புதன், 24 ஆகஸ்ட், 2016

இந்துவாகி இழிந்தது போதாதா?

-மா. பால்ராசேந்திரம்

அரிதான அறன்எய்தி அருளியோர்க்கு அளித்தலும்
பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும்
தமிழர் தமிழராய் இருந்த காலை தமக்குக் கருணையோடு நற்பயன் ஈந் தோர்க்குச் செய்தற்கரிய நற்செயல் களைச் செய்து உயர் பண்பாளர்களாய் வாழ்ந்தவர்களாவர். தம்மிடம் நட் பின்றிப் பகையெண்ணிப் பகைப் போரைப் பகைத்து அழித்திடும் செயலையும் அஞ்சாது செய்து, சிறந்த வீரத்திற்குரியோராய் வாழ்ந்தோரே தமிழரென்பார் கலித்தொகையில் பாலை பாடிய பெருங்கடுங்கோ.
அந்நற்றமிழர், இந்துவாகத் தம்மை மாற்றிக் கொண்டதால் அடைந்த அவமானங்களை எடுத்துரைக்கின் விரியுமே அன்றி சுருங்கி நிற்காது. இனமானம் காத்திடப் புறப்பட்ட, அறிவாசான் தந்தை பெரியாரால்தான் இன்று சுயமரியாதையுள்ள தமிழராய் வாழ்ந்து வருகிறோம்.
இல்லையாயின் அத்தனைத் தமிழனும் பார்ப்பனரின் காலைக் கழுவிக் குடித்துக் கொண்டே தான் இருந்திருப்பான். இன்றோ எல்லோரும் மீண்டும் இந்துவாக வாழ்வோம்; தன்மானத்தைத் தானம் செய்வோம் வாரீர்! என்னும் ஓநாய் களின் ஓலமிகு அழைப்பு ஆடுகளுக்கு விடுக்கப்படுகிறது. ஆடுகள் எச்சரிக் கையாய் இருக்க வேண்டிய வேளை இது.
இந்துவாய் இருந்து சூத்திரன், பஞ்சமன் எனும் இழிநிலையைச் சுமந்து இழந்தது போதும். மக்களாய் இல்லாமல் மாக்களாய் வதிந்து வாழ்ந்த நிலைக்கு முடிவு கட்ட இளந்தலைமுறையினர் தயாராக வேண்டும்.
ஜெப ஸ்தப தீர்த்தயாத்திர பிரவர்ஜ்ஜய
மந்தர சாதனம், தேவதாராதனம்
சசய்வஸ்திரீ சூத்திர பததானிஷன்
இந்துவாக இருந்தாலும் ஜபம், தபசு, தீர்த்த யாத்திரை, சந்நியாசம், கடவுள் தோத்திரம், ஆராதனை இந்துப் பெண் களுக்கும், இந்து சூத்திரர்க்கும் கிடை யாது என்கிறது ரிக்வேதம், சூத்திரர் என்றால் யார்? பார்ப்பனரல்லாத உழைக்கும் இந்து மக்கள் தாம். அவர்கள் வேசி புத்திரர்களாம் இந்து சாஸ்திரங்கள் சொல்கின்றன. இந்த இந்துமதம் தேவையா?
சூத்திரர் பற்றி வைகானச ஆகமம், சூத்திரர், சாமி விக்ரகத்தைத் தொட் டால் தீட்டாகி விடும். அதற்கு 108 கலசங்கள் வைத்துப் பிம்பங்களுக்குச் சம்ப்ரோட்சணம் செய்ய வேண்டும். தொடர்ந்து மகாசாந்தி ஹோமமும், பிராமண போஜனமும் செய்ய வேண்டும் என்கிறது. தீட்டுத் தண்டம் என்பதிலுங்கூட ஏழைகளுக்கு அன்னதானம் செய் என்றில்லாமல் பிராமணர்க்குப் போஜனம் செய் என்பதிலிருந்தே இந்துமதம் யாருடைய நலனுக்காக ஏற்படுத்தப்பட்டது என்பது நம் மக்களுக்குப் புரிய வேண்டாமா?
