புதன், 31 அக்டோபர், 2018

சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட்டதில்லையா? கடைந்தெடுத்த பொய் -இதோ ஆதாரம்!


கலி. பூங்குன்றன்
ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு ஆகம விதிகள் உள்ளன. அதன்படி சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் குறிப்பிட்ட வயதுள்ள பெண்கள் போகக்கூடாது என்பது காலம் காலமாக இருந்து வரும் சம்பிரதாயம் என்று சத்தம் போடுகிறார்களே - அது உண்மைதானா?
உண்மையன்று என்பதற்கு இதோ ஆதாரங்கள்.
சபரிமலை அய்யப்பன் பிரம்மச்சரியம் கடைபிடிக்கும் ஒரு கடவுளாம். 10 முதல் 50 வயதிலான பெண்கள் மாதாந்திர விலக்கு ஆகும் காரணத்தால் அது புனிதமற்ற தன்மை என்றும் அதனால் கோவிலில் தீட்டு உண்டாகக் கூடும் என்றும், அய்யப்பனின் பிரம்மச்சரியத்திற்கு ஒவ்வாத  செயல் என்றும் கதைக்கிறார்கள்.
தமிழகத்தின் கிராமங்கள் தோறும் அய்யனார் காவல் தெய்வமாக  கொண்டு இருப்பதைப் போலவே ஆரியங்காவு பகுதியில் இருந்த அய்யப்பன் கோவிலும் முன்னொரு காலத்தில் எல்லைக் காவல் தெய்வமாகக் கொண்டு - சிறு தெய்வ வழிபாட்டில் முக்கிய பங்கு வகித்த தெய்வமாக இருந்தது. வழிபாடுகளில் இரண்டு கடவுள்களுக்கும் அதிக அளவில் ஒற்றுமைகள் இருக்கின்றன. பழங்குடிகளின் ஊர்க்காவல் தெய்வமாக இருந்த இக்கோவில் பிற்காலத்தில் உயர் ஜாதி மலையாள இந்துக்களாலும், பந்தளம் ராஜ குடும்பத்தாலும் பராமரிக்கப்பட்டு, இக்கோவிலின் நிர்வாகத்தினை அவர்களே ஏற்று நடத்தத் தொடங்கினார்கள்.
தமிழகம் மற்றும்  கேரளத்தில் இருக்கும் பல்வேறு அய்யப்பன் கோயில்களில் அய்யப்பன் திருமணமான கடவுளாகவே காட்சி அளிக்கிறார். உதாரணம்: அச்சன்கோவில். கோவை போன்ற கேரளத்தை ஒட்டிய தமிழகப் பகுதிகளில் இருக்கும் அய்யப்பன் கோவில்களில் பெண்கள் வழிபட முழு உரிமையும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் சபரிமலையில் பெண்கள் நுழையக் கூடாது என 1972ஆம் ஆண்டு தான் தேவசம்போர்டு தடை விதித்தது. அதற்கு முன்பு வரை ஆண்களைப் போலவே பெண்களும் சென்று அய்யப்பனை வழிபட்டு வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1972இல் தடை விதிக்கப்பட்டாலும் பெரிதாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அப்போது பெண்கள் உள்ளிட்ட பலர் சென்றுவர சரிவர பாதையில்லாத காரணத்தால் தார்சாலை ஒன்றும் அமைக்கப்பட்டது, அந்தச்சாலையில்தான் அப்போதைய குடியரசுத்தலைவர் வி.வி.கிரி சென்றார். 1986ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்ப்படம் அந்த கோவில் சன்னிதானத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது.  (அதில் பெண்களும் உண்டு) இதற்காக 7,500 ரூபாய் கட்டணத்தையும் பெற்றிருக்கிறது தேவசம் போர்டு.
N.S. Madhavan
@NSMlive
• 29 Sep 2018
How old are ‘very old’ customs of Sabarimala? Entry of women to the shrine was banned by law only as late as 1972. Reason: some male worshippers took offence. Before that women used to go there for worship, more so, after roads were built for a Rashtrapathi
அதன் பின்னாளில் இருந்தே பெண்கள் இக்கோவிலுக்கு வருவதில்லை. ஆனால் ஆதிகாலத்தில் இருந்தே சோறுண்ணும் சடங்கிற்காக பெண்கள் இந்தக் கோவிலிற்கு வருவது வழக்கமான ஒன்றாகும்.
1939ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ராணியாக இருந்தவர் அய்யப்பன் கோவிலில் வழிபாடு நடத்தியிருக்கிறார் என்பதற்கான சான்றுகளும் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.  முன்னாள் பிரதமரின் செயலாளர் டி.கே.ஏ நாயரின் அனுபவம் என்ன கூறுகிறது?
1972ஆம் ஆண்டிற்கு முன்பு வரை குறிப்பிட்ட வயது பெண்களுக்கு கோவிலுக்குள் அனுமதி இல்லை என்ற ஒரு சட்டம் கிடையாது. இந்தியாவில் இருக்கும் மற்ற கோவில்களைப் போலவே இங்கும் பெண்கள் வந்து வழிபாடு செய்து வந்தனர். முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் முன்னாள் செயலாளராக பணியாற்றி வந்த டி.கே.ஏ நாயர் இது குறித்து கூறுகையில், எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் முதன்முறையாக சபரி மலை சென்ற போது நான் என் அன்னையின் மடியில் அமர்ந்திருந்தேன். அன்று எடுத்துக் கொண்ட நிழற்படம் இன்றும் எங்களிடம் இருக்கிறது என்று கூறியுள்ளார். அவர் காட்டிய அந்த நிழற்படத்தில் ஒரு இளம்பெண்  கருவறையில் இருக்கும் கடவுளை வேண்டிக் கொண்டிருப்பதாக இருந்தது.
Women started arriving, though in spare numbers, at the temple as vehicles became available up to Pampa. They often arrived for the choroonu, or first meal to a child, offering which started at the temple mast was erected and sanctified.

