வியாழன், 24 அக்டோபர், 2019

ஆன்மீக அரசியல் - ஆத்துமா ஆன்மிகம் ஆனது,

ஆன்மிக அரசியல்

(மோடி, அமித்ஷா இணைந்து செய்யும் அரசியல் பகுத்தறிவு அரசியல் இல்லை. நடிகர் ரஜினிக்குப்பிடித்த ஆன்மிக அரசி யல் தான்! அந்த ஆன்மிக அரசியலுக்குக் கருவாக இருக்கும் ஆத்துமா எனும் மூடநம் பிக்கை இருளை விரட்ட வெளிச்சம் தரும் பகுத்தறிவு சிந்தனைகள் இங்கே தரப்பட்டு உள்ளது)

ஆத்மா

ஆத்மா என்பதுபற்றிப் பேசப் புறப்பட் டால் பிரத்தியட்ச அனுபவத்திற்கும், அறி வுக்கும் அதீதப்பட்டதாக இருப்பவைக ளைப் பற்றியேதான் பேச வேண்டியிருக்கும்.

ஏனெனில், அது அறிவையும் அனுபவத் தையும் தூர வைத்துவிட்டு, வெறும் நம் பிக்கை மீதே ஒப்புக்கொண்டு பேசவேண் டியதாக இருக்கிறது.

எதுபோலென்றால், கடவுள் என்பதைப் போலவே. அதாவது, ஒரு வஸ்துவாக - பொருளாக இல்லாததை ஒரு சக்தியாகக் கருதி, அதாவது, “கண், மூக்கு, காது, வாய், கை, கால், உடல் ஒன்றும் இல்லாமல், கண்களுக்கும் தெரியாததாய், மனதுக்கும் அடங்காததாய் இருக்கும் ஒரு வஸ்துவே கடவுள் என்பது போல்தான் ஆத்மாவும் ஒரு வஸ்துவாக இல்லாமல், ஒரு உருவமாக இல்லாமல், சக்தியாகக்கூட இல்லாமல், “கண் களுக்குத் தெரியாததும், மனத்துக் குட்படா ததும், காரண காரியங்களைக் கொண்டுகூட ஸ்தாபிக்க முடியாததுமாய் இருக்கிற ஒரு சூட்சுமப் பொருள் என்று வழங்கப்படுகிறது. இது இந்தப்படி ஒன்று இருக்கிறது என்பதை நம்பியாக வேண்டு மேயல்லாமல், விவகா ரம், விசாரணை ஆகியவைகளைக் கொண்டு சிந்தித்துப் பார்த்து நம்புவது என்பது முடியா ததாய் இருக்கிறது.

- தந்தை பெரியார், நூல்: தத்துவ விளக்கம்

பைத்தியக்காரனுக்கு

கள் ஊற்றியது போல்

ஆத்மா இருக்கிறது; அது சாவது கிடை யாது. மனிதன் செய்த நன்மை தீமைக்கான தண்டனையை ஏற்று மோட்சம், நரகம் சென்று அனுபவிக்கிறது என்றும், அவன் ஆத்மாவானது இன்னொரு உடலுக்குச் சென்று மறு பிறவி எடுத்து இங்கு வந்து அவன் செய்த பாவத்திற்கேற்ப நாய், கழுதை, பூச்சி, புழுவாய்ப் பிறந்து அனுப விக்கிறது என்றும், மனிதன் அவனவன் விதிப்படிச் சாவான், விதிப்படிதான் நடந்து கொள்வான் என்றும் இப்படிப் பைத்தியக் காரனுக்கு கள் ஊற்றியது போல் உளறிக் கொட்டியிருக்கிறான்.

- தந்தை பெரியார்  (விடுதலை, 17,6,1970)

ஒரு பொய்யை

நிலை நிறுத்த பல பொய்

ஆத்மா என்பது ஒரு பொய். மதக் கற்பனைக்கு ஒரு பொய்ப் பாதுகாப்பே அல்லாமல் வேறல்ல. ஒரு பொய்யை நிலை நிறுத்தப் பல பொய் பேச வேண்டியிருப்பது போல், மதத் தத்துவம் என்னும் பொய்யை நிலை நிறுத்தவே ஆத்மா மோட்சம், நரகம், மறு பிறவி, விதி, தர்மம் என்பதாகப் பொய்க் களஞ்சியக் கற்பனைகளை ஏற்படுத்த வேண்டிய தாயிற்று.

- தந்தை பெரியார்

(விடுதலை, 6.3.1966)

ஆத்மா அர்த்தமற்ற வார்த்தை

ஆத்மா என்பது ஒரு வஸ்துவல்ல ; பொருள் அல்ல; அது சுதந்திரம், அறிவு, உணர்ச்சி முதலாகியவைகளை உடைய தல்ல என்பதோடு அது பெரிதும் அர்த்த மற்ற வார்த்தை என்றே நமக்குக் காணப்படு கிறது.

- தந்தை பெரியார்  (விடுதலை, 6.12.1953)

ஆத்மா எப்படி

அனுபவிக்க முடியும்?

ஆத்மா என்பது கண்ணுக்குத் தெரியா தது என்றும் சரீரம், உருவம், குணம் இல்லா தது என்றும் சொல்லப்பட்டிருக் கிறதே சரீ ரம் உருவம் இல்லாததற்கு நாம் பார்ப்பனரி டம் கொடுக்கும் அரிசி, பருப்பு, செருப்பு, விளக்குமாறு ஆகியவை எப்படிப் போய்ச் சேரும்? அவற்றை ஆத்மா எப்படி அனு பவிக்க முடியும்?

- தந்தை பெரியார்  (விடுதலை, 14.2.1954)

மனிதனை பயமுறுத்தவே ஆத்மா

உலகில் மனிதன் மட்டும் சாவது இல்லை; பிறப்பது இல்லை. ஏராளமான சீவன்கள், மிருகங்கள், மரம், செடி, கொடி கள் யாவும் மடிந்து சாகின்றன. மனிதனுக்கு எப்படி ஆத்மா இருக்கிறது என்கின்றானோ அது போன்று இவைகளுக் கெல்லாம் ஆத்மா இருக்க வேண்டுமே? அப்படி இல்லை யென்றால் அவைகளுக் கெல்லாம் இல்லாத ஆத்மா மனிதனுக்கு மட்டும் இருக்க வேண்டிய அவசியம் என்ன வென்று பார்த்தால் கடவுளிடம் மனிதனுக் குப் பயம் ஏற்பட வேண்டுமானால் அதற் கொரு வேலை வேண்டும். அதற்கு வேலை கொடுக்கவும் மனிதனைப் பயமுறுத்தவும் அயோக்கியனால் ஏற்பாடு செய்யப் பட்டது தான் ஆத்மா வாகும்.

