கிருஷ்ணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிருஷ்ணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 2 செப்டம்பர், 2024

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவோரே கிருஷ்ணன் லீலைகளை ஏற்றுக் கொள்கிறீர்களா?

 


விடுதலை நாளேடு

சித்திரபுத்திரன்

கிருஷ்ணன் – அர்ஜூனன்
சம்பாஷணை!
கிருஷ்ண ஜெயந்தியாம்! அதுவும் எது கிருஷ்ணனின் பிறப்பு என்பதில் கூட சந்தேகமாம் – இரண்டு கிருஷ்ண ஜெயந்தி என்று முரண்பாடான செய்திகள். அது எப்படியோ தொலையட்டும்
தந்தை பெரியார் அவர்களின் இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

அர்ஜூனன்: ஹே! கிருஷ்ணா! புராணங்களில் தேவர்களுக்கோ, இந்திரனுக்கோ, பரமசிவனுக்கோ கஷ்டமும் ஆபத்தும் வந்த காலங்களில் எல்லாம் நீ (அதாவது விஷ்ணு) பெண் வேஷம் போட்டுக் கொண்டு போய் அவர்களின் எதிரிகளை மயக்கி வஞ்சித்து வசப்படுத்தியதாகவே காணப்படுகின்றனவே! அது மாத்திரமல்லாமல் அந்தப் பெண் வேஷத் தோடேயே நீ ஆண்களிடம் சம்போகம் செய்ததாகவும் அதனால் உனக்குப் பிள்ளைகள் கூடப் பிறந்ததாகவும் காணப்படுகின்றதே! இது உண்மையா? அல்லது இதற்கு ஏதாவது தத்துவார்த்தம் உண்டா? தயவு செய்து சொல் பார்ப்போம்.

கிருஷ்ணன்: ஓ! அர்ஜூனா! நீ சொல்லுகிறபடி புராணங்களில் இருப்பது உண்மையே. ஆனால் நான் அந்தப்படி ஒரு நாளும் செய்ததே இல்லை. அன்றியும் நானே பொய்யாக இருக்கும்போது பிறகு நான் பெண் வேஷம் எப்படி போடமுடியும்? அப்படியே போட்டாலும் எப்படி கலவி செய்ய முடியும்? ஒரு சமயம் திரு. அ.இராகவன் சொல்லுவது போல் ஆண் – ஆண் கலவி செய்ததாகவே வைத்துக் கொண்டாலும் பிள்ளை எப்படிப் பெற முடியும்? கேழ்வரகில் நெய் வடிகிறது என்று சொன்னால் கேட்பவருக்கு மதி வேண்டாமா? சொல்லுகிறவன் சொன் னால் கேட்பவருக்கு மதி வேண்டாமா? சொல்லுகிறவன் சொன்னால் கேட்ப வனுக்கு புத்தி வேண்டாமா? பின்னை ஏன் புராணங்களில் அந்தப்படி எல்லாம் சொல் லப்பட்டு இருக்கின்றது என்று கேட்டால் அதற்குத் தத்துவார்த்தம் உண்டு.
அரு: அந்த தத்துவார்த்தம் என்ன? எனக்கு சற்று சொல்லு பார்ப்போம்!
கிரு: அந்த மாதிரி எழுதின தத்து வார்த்தம் என்ன வென்றால் மனிதன் பெண் இச்சையில் கட்டுப்பட்டவன் என்பது நிச்சயம். நேர்வழியில் வேலை செய்து வெற்றி பெற முடியாத காரியங்களிலும், எதிரியை ஜெயிக்கப் போதிய சக்தி இல்லாத காலங்களிலும் ஒருவன் வெற்றி பெற வேண்டுமானால் இந்த வழி மிகச் சுலபமான வழி என்பது பெரியோரின் கருத்து. அதாவது ஒரு நல்ல அழகிய பெண்ணை கூட்டிப் போய் காட்டியோ, அல்லது அவனுக்குக் கூட்டிவிட்டோ அதன் மூலம் எவ்வித வெற்றியையும் பெறலாம் என்பதே இதன் தத்துவார்த் தமாகும். இது முக்தி அல்லது வெற்றி பெறும் ரகசியங்களில் ஒன்று என்பதைக் காட்டுவதற்காக எழுதப்பட்டதாகும். இப்பவும் உலக வழக்கில் சக்தியில்லாத வன், தகுதி இல்லாதவன் ஏதாவது ஒரு பதவியையோ, பொருளையோ அடைந் திருந்தால் அதற்குப் பொது ஜனங்கள் திடீரென்று கற்பிக்கும், அல்லது நம்பியே சொல்லும் வழக்கச் சொல்லைப் பார்த்தால் நன்றாய் விளங்கும். அதாவது சக்கரத் தின் மகிமையினால் சம்பாதித்துதான் வெற்றி பெற்றான் -பதவி பெற்றான் என்று சாதாரண பாமர மக்களே கூடச் சொல்லு வதைப் பார்க்கிறோம். சக்கரம் என்றால் என் (விஷ்ணு) ஆயுதத்திற்குப் பெயர். பெண்கள் . . . க்கும் பெயர். எவ்வளவோ பேருக்கு இந்த தத்துவார்த்தம் இப்போது உண்மையிலேயே பயன்படுவதையும் பார்க்கின்றோம்!

