கிருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 22 நவம்பர், 2020

தேவனுக்கு, கடவுளுக்குக் குமாரன் எதற்கு?


கிருஸ்துவ மதத்தலைவர் ஏசு கிருஸ்து
என்பவர் 2000 ஆண்டுகளுக்கு முன் தகப்பனில்லாமல்,
பரிசுத்த ஆவிக்குப் பிறந்தாராம்.
ஆகவே
அவர் கடவுளுக்கு மகனாம்
(தேவகுமாரனாம்) ஆகவே அவர்
சிலுவையில்
அறையப்பட்டுக்) கொல்லப்பட்டாராம்.
செத்தவர் மறுபடியும் பிழைத்தாராம்.
பல
அற்புதங்களைச் செய்தாராம்.
வியாதிகளைப் பார்வையால்
சவுகரியப்படுத்தினாராம். ஒரு
ரொட்டித் துண்டை ஆயிரக்கணக்கான
பேர்களுக்குக் கொடுத்துப்
பசியாற்றினாராம். குருடர்களுக்கு
கண்ணைக்
கொடுத்தாராம். இப்படி பல
காரியங்கள் செய்தாராம்.
இவற்றையெல்லாம்
நம்பினால் தான் கிருஸ்தவ மதம் இருக்க
முடியும். அறிவைக் கொண்டு
பார்த்தால் தேவனுக்கு, கடவுளுக்குக்
குமாரன் எதற்கு? கடவுள் ஒருவனை
மாத்திரம் குமாரனாக ஆக்குவது ஏன்?
கடவுள் தோன்றி எத்தனையோ காலம்
ஆனபிறகு
அப்போது (2000 வருடங்களுக்கு முன்)
மாத்திரம் எதற்காக மகனை
உண்டாக்கினார்? அதற்கு முந்தின
காலத்தில் ஏன் உண்டாக்கவில்லை?
அப்போதெல்லாம் செத்தவர்கள்
இல்லையா? குருடர்கள் இல்லையா?
பசித்தவர்கள்
இல்லையா? அந்த (கி.பி. 1 – ஆவது)
வருஷம் மாத்திரம் என்ன சிறந்தது?
கடவுள்
செய்யவேண்டியதை – சொல்ல
வேண்டியதை ஒரு மனிதனைக்
கொண்டு மாத்திரம் ஏன்
சொல்ல வேண்டும்? அதுவும் ஒரு
சிலருக்கு மாத்திரம் (நம்பும்படி) ஏன்
சொல்ல
வேண்டும்? அந்தக் காரியங்கள்
இப்போது ஏன் நடப்பதில்லை? இன்று ஏன்
அவர்
வரவில்லை? இப்போது கிருஸ்துவை
ஏற்காதவர்கள், நம்பாதவர்கள்,
வழிபடாதவர்கள்
ஏனிருக்கிறார்கள்? தேவகுமாரனுக்கு
இவ்வளவு தான் சக்தியா?
ஒரு சர்வசக்தியுள்ள தெய்வம், தெய்வத்தால்
அனுப்பப்பட்ட அவதாரம், அம்சம்,
மகன், குமாரன், தூதர், வேதம் ஏன்
உண்டாக்க வேண்டும்? இருந்தால்
இத்தனை வேதங்கள், குமாரர், அவதாரம்,
தூதர்கள், சமயங்கள், மதங்கள்,
போதகர்கள் இருக்க வேண்டிய
அவசியமென்ன என்பதைச் சிந்தித்தால்
இவையெல்லாம்
மூட நம்பிக்கை, அதாவது அறிவைக்
கொண்டு சிந்திக்காமல்
கண்முடித்தனமாய்
நம்ப வேண்டியவை ஆகின்றனவா
இல்லையா? இது மனிதர்
என்பவர்களுக்கு ஏற்றதா
என்று கேட்கிறேன். இதற்காகக்
கோபிப்பதில் பயன் என்ன?
மூடநம்பிக்கை ஒழிய வேண்டுமானால்
மக்களிடம் உள்ள இப்படிப்பட்ட
கருத்துக்கள் ஒழியாமல் எப்படி ஒழிய
முடியும்? அறிவுள்ளவர்களே!
பகுத்தறிவாதிகளே!
சிந்தித்துப்பாருங்கள்! இது சந்திர
மண்டலத்திற்கு
மனிதன் போய் வரும் காலம்;
காட்டுமிராண்டிக் காலமல்ல. எனவே
சிந்தித்துப்பாருங்கள்! பின் சந்ததி
மக்களை மடையர்களாக்காதீர்கள்!
--------------14-06-1971 "உண்மை" இதழில்
தந்தை பெரியார் அவர்கள் எழுதிய
தலையங்கம். "பெரியார் களஞ்சியம்" -
தொகுதி: 2 … பக்கம்:57-62

வெள்ளி, 26 அக்டோபர், 2018

கிறிஸ்தவம் இஸ்லாம் பற்றி பெரியார்...