பெண்கள் கோவிலுக்கு தலைமை யேற்று வரிசை வரிசையாக வந்தார்கள். அப்போது ஜீப்புகளில் பெண்கள் வருவதுமுண்டு, பெண்கள் தங்களின் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வருவார்கள். நடைதிறப்பு நாள்களில் அய்யப்பனுக்குச் சோறூட்டும் நிகழ்ச்சியில் பெண்கள் தான் முதலில் கலந்துகொள்வார்கள்.
The Devaswom Board had issued orders in November 1972 forbidding the entry of females aged 10 to 50 as Lord Ayyappa is celibate. The High Court later tightened the rule after a couple of trespassing incidents by women
அதன் பிறகு 1972ஆம் ஆண்டு தேவசம் போர்டு திடீரென  10 முதல் 50 வரையிலான பெண்கள் வர தடைவிதித்துவிட்டது, அப்போது இந்தத் தடை பெரிய எதிர்ப்பாக கிளம்பவில்லை. காரணம் கோவிலுக்கு வருபவர்கள் பெரும்பாலும் சாதாரண வீட்டுப்பெண்கள், ஆகையால் அவர்களுக்கு ஊடகம் மற்றும் இதர பெரிய அமைப்புகளின் ஆதரவு கிடைக்காமல் போய்விட்டது.
கடைசியாக ஒரே ஒரு கேள்வி. உருவமற்ற கடவுளுக்கு ஆண்-பெண் வேறுபாடு உண்டா? கடவுள் பரம் பொருளா? ஆணா, பெண்ணா, அலியா?
- விடுதலை நாளேடு, 31.10.18

திங்கள், 29 அக்டோபர், 2018

இதுதான் தீபாவளி

தந்தை பெரியார்


தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழ னுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின் றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டி கையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள் என்றா லும், இன்னமும் பல தமிழ் மக்கள் இழிநிலையை, மான அவமானத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்.

இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திர மல்ல. தமிழர் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது தலைமைக்கு அடிமை, மீட்சி பெற விருப்பமில்லாத மானங்கெட்ட ஈனப் பிறவி என்பதைக் காட்டிக் கொள்ள போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது.

மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர் என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

வெளிநாட்டிலிருந்து பிழைக்கும் வழி தேடிக் கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித் தன்மைக்கு ஏற்ப மடமையினால் கொண்ட கருத்துகளை மதுக்குடி வெறியில் உளறி வைத்த தன்மைக்கு ஏற்ப தொகுத்துக் களியாட்டம் ஆடிய ஆட்டங்களை தமிழ் மக்கள் என்ன சூழ்நிலையாலோ ஏற்று, அவற்றிற்கு அடிமையாகி, பின்பற்றித் தாங்களும் அப்படியே களியாட்டம் ஆடி வருகிறார்கள்.

அதன் பயனாய், அம்மடமையும் அல்லது வெறி உளறலுமே இன்று தமிழ் மக்களுக்கு கடவுளர்களாக, மதமாக, நீதி நெறிகளாக, பண்டிகை - விரதம், நோன்பு, உற்சவங்களாக, நல்ல நாள், தீய நாளாக, அப்பாத்திரங்களே நல்லவர்களாக, தீயவர்களாக ஆக்கப்பட்டு இருந்து வருகின்றார்கள்.

