வியாழன், 23 நவம்பர், 2017

அகலிகையிடம் இந்திரனின் காம லீலை

Image result for அகலிகை சாபம்
#இந்திரன்
இந்த கதை இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. அரம்பையர் கோன் அல்லது தேவலோக வேசிகளின் அரசன் இந்திரனின் காம லீலைகள் அல்லது அயோக்கியத்தனங்கள் பலவற்றில் ஒன்றை இன்று பார்ப்போம்.
கௌதம முனிவர் மனைவி அகலிகை. சிறந்த அழகி. கற்புக்கரசி.
தேவலோகம் சென்ற நாரதன் இந்திரனிடம் கௌதம முனிவரின் மனைவி அகலிகையை பற்றி வருணித்தான். இதனால் மதி மயங்கிய இந்திரன் அவளை அடைய ஒரு சூழ்ச்சி செய்தான்.
முனிவர்கள் விடியற்காலையில் ஆற்றுக்குச் சென்று நீராடி ஜபதபங்கள் செய்வது வழக்கம். இதை அறிந்திருந்த இந்திரன் அந்த நேரத்தில் அகலிகையை அடைய எண்ணினான். கவுதமர் ஆசிரமத்தை அடைந்த இந்திரன் நடு ஜாமத்தில் சேவலைப் போலக் கூவி கவுதமரை ஏமாறச் செய்தான்.
அது அதிகாலை என்று எண்ணிய கவுதமர் ஜபதபங்களை முடிப்பதற்கான ஏற்பாடுகளுடன் ஆற்றுக்கு நீராடச் சென்றார். அச்சமயம் இந்திரன், கவுதமர் வடிவில் ஆசிரமத்தில் நுழைந்தான். தன் வேலைகளைச் செய்து கொண்டிருந்த அகலிகை கவுதமர் திரும்பி வந்து விட்டதாக எண்ணினாள். அப்போது கவுதமர் வடிவில் இருந்த இந்திரன், "இன்னும் விடியவில்லை. ஏதோ பறவையின் ஒலியைச் சேவல் கூவியதாக எண்ணினேன்" என்று கூறி அவளை அருகில் வருமாறு அழைத்தான்.
அருகில் கட்டிலில் அமர்ந்த அகலிகையுடன் சேர்ந்து இன்பம் துய்த்தான்.
இந்நிலையில் ஆற்றங்கரை சென்ற கவுதமர் ஏதோ தவறு நேர்ந்து விட்டிருப்பதாகக் குழப்பத்துடன் ஆசிரமத்துக்குத் திரும்பி வந்து கதவைத் தட்டினார். அக்குரலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அகலிகை திகைப்படைந்து நடுக்குற்றாள். ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர்ந்தாள்.
இந்திரன் சுயஉருவில் தோன்றி அவள் காலில் விழுந்து கும்பிட்டான். தன்னை மன்னித்து விடுமாறு வேண்டினான். கதவைத் திறந்த அகலிகை தலைவிரிகோலமாக முனிவர் காலில் விழுந்து வணங்கி தன் புனிதத் தன்மையை இந்திரனால் இழந்ததாகக் கூறித் தன்னை மன்னிக்குமாறு பிரார்த்தித்தாள்.
ஞானதிருஷ்டியால் நிகழ்ந்தது அனைத்தையும் அறிந்த கவுதமர், பூனை உருவில் தப்பிக்க முயன்ற இந்திரனைக் கோபமாக அழைத்தார். அவர் கோபத்துக்கு அஞ்சிய இந்திரன் சுயஉருவில் தலை குனிந்து நின்றான்.
எனினும் கோபம் அடங்காத முனிவர் அவன் "உடம்பெல்லாம் பெண் குறியாகட்டும்" என்றும் "வெளியில் தலைகாட்ட முடியாமல் அவதிப்படு" என்றும் சபித்தார்.
அகலிகையை நோக்கிக் கணவனுக்கும், அயலானுக்கும் வேறுபாடு அறியாத அவள் உடம்பு கல்லாகுமாறு சபித்தார் முனிவர்.
சாபத்தின் காரணமாக இந்திரன் மறைந்து வாழ வேண்டிய அவல நிலை உண்டாயிற்று. இந்திரனுக்காகத் தேவர்கள் கவுதம முனிவரிடம் சென்று மன்னிப்புக் கோரினர். முனிவர் "இந்திரன் பிரகஸ்பதியிடம் சென்று விநாயகப் பெருமானுடைய ஷடாட்சர மந்திரத்தை உபதேசம் பெற்று ஜபிக்கட்டும்’’ என்று கூறினார்.
இந்திரன் பிரகஸ்பதியிடம் சென்று விநாயகப் பெருமானின் ஷடாட்சர மந்திர உபதேசம் பெற்று ஜபித்து அவர் அருளால் அவன் உடலில் இருந்து பெண்குறிகள் கண்களாக மாறிக் காட்சி அளித்தன. எனவே அவனுக்கு ஆயிரம் கண்ணுடையான் என்ற பெயர் ஏற்பட்டது.
கடவுளாக போற்றப்படுபவர்களின் கேடுகெட்ட கதைகளும் ஆபாசங்களும் நிறைந்தவைதான் இந்த புராணங்களும் இதிகாசங்களும். இவற்றைதான் சிலர் அர்த்தமுள்ள இந்துமதம் என்று கூறித்திரிகின்றனர்.
#Share_This
-ஆறாம் அறிவு முகநூல் பக்கம்.23.11.17