கிருஸ்துவமதத்தலைவர் ஏசு கிருஸ்து 

என்பவர் 2000 ஆண்டுகளுக்கு முன் தகப்பனில்லாமல்,
பரிசுத்த ஆவிக்குப் பிறந்தாராம்.
ஆகவே
அவர் கடவுளுக்கு மகனாம்
(தேவகுமாரனாம்) ஆகவே அவர்
சிலுவையில்
அறையப்பட்டுக்) கொல்லப்பட்டாராம்.
செத்தவர் மறுபடியும் பிழைத்தாராம்.
பல
அற்புதங்களைச் செய்தாராம்.
வியாதிகளைப் பார்வையால்
சவுகரியப்படுத்தினாராம். ஒரு
ரொட்டித் துண்டை ஆயிரக்கணக்கான
பேர்களுக்குக் கொடுத்துப்
பசியாற்றினாராம். குருடர்களுக்கு
கண்ணைக்
கொடுத்தாராம். இப்படி பல
காரியங்கள் செய்தாராம்.
இவற்றையெல்லாம்
நம்பினால் தான் கிருஸ்தவ மதம் இருக்க
முடியும். அறிவைக் கொண்டு
பார்த்தால் தேவனுக்கு, கடவுளுக்குக்
குமாரன் எதற்கு? கடவுள் ஒருவனை
மாத்திரம் குமாரனாக ஆக்குவது ஏன்?
கடவுள் தோன்றி எத்தனையோ காலம்
ஆனபிறகு
அப்போது (2000 வருடங்களுக்கு முன்)
மாத்திரம் எதற்காக மகனை
உண்டாக்கினார்? அதற்கு முந்தின
காலத்தில் ஏன் உண்டாக்கவில்லை?
அப்போதெல்லாம் செத்தவர்கள்
இல்லையா? குருடர்கள் இல்லையா?
பசித்தவர்கள்
இல்லையா? அந்த (கி.பி. 1 – ஆவது)
வருஷம் மாத்திரம் என்ன சிறந்தது?
கடவுள்
செய்யவேண்டியதை – சொல்ல
வேண்டியதை ஒரு மனிதனைக்
கொண்டு மாத்திரம் ஏன்
சொல்ல வேண்டும்? அதுவும் ஒரு
சிலருக்கு மாத்திரம் (நம்பும்படி) ஏன்
சொல்ல
வேண்டும்? அந்தக் காரியங்கள்
இப்போது ஏன் நடப்பதில்லை? இன்று ஏன்
அவர்
வரவில்லை? இப்போது கிருஸ்துவை
ஏற்காதவர்கள், நம்பாதவர்கள்,
வழிபடாதவர்கள்
ஏனிருக்கிறார்கள்? தேவகுமாரனுக்கு
இவ்வளவு தான் சக்தியா? இது
போலத்தானே
இஸ்லாம் மதம் என்பதும்
சொல்லப்படுகிறது? முகம்மது
கடவுளுக்கு (கடவுளால்
அனுப்பப்பட்ட) தூதராம். கடவுளுக்குத்
தூதர் எதற்கு? குரான் கடவுளால்
தூதரருக்கு (நபிக்கு)ச் சொல்லப்பட்ட
செய்தியாம்.கடவுள் மக்களுக்குச்
செய்தி சொல்லவேண்டுமானால் ஒரு
மனிதர் (தூதர்) வாயினால் தான்
சொல்லச்
செய்யவேண்டுமா? கடவுளால் எல்லா
மனிதருக்கும் ஏககாலத்தில்
தெரியும்படிச்
செய்ய முடியாதா? உலகில் மனிதன்
தோன்றி எத்தனையோ இலட்சம்
ஆண்டுகளுக்குப்
பிறகு ஒரு ஊரிலே, யாரோ ஒரு
சிலருக்கு மாத்திரம் சொல்லும் படி ஏன்
சொல்லுகிறார்? மற்றவர்களுக்கு ஏன்
தெரிவிக்கவில்லை? முகமது நபி
என்பதை
ஏற்றுக் கொண்டு, அவரை
நம்பினவர்களுக்குத்தானே குரான்?
மற்றவர்கள் அதை
ஏற்பதில்லையே! மற்றவர்களுக்குப்
பயன்படுவதில்லையே! ஏன்? கடவுள்
சொல்,
அப்படி ஏன் நம்பச் செய்தவர்களுக்கு
மாத்திரம் தெரிய வேண்டும்? இன்னும்
எத்தனை மக்கள் நம்பியாக வேண்டி
இருக்கிறது! இதுதான் கடவுள்
தன்மையா?
இவையெல்லாம் மனிதத் தன்மையா?
மனிதக் கற்பனையா?
தெய்வத்தன்மையா? ஒரு
சர்வசக்தியுள்ள தெய்வம், தெய்வத்தால்
அனுப்பப்பட்ட அவதாரம், அம்சம்,
மகன், குமாரன், தூதர், வேதம் ஏன்
உண்டாக்க வேண்டும்? இருந்தால்
இத்தனை
வேதங்கள், குமாரர், தூதர், வேதம் ஏன்
உண்டாக்க வேண்டும்? இருந்தால்
இத்தனை வேதங்கள், குமாரர், அவதாரம்,
தூதர்கள், சமயங்கள், மதங்கள்,
போதகர்கள் இருக்க வேண்டிய
அவசியமென்ன என்பதைச் சிந்தித்தால்
இவையெல்லாம்
மூட நம்பிக்கை, அதாவது அறிவைக்
கொண்டு சிந்திக்காமல்
கண்முடித்தனமாய்
நம்ப வேண்டியவை ஆகின்றனவா
இல்லையா? இது மனிதர்
என்பவர்களுக்கு ஏற்றதா
என்று கேட்கிறேன். இதற்காகக்
கோபிப்பதில் பயன் என்ன?
மூடநம்பிக்கை ஒழிய வேண்டுமானால்
மக்களிடம் உள்ள இப்படிப்பட்ட
கருத்துக்கள் ஒழியாமல் எப்படி ஒழிய
முடியும்? அறிவுள்ளவர்களே!
பகுத்தறிவாதிகளே!
சிந்தித்துப்பாருங்கள்! இது சந்திர
மண்டலத்திற்கு
மனிதன் போய் வரும் காலம்;
காட்டுமிராண்டிக் காலமல்ல. எனவே
சிந்தித்துப்பாருங்கள்! பின் சந்ததி
மக்களை மடையர்களாக்காதீர்கள்!
--------------14-06-1971 "உண்மை" இதழில்
தந்தை பெரியார் அவர்கள் எழுதிய
தலையங்கம். "பெரியார் களஞ்சியம்" -
தொகுதி: 2 … பக்கம்:57-6


