ஆண்டாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆண்டாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 21 டிசம்பர், 2021

மார்கழி மாதம் - கொக்கோகப் பஜனை!



ஞாயிறு, 16 டிசம்பர் 2012 ,விடுதலை நாளேடு

மார்கழி மாதம் இன்று பிறந்து விட்டது. கோயில்களில் எல்லாம் திருப்பாவைப் பாடல்கள் கத்த ஆரம்பிக்கும் (உச்சநீதிமன்ற ஆணையை யும்மீறி கூம்பு ஒலி பெருக்கியையும் பயன்படுத்து வார்கள்). ஆண்டாள் என்ற ஒரு பக்தை கட வுளையே புருஷனாக ஆக்கிக் கொள்ள வரித்துக் கொண்டு அவனோடு புணர வேண்டும் என்று விரகதாபம் எடுத்து அலைந்து புலம்பிய கேவலம் இது!
கடவுளாகிய கண்ணன் மனைவியின் மார் பகத்தில் வாய் வைத்துக் கிடந்தான் என்றெல் லாம் பாடுகின்ற ஒருபெண்மணிதான் வைணவத் தில் தலை சிறந்த பக்தைப் பெருமாட்டி!
குத்துவிளக் கெரிய
கோட்டுக்கால் கட்டிலின்மேல்
மெத்தென்ற பஞ்ச
சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல்
நப்பின்னை கொங்கைமேல் வாய்
வைத்துக் கிடந்த மலர் மார்பா!
என்று பாடுகிறார் ஆண்டாள்.
இதுகூட பரவாயில்லை. இதே  ஆண்டாளே நாச்சியார் திருமொழி என்று பாடியிருக்கிறாள்.
முத்தன்ன வெண்முறுவல்
செவ்வாயும், முலையும்
அழகழிந்தேன் நான்
புணர்வதோர் ஆசையினால் - என்
கொங்கை கிளர்ந்து குமைத்து
குதூகலித்து ஆவியை ஆகுலம்
செய்யும் அங்குயிலே
என்று பாடியுள்ள கேவலத்தை என்ன சொல்ல!
நல்முத்துக்கள் போன்ற பற்களைப் பெற்றி ருந்தேன். சிவந்த வாயையும், மார்புகளையும் பெற் றிருந்தேன். கண்ணனாகிய காதலன் என்னை வந்து புணராத காரணத்தால் என் அழகுகள் எல்லாம் கெட்டு விட்டன என்று காமவெறி பிடித்தவளாய்க் கதறுகிறாள். கொக் கோகம் பிச்சை வாங்க வேண்டும் போங்க...
இந்தக் கேவலத்தை ஆபாசத்தைக் கண்டு சகிக்காமல் வெட்கப்பட்டதாலோ என்னவோ, பழுத்த வைணவரான திரு. ராஜகோபாலாச்சாரி யார் (ராஜாஜி)  ஆண்டாள் என்னும் பக்தையே இருந்ததில்லை என்று போட்டாரே ஒரு போடு - பார்க்கலாம்.
ஆண்டாள் என்னும் ஸ்திரி இருந்ததே இல்லை. நாலாயிரதிவ்வியப் பிரபந்தத்தில் ஆண்டாள் பாடியதாகச் சொல்லப்படும் பாசுரங் கள் அவர் பாடியவை அல்ல.
பெரியாழ்வார் என்னும் ஆழ்வார் சில பாசுரங்களைப் பாடி, அப்பாசுரங்களை ஆண்டாள் என்னும் ஒரு பெயரால் வெளிப்படுத்தினார் என்று திரிவேணி இதழில் (1946 செப்டம்பர்) எழுதி விட்டார்.
பக்தி அப்படியே மனதைக் கட்டுப்படுத்து கிறதாம். கடவுளைக் கணவனாக ஆக்கிக் கொண்டு அவனோடு கட்டிப் புரள வேண்டும் - புணர வேண்டும் என்பதுதான் மனதை ஒருமுகப்படுத்தும்  யோக்கியதையா?
இந்த மாதம் பூராவும் இந்தக் கேவலமான ஆபாசத் தெருப் புழுதிகளைத்தான் பஜனையாகப் பாடப் போகிறார்கள்.  இதுபற்றி எல்லாம் எங்களைத் தவிர யார் அம்பலப்படுத்தப் போகிறார்கள்?
வெட்கம்! மகா வெட்கம்!!
(குறிப்பு: நாம் இப்படி எழுதுகிறோம். அண்ணா பெயரையும், திராவிடப் பெயரையும் வைத்துக் கொண்டுள்ள அண்ணா தி.மு.க.வின் நமது எம்.ஜி.ஆர் ஏடு திருப்பாவை, திருவெம்பாவை தூக்கிப் பிடித்து எழுதுகிறது)

- விடுதலை, 16.12.12 

செவ்வாய், 2 மார்ச், 2021

ஆண்டாள் பற்றி தந்தைபெரியார்....


ஆண்டாள் பற்றி தந்தைபெரியார்....

சு-ம:- அப்படியானால் ஒரு சந்தேகம். ஆனால் நீர் கோபித்துக் கொள்ளக்கூடாது.

பு-ம:- கோபம் என்ன? சந்தேகத்திற்குக் கோபிக்கலாமா?

சு-ம:- உங்கள் வீட்டு தோட்டத்தில் ஒரு மல்லிகைச் செடியின் அடியில் ஒரு குழந்தை அப்பொழுதுதான் பிறந்ததாகக் காணப்படக் கூடியது அழுது கொண்டு கிடக்கக் கண்டீர்களேயானால் அதைப்பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்?

பு-ம:- என்ன நினைப்பது? யாரோ பெற்றுத் திருட்டுத்தனமாய்க் கொண்டு வந்து போட்டு விட்டு போய் விட்டார்கள் என்றுதான் நினைப்பேன்.

சு-ம:- யார்? எப்படிப்பட்டவர்கள் பெற்றார்கள் என்று நினைப் பீர்களா?

பு-ம:- யாரோ “ திருட்டு கர்ப்பம் ” அதாவது விதவையோ, கல்யாணமாகாத பெண்ணோ புருஷன் ஊரில் இல்லாமல் தேசாந்திரம் போனவருடைய மனைவியோ,சோரத்தனமாய் கர்ப்பம் ஆகி, அதைப் பெற்று நமது தோட்டத்தில் கொண்டு வந்து போட்டுவிட்டாள் என்று தான் நினைப்பேன்.

சு-ம:- சரி. இதுதான் நல்ல பகுத்தறிவு என்பது.

பு-ம:- அதென்ன? அப்படிச் சொல்லுகிறீர்கள்? இதுகூடவா மனிதனுக்குத் தெரியாது? இந்தப்படி அல்லாமல் பின்னை என்னமாய் நினைக்க முடியும்? மல்லிகைச் செடியா பிள்ளை பெறும்? அல்லது ஆகாயத்தில் இருந்து வந்து விழுமோ? ஒரு மூடன் கூட இதற்கு மாறாக சொல்ல முடியாது.

சு-ம:- தாங்கள் சொல்லுவது நிரம்பவும் சரி. வேறு விசேஷம் ஒன்றும் இல்லை. மல்லிகைச் செடியின் கீழ் இருந்தால்தான் அப்படிச் சொன்னீர்கள். ஒரு சமயம் துளசிச் செடியின் கீழ் கிடந்தாலோ?

சு-ம:- எங்கும் அப்படித்தானே கிடக்கும். துளசிச்செடிக்கு மாத்திரம் என்ன கொம்பா முளைத்திருக்கும்? அல்லது அது கர்ப்பமாகி பிள்ளை பிறக்குமோ? இதென்ன சிறுபிள்ளைகள் மாதிரி கேட்கின்றீர்களே?

சு-ம:- இல்லை, ஏதோ ஒரு புராணத்தில் துளசிச்செடி அடியில் ஒரு குழந்தை கிடந்தது. அதைக்கடவுள் அவதாரமாய்க் கருதினார்கள். பிறகு அது கடவுளே ஆகிவிட்டது. இப்போதும் அது கடவுளாயிருக்கின்றது என்று பார்த்ததாக எனக்கு ஞாபகம். ஆதலால் அந்த புராணங்களை யெல் லாம் தாங்கள் நம்புவதுண்டா? அல்லது நம்பும்படி காலnக்ஷபம் செய்வ துண்டா? என்று தெரியலாம் என்பதாக ஆசைப்பட்டுத்தான் தங்களைக் கேட்டேன்.

பு-ம:- நீர் சு.ம. என்பது தெரிந்தும் உம்மிடம் நான் பேசியது சுத்தத் தப்பு. புராணத்தை சந்தேகப்படுகின்ற-தர்க்கம் செய்கின்ற-நாஸ்தீகர்களு டைய முகாலோபனமே செய்யக்கூடாது என்ற பெரியவாள் இதற்காகத் தானே சொல்லி இருக்கின்றார்கள். சு.ம.என்றாலே நாத்திகம் தானே. உம்மோடு பேசிய குற்றத்திற்காக நான் ஒரு முட்டாள் ஆக வேண்டியதும் நியாயம் தானே?

சு-ம:- இப்படிக் கோபித்துக் கொள்ளலாமா? நீங்கள் சொன்னதை உங்கள் வாயைக் கொண்டு, சொன்னதைக் கொண்டு உங்களை என்ன சொல்லுகின்றீர்கள் என்று தான் கேட்டேனே ஒழிய நான் ஏதாவது குற்றமான வார்த்தை சொன்னேனா? அல்லது என் அபிப்பிராயமாக ஏதாவது சொன் னேனா? ஏன் இவ்வளவு கோபம்?

பு-ம:- கோபம் ஒன்றும் இல்லை எனக்கு வேலையிருக்கின்றது. கொஞ்சம் அவசரம். நான் போய் விட்டு வருகின்றேன் (என்று சொல்லிக் கொண்டே நழுவிவிட்டார்.)

குடி அரசு - உரையாடல் - 06.09.1931
(சுயமரியாதைக்காரனுக்கும் புராணமரியாதைக்காரனுக்கும் சம்பாஷணை - சித்திரபுத்திரன் )

நன்றி: தோழர் வாலாசா வல்லவன் &
Arulmozhi Kathirvel.

வெள்ளி, 8 ஜனவரி, 2021

ஆண்டாள் யார்?


சில நாட்களிற்கு முன் தினமணி செய்தித்தாளில் கவிஞர் வைரமுத்து எழுதிய “தமிழை ஆண்டாள்” எனும் கட்டுரையில் மேற்கோள் காட்டிய ஒரு வாக்கியம் இன்று தமிழக ஊடகப்பரப்பிலும், பொதுவெளியிலும் பெரும் கருத்துமோதலை ஏற்படுத்தியுள்ளது.  அதில் அவர் மேற்கோள் காட்டிய ஒரு வாக்கியத்தில் ஆண்டாள் ஒரு தேவடியாள் எனக் குறிப்பிட்டதே இந்தக் குழப்பங்களிற்கெல்லாம் காரணம்.  இதனை இவர் ஒன்றும் சொந்தக்கருத்தாகக்கூறவில்லை, மாறாக அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகத்தின் சுபாஷ் சந்திர மாலிக்கை ஆசிரியராகக்கொண்டு வெளியிட்ட “Indian movement – some aspects of dissent, protest and reform” என்ற ஆய்வு நூலில் ஆண்டாள் பற்றி இப்படி ஒரு குறிப்பு எழுதப்பட்டிருக்கிறது என மேற்கோளே காட்டியிருந்தார்.  உடனேயே ஆண்டாளினை வைரமுத்து கேவலப்படுத்திவிட்டார் என இந்துமதவாதிகள் பொங்கியெழுந்து அவரது தலையினை வெட்டவேண்டும் என தலிபான் அவதாரம் எடுத்துவிட்டார்கள். இன்று இவ்வாறு கூச்சலிடும் மதவாதிகளின் முன்னோர்களே இந்துமதத்தின் ஒரு சடங்காக தேவடியாள்/ தேவதாசி முறையினைப் பேணியவர்கள் என்பதுதான்  இங்கு வேடிக்கையானது.

தேவடியாள்(பரத்தை)வரலாறு:

இந்த விலைமகளிர் தொழிலே உலகின் முதற்தொழில் என வேடிக்கையாகக் கூறுவார்கள். அந்த வகையில் பார்த்தால் இந்த விலைமகளிரின் தோற்றம் என்பது வரலாற்றுக்காலத்திற்கு முற்பட்டது. வரலாற்றில் தாய்வழிச் சமுதாயமாக மனிதர்கள் இருந்தபோது எல்லோருமே பொதுமகளிராகவேயிருந்தார்கள்(1). அதே போன்று சங்ககாலத்திலும் இற் பரத்தை(ஒருவனிற்கு மட்டும்),நயப்புப் பரத்தை(பலருக்கும் நயப்பவள்) மருதநிலத்தில் இருந்ததாகக் குறிப்புக்கள் உண்டு. அதே போன்று சங்கமருவிய காலத்தில் பரத்தையர்முறைமை இருந்தற்கு தரவாக மாதவி சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறார். இவ்வாறு காலகாலமாக பரத்தைமுறை காணப்பட்டாலும் அதனை மதச்சடங்காக மாற்றி கடவுளுடன் தொடர்புபடுத்தியது பார்ப்பன வைதீக(இன்றைய இந்து) மதமேயாகும்.  வைதீக மதமே தேவடியாள் (தே= தெய்வம்+அடியாள்= பணிபுரிபவள்) எனும் கருத்துருவாக்கத்தினை உருவாக்கி அதனை பொட்டுக்கட்டல் எனும் சடங்காக கோயிலிலேயே அந்தணர்களைக் கொண்டு நடாத்திவைத்தது.  இதனை பெருமளவிற்கு நிறுவனரீதியான நடைமுறைக்குள்ளாக்கியது இராசராச சோழன் ஆட்சியிலேயிலேயே இடம்பெற்றது என்பதற்கு தரவாக தஞ்சைப் பெருங்கோயில் கல்வெட்டுக்கள் (2)காணப்படுகின்றன. இராசராச சோழன் காலத்திலேயே இவ்வாறு தேவடியாள் முறை நிறுவனரீதியாக மதச் சடங்காக ஆக்கப்பட்டிருந்தாலும் அதற்கு முன்னரே கோயில்களில் நிறுவனரீதியற்ற முறையில் பின்பற்றப்பட்டு வந்திருக்கலாம் என உய்த்துணரமுடிகிறது. அக் காலப்பகுதியிலேயே (குறிப்பாக எட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ) ஆண்டாள் வாழ்ந்தாகக் கருதப்படுகிறது.

