பைபிள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பைபிள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 19 ஆகஸ்ட், 2026

இயேசுவின் விண்ணேற்றம் - செ.ர.பார்த்தசாரதி

 இயேசுவின் விண்ணேற்றம்


- செ.ர.பார்த்தசாரதி


ஏசு சிலுவையில் அறையப்பட்டு, இறந்த பின் கல்லறையில் வைக்கப்பட்டு பிறகு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்றும் பிறகு 40 ஆம் நாள் விண்ணுலகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார் என்றும் கிறித்தவர்கள் நம்புகின்றனர்.


கடைசியாக விண்ணுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக சொல்லப்படும் இடம் இப்பொழுது முகமதியரிடம் இருக்கிறது. விண்ணுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக சொல்லப்படும் நாளின் போது (இரண்டு நாள்கள்) மட்டும் கிறித்தவர்களிடம் ஒப்படைக்கின்றனர். மற்ற நாள்களில் எல்லாம் முஸ்லீம்களின் மசூதியாக இருக்கிறது.


'ஏசு சிலுவையில் அறையப்படவுமில்லை. மூன்றாம் நாள் உயிர்த்தெழவுமில்லை. சிலுவையில் அறையப்படுவது போல் ஒரு தோற்றத்தை கடவுள் (அல்லா) ஏற்படுத்தினார் என திருக்குர்ஆனில் உள்ளது.(திருக்குர்ஆன் அன்-நிஸா (An-Nisa) 4ஆவது அத்தியாயத்தின் 157-வது வசனம்) 


முஸ்லீம்கள் (அகமதியா பிரிவு) ‘இயேசு யூதர்களிடமிருந்து தப்பித்து இமய மலைப் பகுதியில் வந்து வாழ்ந்து பிறகு இயற்கையாக மரணமுற்றார்’ என்றும் அவருடைய சமாதி காஷ்மீரில் உள்ளது’ என்றும் கூறுகின்றனர்.


குர்ஆனுக்கு முந்தைய 'தவ்ராத்' வேதத்தில், ‘இயேசுவின் சமாதி, முகமது நபியின் சமாதியின் அருகில் வைக்கப்பட வேண்டும்’ என்று இருப்பதாக ‘அல்ஹதீஸ்' என்ற முஸ்லீம்களின் வேத நூலில் உள்ளது. (திர்மிதீ,வசனம் 3,617)


ஆகையினால்தான் இன்றளவும் முகமது நபியின் சமாதியின் அருகில் எதுவும் வைக்கப்படாத காலியான சமாதி ஒன்று இருப்பதாக முஸ்லீம்கள் கூறுகின்றனர்.


'இயேசு உயிர்த்தெழுந்து 40ஆம் நாள் விண்ணுலகம் சென்று விட்டார் என்பது உண்மையாயின் 'தவ்ராத்'தில் சொல்லப்பட்ட வசனம் பொய்யாகிவிடுகிறது.காலியாக உள்ள சமாதி . அடைக்கப்படாமலே 'தவ்ராத்' வேதம் பொய் என்று நிரூபித்துக் கொண்டிருக்கும்.


முஸ்லீம்கள் சொல்வதுபோல் காஷ்மீரில் அவர் இருப்பினும், 'தவ்ராத்' வசனம் பொய்யாகிவிடுகிறது.


இவையெல்லாம் போகட்டும், ‘விவிலியம்' (பைபிள்) என்ன சொல்கிறது என பார்ப்போம்.


'பதினோரு சீடர்களும் இயேசு குறித் திருந்த கலிலேயாவிலே உள்ள ஒரு மலையில் இயேசுவை சந்தித்தனர். அங்கிருந்து அவர் மறைந்தார்" என மத்தேயு கூறுகிறார். (28:16)


மாற்குவும் ‘கலிலேயாவில் பதினொரு வரும் உணவருந்திக் கொண்டிருந்தபோது, இயேசு வந்து அவர்களுடன் பேசிவிட்டு பரலோகம் சென்றார் என்றும் கூறுகிறார். (16:7,14,19)


ஆனால் லூக்காவோ 'எருசலேம் அருகிலுள்ள பெத்தானியாவில் சீடர்களை ஆசீர்வதித்துவிட்டு பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்' என்று கூறு கின்றார். (24:50,51)


யோவானோ கலிலேயாவிற்கு அருகிலுள்ள திபேரியக் கடற்கரையில் சீடர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது இயேசு வந்து, அவர்களை அழைத்து, பேசிக்கொண்டே சென்றார் (யோவா: 21)


அப்போஸ்தலரோ, ‘எருசலேமுக்கு பக்கத்தில் ஒரு ஓய்வு நாள் பிரயாண தூரத்திலிருக்கிற ஒலிவ மலையிலிருந்து பரலோகத்திற்கு அவரை ஒரு மேகம் எடுத்துக் கொண்டது' என்கிறார். அப்போஸ்தலர் (1: 1,9,12)


இந்த அப்போஸ்தலர் (1: 3) மட்டும் தான் ‘இயேசு உயிர்த்தெழுந்து 40 ஆம் நாள் மேலே எடுத்துக் கொள்ளப்பட்டார்’ என்று கூறுகிறார். மற்றவர்கள் நாள் கணக்கைச் சொல்லவில்லை.