புதன், 24 அக்டோபர், 2018

கிறிஸ்தவர்களே பதில் சொல்லுங்கள்..!

♦ சந்தேகத்தை தீருங்கள்...?
கிறிஸ்தவர்களே பதில் சொல்லுங்கள்..!

1.ஆகாயத்தையும்,பூமியையும் படைத்த ஆண்டவர் 3 வது நாள் பகலை ஆழ சூரியனையும், இரவை ஆழ சந்திரனையும் படைத்தார்.

♦சந்தேகம் -1சூரியனும் சந்திரனும் இல்லாமல் எப்படி பகலும், இரவும் வரும். பகலும் இரவும் இல்லாமல் எப்படி முதல் 2 நாட்கள் கணக்கிடப்பட்டன...?

2.ஆறு நாட்கள் வேலை செய்துவிட்டு 7 வது நாள் ஓய்வு எடுத்தார்.

♦சந்தேகம் 2 :- நீங்கள் ஏன் வாரத்தின் முதல் நாளே ஓய்வு எடுக்கிறீர்கள்...?

3.சாத்தானின் தூண்டுதலால் தான் ஆதாமும்,ஏவாளும் அந்த கனியை சாப்பிட்டு அவர்களுக்கு வெக்கம்,மானம்,ஆடை போன்ற மனித இயல்புகள் வந்ததாக சொல்கிறீர்கள்.

♦சந்தேகம் 3 :- அப்படி என்றால் உங்கள் ஆண்டவர் வெக்கம், மானம்,ஆடை இல்லாத மனிதரை தானே படைக்க விரும்பினார்.அப்புறம் நீங்கள் ஏன் ஆடை அணிகிறீர்.ஆடை அணிவது தான் சரி என்றால் நீங்கள் சாத்தானாக கருதுபவர் தானே உண்மையான கடவுள்...?