ஆண்டாள் உண்மையிலேயே தேவடியாளா (தேவதாசியா) என்றால் அது விவாதத்திற்குரியது. இந்துமத விளக்கத்தின்படி தெய்வத்திற்கே (தே) பணிபுரிபவள்(அடியாள்) என்றவகையில் தேவடியாள் எனத் துணிந்து கூறலாம். மறுபுறத்தில் பொதுவழக்கிலுள்ள தேவதாசி என்ற சொல்லிற்கான விளக்கத்தின்படி பொதுமகளா எனப் பார்த்தால், அதற்கான நேரடித்தரவுகள் எதுவுமில்லை.  மேலே குறிக்கப்பட்ட இண்டியானா பல்கலை ஆய்வானது ஆண்டாளின் பாடல்களில் காணப்படும் பாலியல் விடுதலைத் தன்மையினை அடிப்படையாகக்கொண்டே குறித்த முடிவிற்கு வந்திருக்கலாம். அதாவது பெண்களின் விடுதலை பெருமளவிற்கு அடக்கிவைக்கப்பட்டிருந்த அன்றைய நிலையில் ஒரு இளம்பெண் இவ்வாறு பாலியல் வேட்கை சொட்ட சொட்ட பாடல்களைப் பாடியிருக்க முடியுமா என்ற கேள்வியின் அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டிருக்கலாம். அது முடிந்த முடிவல்ல என்பது உண்மையே.

ஆண்டாள் அவமானக் குறியீடா?

ஒரு வாதத்திற்காக ஆண்டாள் அவ்வாறு பரத்தையாகவிருந்திருந்தாலும்கூட, அது அவரிற்கான அவமானமல்ல, மாறாக அது அந்த மதப் பிற்போக்குத்தன மற்றும் ஆணாதிக்கத்தின் அவமானமாகவே கருதப்படவேண்டும்.  ஆண்டாளின் பாடல்கள் கூட ஒரு பெண்ணின் பாலியல் விடுதலை உணர்வின் வெளிப்பாடாகவே கருதப்படவேண்டும்.  அதே போல ஆண்டாளின் தமிழ்ப் புலமையும், தமிழே வழிபாட்டு மொழியாகக் கருதப்படவேண்டும் என்ற மொழியுணர்வும் போற்றப்படவேண்டும். இதனால்தானோ என்னவோ  வைணவத் தென்கலை  சித்தாந்தத்தின் படி  ஆழ்வார்கள் பத்து  பேர் மட்டுமே (ஆண்டாள் , மதுரகவி ஆகியோரிற்கு இடமில்லை) . பின்பு ஆழ்வார்கள் பன்னிரண்டாக அதிகரிக்கப்பட்டாலும், சில வைணவர் ஆண்டாளையும், மதுரகவியினையும் இன்றும் ஏற்றுக்கொள்வதில்லை.  அதே போன்று ஆண்டாள் என்பதே ஒரு கற்பனைப் படைப்பு என ஏற்கனவே ராஜாஜி கூறியபோது (3) எதுவுமே பேசாதிருந்த மதவாதிகள், பா.ராகவன் ஆண்டாளைப் பற்றி ஏற்கனவே கிழக்குப் பதிப்பகத்தின் பெயரில் இதனைவிட கடுமையாக விமர்சித்து நூல் வெளியிட்டபோது மவுனமாகவிருந்த  மத வாதிகள் இப்போது பொங்குவதன் நோக்கம் கவனித்திற்கொள்ளப்படவேண்டும்.

வைரமுத்து எதிர்ப்பு அரசியலின் பின்னனி:

மேலே குறிப்பிடப்பட்ட பா.ராகவனும், ராஜாஜி ஆகியோர் பிரமணராகவிருந்தபடியால் அப்போது மவுனம் காத்த மதவாதிகள் இப்போது தமது மனுதர்மத்தின்படி பிரமணரல்லாத வைரமுத்து மேற்கோள் காட்டியதற்கே அவரது தலையினைக் காவு கேட்கிறார்கள். இன்னும் சில மிதவாதிகளோ(?) சன்னதியில் வந்து வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்கிறார்கள்.  வைரமுத்துவோ யாராவது தனது மேற்கோளைத் தவறாக புரிந்து துன்புற்றிருப்பார்களேயானால் அதற்கு ஏற்கனவே வருத்தம் தெரிவித்துவிட்டார். இதற்குப் பின்னும் மதவாதம் அடங்கியபாடில்லை.  இங்குள்ள நகைமுரண் என்னவெனில் இன்று வைரமுத்து இந்து மதத்தினை புண்படுத்திவிட்டதாக கூறும் மதவாதிகள்தான் அன்று தேவடியாள் முறையினை ஆதரித்து அதற்காக வாதிட, மறுபுறத்தே வைரமுத்துவின் கருத்துரிமைக்காகப் போராடும் பகுத்தறிவாளர்களே அன்று தேவடியாள் முறையினை ஒழிக்கப்போராடியிருந்தார்கள். குறிப்பாக சட்சபையில் தேவதாசி முறையினை ஆதரித்த இந்துமதக் காவலரான   சத்தியமூர்த்தி ஐயரினை எதிர்த்து சுப்புலட்சுமி ரெட்டி முன்வைத்த வாதம் (படம் காண்க) மிகவும் பரவலடைந்திருந்தது. தேவதாசி முறை ஒழிப்பில் டாக்டர் முத்துலட்சுமி, ராமாமிர்தம் அம்மையார், தந்தை பெரியார், அமிகம்மிகாயேல் என்ற கிறிஸ்தவ பெண் போதகர் ஆகியோர் ஆற்றிய பங்களிப்பு அளப்பெரியது.

வைரமுத்து மீதான வன்மத்திற்கு மற்றொரு காரணமும்  உண்டு.  வைரமுத்துவின் இந்தக் கட்டுரையினை ஒரு தொடராகவே வெளியிட்டுவருகிறார். இதற்கு முந்திய ஒரு வள்ளலார் பற்றிய கட்டுரையில் வள்ளலாரின் மறைவு பற்றிய உண்மைத்தன்மையினை வெளிக்கொண்டுவந்திருந்தார்.  அதாவது வள்ளலாரின் பார்ப்பனய எதிர்ப்பு ஆன்மீகத்தில் கலங்கிப்போன மதவாதிகள் இறுதிக்காலத்தில் வள்ளலாரை தனிமைப்படுத்தி அவரினை எரித்துக்கொன்றுவிட்டு, அருட்பெரும் சோதியில் கலந்துவிட்டார் (நந்தனை எரித்துவிட்டு கூறியது போன்று)எனக் கதைகட்டிவிட்டிருந்ததனைக் கேள்விக்கு உட்படுத்தியிருந்தார். அப்போது கூச்சல் போட்டு தாம் அம்பலப்பட்டுப்போவதனை விரும்பாத பார்பனியம் இப்போது ஆண்டாள் விடயத்தினை முன்வைத்து தமது வன்மத்தை வெளிக்காட்டுகிறது. இவையே வைரமுத்து மீதான வன்மத்திற்கு காரணங்களே தவிர, அவர்களிற்கு ஆண்டாள் மீதான பற்றுக் காரணமில்லை.

மதநம்பிக்கைகள் கேள்விக்கோ ஆய்விற்கோ அப்பாற்பட்டவை  என்று கருதுவோமாயின் இன்றைக்கும் பூமி தட்டை என்று நம்பிக்கொண்டும், கணவன் இறந்தவுடன் மனைவியினை எரித்துக்கொண்டும் இருக்கவேண்டியிருந்திருக்கும்.  எனவே வள்ளலார் அருட்சோதியில் எவ்வாறு கலக்கச்செய்யப்பட்டார் என்பது மட்டுமல்லாமல் ஆண்டாள் எவ்வாறு காற்றுடன் கலந்து காணமாற்போனார் எனவும் ஆய்வு செய்யப்படவேண்டும்.  துணைநின்றவை

  1. குடும்பம்,தனிச்சொத்து,அரசு ஆகியவற்றின் தோற்றம் (தமிழாக்கம்) (page7) -பிரடெரிக் எங்கல்ஸ்
  2. பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்(p.137) – க. கைலாசபதி
  3. “வாடாத மலர் ஆண்டாள்” – the tamil hindu.com (1-1-2015)

http://inioru.com/andal-devdhasi-vairamuththu-issue/

(சாவித்திரி கண்ணன்)

தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆண்டாள் குறித்த சர்ச்சையை பக்தர்களுக்கும் – பகுத்தறிவாளர்களுக்குமான சர்ச்சையாக பலரும் புரிந்து கொள்கிறார்கள்.
இது மிகத்தவறான புரிதல்!

இதை பக்தர்களுக்கும், பகுத்தறிவாளர்களுக்குமான மோதலாக உருவாக்கி வளர்த்தெடுக்க சிலர் முயற்சிக்கிறார்கள் என்பதே உண்மை!
உண்மையில் உண்மையான பக்தர்களும், உண்மையான பகுத்தறிவுவாதிகளும் இதில் சம்பந்தப்படவேயில்லை. இந்த சர்ச்சைக்குள் அவர்கள் இல்லை.
இந்த சர்ச்சைக்கும் அவர்களுக்கும் சம்பந்தமேயில்லை. அப்படி சம்பந்தப்படுத்திவிட நினைப்பவர்கள் முற்றிலும் தோல்வியே அடைவார்கள்.Image result for ஆண்டாள்

பக்தனின் மனநிலையும், பகுத்தறிவாளரின் மனநிலையும் முற்றிலும் வெவ்வேறான தளத்தில் இயங்குபவை. பக்தி மனநிலை என்பது உணர்ச்சி பிரவாகமானது, நெகிழ்ச்சியானது, எதையும் பிரித்து பார்க்கத் தெரியாதது, அனைத்தையும் ஒன்றாக பாவிப்பது. தன்னை எதிரியாகக் கருதுபவனைக் கூட தன்னுள் ஒருவனாக பாவிக்கும் பரந்துபட்ட மனநிலையை கொண்டது.

பகுத்தறிவானது நிகழ்காலத்தில் தான் தேடிப்பெற்ற தகவல்களோடு எது ஒன்றையும் அதன் சமூகம் மற்றும் சரித்திரம் சார்ந்த கண்ணோட்டத்தில் அணுகுவது! வைரமுத்துவின் கட்டுரை என்பது பகுத்தறிவு சார்ந்தது.

பகுத்தறிவு என்பது உண்மைக்கான தேடலை அடிப்படையாகக் கொண்டது. அது எப்போதும் கட்டமைக்கப்பட்ட மாயைகளோடு சமரசம் கொள்ளாது.
எல்லா மனிதர்களுக்கும் பகுத்தறிவும் உண்டு, பக்தியும் உண்டு. இவை இரண்டும் களந்தவன் தான் எந்த மனிதனும்! ஒருவன் தான் பிறந்து வாழும் குடும்பம் மற்றும் சமூகம் சார்ந்ததே ஒன்றை பக்தியோடு அணுகுவதும், மற்றொன்றை பகுத்தறிவு கொண்டு அணுகுவதும் அமைகிறது.
அந்தக் கட்டுரையில் வைரமுத்துவின் பகுத்தறிவையும் நான் கண்டேன். பக்தியையும் நான் உணர்ந்தேன். அவரது பக்தி என்பது தமிழமொழிசார்ந்தது. ஆண்டாளின் தமிழ் ஆளுமை வைரமுத்துவை தமிழ்பக்தி பரவசத்தில் ஆழத்தியிருப்பதை கட்டுரை நெடுகிலும் எவராலும் உணரமுடியும். அந்த தமிழ்பக்தி தான் அவரை, ‘ஆண்டாள் ஆன்மீகம் சார்ந்தவர்களுக்குரியவள்’ என்று புறக்கணித்து சொல்லமுடியாமல், நெஞ்சில் வாரியெடுத்து புளகாங்கிதம் அடைய வைக்கிறது. தலையில் தூக்கி வைத்து ஆனந்தக்கூத்தாட வைத்துள்ளது.

பாருங்கள், அவர் தேடிகண்டடைந்த ஆய்வு ஆண்டாளை தேவதாசி குலத்தவள் என்றதை ஆண்டாளுக்கான ஒரு குறையாகவோ, அவமானத்திற்குரியதாகவே வைரமுத்துவிற்கு கருதத்தோன்றவில்லை. ஆண்டாள் யாராக இருந்தாலும் அவளை கொண்டாடத் தயங்காத மனநிலை அவருக்கு பூரணமாக வாய்த்துள்ளதால் தான் அவர் தைரியமாக தன் கட்டுரையிலும், சொற்பொழிவிலும் அதை பதிவு செய்துள்ளார்.

ஆண்டாளின் பக்தர்களுக்கும், உண்மையான ஆன்மீக அன்பர்களுக்கும் வைரமுத்துவின் அதே மனநிலை தான் இருக்கமுடியும். ஓரே வித்தியாசம் வைரமுத்துவினுடையது மொழிசார்ந்த தமிழ் பக்தி! மற்றவர்களுடையதோ தெய்வீக உணர்வு சார்ந்த பக்தி.

பக்தி சார்ந்த மனநிலை என்பது மிகவும் நுட்பமானது. அதேசமயம் திட்பமானது. அது எந்த அறிவுசார்ந்த வாதங்களாலும், நிருபணங்களாலும் தன் நிலைபாட்டை மாற்றிக் கொள்ள முடியாதது. அதை பொருட்படுத்தாதது.

“கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும் 
கந்தனே உனை மறவேன்….”

என்று பரவச மனநிலையிலேயே ஒரு பிசிறும் இல்லாமல் பின்தொடர்வது! அது தான் நம்பும் ஒன்றிற்காக தன்னைத்தானே முழுமையாக அர்பணிப்பது. சர்வபரித்தியாகத்திற்கும் சித்த மாயிருப்பது. எந்த மதமோ, குலமோ பாகுபாடு பாராதது!

கல்லோ, கதிரவனோ, மரமோ, விலங்குகளோ, ஊர்வனவோ, பறப்பனவோ… அனைத்திலும் தெய்வத்தைக் காண்பது.

தமிழ்நாட்டில் ‘குலதெய்வம்’ என ஒவ்வொரு குடும்ப மரபிற்குமான தெய்வவழிபாடு உள்ளது. இந்த குலதெய்வம் சாமிகளில் பலரும் வாழ்ந்து மறைந்தவர்களே! நாட்டார் தெய்வங்கள், தமிழ்மண்ணின் சாமிகள் எனப்படும் கண்ணகி, இசக்கியம்மன், நல்லதங்காள், பாப்பாத்தி, கருப்பாயி, சுடலைமாடன், மதுரைவீரன்… இவர்களின் கதை என்ன? இவர்களெல்லாம் ரத்தமும், சதையுமாக பல மனிதர்களையும் போல குற்றங்கள், குறைகளோடு வாழ்ந்து மறைந்தவர்களே…!

