொருள்: நடுக்காட்டில் அச்சப்பட்டாலும் திருடர்கள், எதிரிகள் நடுவில் மாட்டிக் கொண்டாலும், ஆயுதத்தால் தாக்கப்படும்போதும் போரிலும், விஷம் குடித்திருந்தாலும் இதைப் பாராயணம் செய்தால் உடனே காப்பாற்றப் படுகிறார்கள்.
“போஜயேத் ப்ராஹ்ணாம் ஸ்சைவ லக்ஷ்மீர்வஸ்தி ஸர்வதா
பதிதம் கவசம் நித்யம் பக்த்யா தவ மயோதிதம்”
பொருள்: பிராமணர்களுக்கு யார் சாப்பாடு போட்டு ஆதரிக்கிறார்களோ அவர்களது இல்லத்தில் மகாலக்ஷ்மி நிரந்தரமாக குடியிருக்கிறாள்.
ஆதாரம்: பொன் பாஸ்கர மார்த்தாண்டன் எழுதிய தேவி தரிசனம் க்ஷிமிமிமி சோட்டானிக்கரை பகவதி அம்மன்.
-போத்தனூர் இரா. உமாபதி
 -விடுதலை,29.1.16

செவ்வாய், 17 மே, 2016

வைதீகப் பிராமணர்களே விதவைகளுக்கு மறுமணம் செய்யுங்கள்!


யாகத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் பிராமணர்கள். அதனா லேயே சமீபத்தில் காஞ்சீபுரத்தில் பசுபதியாகம் 3000 ரூபாய் செலவில் செய்யப்பட்டதைக் கேட்டு சகிக்க முடியாத ஆனந்தம் அடைந்தேன்.
யாகத்தில் கொல்லப்பட்ட அதுவும், சித்திரவதையோடு நசுக்கிப் பிசைந்து கொல்லப்பட்ட 8 ஆடுகளும் சுகமாக மோட்சலோகத்தில்  வாழ்ந்திருக்கும், ஆடுகள் செய்த புண்ணி யமே புண்ணியம்! பிராமணர்களின் கருணையே கருணை! இதற்காக பொருளுதவி செய்தவர்களின் ஈகையே ஈகை! நிற்க, பிராமணர்களை நான் வேண்டிக் கொள்வதென்ன வென்றால் இக்காலத்தில் நமது நாட்டில் விதவைகள் அதிகமாய் விட்டார்கள்.
அவர்களுக்கு மறு விவாகம் செய்ய வேண்டும் என்று சுயமரியாதைச் சங்கத்தார் சொன்னாலும், வைதீகப் பிராமணர்கள் வேதத்திற்கு விரோதம் என்று தடுக்கிறார்கள். விதவைகள் இப்போது உலகத்தில் ஏராளமாக இருப்பதால் அவர்களின் நலத்தின் பொருட்டு கடவுளால் உண்டாக்கப்பட்ட வேதத்தில் விதித்துள்ளபடி பவுண்டரீக யாகத்தைச் செய்து வைப்பார்களானால், விதவைகள் எவ்வளவோ சந்தோஷ மடைவார்கள்.
புண்ணியமும் உண்டு. சாஸ்திரத்திற்கும் சம்மதம். ஆகையால் காருண்ய புருஷர்களாகிய பிராமணோத் தமர்களே! பூதேவர்கள் என்னும் புண்ணியவான்களே! இந்த பவுண்டரீக யாகத்தைச் செய்து உலகம் ஷேமம் அடையும்படிச் செய்யுங்கள்.
இங்கு யாகத்தையும் வேகத்தையும் ஒப்புக்கொள்ளும் விதவைகளை மாத்திரம் குறிப்பிட்டது ஏனென்றால், பார்ப்பனரல்லாதார்களுக்கு யாகத்தில் நம்பிக்கை கிடையாது. இதுவரையில் பார்ப்பனரல்லாதவர்களில் ஒருவராவது யாகத்தைச் செய்ததில்லை. வேதங்களை ஒப்புக் கொள்ளும் பார்ப்பனரல்லாதவர்கள் கூட வேதத்தில் சொல்லப்பட்ட இந்த யாகங்களை ஒப்புக் கொள்வதில்லை. ஆகையால் யாகம் என்னும் மகா புண்ணிய காரியம் மனிதர்களில் உயர்ந்தவர்களாகிய பிராமணர்களுக்குத் தான் உரியது. ஆகவே பவுண்டரீக யாகமும் உரியதாகும்.
இதுபற்றித்தான் அதை நம்பும் விதவைகளின் ஷேமத்தைக் கோரி இந்த யாகத்தைச் செய்யும்படி வைதீக பிராமணர்களை வணக்க மாகக் கேட்டுக் கொள்கிறேன். ஒரு சமயம் இக்காலத்தில் பவுண்டரீக யாகம் ஒப்புக்கொள்ள முடியா தென்றால் விதவைகளுக்கு மறுமணம் செய்யவாவது ஒப்புக் கொள்ள வேண்டும். ஃ
இதன் மூலம் நான் கேட்டதென்னவென்றால் விதவை களுக்கு மறுமணம் செய்யலாம் என்பதையாகிலும் ஒப்புக் கொள்ள வேண்டும் அல்லது பவுண்டரீக யாகத்தையாகிலும் தினந்தோறும் ஆயிரக்கணக்காக நடத்தி வைக்க வேண்டும் என்பதேயாகும். இரண்டில் ஏதாவாதொன்றை செய்யுங்கள்.
(குடிஅரசு - 1929)
-விடுதலை,22.1.16

முஸ்லீம் விதவைகளின் நிலைமை!

(தோழர் அல்ஹாஜ்சுபாகு மொ)

