புதன், 30 டிசம்பர், 2015

பயனற்ற பாலாபிஷேகம்(கும்மி)


-விடுதலை,18.12.15

கிறிஸ்து கொண்டாட்டமும் மதுக்கூத்தும்இயேசுநாதர் ஏழை மக்களைக் கொடுமைப்படுத்தப் பிறந்தாரா? நல்வழிப்படுத்த பிறந்தாரா?

கிறிஸ்து மதத்தில் பண்டிகைக்கென்று ஒரு கொண்டாட்ட முண்டு. இக்கொண்டாட்டம் மது அருந்தவே நடத்துகிறார்கள். டிசம்பர் மாதம் 25ஆம் தேதி முதல் ஜனவரி 6ஆம் தேதி வரை கிறிஸ்தவர்கள் உறைவிடம் செய்யுமிடங்களில் போய்க் கண்ணுற்றறால் இதன் உண்மை விளங்கும். இப்பண்டிகையில் நடைபெறும் நாட்டியங்களையும், மது உண்டு மதிமயங்கித் திரிவதையும், இயேசு பெருமான் பிறந்ததற்கு அறிகுறியாக தேவாலயத்தில் ஒரு குடிசைக்கட்டி, அதில் இயேசுகிறிஸ்துவின் தாய் தந்தையர், மூவேந்தர்கள், இடையர்கள் யாவரும் புடை சூழ நடுவில் புல்லணைமீது யேசு பிறந்திருப்பதைக் காட்டி ஏழை மக்களிடம் துட்டுப் பறிப்பதையும் அன்று நள்ளிரல் சில நாடோடிகள் பஜனைபாடித் தெருத்தெருவாய் அலைந்து ஏழை மக்களிடம காசு திருடுவதையும் கத்தோலிக்கரிடையே எடுத்து இயம்புமாறே இதை எழுதலாயினன்.
எம்பெருமான் டிசம்பர் 24ஆம் தேதி நள்ளிரவு கற்பில் சிறந்தகன்னி தாமேரியின் திருவயிற்றில் நின்று பிரசன்ன மானாரென்று பைபிளில் வரைந்திருக்கிறது. பைபிளில் செப்பியபடியே கிறிஸ்தவர்கள் அதை மனுநீதி தவறாது கடைப்பிடித்து ஒழுகுகிறார்கள். இயேசு பிறந்த அன்று அளவு கடந்து கள், சாராயம், ஒயின், பிராண்டி உண்பானேன்? பண்டிகை என்றால் என்ன? மதுபானம் குடிப்பதுதான் பண்டிகையா? மது அருந்தாவிட்டால் பண்டிகையின் டம்பம் குன்றிவிடுமாம்? இயேசு நான் பிறந்த அன்று மது உண்டு மயங்குங்களென்று பறைசாற்றினாரா? இயேசு ஜனங்களை நல்வழிப்படுத்த அவதாரம் செய்தாரா? குடியர்களையும், திருடர்களையும் உற்பத்தி செய்ய அவதாரம் செய்தாரா? இயேசு என் நாமத்தை மக்களிடம் உபதேசித்துப் பணம் கொள்ளையடியுங்களென்று சொல்லவா மானிடராய்ப் பிறந்தார்?
இயேசு உதித்த நள்ளிரவு பூசை முடிந்ததும், பண்டிகையின் பெயரால் ராப்பாடி வேடந்தரித்து, சிறுவர்களை மோட்சத்தி லிருந்து சம்மனசுகள் இறங்கியதுபோல் அலங்கரித்து பஜனைபாடி ஒவ்வொரு இல்லங்களிலும் படிகமெடுத்து ஒவ்வொருவரும் பங்கிட்டு மறுநாள் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.
ஏழை மக்களிடம் பிச்சையெடுத்து நடத்துவது தான் பண்டிகையின் நோக்கமா? ராப்பாடி வேடந்தரித்துப் பஜனை பாடி வருகிறவர்களைக் கண்டதும் மூட மக்கள் ஆனந்தம் கொண்டு தங்களிடம் ஒன்றுமில்லா விட்டாலும் கடன் பட்டாவது கொடுக்கிறார்கள். பெருமை பொருந்திய பண்டிகையே உன் திருவிளையாடல் தான் என்னே!