ஒருவர் எவ்வளவு படித்திருந்தாலும், பதவிகளில் இருந்தாலும், அந்தஸ்து பெற்றிருந்தாலும், அயல்நாடுகளில் வாழ்ந்தாலும் தங்கள் குலதெய்வ வழிபாட்டை மறப்பதில்லை. அந்த சாமிகளின் கதை எவ்வளவு அவலமானதாக, சோகமயமானதாக இருந்தாலும் நம்பிக்கை சிதைவதில்லை. இது தான் பக்தியின் இயல்பு!

காரணம் ஒருவர் யாரை அல்லது எதை வழிபடுகிறார் என்பதை விடவும், அப்படி வழிபடும் போது அவருக்கு கிடைக்கும் உணர்ச்சி நிலை, உருவாகக்கூடிய உன்னதமான மனநிலை தான் அவருக்கு வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையை, பிடிமானத்தை ஏற்படுத்துகிறது. இந்த நம்பிக்கையும், பிடிமானமும் ஏற்பட்ட பின்பு அவர் நிச்சயம் பகுத்தறிவு கண்கொண்டு தான் வழிபடும் இறையை ஆராய முற்படுவதில்லை. மாறாக அதனோடு ஐக்கியப் படுவதில் தான் பேரார்வம் கொண்டவராக இருப்பார்.

பக்தி என்ற உன்னதமான விஷயத்தை கொண்டு பல்வேறு ஆதாயம் தரும் அணுகுமுறைகள் நடக்கலாம். பணத்திற்கான, செல்வாக்கிற்கான ஒரு கருவியாகவும் பலர் இதை பயன்படுத்தலாம். ஆனால் இதெயெல்லாம் பக்தர்கள் உணராமலில்லை. எனினும் இதனால் மனமாச்சரியங்கள், துவேஷங்கள் ஏற்படாதவண்ணம் சமூகமானது ஒரு இணக்கமான சூழலை பேணவிரும்புகிறது. அவரவர் வினையின் பலனை அவரவர் அனுபவிக்காமல் தப்பமுடியாது. ஆகவே, நம்மை நாம் சரியாக வைத்துகொள்வதற்கான ஒரு கருவியாக பக்தியை, இறைநம்பிக்கையை கைகொள்ளவேண்டும் என்பதே பெரும்பாலான கோடானகோடி பக்தர்களின் மனநிலையாக உள்ளது.Image result for ஆண்டாள்

பகுத்தறிவாளர்கள் பக்தர்களுக்கு எதிரியல்ல. பக்தியின் பெயரால் நடக்கும் மூடநம்பிக்கைகளையும். சமூக அநீதியையும் எதிர்ப்பவர்களே பகுத்தறிவாளர்கள். பக்தி வசப்பட்ட மனிதனை கடந்த காலங்களில் ஆதிக்க சக்திகள் தவறாக வழிநடத்தியுள்ளன. அதனால் உடன்கட்டை, பால்யவிவாகம், சாதி ஆதிக்கம், சாதிபாகுபாடு, பெண்களுக்கு எதிரான அநீதி, போன்றவை நிகழ்ந்தன. அனைவருக்கும் கல்வி, சமத்துவத்திற்கான போராட்டம் போன்ற விஷயங்களில் பகுத்தறிவாளர்கள் தலையிட்டு இருக்காவிட்டால் இன்று இந்த அளவுக்கு, சமூகம் முன்னேற்றம் கண்டிருக்கவாய்ப்பில்லை.

சகமனிதனான பக்தன் மீது கொண்ட அக்கறையினால் தான் ராஜாராம் மோகன்ராய் தொடங்கி பெரியார் ஈறாக பலர் கடும் எதிர்ப்புகளையும் மீறி மூடநம்பிக்கைகளை கேள்விக்குள்ளாக்கினார். ஆகவே, பகுத்தறிவாளர்களை பகைவர்களாக சித்தரிக்கும் முயற்சிகளுக்கும் பக்தர்கள் இறையாகக்கூடாது!
பக்த்தறிவாளர்களின் பார்வையை பக்தர்கள் பரிசிலனைக்கு உரியதாக கருதலாம் அல்லது புறக்கணித்துவிட்டுச் செல்லலாம்.
அப்படி ஒருவர் பரிசிலனைக்கு எடுத்துக் கொளவதன் மூலம் ஏதோ ஒரு அறியாமையிலிருந்தோ. ஆபத்திலிருந்தோ கூட விடுபடும் வாய்ப்பு அமையலாம். ஆனால் இதனால் பகுத்தறிவாளர்கள் அடையக்கூடிய ஆதாயம் ஏதுமில்லை. அவர்களின் பேச்சை புறக்கணிக்கப்பதாலும் பகுத்தறிவாளர்கள் இழப்புதற்கு ஏதுமில்லை.
ஆனால், பகுத்தறிவாளர்களுக்கு எதிராக பக்தர்களை கொம்பு சீவி விடுபவர்களுக்கு நிறைய உள்நோக்கங்கள் உள்ளன.
பக்தி நெஞ்சம் யாரையும் பகையாய் கொள்ளாது என்பதற்கு பாரதிபாடலே உதாரணம்.

தின்னவரும் புலி தன்னையும் அன்போடு
சிந்தையிற் போற்றிடுவாய் – நன்நெஞ்சே
அன்னை பாராசக்தி அவ்வுருவாயினள்
அவளைக் கும்பிடுவோம் நன்செஞ்சே!

பகுத்தறிவாளர்களுக்கும் பாரதியிடமே விளக்கம் பெறுவோம்.

உண்மையின் பேர் தெய்வமென்போம் – அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக்கண்டோம்.

ஒரு மக்கள் சமுதாயமானது சமச்சீரோடு இயங்குவதற்கு பெருமளவு பக்தர்களும், சிறிதளவு பகுத்தறிவாளர்களும் எப்போதும் இருந்துகொண்டே இருப்பார்கள்!


வருந்துகிறேன்: ஆண்டாள் கட்டுரை குறித்து வைரமுத்து

 11th January 2018     

vairamuthu

‘தமிழை ஆண்டாள்’ என்ற எனது கட்டுரையில் அமெரிக்க இண்டியானா பல்கலைக் கழகத்தின் ஆய்வு நூலில் சொல்லப்பட்டிருந்த ஒரு வரியைத்தான் நான் மேற்கோள் காட்டியிருந்தேன்.

அது எனது கருத்தன்று. ஓர் ஆய்வாளரின் தனிக்கருத்து.

ஆளுமைகளை மேன்மைப்படுத்துவதே இலக்கியத்தின் நோக்கமேயன்றி சிறுமை செய்வதன்று. அதற்கு இலக்கியமே தேவையில்லை.

ஆண்டாளைப் பற்றி அந்தக் கட்டுரையில் என்னால் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளெல்லாம் ஆண்டாளின் பெருமைகளையே பேசுகின்றன என்பதை அனைவரும் அறிவர். எவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று; புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்.

– வைரமுத்து


தினமணி வருந்துகிறது!

தமிழுக்கு உரமூட்டிய தகுதிசால் முன்னோர்களை வளரும் தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்கிற உயரிய எண்ணத்துடன்தான் ‘இலக்கிய முன்னோடிகள்’ குறித்த கட்டுரைகள் ‘தினமணி’யில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. இந்தக் கட்டுரைகளின் வாசிப்பும் அதன் தொனியும் எத்தகையவை என்பதை இளம் தலைமுறையினர் அறிவதற்காகவே, முதல்நாள் கவிஞர் வைரமுத்து வாசிக்க அடுத்த நாள் ‘தினமணி’யில் கட்டுரை வெளியாகிறது.

கவிஞர் வைரமுத்துவின் ‘தமிழை ஆண்டாள்’ கட்டுரையை ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த இராஜபாளையத்தில் அரங்கேற்றியதன் காரணமே, ஆண்டாளின் பெருமையை தூக்கிப் பிடிக்க வேண்டும், அவரது தமிழ் ஆளுமை உரக்க ஒலிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான்.

கவிஞர் வைரமுத்து தனது உரையின் தொடக்கத்திலேயே ஆண்டாள் அவதரித்த மண்ணைத் தொட்டு வணங்குவதாகக் குறிப்பிட்டே தொடங்கினார். ஆண்டாள் குறித்து உயர்வானவற்றைப் பதிவு செய்த அவரது கட்டுரையில் அமெரிக்க ஆய்வையும் சுட்டிக்காட்டியது தவறு என்கிற கருத்து முன்வைக்கப்படுகிறது. அந்தக் கருத்தை தமிழர்களின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான் தனது நோக்கமே தவிர, அந்தப் பதிவின் மூலம் யாரையும் புண்படுத்துவது நோக்கமல்ல என்று அவர் விளக்கம் அளித்திருக்கிறார். அந்தப் பதிவு பலருடைய உணர்வுகளை புண்படுத்தியதற்காக வருத்தமும் தெரிவித்திருக்கிறார்.

‘தினமணி’ நாளிதழைப் பொறுத்தவரை தமிழையும் ஆன்மிகத்தையும் ஒருசேர தூக்கிப் பிடிக்கும் நாளிதழ். இந்தக் கருத்து “தினமணி’யில் வந்திருக்க வேண்டாம் என்கிற பலருடைய ஆதங்கம் புரிகிறது. தவறுதான் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆண்டாளை தமிழ் தெய்வமாக, பக்தி இலக்கியத்தின் உச்சமாக, வணக்கத்திற்குரிய அன்னையாக ‘தினமணி’யும் கருதுகிறது.

கவிஞர் வைரமுத்து இது குறித்து விளக்கம் அளித்து வருத்தம் தெரிவித்துவிட்டாலும்கூட, ‘தினமணி’யின் மூலம் அந்தக் கருத்து பதிவாகி இருக்கிறது என்பதால் வாசகர்களுக்கும் ஆன்மிக அன்பர்களுக்கும் வருத்தம் தெரிவிப்பதிலோ, மன்னிப்புக் கோருவதிலோ எங்களுக்கு சற்றும் தயக்கம் இல்லை. ‘தினமணி’ வருந்துகிறது!

– ஆசிரியர்

“ஆண்டாள் தேவதாசியாக இருந்திருந்தால் அது அந்த காலகட்டத்தில் மானக்கேடு அல்ல, அரிய கெளரவம்”.

Published by Vijithaa on 2018-01-12

கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து தனது உரையில் ஆண்டாளை தவறாக விமர்சித்ததாக பா.ஜ.கவினர் மற்றும் இந்து மதத்தை சேர்ந்த சிலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியானா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திர மாலிக் என்ற ஆய்வாளர் ஆண்டாள் என்ற பாத்திரம் “திருவரங்கத்திலேயே வாழ்ந்து  மடிந்த ஒரு தேவதாசி” என்று குறிப்பிட்டுள்ளதை தனது உரையில் கவிஞர் வைரமுத்து சுட்டிக் காட்டுகிறார்.

இந்த கருத்துக்கு தான் தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா ஆவேசமாக பேசி வருகிறார். அதுமட்டுமல்லாமல் பல இந்துமத ஆர்வலர்கள் வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் தனது கருத்தை பிரபல நடிகை கஸ்தூரி தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் ஆண்டாளை யாரும் அரசியலாக்க வேண்டாம். அது ஆண்டாளுக்கு செய்யும் அநீதி என குறிப்பிட்டுள்ளார்.

 

“பண்டைய இந்து மதம் சார்ந்த நாகரிகங்களில் தேவதாசி என்பவள் கடவுளுக்கு மட்டுமே கடமைப்பட்டவள். ஆணுக்கு அடங்கி அடிபணிய தேவையில்லாத மிக உன்னத சமூக அந்தஸ்தையும் மரியாதையும் பெற்றவள். பண்டைய கிரேக்கத்திலும் ‘vestal virgins ” உண்டு.

ஆண்டாள் தேவதாசியாக இருந்திருந்தால் அது அந்த காலகட்டத்தில் மானக்கேடு அல்ல அரிய கெளரவம்.

கோவிலுக்கு மட்டுமே தொண்டாற்றிய பல கலைஞர்கள் காலப்போக்கில் நலிந்துவிட்டார்கள். தேவதாசி குலம் தெருவுக்கு வந்துவிட்டது.

எனினும் தேவர் அடியாள் என்றால் விபச்சாரி என்ற கருத்து வேரூன்றியது 1950க்களுக்கு அப்பால்தான். தேவர் அடியார் என்றால் கெட்ட வார்த்தை என்று பேசுபவருக்கு இந்து சமய சமூக வரலாறு சரியாக தெரியவில்லை என்றுதான் கூறவேண்டும்.

இதை சொன்னால் உடனே எனக்கும் தேவதாசி, விபச்சாரி போன்ற பட்டங்கள் சூட்டுவார்கள். நீ உத்தமியா? என்று ஏசுவார்கள். என் ஜாதியை அலசுவார்கள்.

ஏன்? என்றால், இங்கு பெண் பேசுவதே பெருங்குற்றம். உண்மையை ஆராய்ந்து சொல்வது ஊர்மேய்வதற்கு ஒப்பு. மெய்ப்பொருள் காண்பது ஒழுக்க குறைவு. தமிழை நேசிப்பதும் கலையை விரும்புவதும் களவாணித்தனம். சினிமாக்காரி மதத்தையோ தமிழையோ பற்றி வாயை திறப்பது தேசத்துரோகம்.

21ஆம் நூற்றாண்டில் இன்னும் நம்மை இறுக்கி பிடித்திருக்கும் பெண்ணடிமை, ஜாதி தளைகளை ஒரு குழந்தை அனாயாசமாக வென்றதே அன்று !! அந்த சூடிக்கொடுத்த சுடர்க்கொடி வைணவர்களுக்கு மட்டும் தாயார் அல்ல, வைரகவிஞர்களுக்கும் தாயார்தான். ஆண்டாளை யாரும் அரசியலாக்க வேண்டாம். அது ஆண்டாளுக்கு செய்யும் அநீதி.