- தந்தை பெரியார் (விடுதலை, 17.6.1970)

ஆத்மா - ஆத்மார்த்தம் - ஆன்மா - ஆன்மிகம்!

ஆத்மா என்பதைப் போல மனத்தைக் குழப்பும் சொல் - தத்துவம் உலகில் வேறு எதுவும் கிடையாது.

கடவுள், மோட்சம், நரகம், தேவதைகள், பிசாசுகள் என்ற வரிசையில் வைக்கப்பட வேண்டிய கற்பனைகளில் இதுவே முதல் இடத்தைப் பெற மிகவும் தகுதி வாய்ந்த ஒன்றாகும்!

இல்லாத ஒரு கற்பனை, மனித குலத்தை எத்தனை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக படாத பாடுபடுத்தி, மனிதனின் அறிவுத் திறனுக்கு விலங்கிட்டுள்ளதே என்று எண் ணுகையில் மிகவும் வேதனைப்பட வேண்டி யுள்ளது!

இது உண்மை அல்ல; மனிதனின் அச் சம் காரணமாக ஏற்பட்ட ஒன்று என்பதற்கு முதல் ஆதாரம், அது ஒவ்வொரு நாட்டில், ஒவ்வொரு கால கட்டத்தில், ஒவ்வொரு மதத்தவருக் கும் ஒவ்வொரு மாதிரியாகத் தோன்றி அதையொட்டி அவர்கள் எழுதி யுள்ளதும், பேசி வருவதும் போதித்து உள் ளதுமேயாகும்.

உண்மை என்றால் அது ஆளுக்கு ஆள் மாறுபட முடியாது; கூடாது!

ஆத்மாபற்றிய வரையறை, இலக்கணம், விளக்கம் ஒன்றுக்கு மற்றொன்று குழப்ப மாகவும், முரணானதாகவும் உள்ளதே!

ஆனால், பொதுவாக எல்லா மதங்களும் ஒப்புக் கொள்ளும் ஆத்மாவின் பலன், நல்லது, கெட்டது என்பதை அதுவே நிர்ண யிக்கிறது என்றும், மனித உடலில் தற்காலி கமாகக் குடியிருக்கும் அது (ஆத்மா) மனித னின் இறப்புக்குப் பிறகு அவனை விட்டு விட்டுப் போய் விடுகிறது என்பதே!

அதற்குப் பால் வேற்றுமை இல்லை. அது உடலி லிருந்து உயிர் பிரிந்தவுடன், எங்கோ சென்று தற்காலிக உறைவிடத் திலோ அல்லது மோட்சம் அல்லது நரகத் திற்கோ சென்று தங்கி விடுகிறது! அது மீண்டும் உலகில் வந்து புதுப்பிறவி ஆகிறது என்று --இம்மதங்களில் பல நம்புகின்றன.

ஆத்மா, மோட்சம், நரகம்,

மறுபிறப்பு, பிதிர்லோகம்

ஆகியவைகளைக்

கற்பித்தவன் அயோக்கியன்,

நம்புகிறவன் மடையன்,

இவற்றால் பலன் அனுபவிக்கிறவன்

மகா மகா அயோக்கியன்.

- தந்தை பெரியார்

மரணம் என்பது முடிவல்ல; அது உட லுக்குத்தான்; ஆத்மாவுக்குக் கிடையாது என்று மதவாதிகள் நம்புகின்றனர்; - கூறு கின்றனர்; பரப்புகின்றனர்!

ஆத்மா பற்றிய விசாரணை அது எப்படி மனித வாழ்வின் நல்லது கெட்டதுகளையும், நன்மை தீமைகளையும் புதுப்புதுப் பிறவி கள் - அடுத்து எடுக்க வேண்டியவைகளை யும் நிர்ணயிக்கிறது என்பதை பற்றியதே யாகும்

ஆத்மா என்பதற்கு ஆங்கிலத்தில் ஸ்பி ரிட்” (Spirit) என்று கூறுகின்றனர். அதனால் ஆத்மாபற்றிய விவாதத்தை   Spritual Enquiry of Discussion என்று படித்த பலரும் கூட கூற நாம் கேட்கிறோம்.

இந்த  என்ற செல்லே, ஒரு இலத்தீன் மொழிச் சொல் ஆகும்; இலத்தீனிய மொழிச் சொல்லில் மூச்சை இழுத்து விடுதல் என்பதைத் தான் குறிப்பதாகும் !

உடலில் மூச்சு உள்வாங்குதல், வெளி விடுதல் என்பதுதான் மனிதன் உயிருடன் வாழ்கின்றான் என்பதற்கு அடையாளம். மூச்சு நின்று விட்டால் “அவன் செத்துப் போய் விட்டான் என்கிறோம்! அதாவது மூச்சு நின்று விட்டது என்று அறிவிக்கிறோம்!

மதவாதிகள், சாமியார்கள், தத்துவ வாதிகள் ஆகிய மூவரும் காலங் காலமாகத் தொடர்ந்து இந்த விசாரணையைத் தங் களது தொழிலாகவும், தொடர் பணியாக வும், தங்களை மற்ற மனிதர்களிடத்திலிருந்து வேறுபடுத்தி உயர்த்திக் காட்டும் ஏணியா கவும் பயன்படுத்திக் கொள்ள நல்ல “மூல தனமாக“க் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்!

மத குருமார்கள், மதவாதிகள் மீது நாளுக்கு நாள் வெறுப்பு அதிகமாகி வருவ தால், அதே பெயரில் தங்களது சுரண்டல் வாழ்க்கையை நடத்தாது, “ஆன்மிகம்“ என்ற ஒரு சொற் றொடரை - ஆத்மார்த்தம்‘ என்பதனைத் தமிழ்ப்படுத்தி ஆன்மா வாக்கி, அது பற்றிய ஆராய்ச்சியினை ஆன்மிகம் என்று கூறி, மூடநம்பிக்கை என்ற விஷ உருண்டையை - சர்க்கரைப் பூச்சு பூசித் தந்து பெரும்பாலான மக்களை - விரக்தியிலும் வேதனையிலும் வாடு வோருக்கு - ஏதோ புதுவழி காட்டப் புறப் பட்டவர்களாகத் தங்களைக் காட்டிக் கொண்டு நவீனச் சாமியார் வேடத்தில் நன்கு மக்களை ஏமாற்றுகின்றனர்!