ஏழை மக்கள் வறுமைப் பிணியில் நின்று தவிக்கும் வண்ணம் பாதிரிமார்களும், குடிகாரத் தலைவர்களும், பண்டிகையும், உற்சவமும், கோவிலும், மோட்சமும், சடங்கும் கலியாணமும் பிறந்த பிள்ளை ஞானஸ்நானமும், பாதிரிமார் அணியும் காப்பையும், மணியும், மெழுகுவர்த்தியும், வாகனமும், சிமித்தேயும் வருடாவருடம் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டுபோனால், ஏழை மக்கள் முன்னேறுவதெங்ஙனம்? ஒவ்வொரு நிமிடமும் பண்டிகையும், உற்சவமும் இருந்தால் முன்னேறுவதெக்காலம்? இவ்விதமான ஆபாசங்களையெல்லாம் சுயமரியாதைக்காரர்கள் எடுத்துக் காட்டினால் அவர்களை நாஸ்திகர் என்றும் அவர்கள்
தொலையமாட்டார்களாவென்றும், ரோடுகளிலும், மூலை முடுக்குகளிலும், சந்துபொந்துகளிலும், தியானங்கொடுக்கு மிடங்களிலும், தேவாலயங்களிலும் குலைத்துக்கொண்டு திரிவானேன்? தங்கள் வயிற்றுப் பிழைப்புத் தொலைந்து விடுமென்ற கவலையினால் உளறுகிறார்களோ என்னவோ தெரியவில்லை.
பகுத்தறிவோடு பிரசங்கம் மொழியும் பாதிரிமார் பகுத்தறிவற்றவர்களாயிருந்தால் தேவாலயத்திலும், தியானம் கொடுக்குமிடங்களிலும் கடல்மடை திறந்தாற்போல் பிரசங்கம் பொழிய முடியுமா? தேவாலயத்தில் மக்களுக்கு ஊட்டும் ஆஸ்தீக பிரசங்கத்தில் பண்டிகை உற்சவம் நடத்தாவிட்டால் பாவம், மோட்சம் அடையாவிட்டால் பாவம், ஞானஸ்நானம், பாவசங்கீர்த்தனம், அவஸ்தை பூசல் பெறாவிட்டால் பாவம், காணிக்கை செலுத்தாவிட்டால் பாவம், வாகனம் எடுக்காவிட்டால் பாவம், ஞாயிறு வாரம் பூசை காணாவிட்டால் பாவம், ஆஸ்தீக ஞானப்பாலைப் படிக்காவிட்டால் பாவம் என்று கூறும் பாதிரிமார், கல்வி கல்லாவிட்டால் பாவம், அறிவிற்குப் பொருத்தமற்றவைகளை கண்மூடித்தனமாய் நம்புவதும், கொண்டாடுவதும், பிறரை ஏமாற்றுவதும் பாவமென்றும்கூற ஏன் தயங்குகிறார்கள்? பின் வாங்கு கிறார்கள்? தங்கள் வயிற்றுப் பிழைப்பு பாழடைந்து விடுமென்ற பயமா? அச்சமா? அல்லது பாமரமக்கள் கல்வி கற்றால் நம் புரட்டையறிந்து தாய்நாட்டுக்குயனுப்பி விடுவார் களென்ற ஏக்கமா? திருடுவது பாவம், பிற தாரத்தை அபேட்சிப்பது பாவமென்று கூறும் பாதிரிமார், ஏழை மக்களின் பணத்தைக் கொள்ளை யடிப்பானேன்?  குடிகாரத் தலைவர்களுக்கு பங்கு கொடுப்பானேன்? உள்ளொன்று வைத்துப் புறமொன்று கூறுவதுதான் குருத்துவத்தின் தன்மையா? துறவறத்தின் மகிமையா? பண்டிகையின் பெயராலும், உற்சவத்தின் பெயராலும் வருடா வருடம் சம்பாதிக்கின்ற பணத்தைப் பாழாக்கினால் ஏழை மக்கள் முன்னேறுவதெப்படி? பெண்டு பிள்ளைகளைக் காப்பதெவ்விதம்? நாடோறும் ஜீவனம் செய்வதெவ்விதம்? பகுத்தறிவுள்ள மக்களாய் வாழ்வ தெக்காலம்?                                   (குடிஅரசு)
-விடுதலை,18.12.15

சனி, 12 டிசம்பர், 2015

பைபிள் படிப்பவர்கள் பதில் கூறுவார்களா?