4.இயேசுவை குற்றவாளியாக மன்னனிடம் நிறுத்தும் போது, முதலில் 24 சவுக்கடிகள் கொடுக்க சொல்கிறார்.ஆனால் அதை மக்கள் அனைவரும் ஒன்று கூடி எதிர்ப்பு தெரிவித்து இயேசுவை சிலுவையில் அறைய சொல்கின்றனர்.

♦சந்தேகம் 4 :- மக்களின் கோரிக்கை ஏற்றே தண்டனை வழங்கப்பட்டது.அதே மக்கள் இயேசு சிலுவையில் அறையப்படும் போது அழுததாக சொல்வது யதார்த்தமாக இல்லையே...?

5.அந்த நாட்டில் பெரும் தவறு செய்பவர்கள் எல்லோருமே சிலுவையில் தான் அறையப்படுகிரார்கள்.இயேசு சிலுவையில் அறையப்படும் போது இன்னும் 2 குற்றவாளிகளுக்கும் அதே தண்டனை வழங்கப்பட்டது.

♦சந்தேகம் 5 :- இயேசு மட்டுமே சிலுவையில் அறையப்பட்டதுபோல்,பரிதாபம் ஏற்படுத்தி ஓட்டு வாங்க, மன்னிக்கவும் மக்கள் மனதை மாற்ற நினைப்பதன் நோக்கம்...?

6.ஏசுவை சிலுவையில் வைத்து கொடூரமாக கொல்லப்பட்டதால் சிலுவையை நாங்கள் புனித சின்னமாக வழிபடுகிறோம்.

♦சந்தேகம் 6 :- அப்படி என்றால் , இயேசுவை தூக்கிலிட்டிருந்தால் தூக்கு கயிறை புனித சின்னமாக வணங்கி இருப்பீர்களோ...?

7. இயேசு பிறந்தது டிசம்பர் 25. இறந்தது வெள்ளிகிழமை.

♦சந்தேகம் 7 :- பிறந்ததை மட்டும் தேதி குறிப்பிட்டு கொண்டாடும் நீங்கள்,இறந்தது மட்டும் எப்பவுமே வெள்ளிக்கிழமை வருவதன் அர்த்தம் என்னவோ? (குறிப்பு : இந்துக்கள் பண்டிகைகள் அனைத்தும் நட்சத்திர கணக்குபடியே நடைபெறுகிறது)

8.இயேசு தினமும் தன் தேவனை நினைத்து பிரார்த்தனை செய்வார்.

♦சந்தேகம் 8 :- அப்படி என்றால் இயேசு வணங்கிய தேவன் யார்...?

9. இயேசு சிலுவையில் அறையப்படும்போது என் தேவனே என்னை காப்பாற்றும் என்றும், எந்தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்றும் கத்தினார்.

♦சந்தேகம் 9 :- அப்படி என்றால் இயேசு கடவுளா...?அல்லது இயேசு வணங்கிய தேவன் கடவுளா...?

10.நீங்கள் பிரார்த்தனை செய்துவிட்டு கடைசியாக "பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே என தொடங்கி.... இயேசுவின் மூலம் எங்கள் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளும் எங்கள் பரம பிதாவே" என்று ஜெபத்தை முடிப்பீர்கள்.

♦சந்தேகம் 10 :- இயேசுவின் மூலம் ஜெபத்தை ஏற்றுகொள்ளும் அந்த பரம பிதா யார்...?

- கட்செவி மூலம் வந்தது

திங்கள், 22 அக்டோபர், 2018

கிறிஸ்தவ மதத்தில் ஜாதியுண்டா?

31. 01. 1932- குடிஅரசிலிருந்து....