- கி.வீரமணி, நூல்: ஆத்மா ஓர் ஆராய்ச்சி

மரணத்திற்குப் பிறகு மறுவாழ்வு உண்டா?

நீங்கள் நம்புகிறீர்களா?

நம்பவில்லை; நம்புவதற்கு ஆதாரமில்லை.வாழ்வை உணரும் கருவிதான் உடம்பு.

அய்ம்பூதங்களோடு உடம்புக்குள்ள தொடர்பனுவம்தான் வாழ்வு.

ஒவ்வொரு புலனும் ஓர் உலகம்.

செவிப்புலன் இழந்தால் ஒலி செத்துப் போகிறது.

விழிப்புலன் இழந்தால் ஒளி உலகம் இருண்டு போகிறது.

உடம்பேகழிந்துபோனால் உணர முடியுமா உலக வாழ்வை? மரணத்திற்குப் பிறகு என்ன நேர்கிறது உடம்புக்கு?

மூச்சு நின்ற 36 மணி நேரத்தில் ஈக்கள் முட்டையிடுகின்றன சடலத்தில்.. 60 மணி நேரத்தில் இட்ட முட்டையிலிருந்து லார்வாக்கள் வெளிவருகின்றன. நகங்கள் கழன்று விடுகின்றன - மூன்று நாட்களில், ஈறுகள் தொலைகின்றன.

நான்கு நாட்களில். அய்ந்தே நாட்களில் திரவமாய் உருகித் தேங்கிவிடுகிறது மூளை. ஆறே நாட்களில் மொத்த உடம்பும் பச்சை பூத்துப்போக, வாயுக்களால் வீங்கி வெடிக்கிறது வயிறு கழன்று கபாலத்துக்குள் விழுந்து விடுகின்றன கண்கள்.

இரண்டே மாதங்களில் உடம்பே அழுகி உருகித் திரவப் பொருளாகிவிட என்னை அடையாளம் தெரிகிறதா என்று எஞ்சி நிற்கிறது எலும்பு

வாழ்வின் கருவியாகிய உடம்பே அழியும் போது எங்ஙனம் சாத்தியம் இன்னொரு வாழ்வு?

உயிர் அழியாது எனில் அது என்ன திடப்பொருளா திரவப் பொருளா - இன்னொரு பாண்டத்தில் இட்டு வைக்க? மரணத்திற்குப் பிறகு வாழ்வு என்பது வசதியான கற்பனை என்றே கருதுகிறேன்.

மனித குலம் வாழும்போதே வாழ்வ தற்கு என்ன வழி என்றே ஏங்குகிறேன்.

- கவிப்பேரரசு வைரமுத்து

நூல் : பாற்கடல்

- விடுதலை ஞாயிறு மலர் 19 10 19

வெள்ளி, 11 அக்டோபர், 2019

பிள்ளையார் 'குணக்களஞ்சியம்'

மயிலாடன்
இந்தத் தலைப்பில் ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜய பாரதம்‘ பிள்ளையாரின் குண விஷயங்களை வித்தாரமாக எழுதித் தள்ளியுள்ளது.

1. பிள்ளையாரை மனதார நினைத்தாலே போதும் விக்கினங்களிலிருந்து காப்பார் (விக்னேஷ்வரான விநாயகன் உண்டியலை அபேஸ் செய்தபோது அவர் சக்தி எங்கே போனதாம்?).

2. அரக்கர்களை அழித்தவன் ஆதலால் பிள்ளையாரை நினைத்தால் வீரம் கிட்டும் (கடவுளின் வேலை சண்டை போடுவதும், அழிப்பதும் தானா?)

3. விநாயகரின் பெரிய தலையே அவர் ஞானம் உடையவர் என்பதற்கு அடையா ளம். (பெரிய தலை இருந்தால் ஞானம் என்று எந்த முண்டம் சொன்னது?).

4. பார்ப்பதற்கே ஒரு கம்பீரம் நிறைந்த அழகிய உருவம் கொண்டவர் பிளளையார் (பிள்ளையார் போல குழந்தை பிறந்தால் கொஞ்சுவார்களா - கழுத்தை முறித்துக் கொல்லுவார்களா?).

5. சமதிருஷ்டி உடையவரை மீறி உள்ளே நுழைந்த தந்தையானாலும் தடுக்கக் கூடியவர் (பார்வதி தேவியார் குளிக்கும்போது உடலின் அழுக்கைத் திரட்டி உருவாக்கப்பட்டவர் தான் பிள்ளை யாராம் - இருக்கட்டும். பார்வதி தேவி குளிக்கும் இடத்திற்கு சிவன் சென்ற போது அவனைத் தடுத்து நிறுத்தினான் பிள் ளையார் என்பதைத்தான் ‘விஜயபாரதம்‘ இப்படி எழுதியிருக்கிறது. அந்த சக்தி பிள்ளையாருக்கு இருந்தால் தடுத்த பிள்ளையாரின் கழுத்தை ஒரே வெட்டாக வெட்டித் தள்ளினானே சிவன், அப் பொழுது இந்தப் பிள்ளையாரின் சக்தி ‘லீவு’ எடுத்துக் கொண்டு போய் விட்டதா?)

6. உதவும் குணம் உடையவராம் இந்த விநாயகர், அகத்தியரின் கமண்டலத்தில் அடைபட்டு ஆணவம் நீங்கப் பெற்ற காவிரியை மீண்டும் ஓட வைத்தவர் (காவிரி பிரச்சினைக்காக இவ்வளவுப் போராட்டம் ஏன்? விநாயகனுக்குக் கொழுக்கட்டை வைத்துப் பூஜை போட்டால் தமிழ்நாட்டில் காவிரி கரை புரண்டு ஓட இவ்வளவு எளிதான வழி இருக்கிறதே - இதனை ‘விஜயபாரதம்‘ கையாண்டு கருணை மழை பொழிய செய்யக் கூடாதா?)