இஸ்லாம், கிறிஸ்துவம் முதலிய மார்க்கங்களாலும், வெள்ளையர் ஆட்சியாலும் உலக மக்களிடையில் ஒரு அளவுக்குத் தலைகீழான மாறுதல் ஏற்படும்படியான கல்வி அனுபவமும், ஞானமும் ஏற்பட்டிருந்தும்கூட, இந்த மடமை மிக்க ஆரிய வலையில் சிக்கிய தமிழ் மக்களிடையில் பெரிதும் சிறு அளவு ஞானமும் மாறுதலும் ஏற்படாமல் அம்மடமையிலேயே மூழ்கித் திளைத்து வருகிறார்கள்!

எவ்வளவு சொன்னாலும் அறிவும் அனுபவமும் இல்லாத சில இளைஞர்கள் (மைனர்கள்) - பித்தலாட் டத்தாலும், வஞ்சகம், துரோகம், மோசத்தாலும் வாழ வேண்டிய தீய எண்ணத்தில் தேர்ச்சி பெற்ற பரத்தை யரிடம் சிக்கிவிட்டார்களேயானால், எப்படி - யார் - எவ்வளவு அறிவையும் நன்மையையும் போதித்தாலும் அதை காதில் வாங்கக் கூட செவிப்புலனை ஒதுக்காமல் தன் உள்ளம் முழுவதையும் பரத்தையிடமே ஒப்புவித்து, அவளிடம் ஓடவே வழி தேடுவார்களோ அதேபோல் நடந்து கொள்கிறார்கள்!

இப்படி நடப்பவர்கள் பாமர மக்கள் மாத்திரமல்லாமல், தமிழ்ப் பண்டிதர்கள் - அதுவும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் உள்பட தமிழ்ப் பண்டிதர்கள் முதல் பெரும் புலவர்கள் மற்றும் இங்கிலீஷ் வேதாந்தத்தில், இங்கிலீஷ் விஞ்ஞானத்தில் உடற்கூறு, பூகோளக் கூறு இவைகளில் நிபுணர்கள் உள்பட எல்லாத் தமிழர்களும் இந்தக் காட்டுமிராண்டி மடமைக்கும் அடிமைப்பட்டு, சிந்தனையின்றி நடந்து கொள்வதென்றால், தீபாவளி கொண்டாடுவது என்பதில் உள்ள தமிழனின் இழிவுக்கும், மடமைக்கும், மானமற்ற தன்மைக்கும் இதைவிட வேறு எதை எடுத்துக் காட்டாகக் கூற முடியும்?

நம் பள்ளிகளும், கல்லூரிகளும், பல்கலைக் கழகங் களும் நம் மக்களுக்கு இந்த, இப்படிப்பட்ட மடமையை உணரும் அளவுக்குக்கூட அறிவைக் கொடுக்கவில்லை யென்றால், இக்கல்விக் கூடங்கள் மடமையையும், மானமற்ற தன்மையையும் பயிர் செய்யும் வளமுள்ள விளைநிலம் என்பதைத் தவிர வேறு என்னவென்று சொல்ல முடியும்? இதில் வதியும் - பயிலும் மாணவர் களுக்கு எந்தவிதத்தில்தான் மானமும் அறிவும் விளைய முடியும்?

தீபாவளி என்றால் என்ன?


(புராணம் கூறுவது)


1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.

2. தேவர்களின் முறையீட்டின்மீது, மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று, உலகத்தை மீட்டு மீண்டும் வந்து விரித்தார்.

3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.

4. ஆசைக்கு இணங்கி, பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.

5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.

6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.

7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரனுடன் போர் துவங்கினார்.

8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.

9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

10. இந்த மகிழ்ச்சியை (நரகாசுரன் இறந்ததற்காக) நரகாசுரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.

இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்! இந்த 10 விஷயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர் களுக்குப் பூமி நூல்கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது?

பூமி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது? சுருட் டினால், தூக்கிக் கட்கத்திலோ, தலை மீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந் திருக்கும்? விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?

பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லு வது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?

இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா? நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் ஜோதி ஷா என்று சொல்லப்படுகிறது. இது வங் காளத்தில் அசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது. இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?

இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்லுகிறான் என்பதற்காகவும், நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத் துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், இந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து, கங்கா ஸ்நானம் ஆயிற்றா? என்று கேட்பதும், நாம் ஆமாம் என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால் - இதை என்னவென்று சொல்வது?

மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால் இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டுமிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது, ஈனநிலை அடைந்தது ஏன்? என்பதை தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஆகவேயாகும்.

-  விடுதலை நாளேடு, 26.10.18

கொள்கைக்கும், உரிமைக்கும் வேறுபாடு தெரியாத 'விஜயபாரதம்!'



கேள்வி: சபரிமலைக்கு எல்லா வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பை கி.வீரமணி வரவேற்றுள்ளாரே?

