சனி, 23 மே, 2020

இந்திரன் என்கிற அரம்பையர்கோன்

உடம்பெல்லாம் பெண் குறியாக இந்திரன் என்ன செய்தான்? புராணம் கூறுவதைப் படியுங்கள். 

அரம்பையர்கோன் (எ) இந்திரன் 

இந்திரன் - எல்லோருக்கும் தெரிந்த பெயர். அவன் தேவர்களின் தலைவன். அவனுக்கு அரம்பையர் கோன் என்றொரு பெயரும் உண்டு. காரணம் என்ன என்பதை அறிந்து கொள்வோமா?
அரம்பையர் உலகம் என்பது 60 ஆயிரம் அப்சரசுகள் (தேவமாதர்கள்) உள்ள ஓர் உலகம். அதில் பாற்கடலில் பிறந்த அலம்புஷை முதற்கொண்டு ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை, கிருதாசி முதலிய அப்சரசுகள் நிறைந்துள்ளனர். 

இவர்கள் இளமை நீங்காது வேண்டிய உருவெடுப்பர். இங்கு இருமனப் பெண்டிரும், விரதம் தவறிய பெண்களும் சென்றடைவர். (அப்சரசு = தேவருலகத்திலுள்ள வேசிகள். பக்கம் 95. அபிதான சிந்தாமணி). 

இவர்களுக்குத் தலைவன் இந்திரன். அதனால்தான் இந்திரனுக்கு “அரம்பையர் கோன்” என்று பெயர் வந்தது. அதாவது இந்திரன் தேவருலகத்திலுள்ள “வேசிகளின் அரசன்” என்று பொருளாகும். அவர்களை அவன் வேலை வாங்குவது எப்படி என்கிறீர்களா?

உலகத்தில் ‘பெருந்தவம்’ செய்வோர் இந்திர பதவியை அடைவர். பதவியில் இருக்கும் இந்திரன் தன் பதவியைக் காத்துக் கொள்ள இந்தத் “தேவருலக தாசிகளை” அனுப்பி பெருந்தவம் செய்வோர் தவத்தைக் கெடுப்பான். அதே முறையில் தான் மேனகை விசுவாமித்திரனின் தவத்தைக் கெடுத்தாள்.

இவனும் விஷ்ணுவைப் போலவே பரிஷதன் என்னும் அசுரன் மனைவி மீது ஆசை கொண்டு, எவ்வளவோ முயற்சித்தும் ஆசை நிறைவேற வசதியில்லாமல் போகவே, பரிஷதன் அசுவ மேத யாகம் செய்கையில் யாக முறைப்படி யாகத்தில் குதிரையைக் கொன்ற போது, அந்தக் குதிரையின் உடலுக்குள் புகுந்து, குதிரையின் ஆண் குறியை யாக கர்த்தாவின் மனைவியான விபுஷ்டையின் பெண் குறியில் வைக்கும் சமயம் பார்த்து இந்திரன் குதிரையின் ஆண் குறியாக ஆகித் தனது எண்ணத்தை முடித்துக் கொண்டான் என்று புராணத்தில் இருக்கிறது.” 

---மு.நீ.சிவராசன். SOURCE: “உண்மை” 14.1.1970.

- subramanya annadurai annadurai முகநூல் பதிவு 23.5.20

வியாழன், 14 மே, 2020

முருகன்

கடவுள் பிறந்த கதை!
(இது புராணங்களில் இருப்பவை)

முருகன்:

சுப்பிரமணியக் கடவுளின் அனந்தகோடி சகஸ்ர நாமங்களில் ஒன்று ஸ்கந்தம். வடமொழியில் தத்தெடுத்து, தமிழ் மொழியில் பிய்த்து வந்த கந்தன் என்கிற பெயரின் மூலம் இதுதான்.

ஸ்கந்தம் அல்லது கந்தம் என்றால் 'விந்து' என்று பொருள்.