முஸ்லீம்கள் தங்களுக்கு முஹம்மது நபியவர்களைத் தலைவராகக் கொள்ளுகின்றனர். குர்ஆனைத் தங்களுக்கு தெய்வ வழி காட்டியாக நம்புகின்றார்கள்கள். ஆனால் இவர்கள் தங்கள் தலைவரையும், தங்கள் வழிகாட்டியாகிய குர்ஆன் சட்டபுத்தகத்தையும் நிராகரித்துவிட்டு வருகின்றார் கள் என்பதை நிரூபிக்க இவர்கள் தங்கள் பெண்மக்களை அடிமையினும் அடிமைகளாகவும், உயிரற்ற பிராணிகளாகவும் நடத்திவரும் ஒரு செயலே போதுமானதாகும். முஸ்லீம் விதவைகளின் நிலமையைப்பற்றியாகும்.
முஸ்லீம்களில் இந்த உண்மையை அறியாதார் எவருமில்லை. இவர்கள் தங்களுக்குத் தலைவராகக் கொண்ட நபி முகமது நபியவர்கள் காலத்தில் அராபிய விதவைகளின் இல்லை பொதுவாக பெண்களின் நிலைமை எப்படியிருந்தது? என்று இவர்கள் தெரியாதவர்கள் போல் நடந்து, கொள்ளு கின்றார்கள்.
1350 வருஷங்களுக்கு முன், நபியவர்கள் பிறந்த காலத்தில் அராபியர்கள் தங்களுக்குப் பெண் பிள்ளைகள் பிறப்பதை அபசகுணமாகவும், குலத்துக்கு பங்கத்தை விளைவிக்க பிறப்பதாகவும் கருதிவந்தனர். இதற்காகப் பிறந்த பெண் மக்களை யெல்லாம் குழிதோண்டி அதில் உயிருடன் போட்டு மூடிவிடுவார்கள்.
இதிலிரு ந்து மட்டும் பெண்களின் அந்தஸ்து எப்படிப் பட்டது? என்பதை விளக்காமலே உணரும் சக்தியுள்ளவர்கள் விளங்கிக் கொள்ளுவார்கள். ஏனையவர்கள் நபியவர்களின் சரித்திரத்தைப்படித்து விளங்கிக்கொள்ளட்டும். இப்படிப்பட்ட அந்தஸ்து படைத்த பெண்களில் விதவைகளுக்கு எவ்வித அந்தஸ்தளிக்கப்பட்டிருந்திருக்கும் என்பதையும் விளக்க வேண்டியது அவசியமில்லை.
இந்த விதவைகளின் அந்தஸ்தை உயர்த்தும் பொருட்டு பகுத்தறிவே உருவாக ஜனித்த நபிகளின் நாயகம்தான்  25 வயதுடைய பரிசுத்த யௌவன புருஷராயிருத்து கொண்டு, முன்னரே பலபுருஷர்களுக்கு வாழ்க்கைப் பட்டுப் பிள்ளைகள் பெற்று புருஷர்களை இழந்து  விதவையாக வாழ்ந்து வந்த தாய் கதிஜாஅம்மாள் என்னும் 40 வயதுடைய விதவையைக் காதல் மணமுறையில் தனக்கு முதல் துணைவியாகக் கொண்டார்கள்.
ஆனால் இந்த நபியவர்களின் காலடியைப் பின் பற்றி நடந்து கொள்ளுவதாகப் பெருமை பேசிக்கொள்ளும், முஸ்லீம்கள் என்போர்கள் வீட்டு இளம்விதவைகளை மறு விவாகம் செய்து, கொள்ள நடைமுறையில் அனுமதிக்காது அடிமைப்படுத்தி அனாச்சார வாழ்வு வாழும்படி செய்வதுடன் நில்லாது.
விதவா விவாகம் செய்து கொள்ளுபவர்களை இகழவும் செய்கிறர்கள் என்றால், இவர்களுக்கு அந்தோ இதை நிரூபிக்க எங்கள் குடும்பத்தினர் இது விஷயமாய் நடந்து கொண்ட விதத்தை இங்கு உண்மையை விளக்கும் முகத்தான் விவரிக்கின்றேன்.
எனது ஒரு சுற்றத்தாரின் மகள் ஒரு இளம் விதவையாக இருந்து வந்தார். இந்த விதவையை மறுமணம் செய்து கொள்ள விடாது எனது  சிற்றப்பனார் வைத்துக் காத்து வந்தார். இவர் மத பக்தி நிறைந்தவர். தன் நெற்றியில் கரும்புள்ளி விழும் முறையில் முஹமது நபியவர்கள் சொன்னபடி நடந்து கொள்ளுவகாக உலகம் போற்றுவதற்காகத் தொழுது வந்தார். ஜபமாலை உருட்டுபவர் வேதமோதுபவர்.
ஆனால் தன் தலைவரைப் பின் பற்றாமல் தன் இளங் குமாரியை இயற்கைக்கு முரணாக விதவையானவுடன் கைதியாக்கி வைத்திருந்தார். இதை குடும்ப கௌரவத்தை உயர்த்தும் குணமாகக் கருதப் பட்டு வந்தது. எங்கள் குடும்பத்தில் விதவா விவாகம் கிடையாது, என்று பெருமை பாராட்டி வந்தார்கள். இவருடைய மற்றோர் மணஞ்செய்த குமாரி இறந்து விட்டார்.
இந்தம்மாளின் கணவர் உலகாநுபவமும் பகுத்தறிவும் கொண்டவர். கைதியாக்கப்பட்டுள்ள தன் கொழுந்தியாளான விதவையை மணந்துகொள்ள விரும்பினார். பொங்கிற்று கோபம் எங்கள் உறவினருக்கு குடும்ப கவுரவத்துக்கு இழிவு படுத்தும் எண்ணம் என்று பிதற்றினார்.
ஆனால் பகுத்தறிவு பெற்ற இவருடைய ஏக புத்திரன் தன் விதவை சகோதரியை கைதிக் கூடத்திலிருந்து அப்புறப்படுத்தி மனைவியையிழந்த தன் மச்சானுக்கு மனைவியாக்கி வைத்தார். இது கேட்டு அடங்காக் கோபங்கொண்ட என் உறவினார் சீறிக் கொண்டு தான் வெகு பெருமையுடனும் செல்வத்துடனும் வளர்த்து வந்த ஏக புத்திரனை வீட்டை விட்டு அப்புறப்படுத்தி விட்டார்.
இதைப்போல் பல உதாரணங்களைக் காட்டுவேன். எவ் வளவு தான் பர்தாவுக்குள் அடைத்துவைத்தாலும் இயற்கை உணர்ச்சியை சாந்தி செய்து கொள்ள இளம் வித வைகளுக்கு சந்தர்ப்பம் கிடைக்காமலில்லை. ஹிந்து விதவைகளின் நடவடிக்கைகள் பகிரங்கமாய் விட்டாலும் கோஷாவுக்குள்ள விதவைகளின் நடவடிக்கைகள் அதிக பஹிரங்கமாவதில்லை.
இதுதான் வித்தியாசம் இருவர்களும் தங்கள் இயற்கைக் கிளர்ச்சியை சாந்தி செய்து கொண்டேதான் வருகின்றர்கள் பெற்றோர்களும் மற்றோர்களும் அறிந்தும் அறியாதவர்களைப் போல் நடித்துக் கொள்ளுகின்றார்கள். வேறு விதியில்லை.
முடிவாக முஸ்லிம் விதவைகளின் நிலைமை எவ்விதத் திலும் போற்றத் தக்க தல்ல என்பதை விளக்கி விட்டேன். முஸ்லிம்கள் பெருமை பாராட்டிக்கொள்ளுவதெல்லாம் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளுவதுதான். ஹிந் துக்கள் தங்கள் குற்றங்குறைகளை பஹிரங்மகாக வெளியிட்டு சீர் செய்து கொள்ளுகிறார்கள்.
முஸ்லிம்கள் பிளவையை மூடி மூடி வைத்துக்கொண்டு எங்கள் நபி, எங்கள் மதம், எங்கள் இஸ்லாம் பெண்களுக்கு வேண்டிய உரிமைகள் அனைத்தையும் அளித்து விட்டது. என்ற பெருமை யென்னும் முலாம் பூசிக்கொண்டே வருகிறார்கள்.
(புரட்சி - 1933)
-விடுதலை,22.1.16

ஆரியர் கற்பின் இலட்சணம்! (சுந்தராம்பாள்)