7. புதுமையாக சிந்தித்தார்: தாய் தந் தையை சுற்றி வந்தாலே அகில உலகையும் சுற்றி வந்த பேறு கிடைக்கும் என உணர்த் தியவராம் இந்தத் தொந்தி கணபதி. (ஒரு மாங்கனிக்காக விநாயகனும் முருகனும் சண்டை போட்டபோது, எனது முடியை முதலில் தொட்டு வருபவர்களுக்குத்தான் இந்த மாங்கனி என்றாராம் அப்பா சிவன். முருகன் மயிலேறி பறந்தானாம். விநாய கனோ தன் தாய் தந்தையரைச் சுற்றி முதலில் வந்தானாம். இதைத்தான் இப்படி ஜோடிக்கிறது ஆர்.எஸ்.எஸ். ஏடு. இதில் விநாயகனின் தந்திரம் இருக்கிறதே தவிர போட்டியை வெல்லும் ஆற்றல் இல் லையே! சரி, விநாயகன் அறிவாளி என்றால் அவன் சகோதரன் முருகன் பரம முட்டாளா?)

8. தியாகம் : மகாபாரதம் எழுதுவதற்கு அழகிய தன் தந்தத்தையே உடைத்தவர் (தந்தத்தினால் அவ்வளவு பெரிய மகா பாரதத்தை எழுத முடியுமா என்பது ஒருபுறம் இருக்கட்டும். தன் சக்தியால் ஒரு எழுது கோலை உருவாக்கிக் கொள்ள வேண்டியதுதானே?)

9. நம்பிக்கை: விநாயகர் தன்னை நம்பியவர்களை எப்பொழுதும் கைவிடுவ தில்லை. உதாரணமாக வள்ளியை மணக்க உதவி புரிந்தது. (சகோதரனுக்காக எந்த வேலையைச் செய்துள்ளார் பார்த்தீர்களா? ஒரு வள்ளியைக் கை பிடிக்கக் கூட சகோதரன் முருகன் கையாலாகாதவனா?)

10. எளிமை: ஒரு குழந்தைகூட விநாயகனை எளிதாக வரைந்து விட முடியும். (யானை முகம், பெருத்த தொந்தி, தந்தம், வாகனமான மூஞ்சுறு இவை அத்தனையும் கொண்ட ஓர் உருவத்தை எளிதாக வரைந்து விட முடியுமா? இவர் எளிமையான கடவுள் என்றால் மற்ற இந்து மதக் கடவுள்கள் கடுமையானவர்கள் தானா?)

11. புலனடக்கம்: அதாவது யானையை அடக்க அதன் பாகன்கள் அங்குசத்தைப் பயன்படுத்துவர், ஆனால் அந்த அங்கு சத்தையே தன் ஆயுதமாகத் தரித்தவராம். ஒருவனது கட்டுப்பாடே அவனை சிறந்த தலைவனாக்கும் என உணர்த்துபவர் விநா யகராம். (தன் தும்பிக்கையால் வல்லபை என்ற பெண்ணின் குறியில் என்ன செய்தார் என்பதுதானே இவர்களின் புராண லட் சணம்!).

ஒரு கடவுளச்சியின் உடல் அழுக்கி லிருந்து பிள்ளையார் உருவம் போல ஒரு பிள்ளை என்றால், இந்த அசிங்கத்தை அநாகரிகத்தை என்னவென்று சொல்லு வது?

அழுக்கிலிருந்து பிள்ளை பிறக்குமா?

இந்த ஆபாச - அருவருப்புக் கற்பனைக் கடவுளுக்கு எத்தனை எத்தனை இலட்ச ணங்களை - ஆர்.எஸ்.எஸ். ஏடு வரிந்து கட்டிக் கொண்டு எழுதுகிறது.

கேட்பவன் கேனையனாக இருந்தால் எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டியது என்று கூறுவானாம். இதற்குப் பொருத்த மானது - ‘விஜயபாரத’த்தின் அளப்புகள்!

- விடுதலை ஞாயிறு மலர், 5 .10 .19

செவ்வாய், 8 அக்டோபர், 2019

புரட்டாசி சனிக்கிழமைதந்தை பெரியார்


புரட்டாசி சனிக்கிழமை உற்சவங்களும், திருப்பதி முதலிய நூற்றுக் கணக்கான 'சனிக்கிழமை பெருமாள்கள்' உள்ள ஊர்களின் உற்சவங்களும் சனிக்கிழமை பிடிப்பதன் மூலம் அவரவர்கள் வீட்டில் ஏராளமாய் சமைத்துக் கொண்டு சோம்பேறி களையும், அயோக்கியர்களையும் மெனக் கெட்டு தேடிப்பிடித்து வந்து அவர்களுக்கு வயிறு நிறையவும் போட்டு மற்றும் மூட்டை கட்டிக்கொண்டும் போகக்கூடிய அளவு மேற்கொண்டும் போட்டு கஞ்சாவுக்கோ கள்ளுக்கோ , சூதாடா வோ கையில் பணமும் கொடுத்து இவ்வளவு போதாமல் அந்த நாளெல்லாம் பட்டினி கிடந்து அந்தச் சோம்பேறிகளின் காலிலும் விழுந்து மாலை 3 மணி சுமாருக்குச் சாப்பிடும் பண்டிகையிலோ விரதத்திலோ கடுகளவும் அறிவு இருக்கிறதா? என்று கேட்கின்றேன்.

புரட்டாசி சனிக்கிழமை வந்தால் தங்களுக்குப் பட்டை நாமம் போட்டுக் கொண்டும், செம்புக்கும் நாமத்தைப் போட்டுக்கொண்டும் துளசி, அரளிப் பூவையும் அந்தச் செம்புக்கு சுத்திக் கொண்டும் 'வெங்கிடாஜலபதி கோவிந்தா' என்றும் , 'நாராயணா கோவிந்தா' என்றும் கூப்பாடு போட்டு அரிசியோ காசோ வாங்கிக்கொண்டு போவதில் ஏதாவது பலன் உண்டா என்றுதான் கேட்கிறேன்.