இந்து ஆசிரமக் கொள்கைப்படி பிரம்மச்சரியம், கிரகஸ்தன், வானப் பிரஸ்தன், சந்நியாசி என்ற நான்கு கட்டங்களில் சூத்திரர்க்குப் பின்னிரு நிலைகள் கிடையாது. ஏன்? வனாந்திரம் சுற்றும் நிலை ஏற்படுமாயின் ஊரில், நாட்டில் அடிமைத்தொழில் செய்திட, விளை பொருள் விளைவித்திட ஆளில் லாச் சூழல் உருவாகி உடலுழைப் பிலாத செல்வர் உலகை ஆண்டுலாவ லும் கடவுளாணை என்று ஏமாற்றும் பார்ப்பனர்த் தொப்பை வற்றிச் சுடுகாடு நிரம்பிடுவாரே பிணங்களாக அதனால் தான்.
இது மட்டுமன்று, இந்துத்துவா முழுமையையும் கைக்கொள்ள எல்லா ஜாதி இந்துக்களுக்கும் உரிமை கிடை யாது. ரிஷிகளின் வேதங்கள், சுருதிகள், ஸ்மிருதிகள், 16 வகைச் சடங்குகள், சாஸ்திரங்கள், புராணங்கள், ஆகமங்கள் இவற்றை நம்பி, ஏற்றுக் கொள்பவரே இந்து ஆவார். ஆராய்ந்தறிய முற்படு பவன் நாத்திகன் எனப் புறந்தள்ளப் படுவான். நம்புகிறவனிலுங்கூட அனைத்து இந்து ஜாதியினரும் எல்லாச் சடங்குகளையும் செய்திட உரிமை கிடையாது. ஏனிந்தப் பாகுபாடு என்று எவராவது சிந்திப்பது உண்டா?
வைதிக மதத்தின் அடிப்படையில் சனாதான தர்மத்தின் வழியில் கபிலர் கூறியது போல, நால்வகைச் சாதியை இந்நாட்டினில் நாட்டியோர் பார்ப் பனரே அதிலுங்கூடப் பார்ப்பனர் தவிர்த்தோரின் பிறப்பையும் கேவல மாகச் சித்தரித்துள்ளனர். ஜமதக் கினிக்கும், சத்யவதிக்கும் பிறந்த பரசுராமன், அர்ச்சுனனை வெட்டி அழித்தான்.
தொடர் பகையால் சத்திரியகுல ஆண் இனமே அழிந்தது. விதவைகளான சத்திரிய குலப் பெண் களுடன் பார்ப்பனர் கூடிப் பிறந்த இனமே சத்திரிய குலமாம். பார்ப்பனப் பெண்ணுக்கும் சூத்திரனுக்கும் பிறந் தோரே சண்டாளராம். இந்த இழிக் கருத்தையும் ஏற்று வாழ்வோரே இந்துவாம்.
இந்து என்போர் தம்  ஜாதிக்குள் தனித்தே வாழ்கின்றனர். இன்ப துன்பங்கள் இந்துக்களுக்குள் அல்ல; அந்தந்த ஜாதிகளுக்குள் தாம். இறப்பிலும் இந்து இடுகாடு, இந்து சுடுகாடு கிடையாது. எல்லாமே ஜாதி வாரிதான். இதுவே, இசுலாமியர், கிறித்தவர் என்றால் ஒரே அமைவிடம் தான். பிறகெப்படி இந்து ஒன்றாக முடியுமென நினைக்கின்றனர்? இந்து ஒற்றுமைக்கு இந்துதானே எதிரியாக உள்ளார். பிற மதத்தவர் இல்லையே! இதனை ஏன் உணர மறுக்கின்றார்கள்?
இந்து என்போரின் தொழிலும், அவனவன் பிறப்பதற்கு முன்பே நிர்ணயிக்கப்படுகிறது. தொழிலுக்கும் அவனது திறமை, உளப்பாங்கிற்கும் எந்த உறவும் கிடையாது. மற்றைய ஜாதியாரின் விருப்பத்தை நிறைவேற் றிடக் கட்டாயப்படுத்தப்படுகிறான். உயர் ஜாதி இந்துக்களுக்கு ஊழியஞ் செய்யவே இந்து சூத்திரன் என்ற நிலை உறுதியாகி விட்டது. அவரின் இலட்சிய மும் அதுவே என்றாக்கி விட்டனர்.