விந்திலிருந்து பிறப்பது தான் உயிரினம். அய்ந்தறிவு முதல் இன்னொரு அறிவினையும் உபரியாகப் பெற்றுள்ள மனித இனம் வரை இதுவே நடைமுறை. ஆனால் கடவுள் அதீதப்பிறவி.  அப்படி இருந்தால் தானே மனிதருக்கும், மகேசப் பிறவிகளுக்கும் வேறுபாடு தெரியும்.

சிவன் தனது "சிருஷ்டி"பற்றி பரிசீலனை செய்தார். ஒரு அவசரகால நடவடிக்கையாகத் தனது கலவியை 
நிறுத்தி இந்திரியத்தை (விந்து) வானவீதியைப் பிரித்துக் காட்டும் சூன்ய வெளியில் சொரீர் எனப் பாய்ச்சி அடித்தார். பிரவாக வேகத்திற்காகப் பீய்ச்சி அடித்தார். ஓ... விந்தின் பிரளயம்!

மழையாய்ச் சொரிந்து, மண்ணில் மறைந்து, நொங்கும் நுரையுமாய் அலையடித்து ஓய்ந்து, கங்கையில் ஒடுங்கிய விந்துச் சுழலில் ஆறு மிதப்புகள். நீரில் பெய்த எண்ணெய் துளிகளாய் மிதந்து அலைந்தன அவை.

நீராட வந்த பெண்கள் அறுவர் போராடிப் போராடி அந்த விந்துத் திவலைகளில் ஒவ்வொன்றையும் எடுத்துக் கொண்டனர்.

எடுத்தது தான் மாயம். விந்துத் திவலைகள் உயிர் பெற்று, குழந்தைகளாய் மாறி குமிழ்ச் சிரிப்பைச் சிந்தின.

சிந்திய குழந்தைகள் அத்தோடு விடவில்லை. தழுவிக் கிடந்த மார்பகக் கரு நுனியில் வாய்வைத்துப் பால் உறிஞ்சின. 

பின்னர் ஆறு உடலையும் ஒன்றாக வைத்தார்கள் அந்தப் பெண்கள். உடல் ஒன்றானது. ஆனால் தலைகள் ஒன்றாகவில்லை. 

"ஆறுமுகம்" ஆகி அதுவே கடவுளும் ஆனது!

(ஆதாரம் - பாகவதம் மற்றும் இராமாயணம்)

- வி.சி.வில்ஸம்

சிவன்

கடவுள் பிறந்த கதை!
(இது புராணங்களில் இருப்பவை)

சிவன்!

சிவபெருமான் கடவுள்களின் தலைவர். இவர் யாருக்கும் பிறந்தவர் அல்ல. தானாகவே தோன்றியவர் (சுயம்பு)

பிரம்மனையும், விஷ்ணுவையும் இவரே தோற்றுவித்தார். இந்த இரு கடவுளும் சக்தியின் முகத்திலும், தோளிலும் பிரசவம் ஆனவர்கள்!

விஷ்ணுவை அழைத்தார் சிவன். மோகினி உருவெடுத்துத் தாருகாவனத்து  ரிஷிகளின் மோகத்தை ஒரு கை பார். 

ரிஷி பத்தினிகளின் படுக்கையறை பசி, பட்டினிக்குப் பருவப் பார்வையால் பதில் தெளித்தார் சிவன்.

அதுவும் சிவனாக அல்ல, பைரவர் வேடத்தில். ரிஷிகளும் வந்தனர். தமது தர்மப் பத்தினிகளிடம் தரங்கெட்ட ஆட்டம் போட்டவர் சிவன் என அறிந்ததும் 'சிவனே' என்று சிலர் குந்தினர்.  "சிவ- சிவ"என்று சிலர் பொங்கினர்.

பெரியவர் செய்தால் பெருமாள் செய்த மாதிரி என்ற சொல்லின் மூலம் இதுதான் தனக்குப் பிராயச்சித்த பரிகாரமும்!

இறுதியில் சிவன் சொன்னார். 

"ரிஷிகளே! அபிசார வேள்வி செய்யுங்கள் ஆகட்டும் பார்க்கலாம்," என ஓடிவிட்டார். அபிசார வேள்வி என்பது  ஒரு பிராயச்சித்த காரியம். சிலர் தலைக்கனம் பிடித்துத் திரிந்ததற்குக் கற்பழிப்பது என்ன முறை?                      