புதன், 22 நவம்பர், 2017

யோனி பூஜை; - பெண் குறி வழி பாடு"இது ஓரு யோனி பூஜை"
பெண் குறி வழி பாடு, சக்தி வழிபாடு என்ற பெயரில் இந்தியாவுக்கே உரிய ஆபாச ஆன்மிகம்...
கைலாயத்திலிருக்கும் சிவன்
சொன்னதைக் கேட்காமல் அவர்
மனைவி பார்வதி தேவி தன் தந்தை தக்ஷனின் யாகத்தில் கலந்து கொள்கிறாள். அவமானப்படுகிறாள். அது பொறுக்காமல் தற்கொலை
செய்து கொள்கிறாள் அவள் தற்கொலையைத் தடுக்க ஓடி
வரும் சிவன் 51 பாகங்களாக சிதறிப்போன தன் தேவியின் உடலில் யோனி விழுந்த இடம்
தெரியாமல் அல்லாடுகிறார்.
காமதேவன் கண்டுபிடித்து வழிபடுகிறான்.
அந்த யோனி வழிபாட்டு ஸ்தலம் தான் இக்கோவிலாம்!
அசாம் மாநிலம் - கௌஹாத்தியில்
நீலாச்சல் மலைச் சாரலில் அமைந்துள்ளது 'காமாக்யா' சக்தி பீடம். அன்னை சதி தேவி
(பார்வதி) யின் யோனி பாகம் விழுந்த யோனி பீடமாய் இத்தலம் அறியப்படுகிறது.
சக்தி பீடங்கள் அனைத்திற்கும் முதன்மையானது யோனி பீடமே என்று புராணங்கள் அறுதியிட்டுப் போற்றுகின்றன.
அதனால் அந்தயோனி மட்டுமே இங்கு வழிபடு கடவுள். கற்பாறையில் செதுக்கி வைத்திருக்கிறார்கள். அந்தப் பாறைப் பகுதியில் நீர் கசிந்து வழிந்து கொண்டிருக்கும்.
பார்வதி பெண்குறியில் ஆண்டுக்கொரு முறை நான்கு
நாட்கள் உதிரப் போக்கு ஏற்படுவதால் இதை மாத விலக்கு என்று சொல்லக்கூடாது. வருஷ விலக்கு எனலாம்.
இந்தக்கோவிலில் இன்றும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் கோவில் வாசலை அடைத்துவிடுவார்கள். தேவி தீட்டாகும் நாட்கள்.
அந்நாட்களில் திருக்கோயிலில்
பக்தர்களுக்கு அனுமதி கிடையாது அந்த 3 நாட்கள் முடிந்தப் பின் மீண்டும் கோவில் வாசல் திறக்கும்.
இந்த மூன்று நாள்களிலும் அந்த நீரில் சிவப்பு சாயத்தைக் கலக்கிச் சிவப்பு நீர் வழிவது போல ஏற்பாடு செய்கிறார்கள்.
"ருது ரத்தம் போலக் காட்சியளிக்கச்
செய்கிறார்களாம்"
பார்வதியின் மாதவிடாயாக
பக்தர்களுக்கு (புனித நீராக)
கொடுப்பார்கள்.
உலகெங்கும் இருந்து இந்த மூன்று நாள்களிலும் பத்து லட்சம் பக்தர்கள் அங்கே கூடுவார்களாம். சாதுக்களும்,
சன்னியாசிகளும், சன்னியாசினிகளும்
இங்கே கூடுவார்களாம். அந்த மூன்று நாள்களாம் இந்த மூன்று
நாள்களும்! பூஜை, புனஸ்காரம் எதுவும் இந்த மூன்று நாள்களில் கிடையாதாம்.
பூசாரிகளும் பக்தர்களும்ஆணாக
இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இந்த மூன்று நாள்களில் செவ்வாடைதான் அணிய வேண்டுமாம்
திருமணமாகாத பெண்கள் சாப்பிடாமல் இருக்க வேண்டுமாம்.
மூன்றாம் நாள் கடவுளச்சிக்கு `சடங்கு செய்யப்பட்டுக் கழுவிக் குளிப்பாட்டி அதன்பிறகுதான் கோயில் கதவுகள் திறக்கப்படுமாம்.
நாடெங்கும் வந்திருந்த பக்தர்களுக்கு சிவப்புத்துணியில் ஒரு பகுதி அல்லது ஒரு நூலிழை பிரசாதமாக
வழங்கப்படுகிறது. மாதாவின் மாத விலக்கு ரத்தம் படிந்தது எனக் கருதப்படும் இது அவர்களுக்கு `மாலை’ யாம்!
இதை வாங்கிப் பூஜை செய்து வந்தால் - நினைப்பதெல்லாம் நடந்து விடுமாம்!
இக்கோயிலில் உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. கருவறையிலேயே உயிர்ப்பலி கொடுக்கின்றனர்.
19-ஆம் நூற்றாண்டு வரை இந்தக் கோயிலில் மனிதர்களைப் பலி தருவது வழக்கம்.
பிரிட்டிஷ் அரசு தடை செய்து விட்டது..
"சு.... யும் , பு. ......யும் கும்புடுறதெல்லாம் ஒரு பொழப்பாடா.. ."
-டக்லசு முத்துக்குமார் முகநூல் பக்கம்(22.11.17)

செவ்வாய், 21 நவம்பர், 2017

கார்த்திகை தீபத்தின் கதையளந்த கதை கேளீர்! (2)


- இரா.கண்ணிமை

நேற்றைய தொடர்ச்சி...

சைவசமய விளக்கத்தின்படி - பிறந்தவன் ஒருவன் - தன் பாவம் தீர்ந்து கைலாயம் சேர்ந்து முக்தியடைய - எண்பத்து நான்கு லட்சத்து யோனி வழியாய் - மாறி மாறிப் பிறந்து அப்பிறவிகளில் செய்யும் புண்ணிய பலத்தால் - இறுதியில் கைலாயம் சேர்வது உண்மையான முறை என்றால் - இதுவரை விளக்கிக் காட்டியுள்ளதில் - சிலவற்றைக் கொண்டு - மாபெரும் தீங்கினைச் செய்தோர் - மிகச் சுலபமான முறையை அனுசரித்து - கைலாயஞ் சேர்ந்தார்கள் என்று தெளிவாக கூறி இருப்பதால் - இவற்றில் எதைத்தான் - வேதாந்த விதிமுறை என்று நம்புவதென நீங்களே தீர்ப்பிடுங்கள்.