பக்கம் -13


மத்தேயுவும், அப்போஸ்தலரும் கலிலேயாவில் உள்ள மலையில், இயேசு பரமேறிச் சென்றதாக கூறுகின்றனர்.


ஆனால் யோவானோ கலிலேயாவிற்கு அருகிலுள்ள திபேரியக் கடற்கரையிலிருந்து பரமேறிச் சென்றதாக கூறுகிறார்.


இதைவிட அதிசயம் என்னவென்றால் பழைய பாலஸ்தீன தேசத்தில், ஒரு கோடியில் கலிலேயோ இருக்கிறது. இதன் எதிர் கோடியில் எருசலேம் இருக்கிறது. இதன் அருகிலுள்ள பெத்தானியா விலிருந்து இயேசு பரமேறிச் சென்றதாக லூக்கா சொல்கிறார்.


ஏதோ பக்கத்து ஊர்களை சொன்னாலும் பரவாயில்லை. சம்பந்தா சம்பந்தமில்லாமல் கூறுகின்றனர்.


இயேசுவை சிலுவையில் அறைந்த போது, அவர் அருகில் இரு கள்ளர்களையும் அறைந்திருந்தனராம். அவர்களில் ஒருவன் இயேசுவை திட்டினானாம், மற்றவன் வாழ்த்தினானாம்.. வாழ்த்தியவனைப் பார்த்து "இன்றே நீ என்னுடனே கூடப் பரலோகத்திலிருப்பாய்' என்று சொன்னாராம்.


இந்த வசனப்படி 'இயேசு 40ஆம் நாள் மேலே சென்றார்' என்பது பொய் யாகிறது. இயேசுவை அறையப்பட்ட அன்றே மேலுலகம் சென்றுவிட்டார் என்பது தெளிவாகிறது.


இதிலிருந்து பைபிள் வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டு இருக்கின்றதனால், இயேசு பரமேறிச் சென்றதாகச்   சொல்லப்படுவது எல்லாம் பொய்யான கட்டுக்கதை என்பதை அறியலாம்.


- உண்மை இதழ், 15.09.1987, 
பக்கம்-13,14

குறிப்பு:- 'கலிலியோ'விலிருந்து 'எருசலேம்' செல்ல இரண்டு பழைய பாதைகள் இருந்தன. 1.'சமாரியா' வழியாக 90 மைல்கள்.
2.'யோர்தான்' ஆற்று வழியாக 120 மையில்கள்.




வியாழன், 13 ஆகஸ்ட், 2026

கிருத்துவர்கள் சிந்தனைக்கு! - செ.ர.பார்த்தசாரதி

  கிருத்துவர்கள் சிந்தனைக்கு!

"ஒரே மனிதனாலே பாவமும், பாவத்தினாலே மரணமும் உலகத்தில் பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவம், செய்தபடியால் மரணம் எல்லோருக்கும் வந்தது"என்று (ரோமர் 5:12)ல் இருக்கிறது.

இயேசு இறந்தார் என்று (மத்தேயு: 27:50), (15:37 மாற்கு), (லூக்கா:24:46) (யோவான் 19:30) ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளது. அப்படியாகின் முன்னால் கூறப்பட்டபடி, இயேசுவும் பாலம் செய்ததால்தான் இறந்தார் என்று தெரியவருகிறது.

போப், கிருஸ்தவர்கள் ஆகியவர்கள் கூட இறந்திருக்கிறார்கள். இறந்து கொண்டும் இருக்கிறார்கள் ஆகையால் கிருஸ்தவர்களும் பாவம் செய்தவர்கள் என்று தெளிவாகிறது.

"தான் வருமளவும் இவனிருக்க, எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றி வா’ என்றார். ஆகையால், அந்தச் சீசன் மரிப்பதில்லையென்கிற பேச்சு, சகோதரிகளுக்குள்ளே பரம்பிற்று. ஆனா லும், அவன் மரிப்பதில்லையென்று இயேசு சொல்லாமல், நான் வருமளவும் இவனிருக்க, எனக்குச் சித்தமானால், உனக்கென்னவென்று சொன்னார்". என்று (யோவான்:21:22,23 )ல் இருக்கிறது.

இயேசுவின் இரண்டாம் வருகை சமீபத்தில் இருக்கிறது" என்றுதான் கூறுகின்றனர். அப்படியானால் இயேசு மறுமுறை இன்னும் வரவில்லை என்று தெரிய வருகிறது. அப்படியாயின் ‘சீசன்’ இன்றளவும் உயிருடன் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மனிதனை யாராவது, காண்பிக்க தயாரா? 

(எசேக்கியல்: 18:4,20) மற்றும் (ரோமர்: 6:23) ல் 

''பாவத்தின் சம்பளம் மரணம்,. பாவஞ் செய்கிற ஆத்துமாவே சாகும்” என்று, தேவன் கூறியுள்ளார் என்றும் (யோவான் : 5 : 29) "பிரேத குழியிலிருந்து நன்மை செய்பவர்களை ஜீவனை அடையும் படியும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும் படியும், எழுந்திருக்கிறவர்களாக புறப்படுவார்கள்" என்றும் (மத்தேயு: 25: 32, 33, 34 41, 46)ல் "பாவம் செய்தவர்கள் பிசாசிற்காகவும், அவன் தூதர்களுக்காகவும், ஆயத்தம் பண்ணப் பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போவார்கள். நீதிமான்கள் நித்திய ஜீவனை அடைவர்" என்றும் இருக்கிறது.