(ஆதாரம் : அபிமான சிந்தாமணி, 
பக்கம் - 659)
- வி.சி.வில்வம்

பிரம்மன்

கடவுள் பிறந்த கதை!
(இது புராணங்களில் இருப்பவை)

பிரம்மன்

சாவித்திரி, சரஸ்வதி, காயத்திரி இந்த மூவருக்கும் மணாளன் பிரம்மன்.  மூவரை மணந்தவர் கடவுள். 

விநாயகரின் மனைவிகளாகக் கூறப்படும் சித்தி, புத்தி இருவரும் பிரம்மனின் மகள்கள்.

நடனமாடும் பெண் ஒருவர், அவர் பெயர் உருப்பசி. அவரின் நடனத்தைப் பார்த்த பிரம்மனுக்குக் காமம் ஏற்பட்டது. 

துள்ளல், துவளலாய் மாறியதும், சிந்திச் சிதறிய விந்துத் துளிகளைத் திரட்டி, குடம் ஒன்றில் அடைத்தார் பிரம்மன். அக்குடத்தின் விந்து 'அகத்தியன்' என்னும் ஆளாக மாறியது.

பெற்ற மகளையே பெண்டாண்ட பெரியவன் என்று இந்தப் பிரம்மனுக்குச் சூடு கொடுத்தனர் சிலர்.                                                             

அசுவமேத யாகத்தை ஒருமுறை செய்தார். யாகத்தை வேடிக்கைப் பார்க்க தேவர்களின் பத்தினிகளும் வந்திருந்தனர். அந்த அழகிகளின் அழகில் கிளர்ச்சியுற்ற பிரம்மன், தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை. 

வீரியம் பீறிட்டு அடித்தது. அக்கினிக் குழியில் அந்த விந்துப் பெருக்கினை வார்த்தான். இதிலிருந்து பிறகு, ஆங்கீரசர், அத்ரி, மரீசி, புலஸ்தியர், புலகர் மற்றும் வசிட்டர் ஆகிய தவசிரேஷ்டர்கள் ஆகியோர் உதித்தனர். 
                                                    
சரஸ்வதியுடன் ஒருமுறை ஊடல் கொண்ட பிரம்மன், "பூமியில் பிற புலவனாய் பிழை" எனச் சாபம் கொடுத்தான். அதுவும் ஒரு உருவில் அல்ல,  நாற்பத்தெட்டு உருவில். இந்த நாற்பத்தெட்டு உருவங்கள் தான் சங்ககாலப் புலவர்கள்.

இதுபோல் 68 செய்திகளைத் தாங்கித் தருகிறது அபிதான சிந்தாமணியின் 1133 ஆம் பக்கமும், அதன் பக்கத்துப் பக்கங்களும்!

- வி.சி.வில்வம்

பிள்ளையார்

கடவுள் பிறந்த கதை!
(இது புராணங்களில் இருப்பவை)

பிள்ளையார்:

பரமசிவன் மனைவி பார்வதி. ஒருமுறை குளிக்கப் போகும் போது, தன் உடம்பில் இருந்து திரட்டிய  அழுக்கை சேர்த்து, உருவமாக்கிக்  காவலுக்கு வைத்தார். 

அழுக்கில் உயிர் பெற்ற அந்த உருவத்தைப் பார்த்து, "யார் வந்தாலும் உள்ளே விடாதே" என்று கட்டளையிட்டுக் குளிக்கப் போய்விட்டார். 

அச்சமயம் அங்கே பரமசிவன் வந்தார். அழுக்கு உருவமோ, அவரை  உள்ளே விட மறுக்கவே கோபம் கொண்ட பரமசிவன், தடுத்தவரின் தலையை வெட்டித் தள்ளிவிட்டு உள்ளே போய்விட்டார்.

குளித்துக் கொண்டிருந்த பார்வதி தன்னிடம் வந்த பரமசிவனைப் பார்த்து, "எப்படி இங்கே வந்தீர்கள்? காவலுக்கு இருந்தவர் எங்கே?" என்று கேட்டார்.

