பக்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பக்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 1 பிப்ரவரி, 2018

ஜெயேந்திரர் ஒழுக்கம்?

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 'அதிகமான மக்கள் சபரிமலைக்குப் போக விரதம் இருப்பதால் சாராய வியாபாரமே குறைகிறது' என்று கூறியிருக்கிறார். பகுத்தறிவு இதைச் செய்ய முடியாது. பகுத்தறிவுப் பகலவர்கள் கூறியவற்றையெல்லாம் மக்கள் புறக்கணித்ததால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது. கண்ணை மூடிக் கொண்டு பகுத்தறிவு பேசும் வீரமணி போன்றவர்கள், கண்ணைத் திறந்து என்ன நடக்கிறது என்று பார்த்தால், அவர்களுக்கு எந்த அளவுக்குப் பகுத்தறிவுப் பகலவரான பெரியாரின் ஆன் மிக விரோதச் சிந்தனைகளை மக்கள் ஒதுக்கி விட்டார்கள் என்பது புரியும். தூங்குப வர்களை எழுப்பலாம். ஆனால் தூங்குவதுபோல் இருப்பவர் களை எழுப்புவது கடினம். இதுதான் தமிழக பகுத்தறி வாளர்களின் நிலை"" என்று ஏடெடுத்து அப்படியே பொரிந்து தள்ளியுள்ளார் 'சோ'வின் வாரிசாக 'துக்ளக்'கின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றி ருக்கும் திருவாளர் எஸ். குரு மூர்த்தி அய்யர்வாள் ('துக்ளக்' 24.1.2018 பக்கம் 37).

தந்தை பெரியார் அவர் களின் தனியொழுக்கமும், பொது ஒழுக்கமும் எத்தகையது என்பது இந்த நாட்டுக்கே விளங்கும்.

அதே நேரத்தில் குருமூர்த்தி அய்யர் கூட்டத்தின் லோகக் குரு திருவாளர் ஜெயேந்திர சரஸ்வதியின் தனி ஒழுக்கமும், பொது ஒழுக்கமும் உலகப் பிரசித்தி பெற்றதல்லவா!

குருமூர்த்தி அய்யர்வாளின் அக்கிரகார வாசியான பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் கண்ணீரும், கம்பலையுமாக தொலைக்காட்சிகளில் குமுறி னாரே அதனை மறந்துவிட முடியுமா!

பத்திரிகை தொடங்குவது தொடர்பாக தன்னை அழைத்த நிலையில் காஞ்சி சங்கர மடத் திற்குச் சென்றபோது தனது கையைப் பிடித்து இழுத்தார் காஞ்சி லோகக் குரு ஜெயேந்திர சரஸ்வதி  என்று கூறிய அக்கிரகார எழுத்தாளர் பெண் மணியின் துயரக் குரல் குரு மூர்த்திகளின் மனச் சான்றை (?) உலுக்காது.

அவ்வாறு அனுராதா அழுது புரண்டபோது - அந்த அம்மையார் மீதே அபாண்ட பழி சுமத்திய அசகாய சூரரா யிற்றே திருவாளர் குருமூர்த்தி வாள்!

மானங்கெட்டு, மரியாதை கெட்டு மக்கள் மத்தியில் சிரிப் பாய் சிரித்தாலும் அவாளுக்கு ஜெயேந்திரர் ஜெகத்குருதான்!

தெரிந்து கொள்வீர் அவா ளின் அநாகரிக ஒழுக்கமுடை நாற்றத்தை.

- மயிலாடன்

குறிப்பு: பட்டப் பகலில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அதன் மேலாளர் சங்கரராமன் படுகொலை செய் யப்பட்டாரே அந்த சங்கரராமன் (சோம சேகர கனபாடிகள்) பதிவு செய்த ஜெயேந்திரரின் சரச சல்லாபங்கள் இன்னும் உயி ரோடு இருக்கத்தான் செய் கின்றன.
- விடுதலை நாளேடு, 26.1.18

புதன், 31 ஜனவரி, 2018

பக்தியும் ஒழுக்கமும்?

திருமலையில் 20 முதல் 25 செக்ஸ் மய்யங்கள் இயங்கி வருகின்றன. இதில் 400 விபச்சார அழகிகள் உள்ளனர். இங்கு எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த மே மாதம் திருப்பதியில் 7604 ஆண்களிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர்களில் 268 பேருக்கு எச்.அய்.வி. கிருமி தொற்றியிருப்பது தெரிய வந்துள்ளது என்று செய்தி வெளியிட்ட தினத்தந்தி (சென்னை பதிப்பு 21.6.2008, பக்கம்: 17) மேலும் கூறுகிறது.