ஆதியிலே தேவன் வானத்தையும்; பூமியையும் இன்னும் பலவற்றையும் படைத்து முடிவில் ஆதாம் - ஏவாள் எனும் இரண்டு பேரைப் படைத்தார்; (என்ன கஞ்சத்தனம் பாருங்கள்?) அவர்களுக்குக் காயீன், ஆபேல் எனும் இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள்; இருவரும் கர்த்தருக்குப் பூஜை செய்தார்கள். ஆபேலின் பூஜையை கர்த்தர் ஏற்றுக் கொண்டார்; பொறாமை அடைந்த காயீன் ஆபேலைக் கொன்று விட்டான்.
கோபமடைந்த கர்த்தர் காயீனை நாடு கடத்தினார்; பிதாவே! அங்கிருப்பவர்கள் என்னைக் கொன்று விடு வார்களே என்றான் காயீன்.
காயீனை கொல்லும் எவர்பேரிலும், ஏழு பழிசுமக்கக் கடவது என்று கர்த்தர் அருளினார், இது பைபிள் சொல்கிற கதை; முதலில் கர்த்தர் படைத்தது ஆதாம் ஏவாள் எனும் இரண்டே பேர், அவர்களின் பிள்ளைகள் இருவர்; ஆக மொத்தம் நாலே பேர்; அதிலும் ஒருவன் இறந்து விட்டான்; பாக்கி இருப்பது மூன்றே பேர்; அப்படியானால் காயீனைக் கொல்ல அங்கு யார் இருந்தார்கள்? ஒரு வேளை இந்துக்கள் இருந்தார்களா? கிறிஸ்தவர்களை மட்டும்தான் படைத் தாரா? அல்லது படிப்பவர்கள் தான் மடையர்களா?
தகவல்: ச.ராமசாமி, சென்னை-18
-விடுதலை,13.6.14

வெள்ளி, 11 டிசம்பர், 2015

பார்வதி -பரமசிவன் முத்தக் காட்சி!


திருவாக்குஞ் செய்கருமங் கை கூட்டுஞ் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலாற் கூப்புவர்தங் கை
விநாயகக் கடவுளை வணங்கிக் காரியங்களைத் தொடங்கினால் நல்லது என்று கூறும் பண்டாரச் சன்னதிகளே! வேழ முகத்தானின் வாழ்க்கை வரலாற் றினைப் பாரீர்.
கசமுகாசுரன் என்பவன் தவம் செய்து, தான் மனிதராலும், விலங்குகளாலும், பிறவற்றாலும் காலமெல் லாம் இறவாதிருக்க வேண்டும் என்று வரம் பெற்றான்.  அந்த வரம் பெற்றமையால் அவன் தேவர்களைத் துன்புறுத்தினான்.
தேவர்கள் சிவபெருமானை வேண்ட சிவன் விநாயகனை உண்டாக்க வேண்டும் என்று எண்ணினான். அதனால் தன் துணைவி சக்தி யோடு தோட்டத்திலே வீற்றிருந்தார். அப்பொழுது அங்கே ஓர் ஆண் யானை, பெண் யானையைப் புணர்தல் கண்டு, சக்தி பெண் யானை வடிவங்கொள்ள, சிவன் ஆண் யானை வடிவங் கொண்டு புணர்ந்தார்.
அவர்கட்கு யானை முகமும் மனித உடலுமாக ஒரு குழந்தை தோன்றியது. இதுதான் இன்று ஆற்றின் கரையில் அமர்ந்திருக்கும் கரியின் முகவன் கதை, இதற்கு ஆதாரமாக, திருஞான சம்பந்தர் தனது தேவாரத்தில்-
பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகு கொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே
என்று பாடியுள்ளார். இப்படிக் காமத்தின் விளைச்சலால் மக்கள் பிறவியிலிருந்து, விலங்குப் பிறவியெடுத்து இணைந்த பிண்டங்களின் சதைக்கலப்பில் விளைந்த விநாயகன் வணங்க வேண்டிய கடவுளா? இதோடு மட்டுமல்ல, தன்னை ஈன்ற தாயும் தந்தையும் காமக் காய்ச்சல் மிகுதி யினால் உதட்டுச்சுவை பருகும் காட்சியைக் கண்டு மகிழ்ந்தாராம், நெற்றிக் கண்ணனார் பெற்ற மகன்.
மும்மைப் புவனம் முழுதீன்ற முதல்வி
யோடும் விடைப்பாகன் அம்மை தருக
முத்தமென அழைப்ப வாங்கே சிறிதகன்று
தம்மின் முத்தங்கொள நோக்கிச் சற்றே
நகைக்கும் வேழமுகன் செம்மை முளரி
மலர்த்தா ளெஞ்சென்னி மிசையிற் புனைவாமே
மூன்று உலகங்களையும் பெற்ற சக்தியிடத்து, எருதுவை ஊர்தியாக உடைய சிவபெருமான், அம்மையே முத்தம் தருக எனச் சொல்லி அழைக்க அவர்களுக்கு இடையே இருந்த விநாயகன் சிறிது நீங்கிட, சிவனும், பார்வதியும் ஒருவரை யொருவர் முத்தமிட்டு கொள்ள அதனைக் கண்டு புன்னகை செய்யும் யானை முகனது சிவந்த தாமரை மலர் போன்ற திருவடிகளை எமது தலையின் மேல் அணிந்து கொள்வோம் என்று கூறுகிறது நந்திக் கலம்பகம் எனும் நூல்.
பெற்றவர்கள் முயங்கும் போது உற்றுப்பார்த்து மகிழ்ந் திடும் காமவல்லி பெற்ற திருக்குமரன் விநாயகக் கடவுளை வீரமரபில் வந்த தமிழினம் வணங்க வேண்டியது தானா? புராணப் புரட்டர்களின் மூளைச் சுரப்பிலிருந்து உதயமான ஆபாசக் கடவுளுக்கு ஆற்றங்கரையில் சிலை ஏன்? இந்த வெட்கங் கெட்ட உறவில் விளைந்த யானை முகத்தானுக்கு தேங்காய் உடைப்பும், நைவேத்தியமும் ஒரு கேடா? தமிழினமே! சிந்தித்துச் செயல்படு!
- பெரியகுளம் அருளாளன்