ஆதலால் வெற்றி பெறுவதற்கு வழி எனப்தைக் காட்டும் தத்துவப் பொரு ளாகவே பெரியோர்கள் இப்படி எழுதி வைத்தார்கள். இது போலவே தத்துவார்த் தங்கள் உண்டு. அது தெரியாமல் நமது சுயமரியாதைக்காரர்கள் அவற்றைப் பரிகாசம் செய்கின்றார்கள். ஆனால் அந்தப் பழக்கமும், வழக்கமும் தத்து வார்த்தத்தைப் பின்பற்ற வேண்டிய அவசியமும், அவைகளெல்லாம் சுயமரியாதைக் காரர்களுக்கல்ல. புராண மரியாதைக்காரருக்கு என்பதை மறந்துவிடாதே.
அரு: சரி, சரி! இப்போது எனக்கு விளங்கிற்று. ஆனால் இது போலவே இன்னும் ஒரு சந்தேகம்! சற்று தயவு செய்து அதையும் விளக்கினால் உனக்கு புண்ணியம் உண்டு.
கிரு: அதென்ன சொல்லு பார்ப்போம்!
அரு: அதே மாதிரி மற்றும் பல புராணங்களில் சிவன் ஒரு சன்னியாசி ரூபமாக வந்து ஒருவனின் பெண்சாதியை கேட்டான் என்றும், அந்தப்படியே அவன் கொடுத்தான் என்றும் சொல்லப்படுகின் றதே! அதன் ரகசியம் என்ன?
கிரு: இது தெரியவில்லையா?
அரு: தெரியவில்லையே!
கிரு: சன்னியாசிகளுக்குச் சாப்பாடு போட வேண்டியது கிரகஸ்தன் கடமை. பிறகு பெண் வேண்டுமானால் சப்ளை செய்யவேண்டியதும் கிரகஸ்தன் கடமையாகத்தானே இருக்க வேண்டும்! அதனால்தானே 32 தர்மங்களில் பெண் போகமும் ஒன்று என்று சொல்லப்பட்டிருக் கின்றது! ஆகவே அந்தப்படி சன்னியாசிக்குப் பெண்களைக் கொடுக்கும்போது மனதில் சங்கடம் இல்லாமல் தாராள மனதுடன் உதவுவதற்காகவே சிவன் சன்னியாசி ரூபமாய் – ஒரு சிவனடியார் ரூபமாய் வந்து கேட்டார் என்று அதாவது சன்னியாசி யாகவோ, சிவனடியாராகவோ ஒருவன் வீட்டுக்கு வந்தால் அவன் கேட்டவு டனேயே கொடுக்க வேண்டும் என்பதற் காகவே அதாவது இந்த சன்னியாசி – சிவனடியார் ஒரு சமயம் சிவபிரானே இந்த வேடம் தரித்து வந்தானோ என்று எண்ணிக் கொண்டு பேசாமல் கொடுத்து விடட்டும் என்றும் அதற்காக மனதில் எவ்வித விகல்ப புத்தியும் இருக்கக் கூடாது என்றும் கருதியே இந்தப்படி சொல்லப் பட்டிருக்கிறது. இது இப்போதும் சில புராண மரியாதைக் காரர்கள் வீடுகளில் நடைபெற்று வருகிறதை நான் அடிக்கடி பார்க்கின்றேன்.
தவிரவும், குருசாமியார், பாகவதாள், பரதேசி, அடியார்கள் இப்படிப்பட்டவர்கள் அநேக வீடுகளில் இருந்து கொண்டு நன்றாய் சாப்பிட்டுக் கொண்டு அந்தந்த வீட்டுக்காரருக்கு இந்த புண்ணியமும் கொடுத்துக் கொண்டு வருவதைப் பார்க்கின்றேன். சிலர் தெரிந்தே விட்டுக் கொண்டிருக்கின்றார்கள், சிலர் தெரி யாதது போலவே காட்டிக் கொண்டிருக் கிறாகள். இதெல்லாம் அவரவர்கள் புராணங்களில் வைத்திருக்கும் பக்திக்கும், மரியாதைக்கும் தகுந்தபடி இருக்கும்.
அரு: சரி, இந்த சந்தேகமும் ஒருவாறு விளங்கிற்று. இன்னமும் ஒரு சந்தேகம் இருக்கின்றது. அதை இப்போது விளக்கு கின்றாயா?
கிரு: என்ன அது! சொல் பார்ப்போம்!
அரு: அதாவது புராணங்களில் அக்கிர மமான, வஞ்சகமான புரட்டான காரியங் கள் செய்யவேண்டிய பொழுதெல்லாம் கடவுள் பார்ப்பன வடிவமாகவே வந்த தாகக் காணப்படுகின்றதே! இதன் தத்துவ மென்ன?
கிரு: இந்த மாதிரி காரியங்கள் செய்வதற்கு அவனே (பார்ப்பனனே) தகுந்தவன் என்பதும், அது அவன் சுபாவம் என்பதும், அப்படிச் செய்வதினால் வேறு எவ்விதமான பாவமோ, நரகமோ ஏற்படு மென்று எழுதி இருக்கும் சாஸ்திரங்கள் எல்லாம் பொய், புரட்டு, சுயநலத்திற்காக எழுதப்பட்டவை என்பதை அவன் தெரிந்தவன் என்றும் இப்போதும் யாருக் காவது இந்த மாதிரி அக்கிரமமான காரியங்கள் செய்து ஏதாவது ஒரு காரியத்தைச் சாதிக்க வேண்டுமானால் அவற்றிற்கு பார்ப்பனர்களே தகுந்தவர்கள் என்றும், அவர்கள் எவ்வித பாதகமான, அவமானமான காரியங்களையும் செய்ய பயப்படமாட்டார்கள் என்றும் அவற்றில் கைதேர்ந்தவர்கள் என்றும் காட்டுவதற் காகவே அந்தப்படி எழுதப்பட்டதாகும். இதை அறிந்தே அநேக புராண மரியா தைக்காரர்கள் இப்படி காரியங்கள் செய்வதற்காகப் பார்ப்பனர்களைத் தங்கள் காரியஸ்தராகவோ, மற்ற காரியங்களுக்குப் பொறுப்பாளிகளாகவோ வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். சம்பளத்துக்கு வைத்துக் கொண்டும் இருக்கிறார்கள். சம்பளத்துக்கு வைத்துக் கொள்ள சக்தி இல்லாதவர்கள் சிநேகிதர்களாகவாவது வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். கவனித்துப் பார்த்தால் இது நன்றாய் விளங்கும்.
அரு: இன்னம் ஒரு சந்தேகம்?
கிரு: என்ன சொல்லு?
அரு: கடவுளைப் படைத்தார்களல்லவா மனிதர்கள்!
கிரு: ஆம்.
அரு: அப்படிப் படைத்தவர்கள் கடவுள் மனிதனுக்குள் இருப்பதாகவோ அல்லது மனிதனுக்குள் இருக்கும்படியாக ஆவா கனம், கும்பாபிஷேகம் முதலி யவை செய்து மனிதனுக்குக் கொடுப்பதும், மனிதனுக்குச் செய்வதும் கடவுளுக்குச் செய்தது, கடவுளுக்குக் கொடுத்தது என்று கருதும்படி செய்யாமல் கல்லுக்குள் கடவுளை ஆவாகனம் செய்து, அதற்குக் கும்பாபிஷேகம் செய்து கல்லைக் கும்பிடும்படி ஏன் செய்தார்கள்?
கிரு: அதன் ரகசியம் என்னவென்றால், மனிதனுக்குள் கடவுளை ஆவாகனம் செய்தால் நைவேத்தியம் செய்யும் சாமானையெல்லாம் மனிதன் சாப்பிட்டு விடுவான். அணிந்து கொள்வான். அப்புறம் நடுவில் இருப்பவனுக்கு ஒன்றும் கிடைக்காமல் போய்விடும். ஆதலால்தான் கல்லிலும், செம்பிலும் ஆவாகனம் செய்து அதற்குத் தனக்கு வேண்டியதையெல்லாம் நைவேத்தியம் செய்யச் செய்து, தான் எடுத்துக் கொள்வது. ஆகவே இந்த மாதிரி கடவுளை உண்டாக்க வேண்டிய அவசிய மும் ஏற்பட்டது. ஆகவே பூசாரி ஆதிக்கம் குறைந்தால்தான் கடவுள்கள் உற்பத்தியும் குறைந்துவிடும், கடவுள் மஹிமைகளும் ஒழிந்துவிடும்.
அரு: சரி, இவை எனக்கு ஒரு மாதிரி விளக்கமாயிற்று. இன்னும் சில விஷ யங்கள் தெரிய வேண்டியிருக்கின்றன. ஆனால் அவைகளை சாவகாசமாய் பேசுவோம்.
கிரு: சரி.
21-12-1930 – குடிஅரசு இதழில் சித்திரபுத்திரன் என்ற புனைப் பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியது.