வைரமுத்து,ஆண்டாள்


 andal

வைரமுத்து ஆண்டாளின் சாதி குறித்துச் சொல்லியிருந்ததை ஒட்டிய விவாதம் இணையச்சூழலிலும் அரசியல்களத்திலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. வைரமுத்து முழுமையான மன்னிப்பு கோரியிருப்பதனால் அது இப்போது ஓய்ந்துவிட்டிருக்கும். இருப்பினும் என் எண்ணங்கள் சிலவற்றைச் சொல்லவேண்டியிருக்கிறது. வைரமுத்து சார்ந்த ஒரு விவாதத்தில் இருப்பதனால் புறக்கணித்துச் செல்வது எவ்வகையிலும் முறையாகாது.

ஆண்டாள் குறித்து மிகமிகக்குறைவான சான்றுகளே நமக்குக் கிடைக்கின்றன. பெரும்பாலும் பெரியாழ்வார் பாடல்களில் இருக்கும் சிலவரிகள். அவை அவர் பெரியாழ்வாரின் மகள் என்றும் பெருமாளுக்குத் தன்னை முற்றாக ஒப்புக்கொடுத்தார் என்றும் மட்டுமே காட்டுகின்றன. அவர் குறித்த புராணம் அவ்வரிகளிலிருந்து உருவாகி வந்திருக்கலாம்.

இவற்றிலிருந்து ஆண்டாளின் சாதி குறித்து எதையும் நாம் ஊகிக்க முடியாது. ஆகவே அதுகுறித்த ஊகங்கள் எல்லாமே தனிநபரின் சமூகப்பார்வை சார்ந்தவை மட்டுமே. மேலைநாட்டு அறிஞர்கள் சிலரும் அவர்களை ஒட்டி எழுதும்  டி.செல்வராஜ், சோலை சுந்தரப்பெருமாள் போன்ற சிலரும் பக்தி இயக்கக் காலகட்டத்தை சமூக மோதல்களின் காலகட்டமாக காண விழைகிறார்கள். ஆகவே அனைத்து இடங்களிலும் மேல்கீழ்சாதி, வர்க்கப்பிரிவினை சார்ந்த மோதல்களைக் கண்டடைகிறார்கள். அதன் விளைவாகவே எளிதாக ஆண்டாள் தேவதாசியாக இருக்கலாம் என்பதுபோன்ற ஊகங்களைச் சென்றடைகிறார்கள்

நான் பக்தி காலகட்டத்தை மாபெரும் ஒருங்கிணைப்பின் காலகட்டம் என நினைப்பவன். இந்துமதம் உருவாகத் தொடங்கிய காலம் முதலே நிகழ்ந்துவரும் தொகுப்பு – ஒருங்கிணைப்பு முறைமை அதன் உச்சத்தை அடைந்தது பக்தி இயக்கத்தின்போதுதான். ஆகவே முரண்பாட்டை கண்டுபிடிக்கும் நோக்கை நிராகரிக்கிறேன். ஆனால் அதைச் சொல்பவர்களின் தரப்பைப் புரிந்துகொண்டு, அதற்கும் கருத்துவிவாதத்தில் ஓர் இடமுண்டு என எடுத்துக்கொண்டு மறுக்கிறேன்.

இரண்டு வினாக்கள் உள்ளன. ஒன்று, ஆண்டாள் பாடல்களிலுள்ள பாலியல்கூறுகளும், ஆண்டாளின் கதையும் ஒருவகை பாலியல்சுதந்திரத்திற்கான குரல்களாக எடுத்துக்கொள்ளப்பட முடியுமா? ஆண்டாளை அக்கால சாதிய,ஆணாதிக்க அமைப்புக்கு எதிரானவராக கட்டமைக்கமுடியுமா?

இல்லை என்பதே என் புரிதல். ஆண்டாளின் கதை என்பது சங்ககாலம் முதல் தமிழ்மண்ணில் இருந்துவந்த நப்பின்னை என்னும் தொன்மக் கதாபாத்திரத்தின் இன்னொருவடிவம் மட்டுமே. தொன்மங்கள் எப்போதும் ஒரு தொடர்ச்சியிலேயே உள்ளன. சிறிய மாறுதல்களுடன் மீண்டும் மீண்டும் வெவ்வேறு கதைமாந்தர்களாக வெளிப்படுகின்றன. ஆண்டாளின் கதையை மீராபாய் வரை சிறிய மாறுதல்களுடன் காணமுடியும்.

ஆகவேதான் ராஜாஜி ஆண்டாள் என்னும் கதாபாத்திரமே பெரியாழ்வாரின் புனைபெயராக இருக்கக்கூடும் என்று எண்ணினார். ஆனால் பெரியாழ்வார் கவிதைகளை விட உணர்வுநிலை, மொழியாட்சி இரண்டிலும் மிக உச்சத்தில் நிற்பவை ஆண்டாளின் கவிதைகள் என்பதனால் அது ஏற்கத்தக்கது அல்ல

ஆண்டாளின் கவிதைகளிலுள்ள பாலியல்கூறுகளை மீறல் என்று சொல்லமுடியுமா? தமிழிலும் வடமொழியிலும் உள்ள ஒரு குறிப்பிட்ட வகையான கவிதைசார்ந்த அழகியல்தான் ஆண்டாளிடம் வெளிப்படுகிறது. தமிழின் நீண்ட அகத்துறைப்பாடல்களின் மரபில் ஆண்டாளை மிகச்சரியாகப் பொருத்தலாம். ஆண்டாளுடையது எவ்வகையிலும் மீறலோ மிகையோ அல்ல. முற்றிலும் மரபுசார்ந்த மனநிலையே ஆகும்.

கவிதையில் கவிஞர் வெளிப்படுத்தும் தன்னிலை என்பது அக்கவிதைக்குள் திகழும் ஒரு உருவகம் மட்டுமே. மரபான சொற்களில் சொல்லப்போனால் ஒரு ஃபாவம். அதை அவருடைய நேரடி உணர்வுவெளிப்பாடு என்று கொள்வதைப்போல கவிதைநிராகரிப்பு வேறில்லை. இது இன்றைய நவீனக்கவிதைக்கும் பொருந்தும். கவிதை என்பது அக்கவிஞரின் உச்சகட்ட உணர்வுநிலை ஒன்றை மட்டுமே காட்டுகிறது, அவருடைய ஆளுமையை அல்ல.ஐம்பதாண்டுகளாக நவீனக்கவிதைக்குள் பேசப்பட்டுக்கொண்டே இருக்கும் ஒரு கருத்து இது.

அதேசமயம் ஆண்டாள் உட்பட பெண்பால் புலவர்கள் அனைவரையும் தமிழ்ச்சூழலில் பெண்களின் இடம்சார்ந்து ஒட்டுமொத்தமாக ஆராய்வதும் மதிப்பிடுவதும் எல்லாம் இயல்வதே. பெண்ணியல்பு எப்படி அவற்றில் வெளிப்படுகிறது என விமர்சகர்கள் கூறலாம். புதிய அவதானிப்புகள் எழலாம்.நவீன இலக்கிய ஆய்வின் வழிமுறை அது. அந்தக்கருத்துக்கள் அக்கவிஞர்களின் கவிதைகள் இயங்கும் ஆழ்நிலையை உள்வாங்கி செய்யப்பட்டவை என்றால் இலக்கிய உலகில் ஏற்கப்படும். வெறும் சமூகவியல் அரசியல் ஊகங்கள் என்றால் உரிய எள்ளலுடன் கடந்துசெல்லப்படும்.

பக்திக்குள் பல்வேறு வகையில் வெளிப்படும் அகத்துறை உணர்வுநிலைகளை காமம் என வகைப்படுத்திப் புரிந்துகொள்வது போல அபத்தமான  வாசிப்பு பிறிதில்லை. இது ஆண்டாளுக்கு மட்டும் அல்ல நம்மாழ்வாருக்கும் ஜெயதேவருக்கும் பொருந்துவதே. செயின்ட் ஜானின் இறைக்காதல்நிலை சார்ந்த பாடல்களுக்கும் குணங்குடி மஸ்தான் சாகிபின் மனோன்மணிப் பாடல்களுக்கும் பொருந்துவதே

கவிதைக்குரிய ஓர் அழகியல்மரபு, ஒரு தரிசனநிலை இது. இதை உலகியலுக்கு அப்பால் செல்ல முடியாத மேலைநாட்டு ஆய்வாளர்கள் புரிந்துகொள்ளாமலிருக்கலாம். அவர்களிடம் அதைச் சொல்வதே நம் கவிமரபின் மனநிலையாக இருக்கவேண்டும். அவர்கள் சொன்னவற்றிலிருந்து மேலும் கீழே சென்று பார்ப்பது அல்ல. டி.செல்வராஜும் வைரமுத்துவும் கொண்டுள்ள மனநிலை என்பது அடிப்படையில் இந்த அன்றாடக் கீழ்மைநோக்கு கொண்டுள்ளது. அது ஆண்டாளின் கவிதைகளுக்கு மட்டுமல்ல அத்தகைய மனநிலையில் எழுதப்படும் அத்தனை கவிதைகளுக்கும் இழுக்கு சேர்ப்பதுதான்

ஆனால், இது சமகாலத்தின் ஒரு போக்கு. கவிதையை, வரலாற்றை எளிய உலகியல்சூத்திரங்களால், அன்றாட அரசியலால், மேலோட்டமான கொள்கைகளால் வகுத்துக்கொள்ள முயல்வது. இவர்களின் முன் கவிதை ஒருவகை சிறுமைகொள்கிறது. இங்கே கவிதையை அறிந்தவர்கள் எல்லா நிலையிலும் அதற்கு எதிராகவே போராடிக்கொண்டிருக்கிறார்கள். வைரமுத்துவுக்கு எதிரான இலக்கியவாதிகளின் ஒவ்வாமை என்பது இந்த சிறுபோக்கிற்கு எதிரானதுதான். வைரமுத்துவை ஞானபீடத்திற்குப் பரிந்துரை கடிதம் அளித்த தமிழகத்துப் பாரதிய ஜனதாக் கட்சித்தலைவர்களுக்கு இந்த எதிர்ப்பைப் புரிந்துகொள்ள இயலாது.

கடைசியாக, ஆண்டாளை ஏன் தேவதாசி என ஊகிக்கக் கூடாது? அவ்வாறு ஓர் ஊகம் ஓர் அறிஞருக்கு இருக்கும் என்றால் அது ஒரு தரப்பு. மறுக்கப்பட வேண்டியது. தேவதாசி என்பது அன்றைய சமூகப்படிநிலையில் தாழ்ந்த ஒன்று அல்ல. ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் மணந்து பட்டத்தரசியாக்கிய பெண்மணி கூட தேவதாசி மரபைச் சேர்ந்தவர் என ஆய்வாளர் சொல்வதுண்டு. அது எவ்வகையிலும் ஆண்டாளை இழிவுசெய்வதல்ல. மெய்யாகவே தேவதாசி என்றாலும் அவர் கவிதைக்கு அணுவிடையும் குறைவு வருவதுமில்லை. தேவதேவன் சொல்வதுபோல உலகியலை கவிதை மதிப்பிடுகிறதே என்பதற்காக உலகியலைக்கொண்டு கவிதையை மதிப்பிடுவது பெரும்பிழை

ஆனால் அவ்வாறு ஆண்டாளின் ஆளுமையை, வாழ்க்கையை வகுத்துக்கொள்வது ஆண்டாளின் கவிதையின் உள்ளடக்கத்தையும் உணர்வுநிலைகளையும் கண்டிப்பாக இழிவுசெய்வதே. ஆண்டாளின் கவிதைகளில் உள்ள காதல்பித்து நிலையை தேவதாசியின் வாழ்க்கைப்பின்புலத்தில் வைத்துப்பார்ப்பது அக்கவிதையை கீழ்மைப்படுத்திப் புரிந்துகொள்வதேயாகும். தேவதாசி வாழ்க்கையின் இயல்பான அம்சமாக அந்தக் காதல்வரிகளை கொண்டாலும் சரி, அவ்வாழ்க்கையை மீறும்பொருட்டு எழுதப்பட்டவையாகக் கொண்டாலும் சரி

ஆண்டாளின் மிகச்சிறந்த வாசகரான ஜெயகாந்தன் ஓர் உரையாடலில் கூறினார், ஆண்டாள் பாடும் அந்நிலை உடலில் அமைதல் அல்ல, உடலை உதறிச்செல்லுதல் என. ‘உடல்துறப்பே மெய்மைக்கான வழி’ என் அவர் கூறியதை நினைவுகூர்கிறேன். உடலெனும் காமத்தை அல்ல, உடலை எரித்து மெய்ப்பொருளாகிய எல்லையின்மையைத் தழுவும் விழைவையே அக்கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. அதிலுள்ள மீப்பெரும் தாபம் என்பது எந்த  மெய்யுசாவியும் கொள்ளும் பரிதவிப்புதான். இங்கு இவ்வாறு அமைந்தபடி எங்கும் எவ்விதமும் உள்ள முழுமையை அடைவதற்கான எழுகையும் ஏக்கமும்..  காதல்பித்து என்பது அதன் மொழிபுமுறை. அது மிகமிகத் தொன்மையான ஒரு ஃபாவநிலையும்கூட  .

வைரமுத்துவின் உரையிலுள்ள குறைபாடு மெய்ப்பொருள்தேடும் பெருங்கவிதைக்கு முன் சின்னஞ்சிறு உள்ளத்துடன் நின்றதே. இதே உளநிலையுடன் அவர் பிரமிளையோ தேவதேவனையோ அணுகியிருந்தாலும் அது இதேபோல கண்டிக்கப்படவேண்டிய பெரும்பிழையே. ‘மன்னிக்கவும் வைரமுத்து, உங்களுக்குரிய இடமல்ல இது’ என்பதே அவருக்குரிய பதில்.

ஆனால், இதையொட்டி வைரமுத்து மீது பொழியப்படும் வசைகளும் அவர் எதிர்கொள்ளும் மிரட்டல்களும் கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டியவை. இங்குள்ள மதவாதிகள் சிலர் அவர்கள் எப்படி மதஇலக்கியத்தை அணுகுகிறார்களோ அப்படித்தான் அத்தனைபேரும் அணுகவேண்டும் என்றும் இல்லையேல் தங்கள் உணர்வுகள் புண்படுகின்றன என்றும் கொள்ளும் ஆவேசமும் அதன்பொருட்டு வெளிப்படுத்தும் ஆபாசமான வசைகளும் மிகமிக ஆபத்தானவை. எதிர்காலத்தில் இங்கே சுதந்திர சிந்தனையே சாத்தியமில்லை என்ற நிலையை உருவாக்குபவை.