காவல் காத்தவரை வெட்டி சாகடித்து விட்டதாகப் பரமசிவன் சொன்னார்.
அழுக்கால் ஆக்கப்பட்ட தனது மகன் சாகடிக்கப்பட்டதை அறிந்து, அழுது புரண்டார் பார்வதி. 

பரமசிவன் பார்வதிக்கு ஆறுதல் கூறி வெளியே வருகையில், யானை ஒன்று எதிரே வந்தது. அதன் தலையை வெட்டி, அழுக்குருண்டைப் பிள்ளையின் முண்டத்தில் ஒட்டி, உயிர் தந்தார் சிவபெருமான்.

(ஆதாரம்: கந்தபுராணம் மற்றும் சிவபுராணம்)   

மற்றொரு கதை:

நந்தவனத்தில் உலவி வந்த சிவன், பார்வதி தம்பதிகள் அடர்ந்த காடு ஒன்றில் நுழைகின்றனர். 

அங்கே இரண்டு யானைகள் கலவி (உடலுறவு) செய்து வந்தன. அதைப் பார்த்த சிவன், பார்வதி அதுபோலவே   கட்டிப் புரண்டனர். 

அப்போது பிறந்த குழந்தையின் முகம் யானை வடிவமாகவும், உடல் மனித வடிவமாகவும் இருந்தது. 

(ஆதாரம்: வலிவலம் கோவில் சிவனைப் பற்றி திருஞானசம்பந்தர் "பிடியதன் உருவுமை" என்று தொடங்கிப் பாடிய தேவாரப் பாடல்)

- வி.சி.வில்வம்

விஷ்ணு

கடவுள் பிறந்த கதை!
(இது புராணங்களில் இருப்பவை)

விஷ்ணு:

பிரம்மனைப் போலவே விஷ்ணு கடவுளுக்கும் 3 மனைவிகள்.  
இலட்சுமி, பூதேவி, நீலாதேவி.

ஏனைய கடவுள்களை விட விசேசமானவர் இவர். ஒவ்வொரு யுகத்திலும் ஒரு அவதாரம் எடுப்பார்.

இதுவரை 10 அவதாரங்கள் எடுத்துள்ளார்.  

மச்சாவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம். பரசுராம அவதாரம், ராம அவதாரம் , பலராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், கல்கி அவதாரம் முதலியவை இவர் எடுத்த குறிப்பிடத்தக்க அவதாரங்கள்.

அடிக்கடி மாறுவேடம் போடுவார் விஷ்ணு. அதுவும் பெண் வேடம் என்றால் பெரும் விருப்பம்!  

மகாவிஷ்ணு தனது பக்தர்களுக்குச் அமிர்தத்தைப் பகிர்ந்துக் கொடுக்க மோகினி வேடம் எடுத்தார். அப்போது அசுரர்களின் அணைப்பிற்கு ஆளானார். 

விஷ்ணுவின் பெண் வேடத்தைப் பார்த்த சிவன் அதில் மயங்கிப் போனார். அவ்வளவு தான் நடக்க வேண்டியது நடந்தது! 

இந்நிலையில் பிறந்தவர் தான் "ஹரிஹரன்" என்கிற ஐயப்பன் கடவுள்.
- வி.சி.வில்வம்

இராமன்

கடவுள் பிறந்த கதை!
(இது புராணங்களில் இருப்பவை)

இராமன்:

அயோத்தியை ஆண்டு வந்தவர் தசரதன். சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளாக ஆட்சி நடத்தியவர். 

இவருக்குக் கோசலை, கைகேயி, சுமத்திரை என்கிற 3 பட்டத்துக்குரிய மனைவிகள் உண்டு!

இதுவும் தவிர 60 ஆயிரம் மனைவிகளும் இருந்தனர். கூடுதலாக அந்தரங்கத்தில் வேறு பல பெண்களை கடவுள் தசரதன் வைத்திருந்தார். 

இத்தனை மனைவிகள் இருந்தும் குழந்தைகள் இல்லையே எனச் சங்கடப்பட்டார் தசரதன்.