எப்புடிடா? – ‘கிருஷ்ண ெஜயந்தி’’
கிருஷ்ணன் பிறப்பு என்னவென்றால், தேவர்கள் எல்லாம் போய், ‘உலகில் அதர்மம் அதிகமாகி விட்டது; இராட்சதர்கள் தொல்லை பொறுக்க முடியவில்லை; அதைப் போக்க வலிமையுள்ள ஒருவனை எங்களுக்கு அளிக்க வேண்டும்’ என்று விஷ்ணுவைக் கேட்டார்களாம். உடனே விஷ்ணு என்ன செய்தான் தெரியுமா? தன் மார்பிலிருந்து இரண்டு மயிரைப் பிடுங்கிக் கொடுத்தானாம். அந்த இரண்டு மயிரில் ஒன்று கறுப்பு நிறமாம்; மற்றது வெண்மை நிறமாம். கறுப்பு மயிர் கிருஷ்ணனாகவும், வெள்ளை மயிர் அவன் அண்ணனாகவும் ஆயின என்றும் அபிதான கோசத்தில் உள்ளது.

இந்த மாதிரி காரியங்கள் செய்வதற்கு அவனே (பார்ப்பனனே) தகுந்தவன் என்பதும், அது அவன் சுபாவம் என்பதும், அப்படிச் செய்வதினால் வேறு எவ்விதமான பாவமோ, நரகமோ ஏற்படுமென்று எழுதி இருக்கும் சாஸ்திரங்கள் எல்லாம் பொய், புரட்டு, சுயநலத்திற்காக எழுதப்பட்டவை என்பதை அவன் தெரிந்தவன் என்றும் இப்போதும் யாருக்காவது இந்த மாதிரி அக்கிரமமான காரியங்கள் செய்து ஏதாவது ஒரு காரியத்தைச் சாதிக்க வேண்டுமானால் அவற்றிற்கு பார்ப்பனர்களே தகுந்தவர்கள் என்றும், அவர்கள் எவ்வித பாதகமான, அவமானமான காரியங்களையும் செய்ய பயப்படமாட்டார்கள் என்றும் அவற்றில் கைதேர்ந்தவர்கள் என்றும் காட்டுவதற்காகவே அந்தப்படி எழுதப்பட்டதாகும்.

கடவுளின் யோக்கியதை
– சித்திரபுத்திரன் –

கேள்வி : கடவுள் நன்மையே உருவாய்க் கொண்டவர் என்பதற்கு உதாரணம் சொல்லு.
பதில் : நல்ல காற்று, நல்ல தண்ணீர், வாசனையுள்ள புஷ்பம், ருசியுள்ள ஆகாரம், சத்துள்ள பழ வகை, மழை, நதி, நந்தவனம், பால், பசு, நல்ல பெண்கள், சந்திரன், சூரியன் முதலிய அனேக அருமையான வஸ்துக்களை உற்பத்தி செய்து நமக்குக் கொடுத்திருக்கிறார். ஆதலால் கடவுள் நன்மையே உருவாகக் கொண்டவர்.
கேள்வி: கடவுள் கெடுதியையே உருவாய்க் கொண்டவர் என்பதற்கு உதாரணம் சொல்லு..
பதில்: கெட்ட காற்று, விஷப் புகை, நோய்க் கிருமிகள் உள்ள தண்ணீர், துர் வாடையுள்ள மலம், கசப்பான ஆகாரம், உபயோகமற்றதும் நோயை உண்டாக்குவதுமாக பழம், துஷ்ட மிருகங்கள், விஷ ஜந்துக்கள், கொடிய வியாதி, கடும் வெய்யில், இடி, பூகம்பம், முரட்டு வெள்ளம், இருட்டு, நோய் உள்ள பெண்கள், தரித்திரம், முள்ளுள்ள புதர்க்காடுகள் முதலானவை களையெல்லாம் கடவுள் உற்பத்தி செய்திருக்கிறார். ஆதலால் கடவுள் கெடுதியே உருவாய்க் கொண்டவர்.
கேள்வி: இந்தக் கெடுதிகளை யெல்லாம், கடவுள் தான் உற்பத்தி செய்தார் என்பதற்கு என்ன ருஜு?
பதில்: முன் சொல்லப்பட்ட நன்மை களை எல்லாம் கடவுள் தான் உற்பத்தி செய்தார் என்பதற்கு என்ன ருஜுவோ, அந்த ருஜுவைத்தான் கெடுதிகளையும் கடவுள்தான் உண்டாக்கினார் என்று சொல்வதற்கும் ருஜுவாக ஏற்றுக் கொள்ளக் கோருகிறேன்.
கடவுள் படைத்த படைப்பெல்லாம் மனிதனுக்காகவே.

மனிதனைப் படைத்தான் தன்னை வணங்க என்று ஒரு மதம் சொல்லுகின்றது. ஆகவே, கடவுளை வணங்குவதற்கு என்று கடவுளாலேயே மனிதன் படைக்கப் பட்டிருப்பானேயானால் கடவுளின் இழி தன்மைக்கு வேறு என்ன சாட்சியம் வேண்டும்?
தன்னை வேறு ஒரு மனிதன் வணங்க வேண்டும் என்று ஒரு மனிதன் நினைத்தானேயானால் அவனை நாம் எவ்வளவு அயோக் கியன் என்றும், ஆணவக்காரனென்றும், இழிகுணம் படைத்தவ னென்றும், ஈனன் என்றும் சொல்லுகின்றோமா இல்லையா?
அப்படியிருக்க, ஒரு கடவுள் என்று சொல்லப்பட்டவர் தன்னை வணங்கு வதற்கு என்று பலகோடி மக்களைப் படைப்பித்து அவர்களை பலவிதமான கஷ்டங்களும், குறைகளும் அனுபவிக்க விட்டு வேடிக்கை பார்த்தால் அப்படிப்பட்ட கடவுள் நல்லவர், பெருந்தன்மை உள்ளவர், தயாபரர், கருணாமூர்த்தி, விருப்பு, வெறுப்பு, தற்பெருமை இல்லாதவர் என்றெல்லாம் அறிவுள்ள மனிதனால் சொல்லமுடியுமா?