பதில்: நேற்றுவரை அய்யப்ப வழிபாட்டை கிண்டலும், கேலியும் செய்தவர்கள், சாமியே இல்லை, கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்றெல்லாம் பேசி வந்தவர்கள் இவர்கள். இதுபற்றியெல்லாம் கருத்துச் சொல்ல இவர்களுக்கு எந்த யோக்கியதையும் கிடையாது.

'விஜயபாரதம்', 26.10.2018, பக்கம் 35

கடவுள் இல்லை என்பது எங்கள் கொள்கை; அதேநேரத்தில், கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் அந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருக்கும்பொழுது அவர்களின் உரிமை காப்பாற்றப்பட வேண்டும் என்று கூறுவது மனித உரிமை.

கொள்கைக்கும், உரிமைக்கும் உள்ள வேறு பாட்டைத் தெரிந்துகொள்ளும் யோக்கியதை ஆர்.எஸ்.எஸ். இதழான விஜயபாரத'த்துக்கு இல்லை என்பது விளங்கி விட்டது.

விஜயபாரதம்' சொல்லுவதைப் பார்த்தால் கடவுள் நம்பிக்கையற்ற மக்களுக்கு மட்டுமே தான் திராவிடர் கழகம் வாதாட வேண்டுமா? பகுத்தறிவும், இனநலனும் கழகத்தின் இருவிழிகள் என்பதை அறியாமலோ அல்லது அறிந்திருந்தும் பாசாங்கு செய்யும் தன்மையிலோ விஜய பாரதங்கள்' எப்படி செயல்பட்டாலும் பார்ப்பனீயத்தின் முகமூடியைக் கிழித்தெறிவார் திராவிடர் கழகத் தலைவர்.

இவர்களின் திசை திருப்பும் திரிநூல் வேலை எல்லாம் இங்கு எடுபடாது. ஜாதியே கூடாது என்பவர்கள் ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கேட்கலாமா என்பார்கள் - இட ஒதுக்கீடு என்று வருகிறபோது இந்தப் பார்ப்பன பூணூல் கும்பலுக்கு ஜாதி ஒழிப்பைப்பற்றி அக்கறை பிய்த்துக் கொண்டு எகிறிக் குதிக்கும்!'

ஜாதி சட்ட ரீதியாக ஒழிக்கப்படட்டும்; பார்ப்பனர்களும், பூணூலை அறுத்து எறியட்டும்; சங்கர மடத்தில் இந்து மதத்தைச் சார்ந்த எவரும் சங்கராச்சாரியாராக வரலாம் என்ற அறிவிப்பு குறைந்தபட்சம் வரட்டும்.

இவற்றையெல்லாம் செய்ய முன்வராத வரை, ஜாதி இருக்கும்வரை ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு என்னும் உரிமைக் குரல் ஓங்கி ஒலிக்கத்தான் செய்யும்.

அதேபோல, கடவுள், கோவில் வழிபாடுகள் இருக்கும்வரை அவை தொடர்பான உரிமைக் குரலும் ஓங்கி ஒலிக்கத்தான் செய்யும்.

கடவுள் நம்பிக்கை இல்லாத சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமும்தான் தாழ்த்தப்பட்டவர்களும் கோவிலுக்குள் செல்ல வேண்டும் என்ற ஆலயப் பிரவேச போராட்டங்களை நடத்தியது, வெற்றியும் பெற்றது என்பதையும் விஜயபாரதங்களுக்கு' நினைவூட்டுகிறோம். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் கோவிலில் அவமதிக்கப்பட்டாரே - அப்பொழுது குரல் கொடுத்தது விடுதலை'யா - விஜயபாரதமா?'

எங்கெங்கெல்லாம் உரிமைகள் மறுக்கப்படுகின் றனவோ அங்கெங்கெல்லாம் திராவிடர் கழகத்தின் உரிமைச் சங்கநாதம் வெடித்தே கிளம்பும்!

விஜயபாரத'ங்கள் விளங்கிக் கொள்ளட்டும்!

- விடுதலை நாளேடு, 26.10.18

வெள்ளி, 26 அக்டோபர், 2018

கிறிஸ்தவம் இஸ்லாம் பற்றி பெரியார்...