எண்பத்து நான்கு லட்சம் யோனியுள்ள உயிர்களில் - மனிதன் மட்டுமே தெய்வ நம்பிக்கையும், பயபக்தியும் நிறைந்தவனாகவும், இருக்கிறானாம். அப்பக்தியைப்பெற விதி பிரமாணங்களும் கைக்கொண்டு நடக்கவேண்டிய நியமங்களும் உண்டாம். ஆனால் இங்கு கா             ணும் விளக்க திருஷ்டாந்தங்களில் - சுவாமி பிரசாதத்தை திருடப் போனவன் - தனக்குப் போதுமான வெளிச்ச மில்லையென - விளக்குத்திரியைத் தூண்ட, சிவனுக்கும் வெளிச்சம் கிடைத்ததென்று சிவன் அவனை தனக்குத் தோழனும், அழகாபுரிக்கு அரசனும், திக்குப்பாலகரில் ஒருவனும் - குபேரனுமாக்கி - மேன்மைபடுத்தி முக்திய ளித்தது எத்தனை வீணான செயல்கள்?

அவ்வாறே ஆகாரம் தேடி பூமியைக் கிண்டிக் கிளரின எலிக்கும் முத்தி கிடைத்திருக்கிறதாம். தாமரை நூலால் திரியிட்டு, நெய் விளக்கேற்றுவோர்க்கு இறப்பு, பிறப்பு, இல்லாத முக்தி கிடைக்குமாம். நெய்யைத் திருடிக் குடிக்க வந்த எலி - மூவுலகையும் ஆளும் கக்கர வர்த்தியாக்கி - முக்தியும் பெற்றிருக்கிறது.

ஆனால் இதற்கு மூலகாரணமாய், நெய்விளக்கேற்றி வைத்த பக்தனுக்கு ஒரு வரமும் கொடுக்கவில்லை. எத்தனைபரிதாபம் பாருங்கள்! பாதகனான பிராமணனை (பார்ப்பனன்) புலி கொள்ள, அவன் மீண்டும் நரகத்தில் வதைபடுகையில் அவனது இடக்கால் எலும்பை கழுகு கவ்வித் தூக்கிக் காசிக்குக் கொண்டு போய் கங்கை நதியில் போட்டதால் - பிராமணன் நரகத்தை விட்டெ ழுந்து - புஷ்ப விமானத்திலேறி நாகலோகப்பதவி பெற்றான் என்பது - எப்படித் தோன்றுகிறது? இத்தனை விரைவில் முக்தி கிடைப்பது உண்மையானால் - மற்ற பூசைகள - பலிகள் எதற்கு? இவ்வகையில் முக்தி சேர முடியுமானால் - அவையொன்றும் அவசியமில்லையே! சிறு சிதம்பரமென்னும் விராடபுருடஸ்தல தரிசனை செய்வோர்க்கு - பிரம்மா, விஷ்ணு, காணா மோட்சம் கிடைக்குமாம். மும்மூர்த்திகளில் சிரேஷ்ட பதவி வகுத்து விதி எழுதும் பிர்மாவுக்கும், ரட்சிக்கும், விஷ்ணுவுக்கும் தெரியாத மோட்சம் எங்கேயிருக்கும்? சிந்தித்துப் பாருங்கள்!

விருத்தாசலத்தில் இறந்தோர் வீங்கி வெடிக்காது, பூச்சி, புழுசேராது நாற்றமின்றி செத்த பிணத்தின் வலச்செவியில் சிவன் வந்து பேசி காப்பாராம். செத்த பிணத்துடன் சிவன் பேசுவது உண்மையென்றால் - யாரோடு எப்படி பேசமுடியும்? அதற்கு உயிர் இல் லையே! இதுவல்லாது - சிதம்பர தரிசினையும், காசியில் இறப்பதும் - திருவாரூரில் பிறப்பதும் -  அருணாசலத்தை நினைப்பதும் - முக்தி தரும் என்பது முன்னுள்ள எல்லா வற்றிலும் மிக மிக சுலபமான வழியல்லவா? எங்கிருப் போரும் திருவாரூரில் போய் பிரசவித்து பிள்ளைகளைப் பெறுவதாலும், சிதம்பரத்தை தரிசிப்பதாலும், காசியில் போய் இறப்பதாலும் - அருணாசலத்தை நினைப்பதாலும் முக்தியடைந்துவிடலாமல்லவா? காலம் முழுதுமே பஞ்சமா பாதகங்களைச் செய்து கடைசியில் மேலே சொன்னபடி முக்தி பெற வழியுண்டென்றால் - பாவத்தை செய்வோரெல்லாம் புண்ணியம் செய்வோர் போலவே தங்களைத் திடப்படுத்திக் கொள்வார்களல்லவா?

இவ்வகையில் முக்தி பெறுவது முற்றும் சாத்திய மானதுதானா? தாயைப் புணர்ந்து, தந்தையைக் கொன் றோன், சகோதரனைக் கொன்றோன், தீர்த்தமாடி முக்தி சேர்ந்தான் என்றால் - இவ்வகையில் பாதகம் புரிவோரை - பின்னும் எவ்வளவு பலப்படுத்தி விடுகிறதென்று பாருங்கள். தாமிரவருணிமகத்துவ மகிமை - அதில் பத்து பணவிடை தண்ணீர் சாப்பிட்டால் சகல பாவங்களும் போய்விடுமென்றால் - அந்த ஆற்று நீரை பயன்படுத்தும் வாய்ப்புடையோர் அனைவரும் தாங்கள் செய்த பாவம் போக்கப்பட்டு நல்லவர்கள் போலவே காட்சியளிப் பார்கள் போல் தெரிகிறதே! இந்த நீர் கிடையாத எல் லையில் - இந்த நீரால் விளைந்த உணவு தானியங்களைப் புசிப்போர் பாவம் தீர்ந்து முக்தி பெறலாமென்பது - எத்தனை சுருக்கமான வழியென்று பாருங்கள்!