அன்றியும், கடவுள் மனிதனைப் படைத்தது உண்மையாய் இருக்கு மானால் அந்த ஒரு காரி யமே பெரிய தொரு அயோக்கியத்தனமும், அக்கிர முமானதென்றுதான் சொல்ல வேண்டும்.
ஏனெனில், மனிதனால் மற்ற மனிதர்களுக்கும், மற்ற ஜீவராசிகளுக் கும் எவ்வளவு துன்பங்கள் நிகழ் கின்றன?
மனிதன் எவராவது யோக்கியமாய் இருக்க முடிகின்றதா?
இவைகளையெல்லாம் மனிதனைப் படைப்பதற்கு முன் கடவுளுக்குத் தெரியாதா?
மனிதனுக்குக் கொடுத்திருக்கும் புத்தி, அறிவு என்பதை அவன் எப்படி உபயோகிப்பான் என்பதை கடவுளுக்கு ஆரம்பத்தில் அறிய முடியவில்லையா? அல்லது அறியும் சக்தி இருந்தும் கவலையீனமாய் இருந்து விட்டாரா?
இவைகளையெல்லாம் பார்த்தால் கடவுளின் யோக்கியதையும் அவர் இருக்கும் லட்சணமும் நன்றாய் விளங்க வில்லையா?

– குடிஅரசு – உரையாடல் – 12.05.1935

செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

இதுதான் கடவுள் பக்தியா? ஒழுக்கத்திற்கு பாடமா? / குலசேகர ஆழ்வார் பாடுகிறார்


குலசேகர ஆழ்வார் பாடுகிறார்

கிருஷ்ண - லீலை!

"ஒரு கையால் ஒரு முலை முகம் நெருடா

வாயிலே முலையிருக்க

நஞ்சமார்தரு சுழிமுலை அந்தோ சுவைத்து  நீ

அருள் செய்து வளர்ந்தாய்

கஞ்சன் நான் கவர் கருமுகிலந்தாய்

கடைப்பட்டேன் வறிதே முலை சுமந்து

சங்கு தங்கு முன்கை நங்கை

கொங்கை தங்கலுற்றவன்

பண்ணை வென்ற இன்சொல் மங்கை

கொங்கை தங்க பங்கயக்

கண்ண! நின்ன வண்ண மல்ல தில்லை

எண்ணும் வண்ணமே என்றும்

கொங்கை பாலமுது உண்டவன்

மாதர் வாயமுதம் உண்டவன்

என்று கண்ணனையும்

ஆடகத்து பூண் முலையுடையவள் யசோதை"

- குலசேகர ஆழ்வார்

பக்த கோடிகளே, கொஞ்சம் சிந்தியுங்கள் - கோபப்படாமல்!

கண்ணன் பெருமை இதுதானா?

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

கிருஷ்ணன் பற்றிய புதிர்கள்



பெண்கள் அவசியம் படிக்க வேண்டும்.

மகாபாரதத்தின் கதாநாயகன் கிருஷ்ணன்.சரியாக  சொல்லவேண்டுமானால் 
கௌரவர்கள்-பாண்டவர்கள் 
சம்பந்தட்டதே மகாபாரதக் கதையாகும்.தம் மூதாதையரின் அரசாட்சி உரிமைக்காக இவ்விரு அணியினர் மேற்கொண்ட யுத்தக் கதையே மகாபாரதக் கதையாகும்.  
அவர்கள் தான் இக்கதையின் பிரதான பங்கினராய் இருந்திருக்க வேண்டும்.ஆனால் அப்படி தெறியவில்லை.கிருஷ்ணன் தான் கதாநாயகன்.இது வினோதமாய் உள்ளது.மேலும் கிருஷ்ணன் கௌரவர்கள் பாண்டவர்கள் காலங்களில் வாழ்ந்திருந்த ஆளாகவும் தெறியவில்லை.

கிருஷ்ணன் நாடான்ட பாண்டவர்களின் நண்பனாய் இருந்திருக்கிறான்.

வேறொரு நாட்டு அரசனான கம்சனுக்கும் கிருஷ்ணன் எதிரி.அருகருகே ஒரே இடத்தில், இரண்டு அரசாட்சி இருந்திருக்குமோ,
இவ்விரு அரசர்களுக்கிடையே உறவு இருந்ததாக மகாபாரதத்தில் காட்டிட எவ்வித ஆதாரமில்லை.

கிருஷ்ணன் மற்றும் பாண்டவர் பற்றி தனித்தனி கதைகள் கலந்து ஜோடிக்கப்பட்டு இடைச்செருகலாகப் பிற்காலத்தில் நுழைக்கப்பட்டிருக்கவேண்டும்.

வியசானின் கூற்றின் படி கிருஷ்ணன் மனிதர்களுள் தெய்வம்.
அவ்வளவுதான் அதனாலேயே கிருஷ்ணன் மகாபாரத கதையில் கதாநாயகன்
ஆக்கப்பட்டுருக்கின்றான். உண்மையில் கிருஷ்ணன் மனிதர்களுள் தெய்வம் என்றும் அளவுக்கு அருகதையுடையவனா.?

ஒருவேளை அவனுடைய வாழ்க்கை சுருக்கம் அவ்வித  கேள்விகளுக்குச் சரியான விடை அளிக்குமா என்று
சற்று பார்ப்போம்.

* பத்ரா மாதம் எட்டாம் நாள் நள்ளிரவில் மதுராபுரி நகரில் கிருஷ்ணன் பிறந்தான்.

* அவன் யாதவ இனத்தை சார்ந்தவன் அவன் தந்தை வாசுதேவன் இவன் மனைவி தேவகி.

கிருஷ்ணனின் பிறப்பு:

தேவிக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தை, கம்சனைக் கொன்றுவிடும் என்று வானத்திலிருந்து அசரீரி சொன்னதாய் நாரதன் மூலம்  கேள்விப்பட்ட கம்சன் தேவகியையும் அவன் கணவனையும் சிறைப்படுத்தி ஒன்றன் பின் ஒன்றாய்ப் பிறந்த அவர்களுடைய 
ஆறுகுழந்தைகளையும் கொன்றுவிடுகிறான்.
ஏழாவது குழந்தையாக பலராமன் தேவகியின் வயிற்றில் கருவாய் இருக்கும்போதே,
வாசுதேவனின் வேறோரு மனைவியான அதாவது வைப்பாட்டி ரோகிணியின் வயிற்றுக்குள் அதிசயமான முறையில் மாற்றப்படுகிறான்.