எசேக்கியல், ரோமர் இரு வரும் பாவஞ் செய்கிற ஆத்துமா சாகும் என்று கூறுகின்றனர். ஆனால் யோவானும், மத்தேயுவும் “ஆத்துமா சாகாது” என்றும், “பாவம் செய்த ஆத்துமா நித்திய ஆக்கினையை அடையும், நன்மை செய்த ஆத்துமா நித்திய ஜீவனை அடையும்” என்றும் கூறுகின்றனர். இவர்களுக்குள் எப்படிப்பட் முரண்பாடு! 

(யோவான்:8:51) ல் “ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே. உங்களுக்குச் சொல்கிறேன். என்றார்’  என்று இருக்கிறது.

யோவான்: 8:51 ல்  இயேசு வார்த்தையைக் கைக்கொண்டால் மரணத்தை காண்பதில்லை’ என்று இயேசு கூறுவதாக கூறி விட்டு, 5:29 ல்

"மரணமே கிடையாது, ஆத்மாவிற்கு ஆக்கினை தான் உண்டு" என்று கூறுகிறார். 

யோவானே இப்படி முன்னுக்கு பின் முரண்பாடாக கூறுகிறார். எசேக்கியல். ரோமர், யோவான், மத்தேயு ஆகிய நால்வரும் ஒருவருக்கொருவர் முரண்பாடாக ஆத்துமாவை பற்றி கூறுகின்றனர் காரணம் என்ன. வென்று புரிகிறதா? காரணம். இதுதான் ஆத்துமா என்பது ஒன்று தனியாக இல்லை. அதனால் அதை மறைப்பதற்காக ஒவ்வொருவரும் தனக்கு தெரிந்த மட்டும் பொய்யை சொல்லி வைத்துள்ளனர். ஆகையால் கிருஸ்தவர்களும், மற்றவர்களும் கோபப்படாமல் சிந்தித்துப் பாருங்கள். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. 

குறிப்பு

: இந்திய வேத காமச் சங்கத்தாரால் வெளியிடப்பட்டு 1978 ல் வெளிவந்த புதிய ஏற்பாட்டிலிருந்து குறிப்பு எடுக்கப்பட்டுள்ளது.

- ர. பார்த்தசாரதி சென்னை-34

- உண்மை இதழ், பக்கம்-31

 இந்திய வேத காமச் சங்கத்தாரால் வெளியிடப்பட்டு 1978 ல் வெளிவந்த பரிசுத்த வேதாகமத்திலிருந்தும்  குறிப்பு எடுக்கப்பட்டுள்ளது.

- செ.ர.பார்த்தசாரதி

- உண்மை இதழ், பக்கம்-31


- விடுதலை ஞாயிறு மலர், 09.04.2015ல் மீண்டும் வெளியீடு

வியாழன், 26 மே, 2022

பிரசவ வேதனையும்-மதமும்!

 


மருத்துவக் கலை விஞ்ஞான அடிப் படையில் அமையத் துவங்கிய காலத்தில்தான் மயக்க மருந்து களும் (Anaesthetics) அறிமுகமா யின. இன்னும் குறிப்பாகச் சொல் லப் போனால் அறுவை சிகிச்சை முறை நடைமுறைக்கு வந்த போது தான் மயக்க மருந்துகளும் பயன் படுத்தப்பட்டன. இதற்கு முன்பும் மயக்க மருந்துகள் ஓரளவு பயன் படுத்தப்பட்டது உண்மையே. ஆனால், சிகிச்சையின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக மயக்க மருந்து ஆகியது இப்போது தான்.

நோயின் வேதனையில் மனிதன் துன் புறக்கூடாது; அவனது வேதனையை அவன் உணராமல் இருக்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணம் காரணமா கவே இம்மருந்துகள் பயன்படுத்தப்பப்பட்டன.

இம்மருந்துகள் மிகவும் பயன்பட்டது பிரசவத்துறையில்தான், மனித குலத்தின் வேதனை மிக்க அனுபவமாகப் பிரசவம் கருதப்பட்டது. அதற்கு மத சம்பந்தமான தொடர்பும் அமைக்கப் பட்டிருந்தது. அதா வது பிரசவ வேதனை என்பது பெண்க ளுக்கு ஆண்டவனால் விதிக்கப்பட்ட தண்டனைகளில் ஒன்று; அதை மறக்கச் செய்யும் வண்ணம் யாராவது மயக்க மருந்து பயன்படுத்தினால் அது ஆண்டவனைத் தூஷித்ததற்குச் சமமாகும் என்று மதவாதி கள் கூறிவந்தார்கள்.