அந்த தானியங்களைப் புசிப்போர் நல்லவர்களாய் காண்பது மன்றி அவற்றை சேமித்து வைத்து பாதகர் களுக்கு பரிமாறி பாவங்களை களைந்து - சொர்க்கத்திற்கு அனுப்பிக் கொண்டே இருக்கலாமே! இவை அனைத்தும் பச்சைப் பொய்யும், தவறான நம்பிக்கையை ஊட்டும் - மாறாட்டமான வழியென்று இன்னும் உணர்வாரில் லையே! அப்படியே காவிரியாற்றுத் தீர்த்தமும் இக் கதையை நம்ப இடமளிக்கிறது. இவ்வாறே நாய்காலில் ஒட்டிய சாம்பல்  பிணத்தை மிதித்துக் கொண்ட கதையும். மோட்சத்திற்கு எவ்வளவு சுலபமான குறுக்கு வழி பாருங்கள். முக்திசேர விரும்புவோர்க்கு இவ்வழிகள் எவ்வளவு எளிதான வகையில் சேரும் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதை பாருங்கள்.

இப்படியே நரகத்தில் வெந்து வேதனையை அனுப விப்போர் தன்மகன் மண்ணைச் சிவலிங்கமாய் கட்டி விளையாடியதால் நரகத்தை விட்டெழும்பி கைலாயம் போய் சேர்ந்தானென்பதும் மாபெரும் கேடான முறை யல்லவா?

தாமிரவருணி நீரில் குளித்தாலும், குடித்தாலும் அனைத்துப் பாவங்களும் தீரும் என்பதும், தண்ணீர் இல்லாத இடத்தில் இந்த நீரில் விளைந்த உணவுத் தானியங்களைச் சாப்பிட்டால் - சர்வ பாவங்களும் நீங்கும் என்பதும், கங்கை முதல் பதினொன்று நதிகளில் மூழ்கினால் பஞ்சமா பாதகங்களும் நீங்கி, முக்தி சேர் வார்களென்பதும் உண்மையானால் வேதம், சாத்திரம், புராண விசுவாசம் மற்றுள்ள சடங்குகள் அவசிய மில்லையே! பூசை, பலி, ஆலயம் தொழல் அவசிய மில்லையே! இவை அனைத்தும் வீண். வேத வழிபாடு களுக்குப் பொருந்தாத அஞ்ஞான செயல்கள், பொய் நம்பிக்கைகள் என்பதை ஞானிகள் விளக்கியுள்ளனர்.

அகப்பேய் சித்தர் பாடல்

தீர்த்தமாடினாலும் அகப்பேய் தீவினை போகாதே

ஊத்தை போனாலும் பேயுள்வினை போகாதே!

ஆறுகண்டாயே யகப்பேய் அந்தவினை தீர

தேரித் தெளிவதெல்லா மகப்பேய் தீர்த்தமாமாடியோ

காசிக்குப் போனாலு மகப்பேய் மந்துலையாதே

பூசித்து வந்தாலு மகப்பேய் புண்ணியங்கிட்டாதே!

சிவ வாக்கியர்

காணவேணுமென்று நீர்கடல் மலைகளேறுவீர்

ஆணவமதல்லவோ அறிவில்லாத மூடர்காள்

வேணுமென்றே ஈசர்பாத மெய்யுளே விளங்கினால்

காணலாகும் நாதனை கலந்துநின்ற ஜோதியை

தூர, தூர, தூரமென்று சொல்லியோடும் வீணரே

பாரும் விண்ணு மெங்குமாய் பரந்த மெய்பராபரம்

ஊருகாடு போயுழன்று நின்றுதேட வேண்டுமோ

நேரதாக உம்முனே நினைத்தறிந்து கொள்ளுமே!

பாம்பாட்டிச்சித்தர்

நாலுமீனை பலதரம் நல்ல தண்ணீரால்

நாளுங் கழுவினு மதன்நாற்றம் போமோ

கூறுமுடல் பலநதி யாடிக் கொண்டதால்

கொண்டமலம் நீங்காதென் றாடாய் பாம்பே!

வேறு விருத்தம்

ஒரு நாள் கடல்மூழ்கி உள்ளபாவமெல்லாம்

தீருமென்றால்

பல நாள் கடல் மூழ்கும் செம்படவர்க்கு

பாவமுண்டோ நயினாரே!

சிவ வாக்கியர்

காலை, மாலை நீரிலே முழுகுகின்ற மூடர்காள்

ஊழிகாலம் நீரிலே யுதிக்கும் தேரைக் கென்பலன்

காலமே யெழுந்திருந்து கண்கள் மூன்று தோன்றிலே

மூல, மூல மென்பீறாகில் முக்திசேர லாகுமே!

இப்பாடலின் கருத்தனைத்தும் இவ்வித நீராடல் - ஆலயம் வலம் வரல், புண்ய நதிகளில் மூழ்கி, பூசை, பலியிடல் யாவும் வீண் - வீண் என்று காட்டுகிறதே! மனிதன் முக்திபெற இதெல்லாம் தேவையில்லை. எதையும் ஆராய்ந்து மெய்யறிவை கடைபிடித்தலே நன்று. மேலும் அனைத்து பாவங்களுக்கும் அடிமைப் பட்டு - வெளிச்சடங்குகளான புண்ணியத் தீர்த்தமாடல் போன்ற நம்பிக்கையை அறவே வெறுத்துவிட்டு பொய்போதனைக்குச் செவி மடுக்காது நல்ல வழியைக் கடைப்பிடித்தலே நன்று என்னும் ஒரு மனப்பட்ட உள்ளத்தை வருவாக்குங்கள்.

கார்த்திகை மாதம் வந்துவிட்டாலே நாடெங்கிலு முள்ள சிவன் கோயில்களில் சிவபூஜை செய்வதும் - காடெல்லாம் - வீடெல்லாம் - காடை விளக்கேற்றுவதும் - வாடிக்கை - வேடிக்கை. குறிப்பாக அண்ணாமலையாருக் கும், உண்ணாமுலையாருக்கும் அரோகரா போட்டு மக்கள் மொட்டையடித்து - பட்டைபோட்டு திருவண் ணாமலையில் கிரிவலம் வருகிறார்கள். டன் கணக்கில் நெய்யை கொப்பரையில் ஊற்றி - மனிதசக்தியைக் கொண்டு மலைமேல் தீபம் ஏற்றுகிறார்கள்.