சொர்க்கமா - நரகமா?
தன்னை எதிர்த்து பார்லிமென்டிற்குப் போட்டியிடும் ஒருவர் நடத்தும் தேர்தல் கூட்டம் ஒன்றிற்கு ஆப்ரகாம் லிங்கன் சென்றிருந்தார். மேடையில் பேசிக் கொண்டிருந்த பாதிரியார் லிங்கனைக் கண்டதும் அவரை அவமானப் படுத்த வேண்டும் என எண்ணினார்.
லிங்கன், சொர்க்கம் - நரகம் ஆகியவை மீது நம்பிக்கை அற்றவர் என்பது பாதிரியாருக்குத் தெரியுமாகையால், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சொர்க்கத்திற்குப் போக விரும்புபவர்கள் அனைவரும் தயவு செய்து எழுந்து நிற்கவும் என்றார். ஆப்ரகாமைத் தவிர, எல்லோரும் எழுந்து நின்றார்கள்.
மறுபடியும் பாதிரியார் சொன்னார். நரகத்திற்குப் போக விரும்பாதவர்கள் எழுந்து நிற்கவும் என்றார்.  இப்பொழுதும் லிங்கனை தவிர்த்து எல்லோரும் எழுந்து நின்றார்கள். உடனே பாதிரியார் லிங்கனை பார்த்துக் கேட்டார்.
நீங்கள் எங்கே போக விரும்புகிறீர்கள்? லிங்கன் சொன்னார், நான் பார்லிமெண்டிற்கு போக விரும்புகிறேன், பாதிரியார் வாயடைத்துப் போனார்.

விதியைப் பற்றி...
மனித சக்தி விதி என்ற சங்கிலியால் கட்டுண்டு கிடப்பது, பெரும் பரிதாபமே.
மனிதன் சிந்திக்கச் சிந்திக்க, விதியினின்று விடுதலை அடைகிறான். மனித மூளை சிந்தனையால் விதியை எதிர்த்து, அதை அழித்து, வெறும் பிரமை என்று நிரூ பிக்கவும் ஆற்றல் பெற்றுவிடுகிறது.
பலமற்றவர்கள், பாதகர்கள் - இவர்களே உழைக்காமல் சோம்பலில் மடிந்து, விதியைக் குறை கூறுகிறார்கள்.
- எமர்சன்
-விடுதலை,9.5.14