இந்து மதத்தில்தான், சாஸ்திர சம்பந்தமாகவும், தெய்வ சம்பந்தமாகவும், பலர் கொடுமைப்படுத்தப் பட்ட மக்களாய் அந்த மதத்தை விட்டு வெளியே றினாலொழிய மனிதத்தன்மை பெறமுடியாதவர் களாய் கோடிக்கணக்கான மக்கள் இருப்பதாக உலகம் முழுதும் தெரிந்திருக்கிறது. ஆனால் மிகவும் நாகரிகம் பெற்ற மதமாக அன்பு மதமாக - சகோ தரத்துவம் நிறைந்த மதமாகப் பிரசாரம் பண்ணப் பட்டு வரும் கிறிஸ்தவ மதத்தில் இத்தகைய ஜாதிக் கொடுமை இல்லை என்று பறைசாற்றப்பட்டு வருகிறது. உண்மையிலேயே அந்த மத வேதத் தின்படி - அந்த மத கர்த்தாவான யேசுநாதரின் கொள்கைப்படி அந்த மதத்தில், ஜாதி வித்தியாசம் பாராட்டவோ, ஜாதி வித்தியாசம் காரணமாகத் தாழ்த்தப்பட்ட மக்களைக் கொடுமைப்படுத்தி வைத் திருக்கவோ ஒரு ஆதாரமும் இல்லையென்பதை நாம் அறிவோம்.

இத்தகைய ஒரு மதம் ஜாதி வித்தியாசங்களும், கொடுமைகளும் நிறைந்த இந்தியாவில், அதிலும் தென்னிந்தியாவில் எந்த நிலையிலிருக்கிறது என்றுப் பார்த்தால், இந்து மதத்தில் அண்ணனாகவோ, அப்பனாகவோ, பாட்டனாகவோதான் இருந்து வருகின்றதென்று கூறலாம். இந்து மதக்கோயில்களில் எப்படி ஜாதிக்கு ஒரு இடம் ஒதுக்கப் பட்டிருக்கிறதோ அது போலவே கிறிஸ்தவ மதக் கோயில்களிலும் ஜாதி வித்தியாசம் பாராட்டப்பட்டுத் தனித்தனி இடங்கள் ஒதுக்கப்படுகின்றனவாம். ஆனால் அரசாங்கக் கணக்கில் கிறிஸ்தவர்களுக்கு ஜாதி வாரிக்கணக்குப் போடாமல் எல்லாக் கிறிஸ்த வர்களையும் பொதுவாகக் கிறிஸ்தவர்கள் என்ற தொகுதியிலேயே சேர்க்கப்பட்டிருக்கின்றது. இக் காரணத்தால், தீண்டாத ஜாதியினராகக் கருதப்படும் கிறிஸ்தவர்கள் பொது ஸ்தாபனங்களில் ஒருவித உரிமையும் பெறமுடியாமல், எல்லா உரிமைகளையும் உயர்ந்த ஜாதியாராக இருந்து கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களே அடைந்து வருகிறார்கள்.

எப்படி இந்து மதத்தில் ஒவ்வொரு ஜாதிக் காரர்களும் தங்கள் தங்களுக்குக் கீழுள்ள ஜாதிக் காரர்களின் மேல் வெறுப்பும் வித்தியாசமும் பாராட்டி வருகின்றார்களோ அதுபோலவே கிறிஸ் தவ மதத்தில் புகுந்துள்ளவர்களும், நாயுடு, முதலி யார், பிள்ளை, அய்யர், முதலிய ஜாதி வித்தி யாசங்களை விடாமல் வைத்துக் கொண்டு, ஆதி திராவிடக் கிறிஸ்தவர்களையும், மற்ற தாழ்த்தப்பட்ட வகுப்புக் கிறிஸ்தவர்களையும் வித்தியாசமாக வைத்துக் கொடுமை செய்து வருகின்றனர். இவ்வாறு செய்து வருவதைப் பற்றிய கிளர்ச்சி நீண்டநாளாக நடைபெற்றுங்கூட இன்னும் அம்மத குருமார்கள் இவ்வேற்றுமைகளை ஒழித்து உண்மையான கிறிஸ்தவக் கொள்கைகளை நிலை நிறுத்த முயற்சி செய்யாமலிருந்து வருகிறார்கள்.