வேதனையை மறக்கக்கூடிய மயக்க மருந்து கொடுக்க முன்வரும் மருத்துவர் மட்டுமின்றி அம்மருந்தைத் துணிச்சலாக உட்கொள்ள முன்வரும் நோயாளிகள், குறிப்பாக பிரசவ வேதனையில் துடிக்கும் தாய்மார்களும் கூட மதவாதிகளின் தண் டனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

1591-ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறோம். பிர சவ வேதனையில் துடிதுடித்த பெண் ஒருத்தி மருத்துவரிடம் மன்றாடி தனக்கு மயக்க மருந்து தரும்படி கேட்டுக் கொண்டாள். இத்தகவல் மதத் தலைவர்களுக்குத் தெரிந்து போயிற்று.  அப்பெண் மீது தெய்வ நிந்தனைக் குற்றச்சாட்டைச் சுமத்தி அவருக்கு மரண தண்டனை விதித்தார்கள் அந்த மதவெறி யர்கள். பிரசவ வேதனை யில் துடிக் கத் துடிக்க அப்பெண்மணி மனித மத வெறியர்களால் உயிரோடு எரிக்கப் பட்டாள். எத்தனைக் கோரம்! எத்தனைக்  கொடூரம்!! (Dalyell) என்பவர் எழு திய Darker Superstitions of Scotland என்ற நூலில் இது விளக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு மதவெறியர்கள் கூறிய வாதத்துக்குக் கிறிஸ்தவ வேதாகமத்தில் ஆதாரம் உண்டா?

பைபிளில் ஆதிமனிதன் ஆதாம், ஆதி மனுஷி ஏவாள் பற்றிய ஏதேன் தோட்டத்துக் கதை இங்கே மதவாதிகளின் ஆதாரமாகப் பயன்படுகிறது.

சும்மா கிடந்த சிட்டுக் குருவிக்குச் சோற்றைப் போட, அது கொண்டையைக் கொண்டையை ஆட்டிக் கொண்டு கொத்த வந்த கதை போல சும்மா இருந்த ஆதாமிற்கு ஏவாள் பாலுணர்ச்சியை உண்டாக்க (நன்மை - தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைத் தானும் புசித்து அவனுக்கும் கொடுத்தது. வேறென்ன?) அதன் விளை வாக தேவன் சாபம் கொடுக்கிறார்.

ஏவாளுக்குக் கொடுத்த சாபம் என்ன தெரியுமா? நீ வேதனையோடே பிள்ளை பெறுவாய்! என்பது தான் அந்தச் சாபம்.

பெண்ணென்று பிறந்துவிட்டால் அவள் தாய்மைப் பேறு பெறவேண்டும் என்றால் வேதனையில்லாமல் அது நடக் காது என்று தேவன் சாபம் கொடுத்திருக் கும்போது, அந்த வேதனையே வரப்பிர சாதம் என்று தலைவணங்கி ஏற்பது தான் கடமை; தர்மம். இதை விடுத்து வேத னையை உணராமல் தடுக்க யார் முயன் றாலும் அது தேவ நிந்தனை ஆகும். தேவகோபத்துக்குப் பாத்திரமாவது முறை யல்ல; அல்லவா? - இவ்வாறுதான் அன் றைய மதவாதிகள் நம்பினார்கள்! அதன் விளைவாகவே ஸ்காட்லாந்து கர்ப்பிணி எரிக்கப்பட்டாள்.

மேற்கண்ட சாபம் - பைபிளில் ஆதியாகமம் 3ஆவது அத்தியாயம் 16ஆம் வசனத்தில் உள்ளது.

வெள்ளி, 19 நவம்பர், 2021

கூறுவது என்ன? நடப்பது என்ன?

 


பைபிள்

ஏசு கிறிஸ்து ஒருவன் வலது கன்னத்தில் அடித்தால் இடது கன்னத்தையும் காட்டு என்று தான் கூறியிருக்கிறார் தனது பைபிளில்அந்தப் பைபிளை அன்றாடம் படித்து வருபவர்கள் தான் துப்பாக்கி முதல் அணுக்குண்டு வரை உற்பத்தி செய்து பல ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றனர்.

குர்ஆன்

முகமது நபி சகல மக்களையும் சமமாகக் கருது என்றுதான் கூறியுள்ளார்அதே குர்ஆனை அன்றாடம்  படித்து வரும் பாகிஸ்தான் மக்கள் தான் மத வெறி கொண்டு பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் அல்லாத மக்களைக் கொன்று குவித்து வருகின்றனர்.

வேதம்

ஹிந்து மதவேத சாஸ்திரங்களும் சகல ஆத்மாக்களும்கடவுள் அம்சம்தான்ஒரே ஆத்மாதான் எல்லா உடலிலும் இருக்கிறதுஆகவே அனைவரையும் கடவுளாகத்தான் பாவிக்க வேண்டும் என்று போதிக்கின்றன.

அப்படிப்பட்ட ஹிந்துக்கள் தான் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்று குவித்தனர்மற்றும் இந்து மதத்தைச் சேர்ந்த உயர்ஜாதிப் பார்ப்பனர்கள்தான் உலக உத்தமர் காந்தியாரைக் கொல்லச் செய்தவர்கள்.

 10.4.1948-  குடிஅரசிலிருந்து....                       