கீதை பற்றி விவேகானந்தர்

கீதை என்ற நூல் மகாபார தத்தின் ஒரு பகுதியாகும். கீதையைச் சரிவர புரிந்து கொள்ள மிகமிக முக்கியமான பலவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
முதன் முதலில் மகாபார தத்தின் ஒரு பகுதியாக - அதாவது வேதவியாசர் எழுதியதா? அல்லது அதில் புகுத்தப்பட்டதா?
இரண்டாவதாக கிருஷ்ணன் என்பவர் சரித்திர ரீதியாக உயிர் வாழ்ந்த ஒருவரா? மூன்றாவதாக கீதையில்  கூறப்படுவதுபோல் குருசேத்திரப் போர் உள்ளபடியே நடந்ததா? நான்காவதாக அர்ஜுனனும் ஏனையவர்களும் உள்ளபடியே உயிர் வாழ்ந்தவர்கள்தானா? என்பன கீதையைச் சங்கராச்சாரியார் எழுதி மகாபாரதத்தில் புகுத்தினார் என்று சிலர் கருதுகிறார்கள். எது எப்படியிருந்தாலும் சரி, யார் கீதையை வெளி யிட்டிருந்தாலும் சரி - குருசேத்திர யுத்தம்  நடைபெற்றது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. யுத்தத்தில் கிருஷ்ணன் அர்ஜூனனுடன் எல்லையற்ற விவாதத்தில் இறங்கினான் என்றால் இதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? அப்படியே உரையாடினார்கள் என்றால் பக்கத்தில் ஒரு சுருக்கெழுத்தாளரை வைத்துக் கொண் டாரா என்ற பிரச்சினை எழுகிறது.
அர்ஜூனன் ஏனையப் பெயர்கள் பயன்படுத்தப் பட்டுள்ளனவே தவிர இவர்கள் இருந்தனர் என்றோ, குருசேத்திரயுத்தம் செய்தனர் என்பதோ. கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. - விவேகானந்தர், கீதையைப்பற்றி கருத்துகள் என்ற நூலில்
ஆதாரம்: ஏ.எஸ்.கே.அய்யங்கார் எழுதிய பகுத்தறிவுச் சிகரம் பெரியார் என்ற நூலில் - பக்கம் 11,.117)

-விடுதலை,27.2.15

மக்கள் ஒருமைப்பாடு பேசுவோரே! கடவுள் ஒருமைப்பாடு எங்கே!


அரியும் சிவனும் ஒண்ணு: இதை அறியாதவர் வாயில் மண்ணு! நெடுங்காலமாய் நம் நாட்டில் வழங்கி
வரும் பழமொழியிது. சிவனுக்கும் திருமாலுக் கும் உயர்வு - தாழ்வு-வேறுபாடு-முரண்பாடு கிடையவே கிடையா தென்று, மதக்குழப்பங்களுக்குள்ளான  மக்கட்கு அறிவு கொளுத்தும் மொழியாக இப்படிச் செப்பினர் சூழ்ச்சி மதியினர் சிலர்.
ஆதிசங்கரர் மேற்கொண்ட சமய நடவடிக்கையான உண்மை இணைப்பில் சைவத்தையும், வைணவத்தையும் உள்ளடக்கவே செய்தார்.
அதன்பின் பல நூறு ஆண்டுகள் கடந்த நிலையிலும் அறிவாசான் அய்யா அவர்கள் தெளிவாகக் கேட்டு வந்தார் மதத் தலைவர்கள் தங்கள் கடவுளர்களைப் பற்றி ஒருமைப்பாடான முடிவுக்கு முதலில் வரமுடியுமா? என்று,
அய்யா சொல் என்றைக்கும் பொய்யாதென்பதற்கு இதோ சான்று:
மொட்டைக் கோபுரம் என்று அழைக்கப்பட்டு வந்த சிறீரங்க பெருமாள் கோவிலின் தென்திசைக் கோபுரத்தை வளரச் செய்வதில் வெற்றி கண்ட அகோபில மடத்தின் 44ஆம் ஜீயர் சிறீ அழகிய சிங்கரிடம் கல்கி இதழ் சார்பில் கேட்கப்பட்ட 87ஆண்டு அகவையாகி விட்ட ஒளிவு மறைவில்லா கேள்வியொன்றுக்குச் சிங்கர் அளித்த விடை சமய மக்களுக்குச் சரியான அறைகூவல்!
கேள்வி: சிறீ சங்கராச்சார்யாள் இந்த கோபுரத்தில் மூன்றாம் கட்டத்துக்குப் பண உதவி செய்திருக்கிறார். பல சைவர்களும் பெருமாள் திருப்பணிகளுக்கு உதவுகிறார்கள். இதுமாதிரி வைஷ்ணவப் பெரியார்கள் சைவ தலப் பணி களுக்கு ஏன் உதவுக்கூடாது?
விடை: நான் சிவன் கோவில்களுக்குச் செய்ய மாட்டேன்... ஏன் என்று கேட்டா.... சிறீமத் நாராயணன் தான் எல்லா தெய்வங்களுக்கும் மேற்பட்ட தெய்வம்னு என்னோட சித்தாந்தம்... பிரம்மாவை நாராயணன் தன் நாபியிலிருந்து படைத்தான். அந்த பிரும்மா சங்கரனைப் படைத்தான் என்று கதையிருக்கு. அதுபடி பார்த்தா சங்கரனுக்கு நாராயணன் பாட்டன் ஆகிறார். தபஸ் பண்ணி பிரம்மா அந்தப் பதவிக்கு வந்தார்னும், அதே போல சிவன் எத்தனையோ யாகம் பண்ணி கடைசியிலே தானும் நெருப்பிலே குதித்துச் சக்தி பெற்றார்னு சாஸ்திரம் இருக்கு, சிவங்கள்ளாம் புண்ணியம் பண்ணி, தபஸ் பண்ணி தெய்வத் தன்மைக்கு உயர்ந்தவர்கள். நாராயணன் எப்போதும் உள்ளவர். அவரை வழிபடற நாங்கள் வேறு தெய்வத்தை வழிபட மாட்டோம். ஏன்னா அங்கே போனா புத்தி கெட்டுப் போகும். நாங்கள்ளாம் மோட்சத்துக்குப் போக டிக்கெட் வாங்கிண்டாச்சு.  அதனாலே சிவன் கோவில் திருப்பணிக்குப் பணம் இருந்தாலும் தரமாட்டேன் (கல்கி 11-4-82) மேற்கண்ட விடை நமக்கு விளக்குவதென்ன?
1. சங்கரனுக்கு நாராயணன் பாட்டன். 2. சிவன் தவம் புரிந்து தெய்வம் ஆனவன். 3 வைணவன் சிவன் கோவிலுக்குச் சென்றால் புத்தி கெட்டுவிடும். 4 வைண வனிடம் பணம் இருந்தால் கூட, சிவன் கோவிலுக்குத் தரக்கூடாது!
ஆக, இன்றைக்கும் கூட அரியும் சிவனும் ஒன்றாகி விட்டார்களா?
குழப்பம் குறையவில்லை; நீடிக்கிறது.  மக்கள் ஒருமைப்பாடு பேசவந்து விட்ட மதக்காவற் காரர்கள் முதலில் கடவுள் ஒருமைப்பாடு காணட்டும்.
- பகுத்தறிவு
-விடுதலை,27.2.15