கீழ் ஜாதித்தன்மை ஒழிய வேண்டு மாயின் அந்நியருக்காக நாம் உழைக்கப் பிறந்தோம் என்கின்ற எண்ணத்தைக் கைவிட்டு, நம் உழைப்பின் பயனைச் சோம்பேறிகள், பாடுபடாத மக்கள் அனுபவிக்கக் கூடா தென்ற உறுதி கொள்ள வேண்டும் என்பார் தந்தை பெரியார் அவர்கள். ஜாதியைப் போக்கிட முயலாமல் இந்துவாக வீரியத்துடன் ஆரியத்தை அணைத் திடுவது கொள்ளிக்கட்டை யால், தன் தலையைதானே சொரிந்து கொள்வதற்கு ஒப்பாகுந்தானே!
இந்துவாய் இதுவரைக் கண்ட பலன் யாது? சித்தம் துடிக்கின்ற சேயின் நிலைமைக்கு ரத்தவெறி கொண்டலை யும் நால்வருணம் ஏனிரங்கும்?
இரங்காதென்பார் புரட்சிக் கவிஞர் இன்றும், நிகழ்கிறதே! 2001இல் உத்தரப்பிரதேச மாநிலம், முசாபர்பூர் மாவட்டம், அலிப்பூரைச் சேர்ந்த விஷால் என்ற 20 வயதுப் பார்ப்பனப் பையன், சோனு எனும் 18 வயது ஜாட் இனப்பெண். இருவருமே ஒருவரையொ ருவர் விரும்பினர்.
ஊரார்க்குத் தெரிய வர இருவரையும் பிடித்துத் தூக்கி லிட்டுக் கொன்றனர் இந்துப் பெரிய வர்கள். இந்துக்கள் ஒன்றுபடுவோம் என்பதைத் தலையில் பிறந்த பார்ப்பனர்கள், முன்னிறுத்திக் காட்ட வில்லையே? இந்துத்துவா இந்துவையே சமத்துவ மனிதராக ஏற்றுக் கொள்ளாது என்பதுதானே உண்மை. ஜாதியால் தானே மனிதனின் மதிப்பும், இழிவும் காட்டப்படுகின்றது. ஜாதி நீங்கிய இந்து நிலைநிற்காதுதானே!
1927இல் பாலக்கோட்டில், காம கோடி பீடாதிபதி ஜகத்குரு சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், காந்தியாரிடம், இந்து அரிஜன ஆலயப் பிரவேசத்தில் சாஸ்திரங்களையும், பழைய வழக்கங்களையும் நம்பி,  நாட்டில் பெரும்பாலோர் இருக்கின் றனர். அவர்கள் மனம் நோகும்படிச் செய்யும் எந்த ஒரு மாறுதலும் இம்சைக்கு ஒப்பானதாகுமென, தாம் முடிவுக்கு வர வேண்டியதுள்ளது என்றாரே! பழைய வழக்கம், சாஸ்திர மென்றால் என்ன?
மாதரமுபைத்ய கஸாரமுபைதி புத்ரார்தீத
சகாமார்த்தி நாபத்ரலோகா நாஸ்தீத
ஸ்வரம்பரவோ விந்துஹஃ தஸ்மாத் புத்ரார்த்தம்
மாதரம், ஸுரஞ்சதி, ரோஹதி
புத்திரர் நிமித்தம் தாய், தமக்கை, தங்கை, மகள் யாரோடாயினும் புணரலாம். இந்த இழிந்த சாக்கடைச் சாஸ்திரங்களை நம்புகிறவர் மனம்தாம் நோகுமாம். இந்த இம்சைக்கு எதிராக அரியின் குழந்தைகளாம் அரிஜனங் களைக் கோயிலுக்குள் விட மறுத்தார் லோககுரு.
இன்று நுழைகின்றனரே யாரால்? தந்தை பெரியாரின் வைக்கம் போராட் டமே தெருவையும், கோயிலையும் விரியத் திறந்தது. கோவா அகதிகளாம் சரஸ்வதிப் பார்ப்பனருங்கூடக் கேரளக் கோவிலுக்குள் நுழைந்தது. பெரியா ராலே என்று வாய்விட்டுக் கூறி மகிழ்ந்தாரே.