ஆகவே இதுவரையிலும் பொறுமையோடு கொடுமைகளை அனுபவித்து வந்த தீண்டாத வகுப்புக் கிறிஸ்தவர்கள் இப்பொழுது கண்விழித்துக் கொண்டு அதிக ஊக்கத்துடன் கிளர்ச்சி செய்வதைக் கண்டு நாம் பாராட்டுகின்றோம். இதற்கு உதாரண மாகச் சென்ற 23.01.1932இல் லால்குடியில் தீண்டப் படாத கிறிஸ்தவர்கள் மகாநாடு கூடியிருப்பதைக் கூறலாம். அம்மகாநாட்டுத் தலைவர் திரு. ஞானப் பிரகாசம் அவர்களும், திறப்பாளர் திருமதி நீலாவதி ராமசுப்பிரமணியம் அவர்களும், வரவேற்புக் குழுத்தலைவர் திரு ஆரோக்கியசாமி அவர்களும் மற்றும் உள்ள உபந்யாசகர்களான திருவாளர்கள் டி. வி. சோமசுந்தரம், டி. பி. வேதாசலம், வி. அய். முனிசாமிப் பிள்ளை முதலிய பலரும் தீண்டப்படாத கிறிஸ்தவருக்குள்ள குறைகளை எல்லாம் விளக் கமாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள். ஆகையால் இனியாவது அம்மத குருமார்கள் தீண்டாதவர்க்குள்ள குறைகளை நீக்கி மதக் கொள்கைப்படி யாதொரு வேற்றுமையையும் பாராட்டாமல் அவர்களையும் நடத்துதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் அல்லது அரசாங்கத்தார் அவர்கள் விரும்புகிறபடி தீண்டப்படாத கிறிஸ்தவர்களும் மற்ற ஆதிதிரா விடர்களுக்குக் காட்டுவதைப்போல தனிச்சலுகை காட்ட முன் வரவேண்டும் என்று எடுத்துக்காட்ட விரும்புகிறோம்.

கடைசியாக, தீண்டப்படாத கிறிஸ்தவர்களுக்கும் ஒரு வார்த்தை சொல்லி முடிக்கிறோம், தீண்டப்படாத கிறிஸ்தவர்களின் குறைகள் நீங்காவிட்டால் அம் மதத்திலுள்ளவர்கள் நீக்க முற்படா விட்டால் இந்து மத ஆதிதிராவிடர்களை எந்த வகையில் தங்கள் மேல் சுமத்தப்பட்டிருக்கும் மதக் கொடுமைகளையும் ஜாதிக் கொடுமைகளையும் நீக்கிக் கொள்ள விரும்பு கிறார்களோ, அந்த வகையிலேயே தீண்டப்படாத கிறிஸ்தவர் களுக்கும் தங்கள் குறைகளை நீக்கிக் கொள்ள முயலுவதே சமத்துவம் பெறுவதற்கு ஏற்ற வழியாகும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

- விடுதலை நாளேடு, 20.10.18

சனி, 15 செப்டம்பர், 2018

கிறிஸ்தவ மதத்தில் ஜாதியுண்டா?



31. 01. 1932 - குடிஅரசிலிருந்து..

இந்து மதத்தில்தான், சாஸ்திர சம்பந்த மாகவும், தெய்வ சம்பந்தமாகவும், பலர் கொடுமைப்படுத்தப்பட்ட மக்களாய் அந்த மதத்தை விட்டு வெளியேறினா லொழிய மனிதத்தன்மை பெறமுடியாதவர் களாய் கோடிக்கணக்கான மக்கள் இருப்ப தாக உலகம் முழுதும் தெரிந்திருக்கிறது. ஆனால் மிகவும் நாகரிகம் பெற்ற மதமாக அன்பு மதமாக - சகோதரத்துவம் நிறைந்த மதமாகப் பிரசாரம் பண்ணப்பட்டு வரும் கிறிஸ்தவ மதத்தில் இத்தகைய ஜாதிக் கொடுமை இல்லை என்று பறைசாற்றப்பட்டு வருகிறது. உண்மையிலேயே அந்த மத வேதத்தின்படி - அந்த மத கர்த்தாவான யேசுநாதரின் கொள்கைப்படி அந்த மதத்தில், ஜாதி வித்தியாசம் பாராட்டவோ, ஜாதி வித்தியாசம் காரணமாகத் தாழ்த்தப்பட்ட மக்களைக் கொடுமைப்படுத்தி வைத்திருக் கவோ ஒரு ஆதாரமும் இல்லையென்பதை நாம் அறிவோம்.

