இயேசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயேசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 19 ஆகஸ்ட், 2026

இயேசுவின் விண்ணேற்றம் - செ.ர.பார்த்தசாரதி

 இயேசுவின் விண்ணேற்றம்


- செ.ர.பார்த்தசாரதி


ஏசு சிலுவையில் அறையப்பட்டு, இறந்த பின் கல்லறையில் வைக்கப்பட்டு பிறகு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்றும் பிறகு 40 ஆம் நாள் விண்ணுலகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார் என்றும் கிறித்தவர்கள் நம்புகின்றனர்.


கடைசியாக விண்ணுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக சொல்லப்படும் இடம் இப்பொழுது முகமதியரிடம் இருக்கிறது. விண்ணுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக சொல்லப்படும் நாளின் போது (இரண்டு நாள்கள்) மட்டும் கிறித்தவர்களிடம் ஒப்படைக்கின்றனர். மற்ற நாள்களில் எல்லாம் முஸ்லீம்களின் மசூதியாக இருக்கிறது.


'ஏசு சிலுவையில் அறையப்படவுமில்லை. மூன்றாம் நாள் உயிர்த்தெழவுமில்லை. சிலுவையில் அறையப்படுவது போல் ஒரு தோற்றத்தை கடவுள் (அல்லா) ஏற்படுத்தினார் என திருக்குர்ஆனில் உள்ளது.(திருக்குர்ஆன் அன்-நிஸா (An-Nisa) 4ஆவது அத்தியாயத்தின் 157-வது வசனம்) 


முஸ்லீம்கள் (அகமதியா பிரிவு) ‘இயேசு யூதர்களிடமிருந்து தப்பித்து இமய மலைப் பகுதியில் வந்து வாழ்ந்து பிறகு இயற்கையாக மரணமுற்றார்’ என்றும் அவருடைய சமாதி காஷ்மீரில் உள்ளது’ என்றும் கூறுகின்றனர்.


குர்ஆனுக்கு முந்தைய 'தவ்ராத்' வேதத்தில், ‘இயேசுவின் சமாதி, முகமது நபியின் சமாதியின் அருகில் வைக்கப்பட வேண்டும்’ என்று இருப்பதாக ‘அல்ஹதீஸ்' என்ற முஸ்லீம்களின் வேத நூலில் உள்ளது. (திர்மிதீ,வசனம் 3,617)


ஆகையினால்தான் இன்றளவும் முகமது நபியின் சமாதியின் அருகில் எதுவும் வைக்கப்படாத காலியான சமாதி ஒன்று இருப்பதாக முஸ்லீம்கள் கூறுகின்றனர்.


'இயேசு உயிர்த்தெழுந்து 40ஆம் நாள் விண்ணுலகம் சென்று விட்டார் என்பது உண்மையாயின் 'தவ்ராத்'தில் சொல்லப்பட்ட வசனம் பொய்யாகிவிடுகிறது.காலியாக உள்ள சமாதி . அடைக்கப்படாமலே 'தவ்ராத்' வேதம் பொய் என்று நிரூபித்துக் கொண்டிருக்கும்.


முஸ்லீம்கள் சொல்வதுபோல் காஷ்மீரில் அவர் இருப்பினும், 'தவ்ராத்' வசனம் பொய்யாகிவிடுகிறது.


இவையெல்லாம் போகட்டும், ‘விவிலியம்' (பைபிள்) என்ன சொல்கிறது என பார்ப்போம்.