(ஆதாரம்: அபிதான சிந்தாமணி 
பக்கம் - 1484)

"பிள்ளை பெறுவது எப்படி?" என ஆலோசனை நடத்தினார் தசரதன். 

அசுவமேத யாகத்தால் குழந்தை பெறலாம் என முனிவர் வசிஷ்டரும், அமைச்சர்களும் ஆலோசனை கூறினர்.

அசுவமேத யாகம் என்பது தனி வல்லுனர்களை வைத்துச் செய்ய வேண்டிய ஒன்று என்றும் விளக்கினார்கள் அவர்கள்.

கலைக்கோட்டு முனிவர் இதில் பெயர் பெற்றவர். அவரை இழுத்து வருவது சுலபமல்ல. ஒரு வழியாய் சரயு நதியோரம் முனிவர் இழுத்து வரப்பட்டார். 

கலைக்கோட்டு முனிவரின் தலைமையில் யாகம் துவங்கியது . சம்பிரதாயப்படி தசரதனின் முதல் மனைவியான கோசலை, யாகக் குதிரையைச் சுற்றி வந்து, அதனை மூன்று வெட்டாக வெட்டிக் கொன்றாள். பின்னர் துடிதுடித்தக் குதிரை முண்டங்களுடன் இரவு முழுவதும் உடலுறவு கொண்டார். 

காலை விடிந்ததும் கோசலை  தசரதனிடம் போனார். தசரதனின் மற்ற இரு பட்டத்து மனைவிகளான கைகேயியும், சுமத்திரையும் அவர் அருகே நின்று கொண்டிருந்தனர்.

யாக வேள்வியில் கலைக்கோட்டு முனிவருக்கு உதவியாக இருந்த அத்வர்யு, ஹோதா மற்றும் உகதா ஆகிய மூன்று சிஷ்ய முனிவர்களுக்கும், தனது 3 மனைவிகளையும் தானம் செய்தார் தசரதன். 

முனிவர்கள் மூவரும் தசரதனின் மனைவியருடன் இரவு முழுவதும் களிப்புற்றனர்.

பின்னர் முனிவர்களுக்குத் தசரதன் பொன்னும், பொருளும் கொடுத்து அனுப்பி வைத்தான்.

அன்றே தசரதனின் மனைவியர் மூவரும் கருவுற்றனர். இக்கருக்களின் உருக்களே இராமனும் அவரின் இளவல்களும்.

விஷ்ணு பற்றிய கதைப்படி, இந்த ராம அவதாரமென்பது விஷ்ணுவின் தசாவ அவதாரங்களில் ஒன்று!

- வி.சி.வில்வம்

கிருஷ்ணர்

கடவுள் பிறந்த கதை!
(இது புராணங்களில் இருப்பவை)

கிருஷ்ணர்:

ஆயர் பாடிக் கண்ணன் பிறந்தது ஒரு இடம், வளர்ந்தது ஒரு இடம்!

விஷ்ணுவின் தசாவ அவதாரங்களில் கிருஷ்ணன் அவதாரமும ஒன்று.

தாலாட்டி, பாலூட்டிய பெண்களிடமே தவறுகள் செய்தார்.

சிறு வயதிலேயே பூதன், சகடாசுரன், திருணாவர்த்தன் மூவரையும் கொலை செய்தவர் கிருஷ்ணர். 

ருக்மணி, சாம்பவதி, கானிந்தி, மித்திரவிந்தை சத்தியவதி, பத்திரயை, லட்சுமனை, நப்பின்னை, சத்தியபாமா போன்று 10108 மனைவிகள் இவருக்கு.

தனக்குப் புத்திரப் பாக்கியம் இல்லையென்று ருக்மணியுடன் தவம் செய்தவர் கிருஷ்ண பரமாத்மா.

கோகுலத்தில் ஒருமுறை கிருஷ்ணர், ராதையுடன் கூடிக் களித்த போது விரஜை, கங்கை ஆகியவர்கள் அங்கு வந்தனர்.