மற்றும், திருப்பதிக்குப் போகின்றேன் என்றுசொல்லிக்கொண்டு தலை மயிரும், தாடிமயிரும் வளர்த்து, வெறும் மஞ்சள் நனைத்த துணி கட்டிக்கொள்வதும், மேளம் வைத்துக்கொள்வதும், பெண்பிள்ளைகள் சுற்றத்தாரை அழைத்துக் கொள்வதும், வருஷமெல்லாம் பணம் உண்டியில் போட்டுப் பணம் சேர்ப்பதும் அல்லது வேண்டுதலையின் மேல் இவ்வளவு பணம் என்று கடன் வாங்கியாவது எடுத்துக் கொள்வதும் அல்லது வியாபாரத்திலோ அல்லது வேறு வரும்படி யிலோ இலாபத்தில் பங்கு என்று கணக்கு வைத்து எடுத்துச் சேர்த்துக் கொள்வதும் ஆன பண மூட்டையைக் கட்டிக்கொண்டு, கடைவா யிலும் நாக்கிலும் வெள்ளிக் கம்பியைக் குத்திக் கொண்டு போதாக் குறைக்குத் தெருவில் கூட்டமாய், 'கோவிந்தா கோவிந்தா கோவிந்தா' என்று கூப்பாடு போட்டு வீட்டுக்கு வீடு, கடைக்குக் கடை காசு பணம் வாங்கி, ஒரு பகுதியை இரயி லுக்குக் கொடுத்துத் திருப்பதி போவதும், அங்கு முழங்கால் முறிய மலை ஏறுவதும் ஆண்களும், பெண்களும் தலை மொட்டை அடித்துக் கொள்வதும், அந்த மலைச்சுனைத் தண்ணீரில் குளிப்பதும், அங்கு பட்டை நாமம் போட்டுக் கொள்வதும் கொண்டு போன பணத்தை உண்டியலில் காணிக் கையாகக் கொட்டுவதும், ஆண்களும் பெண்களும் நெருக்கடி யில் இடிபடுவதும் பிடிபடுவதும், வெந்ததும் வேகாததுமான சோற்றைத் தின்பதும், மற்றும் பல சோம் பேறிகளுக்கும், மேக வியாதிக்காரர்களுக் கும், வேக வைத்தோ விலைக்கு வாங்கியோ போடுவதும், விறகுக் கட்டைகளிலும் வேர் களிலும் செய்த மாமணி மாலைகளையும் வாங்கிக் கழுத்தில் போட்டுக்கொள்வதும், மலைக் காய்ச்சலோடு மலையில் இருந்து இறங்கி வருவதும், வீட்டுக்கு வந்து "மகேஸ்வர பூஜை" நடத்துவதும், பிராமண சமாராதனை செய்வதும் தவிர , மற்றபடி இவைகளால் ஏதாவது செய்தவனுக்கோ கூடப்போன மக்களுக்கோ நாட்டுக்கோ ஒழுக்கத்திற்கோ மதத்திற்க்கோ கடுகளவு நன்மை உண்டாகின்றதா என்று கேட் கின்றேன்.

திருப்பதிக்குப் போய்வந்த பிறகாவது யாராவது தங்கள் துர்க் குணங்களையோ கெட்ட செய்கைகளையோ விட்டு விட்ட தாக அதாவது திருப்பதி யாத்திரையானது இம்மாதிரிக் குணங்களை விடும்படி செய் ததாகவாது நம்மில் யாராவது பார்த் திருக்கின்றோமா என்று கேட்பதுடன் இம் மாதிரியான அறிவீனமான காரியத்திற்கு நமது நாட்டில் வருடத்திற்கு எத்தனை கோடி ரூபாய் செலவாகிறது என்பதை எந்தப் பொருளாதார இந்தியத் தேசிய நிபுணராவது கணக்குப் போட்டார்களா? என்றுதான் கேட்கிறேன்.

- விடுதலை நாளேடு 29 .9.19

வெள்ளி, 4 அக்டோபர், 2019

பண்டிகைகளின் பின்னணி

இந்து மதத்தில் பண்டிகைகளுக்குக் குறைச்சலே இல்லை.

சிறீ அனுமத் ஜெயந்தி, கெர்ப்போட்ட நிவர்த்தி, தை அமாவாசை, மாசி மகம், சிறீ மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், சிறீ ராம நவமி, மதுரை சிறீ மீனாட்சி திருக்கல்யாணம், சிறீ கள்ளழகர் எதிர் சேவை, அட்சய திருதியை (தங்கம் வாங்க சிறந்த நாள்), சிறீ மத் சங்கர ஜெயந்தி, வைகாசி விசாகம், ஆடிப் பெருக்கு, வரலட்சுமி விரதம், சங்கரன் கோவில் தபசுக் காக்ஷி, ஆவணி அவிட்டம், காயத்ரி ஜெபம், சிறீ மகா சங்கடஹர சதுர்த்தி, கோகுலாஷ்டமி, சிறீ விநாயகர் சதுர்த்தி, ஓணம் பண்டிகை, சர்வ மகாளய அமாவாசை, நவராத்திரி, சரசுவதி பூஜை / ஆயுத பூஜை, விஜய தசமி, தீபாவளி, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை இத்தியாதி... இத்தியாதி... இத்தியாதி...

பெரும்பாலும் இந்து மதப் பண்டிகைகள் எல்லாம் அசுரர்களை அழிப்பது என்ற மய்யப்புள்ளியை வைத்துச் சுழலுவதாகவே இருக்கும். தீபாவளி என்றால், நரகாசுர வதம், கந்த சஷ்டி என்றால், சூரபத்மன் வதம் - நவராத்திரி என்றால், மகிஷாசூரன் வதம், ஓணம் என்றால் மாவலி வதம்.

அசுரன் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் திராவிடர்கள் தான் என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுகிறார்கள். ஆரியர் - திராவிடர் போராட்டத்தைச் சித்தரிப்பதுதான் இந்த இதிகாச, புராணங்கள் என்பவை.

திராவிடர்களான அசுரர்களை அழிக்கவே கடவுள் அவதாரம் எடுத்ததாக எழுதித் தள்ளியுள்ளார்கள். அப்படி சூழ்ச்சியால் கொல்லப்பட்ட நாளை பண்டிகையாக்கி, கொல்லப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களையே பண்டிகையாகக் கொண்டாட வைத்துவிட்டனர் என்பது எத்தகைய அவலம்!

ஆண்டு முழுவதும் ஏராளமான பண்டிகைகளைக் குவித்து வைத்துள்ளனர். திராவிடர்களின் அறிவையும், மானத்தையும் இழக்கச் செய்வதுடன், அவர்கள் அரும்பாடுபட்டுச் சம்பாதித்த பொருளை ஒரே நாளில் நாசப்படுத்தும் ஏற்பாடாகவும் இதனைக் கருதவேண்டும்.

ஒரு கடைசிக் கடவுள் கல் உள்ளவரைக்கும் பார்ப்பன ஆதிக்கத்தை, பார்ப்பனீயத்தை ஒழிக்க முடியாது என்று தந்தை பெரியார் தெரிவித்த கருத்து கல்லுப் போன்ற மிகப்பெரிய உண்மையாகும்.