எட்டாவது குழந்தையாய் கிருஷ்ணன் பிறக்கிறான்.

கிருஷ்ணனுடைய இந்த பிறப்பே நம்பகத்தன்மையற்றதாக உள்ளது.
அதாவது எப்படி ஒரு பெண்ணீன் வயிற்றில் இருக்கும் கருவை இன்னோரு வயிற்றில் மாற்றமுடியும்.
ஓ கதைதானே மகாபாரதம் உண்மைகிடையாதல்ல அதா அள்ளிவிடுகிறார்கள்.
அப்போ கிருணஷ்ணன் மகாபாரத கதையில் ஒரு வைப்பாட்டிக்கு பிறந்த  மகனாக இவன் பிறப்பு தொடங்குகிறது.சரி

கிருஷ்ணனும் பெண்ணியமும்:

கிருஷ்ணனை பெரும்பாலும் பெண்கள் தான் வழிபடுகின்றார்கள் அனால் கிருஷ்ணன் அந்த பெண்ணியத்திடம் எந்தளவு மதிப்பு வைத்துள்ளான் என்பதை மகாபாரதமும்,
ரிவம்ச புராணமும்,
கூறுவதை பார்ப்போம்.
 
கோபிகள் அதாவது பெண்கள் ஒரு நாள் யமுனையில் குளிக்கப் போனார்கள்.நதியில் இறங்குமுன் தம் ஆடைகளைக் களைந்து கரையில் வைத்தார்கள்.பெண்கள் நிர்வணமாக குளிக்கும் பழக்கம் இன்னும் சில நாட்டில் நிலவிவருவதாக சொல்லப்படுகிறது.
அதை திருட்டுத்தனமாக பார்த்தும், நதிக்கரையில் பெண்கள் அவிழ்த்துவைத்த ஆடைகளைக் கிருஷ்ணன் எடுத்துக்கொண்டு ஓடிபோய் நதியோரம் இருந்த மரத்தின் மீது ஏறிக்கொண்டான்.
பெண்கள் இரு கைகளால் உடலை மறைத்துக்கொண்டு  ஆடைகளை திருப்பி தா கிருஷ்ணா என்று அப்பெண்கள் கேட்டபோது, இந்த பொம்பலபொறுக்கி கிருஷ்ணன் ஒவ்வொருத்தியும். அம்மரத்தருகே வந்து தனக்கு ஆடை வேண்டும்மென்று கையேந்திக் கேட்டாலோழிய அத்துணிகளைக் கொடுக்கமுடியும் இல்லையேன் தரமுடியாது என்று கூறினான். 
பெண்களும் உடைக்காக தன் உடலை மறைத்திருந்த கைகலால் யேந்தி கேட்டபின்பே இந்த கிருஷ்ணன் உடைகளை கொடுத்தானாம் என்று பகவத்கீதையில் கூறப்படுகிறது.
இந்தளவுக்கு கேவலமாக பெண்களை பாலியல் கொடுமைகள்  கிருஷ்ணன் செய்திருக்கிறான் என்பது நினைக்கும்போதே கோவமாக உள்ளது.

கிருஷ்ணன் இராசலீலையை பார்ப்போம்:

கிருஷ்ணனின் இளைய பிராயம் முழுவதும் பிருந்தாவனத்து இளம்பெண்களுடன் தகாத உறவு கொண்டு மது அருந்திக்கொண்டு பெண்களோடு தகாத நடனத்துடன் கழித்ததாகவே இதில் அமைகிறது.
கிருஷ்ணன் செய்த இத்தகைய செயலுக்கு இராசலீலை என்கிறார்கள் இதை நாம்செய்தால் விபச்சாரி,குடிகாரன்,பொம்பல பொறுக்கி என்றெல்லாம் நம்மை கூறிருப்பார்கள்.
இவனை கடவுளாக வணங்குகிறார்கள்.

கிருஷ்ணனின் திருமண வாழ்க்கையை பார்ப்போம்:

மன்னன் ருக்மாங்கதனின் மகள் ருக்குமணியைக் கிருஷ்ணன் திருமணம் செய்துகொள்கிறான்.
இராதாவோ ஏற்கெனவே திருமணம் ஆனவள்.முறைப்படி மணந்த மனைவி.ருக்குமணியை விட்டுவிட்டு இன்னோருத்தனின் மனைவியான இராதாவுடன் கிருஷ்ணன் வாழ்க்கை நடத்துகிறான்.கிருஷ்ணனுக்கு கொஞ்சம்கூட செய்தது தவறு என குற்றயுணர்ச்சி,மனஸ்தாபமோ இல்லை.இத்தோடு நிற்க்காமல் கிருஷ்ணன் பல பெண்களை மணந்துள்ளான் அவனின் மனைவிகள் ருக்குமணி,
சத்தியபாமா,ஜம்பாவதி,காளிந்தி,
மித்ரபிந்தா,சத்யா,பத்ரா,மற்றும் லஷ்மணா ஆகிய எட்டுபேர்களாவார்கள் இவர் பிரபலமானவர்கள் என்பதால் இவர்கள் பெயர் குறப்படுகிறது.
இவர்கள் எங்கு பிரபலமானவர்கள் என்றால் பிரஜோதிஷ் மன்னன் நாரகனுடைய அந்தப்புரத்தில் பிரபலமானவர்களாம்.
மீதம் பதினாறாயிரத்து நூறு மனைவிகளை கிருஷ்ணன் ஒரே நேரத்தில் மணந்தான இவனெல்லாம் கடவுள் தூ தரங்கெட்டவன்.
அப்பாவி ருக்குமணியை கைவிட்டுவிட்டு வைப்பாட்டியுடன் வாழ்கிறான்.

 கிருஷ்ணனுடைய போர் வீரம் பற்றி பார்ப்போம்:

நேர்மையான முறையிலேயே தம்மை யாரும் கொன்றிடக்கூடும்  எனும் நம்பிக்கை கொண்டிருந்த துரோணனைப் பாண்டவர்கள் தகாத வழியில் கொன்றிட அவர்களுக்குக் கிருஷ்ணன் ஆலோசனை சொன்னான்.துரோணன் ஆயுதங்களைக் கீழே போட்டிடச் செய்தால் மட்டுமே அவனைக் கொல்வது எளிதென்று ஆலோசனை கொடுக்கிறான் கிருஷ்ணன்.