'பதினோரு சீடர்களும் இயேசு குறித் திருந்த கலிலேயாவிலே உள்ள ஒரு மலையில் இயேசுவை சந்தித்தனர். அங்கிருந்து அவர் மறைந்தார்" என மத்தேயு கூறுகிறார். (28:16)


மாற்குவும் ‘கலிலேயாவில் பதினொரு வரும் உணவருந்திக் கொண்டிருந்தபோது, இயேசு வந்து அவர்களுடன் பேசிவிட்டு பரலோகம் சென்றார் என்றும் கூறுகிறார். (16:7,14,19)


ஆனால் லூக்காவோ 'எருசலேம் அருகிலுள்ள பெத்தானியாவில் சீடர்களை ஆசீர்வதித்துவிட்டு பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்' என்று கூறு கின்றார். (24:50,51)


யோவானோ கலிலேயாவிற்கு அருகிலுள்ள திபேரியக் கடற்கரையில் சீடர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது இயேசு வந்து, அவர்களை அழைத்து, பேசிக்கொண்டே சென்றார் (யோவா: 21)


அப்போஸ்தலரோ, ‘எருசலேமுக்கு பக்கத்தில் ஒரு ஓய்வு நாள் பிரயாண தூரத்திலிருக்கிற ஒலிவ மலையிலிருந்து பரலோகத்திற்கு அவரை ஒரு மேகம் எடுத்துக் கொண்டது' என்கிறார். அப்போஸ்தலர் (1: 1,9,12)


இந்த அப்போஸ்தலர் (1: 3) மட்டும் தான் ‘இயேசு உயிர்த்தெழுந்து 40 ஆம் நாள் மேலே எடுத்துக் கொள்ளப்பட்டார்’ என்று கூறுகிறார். மற்றவர்கள் நாள் கணக்கைச் சொல்லவில்லை.


பக்கம் -13


மத்தேயுவும், அப்போஸ்தலரும் கலிலேயாவில் உள்ள மலையில், இயேசு பரமேறிச் சென்றதாக கூறுகின்றனர்.


ஆனால் யோவானோ கலிலேயாவிற்கு அருகிலுள்ள திபேரியக் கடற்கரையிலிருந்து பரமேறிச் சென்றதாக கூறுகிறார்.


இதைவிட அதிசயம் என்னவென்றால் பழைய பாலஸ்தீன தேசத்தில், ஒரு கோடியில் கலிலேயோ இருக்கிறது. இதன் எதிர் கோடியில் எருசலேம் இருக்கிறது. இதன் அருகிலுள்ள பெத்தானியா விலிருந்து இயேசு பரமேறிச் சென்றதாக லூக்கா சொல்கிறார்.


ஏதோ பக்கத்து ஊர்களை சொன்னாலும் பரவாயில்லை. சம்பந்தா சம்பந்தமில்லாமல் கூறுகின்றனர்.


இயேசுவை சிலுவையில் அறைந்த போது, அவர் அருகில் இரு கள்ளர்களையும் அறைந்திருந்தனராம். அவர்களில் ஒருவன் இயேசுவை திட்டினானாம், மற்றவன் வாழ்த்தினானாம்.. வாழ்த்தியவனைப் பார்த்து "இன்றே நீ என்னுடனே கூடப் பரலோகத்திலிருப்பாய்' என்று சொன்னாராம்.


இந்த வசனப்படி 'இயேசு 40ஆம் நாள் மேலே சென்றார்' என்பது பொய் யாகிறது. இயேசுவை அறையப்பட்ட அன்றே மேலுலகம் சென்றுவிட்டார் என்பது தெளிவாகிறது.


இதிலிருந்து பைபிள் வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டு இருக்கின்றதனால், இயேசு பரமேறிச் சென்றதாகச்   சொல்லப்படுவது எல்லாம் பொய்யான கட்டுக்கதை என்பதை அறியலாம்.


- உண்மை இதழ், 15.09.1987, 
பக்கம்-13,14

குறிப்பு:- 'கலிலியோ'விலிருந்து 'எருசலேம்' செல்ல இரண்டு பழைய பாதைகள் இருந்தன. 1.'சமாரியா' வழியாக 90 மைல்கள்.
2.'யோர்தான்' ஆற்று வழியாக 120 மையில்கள்.




வியாழன், 13 ஆகஸ்ட், 2026

கிருத்துவர்கள் சிந்தனைக்கு! - செ.ர.பார்த்தசாரதி

  கிருத்துவர்கள் சிந்தனைக்கு!