இத்தகைய ஒரு மதம் ஜாதி வித்தியா சங்களும், கொடுமைகளும் நிறைந்த இந்தியாவில், அதிலும் தென்னிந்தியாவில் எந்த நிலையிலிருக்கிறது என்றுப் பார்த்தால், இந்து மதத்தில் அண்ணனாகவோ, அப்ப னாகவோ, பாட்டனாகவோதான் இருந்து வருகின்றதென்று கூறலாம். இந்து மதக்கோயில்களில் எப்படி ஜாதிக்கு ஒரு இடம் ஒதுக்கப் பட்டிருக்கிறதோ அது போலவே கிறிஸ்தவ மதக் கோயில்களிலும் ஜாதி வித்தியாசம் பாராட்டப்பட்டுத் தனித்தனி இடங்கள் ஒதுக்கப்படுகின்றனவாம். ஆனால் அரசாங்கக் கணக்கில் கிறிஸ் தவர்களுக்கு ஜாதி வாரிக்கணக்குப் போடாமல் எல்லாக் கிறிஸ்தவர்களையும் பொதுவாகக் கிறிஸ்தவர்கள் என்ற தொகுதியிலேயே சேர்க்கப்பட்டிருக்கின்றது. இக்காரணத்தால், தீண்டாத ஜாதியினராகக் கருதப்படும் கிறிஸ்தவர்கள் பொது ஸ்தாபனங்களில் ஒருவித உரிமையும் பெறமுடியாமல், எல்லா உரிமைகளையும் உயர்ந்த ஜாதியாராக இருந்து கொண்டி ருக்கும் கிறிஸ்தவர்களே அடைந்து வரு கிறார்கள்.

எப்படி இந்து மதத்தில் ஒவ்வொரு ஜாதிக்காரர்களும் தங்கள் தங்களுக்குக் கீழுள்ள ஜாதிக்காரர்களின் மேல் வெறுப்பும் வித்தியாசமும் பாராட்டி வருகின்றார்களோ அதுபோலவே கிறிஸ்தவ மதத்தில் புகுந் துள்ளவர்களும், நாயுடு, முதலியார், பிள்ளை, அய்யர், முதலிய ஜாதி வித்தியாசங்களை விடாமல் வைத்துக் கொண்டு, ஆதிதிராவிடக் கிறிஸ்தவர்களையும், மற்ற தாழ்த்தப்பட்ட வகுப்புக் கிறிஸ்தவர்களையும் வித்தியாசமாக வைத்துக் கொடுமை செய்து வருகின்றனர். இவ்வாறு செய்து வருவதைப் பற்றிய கிளர்ச்சி நீண்டநாளாக நடைபெற்றுங்கூட இன்னும் அம்மத குருமார்கள் இவ்வேற்று மைகளை ஒழித்து உண்மையான கிறிஸ்தவக் கொள்கைகளை நிலை நிறுத்த முயற்சி செய்யாமலிருந்து வருகிறார்கள்.

ஆகவே இதுவரையிலும் பொறுமை யோடு கொடுமைகளை அனுபவித்து வந்த தீண்டாத வகுப்புக் கிறிஸ்தவர்கள் இப் பொழுது கண்விழித்துக் கொண்டு அதிக ஊக்கத்துடன் கிளர்ச்சி செய்வதைக் கண்டு நாம் பாராட்டுகின்றோம். இதற்கு உதாரண மாகச் சென்ற 23. 01. 1932இல் லால்குடியில் தீண்டப்படாத கிறிஸ்தவர்கள் மகாநாடு கூடியிருப்பதைக் கூறலாம். அம்மகாநாட்டுத் தலைவர் திரு. ஞானப் பிரகாசம் அவர்களும், திறப்பாளர் திருமதி நீலாவதி ராமசுப்பிரமணியம் அவர்களும், வரவேற்புக் குழுத்தலைவர் திரு ஆரோக்கிய சாமி அவர்களும் மற்றும் உள்ள உபந்யா சகர்களான திருவாளர்கள் டி.வி.சோம சுந்தரம், டி. பி. வேதாசலம், வி. அய். முனி சாமிப்பிள்ளை முதலிய பலரும் தீண்டப் படாத கிறிஸ்தவருக்குள்ள குறைகளை எல்லாம் விளக்கமாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள். ஆகையால் இனியாவது அம்மத குருமார்கள் தீண்டாதவர்க்குள்ள குறை களை நீக்கி மதக் கொள்கைப்படி யாதொரு வேற்றுமையையும் பாராட்டாமல் அவர் களையும் நடத்துதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் அல்லது அரசாங்கத்தார் அவர்கள் விரும்புகிறபடி தீண்டப்படாத கிறிஸ்தவர்களும் மற்ற ஆதிதிராவிடர் களுக்குக் காட்டுவதைப்போல தனிச்சலுகை காட்ட முன் வரவேண்டும் என்று எடுத்துக் காட்ட விரும்புகிறோம்.