கிருஷ்ணருக்கு ஆராரோ பாடி அமுதூட்டி வளர்த்த கோபிகையர்களையும் தம் காமத்தால் பாழ்படுத்தினார் கிருஷ்ணர்.

(ஆதாரம் - அபிதான சிந்தாமணி 
பக்கம் - 447-450
- வி.சி.வில்வம்

இந்திரன்

கடவுள் பிறந்த கதை!
(இது புராணங்களில் இருப்பவை)

இந்திரன்:

தேவலோக அரசர் இந்திரனுக்கு தேவேந்திரன் என்ற பெயரும் உண்டு. 

இவர் திருமணமே ஆகாதவர். எனினும் காமத்தில் பெயர் பெற்றவர். 
காதல் கிழத்தியாக இந்திரனுக்கு நிரந்தரமாக இருப்பவர் இந்திராணி என்பவர்.

இவர் ஒரு சிரஞ்சீவிச் சிங்காரி! எத்தனையோ பேர் இந்திர உலகின் ஆளுகைப் பொறுப்புக்கு வந்து போனாலும், இந்திராணி மட்டும் மாறுவதில்லை.

ஒரு காடு ஒன்றில் பர்ண சாலை அமைத்து இல்லறம் நடத்தி வந்தார் ஒரு அப்பாவி முனிவர்.

இந்த முனித் தம்பதிகளின் பெயர் கவுதமன் -அகலிகை. இந்தக் கவுதமன் இந்திரனின் குரு ஆவார். 

குருவின் மனைவியை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்று விரும்பினார் கடவுள் இந்திரன். 

அகலிகையின் அழகை அள்ளிப் பருகும் ஆர்வத்தில், நண்பர் சந்திரனையும் அழைத்துக் கொண்டு இரவு வேளையில் காட்டுக்குச் சென்றார் இந்திரன்.

அங்கே அகலிகையைக் கட்டிப் பிடித்து கவுதமன் கண்ணயர்ந்து கிடந்ததை இந்திரன் கண்டார். 

கோழியாக மாறி கூரைமேல் ஏறி, 'கொக்கரக்கோ' என்ற கூவினார் இந்திரன்.

அப்பாவி முனிவனுக்குப் பொழுது புலரப் போவதாக நினைத்து, நீராடும் எண்ணத்துடன் நீர்நிலை ஒன்றிற்குப் புறப்பட்டுப் போய்விட்டான்.

கோழியின் கூவலால் ஆவலை அடக்கும் அச்சாரம் கிட்டிய களிப்பில். கவுதமனாய் உருவெடுத்து, ஓரத்தில் ஒதுங்கி நின்ற சந்திரனிடம், இந்திரன் வந்தான்.

நடந்த நிகழ்ச்சிகளை வாய் திறவாமல் பார்த்தவாறு நின்று சந்திரனைப் பூனையாக மாற்றி "களிப்புற்று, சலிப்புற்று வரும்வரை காவலாய் இரு வாசலில் கிட" என்று சொல்லி அகலிகையின் அருகில் போனான் இந்திரன். 

காம்பெடுத்த உதிரி ரோஜாவாய் படுக்கையில் பரவலாய்க் கிடந்தாள் அகலிகை. ஊறிக் கிடந்த உணர்வுகளை, உணர்ச்சி ஆறிக்கிடந்த அகலிகையிடம் பாய்ச்ச, வாரி அணைத்தான் அவளை, 

சினமோ, சிணுக்கமோ இல்லாமல் இந்திரனோடு இணைந்தாள் அவள். அள்ளியும், கிள்ளியும் படுக்கையில் இவர்கள் துள்ளித் துவண்ட வேளையில் முனிவர் கவுதமன் வந்துவிட்டார்.

அகலிகையின் பத்தினித் தனம் இந்திரனால் இழிவுபடுவதைக் கண்டு துடிதுடித்துப் போனார் முனிவர். 

தனது குருநாதர் கோபத்துடன் வந்ததைப் பார்த்ததும், அகலிகையை உதறினார் இந்திரன். இருவரையும் புரியாமல் பார்த்தார் முனிவரின் மனைவி.