வெள்ளி, 28 மே, 2021

விலக்கப்பட்ட கனியைப் படைத்தது ஏன்? -2

திங்கள், 17 மே, 2021

கிறிஸ்துவும் கிருஷ்ணனும் கற்பனையே

RM119
13/75
'கிறிஸ்துவும் கிருஷ்ணனும் கற்பனையே'

ஆசிரியர் 
மலையாளம் ஜோசப் இடமருகு
தமிழில் அரு.நாராயணசாமி
வெளியீடு அலைகள் 
விலை ரூ55
பக்கம் 72.

*இந்நூல் கிருஷ்ணன்- கிருஸ்து இருவரும் எப்படி இந்தியாவில் ஒரே மாதிரியாக பார்க்கப்பட்டனர். இருவரும் எங்கிருந்து உருவாகினர். எதற்காக உருவாக்கப்பட்டனர். ஏசுவின் வரலாறு என்ன என பல கோணங்களில் ஆய்வு செய்து எழுதப்பட்ட  சாரம் தான் இந்நூல்.   

*ஆசிரியரைப்பற்றி

ஆசிரியர் ஜோசப் இடமருகு அவர்கள் கேரளத்தில் கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தவர். ஆரம்பத்தில் கிறிஸ்துவ வழிபாட்டில் நம்பிக்கை கொண்டு வழிபாடு நடத்தி வந்தார். அதன் விளைவாக அம்மத நூல்களை எல்லாம் ஆர்வமுடன் வாசித்தார். பின்னாளில் விமர்சன கண்ணோட்டத்தோடு பைபிளை படிக்கத் தொடங்கிய பின் அதிலுள்ள குறைகளை கண்டு 'கிறிஸ்து ஒரு மனிதன்' என்ற நூலை எழுதி மதகுருமார்களால் திருச்சபையிலிருந்து விலக்கி  வைக்கப்பட்டார். 

இருப்பினும் ஏசு வாழ்ந்ததாகக் கருதும் ஜெருசலேம் போன்ற இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்து 'கிறிஸ்துவும் கிருஷ்ணனும் கற்பனையே'
என்னும் இந்நூலை எழுதினார்.  

ஆசிரியர் உலக சிந்தனையாளர், இந்திய நாத்திக மையத்தின் இயக்குநர், இந்திய பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் என பல சிறப்புகளை பெற்றவர்.

*நூலின் உப தலைப்புகள் 

*இந்தியாவில் கிருஸ்துவ மதம்
*ஏசுவின் கதை
*கிருஸ்துவும் ஒரு மனிதன் 
*புத்தரும் கிருஸ்துவும்
*புத்த மதம் தோன்றிய வரலாறு 
*ஏசு சரித்திரப் புருஷன் அல்ல
டூரின் பிணப்போர்வை
*கிருஸ்துவ மதத்தின் தோற்றம் 
என்னும் தலைப்புகளில் ஆய்வு செய்து இந்நூலை எழுதியிருக்கிறார்.

*நூலின் உள்ளே

கிருஸ்துவ மதம் பரப்பப்பட்ட எல்லா நாடுகளிலும் முன்பு அங்கே நிலவிய பழமையான மதங்கள் அழிந்து போயின.
கிரேக்கம், ரோமன், எகிப்திய மதங்கள் சான்று. 

அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியாவில் வளர்ந்த கிருஸ்துவம் 1500 ஆண்டுகளாக இந்தியாவில் பிரச்சாரம் செய்தும் 2.6 சதவீத மக்களை மட்டுமே கிருஸ்துவர்களாக மாற்ற முடிந்தது. காரணம் இந்திய மக்களின் இந்து மத உணர்வுகளையே தான் கிருஸ்துவர்களும் வெளியிட்டனர். 

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களால் வணங்கப்படுகிற  கிருஷ்ணனும், கிருஸ்துவும் ஏறக்குறைய ஒரே கதாபாத்திரமாக அமைந்தது தான் பிரதான காரணம். 
மேலும் இந்துவில்  சாதியில் உயர்வு தாழ்வு பார்ப்பது கிருஸ்துவத்திலும் பார்க்கப்பட்டதால் அதில் பிடிப்பு ஏற்படாமல் போனது மிக முக்கிய காரணம்.

*கிருஸ்துவும், கிருஷ்ணனும்
ஒற்றுமைகள்

*கிருஷ்ணன் யது வம்சம்
ஏசு யூத வம்சம்

*இருவர் பிறப்பிற்கும் அசரீரி தோன்றியது 

இருவரும் அரச வம்சம்

இருவரின் தாயாரும் தந்தை இல்லாமல் கர்ப்பம் தரித்தல்

இருவர் பிறக்கும் முன்பும் வானத்தில் நட்சத்திரம் தோன்றுதல்

இருவர் பிறந்த போதும் தேவர்கள், தேவ தூதர்கள் மகிழ்ச்சியில் ஆடினர்

குழந்தை கிருஷ்ணனை மாட்டு இடையர்களும்,
ஏசுவை ஆட்டு இடையர்களும் கண்டு தரிசித்தனர்

கிழக்கில் வந்த அறிஞர்கள் குழந்தை ஏசுவை வணங்கினர் 
நாரதர் குழந்தை கிருஷ்ணனை வணங்கினார்.