"ஒரே மனிதனாலே பாவமும், பாவத்தினாலே மரணமும் உலகத்தில் பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவம், செய்தபடியால் மரணம் எல்லோருக்கும் வந்தது"என்று (ரோமர் 5:12)ல் இருக்கிறது.

இயேசு இறந்தார் என்று (மத்தேயு: 27:50), (15:37 மாற்கு), (லூக்கா:24:46) (யோவான் 19:30) ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளது. அப்படியாகின் முன்னால் கூறப்பட்டபடி, இயேசுவும் பாலம் செய்ததால்தான் இறந்தார் என்று தெரியவருகிறது.

போப், கிருஸ்தவர்கள் ஆகியவர்கள் கூட இறந்திருக்கிறார்கள். இறந்து கொண்டும் இருக்கிறார்கள் ஆகையால் கிருஸ்தவர்களும் பாவம் செய்தவர்கள் என்று தெளிவாகிறது.

"தான் வருமளவும் இவனிருக்க, எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றி வா’ என்றார். ஆகையால், அந்தச் சீசன் மரிப்பதில்லையென்கிற பேச்சு, சகோதரிகளுக்குள்ளே பரம்பிற்று. ஆனா லும், அவன் மரிப்பதில்லையென்று இயேசு சொல்லாமல், நான் வருமளவும் இவனிருக்க, எனக்குச் சித்தமானால், உனக்கென்னவென்று சொன்னார்". என்று (யோவான்:21:22,23 )ல் இருக்கிறது.

இயேசுவின் இரண்டாம் வருகை சமீபத்தில் இருக்கிறது" என்றுதான் கூறுகின்றனர். அப்படியானால் இயேசு மறுமுறை இன்னும் வரவில்லை என்று தெரிய வருகிறது. அப்படியாயின் ‘சீசன்’ இன்றளவும் உயிருடன் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மனிதனை யாராவது, காண்பிக்க தயாரா? 

(எசேக்கியல்: 18:4,20) மற்றும் (ரோமர்: 6:23) ல் 

''பாவத்தின் சம்பளம் மரணம்,. பாவஞ் செய்கிற ஆத்துமாவே சாகும்” என்று, தேவன் கூறியுள்ளார் என்றும் (யோவான் : 5 : 29) "பிரேத குழியிலிருந்து நன்மை செய்பவர்களை ஜீவனை அடையும் படியும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும் படியும், எழுந்திருக்கிறவர்களாக புறப்படுவார்கள்" என்றும் (மத்தேயு: 25: 32, 33, 34 41, 46)ல் "பாவம் செய்தவர்கள் பிசாசிற்காகவும், அவன் தூதர்களுக்காகவும், ஆயத்தம் பண்ணப் பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போவார்கள். நீதிமான்கள் நித்திய ஜீவனை அடைவர்" என்றும் இருக்கிறது.

எசேக்கியல், ரோமர் இரு வரும் பாவஞ் செய்கிற ஆத்துமா சாகும் என்று கூறுகின்றனர். ஆனால் யோவானும், மத்தேயுவும் “ஆத்துமா சாகாது” என்றும், “பாவம் செய்த ஆத்துமா நித்திய ஆக்கினையை அடையும், நன்மை செய்த ஆத்துமா நித்திய ஜீவனை அடையும்” என்றும் கூறுகின்றனர். இவர்களுக்குள் எப்படிப்பட் முரண்பாடு! 

(யோவான்:8:51) ல் “ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே. உங்களுக்குச் சொல்கிறேன். என்றார்’  என்று இருக்கிறது.

யோவான்: 8:51 ல்  இயேசு வார்த்தையைக் கைக்கொண்டால் மரணத்தை காண்பதில்லை’ என்று இயேசு கூறுவதாக கூறி விட்டு, 5:29 ல்

"மரணமே கிடையாது, ஆத்மாவிற்கு ஆக்கினை தான் உண்டு" என்று கூறுகிறார். 