கார்த்திகையின் - கதையை - சிவபூஜைகளின் கதையை - அவர்கள் எழுதிவைத்தப்படியே சொல்லி விட்டோம். சிவனடியார்களே! என்ன சொல்லப் போகிறீர்கள்?

-விடுதலை,21.11.17

திங்கள், 20 நவம்பர், 2017

கார்த்திகை தீபத்தின் கதையளந்த கதை கேளீர்!-1

இரா.கண்ணிமை

"விளக்கிடந் தீர்த்தம் வெண்ணீறுத் திராட்சம்

புத்திரன் பார்ப்பான் புராணங் கீர்த்தனை

அருச்சனை யட்சரம் அறங்கள்பலவே!"

சைவர்கள் திருக்கோயில்களுக்கு விளக்கேற்றி வைத்தல், சேத்திரங்களை வலம் வருதல், ஆறு குளங்களில் போய் - குளித்தல் - பார்ப்பனர்களைக் காத்தல் - புராணங்களைப் பரப்புதல் போன்ற முப்பத்திரண்டு செயல்களைச் செய்தலாம்!

சிவநெறி மாலை 7ஆம் பாட்டில் விஷ்ணு, பிர்மாவிற்கும் எட்டாத சிவன் ஆலயத்தில் விளக்கேற்றினால் - அனைத்துப் பாவங்களும் நீங்குமாம். கைலாயம் சேர்வார்களாம் என்று எழுதியிருக்கிறது. இதற்கு ஆதாரமாய், காசிகாண்டம், குபேரனுக்கு கண்ட அத்தியாயத்திலுள்ள 32, 34, 36, 42, 43, 47ஆம் பாடல்களின் பொருள் என்னவெனில் சாமிக்கு வைத்திருந்த பிரசாதத்தைத் திருடப் புகுந்தவன் மங்கி எரிந்த திரியை வெளிச்சம் தெரியும்படி தூண்டிவிட்டுத் திருடுகையில், அறியாமல் அங்கே படுத்திருந்தவர் காலை மிதிக்கவே - அவன் எழுந்து திருடனை வெட்டிக் கொன்றான். இறந்த இத்திருடன், கலிங்கராசன் மகனாய் திரும்பப் பிறந்து சிவாலயங்களுக்கு விளக்கேற்றியதால் - சிவன் தோழனாயும் - அஷ்ட திக்கு பாலகரில் ஒருவனாயும் - அழகாபுரிக்கு அரசனாக்கி, குபேரனாய் உயர்ந்தானாம். மூஷகம் (எலி) ஒன்று ஆகாரத்துக்காய் கோவில் மூலையைக் கிளற - ஒரு ரத்தினம் தோன்றி ஒளிவீசவே, கோவிலுக்குப் பெருச்சாளி விளக்கேற்றிற்று என்று - சிவன் அதற்கு சாலோக பதவி தந்தார் என்று எழுதப்பட்டுள்ளது.

பாடல் 74

மூஷிகமொன்று கோயில் மூலையினைக்

கிளறும் போது

தேடரு மணியொன் றங்கே

சிதறியோர் விளக்கங்காட்ட

ஆடிய பெருமான் தீபமளித்த

தென்றதற்கு நல்ல

வீடுயர் நெறியுங்காட்டி விரைந்து

சாலோக மீந்தான்!

தன் பசிப்பிணியைத் தீர்க்கும் நோக்கமாய் விளக்கைத் தூண்டி அதன் வெளிச்சத்தில் திருட முனைந்த திருடனுக்கும், உணவைத்தேடி பூமியை கிளறிய பெருச்சாளிக்கும் - தங்கள் எண்ணத்திலும் சிந்தையிலும் என்றும் நினைத்திராத - முக்தி பதவி கிடைத்திருக்கிற வகையை நீங்களே கண்டு கொள்ளுங்கள். இதுவல்லாமல் தாமரை நூல் திரியிட்டு நெல் விளக்கேற்றுவோர்க்கு பிறப்பு, இறப்பில்லா முக்திபதவி கிடைப்பதாய் சொல்லியிருக்கிறது. இது முந்தினதைவிட இலகுவான வழி- முக்திபெற என்பதை ஆழ்ந்து சிந்தியுங்கள். உடலரி விளக்கம், 54ஆம் பாட்டிலும், சிவபுண்ணியத்தெறிவு 91ஆம் 121ஆம் பாடல்களிலும் காணலாம்.

கலிங்க நாட்டில் ஒரு பிராமணன் (பார்ப்பனன்) வேத விதிமுறைக்கு மாறாய் தன் குல ஒழுக்கங்கள் யாவையும் விட்டு, தீயவனாய் திரிகையில், வறுமையும் சிறுமையும் நிறைந்து திரிந்த ஒரு கைக்கோளன் மனைவியை இவன் கவர்ந்துபோய் காட்டில் வசித்தான். நித்திரையில் இவனைப் புலி பாய்ந்து கொன்றது. யமகணங்கள், இவனைக் கொண்டுபோய் யமன் முன் விட சித்திரபுத்திரன் இவன் கணக்கைப் பார்த்து - இவன் மாபெரும் பாதகனெனத் தீர்த்து - வாயில் ரத்தம் வடிய - நரகத்திலே தள்ளி வதைத்தான். இறந்தபின் - இவனது இடக்கால் எலும்பை கழுகு கவ்விக்கொத்திச் சென்று - காசியை சேர அங்கொரு கழுகு இதை எதிர்த்துச் சண்டையிட்டு வாதாட - தன் வாயிலிருந்த காலெலும்பு நழுவி - தவறி கங்கையாற்றில் விழுந்ததால் - சிவன் தனது சிவகணங்களை அனுப்பி அவனை  புஷ்ப விமானத்தில் ஏற்றி நரலோக பதவி முக்தியளித்தான் என்று சொல்லப்பட்டுள்ளது.