அரசன் கம்சன் கிருஷ்ணன் பிறப்பையும், 
அரசன் ஏரோது ஏசு பிறப்பையும் கண்டு பயந்தனர்.

இருவரையும் பாதுகாக்க வேறிடத்தில் வளர்க்கப்பட்டனர்
ஏசு எகிப்து மடூரியா(Muturea),
கிருஷ்ணன் ஸ்தலம் மதுரா

இரு குழந்தைகளும் கொல்லப்பட வேண்டும் என்பதால் அவ்வயது ஒத்த குழந்தைகளை கொல்ல இரு அரசர்களும் கட்டளையிடல்

கிருஷ்ணன் தாய் தேவகிக்கு மாயாதேவி என்றும் பெயர் உண்டு.
ஏசுவின் தாயார் மேரி. மாயாமேரி என்பதாகும்.

இருவரும் நல்லொழுக்கம் உடையவர்களாக போற்றப்படுதல்

இரு தாயாருக்கும் தோழியர் உண்டு 

கிருஷ்ணன் முன்னோடி பலராமன்
ஏசுவின் முன்னோடி ஸ்நாபகன் தோன்றல்

கிருஷ்ணன், ஏசு இருவரும் முறையே அறிஞர், மதகுருமார்களை வாக்குவாதத்தில் தோற்கடித்தல்

ஏசு பாலைவனத்தில் உண்ணாவிரதம் 
கிருஷ்ணன் காட்டில் தவம் புரிதல்

மும்மூர்த்தி தத்துவத்தில் இருவரும் இரண்டாவது அவதாரம்

இருவரும் மனித இனத்தை பாதுகாக்கவே தோன்றினர்.

ஏசு சாத்தான் என்ற பாம்பின் தலையையும், 
கிருஷ்ணன் நாகவடிவ காளிங்கனையும் அழித்தல்.

இருவரும் பாவமில்லாதவர்களாக கணிக்கப்பட்டனர்.

இருவரும் முழுநிறை தெய்வம் முழுநிறை மனிதராக பார்க்கப்பட்டனர்.

கிருஷ்ணன்,ஏசு இருவரும்  குஷ்டரோகியை குணப்படுத்தல்.

இருவரும் இறந்தவரை உயிர்பெறச் செய்தல்.

மரத்தில் இருந்த கிருஷ்ணனை வேடன் அம்பு எய்து கொன்றான்.
மரச்சிலுவையில் கிடந்த ஏசுவை படைவீரன் ஈட்டியால் குத்தினான்.

இருவர் இறப்பின் போதும் துர்நிமித்தங்கள் நடைபெற்றது.

கிருஷ்ணன் மறைவுக்குப்பின் யாதவ வம்சம் சிறப்பு அழிந்தது.
ஏசு மரணத்திற்குப்பின் யூதர்களின் சிறப்பும் முடிந்தது.

பெயர் ஒற்றுமை 

Christ - Cheistna
முதன்முதலில் இந்தியாவிற்கு வந்து சமஸ்கிருதம் படித்த கிருஸ்துவ பாதிரியார்கள் இவ்வொற்றுமையைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். 
Christna - Chrishna 
இரண்டிலும் Chr பொதுவாக வருவதால் Christ என்று எழுதும்போது குழப்பம் வரும் என்பதால் CHA என்ற ஒலிக்கு K என்ற எழுத்து சேர்த்து Krishna என்று எழுதியும் பரப்பியும் வந்தார்கள். 

இந்த ஒற்றுமையில் பார்க்கவேண்டியது ஒருவர் இன்னொரு மதத்தையோ அல்லது இருவரும் வேறு மதத்தையோ பின்பற்றி வந்திருக்க வேண்டும் என்கிறார் ஆசிரியர். 

இங்கே புத்தருக்கும், ஏசுவுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமையை விளக்குகிறார்.
நண்பர்கள் வாசித்து அறிந்துகொள்ள வேண்டுகிறேன்.
இந்தியாவில் ஆரியர்கள் கி.மு 1500ல் வருகின்றனர். அவர்கள் கி.மு.1000ல் இருக்கும்போது எந்த பதிவிலும்  கிருஷ்ணன் பெயர் இல்லை. 
கி.மு. 6ல் புத்தர் தோன்றினார். அக்காலத்திலும் கிருஷ்ணன் இல்லை. 

அதேபோல் ஏசுவின் போதனைகள் உருவாகும் 500 ஆண்டுகளுக்கு  முன்பே புத்தரின் போதனைகள் உருவாகின.

ஆக புத்தர் இந்த இருவருக்கும் முன்பு தோன்றி அவற்றின் கருத்தை உள்வாங்கி கிருஷ்ணன் - கிருஸ்து சிந்தனைகள் உருவாக்கப்பட்டது என்று மிகப்பெரிய ஆய்வை நடத்தி இந்நூலை எழுதியிருக்கிறார் ஆசிரியர். முன்னரே குறிப்பிட்ட அத்தனை தலைப்புகளையும் நான் இங்கே விவரிக்கவில்லை. நண்பர்கள் வாசித்து அறிய வேண்டுகிறேன்.