கிருஸ்துவமதத்தலைவர் ஏசு கிருஸ்து 

என்பவர் 2000 ஆண்டுகளுக்கு முன் தகப்பனில்லாமல்,
பரிசுத்த ஆவிக்குப் பிறந்தாராம்.
ஆகவே
அவர் கடவுளுக்கு மகனாம்
(தேவகுமாரனாம்) ஆகவே அவர்
சிலுவையில்
அறையப்பட்டுக்) கொல்லப்பட்டாராம்.
செத்தவர் மறுபடியும் பிழைத்தாராம்.
பல
அற்புதங்களைச் செய்தாராம்.
வியாதிகளைப் பார்வையால்
சவுகரியப்படுத்தினாராம். ஒரு
ரொட்டித் துண்டை ஆயிரக்கணக்கான
பேர்களுக்குக் கொடுத்துப்
பசியாற்றினாராம். குருடர்களுக்கு
கண்ணைக்
கொடுத்தாராம். இப்படி பல
காரியங்கள் செய்தாராம்.
இவற்றையெல்லாம்
நம்பினால் தான் கிருஸ்தவ மதம் இருக்க
முடியும். அறிவைக் கொண்டு
பார்த்தால் தேவனுக்கு, கடவுளுக்குக்
குமாரன் எதற்கு? கடவுள் ஒருவனை
மாத்திரம் குமாரனாக ஆக்குவது ஏன்?
கடவுள் தோன்றி எத்தனையோ காலம்
ஆனபிறகு
அப்போது (2000 வருடங்களுக்கு முன்)
மாத்திரம் எதற்காக மகனை
உண்டாக்கினார்? அதற்கு முந்தின
காலத்தில் ஏன் உண்டாக்கவில்லை?
அப்போதெல்லாம் செத்தவர்கள்
இல்லையா? குருடர்கள் இல்லையா?
பசித்தவர்கள்
இல்லையா? அந்த (கி.பி. 1 – ஆவது)
வருஷம் மாத்திரம் என்ன சிறந்தது?
கடவுள்
செய்யவேண்டியதை – சொல்ல
வேண்டியதை ஒரு மனிதனைக்
கொண்டு மாத்திரம் ஏன்
சொல்ல வேண்டும்? அதுவும் ஒரு
சிலருக்கு மாத்திரம் (நம்பும்படி) ஏன்
சொல்ல
வேண்டும்? அந்தக் காரியங்கள்
இப்போது ஏன் நடப்பதில்லை? இன்று ஏன்
அவர்
வரவில்லை? இப்போது கிருஸ்துவை
ஏற்காதவர்கள், நம்பாதவர்கள்,
வழிபடாதவர்கள்
ஏனிருக்கிறார்கள்? தேவகுமாரனுக்கு
இவ்வளவு தான் சக்தியா? இது
போலத்தானே
இஸ்லாம் மதம் என்பதும்
சொல்லப்படுகிறது? முகம்மது
கடவுளுக்கு (கடவுளால்
அனுப்பப்பட்ட) தூதராம். கடவுளுக்குத்
தூதர் எதற்கு? குரான் கடவுளால்
தூதரருக்கு (நபிக்கு)ச் சொல்லப்பட்ட
செய்தியாம்.கடவுள் மக்களுக்குச்
செய்தி சொல்லவேண்டுமானால் ஒரு
மனிதர் (தூதர்) வாயினால் தான்
சொல்லச்
செய்யவேண்டுமா? கடவுளால் எல்லா
மனிதருக்கும் ஏககாலத்தில்
தெரியும்படிச்
செய்ய முடியாதா? உலகில் மனிதன்
தோன்றி எத்தனையோ இலட்சம்
ஆண்டுகளுக்குப்
பிறகு ஒரு ஊரிலே, யாரோ ஒரு
சிலருக்கு மாத்திரம் சொல்லும் படி ஏன்
சொல்லுகிறார்? மற்றவர்களுக்கு ஏன்
தெரிவிக்கவில்லை? முகமது நபி
என்பதை
ஏற்றுக் கொண்டு, அவரை
நம்பினவர்களுக்குத்தானே குரான்?
மற்றவர்கள் அதை
ஏற்பதில்லையே! மற்றவர்களுக்குப்
பயன்படுவதில்லையே! ஏன்? கடவுள்
சொல்,
அப்படி ஏன் நம்பச் செய்தவர்களுக்கு
மாத்திரம் தெரிய வேண்டும்? இன்னும்
எத்தனை மக்கள் நம்பியாக வேண்டி
இருக்கிறது! இதுதான் கடவுள்
தன்மையா?
இவையெல்லாம் மனிதத் தன்மையா?
மனிதக் கற்பனையா?
தெய்வத்தன்மையா? ஒரு
சர்வசக்தியுள்ள தெய்வம், தெய்வத்தால்
அனுப்பப்பட்ட அவதாரம், அம்சம்,
மகன், குமாரன், தூதர், வேதம் ஏன்
உண்டாக்க வேண்டும்? இருந்தால்
இத்தனை
வேதங்கள், குமாரர், தூதர், வேதம் ஏன்
உண்டாக்க வேண்டும்? இருந்தால்
இத்தனை வேதங்கள், குமாரர், அவதாரம்,
தூதர்கள், சமயங்கள், மதங்கள்,
போதகர்கள் இருக்க வேண்டிய
அவசியமென்ன என்பதைச் சிந்தித்தால்
இவையெல்லாம்
மூட நம்பிக்கை, அதாவது அறிவைக்
கொண்டு சிந்திக்காமல்
கண்முடித்தனமாய்
நம்ப வேண்டியவை ஆகின்றனவா
இல்லையா? இது மனிதர்
என்பவர்களுக்கு ஏற்றதா
என்று கேட்கிறேன். இதற்காகக்
கோபிப்பதில் பயன் என்ன?
மூடநம்பிக்கை ஒழிய வேண்டுமானால்
மக்களிடம் உள்ள இப்படிப்பட்ட
கருத்துக்கள் ஒழியாமல் எப்படி ஒழிய
முடியும்? அறிவுள்ளவர்களே!
பகுத்தறிவாதிகளே!
சிந்தித்துப்பாருங்கள்! இது சந்திர
மண்டலத்திற்கு
மனிதன் போய் வரும் காலம்;
காட்டுமிராண்டிக் காலமல்ல. எனவே
சிந்தித்துப்பாருங்கள்! பின் சந்ததி
மக்களை மடையர்களாக்காதீர்கள்!
--------------14-06-1971 "உண்மை" இதழில்
தந்தை பெரியார் அவர்கள் எழுதிய
தலையங்கம். "பெரியார் களஞ்சியம்" -
தொகுதி: 2 … பக்கம்:57-6