புரட்டாசியில் நவராத்திரி என்று கூறி ஒன்பது நாள்களை நாசப்படுத்துகிறார்கள். மூன்று நாள் பார்வதிக்கு - 3 நாள் லட்சுமிக்கு - 3 நாள் சரசுவதிக்காம். முறையே சக்தி, செல்வம், கல்விக்கு இந்தக் கடவுள்கள் அதிபதியாம். ஒன்பது நாள்களும் கொலு வைத்து நாள்தோறும் பூஜைகளை நடத்தி மடமைத்தனத்துக்கு மகுடாபிசேகம் செய்கிறார்கள்.

முன்னொரு காலத்தில் மகிஷாசூரன் என்ற எருமை ரூபமான அசுரனும் (அப்படி ஒருவன் இருக்க முடியுமா?), அவனின் பரிவாரங்களும் உலகை இம்சித்துக் கொண்டிருந்தனராம் (உலகத்தையே இம்சித்து இருந்தால் மற்ற மற்ற நாடுகளில் மகிஷா சூரனையும், அவன் பரிவாரங்களையும் மற்ற நாட்டுக்காரர்கள் என்ன செய்தார்களாம்?). அந்தக் கஷ்டம் பொறுக்க முடியாமல் தேவர்கள் பார்வதியிடம் முறையிட்டனராம். (ஏன் பரமசிவன், விஷ்ணு எல்லாம் இருந்தார்களே!). பார்வதி தேவி ஒன்பது நாட்கள் சிவனைக் குறித்துத் தவமிருந்து அவனிடமிருந்து தக்க சக்தியைப் பெற்று ஒன்பதாம் நாள் மகிஷாசூரனைக் கொன்று பரிவாரங்களை நாசம் செய்தாராம். மகிஷா சூரனைக் கொன்றதால், பார்வதிக்கு மகிஷாசூரமர்த்தினி என்று பெயரும் வந்து சேர்ந்ததாம்.

பார்வதி தவமிருந்து விழித்த ஒன்பதாம் நாளில் வேண்டிய வரங்களை சிவன் அருளினாராம். இந்த நவராத்திரியின் சூட்சமத் தத்துவம் இதுதானாம்.

இடையே இடைச் செருகல். லட்சுமி - செல்வத்தின் அதிபதி அவளை வேண்டினால் செல்வம் பெருகுமாம்.

கல்விக் கடவுளான சரசுவதியை வேண்டிக் கொண்டால் கல்வியில் சிறந்து விளங்கலாமாம்!

சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக்காதே - சூத்திரன் படித்தால் நாக்கை அறு என்று என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு இன்னொரு பக்கத்தில் சரசுவதி பூஜை கொண்டாடக் கட்டளை இடுவதும், அப்படி சரசுவதியைப் பூஜை செய்தால் கல்வி ஒளி கிடைக்கும் என்பதும் பச்சையான முரண்பாடு அல்லவா!

கல்விக்கென்று கடவுள் இருக்கும் நாட்டில் தற்குறிகளாக மக்கள் கிடந்தது ஏன்? திராவிட இயக்க மும், தந்தை பெரியாரும் அயராது பாடுபட்டதால், நீதிக்கட்சி ஆட்சியால், காமராசர் காட்டிய ஆர்வத்தால், தொடர்ந்து நடைபெற்று வந்த திராவிடர் இயக்க ஆட்சியால் கல்வி வளர்ந்ததே தவிர, சரசுவதி பூஜையாலா? மக்களுக்குக் கல்வி கிடைத்தது? எத்தனை நூறு ஆண்டுகாலமாக சரசுவதி பூஜை கொண்டாடப்படுகிறது!

அப்பொழுதெல்லாம் ஏன் பெரும்பான்மை மக்களுக்குக் கல்வி கிடைக்கவில்லை? சரசுவதி பெண் கடவுளாக இருந்து பெண்கள் அறவே கல்வியில்லாத களர் நிலமாக ஆக்கப்பட்டது ஏன்? ஏன்?

செல்வத்துக்கென்று ஒரு கடவுள் இலட்சுமி இருக்கும் இந்த நாட்டில் வறுமைக்கோட்டுக்கும் கீழே மக்கள் உழலுவது ஏன்? நாள் ஒன்றுக்கு 20 ரூபாய் வருமானம் உள்ளவர்கள் 77 சதவிகிதம் என்று அரசு புள்ளி விவரம் கூறும் பரிதாப நிலை ஏன்? இரவு சாப்பாடு இல்லாமல் படுக்கைக்குச் செல்லுவோர் இந்தியாவில் 20 கோடி பேர் என்ற நிலை ஏன்? ஏன்?

இவை எல்லாம் எதைக் காட்டுகின்றன? இந்தக் கடவுள்கள் வெங்காயங்கள் எல்லாம் கற்பிக்கப் பட்டவை - மக்களை முட்டாளாக்கி அவர்களின் அறிவை, உழைப்பை, பொருளை முற்றிலும் சுரண்டும் சூழ்ச்சி என்பதல்லாமல் வேறு என்னவாம்?

உழவர் திருவிழா (பொங்கல்), மக்களுக்காகப் பாடுபட்ட தலைவர்கள், சிந்தனையாளர்களைக் குறிக்கும் நாள்களை நன்றித் திருவிழாவாகவும், அவர்களின் சிந்தனைகளைப் புதுப்பிக்கும் வரலாற்று நாளாகவும் கொண்டாடுவதைப் புரிந்துகொள்ளலாம்.

மக்களை மொட்டை அடிக்கும் பண்டிகைகளைத் தடை செய்தால், அது உண்மையிலேயே மக்கள் நல அரசாக இருக்க முடியும் - சிந்திப்பீர்!

- விடுதலை நாளேடு, 4.10.19

இந்துக்கடவுள்களின் ஒழுக்கக்கேடான தகாத உடலுறவுகள்

# மதம்_மனிதனை_மூடனாக்கும் ,
# முட்டாளக்கும் !!

1. குந்தி – ( திருமணத்திற்கு முன் கள்ளஉறவு)
குந்தி திருமணத்திற்கு முன்பே சூரியனிடம் கள்ளஉறவு கொண்டமையால் பெற்றெடுத்த கர்ணனை ஆற்றில் விட்ட கதை அனைவரும் அறிந்ததே. திருமனத்திற்கு பின்பு ஐந்து பிள்ளைகள் பெற்றாலும் எவையுமே அவள் கணவன் பாண்டுவுக்கு பிறந்ததில்லை மகாபாரதம் படித்தவர்களுக்க
நல்லாவே தெரியும்.