பெரிய புராணத்தில் திருநாளைப் போவான் என்னும் புலை மகனும், துன்மதன், துச்சதன் முதலானோர் - சிதம்பர ரகசியத்தால் முக்தி பெற்றதாயும், அருணகிரி புராணத்தில் வச்சிராங்கத பாண்டியன் முக்தி பெற்றதாயும் கமலாலய புராணத்திலும் தெளிவாகக் காணலாம்.

சமற்கிருத சுலோகம்:

தரிசனா பிரததிசி ஜனனாகலோலயே

காசி யாந்துமரணா முக்திஸ் மரணா

அருணாசலம் அதவாபுத்திர சந்நிதே!

சிதம்பரத்தை தரிசிக்க கமலாலயமாகிய திருவாரூரிலே பிறக்க, காசியினிலிறக்க, அருணாசலத்தை மனத்தில் நினைக்க முக்தி கிடைக்கும் என்பதாம். புத்திரன் மூலமாய் முக்தி பெறலாம் என்பது மற்றொரு நம்பிக்கையாம். இவ்வித நம்பிக்கை கொண்ட பலர் பிரசவ காலத்திற்கு முன்பே பெரும் பிரயாசையுடன் திருவாரூரைச் சேர்ந்து தங்கள் பிரசவ நாளின் நிறைவேற்றுதலுக்காக பொறுமையுடன் நாட்களை எண்ணிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் - புத்திர - புத்திரிகளைப் பெற்றால் மோட்சம் சேரலாம் என்பதே அவர்களின் நம்பிக்கையாம்.

அருணகிரி புராணம், அருணை நகரச் சுருக்கம் 11ஆம் பாட்டில் சிறு சிதம்பரமொன்று விராட புருடனென்னும் தளத்தை தரிசிப்போர்க்கு- விஷ்ணுவும் பிர்மாவும் கண்டிராத முக்தி பதவி கிடைக்குமாம்.

12ஆம் பாட்டில் விருத்தாசலத்தில் இறந்தோர் உடல் அழியாது, வீங்காது - பிறவி ஜெனனமிராது - தலை வெடிக்காது,  நாற்றமிராது, பூச்சி புழுயிராது - சிவன் வலச்செவி வழியாய் பேசி காப்பார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

சிவ புண்ணியத் தெறிவு 43ஆம் பாடலில் ஆலத்தருகிலுள்ள ஆற்றுநீரே, கங்கை நதித் தீர்த்தமென நம்பி, குளிப்போர் - ஏழு பிறப்பிலும் செய்த பாவங்கள் யாவும் - தீர்ந்த பொருளை திருவிளையாடற் புராணம் மகா பாதகந்தீர்த்த படலம் 1, 10, 12, 40ஆம் பாடலிலிருந்து காணலாம். ஒருவன் காமவிகாரத்தால் மதிகெட்டு தாயைப் புணர்ந்தான். தந்தை வெட்கத்துக்கஞ்சி மறைத்து வைத்தும், மகன் பகிரங்கமாய் நடப்பது கண்டு புத்தி சொல்லி கேளாது, தன் தந்தையை கொல்ல முனைந்தபோது - தாய் குறுக்கிட்டு வந்ததையும் பாராமல், மண்வெட்டியால் வெட்டி தந்தையை கொன்றான். இத்தீர்த்தம் தாயை புணர்ந்து தந்தையை கொன்ற தீயச்செயலையும் தீர்த்து அவனுக்கு முக்தி கொடுத்தான் என்று கூறுகிறது.

அருணகிரி புராணம், அருணை நகர் சுருக்கம் 9ஆம் பாடலின் பொருள் - காசியென்ற தலம் - கைலாயத்திலும் சிறப்புடையது. அங்குள்ள கங்கை நதியின் அலை பரகதிக்குள் வேரோடியிருக்கிறது. இங்கு போய் பிறந்ததால் மனிதர், மிருகம், மரம் - மற்ற உயிர்களுக்கும் சிவன் எழுந்தருளி, செவியின் வழி உபதேசித்து காப்பார். அதனால் அனைத்து உயிர்களும் இறைவனைப்போல் சொரூபத்தையும், சுயரூபத்தையும் அடைந்து வாழ்ந்து கொண்டிருக்குமென்று சொல்லியிருக்கிறது. மரம், மிருகம் சாரூபம் அடைவது எப்படி?

விருத்தாசல புராணம், தீர்த்த சுருக்கம் 3ஆம் பாடலின்பொருள்: மணிமுத்தா நதியென்னும் - வெள்ளாற்றில் வீசும் காற்றுப்பட்ட மனிதர், பறவை, மிருகம் பூச்சி, புழு மரங்கள், கொடிகள், அனைத்தும் தேவலோகம் ஆளும்; அவ்வாற்றில் பட்டால் அன்பு, துணிவு, தவம் ஞானம் உண்டாகுமெனச் சொல்லுகிறது.

தாமிரவருணி மகத்துவத்தில் தாமிரவருணி ஆற்றில் மூழ்கினால் அனைத்து பாவங்களும் நாசமாகிவிடுமாம். இதன்காரணமாகவே இதற்கு பாபநாசம் என்னும் பெயர் உண்டாயிற்றாம்.

திருவையாற்றுப் புராணத்தில் ஒரு செய்தி: ஒருவன் தன் தந்தை மனைவியை தனக்கு மனைவியாய் வைத்திருந்ததை - தந்தை கண்டு புத்தி சொல்லியும் கேளாது. தன் தந்தையைக் கொன்றுவிட்டு, அவளை வைத்துக் கொண்டான். தன் தம்பி இச்செயலைக் கண்டித்தான் என்று அவனையும் கொன்றான். இதனால் - அவன் பைத்தியம் பிடித்தவனாய் அலைந்து திரிந்தான். காவிரி ஆற்றின் படித்துறையில் அவன் மயங்கிக் கிடக்கையில் - பெண் ஒருவள் தீட்டுச் சேலையைத் - துறையில் துவைத்துக் கொண்டு இருக்கும்போது - சில திவலைகள் அவன் மேல் பட்டதால் - பைத்தியம் தெளிந்து - காவிரியாற்றில் போய் முழுகவே - சிவன் எழுந்தருளிவந்து அவனுக்கு கைலாய பதவி அளித்தார் என்று எழுதியிருக்கிறது.