உலகத்தில் ஆரியர் கற்புக்கு உதாரணமாய் எடுத்து காட்டுவது அருந்ததியாகும். இந்தம்மாள் ஆரிய குருவான வசிஷ்டன் மனைவி, வசிஷ்டன் ஆரிய மன்னர்களுக்கு (அதாவது விஷ்னு அரசராக அவதாரமெடுத்த மன்னர்களுக்கு) குரு இப்படிப்பட்ட குருவின் மனைவி மகா அருந்ததி பதிவிரதையாம்.
இந்தம்மாள் தன் நாயகனாகிய வசிஷ்டனையே சந்தேகித்து விட்டாள். அதன் காரணமாகவே கணவனால் கருநிற நோய் உண்டாகும்படி சபிக்கப்பட்டு நட்சத்திர மண்டலத்தில் ஒரு நட்சத்திரமாயிருக்கும்படி ஆகிவிட்டாள்.
பதிவிரதைக்கு லட்சணம் தன் உத்தம புருஷனை சந்தேகிப் பது தான் போலும்! பதிவிரதைக்கு லட்சணம் யாராவது சபித்தால் அந்த சாபத்துக்கு ஆளாவது தான் போலும்! . அய்யோ கற்பே ஆரியரிடம் சிக்கிக்கொண்டு என்ன பாடுபடுகிறாய் பாவம்!!
இப்படிப்பட்ட பதிவிரதையை சந்தேகித்து சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய மூன்று யோக்கியர்களும் சென்று சிறீகளின் மனோபாவம் எப்படிப்பட்டது என்று கேட்டார்களாம். வாசகர் களே! எந்த ஸ்திரீகளின் மனோபாவத்தை என்றா கேட்கிறீர்கள்?
ஆரிய ஸ்திரீகள் மனோபாவத்தைத்தான். ஏனென்றால் மற்ற ஸ்திரீகள் தேவலோகத்தில் இருக்க நியாயமில்லையல்லவா? ஆதலால் ஆரிய ஸ்திரீகளின் மனோபாவம் என்ன? அவர் களுடைய கற்பு என்பது எப்படிப்பட்டது என்று கேட்டார்களாம்.
அதற்கு அருந்ததி மஹா பதிவிரதை-உலகுக்கே பதிவிரதைத் தன்மையைக் காட்ட உருவானவள் ஆகிய இந்த வசிஷ்டர் மனைவி அருந்ததி என்ன சொன்னாள் தெரியுமா உங்களுக்கு உண்மையைச் சொன்னாள் எப்படிப்பட்ட உண்மை என்றா கேட்கிறீர்கள்? பச்சை உண்மை அதாவது உண்மையான உண்மையைச் சொன்னாள்,
என்ன என்று? மறைவான இடமும் ஆண்களும் இல்லாவிட்டால் ஸ்திரீகள் பதிவிரதைகள் தான் என்று ஒரு தேங்காயை ஒரே அடியில் இரண்டு மூடி உடைத்ததுபோல பட்டென்று பதில் சொன்னாள். .
ஆகவே இதிலிருந்து ஆரியர்கள் கற்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இது பிரிவு கவுன்சில் தீர்ப்பல்லவா? இதற்குமேல் அப்பீல் உண்டா? இந்தம்மாள் இப்படிச் சொன்னது மாத்திரமல்லாமல் இதற்கு ஒரு பரீட்சையும் செய்து காட்டினாளாம். என்ன பரீட்சை என்றா கேட்கிறீர்கள்?
அதாவது ஸ்திரீகள் மறைவிடமும் ஆண்களும் இருந்தால் போதும் கற்பை இழந்து விடுவார்கள் என்று சொன்ன சொல் உண்மையாய் சத்தியமாய் இருந்தால் இந்தக்குடம் நீர் நிறைய வேண்டும் என்று ஒரு வெறுங்குடத்தை வைத்ததும் அது நீர் நிரம்பி வழிந்தோடிற்றாம்.  என்ன இந்த உத்தமாமி பத்தினியின் பெருமை? இது சிவமகாபுராணத்தில் உள்ள உண்மை.
இதற்கு மற்றொரு மேலொப்பம் அதாவது இண்டார் சுமெண்ட்டு என்னவென்றால் திரவுபதையம்மாள் அதாவது அய்ந்து மகாபதிவிரதைகளில் ஒருத்தியாகிய அய்ந்து புருஷர்களுக்கு நாயகியாகியான ரைட்ஆன்ரபிள் திரவுபதை யம்மாள் பழம் பொருந்திய சருக்கத்தில் என்ன சொன்னாள் என்றால் ஆடவர் இலாமையின் அல்லால் நம்புவதற்கு உள்ளதே என்றவள் வசிஷ்டன் நல்லறமனைவியே அனையாள்.
அதாவது உலகத்தில் ஆண்கள் இல்லாவிட்டால் பெண்கள் பதிவிரதைகள்தான், ஆண்கள் இருந்தால் பெண்கள் பதிவிர தைகள் அல்ல என்று டாண்னு அடித்துதுவிட்டாள்;
அருந்ததியம்மாளுக்காவது மறைவிடம் வேண்டியதாயிருந்தது. நம்ம ரைட்டானரபிள் அதாவது மஹா பதிவிரதை திரவுபதியம்மாளுக்கு மறைவிடம் கூட தேவை இல்லாமல் போய் விட்டது. ஏனென்றால் அய்ந்து பேருடன் பழகுபவனுக்கு சகா, மறைவிடம் எப்படி கிடைக்கும்? ஆண்களைக் கண்ணில் கண்டாலே போதும் மறைவிடம் தேடிக் கொண்டு அலைய வேண்டியதில்லை என்று ஆகிவிட்டது.
ஆகவே ஆரியர்கள் கற்புக்கு இதைவிட என்ன ஆதாரம் வேண்டும் என்று கேட்கின்றேன். ஒரு சமயம் எவிடன்ஸ் ஆகட்டுப்படி அதாவது சாட்சி சட்டப்படி இது அனுமதிக்கப்படாது என்று சொன்னாலும் சொல்லுவார்கள் நமது ஆரியர்கள்.
ஏனென்றால் ஆரியர் என்றாலே சட்ட வல்லுனர்கள் அல்லவா? அவர்களுக்கு ஏதாவது ஒரு காரிதம் விரோதமாய் விட்டால் உடனே சட்டம் பேச ஆரம்பிப்பார்கள். அந்தச் சட்டப்படி புராணங்களில் உள்ளதை ஒரு அத்தார்ட்டியாய் எடுக்கக்கூடாது. ஏனென்றால் அவைகளுக்கு அந்தரார்த்தம் உண்டு மற்றும் அது சந்தர்ப்பம் வேறு என்றெல்லாம் சொல்லுவார்கள். ஆதலால் அதற்கு வேறு ஒரு சட்டத்தையும் கவர்ன்மெண்டு ஜி.ஓவையுமே காட்டலாம் என்று நினைக்கிறேன்.
அதாவது மனுதர்ம சாஸ்திரம் மனுதர்ம சாஸ்திரம்தானே இந்துக்களுக்கு சட்டம், மனுதர்ம சாஸ்திரம் என்பது வேதத்தை பிழிந்து எடுத்த சத்து அல்லவா? ஆதலால் அதை எடுத்துக் கொள்ளுவோம். மனுப்பிரஜாபதி அவர்கள் ஸ்திரீகளைப் பற்றி என்ன சொல்லுகிறார் என்றால் மாதர்கள் கற்பு அற்றவர்கள் நிலை யற்றவர்கள், விஸ்வா சமற்றவர்கள் ஆதலால் அவர்கள் கணவர் களால் காக்கப்பட வேண்டும். காக்கப்படிலும் விரோதி என்பார்கள்.
மாதர்களுக்கு இந்த சுபாவம் சிருஷ்டிக்கும்போதே பிரம்மாவாலே கற்பிக்கப்பட்டு விட்டதால் புருஷர்கள் அவர் களை ஜாக்கிரதையாய் காவல் காக்க வேண்டும். (மனு அத்தி 9 சுலோ 15)
மாதர்களுக்கு மனசு கதி கிடையாது பொய்யைப்போல் அபாரசுத்தமானவர்கள் (அத்தி 9 சு.17)
மாதர்கள் விபசாரதோஷமுள்ளவர்களானதினால் பிள்ளை கள் அவர்களுக்கு பிராயச்சித்தம் செய்துவிட வேண்டும். (அ.9 சு.19.20.21)
மாதர்களுக்கு மன சுத்தம் கிடையாது அவர்கள் அபரி சித்தர்கள் (அ.19, சு.18)
மாதர்கள் ஆண்கள் விஷயத்தில் அழகு வயது எதையும் கவனிக்காமலே ஆணாயிருந்தால் போதும் என்று புணருவார்கள். (அ.9, சு.14)
அண்ணன் தம்பி இருவருக்கும் சந்ததிநசித்துப் போகிறதாய் இருந்தால் பெரிய«£ர்கள் அனுமதி பெற்று மற்றொருவனைப் புணரலாம். (அ.9. சு.58)
பிள்ளை இல்லாமல் குடும்பம் நசித்துப் போவதாய் இருந்தால் 7 தலைமுறைக்குட்பட்ட பங்காளிகளோடு புணர்ந்து பிள்ளை பெறலாம் (அ.9. சு.5)
விதவைகளிடத்தில் பெரியோர்கள் அனுமதிபெற்று புணரலாம் அந்தப் படிபுணரப்போகிறவன் தன் தேகமெல்லாம் நெய்யைப் பூசிக்கொண்டு புணரவேண்டும் மற்றொருவன் பிள்ளையை உண்டு பண்ணலாம். ஆனால் அந்தபிள்ளை புருஷனைத்தான் சேரும்.
முன்னதாகவே பெண்ணின் கணவனிடம் ஏற்பாடு செய்து கொண்டு புணர்ந்து பிள்ளையுண்டாக்கினால் அந்தப்பிள்ளை உண்டாகினவனைச் சேரும் (அ.9. சு,52) என்று இந்தப்படியெல்லாம் மனுதர்ம சாஸ்திரம் சொல்லுகிறது. இதை அனுசரித்தே சர்வ புராணங்களும் முறையிடுகின்றன. பெண் கடவுள் களிடத்திலும் இந்த குணமே இருந்து வந்திருக்கின்றது.ஆகவே ஆரியர் கற்புக்கு இனி என்ன அத்தாட்சி வேண்டும் என்று கேட்கிறீர்கள்? (குடிஅரசு - 1936)
-விடுதலை,8.1.16