புதன், 24 அக்டோபர், 2018

சபரிமலை... எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள்

சபரிமலை... எளிய தேடலில் சுலபமாய் கிடைக்கும் உக்கிரமான 15 உண்மைகள் ... கட்டாயம் முழுதும் படியுங்கள்.. தெளிவடையுங்கள்...

உண்மை 1:
நடிகைகள் ஜெயஸ்ரீ, சுதாசந்திரன் ஆகிய இருவரும் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் குருசாமி  நடிகர் நம்பியார் உடன் சேர்ந்து, பெரும் அய்யப்ப பக்தர் ஆன கே.சங்கர் அவர்கள் இயக்கத்தில் நம்பினோர் கெடுவதில்லை என்ற படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிக்காக 1986ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 முதல் 13 வரை சபரிமலை சென்று வருகின்றனர். உடன் நடிகை மனோரமா வேறு.

பாடல் காட்சி:

https://www.youtube.com/watch?v=PMG9TXdfDho

உண்மை 2:
இளவயசுப் பொண்ணுங்க பதினெட்டாம் படி ஏறக் கூடாது..ஆனால் பின் வாசல் வழியாக சன்னதிக்கு வந்து வழிபடலாம் என்று வசனம் இருக்கிறது. பதினெட்டாம் படி அருகே நின்று கொண்டு இந்த வசனத்தை ஜெயஶ்ரீயிடம் சொல்பவர் யார் தெரியுமா?

நம்ம குருசாமி எம்.என்.நம்பியார் தான்

உண்மை 3:

இந்த படப்பிடிப்பு நடைபெற சபரிமலை தேவசம் போர்டு ரூ.7500/- படப்பிடிப்பு கட்டணமாக பெற்று இருக்கிறது.

உண்மை 4:

இந்த நிகழ்வை எதிர்த்து தான் கேரளாவில் வழக்கு தொடரப்பட்டு அது கேரளா உயர்நீதிமன்றம் வரை சென்று பெண்கள் உள்நுழைய தடை என்று முடிகிறது.

உண்மை 5:

தேவசம் போர்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் 1991 வரை ஒவ்வொரு மாதமும் மலையாள பெண்கள் சோறுண்ணு என்ற பெயரில் தங்களின் குழந்தைகளுக்கு முதல் முறை சோறுட்டும் நிகழ்வை நடை திறந்து வைக்கப்படும் 5 நாட்களில் செய்து வந்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது.

பார்க்க...பக்கம் 94, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு

இது போக என் சோறுண்ணு நிகழ்வு சபரிமலையில் தான் நடந்தது என்ற TKA Nair என்பவரின் பேட்டி...

https://timesofindia.indiatimes.com/articleshow/66003421.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst&fbclid=IwAR02Qtqv6A1ldqWoPCOnvJgzyaV8umF0RuFkVkVrjb_w5AUVI_rogffPVt0

உண்மை 6:

இந்த வழக்கில் பெண்கள் சார்பாக வாதாடிய Ravi Prakash Gupta, தீர்ப்பு அளித்த தலைமை நீதிபதி Dipak Mishra அவருடன் சேர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி Ajay Manikrao Khanwilkar ஆகிய மூவருமே இந்துக்கள் தான்.

இந்த மூவர் மட்டும் அல்ல, பெண்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள்
1. Mr. Sushendra Kumar Chauhan,adv.
2. Ms. Suman Gupta,Adv.
3. Ms. Prerna Kumari,Adv.
4. Mr. P.K. Shastri,Adv.
5. Dr. Laxmi Shashtri,Adv.
6. Mr. Rajendra Kumar Shastri,Adv.

