சனி, 28 ஆகஸ்ட், 2021

சிவபெருமான் லீலைகள்

சிவபெருமான்தான் கடவுளர்களின் தலைவன்.
இவன் யாருக்கும் பிறந்தவனல்ல.
தானாகவே தோன்றியவன்.

நதிமூலம், ரிஷிமூலம் போன்று இவன் பிறப்பு மூலத்தை ஆராயக்கூடாது.
பிரம்ம னையும் விஷ்ணுவை மும் இவன் தான் தோற்றுவித்தவன்.
இந்த இரு கடவுளும் கூட சக்தியின் முகத்திலும் தோளிலும் பிரசவமானவர்களாம்?;

'நமச்சிவாய'என்ற ஐந்தெழுத்தை பிரம்மனுக்கு போதித்ததுவனும்சிவன்தான்.

ஒருகாலத்தில் தன்னைத்தேடி ஓடிவந்த தேவர் களிடம் என்ன?ஏது?என்று கேட்க சிவனுக்குத் தாருகாவனத்து ரிஷிகளின்'தலைகனம்'புலப்பட்டது.
ரிஷிகளின் கணத்தைவிட ,ரிஷி பத்தினிகளின் கனமும் சிவனின் கவனத்துக்கு வந்தது ‌.

விஷ்ணுவை அழைத்து மோகினி உருவெடுத்து தாருகாவனத்து ரிஷிகளின் மோகத்தை ஒருகைப்பார் என்று உத்தரவிட்டான் ‌
உத்தரவு வந்தவுடன் விஷ்ணு தளுக்குக் குலுக்குடன் தத்தித்தாவினான் தாருகாவனத்திற்குள்.

மோகினி யார் மாறிய விஷ்ணு ரிஷிகளுக்கு"ருசி"களை,வழங்கி,கலங்கி கிடந்த வேளையில்,
ரிஷிபத்தினிகளின் படுக்கை அறைப்பசி,பட்டினி குறுக்குப் பருவப்பார்வையால் பதில் தெளித்து வந்தான் சிவன்.
அதுவும் சிவனாக அல்ல,பைரவர் வேடத்தில்.

தங்கள் தங்கள் மனைவிமார்கள்,எங்கெங்கே,என்னென்ன செய்கிறார்கள் என்பதை அறிய",ஞானதிருஷ்டி"யைக் கூடமுடுக்கிவிட மறந்தவாறு மோகினி காட்டிய சொர்க்கத்தில் மூழ்கிக் திளைத்தனர் ரிஷிகள்.
ரிஷிபத்தினிகளின் நிலையும் இதேதான்.

வந்தது யார் என அடையாளம் நோக்காமல்,அனணத்து மகிழ்ந்து,ஆசை தணிந்த பின்,"போச்சே கற்பு போச்சே"என்று கூவினர்.
பதிவிரதத்தில் பங்கமும்,பழுதும் பற்றிவிட்டதைப் பாருக்குணர்த்த,கூச்சலே உபாயம் எனக்கருதினர் போலும்.

பார்த்தான் சிவன்,பருவச்சுவையினைப்பருகி உருகிய பத்தினிகள் பதறிப்புலம்புவதையும்,கதறிக்குழம்புவதையும் பார்க்கப் பார்க்கப் பொறுக்கவில்லை அந்த சிவனுக்கு.

ரிஷிகளும் வந்தனர்,தமது தமது தர்மப்பத்தினிகளிடம் தரங்கெட்ட ஆட்டம் போட்டவன் சிவன் என அறிந்ததும்,'சிவனே'என்று சிலர் குந்தினர்,சிலர்"சிவ-சிவ"என்று சிலர் பொங்கினர்.

'பெரியவர் செய்தால்,பெருமாள் செய்த மாதிரி என்ற சொல்லின் மூலம் இதுதான்!தனக்குப் பிராயச்சித்தப் பரிகாரமாக இறுதியில் சிவன் சொன்னான்.
"ரிஷிகளே!'அபிசார'வேள்வி செய்யுங்கள்,ஆகட்டும் பார்க்கலாம்"என ஓடிவிட்டான்.

அபிசாரவேள்வி என்பது ஒரு பிராயச்சித்தக் காரியமாம்.
ரிஷிகள் வேள்வி செய்தனர்,என்னதான் செய்தாலும் கோபம் கொழுந்துவிடாமல் இல்லை.
உடுக்கை,அக்னி,சூலம் இவற்றை அவர்கள் ஏவ,அதனைக்கையால் பிடித்தான் சிவன்,காலங்காலமாக சுமக்கிறான்.

ஆதாரம்:அபிதான சிந்தாமணி பக்கம் 659.
- ஆறாம் அறிவு முகநூல் குழு ராஜ்மோகன் முகநூல் பதிவு, 25.8.19

1 கருத்து:

  1. CSGO Gambling | CS Casino | CSGOEmpire
    CSGOEmpire offers all kinds of betting options in one site. We'll keep you updated on the latest news 카지노 and details about 더킹카지노 the best CSGO gambling ボンズ カジノ sites.

    பதிலளிநீக்கு