திங்கள், 16 மே, 2016

எதார்த்தவாதியும் - கிறிஸ்தவ மத போதகரும் பேசியது: ஓர் சம்பாஷணை

சனி, 11 அக்டோபர் 2014 16:03
எதா : அய்யா தங்கள் வேதம் என்று சொல்லப்படும் பைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது?
போதகர் : பழைய காலத்திலே தேவ ஆவியால் ஏவப்பட்ட பல தீர்க்க தரிசிகளைக் கொண்டும் கிறிஸ்துவின் சீடர்களைக் கொண்டும் பிந்திய அப்போஸ்தலரைக் கொண்டும் எழுதப்பட்டது.
எதா : சரி தீர்க்கதரிசிகள் என்பவர் சிலவிடங்களில் தெய்வத்திற்கு பயப்படாதவர்கள் தானே?
போதகர் : இல்லை சார் எப்பொழுதும் தெய்வத்துக்கு பயப்படுகிறவர்கள்தான்.
எதா : நல்லது அப்படியானால் ஆபிரகாம் ஒரு தீர்க்கதரிசிதானே?
போதகர் : ஆம். வாஸ்தவம்தான். ஆனால், அவனை(ரை) சில ஆராய்சி யாளர் தன் தகப்பனின் மறு மனையாட்டியின் மகளைக் கல்யாணம் செய்ததாகக் குறை கூறுவார்கள்
எதா : அதைப்பற்றி இப்பொழுது கவலை இல்லை. மானிடன் இயற்கையில் சகோதரியைக் கல்யாணம் செய்தேதான் உற்பத்தி ஆகி இருக்கலாம்.
போதகர் : அப்படியானால் ஆபிரகாமைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியதென்ன?
எதா : உண்மையாக அவன் ஒரு தீர்க்கதரிசிதானே.
போதகர் : ஆம், வாஸ்தவம்தான். ஆதியாகமம் 2ஆம் அதிகாரம் 7ஆம் வசனத்தில் (கடவுளே) தேவனே அவன் ஒரு  தீர்க்கதரிசி என்பதாய் சொல்லியிருக்கிறார்
எதா : அந்த ஆபிரகாமே தானே ஆதியாகமம் 21ஆம் அதிகாரம் 11ஆம் வசனத்தில் இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும் பொருள்படப் பேசியதை தாங்கள் வாசித்ததுண்டா?
போதகர் : அ. ஆ.. ஆம் வாசித்ததுண்டு ஆனால், அவன் மனைவி  சாரா அழகுள்ளவள். அதற்காகப் பயந்து சொல்லியதுண்டு.
எதா : மனைவி அழகானால் மனிதர்கள் மனிதர்களுக்குப் பயந்து தெய்வத்திற்குப் பயப்பட வேண்டியதில்லையா?
போதகர் : சார் அது பழைய ஏற்பாட்டில் உள்ளது. புதிய ஏற்பாட்டில் உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள்.
எதா : சரி அய்யா நான் படிக்கிறேன். அப்படிப்பட்டவர் களாலேதானே உங்கள் பைபிள் எழுதப்பட்டது.
போதகர்: தெய்வமில்லாத காலமிது (என்பதாய் முணுமுணுத்துக்கொண்டு  நழுவி விடுகிறார்.)
எதா: பைபிள் காலத்தில் தெய்வப் பயமில்லாத இடமிருந்து இப்பொழுது காலம்  வந்து விட்டது  என்பது உங்கள் அனுபவம். ஆனால் எங்களுக்குத் தெய்வ கவலையில்லாத (காரியமே) வாழ்க்கையே வேண்டும்  என்பது எங்கள் துணிபு.
குடிஅரசு - கற்பனை உரையாடல் - 05.04.1931
-விடுதலை,17.12.10

வெள்ளி, 13 மே, 2016

ஆதி சங்கராச்சாரி அவதார ரகசியம்

ஆதி சங்கராச்சாரி ஏன் இவ்வுலகில் அவதரித்தார்! அவர் அவதாரித்தன் உள் ளோக்கம் என்ன? அந்த ரகசியத்தை, பரம சிவனே காதோடு காதாக தனது ஓய்ப் (மனைவி) பார்வதிதேவியிடம் கீழ்க்கண்ட வாறு கிசுகிசுக்கின்றார்! நாமும் ஒட்டுக் கேட்போம்.
கலியுகத்திலுண்டாகும் பக்தர்களுடைய சரித்திரத்தைச் சுருக்கமாகச் சொல்லுகின் றேன். பார்வதியே! கேட்பாயாக! முயற்சியுடன் மறைத்து வைத்துக் கொள்ளத்தக்கது; ஒருவர்க்குஞ் சொல்லத் தக்கது அன்று அம் பிகையே!
பாவ கர்மத்தில் இரமிப்பவர்களும், கருமங்கள் அனைத்திலும் பிரியமற்றவர்களும், வருணாசிரமக் கருமங்களில் பிறழ்ந்தவர்களும், தருமத்தில் மாறி ஒழுகுபவர்களுமான கலியில் மூழ்கிய அந்த சனங்களைப் பார்த்து ஆக்குரோசத்தினாற் கலியுகத்தில், எனது அம்சத்தாலுண்டாகுபவரும் தபோதனருமாகிய விப்பிரரை (பார்ப்பனரை)க் கேரள தேசத்தில் உண்டாக்கவேன். மகேசுவரியே! அவருடைய சரிதத்தையே சொல்வேன், கேட்பாயாக!
இக்கலியுகத்தில் இரண்டாயிரம் வருஷங்களுக்குப் பின்... சப்தார்த்த ஞான நிபுணர்கள், தர்க்கத்தில் கூரிய புத்தியுடைய சைனர்கள், அறிவுடைய புத்தர்கள் மீமாம்சையில் இரமிப்பவர்கள்; வேதபோதக வாக்கியங்களுக்குமாறு பாடாகப் பிரீதி உண்டாக்குபவர்கள்; பிரத்தியட்ச விவாதத்தில் குசலர்கள், மிசிரர்கள்;
பெரிய சாத்திரங்களால் அத்வைதத்தைக் கெடுப்பவர்கள்; கருமமே மேலானது, பலதாயகன் சிவன் அல்லன் என்னும் யுக்தி கருதிய வாக்கியங்கொண்டு போதிப்பவர்களாகிய இவர்களால், குரு ஆசாரங்கள் கெடுக்கப்பட்டு, அவ்வாறே ஜனங்களுக்கும் கர்மமும் பாரமாகி விடும்.
அப்போது அவர்களைக் கரையேற்றுதற் பொருட்டு ஈஸ்வர அம்சத்தை உண்டாக்குவேன். மகாதேவியே! கேரள தேசத்தில் சசலம் என்னும் கிராமத்தில் எனது அம்சமாகிய அந்தணமாதின் வயிற்றில் சங்கரர் என்னும் திருநாமமுடைய அந்தண சிரேஷ்டர் பிறப்பார்
(சங்கரதிக்கு விஜயகாவிய வசனம் நூல் பக்.2)
எப்படியிருக்குக் கதை?
-விடுதலை ஞா.ம.7.2.15