சபரிமலை தேவசம் போர்டு சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள்
7. Mr. K.K. Venugopal, Sr.Adv.
8. Mr. Krishnan Venugopal,Adv.
9. Mr. S. Udaya Kumar Sagar,Adv.
10. Ms. Bina Madhavan,Adv.

கேரள மாநில அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள்
11. Mr. Rajinder Sachar, Sr.adv.
12. Mr. R. Sathish,Adv.

இவர்கள் 12 மட்டுமல்லாது
13. Mr. C.A. Sundaram, Sr.Adv.
14. Mr. K.V. Mohan,Adv.
15. Mr. K.V. Balakrishnan,adv.
16. Mr. Harish V. Shankar,Adv.
17. Ms. Rohini,Adv.

மொத்தம் 17 இந்துக்கள் தான் இந்த வழக்கை இருதரப்பு சார்பாகவும் நடத்தியவர்கள். அனைவரும் இந்துக்கள் தான்.

உண்மை 7:

பின்னர் ஏன் சங்கி மங்கிகள் இதை முஸ்லிம்கள் தொடர்ந்த வழக்கு என்று திரிகிறார்கள்?

டெல்லி உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடர்ந்த  Indian Young Lawyers Association என்பதின் தலைவராக இருக்கும் Naushad Ahmed Khan ஒரு முஸ்லீம்.

Chennai  Bar Association, The Bar Council of India, The Bar Association of India என பல கூட்டமைப்புகள் இங்கே இருக்கின்றன. அதில் ஒன்று தான் Indian Young Lawyers Association. அதில் யாருடைய கெட்ட நேரமோ இந்த தீர்ப்பு வரும் வேளையில் ஒரு முஸ்லீம் தலைவராக இருக்கிறார். அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சங்கி மங்கிகள் கல் எறிகிறார்கள்.

உண்மை 8:

இது என்ன Indian Young Lawyers Association மட்டும் போட்ட வழக்கா?

இல்லை.
Bhakti Pasrija Sethi,General Secretary of the Indian Young Lawyers Association,
Laxmi Shastri,
Prerna Kumari
Alka Sharma,
Sudha Pal

என வரிசைப்படுத்தப்படும் Petitioners அனைவருமே இந்துக்கள் தான்.

அதிலும் குறிப்பாக இந்த Prerna Kumari RSS இயக்கத்தின் மகளிர் கிளையான Rashtra Sevika Samiti உறுப்பினர்.

https://barandbench.com/sabarimala-case-petitioners-bhakti-pasrija-prerna-kumari/

உண்மை 9:

இந்த வழக்கு மொத்தம் 5 நீதிபதிகள் கொண்ட குழுவின் விசாரணைக்கு உட்பட்டது. தீர்ப்பில் பெண்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த Dipak Mishra, R.Nariman, DY.Chandrachud & AM.Khanwilkar நால்வரும் முஸ்லிம்கள் அல்ல.

பெண்கள் நுழையக்கூடாது என்று தீர்ப்பளித்த பெண் நீதிபதி Indu Malhotra முஸ்லீம் அல்ல.

4:1 என்ற அடிப்படையில் சபரிமலையில் பெண்கள் நுழைவது அனுமதிக்கப்பட்டது.

உண்மை 10:

இந்த தீர்ப்பை சங்கி மங்கிகள் ஆரம்பத்திலிருந்தே எதிர்த்தார்களா?

இல்லை.

வரவேற்கவே செய்தார்கள்.

Maneka Gandhi
https://www.telegraphindia.com/india/maneka-welcomes-bjp-falls-silent/cid/1670507

RSS
https://www.news18.com/news/india/rss-backs-womens-entry-in-temples-says-such-unfair-traditions-should-be-discarded-1215530.html
https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/rss-leaders-moved-sc-in-2006-seeking-entry-of-all-women-into-sabarimala/articleshow/66165404.cms
https://www.thequint.com/news/india/sabarimala-temple-verdict-supreme-court-judgment-political-reactions

உண்மை 11:

எங்கே குறுக்கே விழுந்து குழப்ப ஆரம்பித்தார்கள்?
https://www.news18.com/news/opinion/sanghs-u-turn-on-sabarimala-may-help-bjp-gatecrash-lefts-2019-party-in-kerala-1911445.html

உண்மை 12:

வேற்று மதத்தவர் சபரிமலையில் நுழையக்கூடாதா?

தாராளமாக நுழையலாம். சபரிமலை இந்து ஆகமத்துக்கு உட்பட்ட ஒரு கோயில் அல்ல. ஐயப்பனும் வேத, புராண கடவுள் அல்ல. நம்ம ஊர் கருப்புசாமி, ஐய்யனாரு, சுடலைமாடன் போன்ற ஒரு லோக்கல் கடவுள் தான்.