பிரமோத்திர காண்டம் விபூதிமா மகிமை 34-42ஆம் பாடல்கள் வரைக்கும் உள்ளபொருள் பின் வருமாறு:

துன்மார்க்கனான சூது, பொய், களவு, நிறைந்த பிராமணன் (பார்ப்பனன்) ஒருவன் பாண்டிய நாட்டில் இடைவிடாது திருடி காலம் கழித்து வந்தான். தன் திருட்டுப்பொருளை வேசிகளுக்குக் கொடுத்து, காமாந்த கனாய்த் திரிகையில் ஒரு நாள் இரவு ஒரு புலைச்சியுடன் கூடிப் புணர்ந்திருந்ததைக் கண்ட அவள் கணவன் - இப்பிராமணனை வெட்டிக் கொன்று வேலிக்கப்பால் எறிந்தான். பசிவேதனையால் - குப்பைச்சாம்பலின்மேல் படுத்துக்கிடந்த நாய் ஒன்று - பிணத்தைக் கண்டு கடித்து இழுத்துத் தின்றது. நாய் ஒட்டியிருந்த சாம்பல் அப்பிணத்தின் மேல் படவே, சிவகணங்கள் அப்பாதகப் பிராமணணை பிடித்து நரகத்திற்கு கொண்டு போக வந்த யமகணங்களைத் துரத்திவிட்டு - அவனை புஷ்ப விமானத்தில் ஏற்றிக் கொண்டு போய் சிவலோகத்தில் விட்டதாய் சொல்லப்பட்டிருக்கிறது.

உபதேச காண்டம், ருத்திராச்ச மான்மியம் 3ஆம் பாடலின் பொருள்: ருத்திராட்சமணியை பக்தியோடு தரிசித்தாலும், பக்தியின்றி தரித்தாலும் - அதையணிந் தோர்க்கு, சிவன் முத்தியளிப்பார் என்பதாம். இது நிறை வேறினதற்கு காட்டாய் உபதேச காண்டம் - ருத்திராட்ச மான்மியம் 118, 119, 125, 126 பாடல்களில் உள்ளது. இதன்பொருள்:-

சிறுவயது முதல் ஒரு நல்ல செயலைச் செய்யாது - பாதகனாய் திரிந்த ஒருவன் இரவில் அடுத்தவன் மனைவியைக் களவாய்க் கொண்டுசெல்கையில் - நகர காவலர் கண்டுபிடித்து - மழுவாயுதத்தால் வெட்டிக் கொலை செய்தார்கள். இவன் இறந்த நான்காம் நாள் - இராச குமாரத்தி ஒருவள் தான் அணிந்திருந்த ருத்ராட்ச வடத்தைக்கழற்றி வைத்துவிட்டு குளித்தாள். காகம் ஒன்று  ருத்ராட்ச மணியில் - கோர்த்திருந்த வெண்மணிகளை சோறு என்று நினைத்து கொத்திப் பறந்து போகையில் - வாயினின்று நழுவி பிணத்தின்மேல் விழுந்தது. அதனால் அவன் பாதகங்கள் தீர்ந்து கைலாயம் சேர்ந்தான் என்பதாம்.

(தொடரும்)
- விடுதலை நாளேடு, 20.11.17

வியாழன், 16 நவம்பர், 2017

பூமி தட்டை என கூறும் பைபிள்!

முட்டாள் கிறிஸ்தவர்களும் அவர்கள் கற்பனை போதனைகளும்!

பூமிக்கு நான்கு மூலைகள்? உலகம் தட்டை. உருண்டை அல்ல. உலகத்திற்கு நான்கு திசைகளும் நான்கு மூலைகளும் உண்டு . கர்த்தரின் வார்த்தைகளை மட்டுமே அடங்கிய புனித பைபிள் கூறுகிறது

புதிய ஏற்பாடு. NEW TESTAMENT.

பைபிள்: வெளி 7 அதிகாரம் ஸ்லோக‌ம் 1.
BIBLE: REVELATION. CHAPTER 7 VERSE 1.

1. இவைகளுக்குப்பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின் மேலாவது, சமுத்திரத்தின் மேலாவது, ஒரு மரத்தின் மேலாவது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக்கண்டேன்.

1.And after these things I saw four angels standing on the four corners of the earth, holding the four winds of the earth, that the wind should not blow on the earth, nor on the sea, nor on any tree.

ஆதாரம் சுட்டி http://www.tamil-bible.com/lookup.php?Book=Revelation&Chapter=7&Verse=1&Kjv=2
-------------------------------------

சூரியன் தான் நகருகிறது. பூமியல்ல‌ ?

பைபிள்: யோசுவா .10 அதிகாரம் . ஸ்லோக‌ம் 13
BIBLE: JOSHUA . CHAPTER 10. VERSE 13.

13. அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுமட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது; இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா; அப்படியே சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒருபகல் முழுதும் நடுவானத்தில் நின்றது.

13.And the sun stood still, and the moon stayed, until the people had avenged themselves upon their enemies. Is not this written in the book of Jasher? So the sun stood still in the midst of heaven, and hasted not to go down about a whole day.

ஆதாரம் சுட்டி http://www.tamil-bible.com/lookup.php?Book=Joshua&Chapter=10&Verse=13&Kjv=2

சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒரு பகல் முழுதும் நடுவானத்தில் நின்றது. ??? !!!.