யோவானே இப்படி முன்னுக்கு பின் முரண்பாடாக கூறுகிறார். எசேக்கியல். ரோமர், யோவான், மத்தேயு ஆகிய நால்வரும் ஒருவருக்கொருவர் முரண்பாடாக ஆத்துமாவை பற்றி கூறுகின்றனர் காரணம் என்ன. வென்று புரிகிறதா? காரணம். இதுதான் ஆத்துமா என்பது ஒன்று தனியாக இல்லை. அதனால் அதை மறைப்பதற்காக ஒவ்வொருவரும் தனக்கு தெரிந்த மட்டும் பொய்யை சொல்லி வைத்துள்ளனர். ஆகையால் கிருஸ்தவர்களும், மற்றவர்களும் கோபப்படாமல் சிந்தித்துப் பாருங்கள். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. 

குறிப்பு

: இந்திய வேத காமச் சங்கத்தாரால் வெளியிடப்பட்டு 1978 ல் வெளிவந்த புதிய ஏற்பாட்டிலிருந்து குறிப்பு எடுக்கப்பட்டுள்ளது.

- ர. பார்த்தசாரதி சென்னை-34

- உண்மை இதழ், பக்கம்-31

 இந்திய வேத காமச் சங்கத்தாரால் வெளியிடப்பட்டு 1978 ல் வெளிவந்த பரிசுத்த வேதாகமத்திலிருந்தும்  குறிப்பு எடுக்கப்பட்டுள்ளது.

- செ.ர.பார்த்தசாரதி

- உண்மை இதழ், பக்கம்-31


- விடுதலை ஞாயிறு மலர், 09.04.2015ல் மீண்டும் வெளியீடு

திங்கள், 17 மே, 2021

கிறிஸ்துவும் கிருஷ்ணனும் கற்பனையே

RM119
13/75
'கிறிஸ்துவும் கிருஷ்ணனும் கற்பனையே'

ஆசிரியர் 
மலையாளம் ஜோசப் இடமருகு
தமிழில் அரு.நாராயணசாமி
வெளியீடு அலைகள் 
விலை ரூ55
பக்கம் 72.

*இந்நூல் கிருஷ்ணன்- கிருஸ்து இருவரும் எப்படி இந்தியாவில் ஒரே மாதிரியாக பார்க்கப்பட்டனர். இருவரும் எங்கிருந்து உருவாகினர். எதற்காக உருவாக்கப்பட்டனர். ஏசுவின் வரலாறு என்ன என பல கோணங்களில் ஆய்வு செய்து எழுதப்பட்ட  சாரம் தான் இந்நூல்.   

*ஆசிரியரைப்பற்றி

ஆசிரியர் ஜோசப் இடமருகு அவர்கள் கேரளத்தில் கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தவர். ஆரம்பத்தில் கிறிஸ்துவ வழிபாட்டில் நம்பிக்கை கொண்டு வழிபாடு நடத்தி வந்தார். அதன் விளைவாக அம்மத நூல்களை எல்லாம் ஆர்வமுடன் வாசித்தார். பின்னாளில் விமர்சன கண்ணோட்டத்தோடு பைபிளை படிக்கத் தொடங்கிய பின் அதிலுள்ள குறைகளை கண்டு 'கிறிஸ்து ஒரு மனிதன்' என்ற நூலை எழுதி மதகுருமார்களால் திருச்சபையிலிருந்து விலக்கி  வைக்கப்பட்டார். 

இருப்பினும் ஏசு வாழ்ந்ததாகக் கருதும் ஜெருசலேம் போன்ற இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்து 'கிறிஸ்துவும் கிருஷ்ணனும் கற்பனையே'
என்னும் இந்நூலை எழுதினார்.  

ஆசிரியர் உலக சிந்தனையாளர், இந்திய நாத்திக மையத்தின் இயக்குநர், இந்திய பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் என பல சிறப்புகளை பெற்றவர்.