புதன், 11 மே, 2016

பார்ப்பன அடிமை ராஜராஜன் உங்கள் ஜாதியா?


மின்சாரம்
தமிழ் ‘இந்து’ நாளேட்டில் (4.11.2015) ‘சாதிச் சூழலில் காவிரிப் படுகை’ எனும் தலைப்பில் எம். மணிகண்டன் என்பவர் எழுதிய கட்டுரை ஒன்று வெளியாகியுள் ளது. அதன் ஒரு பகுதி இதோ:
நிமிடக் கட்டுரை: 
சாதிச் சுழலில் காவிரிப் படுகை!
ஆத்துல ஒழுங்கா தண்ணி வராட்டியும் ஒரு குரூப் கையில காசு பொழங்கத்தான் செய்யுது மாப்ள. தெக்கலங்கமே திக்குமுக் காடுதுடா, ஒரு நெல்லு மணி விழுந்தாக்கூட எடுக்க முடியாத அளவுக்கு மொய்க் குறானுவ. சில தினங்களுக்கு முன்பு தஞ்சையிலிருந்து அழைத்த என்னுடைய நண்பன் செல்வம் தீபாவளிக் கூட்டம் பற்றி சொன்ன வார்த்தைகள் இவை.
தஞ்சை பெரிய கோயிலைப் பார்க்க வந்த வெளிநாட்டினர் சிலர், நகரின் சுவர் ஒன்றில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட் டியைப் பார்த்து, ஏதாவது கலை நிகழ்ச்சி நடக்கிறதா? என்று அவனிடம் கேட்டார் களாம். நகர் விழாக்கோலம் பூண்டிருப்பதில் வெளிநாட்டுக்காரர்களுக்கு அத்தனை மகிழ்ச்சி. ஆனால், அந்தச் சுவரொட்டியில் எழுதப்பட்டிருந்ததை மட்டும் அவர்களால் வாசிக்க முடிந்திருந்தால் வெள்ளைக்காரர் களின் முகம் வெளிறியிருக்கும்!
ஆமாம், அத்தனை சுவரொட்டிகளிலும் சாதி வாடை. தஞ்சையில் ஒரு சுவர்கூட சுவரொட்டியின் கபளீகரத்திலிருந்து தப்ப வில்லை. எங்கும் எதிலும் சுவரொட்டிகள். இலக்கியம், கட்டிடவியல், சமயம் வளர்த்த பூமியில் சாதிய துதிகளைத் தாங்கிய அந்தச் சுவரொட்டிகளைப் பார்க்கும் யாருக்கும் தஞ்சாவூர் சாதிச் சண்டை மைதானமாகி விட்டதோ என்றுதான் எண்ணத் தோன்றும். ஜீரணிக்க முடியாத மாற்றம் இது!
ஓர் ஊர் இப்படிக்கூட உருமாறுமா என்று ஆயாசமாக இருக்கிறது. ராஜ ராஜனைச் சொந்தம் கொண்டாடி மட்டுமே 5 சாதிகளின் ஆட்கள், சுவரொட்டிக் களே பரங்களை நடத்தியிருந்தனர். இதனுடன் மருதுபாண்டியர்கள், முத்துராமலிங்கத் தேவரைப் போற்றும் சுவரொட்டிகளும் சேர்ந்துகொண்டன.
அடக்கி ஆண்ட கூட்டம், அடங்கிப் போக மாட்டோம். பாசமுன்னா உயிரக் கொடுப்போம், பகைன்னா உயிர எடுப்போம்... இன்னும் இத்யாதி இத்யாதி. தமிழ்த் திரைப்படங் களில் பஞ்ச் டயலாக் எழுதுபவர்களை மிஞ்சிவிட்டார்கள், இந்தச் சுவரொட்டிச் சிந்தனையாளர்கள்!
இவ்வாறு கூறுகிறது தமிழ் ‘இந்து’
ராஜராஜனோ அவனது முன்னோர், பின்னோர் எனப்படும் சோழ வேந்தர்களோ நாட்டுக்குச் செய்த நல்ல காரியங்கள் என்னென்னவாம்?
அவன் எங்கள் மூதாதை, எங்கள் உறவினர் எங்கள் ஜாதிக்காரர் என்று உரிமை கொண்டாடும் தோழர்களின் சிந்தனைக்கு வைக்கப்பட வேண்டிய தகவல்கள் ஏராளம் உண்டு.
பார்ப்பனர்களைக் கட்டியழுது அவர் களின் குண்டிக் கொழுக்கக் கொட்டிக் கொடுத்தவன் அல்லாமல் அவனைப் பராக்குப் பாட என்னதான் இருக்கிறது?
இன்றைக்குச் சொந்தம் கொண்டாடு கிறார்களே - அந்த ஜாதிக்காரர்கள் உள் ளிட்ட தமிழர்களின் கல்விக் கண்களைத் திறந்தானா? கல்விக் கூடங்களை கட்டிக் கொடுத்தானா?
மானியங்களை யாருக்கு அள்ளிக் கொடுத்தான்? இறையிலி மங்கலங்கள் என்ற பெயரால் நிலபுலன்கள் யார் வயிற்றில் அறுத்துக் கட்டப்பட்டன?
மங்கலம் மங்கலம் என்று முடிகின்ற பெயர் உள்ள கிராமங்கள் அத்தனையும் பார்ப்பனர்களுக்குத் தானங்களாகத் தாரை வார்க்கபட்டவை என்ற வரலாற்றினை அவர்கள் அறிவார்களா?
அப்படி வழங்கப்பட்ட நிலங்களுக்கு வரி விலக்கு (இறையிலிமங்கலங்கள்) அளிக்கப்பட்டதுபற்றி யோசித்துப் பார்த்த துண்டா?
மூன்று வேதங்களை படித்திருந்தால் திரிவேதி என்றும், நான்கு வேதங்களைக் கற்றிருந்தால் சதுர்வேதி என்றும் பட்டங் களைக் கொடுத்துப் பார்ப்பனர்களுக்கு நிலங்களை வாரி வழங்கியது பற்றி எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா?
அருண்மொழி தேவன் என்ற அருந்தமிழ்ப் பெயரை ராஜராஜன் என்று சமஸ்கிருதத்தில் தன் பெயரை மாற்றிக் கொண்டவனைப் பெருமைக்குரிய எங்கள் ஜாதியைச் சேர்ந்தவன் என்று சொல்லிக் கொள்வது எந்த வகையில் சரியானது?
தமிழ்நாட்டில் திராவிடர் இயக்கம் தோன்றி மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது; அதன் விளைவுதான் நாராயணசாமியாக இருந்தவர் தன் பெயரை நெடுஞ்செழியன் என்று தமிழில் மாற்றிக் கொண்டார்.
இராமையன் என்ற அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர் தன் பெயரை அன்பழகன் என்று மாற்றிக் கொண்டார்; சோமசுந்தரம் மதியழகன் ஆனதும், கோதண்டபாணி தில்லை வில்லாளன் ஆனதும் - தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும் ஊட்டிய தன்மான உணர்ச்சி, தமிழ் உணர்ச்சியாலும் தானே! கோயிலைக் கட்டி அங்குப் பார்ப்பனர்களை அர்ச்சகர் களாகத் திணித்தது யார்? வழிபாட்டு மொழி யான தமிழை வெளியில் தள்ளி சமஸ் கிருதத்தைக் குடியேற வைத்தவன் யார்?
ஏதோ பொத்தாம் பொதுவில் ராஜராஜ சோழனையோ, சோழர் குல ராஜ மார்த் தாண்டர்களையோ குறை பாடித் தீர்க்க வில்லை.