ஏனென்றால் இங்குள்ள இலக்கியங்களில் பெரும்பகுதி மதம்சார்ந்த இலக்கியமே. இங்குள்ள வரலாறு பெரும்பகுதி மதம்சார்ந்ததே. மதத்தை இவர்கள் வரையறைசெய்துள்ளபடியே அனைவரும் அணுகவேண்டுமென இவர்கள் சொல்வார்கள் என்றால் அதன்பின் இங்கே சிந்தனையே இருக்கமுடியாது. இவர்கள் இங்கே கொண்டுவர எண்ணுவது தாலிபானிய அரசியலை என்றால் அதை எதிர்த்து கடந்தே ஆகவேண்டும்.

ஆண்டாள் உட்பட இந்துமதநூல்கள் இலக்கியப் படைப்புகளும்கூடத்தான். ஆண்டாள் தமிழிலக்கியத்தின் உச்சங்களில் ஒன்று.மதத்தின் திருவுரு மட்டும் அல்ல.அழகியல்சார்ந்து இலக்கணம் சார்ந்து, வாழ்க்கைநோக்கு சார்ந்து அவருடைய பாடல்கள் இலக்கியச்சுவைஞர்களாலும் அறிஞர்களாலும் பலகோணங்களில் ஆராயப்படும். நாளை உருவாகிவரும் பலவகையான இலக்கியக்கோட்பாடுகள் அவர் படைப்புகள் மேல் போடப்பட்டு ஆராயப்படும். வெவ்வேறு கணிப்புகளும் ஊகங்களும் முன்வைக்கப்படும். வெவ்வேறு உலகப்படைப்புகளுடன் ஒப்பிடப்படும். கம்பராமாயணம் போன்ற அத்தனை நூல்களும் அவ்வாறுதான் வாசிக்கப்பட்டன, வாசிக்கவும்படும்.

மதநம்பிக்கையாளர்கள் அவற்றை மதநோக்கில் வாசிக்கலாம். ஓர் அறிவுத்தரப்பு என்னும் நிலையில் நின்று பிற தரப்புகளை முழுமூச்சாக எதிர்க்கலாம். அது அவர்களின் உரிமை. ஆனால் பிறர் அவ்வாறு வாசிப்பது தங்கள் மதநம்பிக்கையை புண்படுத்துகிறது என தெருவிலிறங்கி வசைபாடுவார்கள் என்றால் அவர்கள் வாழ்வது நாகரீக உலகில், ஜனநாயகத்தில் என்று அவர்களுக்கு நினைவுபடுத்தவேண்டியிருக்கிறது.

இதற்கு இன்னொரு பக்கமும் உள்ளது. இந்தியாவில் வேறெங்குமில்லாத அளவுக்கு தமிழகத்தில் மரபும்,செவ்விலக்கியங்களும் இழிவுபடுத்தப்பட்டுள்ளன. எந்த ஆய்வுநோக்கும் இல்லாமல் வெறும் காழ்ப்பைக்கொட்டும் அணுகுமுறைகள் இங்கே ஓங்கி ஒலித்தன, ஒலிக்கின்றன. இவர்கள் நாவில் இந்துமதத்தின் பெருங்கவிஞர்களும் ஞானிகளும் இழிவுபடுத்தப்படாத நாளே இல்லை. அதற்கு எதிர்வினையாகவே இன்று இந்த மறுபக்க மூர்க்கம் உருவாகி வந்துள்ளது.

இன்று ஆண்டாள் குறித்த ஒரு போகிறபோக்கிலான குறிப்பு வரும்போது ஓரளவு சமநிலை கொண்டவர்கள்கூட ஏன் பதைப்படைகிறார்கள் என்றால் இந்த ஒற்றைவரி தற்குறிகளான தமிழ் அரசியல்பேச்சாளர்களின் வாயில் எப்படி முடைநாற்றமெடுத்து வெளிவரும் என்பதற்கான அனுபவப்புரிதல் அவர்களுக்கு உள்ளது என்பதனால்தான். இப்போதே இணையத்தில் நாம் காண்பது அந்தக் கீழ்மையைத்தான். ஆனால் அதற்கு எதிர்வினையாக எழும் குரல்களில் உள்ள கீழ்மை மேலும் குமட்டல் ஏற்படுத்துகிறது. இக்குரல் இந்துக்களுடையதல்ல, இந்து மெய்மரபின் தரப்பும் அல்ல. முதல்தரப்பைப்போலவே இதுவும் தெருமுனை அரசியலின் ஓசை மட்டுமே.

இருதரப்பிலிருந்தும் எழும் வெறுப்புக்கூச்சல்களுக்கு நடுவே நின்றுகொண்டு பேசவேண்டியிருக்கிறது. ஒருபக்கம் கருத்துரிமையை ஒடுக்கும் மதம்சார்ந்த இறுக்கத்திற்கு எதிராக. கூடவே மரபையும் அறிவியக்கத்தையும் சிறுமைசெய்யும் அரசியல்கீழ்மைக்கு எதிராக. இன்றுமுதன்மையாகக் கண்டிக்கவேண்டியது வைரமுத்துவுக்கு எதிராகச் சொல்லப்படும் கீழ்த்தரமான வசைகளையே. (ஜெயமோகன்)

http://www.jeyamohan.in/105607#.WnJNB66nGM8

வெள்ளி, 3 ஏப்ரல், 2020

மார்கழியில் ஆண்டால் மார்க்கச்சை


உலகப் பணக்காரர்களைத் தரம் பிரித்துப் பட்டியலிடும் பணியைச் செய்துவரும் ஃபோர்ப்ஸ் ஏடு வெளியிடும் செய்திகளை வெளியிட்டு மகிழும் இந்திய ஏடுகள் வசதியாக ஒன்றை மறந்துவிடுகின்றன. மறைத்து விடுகின்றன. மிகப்பெரிய பணக்காரன் திருப்பதியில் இருக்கிறான் என்பதைத் தெரிவிக்கவில்லை. அதனால் ஃபோர்ப்ஸ் ஏடு அதை வெளியிடுவதில்லை. முதலாளிகளைக் கடுமையாகப் பேசுவதற்காகவே பிறந்தவர்கள் அல்லது பிறப்பிக்கப்பட்டவர்கள் என்று பேசும் இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் இதைப் பற்றிப் பேச மாட்டார்கள். காரணம் அந்தப் பணக்காரன், கடவுள் என்று கற்பிக்கப்பட்டிருக்கிறான். இவர்களுக்கு அதனிடம் அச்சம். கல் முதலாளிபற்றி வாய் திறக்க மாட்டார்கள். அது கிடக்கட்டும்.

திருப்பதியில் இருக்கும் உலக மகா பணக்காரன் பாலாஜி வெங்கடாசலபதி  _ முதல் ஏதும் போடாமலே கோடிக்-கணக்கான கோடிகள் சம்பாதித்துக் கொண்டிருக்கிறான். பணத்தைச் செலவு செய்ய வழி தெரியாமல் கல்லையெல்லாம் தங்கத்தால் மூடிக்கொண்டிருக்கிறான். மதில் சுவரையெல்லாம் தங்கத்தால் கட்டிக்கொண்டு இருக்கிறான்.

குவைத் மன்னர்களும் சவூதி மன்னர்களும் தங்கள் அரண்மனைகளில் தங்கக் குளியலறை, தங்கத் தண்ணீர்க்குழாய், தங்கத்தட்டுகள், தங்க நாற்காலி என்று வைத்திருப்பவர்கள் என்று கண்டனம் செய்பவர்கள் திருப்பதியானைப் பற்றிப் பேசுவதில்லை. பிரான்சு நாட்டின் லூயி மன்னர்களின் ஆடம்பரம்பற்றி எழுதுபவர்கள், வர்சேல் அரண்மனையின் ஆடம்பரங்கள்பற்றி எழுது-பவர்கள்கூட தங்கக்கட்டில்பற்றி எழுதுவார்களே தவிர, ஏழுமலையானைப்பற்றி எழுதுவதில்லை.

காரணம் இந்த உலக மகா பண முதலாளி கடவுளாக்கப்பட்டிருக்கிறான்.

இருந்தாலும் இவன் கடன்காரனாம். தன் கல்யாணத்திற்காகக் கடன் வாங்கினானாம். (அப்படி ஒரு கல்யாணம் இவனுக்குத் தேவையா?) கடனுக்கான வட்டியைத் தருவதற்காகத்தான் இவனுக்குக் கோடிக்கணக்கான கோடி ரூபாயைக் கொட்டிக் குவிக்கிறார்களாம்! உலக மகாபணக்காரனுக்கே கடன் கொடுத்த பணக்காரன் குபேரனாம்! இந்த கந்துவட்டிக்காரன் பிரபஞ்ச மகா பணக்காரன் என்று ஏன் ஃபோர்ப்ஸ் எழுதுவதில்லை? இவர்கள் ஏன் எழுதக் செய்வதில்லை? விசாரிக்க வேண்டும். சரி, ஏழுமலையான் விவகாரத்திற்கு வருவோம்.

இவ்வளவுப் பணம் இருந்தும் இவனை எழுப்ப ஓர் அலாரம் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற அறிவே கிடையாது. இவனைத் தூக்கத்திலிருந்து எழுப்பக் குரல் கொடுப்பதற்கு என்றே சம்பளம் கொடுத்து ஆள்களை வைத்து இருப்பதால் அவர்கள் இந்தத் தூங்குமூஞ்சியைப் பாட்டுப்பாடி எழுப்புகிறார்கள். இந்தப் பாட்டைத்தான் சுப்ரபாதம் என்று வடமொழியில் கூறுகிறார்கள். இசைத்தட்டு, இசைநாடா என்று வந்திருக்கும் இதனை எல்லாக் கோயில்களிலும் மார்கழி மாதத்தில் ஒலிக்கச் செய்கிறார்கள்.

நமக்கும் தூக்கம் கெட்டுவிடும். மார்கழி மாதக் குளிரில் கதகதப்புக்குத் துணிப்போர்வை, உயிர்ப்போர்வையுடன் தூங்கிக் கொண்டிருக்கும்-போது இக்கூச்சல் எரிச்சலைக் கிளப்பும்.

இந்த எரிச்சல் இனிமேல் ஏழுமலையானுக்கு ஏற்படாதாம். சுப்ரபாதம் இந்த மார்கழி மாதத்தில் ஏழுமலைக்கோயிலில் பாடப்பட மாட்டாதாம். பதிலுக்குத் திருப்பாவை, திருவெம்பாவை பாடப்படுமாம். நப்பின்னைக் கொங்கைமேல் கைவைத்துக் கிடந்தவனைத் தமிழில் பாடி எழுப்பப் போகிறார்களாம். தமிழ்த் தேசியங்களுக்குப் பக்திப் பிரவாகத்தோடு, பாஷைப் பிரவாகமும் பொங்கி ஓடும்! பாஷை, பிரவாகம் இரண்டுமே வடசொல், தமிழ்ச்சொல் அல்ல! நமக்குத் தெரியும். தமிழுக்கு அடுத்துத் தேசம், தேசியம் என்று சொல்லிக் கொள்பவர்களுக்காக எழுதவேண்டி நேரிட்டது.

நம் தமிழர்கள் க்ஷமிக்க வேணும்!

நப்பின்னையின் கொங்கைகளைப்பற்றி மட்டுமே ஆண்டாள் எனும் பெண் பாடியிருப்பதாக யாரும் கருதிக் கொள்ளாதீர்கள். நம் இலக்கியவாதிகள் மாபெரும் சபைகளிலே சிலாகித்துப் பேசும் பக்தி இலக்கியம் பலவற்றையும் பாடுகிறது. நாயகன் _ நாயகி பாவம் என்றெல்லாம் இவர்கள் வர்ணிக்கும் ஆண்டாளின் விரகதாபம் (காம வெளி என்று தமிழில் கூறலாம்) எந்த எல்லையைத் தொட்டது என்பதை ஆண்டாளின் கவிதை மூலமே பார்க்கலாமா?

அவரைப் பிராயம் தொடங்கி
ஆதரித் தெழுந்த என் தடமுலைகள்
துவரை பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுதேன்...

என்கிறாள். பெரிய மார்பகங்கள் அவனுக்கே என உறுதிபடக் கூறுகிறாள். தமிழில், ஆண்டாள் அந்த உறுப்பைக் குறிப்பிட்டு விட்டாலும் நான் எழுத வெட்கப்பட்டு மார்பகம் எனக் குறித்துள்ளேன். இடக்கரடக்கலுக்குப் பிற-மொழிகள் வசதியாக வாய்த்திருக்கின்றன.

ஊனிடை ஆழிசங்கு உத்தமர்க்கென்று உன்னித்து எழுந்த என் தடமுலைகள்

என்று அந்த உறுப்புகள் வளர்ந்த கதையைக் கூறுகிறாள்.

முலைகள் எனத் தம் கவிதைத் தொகுப்புக்குப் பெயர் வைத்த கவிஞரைத் தம் பாண்பாட்டுப் பாதுகாப்பு எழுதுகோல்களால் குத்திச் சீண்டிய மாரல் போலீஸ்காரர்கள் (ஒழுக்கக் காவலர்கள்) இதற்கு ஏன் மூச்சு விடுவதில்லை? ஓ! இது கடவுளின் பேரால் நடக்கிறதா?

சாயுடைவயிறும் என் தடமுலையும்
திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்
தரணியில் தலை புகழ் தரக்கற்றியே
என்ன வகை ஆசை பாருங்கள், திருமணம் ஆகாத பெண்ணுக்கு! மேலேயும் கீழேயும் அவன் தடவிக் கொடுக்க வேண்டுமாம்! ஏன் தடவிக் கொடுக்க வேண்டுமாம்?
முத்தன்ன மெம்முறுவல் செய்யும் வாயும்
முலையும் அழகழிந்தேன் நான்
இவன் தடவிக் கொடுக்காததால், அந்த உறுப்புகளின் அழகே அழிந்து விட்டனவாம்! அழகைப் பெறத் தடவிக் கொடுக்க வேண்டியது தேவைதானே!

பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப்
புணர்வதோர் ஆசையினால்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதூகலித்து
ஆவியை ஆகுலம் செய்யும்...
என் அகத்து இளம் கொங்கை விரும்பித்தாம் நாள்தோறும்
பொன்னாகப் புல்குவதற்கு என்புரிவுடமை செய்யுமினோ

ரங்கமன்னாரோடு உடல் உறவு கொள்ள வேண்டுமாம்! அந்த ஆசை மனதில் மேலோங்கி வளர்ந்துவிட்டதால், மார்பகம் வருந்துகிறதாம், குதூகலிக்கிறதாம், உயிரை எடுக்கிறதாம், ஆகவே எதையாவது செய்து நாள்தோறும் நாராயணனைப் புணர்வதற்கு உத்தரவாதம் கொடுங்களேன் என்று பெண் (ஆண்டாள்) கேட்கிறாள்! இது பக்தியா? ஆபாச ஆசைகளின் வெளிப்பாடு அல்லவா?