திருப்பதிநகரில்மட்டும்3500 அழகிகள்விபச்சாரத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் கார ணமாக, திருப்பதிக்கும், திருமலைக்கும் வரும் பக்தர்களிடம் எய்ட்ஸ் நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாடு, கருநாடக மாநில எல்லைப் பகுதிகளில் இடம் பெயர்ந்து வேலை பார்க்கும் கட்டடத் தொழிலாளர்கள்தான் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற இன் னொரு தகவலும் வெளியாகி இருக்கிறது.

எஸ்ட்ஸ்தடுப்புஅதிகாரிவெளி யிட்ட தகவலும், அது தொடர்பான புள்ளிவிவரங்களும்,ஆந்திர மாநில டி.வி.சேனல்களில் ஒளிபரப்பானது. சில சேனல்கள் கூடுதல் தகவல்களைச் சேகரித்துவெளியிட்டன.இதனால் பக்தர்கள் பெரும் அதிர்ச் சிக்குள்ளாயினர் என்றும் இதற்கிடையே ஆந்திர மாநில எய்ட்ஸ் தடுப்பு அதிகாரி சந்திரவதனனுக்கு ஆந்தி மாநில பாரதீய ஜனதா, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன என்ற தகவல்களை விலாவாரியாக தினத்தந்தி வெளியிட்டுள்ளது.

இதனைப்படித்தால் அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. எய்ட்ஸ் தடுப்பு அதிகாரி தன் கடமையைத்தான் செய்துள்ளார். அவரொன்றும் இந்துமத விரோதியும் அல்லர்.

ஓருண்மையைச் சொல்லியதற்காக அவரைப்பார்த்து உறுமுவதில் அர்த்தம் இருக்க முடியுமா? தம் கடமையை ஒழுங்காகச் செய்த ஓர் உயர் அதிகாரி மீது பாய்ந்து பிராண்டுவதில் பக்தி இருக்கலாமே தவிர பகுத்தறிவு இல்லை.

பொதுவாக கோயில் நகரங்களில் பால்வினை நோய்கள் அதிகம் என்பது இதற்கு முன்பும்கூட அதிகாரபூர்வமாக வந்துள்ள தகவல்கள்தாம். “ஹி.றி. ஜிணிவிறிலிணி ஜிளிகீழிஷி  ஹிழிஞிணிஸி கிமிஞிஷி ஜிபிஸிணிகிஜி” என்ற தலைப்பில், ‘தி பயோனிர்' ஏடு (21.7.1997) விரிவாக வெளியிட்டதுண்டு.

சுவிட்சர்லாந்து அரசின் சார் பாக அனுப்பப்பட்ட குழு ஒன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள புனித கோயில்கள் என்று சொல்லப்பட்ட காசி, ரிஷிகேஷ், அலகாபாத் முதலிய இடங்களுக்குச் சென்று நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளது.

ரிஷிகேஷில் 28 பேர்களும், காசி யில் 11 பேர்களும், அலகாபாத்தில் 19பேர்களும்,லக்னோவில்16பேர் களும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட் டிருந்தனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

சென்னையில் 12.6.1976 மற்றும் 13.6.1976 ஆகிய இரு நாட்களில் பாலியல் நோய் பற்றி ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. சென்னை பொது மருத்துவமனையின் பாலியல் நோய்த் துறை இயக்குநர் டாக்டர் சி.என்.சவுமினி அக்கருத்தரங்கில் கூறிய தகவல், புண்ணியத்தலங்களின் புண்பட்ட யோக்கியதையை வெளிப்படுத்தக் கூடியதாகும். பக்தர்கள் அடிக்கடி கூடும் புண்ணியத் தலங்களில்தான் விபச்சாரம் பெரிய அளவில் நடக்கிறது. இந்தப் பகுதியில் உள்ள விபச்சாரி மூலம் சராசரி மூன்று பேர்களுக்கு இந்தநோய் பரவுகிறது.

இவற்றையெல்லாம்எடுத்துக்கூறு வதற்குக்காரணம்திருவாளர்எஸ்.குரு மூர்த்தி அய்யர்தான். துக்ளக்கில் (24.1.2018, பக்கம் 37) அவர் எழுதியது தான்.

“ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிகமான மக்கள் சபரிமலைக்கு போக விரதம் இருப்பதால் சாராய வியாபாரம் குறைகிறது என்று கூறியிருக்கிறார். பகுத்தறிவு இதைச்செய்ய முடியாது. பகுத்தறிவுப் பகலவர்கள் வீரமணி போன்றவர்கள்இதைசாதிக்க முடியாது'' என்று எழுதியிருக்கிறார். சந்திரபாபு நாயுடுவின் திருப்பதி கதையே இந்த ஒழுக்கத்தில் இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டத்தான் இந்த எடுத்துக் காட்டுகள்.

- மயிலாடன்

- விடுதலை நாளேடு,31.1.18