எதைச் சொன்னாலும் எதை எழுதி னாலும் ஆதாரத்துடன் நிலை நாட்டு என்று சொன்ன பகுத்தறிவுப் பகலவனின் மாணவர்களாகிய நாங்கள் அதே வழியைப் பின்பற்றக் கூடியவர்களே - இதோ சில எடுத்துக்காட்டுகள்: ராஜ ராஜனை சொந்தம் கொண்டாடும் அருமைத் தோழர்களுக்கு ஓரிரண்டைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன் ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் ஈசான பண்டிதர், சர்வ சிவ பண்டிதர், பவன விசாரன் ஆகியோர் ராஜக் குருக்களாக வந்திருந்தனர்.
இவர்களால்தான் பெண்களைக் கோயில் களில் பொட்டுக் கட்டிவிடும் தேவதாசி முறை கொண்டு வரப்பட்டது.
நான்மறை தெரிந்த பார்ப்பனரை ஆதரித்தவன் முதலாம் ராஜ ராஜசோழன். மனு நெறி நின்று அசுவமேதயாகஞ் செய்தவன் முதலாம் ராஜாதி ராஜன்; மனுவாதி பெருக என்ற பெருமைக்குரியவன் முதலாம் குலோத்துங்க சோழன் மனுவினை வளர்த் தவன் கோபரகேசரி என்று குறிக்கப்பட்ட வன் அதிவீரராஜேந்திர சோழன்; மனு நெறி நின்று அஸ்வமேத யாகம் செய்தவன் என்று குறிப்பிடப்பட்டவன் முதலாம் ராஜாதி ராஜன்.
மன்னுயிர் தழைக்க மனுவாதி விளங்க என்று குறிக்கப்பட்டான் - இரண்டாம் குலோத்துங்க சோழன்; மனுநீதி வளர்த்து நின்றவன் விக்கிரம சோழன், நான் மறை செயல் வாய்ப்ப மனுநெறி தழைத்தோங்க ஆட்சி செய்தவன் மூன்றாம் குலோத் துங்கன் என்று சோழ வேந்தர்கள்பற்றி கல்வெட்டுகள், செப்பேடுகள் கூறுகின்றன.
அவற்றில் எல்லாம் மனு நீதியோடு இணைந்த சோழ வேந்தர்கள் பாராட்டப்படுகின்றனர் என்றால் இந்தக் கேவலத்தைத் தமிழ் மொழியில் சொன்னால் தமிழுக்குக் கூட கேவலமாகும். இந்த நிலையில் இந்த சோழர்கள் எங்கள் ஜாதி என்று மார்தட்டும் மனிதர்களை(?) என்னென்று சொல்லுவது!
மதுராந்தகச் சோழன் குறித்து கரந்தைச் செப்பேடு பகர்வது என்ன? “கோயிலுக்குத் தானம் பிராமணர்களுக்குச் சலுகைகள் அளித்தல் முதலான நடைமுறைகள் தடை யில்லாமல் நடை பெற்றன;
சமூக உற்பத்தி அனைத்தும் கோயிலுக்கும் பிராமணர் களுக்கும், அரசர்களுக்கும் வரியாகவும், நிலமாகவும் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டது. எனினும் கோயிலிலிருந்து உழைப்பைத் தவிர, வேறு எவ்விதச் சலுகைகளையும் பெறாமல் அடிமைகளாக தள்ளியே வைக்கப்பட்டிருந்தனர்.
அடிமைகள், கட்டாய உடலுழைப்பு, கோயிலுக்கான இலவச உடலுழைப்பு என்ற முறைகளில் மனித உழைப்பு சுரண்டப் பட்டது. இதனால் பெரிய ஏரிகளையும், குளங்களையும் வாய்க்கால்களையும் பிர மாண்ட கோயில்களையும், ஆடம்பரமான கோட்டைகளையும் சோழ அரசனால் உருவாக்க முடிந்தது. ஊதியமில்லாமல் உணவு மட்டும் அளித்து இலவச உழைப்பின் மூலம் இவை செய்து முடிக்கப்பட்டன.
(இலவச உணவுகூட ஏன் தெரியுமா? அவர்கள் உழைக்க வேண்டுமே - அந்த சுயநலத்துக்காகதான் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்)
சோழர் காலத்தில் குடி மக்களின் மீது நானூறுக்கு மேற்பட்ட வரிகள் விதிக்கப்பட்டன.
.....
ஜாதிகள் வலங்கை, இடங்கை என்று பிரிந்தது சோழர்கள் ஆட்சிக் காலத்தில் தான்; ராஜராஜன் காலத்துக் கல்வெட்டுகள் இதனை விவரிக்கின்றன. இவ்விரு பிரிவின ரிடையே கலகங்கள் நடந்திருக்கின்றன. கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக் காலத்திலும் கூட இக்கலவரங்கள் நீடித்துள்ளன.  சென்னை நகர வீதிகளில் ரத்த வெள்ளம் ஓடியது என்று பிரபல வரலாற்று ஆசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் கூறுகிறார்.
இராசேந்திர சோழன் 57 ஊர்களை 1084 வைணவப் பார்ப்பனர்களுக்கு அவரது அமைச்சராக விளங்கிய சிறீ  சகநாதனோ பரமவைணவன் வேண்டுகோளுக்கிணங்க தானமாகக் கொடுத்தான் என்று  கரந்தைச் செப்பேடு பகர்கிறது.
***
முதலாம் குலோத்துங்கனுடைய ஆட்சி யின் இறுதிக் காலத்தில் அனுலோம வகுப்பைச் சேர்ந்த அய்ந்து வகைப்பட்ட கம்மாளர்கள் பார்ப்பனரைப் போல் பூணூல் அணிந்து அக்கினிஹோத்திரம் ஔ பாசனம் ஆகியவற்றைச் செய்வதற்கு உரிமை வழங்குமாறு சோழப் பேரரசனை வேண்டினர்.
பேரரசனின் ஆணையின்படி இராசாசிரய சதுர்வேதி மங்கலத்தைச்  சேர்ந்த சாத்திரங்களில் வல்லுநர்களான பார்ப்பனர்கள் ஒரு கூட்டம் நடத்தி, அவ் வகுப்பினர் பிரதிலோமரைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் என்றும், இவர்கள் கட்ட டங்கள், தேர், ஆடம்பர வண்டி முதலி யவை கட்டுவது, கோபுரங்கள் மண்டபங் களின் பணி செய்விப்பது, உருவச் சிலைகள் ஆக்குவது,
யாகத்திற்கு வேண்டிய செயல் களைச் செய்யலாம் என்றும், அவர்களுக் குச் சாத்திரப்படி பூணூல் அணிந்து கொள்ளும் உரிமை மாத்திரம் உண்டு என்றும், ஆனால் உபநயனம் செய்யுங்கால் மந்திரங்களன்றிச் செய்தல் வேண்டும் என்றும் அக்னி ஹோத்திரம் ஔபாசனம் முதலியவற்றைச் செய்தல் கூடாது என்றும் முடிவு கூறினர். (பேராசிரியர் அ. இராமசாமி எழுதிய ‘தமிழ்ப் பேரரசுகளின் சரிவும் வீழ்ச்சியும் - பக்கம் 147-148) பூணூல் அணியலாமாம்;