ஒரு தடவை தவைபயானா எனும் ஏரியின் ஓரத்தில் பீமனுக்கும் துரியோதனக்கும் இடையில் கடுமையான போர் நடந்து கொண்டிருந்தது.
பீமன் பின் வாங்கி கொண்டிருந்தான்.
துரியோதனனுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.இந்த வேலையில் கிருஷ்ணன் அர்ஜீனன் மூலம் பீமனுக்கு நினைவூட்டுகிறான்.

"உன் எதிரியைத் தொடையை நோக்கித் தாக்கு,அவன் சாய்ந்து போவான் "என்கிறான்.

போரில் ஈடுபட்டிருக்கும் எதிரியைத் தொப்புளுக்குக் கீழே அடித்துத் தாக்குவதென்பது போர் மரபுகளுக்கெதிரானது.
அப்படித்தாக்கினாலொழிய இல்லை துரியோதனைக் கொன்றிடமுடியாது என்பதால் தகாத வழியில் துரியோதனைக் கொன்றிட பீமனுக்குக் கிருஷ்ணன் யோசனை தருகிறான் அதையே பீமனும் செய்கிறான்.கிருஷ்ணன் சிறுவயதிலேயே அவனை கொள்ளவந்த எதிரியை வீழ்த்தி கொலைசெய்தான் என்றெல்லாம் கூறினார்கள்.இவனின் போர் மரபு கோழைத்தனமாக இருக்கிறது தூ இவனெல்லம் வீரனா.

மதுவெறியன் கிருஷ்ணன்:
 
பிரபாசா எனும் புண்ணிய பூமிக்கு யாதவர்கள் பெருமளவில் போனார்கள்.அங்கே மது தடை செய்யப்பட்டிருந்தது.
இதை கிருஷ்ணன் மற்ற யாதவத் தலைவர்களும் நன்றாக அறிந்திருந்தனர்.ஆயினும் அந்தத் தடையை யாரும் பொருள்படுத்தாமல்
குடித்து போதை தலைக்கேறி சர்ச்சையில் ஈடுபட்டனர்.
பின்னர் கலவரத்தில் ஒருவர் ஒருவர் வெட்டிக்கொண்டு மாண்டனர்.
இதில் கிருஷ்ணன் பெருமளவில் தம் சொந்தமக்களான யாதவர்களை கொன்று குவித்தான்.இப்படி மதுவெறியில் திரிபவன் கடவுளா.

இப்படி தன் வாழ்க்கைய் முறைகளில் ஒழுக்கம்,நேர்மை,உண்மை,கருணை,வீரம்,என எந்த சிறப்பையும் அடையாத ஒருவன் எப்படி கடவுளாக வணங்குகின்றிர்கள்.மாறாக போதைபழக்கம்,காமவெறி,போரில் திருட்டுத்தனம்,பெண்களை ஏமாற்றுபவன்,என அனைத்து தீமைகுணம் பெற்றவனை நீங்கள் வணங்குகின்றிர்கள் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

மிகவும் தரங்கெட்ட பிறவியே  கிருஷ்ணன்.

ஆதாரங்கள்..
பகவத் கீதை,
ரிவம்ச புராணம்,
மகாபாரதம்,

மீள்பதிவு.

Che அஜித்ர,புதுவை.
ஆறாம் அறிவு முகநூல் குழு பதிவு
30.8.21

செவ்வாய், 3 செப்டம்பர், 2019

"கிருஷ்ண லீலைகளுக்கு வக்காலத்து வாங்குபவர்களே, இதற்கென்ன பதில்?''



இன்றைய தினமலர்' (சென்னை செவ்வாய் 3.9.2019) நாளிதழில் பேச்சு, பேட்டி, அறிக்கை' என்ற நடுப்பக்கத்தில் வெளிவந்துள்ளவைகளில் ஒன்று இதோ:

சாமியார் ஆசாராம். நீதிமன்றத்தில்  பேச்சு'' என்ற தலைப்பிட்டு,

எங்களது கடவுள் கிருஷ்ணன், பல பெண்களுடன் ஒரே நேரத்தில் கூடியிருந்தார். அதை, தெய்வச்செயலாக ஹிந்துக்கள் பார்க்கிறோம்.

அதேபோல்தான் நாங்களும் பிரம்ம சொரூபமான சாதுக்களாகிய நாங்கள் பெண்களுடன் சேருவது தெய்வீகச் செயலுக்கு ஒப்பானது. மக்கள் என்னை தெய்வமாகப் பார்க்கின்றனர்.''

- எங்கே கூறுகிறார் இந்த தெய்வமானவர் ஆசாராம் என்ற கிரிமினல் குற்றவாளி - நீதிமன்றத்தில்!

பலே, பலே, திரைப்பாடல் ஒன்றை எழுதிய கவிஞர், மனிதன் என்பவன் தெய்வமாகலாம்' என்று எழுதி, பாட வைத்தாரல்லவா? அப்படி இந்த மனிதர்கள் சாதுக்களாகி எப்படி எந்த செய்கையின்மூலமாக தெய்வமாகி' விட்டார்கள் பார்த்தீர்களா?

கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற வாதமெல்லாம் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, இருக்கிறார் என்றே வாதத்திற்காக ஒப்புக்கொண்டால், அந்தக் கடவுள் ஒழுக்கத்தைப் போதிக்கும் கடவுளாக இருக்கவேண்டாமா? பக்தர்களே, சொல்லுங்கள்!

கிருஷ்ணலீலை பற்றி,   நாம் தேர்தல் பிரச்சாரம் தொடங்குமுன், பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமைகளுக்கு முக்கிய காரணம் பெரியார், வீரமணி, திராவிடர் கழகம் போன்றவர்கள்தான் என்று அர்த்தமற்று எழுதிய துக்ளக்' ஏட்டிற்குப் பதில் கூறவே, ஹிந்து மதத்தில் வணங்கும் கிருஷ்ண லீலைகள் - குளிக்கும் பெண்களின் சேலைகளைத் தூக்கி மரத்தில் வைத்துக்கொண்டு, குளத்திலிருந்து பெண்களை (நிர்வாண கோலத்தில்) கரையேறி வரச் சொன்ன லீலைகள் செய்வது பெரிய பாலியல் வன்கொடுமை அல்லவா என்றெல்லாம் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பேசியதை, தேர்தலில் வாக்கு வாங்க திசை திருப்பினார்கள்; பொங்கி எழுந்தனர் பூணூல் கூட்ட ஆண்களும், பெண்களும் நாக்கில் நரம்பின்றி, நாகரிக வரம்பின்றி வீரமணி யாருக்குப் பிறந்தான்' என்று பேசி, தங்களது உயரிய பண்பைப் பதிய வைத்தார்கள்.