*நூலின் உப தலைப்புகள் 

*இந்தியாவில் கிருஸ்துவ மதம்
*ஏசுவின் கதை
*கிருஸ்துவும் ஒரு மனிதன் 
*புத்தரும் கிருஸ்துவும்
*புத்த மதம் தோன்றிய வரலாறு 
*ஏசு சரித்திரப் புருஷன் அல்ல
டூரின் பிணப்போர்வை
*கிருஸ்துவ மதத்தின் தோற்றம் 
என்னும் தலைப்புகளில் ஆய்வு செய்து இந்நூலை எழுதியிருக்கிறார்.

*நூலின் உள்ளே

கிருஸ்துவ மதம் பரப்பப்பட்ட எல்லா நாடுகளிலும் முன்பு அங்கே நிலவிய பழமையான மதங்கள் அழிந்து போயின.
கிரேக்கம், ரோமன், எகிப்திய மதங்கள் சான்று. 

அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியாவில் வளர்ந்த கிருஸ்துவம் 1500 ஆண்டுகளாக இந்தியாவில் பிரச்சாரம் செய்தும் 2.6 சதவீத மக்களை மட்டுமே கிருஸ்துவர்களாக மாற்ற முடிந்தது. காரணம் இந்திய மக்களின் இந்து மத உணர்வுகளையே தான் கிருஸ்துவர்களும் வெளியிட்டனர். 

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களால் வணங்கப்படுகிற  கிருஷ்ணனும், கிருஸ்துவும் ஏறக்குறைய ஒரே கதாபாத்திரமாக அமைந்தது தான் பிரதான காரணம். 
மேலும் இந்துவில்  சாதியில் உயர்வு தாழ்வு பார்ப்பது கிருஸ்துவத்திலும் பார்க்கப்பட்டதால் அதில் பிடிப்பு ஏற்படாமல் போனது மிக முக்கிய காரணம்.

*கிருஸ்துவும், கிருஷ்ணனும்
ஒற்றுமைகள்

*கிருஷ்ணன் யது வம்சம்
ஏசு யூத வம்சம்

*இருவர் பிறப்பிற்கும் அசரீரி தோன்றியது 

இருவரும் அரச வம்சம்

இருவரின் தாயாரும் தந்தை இல்லாமல் கர்ப்பம் தரித்தல்

இருவர் பிறக்கும் முன்பும் வானத்தில் நட்சத்திரம் தோன்றுதல்

இருவர் பிறந்த போதும் தேவர்கள், தேவ தூதர்கள் மகிழ்ச்சியில் ஆடினர்

குழந்தை கிருஷ்ணனை மாட்டு இடையர்களும்,
ஏசுவை ஆட்டு இடையர்களும் கண்டு தரிசித்தனர்

கிழக்கில் வந்த அறிஞர்கள் குழந்தை ஏசுவை வணங்கினர் 
நாரதர் குழந்தை கிருஷ்ணனை வணங்கினார்.

அரசன் கம்சன் கிருஷ்ணன் பிறப்பையும், 
அரசன் ஏரோது ஏசு பிறப்பையும் கண்டு பயந்தனர்.

இருவரையும் பாதுகாக்க வேறிடத்தில் வளர்க்கப்பட்டனர்
ஏசு எகிப்து மடூரியா(Muturea),
கிருஷ்ணன் ஸ்தலம் மதுரா

இரு குழந்தைகளும் கொல்லப்பட வேண்டும் என்பதால் அவ்வயது ஒத்த குழந்தைகளை கொல்ல இரு அரசர்களும் கட்டளையிடல்

கிருஷ்ணன் தாய் தேவகிக்கு மாயாதேவி என்றும் பெயர் உண்டு.
ஏசுவின் தாயார் மேரி. மாயாமேரி என்பதாகும்.

இருவரும் நல்லொழுக்கம் உடையவர்களாக போற்றப்படுதல்

இரு தாயாருக்கும் தோழியர் உண்டு 

கிருஷ்ணன் முன்னோடி பலராமன்
ஏசுவின் முன்னோடி ஸ்நாபகன் தோன்றல்

கிருஷ்ணன், ஏசு இருவரும் முறையே அறிஞர், மதகுருமார்களை வாக்குவாதத்தில் தோற்கடித்தல்

ஏசு பாலைவனத்தில் உண்ணாவிரதம் 
கிருஷ்ணன் காட்டில் தவம் புரிதல்

மும்மூர்த்தி தத்துவத்தில் இருவரும் இரண்டாவது அவதாரம்

இருவரும் மனித இனத்தை பாதுகாக்கவே தோன்றினர்.