கொங்கைமேல் குங்குமத்தின் குழம்
பழியப் புகுந்து ஒரு நாள்
தங்குமேல் என் ஆவி தங்குமென்று உரையீரே
மார்பகத்தில் பூசப்பட்டிருக்கும் குங்குமம் குழைய, அழியத் தொட்டு அழுத்தினால் ஒழிய என் ஆவி உடலில் தங்காது என்பதை அரியிடம் கூறுங்களேன் என்ற வேண்டுகோளைப் பக்தர்களிடம் விடுக்கிறாள்!

குற்றமற்ற முலை தன்னைக் குமரன்
கோலப் பனைத் தோளோடு
அற்ற குற்றம் அவைதீர
அணைய அமுக்கிக் கட்டீரே
என்ற விபரீதமான வேண்டுகோளை வைக்கிறாளே! இவளுடைய மார்பகத்தோடு அவனுடைய தோள்கள் எப்போதும் சேர்ந்திருக்கும் வகையில்  சேர்த்துக் கட்டுங்களேன் என்று கேட்கிறாளே! வெட்கங்கெட்டு இப்படிப் பேசுகிற பெண்ணை யாராவது கேட்டிருக்கிறீர்களா? இந்நாட்டின் பக்தி வேகம், மோகமாகி மாறி இப்படியெல்லாம் புலம்பச் சொல்கிறதே!

அதனால்தான் பெரியார், பக்தியைவிட ஒழுக்கம் முக்கியம் என்றார்.

ஆண்டாளின் வேண்டுகோளை ஆண்டவன் நிறைவேற்றவில்லை. பக்தர்களும் கூட்டி வைக்கவில்லை கோவிந்தனோடு! என்ன செய்வாள் அவள்?

உள்ளே உருகினை வேனை
உளவோ, இவளோ என்னாத
கொள்ளைக் கொள்ளிக் குறும்பனைக்
கோவர்த்தனனைக் கண்டாக்கால்
கொள்ளும்பயன் ஒன்றில்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில்
எறிந்தென் அழலைத் தீர்வேனே

எனப் பாடிவிட்டாள்! இவ்வளவு ஆசை வைத்திருக்கும் என்னை இருக்கிறாளா, போய்விட்டாளா எனக்கூடப் பார்க்காத இந்த கோவர்த்தனனை (அவன் கண்ணில் கொள்ளி வைக்க...)ப் பார்த்தேன் என்றால்.... எதற்கும் பிரயோசனப்படாத இந்த மார்பகங்களை வேரோடு (மரவள்ளிச் செடியின் வேரைக்கிழங்கு என்று சொல்கிறோம்) பிடுங்கி அவன் மேலே விட்டெறிந்து, என் எரிச்சலைத் தீர்த்துக் கொள்வேன் என்றே கூறிவிட்டாள். பாவம், காமம் என்ன பாடுபடுத்துகிறது பாருங்கள்!

அதிவீரராமனின் கொக்கோகப் பாடல்களைப் படித்துத் தெரிந்து கொண்டு பாடியிருப்பாளோ? வாத்ஸ்யாயனின் காமசூத்திரத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆண்டாள் காலத்திலேயே வந்துவிட்டதோ? இவ்வளவு அசிங்கமாக, ஆபாசமாகப் பாடிய ஆண்டாளைத்தான் ரங்கமன்னார் கல்யாணம் பண்ணிக் கொண்டாராம்! (திருவில்லிப்புத்தூரில் கடவுளின் பெயர் ரங்கமன்னார்) என்ன பாடுபட்டாரோ? என்ன பாடுபடுத்தினாரோ?

கர்ப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ
மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கிறேன் சொல்லாழி வெண்சங்கே

எனக் கேட்டவள் ஆண்டாள்! மாதவனின் வாய் நாறுமா? கர்ப்பூரம் போல் மணக்குமா? எனக்குச் சொல் என்று சங்கைக் கேட்கிறாள்! இந்தச் சங்கு (பாஞ்சசன்யம்) கிருஷ்ணன் தன் வாயில் வைத்து ஊதும் சங்கு. ஆகவே அதற்கு அவன் வாயின் நாற்றம் தெரியும் அல்லவா? பல்லாயிரம் பெண்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கடவுள் வாயில் வைத்துக் கொள்கிறாராம் சங்கை! ஆகவே இந்தச் சங்கை கெட்ட (வெட்கங்கெட்ட) கேள்வியாம்! விரிவுரை வேறு தருகிறாள் ஆண்டாள்!

பெண்ணின் வருத்தம் அறியாத
பெருமான் அறையின் பீதக
வண்ண ஆடைகொண்டு எந்தன்
வாட்டம் தணிய வீசீரே!
ஆராஅமுது அணையான்தன்
அமுதவாயில் ஊறிய
நீர்தான் கொணர்ந்து புலராமே
பருக்கி இளைப்பைத் தீரீரே!
நெடுமால் ஊதி வருகிற
குழலின் தொளைவாய் நீர்கொண்டு
குளிர முகத்துத் தடவீரே!
அவன் மார்பு அணிந்த வனமாலை
மார்பிற் கொணர்ந்து புரட்டீரே
அவன்
அடிபட்டான் பொடிதான் கொணர்ந்து பூசீர்காள்!
என்றெல்லாம் பாடுகிறாள் ஆண்டாள்!

கண்ணன் இடுப்புத் துணியால் வீசிறுங்கள். அவன் வாய் எச்சிலை எனக்குக் குடிக்கக் கொடுத்து என் தாகம் தணியுங்கள். அவன் புல்லாங்குழலிலிருந்து வழியும் எச்சிலால் என் முகத்தைத் துடையுங்கள். (சிவப்பழகு கிரீமா அது?) அவன் மார்பில் போட்டிருந்த மாலையை என் மார்பில் போட்டுப் புரட்டி எடுங்கள். அவன் காலடி மண்ணால் என் உடல் மீது பூசுங்கள். (லக்மே பவுடரோ?)

மனிதர்களின் உளவியல்பற்றி ஆய்ந்து சிக்மண்ட் ஃபிராய்டு எழுதிய நூல், உலகின் போக்கை மாற்றிய முப்பெரும் நூல்களில் ஒன்று என்பார்கள் அறிஞர்கள். அந்த நூலில் அவர் விளக்கிய உளவியல் ஆசைகள், கோளாறுகள் பலவகை. தம் மனதின் ஆசைகளை ஆண்களும் பெண்களும் வெளிப்படுத்தும் செயல்வகைகளை விவரித்-திருப்பார். அவையெல்லாம் ஆண்டாளின் பாடல்களில் இடம் பெற்றுள்ளன. அதிகமாக ஆண்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள்தான் வெளிவரும். பெண்கள் வெளிப்படுத்துவதில்லை. வெளிப்படுத்துவதைச் சமூகம் அனுமதிக்கவில்லை. அத்தகைய மரபு மீறிய செயலை ஆண்டாள் எழுத்து வடிவிலேயே செய்திருக்கிறாள். பக்தியின் பெயரால் அது சகித்துக் கொள்ளப்படுகிறது. அனுமதிக்கப்-படுகிறது.

இந்த காமக் கவிதைகளைக் கோதைத் தமிழ் என்கிறார்கள். பகவத் கீதை என்கிறார்கள். காமக்கொடூரன் கண்ணன் பாடியது பகவத் கீதையாம். காமவெறியள் பாடியது பகவதி கீதையாம். ஏகாதசியன்று இவளுக்கு 108 புடவைகள் போர்த்துகிறார்கள். அவள் பாடிய முலைகள் உள்பட முழுவதும் மூடப்படுமோ?

ஆனாலும் இவளை வெம்பல் எனப் பாடியுள்ளார் மணவாள மாமுனி. பாடலைப் படியுங்கள்.

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தஞ்செயலை விஞ்சிநிற்கும் தன்மையளாய் _ பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளை பக்தியுடன் நானும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து.

பிஞ்சிலே பழுத்தது வெம்பல். அதனை யாரும் தின்பதில்லை தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால் திருப்பாவை, நாச்சியார் வாய்மொழி என்று தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார்கள்.

இம்மாதிரியான தமிழ்ப் பாடல்களைப் பாடிச் சங்கீதத்தை வளர்க்க வேண்டும் என்று அண்மையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த தினமணி நாளேட்டின் ஆசிரியர் பைத்தியநாதன்கூட பேசியிருக்கிறார். தமிழில் இவர் வைத்தியநாதன். வடமொழியில் (வ எழுத்து இல்லாததால்) பைத்தியநாதன். (இந்தச் சொல்லுக்கும் அவரது செயல்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று நம்புங்கள்)

புரிந்த மொழியில் இந்த வகைக் கடவுள் பாடலைப் பாடுவதற்குப் பதிலாக, புரியாத மொழியில் கடவுளைப் பற்றிப் பாடலாம் என்பதாக, வருத்தப்பட்டுப் பெரியார் கூறினார்.  தமிழ் இசைக்காக 1931இல் தனி மாநாடு கூட்டியவர் பெரியார். 1941இல் அண்ணாமலை அரசர், ஆர்.கே.சண்முகம், கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை அணைத்துப் போரிட்டு வென்றவர் பெரியார்! அவர் இப்படிக் கூறிடும் வகையில் உள்ள தமிழ்ப் பாடல்களை விடுத்து நல்ல பாடல்களை எழுதலாமே! ஏற்கெனவே அப்படி எழுதப்-பட்டிருக்கும் புரட்சிக்கவிஞரின் பாடல்களைப் பாடலாமே!

பாரதியாரின் மனைவி தன் காலம் முடிவதை உணர்ந்த நிலையில் தம் மகளை அழைத்துப் பாடச் சொல்லி, அதனைக் கேட்டவாறே இறந்தார் என்ற செய்தி தெரிவிக்கும் இன்னொரு செய்தி. செல்லம்மாள்பாரதி கேட்டு, அவர் மகள் பாடிய பாடல் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய பாடல் துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா

அப்பேர்ப்பட்ட இனிய, பொருள் பொதிந்த இசைப் பாடல்களை நிறைய எழுதிக் குவித்தவர் புரட்சிக் கவிஞர்.

அவற்றைப் பாடாமல் தவிர்த்தவர்கள் உண்டு. அவற்றைப் பாட மறுத்தவர்களும் உண்டு. அவற்றைத் துக்கடா என்ற தலைப்பில் இசைத்தவர்களும் உண்டு. மார்கழி மாதம் என்பதால் இதனையும் எழுதவேண்டி வந்தது.

-  உண்மை இதழ், 1-15.1.13

திங்கள், 2 மார்ச், 2020

ஆண்டாள் பற்றி தந்தைபெரியார்....


சு-ம:- அப்படியானால் ஒரு சந்தேகம். ஆனால் நீர் கோபித்துக் கொள்ளக்கூடாது.

பு-ம:- கோபம் என்ன? சந்தேகத்திற்குக் கோபிக்கலாமா?

சு-ம:- உங்கள் வீட்டு தோட்டத்தில் ஒரு மல்லிகைச் செடியின் அடியில் ஒரு குழந்தை அப்பொழுதுதான் பிறந்ததாகக் காணப்படக் கூடியது அழுது கொண்டு கிடக்கக் கண்டீர்களேயானால் அதைப்பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்?

பு-ம:- என்ன நினைப்பது? யாரோ பெற்றுத் திருட்டுத்தனமாய்க் கொண்டு வந்து போட்டு விட்டு போய் விட்டார்கள் என்றுதான் நினைப்பேன்.

சு-ம:- யார்? எப்படிப்பட்டவர்கள் பெற்றார்கள் என்று நினைப் பீர்களா?

பு-ம:- யாரோ “ திருட்டு கர்ப்பம் ” அதாவது விதவையோ, கல்யாணமாகாத பெண்ணோ புருஷன் ஊரில் இல்லாமல் தேசாந்திரம் போனவருடைய மனைவியோ,சோரத்தனமாய் கர்ப்பம் ஆகி, அதைப் பெற்று நமது தோட்டத்தில் கொண்டு வந்து போட்டுவிட்டாள் என்று தான் நினைப்பேன்.

சு-ம:- சரி. இதுதான் நல்ல பகுத்தறிவு என்பது.

பு-ம:- அதென்ன? அப்படிச் சொல்லுகிறீர்கள்? இதுகூடவா மனிதனுக்குத் தெரியாது? இந்தப்படி அல்லாமல் பின்னை என்னமாய் நினைக்க முடியும்? மல்லிகைச் செடியா பிள்ளை பெறும்? அல்லது ஆகாயத்தில் இருந்து வந்து விழுமோ? ஒரு மூடன் கூட இதற்கு மாறாக சொல்ல முடியாது.

சு-ம:- தாங்கள் சொல்லுவது நிரம்பவும் சரி. வேறு விசேஷம் ஒன்றும் இல்லை. மல்லிகைச் செடியின் கீழ் இருந்தால்தான் அப்படிச் சொன்னீர்கள். ஒரு சமயம் துளசிச் செடியின் கீழ் கிடந்தாலோ?

சு-ம:- எங்கும் அப்படித்தானே கிடக்கும். துளசிச்செடிக்கு மாத்திரம் என்ன கொம்பா முளைத்திருக்கும்? அல்லது அது கர்ப்பமாகி பிள்ளை பிறக்குமோ? இதென்ன சிறுபிள்ளைகள் மாதிரி கேட்கின்றீர்களே?

சு-ம:- இல்லை, ஏதோ ஒரு புராணத்தில் துளசிச்செடி அடியில் ஒரு குழந்தை கிடந்தது. அதைக்கடவுள் அவதாரமாய்க் கருதினார்கள். பிறகு அது கடவுளே ஆகிவிட்டது. இப்போதும் அது கடவுளாயிருக்கின்றது என்று பார்த்ததாக எனக்கு ஞாபகம். ஆதலால் அந்த புராணங்களை யெல் லாம் தாங்கள் நம்புவதுண்டா? அல்லது நம்பும்படி காலnக்ஷபம் செய்வ துண்டா? என்று தெரியலாம் என்பதாக ஆசைப்பட்டுத்தான் தங்களைக் கேட்டேன்.