'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு' என்ற வள்ளுவரின் வரிகளுக்கேற்ப 

வாசிப்போம்! விவாதிப்போம்!
- சண்முக சாமி ராமசாமி குழு இடுகை, வாசிப்பை நேசிப்போம் முகநூல் பதிவு
18.5.21

திங்கள், 22 மார்ச், 2021

கிறிஸ்தவ பைபிள் புருடாக்களும் அதை முறியடித்த அறிவியலும்

கிறிஸ்தவ பைபிள் புருடாக்களும் அதை முறியடித்த அறிவியலும் 
******************************************
பூமி உருண்டை அல்ல தட்டை
பூமிக்கு அஸ்திவாரம் 
பூமிக்கு தூண்கள் 
பூமிக்கு நான்கு மூலைகள் 
சூரியன் தான் நகருகிறது பூமியல்லவாம்!!
விஞ்ஞான அறிவிற்கு புறம்பான 
பைபிள்  காமடிகள்
கிறிஸ்துவர்கள் வெட்கி தலை குனிய செய்யும் புனித‌ பைபிளின் வசனங்கள்  சில‌ இங்கே 
பூமிக்கு அஸ்திவாரம்? பூமிக்கு தூண்கள் உண்டு? பூமியை அஸ்திவாரங்களின் மேல் கர்த்தர் அசையாமல் நிலை நிறுத்தி அமைத்திருக்கிறார். 
பூமி சுழலுவதில்லை. கேட்பதற்கே சிரிப்பை வரவைக்கிறது 

பைபிள். சங்கீதம் . 104 :5
பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள் மேல் அதை ஸ்தாபித்தார்.

பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின் மேலாவது, சமுத்திரத்தின் மேலாவது, ஒரு மரத்தின் மேலாவது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக்கண்டேன்.
வெளி 7:1 
சூரியன் தான் நகறுகிறது. பூமியல்ல‌ 
பைபிள்: யோசுவா .10:13
அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுமட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது; இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா; அப்படியே சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒருபகல் முழுதும் நடுவானத்தில் நின்றது.

க‌ல்வி அறிவு ப‌டைத்த‌ அத்த‌னை பேருக்கும் சூரியன் சுழலுவதில்லை பூமிதான் சுழ‌ன்று வ‌ருகிற‌து என்ற‌ உண்மை தெரியும்.
கோபெர்னிக‌ஸ் என்ப‌வர் இந்த‌ விஞ்ஞான‌ அறிவிய‌ல் உண்மையை முத‌ன்முத‌லாக‌ உல‌கிற்கு அறிவித்த‌ பொழுது , இந்த உண்மை புனித பைபிளுக்கு எதிரிடையாக இருந்தபடியால் கிறிஸ்த‌வ‌ ம‌த‌ குருக்க‌ள் கூக்குரல் எழுப்பி அவ‌ரை  தூற்றினார்க‌ள்.அத‌ன் தொட‌ர்பாக‌ கோபெர்னிக‌ஸ் அவ‌மானப்ப‌டுத்த‌ப்ப‌ட்டு சித்த்ர‌வ‌தை செய்யப்ப‌ட்டார்.
ஜியார்டானோ புருனோ என்ற‌ இத்தாலிய‌ர் கி.பி.1600 க‌ளில் பூமி சூரிய‌னை சுழ‌ன்று வருகிற‌து என‌ கூறிய‌த‌ற்காக‌ ரோம் நக‌ரில் சர்ச்சினால் உயிருடன் எரிக்கப்பட்டார்
பூமி உருண்டை என்னும் அறிவுபூர்வமான-ஆக்க ரீதியான கலிலியோவின் ஆராய்ச்சி உண்மைக் கருத்தை ஏற்றுக் கொண்டால் கிறித்தவ மதமும், பைபிளும்  அடிபட்டு ஆட்டங்கண்டு போகுமே  என்று எண்ணிய கிறித்தவ மத வெறியர்கள் தங்கள் மதக் கருத்துக் கோட்பாட்டைக் காக்கும் பொருட்டு அழியாத உலகப் புகழ் பெற்ற மாபெரும் விஞ்ஞானி அறிவியல் ஆய்வறிஞன் கலிலியோவை அடித்தே கொன்றார்கள் 
பூமி தட்டை!! பூமிக்கு அஸ்திவாரம் உண்டு,!! பூமிக்கு தூண்கள் உண்டு!! பூமிக்கு நான்கு மூலைகள் உண்டு.!! சூரியன் தான் நகருகுறது. பூமியல்ல‌ !! என்ற கடவுளின் வாசகங்களான  பைபிளின் இந்த வசனங்களை  நாங்கள்தான்  கல்வி அறிவை  புகட்டினோம் என்பவர்கள் தங்கள் கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பார்களா?
- தினேஷ் டுகே, முகநூல் பதிவு, 22.3.21

வியாழன், 2 ஜூலை, 2020

பைபிளில் ஜாதி வெறி !