மேலும் இந்த வழக்கின் தீர்ப்பில் பெண்களை கோயிலுக்கு வரக்கூடாது என்ற எந்த ஆகம விதியும் இல்லை என சீராய்ந்த பிறகு தான் தீர்ப்பே பெண்களுக்கு ஆதரவாக வழங்கப்பட்டது.

அறிவராசனம் பாடிய ஜேசுதாஸ் கிறிஸ்துவர் தான். சபரிமலை போவோர் அனைவரும் அங்கிருக்கும் வாவர் சந்நிதி என்ற ஒரு இஸ்லாமிய சந்நிதியில் உணவு உட்கொள்வது காலம் காலமாக நடக்கிறது.

அதனால் கோவிலுக்கு போக வேண்டும் என்று Rehana Fathima மட்டும் அல்ல எந்த மதத்தை சேர்ந்த ஆணும் பெண்ணும் விரும்பினாலும் தாராளமாக போகலாம். கோவிலுக்கு உரிய மரியாதையை சீர்குலைக்காமல் தாராளமாக ஐயப்பனை தரிசிக்கலாம்.

அப்படி இல்லை என்றால் அவரை ஒரு கிரிமினலாக மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர, அவரை மதத்தை அடையாளமாக கொண்டு கலவரத்தை தூண்டக்கூடாது.

உண்மை 13:

தற்போதைய நிலையில் Rehana Fathima ஒரு முஸ்லீம் அல்ல. 2017 இல் VHP நடத்திய கர்வாப்சி மூலம் ஹிந்து மதம் மாறிய ரெஹானா, ஒரு ஹிந்துவைதான் திருமணம் செய்வேன் என கூறி அதைபோல் Manoj K Sreedhar என்ற ஹிந்துவை திருமணம் முடித்து இருக்கிறார். மதம் மாறிய பின் பெயர் ஒரு பிரச்சனை இல்லை என அதனால் பெயரை மாற்ற விரும்பவில்லை என சொல்லியும் இருக்கிறார்.

கேரளாவை உலுக்கிய ஹாதியா ஏன் முஸ்லிம் பையனை திருமணம் செய்தார் என இவர் அழுதும் இருக்கிறார்.

இது போக சுப்ரீம் கோர்ட்டின் சபரிமலை தீர்ப்புக்கு பிறகு, ரெஹானா பாத்திமாவும், கேரள பாஜக தலைவர் கே. சுரேந்திரனும் மங்களாபுரத்தில் பலமுறை சந்தித்து பேசிய விபரத்தை கேரள பத்திரிக்கைகள் அம்பலப்படுத்தியுள்ளது.

https://malayalam.oneindia.com/social-media/sabaraimala-issue-rehana-fathima-and-k-surendran-met-so-many-times-resmi-nair-raise-alleagation/articlecontent-pf272423-212014.html?fbclid=IwAR3TRgZlsirH5XGK73WHeqs5lCc5n_EN2dwHXUs3rTckMk1GTMCHiEzxG_4

எல்லா மதத்திலும் கிரிமினல்கள் உண்டு.
எல்லா இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் கிரிமினல்கள் அல்ல.
எல்லா இந்துக்களும் சத்தியவான் சாவித்திரி அல்ல.

உண்மை 14:

இந்த உண்மைகளை நான் ஒன்றும் CBI, FBI, Mozzat போன்ற நிறுவனங்களின் துணையோடு கண்டுபிடிக்கவில்லை. A Simple Google Search throws all the details you want.

இதையெல்லாம் செய்ய தெரியாதவர்கள் யாரும் இங்கில்லை.

ஒன்று செய்ய வேண்டிய அவசியம் இல்லாதவர்கள்
இரண்டு செய்ய விருப்பமில்லாதவர்கள்

செய்ய வேண்டிய அவசியம் இல்லாதவர்களை பற்றி கவலையே இல்லை. அவர்கள் எதற்கும் யார் சார்பாகவும் நிலையெடுக்கவே போவதில்லை.

செய்ய விருப்பமில்லாதவர்கள் தான் சிக்கலே. அவர்கள் செய்யாமல் இருப்பது கூட தவறில்லை. ஆனால் தங்களுக்கு வசதியான பொய்களை மட்டும் உண்மை போல திரித்து தவறான தகவல்களை பரப்பிக்கொண்டிருப்பதால் மட்டுமே இவ்வளவு தேடல்களை செய்யவேண்டியதாகி உள்ளது.

உண்மை 15:

It's an election year.

RSS & BJP don't have any single accomplishment in their favour to seek votes from a common man.

More & more hatred against non-hindus will be lined up to polarise the hindus politically.

Facebook, Twitter, Whats App will be flooded with false and fake news, memes and posts.

By A Ag Sivakumar
- கட்செவி மூலம் வந்தது