.க‌ல்வி அறிவு ப‌டைத்த‌ அத்த‌னை பேருக்கும் சூரியன் சுழலுவதில்லை பூமிதான் சுழ‌ன்று வ‌ருகிற‌து என்ற‌ உண்மை தெரியும்.
================================
கோபெர்னிக‌ஸ் என்ப‌வர் இந்த‌ விஞ்ஞான‌ அறிவிய‌ல் உண்மையை முத‌ன்முத‌லாக‌ உல‌கிற்கு அறிவித்த‌ பொழுது , இந்த உண்மை புனித பைபிளுக்கு எதிரிடையாக இருந்தபடியால் கிறிஸ்த‌வ‌ ம‌த‌ குருக்க‌ள் கூக்குரல் எழுப்பி அவ‌ரை நாஸ்திக‌ன் என்று தூற்றினார்க‌ள்.அத‌ன் தொட‌ர்பாக‌ கோபெர்னிக‌ஸ் அவ‌மானப்ப‌டுத்த‌ப்ப‌ட்டு சித்த்ர‌வ‌தை செய்யப்ப‌ட்டார்.

ஜியார்டானோ புருனோ என்ற‌ இத்தாலிய‌ர் கி.பி.1600 க‌ளில் பூமி சூரிய‌னை சுழ‌ன்று வருகிற‌து என‌ கூறிய‌த‌ற்காக‌ ரோம் நக‌ரில் சர்ச்சினால் உயிருடன் எரிக்கப்பட்டார் என்பதை Glimpses of World History என்ற தனது நூலில் பண்டிட் ஜவஹர்லால் நேரு குறிப்பிட்டிருக்கிறார்
===============
தற்கால விஞ்ஞான சகாப்தத்தில் மேற்சொல்லப்பட்ட ஸ்லோகங்கள் புனித பைபிளில் இருபதை வெளியில் கூற , வெளிப்படுத்த கல்வி அறிவு பெற்ற கிறிஸ்துவ மிஷனரிகள் வெட்கி தலை குனிகிரார்கள்.

அகிலம் முழுவதும் வியாபித்துப் பரவியுள்ள மிகப் பெரிய மதமான கிறித்துவின் மத நூலான, மறை நூலான, வேத நூலான விவிலியத்தில்-பைபிளில் உலகம் தட்டை என்று கருத்து உரைக்கப்பட்ட நேரத்தில் கிறித்தவ மதத்தில் தோன்றிய அழியாத உலகப் புகழ் பெற்ற மாபெரும் விஞ்ஞானி அறிவியல் அறிஞர் கலிலியோ என்பவர் உலகம் தட்டை என்பதை மறுத்து உலகம் உருண்டை என்று சொன்னார் என்பதும், தன் கருத்தை மிகுந்த எதிர்ப்புகளுக்கிடையே வரலாற்றில் பதித்து நிறுவினார் என்பதும்தானே உண்மை!

பூமி உருண்டை என்னும் அறிவுபூர்வமான-ஆக்க ரீதியான கலிலியோவின் ஆராய்ச்சி உண்மைக் கருத்தை ஏற்றுக் கொண்டால் ஏசுநாதரும், கிறித்தவ மதமும், பைபிள் என்னும் விவிலியமும் அடிபட்டு ஆட்டங்கண்டு செத்தொழிந்து மறையுமே என்று எண்ணிய கிறித்தவ மத வெறியர்கள் தங்கள் மதக் கருத்துக் கோட்பாட்டைக் காக்கும் பொருட்டு அழியாத உலகப் புகழ் பெற்ற மாபெரும் விஞ்ஞானி அறிவியல் ஆய்வறிஞன் கலிலியோவை அடித்தே கொன்றார்கள் என்பதை எவரே மறுக்க இயலும்?

கிறிஸ்துவ மிஷனரிகள் நடத்தும் பள்ளிகளில்
பைபிள் க‌ண்ட‌
இந்த பூமி தட்டை!!
பூமிக்கு அஸ்திவாரம் உண்டு,!!
பூமிக்கு தூண்கள் உண்டு!!
பூமிக்கு நான்கு மூலைகள் உண்டு.!!
சூரியன் தான் நகருகுறது. பூமியல்ல‌ !!
என்ற‌ மாபெரும் பேருண்மைக‌ளை
மாண‌வ‌ர்க‌ளுக்கு போதிக்கின்றார்க‌ளா?

பிற மதத்தினரை ம‌த‌ம் மாற்ற‌ம் செய்யும் பொழுது
பைபிள் க‌ண்ட‌
இந்த மாபெரும் பூமி தட்டை!!
பூமிக்கு அஸ்திவாரம் உண்டு,!!
பூமிக்கு தூண்கள் உண்டு!!
பூமிக்கு நான்கு மூலைகள் உண்டு.!!
சூரியன் தான் நகருகுறது. பூமியல்ல‌ !!
என்ற‌ பேருண்மைக‌ளை அறிவிக்கிறார்க‌ளா?

இண்டுஇடுக்கு காடு மலை கடற்கரை பட்டிதொட்டி கிராமம் நகரம் எல்லாம் கர்த்தரின் பைபிள் வாசகங்களை எழுதி எழுதி பிரகடனப்படுத்துபவர்கள்
பூமி தட்டை!!
பூமிக்கு அஸ்திவாரம் உண்டு,!!
பூமிக்கு தூண்கள் உண்டு!!
பூமிக்கு நான்கு மூலைகள் உண்டு.!!
சூரியன் தான் நகருகுறது. பூமியல்ல‌ !!
என்ற கடவுளின் வாசகங்களான புனித பைபிளின்
இந்த வாசகங்க‌ளையும் வசதியாக மறைப்பதேனோ ? சொன்னால் எவன் வருவான் மதங்களின் பக்கம் ஆளுக்கொரு மதத்தை வைத்து மனிதமூளையை சிந்திக்கவிடாமல்  முடக்கி முட்டாள் ஆட்டுமந்தையாக மக்களை மாற்றி மேய்த்தவர்தானே  இயேசு அறிவை கொண்டு சிந்தித்தால் அனைத்து மதசாயங்களும் வெளிறிப்போய்விடும்.

கடவுளை நம்புபவன் முட்டாள் அதை பரப்புபவன் அயோக்கியன்.
-முகமட் நசீம், ஆறாம் அறிவு( முகநூல் பக்கம்)