பைபிளில் ஜாதி வெறி !
அன்றியும் தேவ பக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக் கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார். ஆவியிலே நீதியுள்ளவ ரென்று விளங்கப்பட்டார். தேவ தூதர்களால் காணப் பட்டார். புற ஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார்; உலகத்திலே விசுவாசிக்கப்டடார். மகிமையிலே ஏறெடுத்து கொள்ளப்பட்டார். (1 தீமோத்தேவு 3:16)

இதில் தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார் என்பதும், புற ஜாதிகளிடத்திலே பிரசங்கிக்கப்பட்டார் என்பதும் கவனிக்கும் பொழுது தேவன் (ஏசு) என்று சொல்லக்கூடியவரும்;

சாதாரண மனிதனைப் போல மாம்சத்திலேயே உண்டாகினார் என்பதும் அவர் தேவ தூதர்களால் காணப்பட்ட நேரத்தில் புற ஜாதிகளிடத்திலும் பிரசங்கிக்கப்பட்டார் என்பதைப் பார்க்கும் பொழுதும் இவர்கள் மதத்திலும், ஜாதி வெறிகள் அன்றே இருந்திருக் கிறது என்பது தெளிவாக விளங்குகிறது.

அந்த தேவன் தூதர்களின் கண்ணில் மட்டுமே காணப்பட்டார் என்பதும் மற்ற விசுவாசித்து ஜெபம் தொழும் அனைவருடைய கண்ணிலும் அவர் காணப் படவில்லை என்பதும் இது எவ்வளவு அப்பட்டமான பொய் கதையை புகுத்தியுள்ளார்கள் என்பதை அவர்களின் பைபிள் வாசகங்களே நிரூபித்துக்காட்டுகின்றன. இதை நம்புகிறவன் மடையன் என்று தந்தை பெரியார் அவர்கள் கூறியது உண்மைதானே!

தகவல்: ச.இராமசாமி, சென்னை-18. 

- விடுதலை, 2014

ஞாயிறு, 14 ஜூன், 2020

பைபிள் படிப்பவர்கள் பதில் கூறுவார்களா?

ஆதியிலே தேவன் வானத்தையும்; பூமியையும் இன்னும் பலவற்றையும் படைத்து முடிவில் ஆதாம் ஏவாள் எனும் இரண்டு பேரைப் படைத்தார். (என்ன கஞ்சத்தனம் பாருங்கள்) அவர்களுக்குக் காயீன், ஆபேல் எனும் இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். இருவரும் கர்த்தருக்குப் பூஜை செய்தார்கள். ஆபேலின் பூஜையை கர்த்தர் ஏற்றுக் கொண்டார். பொறாமை அடைந்த காயீன் ஆபேல் கொன்று விட்டான்

கோபமடைந்த கர்த்தர் காயீனை நாடு கடத்தினார்

பிதாவே! அங்கிருப்பவர்கள் என்னைக் கொன்று விடு வார்களே என்றான் காயீன் காயீனை கொல்லும் எவர்பேரிலும், ஏழு பழிசுமக்கக் கடவது என்று கர்த்தர் அருளினார். இது பைபிள் சொல்கிற கதை; முதலில் கர்த்தர் படைத்தது ஆதாம் ஏவாள் எனும் இரண்டே பேர். அவர்களின் பிள்ளைகள் இருவர். ஆக மொத்தம் நாலே பேர். அதிலும் ஒருவன் இறந்து விட்டான் பாக்கி இருப்பது மூன்றே பேர், அப்படியானால் காயீனைக் கொல்ல அங்கு யார் இருந்தார்கள்? ஒரு வேளை இந்துக்கள் இருந்தார்களா? கிறிஸ்தவர்களை மட்டும்தான் படைத் தாரா? அல்லது படிப்பவர்கள் தான் மடையர்களா?

தகவல்: சராமசாமி, சென்னை -18

புதன், 27 பிப்ரவரி, 2019

கூறுவது என்ன? நடப்பது என்ன?

10.4.1948 - குடிஅரசிலிருந்து..

பைபிள்


ஏசு கிறிஸ்து ஒருவன் வலது கன்னத்தில் அடித்தால் இடது கன்னத்தையும் காட்டு என்று தான் கூறியிருக்கிறார் தனது பைபிளில். அந்தப் பைபிளை அன்றாடம் படித்து வருபவர்கள் தான் துப்பாக்கி முதல் அணுக்குண்டு வரை உற்பத்தி செய்து பல ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றனர்.

குர்ஆன்


முகமது நபி சகல மக்களையும் சமமாகக் கருது என்றுதான் கூறியுள்ளார். அதே குர்ஆனை அன்றாடம்  படித்து வரும் பாகிஸ்தான் மக்கள் தான் மத வெறி கொண்டு பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் அல்லாத மக்களைக் கொன்று குவித்து வருகின்றனர்.

வேதம்


ஹிந்து மத, வேத சாஸ்திரங்களும் சகல ஆத்மாக்களும், கடவுள் அம்சம்தான். ஒரே ஆத்மாதான் எல்லா உடலிலும் இருக்கிறது. ஆகவே அனைவரையும் கடவுளாகத்தான் பாவிக்க வேண்டும் என்று போதிக்கின்றன.

அப்படிப்பட்ட ஹிந்துக்கள் தான் பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்களைக் கொன்று குவித் தனர். மற்றும் இந்து மதத்தைச் சேர்ந்த உயர்ஜாதிப் பார்ப்பனர்கள்தான் உலக உத்தமர் காந்தியாரைக் கொல்லச் செய்தவர்கள்.

-  விடுதலை நாளேடு, 22.2.19