ஏசு சாத்தான் என்ற பாம்பின் தலையையும், 
கிருஷ்ணன் நாகவடிவ காளிங்கனையும் அழித்தல்.

இருவரும் பாவமில்லாதவர்களாக கணிக்கப்பட்டனர்.

இருவரும் முழுநிறை தெய்வம் முழுநிறை மனிதராக பார்க்கப்பட்டனர்.

கிருஷ்ணன்,ஏசு இருவரும்  குஷ்டரோகியை குணப்படுத்தல்.

இருவரும் இறந்தவரை உயிர்பெறச் செய்தல்.

மரத்தில் இருந்த கிருஷ்ணனை வேடன் அம்பு எய்து கொன்றான்.
மரச்சிலுவையில் கிடந்த ஏசுவை படைவீரன் ஈட்டியால் குத்தினான்.

இருவர் இறப்பின் போதும் துர்நிமித்தங்கள் நடைபெற்றது.

கிருஷ்ணன் மறைவுக்குப்பின் யாதவ வம்சம் சிறப்பு அழிந்தது.
ஏசு மரணத்திற்குப்பின் யூதர்களின் சிறப்பும் முடிந்தது.

பெயர் ஒற்றுமை 

Christ - Cheistna
முதன்முதலில் இந்தியாவிற்கு வந்து சமஸ்கிருதம் படித்த கிருஸ்துவ பாதிரியார்கள் இவ்வொற்றுமையைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். 
Christna - Chrishna 
இரண்டிலும் Chr பொதுவாக வருவதால் Christ என்று எழுதும்போது குழப்பம் வரும் என்பதால் CHA என்ற ஒலிக்கு K என்ற எழுத்து சேர்த்து Krishna என்று எழுதியும் பரப்பியும் வந்தார்கள். 

இந்த ஒற்றுமையில் பார்க்கவேண்டியது ஒருவர் இன்னொரு மதத்தையோ அல்லது இருவரும் வேறு மதத்தையோ பின்பற்றி வந்திருக்க வேண்டும் என்கிறார் ஆசிரியர். 

இங்கே புத்தருக்கும், ஏசுவுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமையை விளக்குகிறார்.
நண்பர்கள் வாசித்து அறிந்துகொள்ள வேண்டுகிறேன்.
இந்தியாவில் ஆரியர்கள் கி.மு 1500ல் வருகின்றனர். அவர்கள் கி.மு.1000ல் இருக்கும்போது எந்த பதிவிலும்  கிருஷ்ணன் பெயர் இல்லை. 
கி.மு. 6ல் புத்தர் தோன்றினார். அக்காலத்திலும் கிருஷ்ணன் இல்லை. 

அதேபோல் ஏசுவின் போதனைகள் உருவாகும் 500 ஆண்டுகளுக்கு  முன்பே புத்தரின் போதனைகள் உருவாகின.

ஆக புத்தர் இந்த இருவருக்கும் முன்பு தோன்றி அவற்றின் கருத்தை உள்வாங்கி கிருஷ்ணன் - கிருஸ்து சிந்தனைகள் உருவாக்கப்பட்டது என்று மிகப்பெரிய ஆய்வை நடத்தி இந்நூலை எழுதியிருக்கிறார் ஆசிரியர். முன்னரே குறிப்பிட்ட அத்தனை தலைப்புகளையும் நான் இங்கே விவரிக்கவில்லை. நண்பர்கள் வாசித்து அறிய வேண்டுகிறேன்.

'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு' என்ற வள்ளுவரின் வரிகளுக்கேற்ப 

வாசிப்போம்! விவாதிப்போம்!
- சண்முக சாமி ராமசாமி குழு இடுகை, வாசிப்பை நேசிப்போம் முகநூல் பதிவு
18.5.21

வியாழன், 25 ஜூலை, 2019

தேவன் ஒருவனே.... ஆனால்.....