கடைசியாக, தீண்டப்படாத கிறிஸ்தவர் களுக்கும் ஒரு வார்த்தை சொல்லி முடிக்கிறோம், தீண்டப்படாத கிறிஸ்தவர் களின் குறைகள் நீங்காவிட்டால் அம்மதத் திலுள்ளவர்கள் நீக்க முற்படா விட்டால் இந்து மத ஆதிதிராவிடர்களை எந்த வகையில் தங்கள் மேல் சுமத்தப்பட்டிருக்கும் மதக் கொடுமைகளையும் ஜாதிக் கொடுமை களையும் நீக்கிக் கொள்ள விரும்புகிறார் களோ, அந்த வகையிலேயே தீண்டப்படாத கிறிஸ்தவர் களுக்கும் தங்கள் குறைகளை நீக்கிக் கொள்ள முயலுவதே சமத்துவம் பெறுவதற்கு ஏற்ற வழியாகும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

- விடுதலை நாளேடு, 15.9.18

புதன், 12 செப்டம்பர், 2018

எதார்த்தவாதியும் கிறிஸ்தவ மத போதகரும் பேசியது

 ஓர் சம்பாஷணை 05.04.1931 -குடிஅரசிலிருந்து...


எதா : அய்யா தங்கள் வேதம் என்று சொல்லப்படும் பைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது.

போதகர் : பழைய காலத்திலே தேவ ஆவியால் ஏவப்பட்ட பல தீர்க்க தரிசிகளைக் கொண்டும் கிறிஸ்துவின் சீடர்களைக் கொண்டும் பிந்திய அப்போஸ்தலரைக் கொண்டும் எழுதப்பட்டது.

எதா : சரி தீர்க்கதரிசிகள் என்பவர் சில விடங்களில் தெய்வத்திற்கு பயப்படாத வர்கள் தானே

போதகர் : இல்லை சார் எப்பொழுதும் தெய்வத்துக்கு பயப்படுகிறவர்கள்தான்.

எதா : நல்லது அப்படியானால் ஆபிரகாம் ஒரு தீர்க்கதரிசிதானே.

போதகர் : ஆம். வாஸ்தவம்தான். ஆனால், அவ னை(ரை) சில ஆராய்சியாளர் தன் தகப்பனின் மறு மனையாட்டியின் மகளைக் கல்யாணம் செய்ததாகக் குறை கூறுவார்கள்

எதா : அதைப்பற்றி இப்பொழுது கவலை இல்லை. மானிடன் இயற்கையில் சகோ தரியைக் கல்யாணம் செய்தேதான் உற்பத்தி ஆகி இருக்கலாம்.

போதகர் : அப்படியானால் ஆபிரகாமைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியதென்ன? எதா : உண்மையாக அவன் ஒரு தீர்க்க தரிசிதானே.

போதகர் : ஆம், வாஸ்தவம்தான். ஆதி யாகமம் 2ஆம் அதிகாரம் 7ஆம் வசனத்தில் (கடவுளே) தேவனே அவன் ஒரு  தீர்க்கதரிசி என்பதாய் சொல்லியிருக்கிறார்

எதா : அந்த ஆபிரகாமே தானே ஆதியா கமம் 21ஆம் அதிகாரம் 11ஆம் வசனத்தில் இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும் பொருள்படப் பேசி யதை தாங்கள் வாசித்த துண்டா? போதகர் : அ. ஆ.. ஆம் வாசித்ததுண்டு ஆனால், அவன் மனைவி  சாரா அழகுள்ளவள். அதற்காகப் பயந்து சொல்லியதுண்டு.

எதா : மனைவி அழகானால் மனிதர்கள் மனிதர்களுக்குப் பயந்து தெய்வத்திற்குப் பயப்பட வேண்டியதில்லையா?

போதகர் :  சார் அது பழைய ஏற்பாட்டில் உள்ளது. புதிய ஏற்பாட்டில் உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள்.

எதா : சரி அய்யா நான் படிக்கிறேன். அப் படிப்பட்டவர்களாலேதானே உங்கள் பைபிள் எழுதப்பட்டது. போதகர்: தெய்வமில்லாத காலமிது (என்ப தாய் முணுமுணுத்துக்கொண்டு  நழுவி விடுகிறார்.)

எதா:  பைபிள் காலத்தில் தெய்வப் பயமில்லாத இடமிருந்து இப்பொழுது காலம்  வந்து விட்டது  என்பது உங்கள் அனுபவம். ஆனால் எங்களுக்குத் தெய்வ கவலையில் லாத (காரியமே) வாழ்க்கையே வேண்டும்  என்பது எங்கள் துணிபு.

-  விடுதலை நாளேடு, 7.9.18