2. பத்மை – (தகப்பன் மகள் உறவு)
சிவன் பார்வதி திருமணத்தில் பிரம்மா புரோகிதனாக இருந்து விவாக ஓமம் செய்தான். பார்வதி ஓமகுண்டத்தை இடது கையால் முந்தானையை பிடித்து சுற்றிவருகையில் அவளுடைய தொடை பிரமனின் கண்ணில்பட்டது. அதை பார்த்தவுடன் பிரம்மா மோகத்தால் இந்திரியம் (விந்து) ஸ்கலிதமாயிற்று. அந்த இந்திரியத்தை குலத்திலுள்ள தாமரை பூவில் விட அதில் பத்மை என்ற புத்திரி பிறந்தாள்.
பத்மை அழகில் மயங்கி மோகம்கொண்டு அவள் சம்மதிக்க மறுக்கவே சமாதான வேத மந்திர வாக்கியத்தை சொல்லுகிறான்.

” மாதாமுபைத்ய கசாரமுபைய, புத்ரார்த்தீக சகாமார்த்தி நாபாத்திரலோகா நாஸ்தீத ஸ்ரவம்பரவோ விந்து ஹாம் தஸ்மாத் புத்தார்த்தம் மாதரம், ஸூரஞ்சதி,ரோஹதி”
இதன் விளக்கம் :-
புத்திராத்த நிமித்தம் தாய், தமக்கை, மகன், பிள்ளை யாருடனும் கூடலாம்.
” தாயிடமும் மகளிடமும் படுத்து படுத்து பிள்ள பெத்துக்கிலாம் இதுதாங்க இந்துமத யோக்கியதை”

3. (தாய், மகன் உறவு) – திருவிளையாடல் புராணம்..
அவந்தி என்ற ஊரில் ஒரு பார்ப்பான் வாழ்ந்து வந்தான். அவனுடைய மனைவி ஒப்பில்லா அழகுடையவள். அவளது மகன் வளர்ந்து வாலிபன் ஆனதும், அவனது தாயின் மேலேயே ஆசை கொண்டான்.
அவளும், நாணம், வெட்கம் எல்லாவற்றையும் விட்டு, தன்னுடைய மகனிடம் உடலுறவு கொண்டாள். இதற்கு இடையூறாக இருந்த அவளுடைய கணவனை (தகப்பனை) கொன்றான். இந்த பாவத்தை கழிக்க சிவராத்திரி நாளில் சிவனடியார்களுக்கு பணி செய்து சூரியன் உதிக்கும் முன் அருகம்புல்லை பசுமாட்டிற்கு கொடுத்து மூன்று காலமும் நீராடி108 முறை கோவிலை வலம் வரவேண்டும் என்று திருவிளையாடல் புராணம் 26ஆவது திருவிளையாடல் மாபாதகம், தீர்த்தபடலம். கூறுகிறது.

4. லட்சுமி – (சகோதரனிடம் காமம்)
சமுத்திர தேவனின் செல்வ புதல்வி லட்சுமிதேவி தன் ககோதரன் அசுவனைக் கண்டு காமம் கொண்டாள்.
இதை கண்ட விஷ்ணு கோபம் கொண்டு “கவர்ச்சி மிக்க கண்களைக் கொண்டுள்ள காமகி! நீ யாரைப் பார்க்கிறாய்? நான் சொல்லும் வார்த்தைகள் கூட உன் காதில் விழவில்லையா? காமக் கடலில் நீயும் மூழ்கி விட்டாயா?” என்று கோபத்துடன் சீறினான்.
அவள் கணவன் கேட்டதற்கு பதிலளிக்காது பெண்குதிரை வேஷம் எடுத்த தன் சகோதரனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டாள். இந்த புணர்ச்சியில் பிறந்த வம்சமே ‘ஹெய்ஹயகானாக்கள்’ என்று அழைக்கப்ட்டனர்.
ஆதாரம் – தேவிபாகவாத புராணம் (6,17,53)

5. (சொந்தங்களுடன் உடலுறவு) மனுசாஸ்திரம்..
ஆண் பிள்ளை இல்லாமல், ஒரு குலம் நசிந்து போனால், அப்போது அந்தப் பெண், தன்கணவர்,மாமனார் முதலியோரின் உத்தரவு பெற்றுக்கொண்டு, தன் மைத்துனர் அல்லது தன்கணவனுக்கு ஏழு தலைமுறைக்குட்பட்ட
பங்காளி களுடன் புணர்ந்து ஒரே ஒரு பிள்ளையைபெற்றுக் கொள்ள வேண்டும்.
(மனு அத்தியாயம் 9; சாஸ்திரம் 59)

6. (அண்ணியுடன் உறவு) பிரகஸ்பதி முனிவர்.
இந்து மதத்தில் தேவர்களிக்கெல்லாம் குருவான பிரகஸ்பதி தனது அண்ணன் மனைவி கர்ப்பமாக இருந்த போது, அண்ணன் இல்லாத வேளையில் முறைகேடாக உறவு கொண்டுடான். அதில் பிறந்த குழந்தைதான் (த்வஜாபுத்திரன்) பரத்வாஜா ஆவர்.
இந்த மகன் தந்தையை மிஞ்சிய காம வெறியன். இந்த பரத்வாஜா கிராதிஸி அப்ஸரா என்ற பெண்ணை நினைத்து விந்து வெளியேறிய போது உருவனவரே, வேதவிற்பன்னர் துரோணர். எப்படி இருக்கு இந்துமத ரிஷிகள், முனிவர்களின் யோகியதைகள்.
(ஆதாரம் – மகாபாரதம் ஆதிபர்வம் அத் 131, ஸ்கந்த 9 அத் 20 )

7. சிவன், விஷ்னு -(ஓரினச்சேர்க்கை)
விஷ்னுவின் மோகினி அவதாரக் கதை ஏகம் இருந்தாலும், சிவன் மோகினியின் மேல் கொண்ட காமத்தால் உடலுறவு கொண்டு ஐயப்பன் பிறந்தாக கூறப்படுதல் ஆண் ஓரகினச் சேர்க்கை தானே!.

8. விஷ்ணு, நாரதர் – ( ஓரினச்சேர்க்கை)
மகா விஷ்ணுவும் நாரதரும் கலவி (homosex) செய்ததில் அவர் இரண்டு பேருக்கும் அறுபது குழந்தைகள் பிறந்தது. அந்தக் குழந்தைகள் ஒவ்வொன்றுக்கும் பெயர் வைத்தார்கள். அதுதான் 60 சமஸ்கிருத வருடங்கள்.