#மீள்_பதிவு

ஆச்சிரியமூட்டும் உண்மைகள்....

கிறிஸ்துவ மதம் :-
-----------------------------
     தேவன் ஒருவனே ( இயேசு கிறிஸ்து), ஒரே மதப் புத்தகம் (பைபிள் ) ,உலகெங்கும் ஒரே மதம் (கிறிஸ்துவம்)

   ஆனால்... "லத்தீன் கத்தோலிக்" பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் "சிரியன் கத்தோலிக்" பிரிவு தேவாலயத்துக்குள் செல்ல மாட்டார்கள்.

    இந்த இரண்டு பிரிவினரும் "மார்த்தோமா" இன சர்ச்சுக்குள் செல்வதில்லை.

    இந்த மூவருமே " பெந்தகொஸ்தே " திருச்சபைக்குள் நுழைய முடியாது.

     மேற்கண்ட நான்கு பிரிவினரும் "சால்வேஷன் ஆர்மி " தேவாலயத்துக்குள் செல்ல முடியாது.

      இந்த ஐவரும் "செவன்த்டே அட்வென்டிஸ்ட் " இன சர்சுக்குள் போக மாட்டார்கள்.

     இவர்கள் ஆறு   பிரிவினருமே "ஆர்த்தோடக்ஸ்" பிரிவு ஆலயத்துக்குள் போவதில்லை.

    இந்த ஏழு பிரிவுகளை சேர்ந்தவர்கள் "ஜேகோபைட் " பிரிவினரின் சர்ச்சுக்குள் நுழைவதில்லை.

      இது போல் மொத்தம் 146 பிரிவுகள் கிறிஸ்தவ மதத்தில் மட்டுமே...

      ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்ற பிரிவினருடன் தங்கள் தேவாலயத்தை பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.

    ஆனால்... ..
              தேவன் ஒருவனே ( இயேசு கிறிஸ்து), ஒரே மதப் புத்தகம் (பைபிள் ) ஒரே மதம் (கிறிஸ்துவம்)    
  ???????????????

- ஆறாம் அறிவு, அனிசு அனி, முகநூல் பக்கம், 25.7.19

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

உடைந்த_திரித்துவம்.

இறைவன் சர்வ வல்லமையுள்ளவன். பரிபூரணமானவன். மனிதனை படைத்த இறைவன் அவனுக்கு வழிகாட்ட மனிதர்களில் இருந்தே தன் தூதர்களை தேர்ந்தெடுத்தான்.

மனிதர்கள் தங்களது அறியாமையாலும், அத்தூதர் மீது கொண்ட பாசத்தாலும்  தங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களையே இறைவனுக்கு சமமாக்குகின்றனர். இறைவனால் அனுப்பப்பட்ட  அத்தூதர்களையே இறைவன் என்று சொல்பவர்களை நம்மால் காணமுடிகிறது. இதுப்போன்று இறைவன் என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்ட நபர் தான் இயேசு.

இயேசு தன் வாழ்நாளில் தான் இறைவன் என்று எப்போதும் சொல்லியது இல்லை. இருந்தாலும் அவர் மேல் கண்மூடித்தனமான நம்பிக்கையால் அவரையே இறைவனுக்கு சமமாக்குகின்றனர். இயேசு உட்பட அனைத்து தீரக்கதரிசிகளாலும் போதிக்கப்பட்ட ஒரே இறை கொள்கை  இயேசுவின் காலத்திற்கு பிறகு சில கிறிஸ்தவர்களால்  திரித்துவமாக வழிகேடாயிற்று. ஆயினும் அவர்கள் வேதம் என்று நம்பும்  பைபிளும் திரித்துவத்திற்கு எதிராக தான் நிற்கிறது.