செவ்வாய், 8 டிசம்பர், 2015

மத விபச்சாரம்

ஒரு மனிதன் புத்திரப் பேறு இல்லாமல் இறந்தால், அவனது மனைவி தனது கணவனின் மூத்த சகோதரனைக் கலவி செய்து புத்திரப் பேறு பெறலாம்.
இந்த வழக்கத்துக்கு இந்து மதத்தில் ‘நியோகா’ என்று பெயர். இது விபச்சாரத் தன்மையாகக் கருதப்படுவதில்லை. இதைவிட மிக மோசமான சம்பவம் மகாபாரதத்திலே காணப்படுகிறது.
பாண்டு ஏதோ ஒரு சாபத்தால் மனைவியைத் தொட்டால் மரணமடைவான் என்று இருந்ததால் தன் மனைவியைப் பல கடவுள்கள் புணர்ந்து புத்திரப் பேற்றைப் பெற வலியுறுத்தினான். அதன்படியே அவள் அய்ந்து பிள்ளை களைப் பெற்றாள்.
-விடுதலை,27.11.15

ஆபாச அபிராமி அந்தாதி!

‘பக்தி’ ஏன் வராது?
‘இடங்கொண்டு விம்மி
யிணைக் கொண் டிறுகி
யிளகி முத்து வடங் கொண்டகொங்கை
மலைகொண் டிறைவர்
வலிய நெஞ்சை
வலங்கொண்ட கொங்கை
நலங்கொண்ட நாயகி
நல்லரவின் படங்கொண்ட வல்குல்
பனிமொழி வேதப் புரியிறையே!”
- அபிராமிபட்டன் எழுதிய அபிராமி
அந்தாதி, பாடல் எண் 42.,
பொருள்: அகன்று, பருத்து, விம்மி, இணைந்து இறுகி வேண்டுங்கால் இளகி, முத்து வடமணிந்து இருக்கின்ற கொங்கையாகிய மலைகளைக் கொண்ட கல்லினும் வலிய கணவர் நெஞ்சை ஆடும்படிச் செய்த வெற்றி மாது யாரெனில், பாம்பின் படம் போன்ற அல்குலினை (பெண்குறி)யும் குளிர்ந்த மொழியினையும் உடைய வேதச் சிலம்பைத் தரித்த அபிராமியே!
-விடுதலை,27.11.15