தமிழக அரசும், ஆளுங்கட்சியின் கூட்டணித் தலைவர்களும், ஜாதியை வைத்து இழந்த செல்வாக்கை மீண்டும் பிடிக்கலாம் என்ற சில உதிரிகளும் ஓங்கி, ஓங்கி பேசினர்! மயிரைச் சுட்டால் கரியாகுமா, அட பிரகஸ்பதிகளே?''

தேர்தலில் படுதோல்வி கண்டனர்; முக்காடு இட்டு மூலையில் பதுங்கினர்!

நீதிமன்றத்திலேயே ஆசாராம் பாபு' (துடைப்பக்கட்டைக்குப் பட்டுக்குஞ்சம் கட்டியதுபோல) பட்டத்தோடு கிரிமினல் பேர்வழியான சாமியார், தனது ஆசிரமத்தில் ஏராளமான இளம்பெண்களிடம் பாலியல் வன்கொடுமை நடத்தியவர். அசிங்கத்திற்காகவோ, குற்றத்திற்காகவோ சிறிதும் வருந்தாமல், நியாயப்படுத்தித் தப்பிக்க முயலுகிறாரே - ஆணவத்தோடு.

அதற்கு எது துணை போகிறது? கிருஷ்ண லீலை என்ற கடவுள் லீலைதானே!

அன்று மயிலாப்பூர் மாமிகளும், மற்ற அவாளும் துடிதுடித்துக் கிளம்பினரே, இன்று ஆசாராம் பாபு'?வின் சாமியார் லீலைகள் பதிலுக்கு என்ன மறுப்புக் கூறப் போகிறார்கள்?

அட வெட்கங்கெட்ட மூளிகளே! அவர்களின் முந்தானையில் தொங்கிய துரவுபதை மைந்தர்களே! (பாரதப் புதல்வர்கள்' அல்லவா! அதனால்தான் அப்படி அழைக்கலாம்!)

வேளுக்குடி கிருஷ்ணன் என்ற ஒரு காலட்சேபக்காரர்; அது பகவான் சிறுவனாக இத்துணுண்டு' வாண்டுவாக இருந்தப்போ என்று சமாதானம் கூறினார் - பாகவதம் புராணத்தில் அதற்குரிய மறுப்பை ஆதாரப்பூர்வமாக நாமும் எடுத்துக்காட்ட முடியுமே!

கடவுள் இருந்து தொலைத்தால்கூட இப்படியா பாலியல் வன்கொடுமைக்கு ரோல்' மாடல்களாக, பாலியல் குற்றத்தைச் செய்யத் தூண்டுவோராக (abettor) இருக்கலாமா?

திராவிடம்' என்றால் என்ன தெரியுமா?

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்'

ஒழுக்கமிலார் ஏதிருந்தும் இலார்'

என்பதே!

பகுத்தறிவுவாதிகளின் பண்பு ஒழுக்கம் அல்லவா? பெரியார் சொன்னாரே, ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து, பக்தி என்பது தனிச் சொத்து' என்று.  அவரை இனியாவது சரியாகப் புரிந்துகொள்ளுங்கள், துள்ளித் திரியும் துன்மத்தர்களே!

குற்றங்களைத் தூண்டலாமா உங்கள் கடவுள்கள்

முன் உதாரணம்! மகாவெட்கக்கேடு!!

- ஊசி மிளகாய்

- விடுதலை நாளேடு, 3. 9. 19

புதன், 5 செப்டம்பர், 2018

கிருஷ்ணனை பற்றி டாக்டர் அம்பேத்கர்!

களவானித்தனம் மற்றும் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டாலும், ‘தீராத விளையாட்டுப் பிள்ளை – கண்ணன் தெருவிலே பெண்களுக்கொ யாத தொல்லை’ என்று கடவுள் கண்ணனின் பொறுக்கித் தனத்தை பாடல் எழுதி பெருமைபட்டுக் கொண்ட பாரதி போன்ற பக்தர்களுக்கு பச்சைக் குழந்தையாகவே காட்சியளிக்கிற,  பார்ப்பனர் பார்ப்பனரல்லாதவர்களின் கவர்ச்சிகக் கடவுளான கிருஷ்ணனை பற்றி டாக்டர் அம்பேத்கர் சொல்கிறார்:

“கிருஷ்ணன் என்ற பெயரில் நான்கு பேர் இருக்கிறர்கள். ஒரு கிருஷ்ணன், சத்யவதியின் மகன். திரிதராஷ்டிரன், பாண்டு, விதுரன் ஆகியோரின் தந்தை. இரண்டாவது கிருஷ்ணன், சுபத்ராவின் சகோதரன், அர்ஜுனனின் நண்பன். மூன்றாவது கிருஷ்ணன், வசுதேவர், தேவகி ஆகியோரின் மகன், மதுராவில் வசித்தவர். நான்காவது கிருஷ்ணன் கோகுலத்தில் நந்தனாலும் யசோதாவாலும் வளர்க்கப்படடவர்; இவர்தான் சிசுபாலனை கொன்றவர்.”

“பிரமா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் வழிபாட்டுடன் ஒப்பிடும்போது கிருஷ்ணன் வழிபாட்டில் ஒரு செயற்கைத் தன்மை காணப்படுகிறது. பிரமா, விஷ்ணு, மகேஸ்வரன் கடவுள்களாகவே பிறந்தவர்கள். கிருஷ்ணன் மனிதனாகப் பிறந்து கடவுளாக உயர்த்தப்பட்டவர்.”

“கிருஷ்ணனின் தொடக்க நிலை இப்படி அடக்கமானதாயிருந்தாலும், அவர் எல்லோருக்கும் மேலாக உயர்ந்த கடவுள் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டவர் ஆனார்.”

“எனவே பகவத் கீதையைப் பொறுத்த மட்டில் கிருஷ்ணனைவிடப் பெரிய கடவுள் யாரும் இல்லை என்பது தெளிவாகிறது. அவர் அல்லா ஹு அக்பர். அவர் மற்ற எல்லாக் கடவுள்களையும் விடப் பெரியவர்”

இப்படி  ஹாலிவுட் மேக்கப் மேனின் உதவியே இல்லாமல் பல வேடங்களில் வந்து கமல்ஹசனையே தூக்கிச் சாப்பிடுகிற கிருஷ்ணனின் யோக்யதை எப்படிப்பட்டது? என்பதை டாக்டர் அம்பேத்கர் விவரிக்கிறார்:

“கிருஷ்ணனுடைய அநாகரிகமான அநேக காரியங்களுள் மிகக் கேவலமானது என்னவெனில் அவன் இராதா என்ற கோபியருடன் கொண்ட முறைகெட்ட வாழ்க்கையாகும். கிருஷ்ணன் இராதாவுடன் கொண்டிருந்த தொடர்பினைப் பற்றிப் பிரம்ம வர்த்த புராணத்தில் வருணிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.”