9. சூரியபகவான்,அருணன் – (ஓரினச்சேர்க்கை)
சூரியனின் ரத சாரதியின் பெயர்அருணன். இவன் இந்திரலோக வினோதங்களைக் காண்பதற்கு என்றுபெண் வேடம் பூண்டு அங்குச் சென்றான். இதைக் கண்ட இந்திரன் பெண் வேடத்திலிருந்த அருணனை மோகித்துப் புணர்ந்தான் இதனால் வாலி என்பவன் பிறந்தானாம்.
இந்நிகழ்ச்சியால் அருணன் வேலைக்குத் தாமதித்து வர, சூரியன் காரணம் கேட்டு,
நடந்ததையறிந்து, மீண்டும் அருணனைப் பெண் வேடத்தில் வரச் செய்ய, அவன் அப்படியே வர, அவனைச் சூரியன் புணர்ந்தான் அதனால் சுக்ரீவன் பிறந்தானாம்.

10. ராமன் பிறப்பு – Animal sex (மிருக்கங்களுடன் புணர்ச்சி)..
தசரதன் புத்ர காமேஷ்டி யாகம் செய்தான்.
அந்த யாகத்தில் குதிரையுடன் மூன்று பட்ட மகிஷிகளும் ஓர் இரவை கழித்துள்ளார். வெட்டுண்ட குதிரையுடன் ஒரு இரவு முழுவதும் மூன்று மனைவியரும் கட்டிப் புரண்டதாக வால்மீகி ராமாயணத்தில் எழுதப் பட்டுள்ளது. அதன் பிறகே நான்கு புதல்வர்கள் பிறந்துள்ளனர்.

11. விஷ்னு – (மாற்றான் மனைவியுடன் உறவு). சலந்தரன் எனும் அசுரனின் மனைவி பிருந்தை. அவன் சிவனுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, விஷ்னு சலந்திரனாக வந்து பிருந்தையுடன் இருந்தாக கூறப்படுகிறது. அவள் இட்ட சாபமே ராம அவதாரத்தில் சீதையை ராவணன் கவர்ந்து செல்ல காரணம் என்கின்றார்.

12. பாஞ்சாலி – (அண்ணி கொழுந்தன் உறவு அல்லது ஐந்து பேருடன் உறவு)..
திரௌபதி என்பது உண்மையான பெயர் பாண்டவர்கள் ஐவருக்கும் மனைவியானதால் பாஞ்சாலியாக மாறிப்போனது. ஆனால் சிலர் தர்மனின் மனைவி என்று அறிவி்க்கப்பட்டாலும், ஐந்து பேருக்கும் மனைவியாக கலவி சுகம் கொடுத்திருக்கிறாள். ஆதாரம் – மகாபாரதம்.

13. ருமை – (தம்பியின் மனைவியுடன் உறவு)
சுக்ரீவனின் மனைவி ருமை. ஆனால் சுக்ரீவனை வஞ்சித்துவிட்டு அண்ணன் வாலி ருமையுடன் வாழ்ந்ததாக ராமயணம் கூறுகிறது.

14. விவச்சாரிகளிடம் உறவு
– மனுசாஸ்திரம் சுலோகம்-
வேஸ்யாதர்சனம் புண்யம்
ஸ்பர்சனம் பாவ நாசனம்
சும்பனம் சர்வ தீர்த்தானம்
மைதுனம் மோட்ச சாதனம்
விளக்கம் :-
வேசிகளை (விபசாரிகளை)ப் பார்ப்பது புண்ணியம். அவர்களைத் தொட்டால் நீங்கள் செய்த பாவமெல்லம் போய்விடும்.
கார்ப்பரேசன் குழாய் தண்ணீரை ஒரு செம்பில் வைத்துக் கொண்டு புரியாத மந்திரங்களை, கங்கா, யமுனா, சரஸ்வதி, கோதாவரி, காவேரி என்று சொல்லிக்கொண்டு மா இலையால் வீடு முழுவதும் தெளிக்கிறாரே புரோகிதர் அந்த சகல தீர்த்தங்களும், அந்த விபச்சாரிகளை முத்தமிடும் பொழுது வாயில் ஊறும் எச்சிலுக்கு சமமாகும். அதற்கும் மேல் விபச்சாரிகளை புணர்வது மோட்சத்திற்கு வழியாகும்.

15. இது எந்தமாதிரி உறவுனே தெரியல.. படித்துவிட்டு நீங்களே ஒரு பேரு வைங்க நண்பர்களே..
கலைவாணி, சரஸ்வதி என்ற பெண் கடவுள்கள், தமது கன்னி வயதில் விஷ்ணுவின் காதலிகளாக இருந்தனர்.
இவர்களுக்கிடையில் யார் விஷ்ணுவின் காதலியாக தனித்து இருப்பது என்ற சண்டையின் போது, விஷ்ணுவின் மனைவி லட்சுமி தலையிட்டு, “ஒரு மனிதன் ஒரு மனைவியை வைத்துக்கொண்டு இன்பம் அனுபவிக்க முடியாதபோது அதிகமான மனைவிகளை வைத்திருத்தல் அவனைப்பற்றி என்னவென்று சொல்வது என்று கணவனை குற்றம் சாட்டி, தீர்வாக, கலைவாணியை சிவனிடம் படுக்கும் படியும், சரஸ்வதியை பிரமாவிடம் படுக்கும் படியும் கூறி சக்களத்தி சண்டைக்கு தீர்வு கண்டாள். ஆதாரம் – தேவிபாகவாத புராணம் 47,49,53.
இப்படி ஆபாச வக்கிரங்களை கொப்பளிக்கும் இந்துமதத்தின் யோக்கியதைகளை திட்டாம வேற என்ன சொல்ல..?
மதம் என்பது மனிதனை ஒருபோதும் அறிவாக சிந்திக்க விடாது. மதம் மனிதனை மூடனாக்கும், முட்டாளக்கும், குருடர்களாக்கும் இந்த பாதிப்பில்தான் மனிதன் அறிவிழந்து மதவெறியோடு வன்முறையில் செயல்பட்டுக்கொண்டிருகிறார்கள்.
இவைகளை நம்பும் நம் முட்டாள்தனம்தான் அவர்களுக்கு முதலீடு.. பிழைப்பு எல்லாமும்..🔥👍🔥
- சி கேசவா முகநூல் பதிவு
1.10.19