பு-ம:- நீர் சு.ம. என்பது தெரிந்தும் உம்மிடம் நான் பேசியது சுத்தத் தப்பு. புராணத்தை சந்தேகப்படுகின்ற-தர்க்கம் செய்கின்ற-நாஸ்தீகர்களு டைய முகாலோபனமே செய்யக்கூடாது என்ற பெரியவாள் இதற்காகத் தானே சொல்லி இருக்கின்றார்கள். சு.ம.என்றாலே நாத்திகம் தானே. உம்மோடு பேசிய குற்றத்திற்காக நான் ஒரு முட்டாள் ஆக வேண்டியதும் நியாயம் தானே?

சு-ம:- இப்படிக் கோபித்துக் கொள்ளலாமா? நீங்கள் சொன்னதை உங்கள் வாயைக் கொண்டு, சொன்னதைக் கொண்டு உங்களை என்ன சொல்லுகின்றீர்கள் என்று தான் கேட்டேனே ஒழிய நான் ஏதாவது குற்றமான வார்த்தை சொன்னேனா? அல்லது என் அபிப்பிராயமாக ஏதாவது சொன் னேனா? ஏன் இவ்வளவு கோபம்?

பு-ம:- கோபம் ஒன்றும் இல்லை எனக்கு வேலையிருக்கின்றது. கொஞ்சம் அவசரம். நான் போய் விட்டு வருகின்றேன் (என்று சொல்லிக் கொண்டே நழுவிவிட்டார்.)

குடி அரசு - உரையாடல் - 06.09.1931
(சுயமரியாதைக்காரனுக்கும் புராணமரியாதைக்காரனுக்கும் சம்பாஷணை - சித்திரபுத்திரன் )

நன்றி: தோழர் வாலாசா வல்லவன் &
Arulmozhi Kathirvel.

ஞாயிறு, 16 டிசம்பர், 2018

மார்கழி மாதம் - கொக்கோகப் பஜனை!

ஞாயிறு, 16 டிசம்பர் 2012
மார்கழி மாதம் இன்று பிறந்து விட்டது. கோயில்களில் எல்லாம் திருப்பாவைப் பாடல்கள் கத்த ஆரம்பிக்கும் (உச்சநீதிமன்ற ஆணையை யும்மீறி கூம்பு ஒலி பெருக்கியையும் பயன்படுத்து வார்கள்). ஆண்டாள் என்ற ஒரு பக்தை கட வுளையே புருஷனாக ஆக்கிக் கொள்ள வரித்துக் கொண்டு அவனோடு புணர வேண்டும் என்று விரகதாபம் எடுத்து அலைந்து புலம்பிய கேவலம் இது!
கடவுளாகிய கண்ணன் மனைவியின் மார் பகத்தில் வாய் வைத்துக் கிடந்தான் என்றெல் லாம் பாடுகின்ற ஒருபெண்மணிதான் வைணவத் தில் தலை சிறந்த பக்தைப் பெருமாட்டி!
குத்துவிளக் கெரிய
கோட்டுக்கால் கட்டிலின்மேல்
மெத்தென்ற பஞ்ச
சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல்
நப்பின்னை கொங்கைமேல் வாய்
வைத்துக் கிடந்த மலர் மார்பா!
என்று பாடுகிறார் ஆண்டாள்.
இதுகூட பரவாயில்லை. இதே  ஆண்டாளே நாச்சியார் திருமொழி என்று பாடியிருக்கிறாள்.
முத்தன்ன வெண்முறுவல்
செவ்வாயும், முலையும்
அழகழிந்தேன் நான்
புணர்வதோர் ஆசையினால் - என்
கொங்கை கிளர்ந்து குமைத்து
குதூகலித்து ஆவியை ஆகுலம்
செய்யும் அங்குயிலே
என்று பாடியுள்ள கேவலத்தை என்ன சொல்ல!
நல்முத்துக்கள் போன்ற பற்களைப் பெற்றி ருந்தேன். சிவந்த வாயையும், மார்புகளையும் பெற் றிருந்தேன். கண்ணனாகிய காதலன் என்னை வந்து புணராத காரணத்தால் என் அழகுகள் எல்லாம் கெட்டு விட்டன என்று காமவெறி பிடித்தவளாய்க் கதறுகிறாள். கொக் கோகம் பிச்சை வாங்க வேண்டும் போங்க...
இந்தக் கேவலத்தை ஆபாசத்தைக் கண்டு சகிக்காமல் வெட்கப்பட்டதாலோ என்னவோ, பழுத்த வைணவரான திரு. ராஜகோபாலாச்சாரி யார் (ராஜாஜி)  ஆண்டாள் என்னும் பக்தையே இருந்ததில்லை என்று போட்டாரே ஒரு போடு - பார்க்கலாம்.
ஆண்டாள் என்னும் ஸ்திரி இருந்ததே இல்லை. நாலாயிரதிவ்வியப் பிரபந்தத்தில் ஆண்டாள் பாடியதாகச் சொல்லப்படும் பாசுரங் கள் அவர் பாடியவை அல்ல.
பெரியாழ்வார் என்னும் ஆழ்வார் சில பாசுரங்களைப் பாடி, அப்பாசுரங்களை ஆண்டாள் என்னும் ஒரு பெயரால் வெளிப்படுத்தினார் என்று திரிவேணி இதழில் (1946 செப்டம்பர்) எழுதி விட்டார்.
பக்தி அப்படியே மனதைக் கட்டுப்படுத்து கிறதாம். கடவுளைக் கணவனாக ஆக்கிக் கொண்டு அவனோடு கட்டிப் புரள வேண்டும் - புணர வேண்டும் என்பதுதான் மனதை ஒருமுகப்படுத்தும்  யோக்கியதையா?
இந்த மாதம் பூராவும் இந்தக் கேவலமான ஆபாசத் தெருப் புழுதிகளைத்தான் பஜனையாகப் பாடப் போகிறார்கள்.  இதுபற்றி எல்லாம் எங்களைத் தவிர யார் அம்பலப்படுத்தப் போகிறார்கள்?
வெட்கம்! மகா வெட்கம்!!
(குறிப்பு: நாம் இப்படி எழுதுகிறோம். அண்ணா பெயரையும், திராவிடப் பெயரையும் வைத்துக் கொண்டுள்ள அண்ணா தி.மு.க.வின் நமது எம்.ஜி.ஆர் ஏடு திருப்பாவை, திருவெம்பாவை தூக்கிப் பிடித்து எழுதுகிறது)
விடுதலை 16.12.12

புதன், 31 ஜனவரி, 2018

ஆண்டாள் தாசி-- முழு விளக்கம்

ஆண்டாள் தாசி-- முழு விளக்க ஆதாரபூர்வமான கட்டுரை... விளக்கம் வேண்டுவோர் முழுதும் படிக்கவும்... பார்ப்பனீய புரட்டுகளை புரிந்துகொள்ளவும்...

கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ஒரு கட்டுரை ‘தினமணி'யில் (8.1.2018) வெளிவந்தது. ஆண்டாள் யார் - அவர் எத்தகையவர் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டைக் கொடுத்து எழுதியிருந்தார்.

Andal was herself a Devadasi who lived and died in srirangam temple

ஆண்டாள் என்பவர் தேவதாசியாக சிறீரங்கம் கோவிலில் வாழ்ந்து மரணமடைந்தாள் என்பது இதன் பொருள்.

இதனைச் சொல்லுவது கவிஞர் வைரமுத்தல்ல - அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக் கழகம் சுபாஷ் சந்திரமாலிக் என்பவர் எழுதி வெளியிட்ட  Indian Movement some aspects of dissent, protest and reform  நூலில் இது காணப்படுகிறது என்று கவிப்பேரரசு ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டிய பிறகு, அவர்மீது விழுந்து பிராண்டுவது ஏன்?

1978 இல் இந்த நூல் வெளியாகி உலகம் பூராவும் பரவிவிட்டதே! 40 ஆண்டுகளாக என்ன செய்தார்கள்?

திராவிடர் கழகத் தலைவர் சொன்னதுபோல, ‘ஊருக்கு இளைத்தவர்தானா இந்தப் பிள்ளையார் கோவில் ஆண்டி?'

இதில் மிக முக்கியமான நோக்கத்தக்க கருத்துண்டு. ஆண்டாள் தேவதாசிஎன்றால், இவர்களுக்கு ஏன் கோபம் குபீர் என்று கொப்பளிக்கவேண்டும்?

இந்து மதத்தில் தேவதாசி என்பது கெட்ட பொருள் கொண்டது அல்லவே! அந்த சொல்லிலேயே பொருள் இருக்கிறதே - தேவர்களுக்குத் தாசி என்று.

தேவதாசியாக இருப்பது இந்து மத சம்பிரதாயப்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட புனிதமான அம்சம்தானே!

சென்னை மாநில சட்டப்பேரவையில் நீதிக்கட்சி ஆட்சியின்போது டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களால் கொண்டு வரப்பட்ட தேவதாசி ஒழிப்பு மசோதாவுக்கு எதிராக வாயாடி சத்தியமூர்த்தி அய்யர்வாள் ஆகாயத்துக்கும், பூமிக்கும் பூணூலை முறுக்கிக் கொண்டு தாவிடவில்லையா? இந்து மத சம்பிரதாயத்தில் தலையிடுவதா? தேவர்களுக்குத் தாசியாக இருப்பது புனித செயலே என்று ஆர்ப்பரித்தாரா இல்லையா?

அன்று சட்டசபையில் நடந்தது என்ன?

திரு.சத்தியமூர்த்தி அவர்கள் விபச்சார ஒழிப்பு மசோதாவைப்பற்றிப் பேசுகையில், ‘‘பெண்கள் எவ்வளவுதான் விபச்சாரம் செய்தாலும், அதனால் யாருக்கு எவ்வளவு துன்பம் நேரிட்டு வந்தாலும் விபச் சார ஸ்திரீகளும் நம்மவர்களேயானதால் அவர்கள் விஷயத்தில் அனுகூலமாயிருக்கவேண்டுமென்று சிபாரிசு பேசினதும், ‘தேவதாசித் தொழில் போனால் மதம் போய்விடும்' என்றதும், ‘இன்று தேவதாசித் தொழிலை நிறுத்தினால், திரு.ராமசாமி நாயக்கர் நாளை அர்ச்சகத் தொழிலை நிறுத்த சட்டம் செய்ய வந்துவிடுவாரே என்று ஆத்திரப் பட்டதும் ‘மித்திரன்' தேவதாசி மசோதாவால் தேவதாசித் தொழிலுக்குக் குந்தகம் ஏற்பட்டுவிட வில்லை என்று தேவதாசிகளுக்கு வியாக்கியானம் செய்து மறுபடியும் அதே தொழிலில் இருக்க உற்சாகத்தையும், தைரியத்தையும், ஆசையையும் ஊட்டுவதையும் பார்ப்பவர்களுக்கு நாட்டின் ஒழுக்கத் திற்கோ, சுயமரியாதைக்கோ, விடுதலைக்கோ இத் தேசீயப் பத்திரிகைகளும், ‘தேசீய வீரர்'களும் அனு கூலமாயிருப்பார்களா என்பது இவர்களுடன் யோக்கி யர்கள் வந்து வேலை செய்ய முடியுமா என்பதும் தானாகவே விளங்கும்.
(‘குடிஅரசு', 10.2.1929)

தேவதாசிக்கு வக்காலத்து வாங்கிய சத்தியமூர்த்தி அய்யர் இந்து இல்லையா? இதற்கு மன்னார்குடி ஜீயர்தான் பதில் சொல்லவேண்டும்.

‘‘தேவதாசியாக இருப்பது ஆண்டவனுக்குச் செய்யும் சேவையென்றும், அப்படி தாசியாக இருந்து சேவை செய்தால் அடுத்த ஜென்மத்தில் புண்ணியம் கிடைக்கும் என்றும் திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர் வாள் இங்கு பேசினார். அப்படியானால், எங்கள் சமூகத்தவர்களே இதுவரை தாசியாக இருந்து புண் ணியத்தை அனுபவித்தது போதும் - போதும்! இனிமேல் சத்தியமூர்த்தி அய்யர்வாளைச் சேர்ந்தவர்கள் தேவ தாசியாக இருந்து அந்தப் புண்ணியத்தை அனுபவிக் கட்டும் - எங்களுக்கொன்றும் ஆட்சேபணை இல்லை'' என்று சத்தியமூர்த்தியிடம் முகத்துக்கு முகம் மொத்தி னாரே டாக்டர் முத்துலட்சுமி! வாயாடி சத்தியமூர்த்தி அய்யர் ஆயாடி என்று அடங்கிப் போய்விடவில் லையா?

சத்தியமூர்த்தி அய்யர்வாளின் இந்தக் கதையெல் லாம் காரைக்குடி அம்பிகளுக்குத் தெரியாதோ!

ஆண்டாள் தேவதாசி என்று சொல்லுவது இழிவு படுத்தக் கூடியது என்றால், இந்து மத சம்பிரதாயம் இழிவு என்பதை அவாளை அறியாமலேயே ஒத்துக் கொண்டதாக அர்த்தம்.

பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த நாட்டிய நடிகை ஸ்வர்ணமால்யா என்ற பார்ப்பனப் பெண் மகளிர் கல்லூரி விழா ஒன்றில் (30.7.2017) கடவுளின் மனைவி மார்கள், தேவதாசிகள் புனிதர்கள் என்று பேசினாரே!

இப்பொழுது கேள்வி எல்லாம் ஆண்டாளைக் காப்பாற்றப் போகிறாளா? அல்லது இந்து மதத்தைக் காப்பாற்றப் போகிறாளா? என்பதுதான்.

ஆண்டாளைக் காப்பாற்ற நினைத்தால், இந்து மதத்தில் தேவதாசி முறையை ஏற்படுத்திய இந்து மதத்தின் முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி குத்த தயாராகி விட்டார்கள் என்று பொருள்.

மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்பு என்று ‘தினமலரில்' இன்று ஒரு செய்தி வெளிவந்துள்ளது. தேவதாசி என்று ஆய்வு ஒன்றை மேற்கோள்காட்டி கவிப்பேரரசு எழுதியது கண்டு இவுர் எரிச்சல் அடைந்து நிதானமின்றி எழுதியுள்ளார். ஜீயர் கருத்துப்படி தேவதாசி என்பது இழிவானதாகும். ஆனால், மன்னார்குடி ஜீயருக்கு அவர் சார்ந்த மதத்தைப்பற்றிய அடிப்படை அறிவுகூட இல்லை என்பது நிதர்சனமாகத் தெரிகிறது.

மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் சுவாமிகளுக்கு அதே வைணவ மடத்தைச் சேர்ந்த மற்றொரு மடாதிபதி யோகி சிறீராமானந்த குரு (மஹா சிறீநாராயண மிஷன் கடனூர் அஞ்சல், விழுப்புரம் மாவட்டம், தொலைப்பேசி எண்: 9442464341) தேவதாசிகள்பற்றி சிலாகித்து எழுதி யதை எடுத்துக் காட்டினால், அவாளுக்குக் ‘குளிர்ச்சி யாக' இருக்கும் அல்லவா!

இதோ மடாதிபதி யோகி சிறீராமானந்த குரு பேசுகிறார்:

‘‘ஆகமங்கள் அனைத்துமே தேவதாசி பெண்களை ருத்திர கன்னிகை என்றே பெயரிட்டு அழைக்கிறது.

தேவதாசி பரம்பரையில் இரண்டு வகை உண்டு. முதலாவது வகை பதியிலார் என்பதாகும். இந்த வகையைச் சார்ந்த பெண்கள் மனிதர்கள் யாரையும் கணவனமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இறைவ னான மகாதேவனையே தனது பதியாக அதாவது கணவனாக ஏற்று வாழ்க்கையை நடத்துவார்கள். இதனால் இவர்களுக்கு நித்திய சுமங்கலிகள் என்ற பட்டமும் உண்டு.

ஏறத்தாழ தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்தணர்களைப் போலவே தேவதாசிகளும் ஆலய கருவறைக்குள் சென்று வந்தனர். இதற்கான ஆதாரங்கள் திருச்செந்தூர் சுப்ரமணியர் ஆலயத்தி லும், திருவாரூர் தியாகராஜர் ஆலயத்திலும் உள்ளன.

ஓர் ஆலயத்தில் பணிபுரியும் தேவதாசி இறந்து விட்டால், அவள் உடலை சாதாரண துணியால் மூட மாட்டார்கள். ஆலய மூல மூர்த்திக்குப் போற்றப்பட்ட புனித ஆடை மரியாதையுடன் கொண்டு வந்து  அவள் உடல்மீது போர்த்தப்படும். அன்று முழுவதும் ஆலய வழிபாடு நிறுத்தி வைக்கப்படும். இறுதி ஊர்வலத்திற்கு எடுத்துச் செல்லப்படும். அவளது உடல், கோவிலின் ராஜகோபுரத்தின் முன்னாள் சிறிதுநேரம் நின்றே மயானத்திற்குக் கொண்டு செல்லப்படும். சாதாரண மனிதர்களுக்குக் கிடைக்காத பெரும் பேறாகிய ஆலய நெருப்பு எடுத்துச் செல்லப்பட்டே அவள் சிதை எரியூட்டப்படும்!''

இவ்வளவுப் பிரமாதமாக இந்து மதக் கண் ணோட்டத்தில் ஒரு வைணவ மடாதிபதி சிலாகித்து தேவதாசிகள்பற்றிக் கூறும்போது, மன்னார்குடி ஜீய ராகட்டும், இந்துத்துவா பேர்வழிகளாகட்டும் ஏன் குதியாட்டம் போடுகிறார்கள்?

திராவிடர் கழகத் தலைவர், ‘‘ஆண்டாள் என்ற பாத் திரமே கற்பனையானது'' என்று ராஜாஜி சொன்னதை எடுத்துக் கூறியுள்ளாரே!
கவிஞர் வைரமுத்துவை காயும் கூட்டம் ராஜாஜியைக் கண்டிக்கத் தயார்தானா?

சொல்லப்போனால், ராஜாஜி கடைந்தெடுத்த வைணவர் ஆயிற்றே - ஆண்டாள்மீது அவருக்கு இல்லாத அக்கறையா இந்த அம்பிகளுக்கு?

ஆண்டாளை ஆவர்த்தனம் செய்யும் அட அய்யன்மார்களே, அய்யங்கார்மார்களே, பெண்ணான ஆண்டாள் பாடிய பாடலின் தரமென்ன? விரக தாபமெடுத்த ஒரு பெண்ணின் காமக் கூச்சலாக இல்லையா?

2009 ஆம் ஆண்டில் இராகவன் என்ற பார்ப்பனர், ஆண்டாள் ஒரு காமக்கிழத்தி (வெளியீடு கிழக்குப் பதிப்பகம்) என்று நூல் எழுதி வெளிவந்ததே - அப்பொழுதெல்லாம் இந்த அம்பிகள் எங்கே போனார்களாம்?

(ஆண்டாளின் காமக் குரோதப் பாடல்கள் பெட்டி செய்தி காண்க).

கவிப்பேரரசு எழுதியதோடு, பேசியதோடு விட்டி ருந்தால் அந்த அளவோடு முடிந்திருக்கும். பார்ப்பனர் கள் தேவையில்லாமல் சீண்டப் போய் அஸ்தி வாரத்தையெல்லாம் தோண்டக்கூடிய ஒரு நிலையை யல்லவா ஏற்படுத்தி விட்டார்கள்.

பார்ப்பான் படித்தவனே தவிர அறிவாளியல்ல என்று அண்ணல் அம்பேத்கர் காரணமில்லாமலா சொல்லுவார்?

பார்ப்பானுக்கு ஏது முன்புத்தி?

மற்றொரு கேள்விக்குத் தமிழர் தலைவர் வெகுநேர்த்தியாகப் பதில் சொல்லியுள்ளார்.

மதங்களுக்குச் சகிப்புத் தன்மை இல்லை என்பதற்கு எண்ணாயிரம் சமணர்களை, சைவர்கள் கழுவேற்றிக் கொன்றதை எடுத்துக் கூறியிருக்கிறார்.

கிறித்துவ மதத்தை எடுத்துக்கொள்ளலாம். உலகம் உருண்டை என்று சொன்ன கலிலியோ தண்டிக்கப் பட்டதுண்டு. கடவுள் உயிர்களைப் படைக்கவில்லை என்று கூறி பரிணாமத் தத்துவத்தைச் சொன்ன (Evolution) டார்வினுக்கு எவ்வளவு எதிர்ப்புகள்!

ஆனால், போப் ஜான்பால் ஃபோன்டிகால், அகாடமி

ஆஃப் சயின்ஸ்  என்ற அமைப்புக்கு அனுப்பிய செய்தி ஒன்றில், ‘டார்வினின் பரிணாம வளர்ச்சித்  தத்துவத் தினை அங்கீகரிக்கச் செய்கிறோம். டார்வின் கொள் கையைப் பள்ளிகளில் போதிக்கவேண்டும் என்று சொன்னாரே (‘The Hindu', 20.10.1996).

கலிலியோ சொன்ன உலகம் உருண்டை என்பதை யும் ஒப்புக்கொண்டவரும் (1992) இதேபோல் ஜான் பால்தான்.

ஒரு காலகட்டத்தில் செய்த தவறுக்காக வருத்தம் தெரிவித்து உண்மையை ஒப்புக்கொள்ளும் பக்கு வமும், பெருந்தன்மையும் கிறித்துவ மதத்திற்கு இருப்பதுபோல, எண்ணாயிரம் சமணர்களை சைவம் கழுவேற்றிக் கொடூரமாகக் கொன்றதே - அதற்காக சங்கராச்சாரியாரை வருத்தம் தெரிவிக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

புராணங்கள் என்றாலே புழுதி மேடுகள்தான். பூமியைப் பாயாகச் சுருட்டிக் கடலில் விழுந்தான் இரண்யாட்சதன் என்றும், மகாவிஷ்ணு வராக (பன்றி) அவதாரமெடுத்துக் கடலுக்குள் குதித்துப் பூமியை மீட்டான் என்றும், அந்தப் பூமிக்கும், பன்றிக்கும் காதல் ஏற்பட்டு, கலவியும் நடந்து நரகாசுரன் பிறந்தான் என்றெல்லாம் அறிவுக்குக் காயடிக்கும் கேவலமான மட்டமான மூடத்தனத்தை மய்யமாகக் கொண்ட தீபாவளியைக் கொண்டாடச் சொல்பவர்களும் அந்த நாளில் கங்கா ஸ்நானம் ஆயிற்றா? என்று கூறும் சங்கராச்சாரியார்களும் உழலும் ஒரு நாட்டில், ஒழுக்கத்தையும் அறிவையும்பற்றி உசாவலாமா? அப்படி உசாவினால், ‘அக்கிரமம், அக்கிரமம், நாத்திகம் பேசறாள்' என்று அம்பிகள் அலறுவார்கள் - அய்யோ பரிதாபம்!

ஆண்டாளை தேவதாசி என்று ஆதாரப்படி சொன்னதற்காக ஆவேசப்படுவோரே! காலம் காலமாக இந்து வேதங்கள், மனுதர்மம், கீதைப்படி பெரும்பாலான பார்ப்பனர் அல்லாதாரை சூத்திரர்கள் என்றும்,  வேசி மக்கள் என்றும் (மனுதர்மம் அத்தியாயம் 8; சுலோகம் 415) என்று எழுதி வைத்துள்ளீர்களே!

அதன் அடிப்படையில் சூத்திரர்கள் அர்ச்சகராகக் கூடாது என்று உச்சநீதி மன்றம்வரை சென்று முட்டுக்கட்டைப் போடுகிறீர்களே - நியாயமாக 97 சதவிகித மக்கள் விழித்துக் கொண்டால், உங்கள் நிலை என்னாகும் என்று சிந்தித்ததுண்டா?

குறிப்பு: வைரமுத்து அவர்களைக் கடித்துக் குதறும் அய்யன்மார்கள், அந்த ஆய்வுரைக்கு ஏற்பாடு செய்த - அந்தக் கட்டுரையை வெளியிட்ட ‘தினமணி' ஆசிரியர் வைத்தியநாதன்பற்றி ஒரு வார்த்தை பேசாதது ஏன்? உரசாதது ஏன்? ஏன்? அதுதான் அவாளுக்கே உரிய முழு குத்தகைக்கு எடுக்கப்பட்ட ‘இனப்பற்று!'

கொக்கோகம் தோற்றோடும் பாடலுக்குச் சொந்தக்காரர் ஆண்டாள்!

ஆண்டாள் அருளிச் செய்த நாச்சியார் திருமொழியில் உள்ளபடி....

அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
ஆதரித் தெழுந்த என்தட முலைகள்
உன்னித் தெழுந்த என்தட முலைகள்
சாயுடை வயிறும் என் தட முலைகள்
துவரைப் பிரானுக்கே! ஊனிடை யாழி சங்கு உத்தமர்க்கே! என்று உருகித் தவிப்பாராம்!

ஏக்கத்தின் உருக்கத்தால் பாடும்போது:

முத்தன்ன வெண்முறுவல்
செவ்வாயும் முலையும்
அழகழிந்தேன் நான்!
புணர்வதோராசையினால் என்
கொங்கை கிளர்ந்து
குமைத்துக்
குதூகலித்து ஆவியை ஆகுலம்
செய்யும் அங்குயிலே!
கண்ணீர்கள்
முலைக்கு வட்டில் துளி
சோரச்சோர் வேனை காமத்தீயுள் புகுந்து
கதுவப்பட்டு இடைக்கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கு
இங்கிலக்காய்
நானிருப்பேனே!
என்னாகாத்திளங் கொங்கை
விரும்பித்தாம் நாள்தோறும்
பொன்னாகம் புல்குதற்கு
எனப் புரிவுடைமை
செப்புமினே!
கொங்கைமேல் குங்குமத்தின்
குழம்பழியப் புகுந்து
ஓர் நந்நாள்
தங்குமேல் என்னாவி
தங்குமென்று உரையீரே!
கொங்கைத் தலமிவை
நோக்கிக் காணீர்
கோவிந்தனுக்கல்லால்
வாயில் போகா!

(கொங்கைக்கும் செவ்வாயிற்கும் உறவு பற்றியது இது!)

காமப் பாதையில் கண்ணன் நாமம்
குற்றமற்ற முலைதன்னைக் குமரன்
கோலப்பணைத் தாளோடு
அற்றகுற்றமவைதீர அணைய
அமுக்கிக் கட்டீரே!

எப்படி அணைத்தல், அமுக்கல் வர்ணனைகள்! விரகதாபம் எடுத்த ஒரு பெண்ணின் காமப் பீறிடல்கள்தானே இவை?

கடவுளை தந்தை இடத்தில் வைத்துப் பூசிப்பவரை அறிவோம். கடவுளைத் தன் கணவனாக வரித்து அவனைப் புணர ஆசைப்படும் பக்தையைத் தூக்கிப் பிடிக்க ஜீயர்களே வருகிறார்களே!

இந்த வெட்கக்கேட்டை என்னவென்று சொல்லு வதோ!

‘ஆண்டாள்' கதை பொய் -
ஆச்சாரியார் கூறுகிறார்!

வைணவ மதத்தின் ஆழ்வார்களுள் ஒருவர் எனப் போற்றிப் புகழப் படுபவரும், ‘சூடிக் கொடுத்த நாச்சியார்' என்று கூறப்படுபவரும், மார்கழி மாதத்திலே ‘பஜனை என்ற பெயரால் பக்தர்களால் பாடப்பெறும் பாடல் களுக்கு உரிமை உடைய வர் என்று கூறப்படுபவருமான ‘ஆண்டாள்' என்ற பக்தையே கிடையாது என்று ராசகோபாலாச் சாரியார் கூறி இருக்கிறார்.

"ஆண்டாள் என்னும் ஸ்திரி இருந்ததே இல்லை. நாலாயிர திவ்விய பிரபந்தம் ஆண் டாள் பாடியதாகச் சொல்லப்படும் பாசுரங்கள் அவர் பாடியவை அல்ல. பெரியாழ்வார் என்னும் ஆழ்வார் சில பாசுரங்களைப் பாடி அப்பாசுரங்களை ஆண்டாள் என்னும் ஒரு பெயரால் வெளிப் படுத்தினார் என்று ‘‘திரிவேணி'' என்னும் ஆங்கில மாதப் பத் திரிகை யில் 1946ஆம் ஆண்டு செப் டம்பர் இதழில் ராச கோபா லாச்சாரியார் எழுதி யுள்ளார்.

ஆச்சாரியாரும் ஒரு வைணவர்தான். அவரே கூறிவிட்ட பிறகு வைணவப் பக்தர் கள், ஆழ்வார்கள் 12 பேர் என்பதை மாற்றி ஆழ்வார்கள் 11 பேர்தான் என்று ஒப்புக் கொள்வார்களா? மார்கழி பஜனையையும் மறுபரிசீலனை செய்வார்களா?

நன்றி:  இராஜன் கொச்சி மோன்
       ⚫🔴⚫
வேனுகோபால சங்கர் - ஆறாம் அறிவு முகநூல் பக்கம்,15.1.18