“இராதாவோ ஏற்கனவே மணமானவள். முறைப்படி மணந்த ருக்மணியை கைவிட்டுவிட்டு வேறொருத்தன் மனைவியான இராதாவுடன் கிருஷ்ணன் வாழ்க்கை நடத்துகிறான்.”

“கிருஷ்ணன் மாவீரன் மாத்திரமல்ல; இளம்வயது முதலே மிகச் சிறந்த அரசியல் வித்தகன் எனவும் சொல்லப்படுகிறது. போர் வீரனாகவோ அல்ல அரசியல் வாதியாகவோ அவன் செய்த ஒவ்வொரு காரியமும் அறத்திற்கு மாறானவை. அந்த வகையில் அவன் செய்த முதற்காரியம் தன் சொந்த தாய்மாமனான கம்சனைக் கொன்றதாகும். அப்போது கிருஷ்ணனுக்கு வயது பன்னிரெண்டுதானாம்”

“கிருஷ்ணன் கம்சனைப் போர்க்களத்திலோ அல்லது தனிப்பட்ட முறையில் சண்டையிட்டோ கொன்றிடவில்லை.”

“மதுராபுரியை வந்தடைந்தவுடன் (கம்சனை கொல்வதற்கு) தாம் அணிந்திருந்த சாதாரண ஆயர் உடையை மாற்றிச் சற்று நாகரிகமான உயைணிந்து கொள்ள கிருஷ்ணனும் அவனுடைய சகோதரர்களும் விரும்பினர். அவ்வழியே வீதியில் வந்த கம்சனனின் சலவைக்காரரிடம் மிரட்டித் துணி கேட்டனர். அவன் திமிரா நடந்து கொண்டதால் அவனைக் கொலை செய்துவிட்டு, அவன் சுமந்துவந்த துணி மூட்டையிலிருந்து தாம் விரும்பிய துணிகளை எடுத்துக் கொண்டனர்.

பிறகு கம்சனுக்கு வாசனைத் திரவியங்களைப் பூசும் குப்ஜா என்ற பெண்ணைச் சந்திக்கின்றனர். குப்ஜா ஒரு கூனி. அவர்களுடைய விருப்பத்திற்கிணங்க அவள் மணங்கமழும் சந்தனக் குழம்பைப் பூசி விட்டாள். பதிலுக்கு கிருஷ்ணன் கூன் விழுந்த குப்ஜாவின் முதுகை குணப்படுத்தினானாம்.

வேறோர் சந்தர்ப்பத்தில் கிருஷ்ணன் குப்ஜாவைச் சந்திக்க நேர்ந்தபோது வழக்கம் போல தகாத முறையில் குப்ஜாவுடன் உடலுறவு கொண்டதாகப் பாகவதம் சொல்கிறது. (பன்னிரெண்டு வயசு பையன் பண்ணற வேலைய பாத்திங்களா?-வே. மதிமாறன்) இருப்பினும் இந்தச் சந்தர்ப்பத்தில் கிருஷ்ணனுக்கும், அவன் சகோதரர்களுக்கும் குப்ஜா வாசனைத் திரவியங்களைப் பூசினாள்.”

“ருக்மணியைத் தொடர்ந்து பெரும் மந்தையே கிருஷணனின் மனைவிக் கூட்டமானது. கிருஷ்ணனுடைய மனைவிப் பட்டாளத்தின் எண்ணிக்கை பதினாறாயிரத்து ஒரு நூற்றெட்டு பேர்கள். அவனுடைய குழந்தைகளின் எண்ணிக்கையோ ஒரு லட்சத்து எண்பாதாயிரம் பேர்கள்.”

நிர்வாணமாக்கி ஊர் பெண்கள் மானத்தை எல்லாம் வாங்கிய கிருஷ்ணன், மகாபாரதத்தில் பாஞ்சாலியின் மானம் காக்க உடைகொடுத்ததானம்! பாஞ்சாலியின் மானம் காத்தது இருக்கட்டும், இங்கே டாக்டர் அம்பேத்கரின்  வாதத்திறமையின் முன்னால் அவன் மானம் போகிறேதே என்ன அவதாரம் எடுத்து ‘தன் மானத்தை’ காப்பற்ற முயற்சிப்பான், கிருஷ்ணன். என்ன பதில் சொல்லி கிருஷ்ணனின் ‘மானம்’ காப்பார்கள் பக்தர்கள்.

விசித்திரமானது இந்து மதம். வேடிபாலியல் நோய் வந்து பாதிக்கப்பட்டிருக்க வேண்டிய அளவிற்கு சகமேட்டுமேனிக்கு பல பெண்களோடு உறவு கொண்ட, கொலைபோன்ற கிரிமினல் குற்றங்களுக்காக சிறுவர் சீர்திருத்த்தப் பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டிய கிருஷ்ணனையும் தெய்வமாக தொழுகிறார்கள்.

ஒழுக்கம் குறித்து தனிவாழ்க்கையில் அதிகம் பேசுகிற இந்துக்கள், தங்களின் கடவுள் பொறுக்கியாக இருந்தாலும் அதனை பூரிப்போடு ஏற்றுக் கொள்கிறார்கள்.

இந்துக்களின் இறைவழிபாட்டில் இருக்கிற இந்த முரண்பாட்டை அவர்கள் புரிந்து கொள்வதுமில்லை. டாக்டர் அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள் புரியவைத்தால் அதை புரிந்து கொண்ட பின் அதற்காக அவர்கள் வெட்கப்படுவதும் இல்லை. இந்து மதம் இந்துக்களை சுயமரியாதையும், சுயஅறிவும் அற்றவர்களாகவே உருவாக்கி வைத்திருக்கிறது.

இந்துக்களாக அடையாளப்படுத்தப்பட்டு, முட்டாள்களாக, சூத்திரர்களாக நடத்தப்படுகிற, அவமரியாதைக்குள்ளாகிற பிற்படுத்தப்பட்டவர்களின்  சுயமரியாதைக்காக பார்ப்பனிய தந்துவங்களோடு நேருக்கு நேர் மோதிய டாக்டர் அம்பேகத்ரை, அவமதிக்கிறார்கள், சுயமரியாதையற்ற சூத்திரர்கள்.

‘நான் யாருக்கும் அடிமையில்லை

எனக்கடிமை யாருமில்லை’

என்ற நூலிலிருந்து…….

ஆசிரியர் வே. மதிமாறன்