இயேசு சிலையில் ரத்தம் வடிகிறதாம்! ஓ பாசிட்டிவா? நெகட்டிவா?சென்னை சேத்துப்பட்டு புனித அன்னாள் மேல் நிலைப்பள்ளியில் சிலுவையில் அறைந்த நிலையில் இயேசு சிலை உள்ளது. இந்த சிலையின் கால், கை மற்றும் கழுத்துப் பகுதியில் இருந்து புதன்கிழமை மாலை 3 மணியளவில் ரத்தம் வடிந்ததாக கூறப்படுகிறது. அதை பார்த்த கன்னி யாஸ்திரிகள் ஆச்சரியமடைந்தனர். பின்னர் இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியது. உடனே பொதுமக்கள் கூட்டம் கூடத் தொடங்கியதை அடுத்து ஆயிரக்கணக்கான பொது மக்கள் திரண்டனர். அப்போது (5 காயங்கள்) மற்றும் சிலை பகுதியில் ரத்தம் வடிந்து காய்ந்த நிலையில் இருந்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து அங்கு கூடிய பொதுமக்கள் பரவச மடைந்தனர். அங்கு சிறப்பு பிரார்த் தனை செய்து சென்றனர். சிலையில் ரத்தம் வடிந்த தகவல் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் பரவி யுள்ளது. வெளியூர்களில் இருந்து கிறிஸ்தவர்கள் வேன், பஸ் மூலமாக சேத்துப்பட்டுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் ரத்தம் வடிந்த தாக கூறப்படும் ஏசு சிலை முன்பு கூட்டம் கூட்டமாக நின்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு செல்கின்றனர். செல்போன்கள், வீடியோ காமிராக்களிலும் ஏசு சிலையை படம் எடுத்து சென்றனர். இதனால் சேத்துப் பட்டு, கிறிஸ்தவ ஆலய வளாகம் பரபரப்பாக காணப்படுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இயேசு சிலையில் வடியும் ரத்தத்தை என்ன வகை (குரூப்) ரத்தம் என்று பரிசோதனை செய்து அறிவிப்பதற்கான அரிய வாய்ப்பு அல்லவா இது! இதே போல் உலகம் முழுக்க இயேசு சிலையின் கண்ணில் இருந்து வழியும் ரத்தங்களையும் பரிசோதித்து ஒப்பு நோக்கலாம். அதன் மூலம் இயேசு வாழ்ந்தார் என்பதற்கான ஆதாரமாக வும் இதைப் பயன்படுத்தலாம். வழக்கமாக இயேசு ரத்தம் என்று ஒயினை வழங்கிக் கொண்டிருக்கும் மோசடிக்கு விடை கொடுத்து, எந்த குரூப் ரத்தமோ அதில் நனைத்து அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கலாம். ஏற்கெனவே உலகின் ரத்தக் கொடை ஞராக இருக்கும் ஓ பாசிட்டிவ் வகை ரத்தமாக இருக்கலாம் என்று சிலர் கருதுவதையும் சரி பார்த்துக் கொள்ளலாம்.
http://wiki.answers.com/Q/What_was_the_blood_group_of_Jesus_Christ?)
What was the blood group of Jesus Christ?
Answer: From analysis of the shroud of Turin, some people have said that Jesus was a type O- blood type (which is the universal donor), but it would be difficult or even impossible to confirm.
அப்படியே கன்னி மேரி கண்களி லிருந்து ரத்தம் வடிவதாக சொல்லப் படும்போதும் இதைப் பின்பற்றலாம். தாய்க்கும் மகனுக்கும் என்ன வகை ரத்தம் என்பது தெரிந்தால், அது மனித ரத்தமா அல்லது தேவ ரத்தமா என்பது தெரியக்கூடும். இந்த ரத்தம் எப்போது உற்பத்தியானது என்பதையும் கூட அறியும் வாய்ப்பு ஏற்படலாம். எப்படியும் குறைந்தது 1981 (கி.பி.2014- இயேசு மறையும் போது அவரது வயது 33)  ஆண்டுகள் பழமையான ரத்தம் கிடைப்பது வரலாற்று, அறிவியல் அபூர்வம் அல்லவா? இந்த அரிய வாய்ப்பை நழுவ விடலாமா? பரி சோதனைக்கு நாங்கள் தயார்! இயேசு வுக்கு வசதி எப்படி?
-விடுதலை ஞா.ம.,8.2.14