ஆனால் மந்திரங்களைச் சொல்லக் கூடாதாம்; காரணம் சூத்திரன் மந்திரங்களை படிக்கக் கூடாது - கேட்கக் கூடாது - படித்தால் நாக்கை அறுக்க வேண்டும்; கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டுமே, இதுதானே அவாளின் மனுதர்மம்.
.....
பதின்மூன்றாம் நூற்றாண்டில் சிதம்பரத் தின் கிழக்கெல்லையில் உள்ள கொற்றவன் குடி எனும் ஊரில் வாழ்ந்தவரான உமாபதி சிவாசாரியார் என்பவர் தில்லை மூவாயிர வரில் ஒருவர்.
அவர் எட்டு சித்தாந்த நூல் களை இயற்றினார்.  ஆதலின் தில்லை தீட்சதர்கள் அவரைக் குலத்தினின்றும் விலக்கி ஒதுக்கி வைத்தனர்.
அன்று தொடங்கி இன்று வரை தில்லை தீட்சதப் பார்ப்பனர்களின் திமிர் அடங்க வில்லையே! அந்தத் திமிர்க்கான விதையைப் போட்டவர்களே ‘சூத்திர சோழர்கள் தானே!’
.....
படிப்புப் பார்ப்பனர்களுக்கு மட்டுமே!
சோழர்கள் காலத்தில் வேதப் படிப்பு படித்தவர்கள் தனியாக சிறப்புக்குரியவராக மதிக்கப்பட்டனர். வேதம் கற்பிக்கும் கல்விச் சாலைகளுக்கு நில தானங்கள் பல அரசர்களால் கொடுக்கப்பட்டன.
சோழ மண்டலத்தில் ஐம்பத்தேழு ஊர்களை முதலாம் இராசேந்திரன் ‘திரிபுவன மாதேவிச் சதுர்வேதி மங்கலம்’ என்ற பெயருடன் ஒரு தொகுதியாக்கி, வேதங்களிலும் சாத்திரங்களிலும் வல்ல பிராமணர் பலருக்கும் பிரம்மதேயமாக வழங்கினான் என்ற செய்தி வேதங்கள் மீதும் சாத்திரங்கள் மீதும் சோழர்கள் கொண்டிருந்த ஈடுபாட்டைக் காட்டுகிறது.
இதுபோல், வீரராஜேந்திர சோழனின் கன்னியாகுமரிக் கல்வெட்டு அவ்வரசன் சோழநாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு, கங்க நாடு, குலூத நாடு என்பவற்றில் மூன்று வேதங்களிலும் வல்ல நாற்பதினாயிரம் பிராமணர்களுக்குப் பிரம்மதேயங்கள் வழங்கி அந்நாடுகளில் நிலைபெற்று வாழு மாறு செய்தான் என்ற செய்தியைக் கூறுகிறது.
பல ஆயிரக்கணக்கான வேதம் வல்ல வடமொழிப் பிராமணர்கள் சோழப் பெரு வேந்தர்களால் தமிழகத்தில் குடியமர்த்தப் பட்டார்கள் என்பதற்கு ஏராளமான கல்வெட்டு  ஆதாரங்கள் உள்ளன. சோழர் காலத்தில் பிராமணர்களுக்கு தானமாகக் கொடுக்கப்பட்ட பிரம்மதேயங்கள், சதுர் வேதி மங்கலங்கள் பல்கிப் பெருகின. பிரம் மதேயமாக மட்டுமில்லாமல் பிற காரணங் களுக்காகவும் பிராமணர்களுக்கு நிலங்கள் தானமாகக் கொடுக்கப்பட்டன. அவை வருமாறு:
வேதம் வல்ல பிராமணர்களுக்கு - பட்டவிருத்தி.
மகாபாரதக் கதையைப் படித்துரைப்ப வர்க்கு - பாரத விருத்தி.
- அர்ச்சனை செய்பவர்களுக்கு  - அர்ச்சனா போகம்.
- வேதம் படிக்கும் அபூர்விகள் போன்ற றோருக்கு உணவளிக்கும் அறச்சாலை களுக்கு - சாலா போகம்.
இது மட்டுமல்லாமல் பாஷ்ய விருத்தி, சைவாச்சாரியக் காணி என பல பெயர்களில் இறையிலி நிலங்கள் பிராமணர்களுக்கு வழங்கப்பட்டன.
சோழர் காலத்தில் வேதக் கல்வி வளர்ப் பதற்காக வடமொழிக் கல்வி நிலையங் களும், கல்லூரிகளும் உருவாக்கப்பட்டன. இக்கால கட்டத்தில் செயல்பட்ட வேதக் கல்வி நிலையங்களும் அங்கு படிக்கப்பட்ட நூல்கள் குறித்த விவரங்களும் வருமாறு:
காமப்புல்லூர் என்ற இடத்தில் வேதப் பயிற்சிப் பள்ளி ஒன்று இயங்கியது. இவ்வேதப் பள்ளிக்கு பட்டவிருத்தி நிலம் அளிக்கப்பட்டது.
ஆனியூர் என்ற இடத்தில் வேதம் மற்றும் வடமொழி இலக்கியம் கற்றுத் தரும் பள்ளி ஒன்று செயல்பட்டது. இங்கு வேதம். பாணி னியின் இலக்கணமாகிய அஷ்டத்தியாயி ஆகியவற்றைப் பயிற்றுவிக்க பட்டவிருத்தி நிலம் அளிக்கப்பட்டது. பட்ட விருத்தியாக நிலம் பெற்ற பட்டர் வேதத்தில் ஆழ்ந்த புலமைப் பெற்றிருக்க வேண்டும் என்றும், பாணினிவியாகரணம், அலங்காரம், மீமாம் சத்தில் 20 அதிகாரங்கள் சொல்லிக் கொடுக் கும் திறமைப் பெற்றவராக இருத்தல் வேண் டும் என்பன போன்ற விதிகள் உருவாக் கப்பட்டிருந்தன.
வேதப் பயிற்சிப் பள்ளிகள் நடை பெற்றது பற்றிய கல்வெட்டுகளின் செய்தி களில் அங்கு பயின்ற மாணவர்களின் எண்ணிக்கைப் பற்றியும் ஆசிரியர்களின் எண்ணிக்கைப் பற்றியும் நடத்தப்பட்ட பாடங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுச்சேரிக்கு அருகில் உள்ள திரிபு வனையில் சாத்திரங்கள் பயிற்றுவிக்கும் வடமொழிக் கல்லூரி செயல்பட்டது. இங்கு 270 மாணவரும் 12 ஆசிரியர்களும் இருந்தனர். பாரதம், இராமாயணம், மனுதர்ம சாத்திரம் முதலியன கற்பிக்கப்பட்டன. ஆசிரியரும் மாணவரும் கவலையின்றி வாழ வசதிகள் செய்து தரப்பட்டன.
திருவாவடுதுறை, பெருவேலூர் ஆகிய இடங்களில் பிராமண மாணவர்கள் படிக் கும் வடமொழிப் பள்ளிகள் செயல்பட்டன.
திருவொற்றியூர்க் கோவிலில் வட மொழி இலக்கணம் கற்பிக்க வியாகரண தான - வியாக்யாந மண்டபம் ஒன்று இருந்தது. இது குறைவின்றி நடைபெற 65 வேலி நிலம் தானமாக விடப்பட்டது. பாணினி இலக்கணத்தைக் கற்பிக்கும் சிறந்த இடமாக இக்கல்லூரி விளங்கியது. இங்கு பதினான்கு நாள்களில் பதினான்கு பாராயணங்கள் கற்பிக்கப்பட்டன. மேலும் வேதமும், சித்தாந்த நெறிகளும் கற்கும் இடமாகவும் இக்கல்லூரி விளங்கியது.