பிதா குமாரன் பரிசுத்த ஆவி இந்த மூவரும் தனித்தனி நபர்களாக இறைத்தன்மையில் சமமானவர்களாக உள்ளனர் என்று சில கிறிஸ்தவர்கள் கூறி கொண்டாலும் இதற்கான ஆதாரம் பைபிளில் எங்கும் இல்லை. இந்த திரித்துவத்திற்கு முரணாண போதனைகளை தான் இயேசு போதித்துள்ளார்.

எல்லா தீர்க்கதரிசிகளாலும் பரிசுத்த ஆவி அறியப்பட்டு இருந்தாலும் இயேசுவுக்கு பிறகே அவரது விசுவாசிகளால் பரிசுத்த ஆவிக்கு இறைத் தன்மை கொடுக்கப்பட்டு திரித்துவத்தின் ஒரு நபரானார். பிதா குமாரன் பரிசுத்த ஆவி இம்மூவரும் இறைத்தன்மையில் சமம் என்று கிறிஸ்தவர்கள் நம்பினாலும் பைபிள்  வேறு விதமாக போதித்துள்ளது.

மத்தேயு 21:10. அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள்.

11. அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.

இயேசுவோடு  வாழ்ந்த அவரது விசுவாசிகள் யாவரும் இயேசுவை தீரக்கதரிசி என்றே நம்பியதாக பைபிள் சொல்கிறது. இயேசுவும் தன் வாழ்நாளில் எப்போதும் தன்னை  கர்த்தருக்கு சமமானவர் என்று சொல்லவில்லை. கர்த்தர் ஒருவரையே வணங்குபவராக இயேசு இருந்தார்.

39. சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். (மத்தேயு 26)

யோவான் 14:28 ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.

மேற்கண்ட பைபிள் வசனத்தில் சிந்திக்கும் மக்களுக்கு நற்போதனை நிச்சயம் உள்ளது. இயேசு கர்த்தரின் அடியாராக வாழ்ந்து அவரையே இயேசு வணங்கினார் என்பதற்கு போதுமான சான்றாகவும் உள்ளது .

இயேசுவை பற்றி தவறாக பேசினால் அது அவர்களுக்கு மன்னிக்கப்படும் ஆனால்  பரிசுத்த ஆவியை பற்றி தவறாக பேசினால் இம்மையிலும் மறுமையிலும் அது மன்னிக்கப்படாது என்று இயேசு கூறுகிறார்.

அதாவது;

மத்தேயு 12:32. எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.

திரித்துவத்தின் ஒரு பாகமாக விளங்கும் இயேசுவை தவறாக பேசினால் அது மன்னிக்கப்படுமாம். மற்றொரு பாகமான பரிசுத்த ஆவியை தவறாக பேசினால் அது மன்னிக்கப்படாதாம். என்ன ஒரு ஏற்றத்தாழ்வு? கிறிஸ்தவர்கள் சிந்திக்க மாட்டார்களா? இந்த வசனத்தில் அவர்கள் நம்பும் திரித்துவம் உடைந்து விட்டது.

உண்மையில் இயேசு யார்?

11. அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.(மத்தேயு 21)

30. "நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான். (குர்ஆன் 19)

உண்மையில் இயேசு யார் என்ற கேள்விக்கு பைபிளும் குர்ஆனும் சொல்லும் ஒரே பதில் அவர் இறைவனால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசி என்பதே.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

⭐⭐எமது தளம் பற்றி⭐⭐

✍இஸ்லாத்திற்கெதிராக அவதூறுகளை பரப்பி வரும் கிறிஸ்தவர்களுக்கு தகுந்த மறுப்பு கொடுக்கும் தளம் இது.

✍இன்னும் அவர்கள் நம்பும் அசத்தியத்தை பைபிளை கொண்டு நிரூபிக்கும் தளம் இது.

✍மாற்று மதத்தவர்களுக்கு  இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு  கொடுக்கும் தளம் இது.

✍எமது பக்கத்தை Like செய்து எம்மோடு இணைந்திருங்கள்.

- சத்தியத்தை நோக்கி, முகநூல் பக்கம்
15.2.18