சனி, 5 டிசம்பர், 2015

தேவாரப் பாடல்


பிடியதன் உருவுமை கொள மிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.
(திருவலிவலம் கோவில் கொண்ட இறைவனைப் பற்றி திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடல் இது. பிடி - பெண் யானை; உருவுமை கொள - உருவத்தை பார்வதி கொள்ள; கரியது வடிகொடு - சிவன் ஆண் யானை உரு கொள்ள)
சிவன் ஆண் யானை உரு கொண்டும் பார்வதி பெண் யானை உரு கொண்டும் கலவி செய்ததால் பிறந்த கணபதி என்பது இதன் பொருள்!
இப்படிப்பட்ட அசிங்கப் பிறப்பாளன் தான் விநாயகன்.
-விடுதலை,7.9.12

கண்ணன் காமுகன்


விஷ்ணு - கிருஷ்ண அவதாரத்தில் நடத்திய அசுத்தங்களையும், கோபியர்களுடன் செய்த லீலைகளையும், அவர்களுடன் கூடிச் செய்த அக்கிரமங்களையும் மனித மனதைக் கெடுத்து கறையாக்கிய அழுக்குச் செயல்களும் எத்தனை, எத்தனை.
பாகவதம் பத்தாவது ஸ்கந்தம் கோபியரைப் புணர்ந்த அத்தியாயம் 22ஆம் பாடலைக் காணுங்கள்.
பொங்கினர் காவுதோறும் புதுமணற் குன்றுதோறும்
பங்கயச் செங்கண்மாயன் பானிலாப் பயன்கொண்டோங்கு
கங்கயந்திரை வாயுற்ற கனியிள வண்ணம் போலும்
கொங்கை வீழ கோதை மாதர் குழாத்தொடு பாடினானே.
மேய தோகையினமென மயிலான
சாயலார் முலைதழீஇ விளையாடிப்பின்
மாயன் வைகறையில் வண்குளர் தண்டார்
ஆயர் பாடியில்ல டைந்தனன் மன்னோ
(அத்தியாயம் - பாடல் 15 - பாகவதம்)
மயிலின் சாயலொத்த மங்கையருடைய தனங்களைக் கிருஷ்ணன் தழுவி விளையாடிக் கொண்டிருந்து, காலையில் ஆயர் பாடியிற் சேர்ந்தான் என்பதாம்.
இதுதானா ரட்சகனாய்க் கருதப்பட்ட கிருஷ்ண பகவானுடைய அரும்தொழில்? இது காமிகளுக்கேற்றதா? சாமிகளுக்கேற்றதா?
வெள்ளி வெண்முல்லையம் மெல்லினர் துன் றுவிரைக் கோதைக்
கள்ள விழோதியரிற் றோறும் வெண்ணெய் கவர்ந்துண்டோன்
அள்ளிலை வேல்விழியாரமுதம் யுரையஞ்சாயல்
ஒள்ளிழை பச்சிள வேய்புரை தோணல முண்டானே.
(பாகவதம் -39ஆம் பாட்டு)
கோபிகா பெண்களுடன் வீடுகளெல்லாம் வெண் ணெய் திருடிச் சாப்பிட்ட கண்ணன், வேலையொத்த கண்களையும், அழகான சாயலையும், ஒளிமிக்க பூசணங்களையும் உடைய கூனி எனும் பெண்ணோடு புணர்ச்சி செய்தானாம். அடுத்து, தன் குருவான இராயன் கோசு என்றவரின் மனைவி இரதை என்பவளைக் களவாடிப் போய், அவ ளுடன் காட்டில் கூடிப் புணர்ந்தும், பிருந்தாவனத்தில் பல இடச்சியரை ஆலிங்கனம் செய்து, வடமதுரையில் பதினாறாயிரம் பெண்களுடன் லீலை புரிந்தானாம் கிருஷ்ணன்.
இப்படி கண்ணன் செய்த காமுகச் செயல்கள் எத்தனை? கோகுலாஷ்டமி கொண்டாடும் கிருஷ்ணனின் பக்தர் களே சிந்தியுங்கள்!
இரா.கண்ணிமை
விடுதலை,7.9.12