குருவுக்குத் துரோகம் செய்த கொடியவனே, என் மனைவியின் குறியிலே குறியாக இருந்த உன் உடம்பெங்கும் பெண் குறிகளே குடிகொள்ளட்டும்." என்று சாபம் கொடுத்தான் கவுதமன். 

"காமப்பாழி; கருவினை கழனி"

(ஆதாரம் அபிதான சிந்தாமணி 
பக்கம் - 155)

லட்சுமி

கடவுள் பிறந்த கதை!
(இது புராணங்களில் இருப்பவை)

லட்சுமி:

ரம்பன் என்பவருக்கு ஒரு எருமை மாடு மனைவியாக இருந்தது. இந்த இருவருக்கும் பிறந்தவர் தான் 
மகிஷன் என்கிற அரசர். 

இந்த மகிஷன் தேவர்களை தொல்லைப்படுத்தி வந்தார். தேவர்கள் கூட்டம் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளிடம் முறையிட்டது.

மும்மூர்த்திகளும் அளவற்ற கோபமடைந்து அக்னியாய் தகித்தனர். இக் கோபத்தின் ஒளிப்பிழம்பில் உருவான உயிரே கடவுள் லட்சுமி. 

இந்த லட்சுமி கடவுள் அரசர் மகிஷனை மாய்த்தார். தேவர்களுக்கு உண்டான தொல்லையை நீக்கினார். 

மகிஷா சுரமர்த்தினி, தேவி, லட்சுமி, மகாலட்சுமி என்று பூஜிக்கப்படும் தெய்வமும் இவர் தான்! 

இந்த லட்சுமிதான் ஒரு பிறப்பில் சீதையாக இருந்தவர்.

(ஆதாரம்: தேவி பாகவதம்)

- வி.சி.வில்வம்

அக்கினி பகவான்

கடவுள் பிறந்த கதை!
(இது புராணங்களில் இருப்பவை)

அக்கினி பகவான்:

அட்டத்திக்குப் பாலர்கள் 8  பேர். இதில் ஒருவரின் மனைவி தான் சுவாகாதேவி. பாலகர் என்பவர்கள் குட்டிக் கடவுள்.

அக்கினியின் தந்தை விச்வாநரன், சிவனை எண்ணித் தவம் கிடந்து அக்கினியைப் பெற்றார்.

சிவபெருமாள் தரிசனம் தந்த போது, உன்னைப் போலவே எனக்கொரு பிள்ளை வேண்டுமென கேட்டு அதன் பின் பிறந்தவர் தான் அக்னி பகவான். 

ஒருமுறை இந்த அக்னி ஏழு ரிஷிகளின் யாக வேள்வியில் பயன்படுத்தப்பட்டது. கொழுந்துவிட்டு எரிந்து வந்த அக்னிக்கு, அங்கிருந்த ரிஷி பத்தினிகளின் அழகு ஈர்த்தது.

இந்த ரகசியம் அக்னியை மணந்த சுவாகாதேவிக்குத் தெரிந்து அருந்ததி என்ற ஒரு ரிஷிக்காரியின் வேஷம் மட்டும் போடாமல் - மற்ற அரை டஜன் ரிஷிபத்தினிகளின் உருவெடுத்து அக்னியின் காமத்தைச் சரி செய்தார்.

ஏதோ சில காரணங்களுக்காக ஒளிந்து வாழ வேண்டிய இக்கட்டில் இருந்த இந்த அக்கினி பகவான், அவுரவ மகரிஷி என்பவரது மனைவியைத் தேடி அவரின் தொடைக்குள் நெடுநாள் சிறை இருந்தாராம்.

அதேபோல சுதரிசனை என்கிற பெண்ணிடம் மோகம் கொண்டு, அதனால் கரு உண்டாகி, அந்தக் கருவை அக்கினியின் உண்மையான மனைவி சுவாகாதேவி 12 தேவ வருஷங்கள் தனது கருவறையில் சுமந்து அலைந்தாராம்.

(ஆதாரம்: அபிதான சிந்தாமணி,
பக்கம் 9,10 மற்றும் காசிகாண்டம் நூல்)
- வி.சி.வில்வம்