வேதக் கல்வி கற்பிக்கும் அதே வேளையில் வேதம் ஒப்புவித்தல் போட்டி களும் அறிவிக்கப்பட்டு பரிசுகளும் அளிக் கப்பட்டன. மேலும் பாரதம் ஓதுபவர் களுக்கும் கொடைகள் அளிக்கப்பட்டது பற்றியும் வேத பாடசாலையில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய பொருட்களைப் பற்றியும் சில கல்வெட்டுகள் பதிவு செய்கின்றன.
கி.பி. 1170ஆம் ஆண்டு கல்வெட்டின் மூலம் சைமினிய சாமவேதத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை நன்முறையில் ஓதுப வருக்குத்தான் ஒரு பரிசு வழங்க வேண்டு மென்று ஒருவர் கோயிலுக்கு கொடை யளித்துள்ள செய்தியை அறிய முடிகின்றது.
செங்கல்பட்டில் இருந்து 20 கி.மீ. தொலைவில் திருமுக்கூடல் என்ற சிற்றூர் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள வெங்கடேசப் பெருமாள் கோயிலில் விரிவான கல்வெட்டு உள்ளது. இதில் இடம் பெறும் செய்தியின் மூலம் இக்கோயிலில் ஒரு கடிகை இயங்கியதை அறிய முடிகிறது. இதனை நிறுவியவன் வீரராசேந்திரச் சோழனாவான்.
இங்கு ரிக், யஜுர் ஆகிய இரண்டு வேதங்களும் இலக்கணமும் கற்பிக்கப்பட்டன. இங்கு மூன்று ஆசிரி யர்கள் பணியாற்றினர். ஒவ்வொரு வேதத் தையும் படிப்பதற்கு 10 மாணவர்களுக்கு மட்டுமே இடமளிக்கப்பட்டது.
இலக்கணம் கற்க 20 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப் பட்டனர். இக்கல்லூரியில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு உணவும், தங்குவதற்கு இடமும், தலைமுழுக்கு, மற்றும் விளக்கு களுக்கு எண்ணெயும் அளிக்கப்பட்டது.
மேலும் ஊரிலுள்ள மக்களுள் கல்வி பயில முடியாதவர்கள் கேள்வியறிவு பெறும் வண்ணம் சில நூல்கள் கோயிலில் இருந்த வியாக்கியான மண்டபத்தில் படித்து விளக் கப்பட்டன. கல்வி பயிலும் மாணவர்களுக் கும், ஊரிலுள்ளோர்க்கும் மருத்துவம் செய்வதற்கென்று ஓர் ஆதுலர் சாலையும் (மருத்துவமனை) இருந்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூரம் என்ற ஊரில் சிவன் கோயில் ஒன்று அமைந் துள்ளது. இக்கோயிலில் உள்ள மண்டபத்தில் மகாபாரதம் படிக்க கொடையளித்தது குறித்து கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் செந்தலை என்னும் ஊரிலுள்ள சுந்தரேசுவரர் கோவி லில் மகாபாரதம் படிப்பதற்காக கொடை வழங்கப் பெற்றுள்ள செய்தியை அவ்வூர்க் கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
(தமிழகத்தில் வேதக் கல்வி வரலாறு - சி. இளங்கோ பக்கம் 104-107)
பார்ப்பனர் ஆதிக்கம்
“சமுதாயத்தில் பிராமணர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. ஆனால் சங்க காலத்திலிருந்து தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்த தமிழ்ப் பிராமணர்களின் செல்வாக்குக் குறைந்து, புதிதாக வடநாட்டிலிருந்து வந்து குடியேறிய வடமொழிப் பிராமணர்களின் செல்வாக்கு அதிகமாயிற்று. தமிழ்நாட்டில் தமிழன் கட்டிய கோயில்களின் கருவ றைக்குள் செல்லும் உரிமையை தமிழன் பறி கொடுத்தான். சமுதாயத்தில் கோயில்களே ஆதிக்கம் செலுத்தின.
ஆனால் அக் கோயில்கள் பிராமணர்களின் ஆதிக்க புரியாகவே காட்சி அளித்தன. அரசாங்க அதிகாரமும், சமயச் செல்வாக்கும் குவியப் பெற்றிருக்கும் கைகள் என்றுமே ஓய்ந் திருப்பதில்லை. அவ்வதிகாரத்தையும், செல்வாக்கையும் மென்மேலும் பெருக்கிக் கொள்ளவும், பெருகினவற்றை அழியாமல் பாதுகாத்துக் கொள்ளவும் அக்கைகள் பரபரத்துக் கொண்டிருப்பது இயல்பு.
எனவே உழைப்பின்றியே தானமாகப் பெற்ற நிலங்களும், ஊர்களும், அரசாங்கச் செல்வாக்கும், வேள்வி வளர்க்கும் தனி உரிமையும் தம்மிடம் குவிக்கப் பெற்ற பிராமணர்கள் அவை யாவும், எக்காலமும் தம்மிடமே நிலைத்து நிற்கவும், மென்மேலும் வளர்ந்து வரவும், தம் குலத்தின் தலைமைப் பதவி நீடித்தும் வரவும் பல முயற்சிகளை மேற்கொள்ளலானார்கள். மன்னரின் முழு ஆதரவையும் அவர்கள் பெற்றனர்.
வேந்தர் களுக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக் கும் வமிசங்களையும், கோத்திரங்களையும், சூத்திரங்களையும் கற்பித்துக் கொடுத் தார்கள். மன்னர்களும் சாதி ஒழுக்கத்தை நிலை நாட்டுவதே தம் சீரிய கடமையாம் எனக்கூறும் மெய்க் கீர்த்திகளைப் புனைந்து கொண்டனர். ஆரிய பழக்க வழக்கத்தைப் பாராட்டிக் கூறும் சாத்திரங்களும் புராணங் களும் எழுந்தன.
(கே.கே. பிள்ளை எழுதிய தமிழக வரலாறும் மக்களும், பண்பாடும் பக்கம்  - 300)
ஓ, ஜாதி அபிமானிகளே ராஜராஜன் - சோழ அரசர்கள் எங்கள் ஜாதி என்று மார்தட்டி சுவரொட்டி ஒட்டும் சொந்தங் களே- இப்பொழுது சொல்லுங்கள்! எங்கள் உறவு, எங்கள் ஜாதி என்று பெருமையோடு அவர்களைச் சொல்லிக் கொள்ள என்ன இருக்கிறது?
கோயில்களுக்குள் தமிழர்களை உள்ளே விடாது. பார்ப்பனர்களை அர்ச்சகர்களாக நியமித்த ராஜராஜ சோழனின் சிலையைப் பார்த்தீர்களா? மத்திய அரசின் தொல் பொருள்துறை அதனை அனுமதிக்க வில்லையே! ராஜராஜ சோழன் தமிழர்களை வெளியே நிறுத்தியதால் ராஜராஜனின் சிலையும் வெளியில் நிற்கிறதோ!


-விடுதலை,7.11.15