மனிதநேயத்தை மறுப்பது இந்துத்துவா மனிதநேயம் காப்பது சுயமரியாதை இயக்கமே! இந்து எனும் கட்டு ஜாதிபேதம் கற்பித்து, உட்பகையாய்த் தலைவிரித்தாடி அரத்தால் தேய்த்திடும் இரும்பு, வலிமை குன்றுவதுபோல தமிழர் சமுதாயத்தை என்றுமே உயர விடாது தடுத்திடும்.
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி என்பது குறள் கூறும் நெறி.
இந்துவில் வீழோம்; சுயமரியாதைத் தமிழராய் வாழ்வோம் என்று உறுதி யேற்போம்.
-விடுதலை ஞா.ம.18.4.15

திங்கள், 15 ஆகஸ்ட், 2016

ஆதிசங்கரரை கொன்றவர்களும் ஆரிய பார்ப்பனர்களே!

பன்மொழி புலவர் கா.அப்பாதுரை
சென்னையில் 5.6.1983 அன்று பகுத்தறிவாளர் கழகம் நடத்திய சங்கராச்சாரி _-யார்? விளக்கப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சிக்குத் தலைமையேற்ற பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் அவர்களின் பேச்சிலிருந்து:
நான் மொழி ஆராய்ச்சியாளன் என்ற முறையிலும், இலக்கிய ஆராய்ச்சியாளன் என்ற முறையிலும், வரலாற்று ஆராய்ச்சியாளன் என்ற முறையிலும், ஏன் சமய ஆராய்ச்சியாளன் என்ற முறையிலும் உங்களுக்குத் தெரிந்திருக்க முடியாத சில உண்மைகளை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
ஸ்மார்த்தர்கள்
இந்தியாவிலே சைவ ஆகமங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள்தான் ஸ்மார்த்தர்கள். இவர்கள் கடவுள் உண்டு என்று சொல்லக்கூடிய சைவம், வைணவம் ஆகியவற்றோடு எந்தத் தொடர்பும்  இல்லாதவர்கள்.
ஒரு செய்தியைச் சொன்னால் எளிதில் ஒத்துக்கொள்ள மாட்டீர்கள், இந்த பிராமணர்கள்தான் ஆதிசங்கரரைக் கொன்ற-வர்கள். நாங்கள் ஏழுபரம்பரையாக ஆதிசங்கரரைப் பின்பற்றிய குடும்பத்தில் வந்தவர்கள். நான் எளிதாக பெரியார் இயக்கத்தில் சேர்ந்ததற்குக் காரணமே- ஆதிசங்கரருடைய கொள்கைகள்தான்.
சங்கராச்சாரியார் கடைசியில் எழுதியது ‘மனோசாப்பஞ்சகம்’ என்பது. அது அய்ந்து சுலோகங்கள் அடங்கியது. அதில் ஒரு சுலோகம் கடவுளை எதிர்ப்பது;- கடவுள் இல்லை என்று மறுப்பது.
இரண்டாவது சுலோகம் மதச் சின்னங்கள் அணிவது தவறு என்பது, மூன்றாவது உருவ வணக்கம் தவறு என்பது, இன்னொன்று சாதிகளை எதிர்ப்பது; இப்படி அய்ந்து கருத்துக்கள்.
இவை திராவிட இயக்கம், கம்யூனிஸ்ட் இயக்கம் ஆகியவற்றின் அடிப்படைக் கருத்துக்களாகும். இதை ஆயிரமாண்டுகளுக்கு முன்னே சொன்னவர் ஆதிசங்கரர். இதுதான் அவருடைய செயல்.
தன் 32 ஆவது வயதில் புதைக்கப்பட்டார்
ஆதிசங்கரர் இந்நூலை எழுதிய பின் உயிரோடு சமாதியில் உட்கார வைக்கப்பட்டு புதைக்கப்பட்டார் என்று நான் கேள்விப்படுகிறேன். அவர் சமாதி காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் உள்ளது.
இதைப்போல்தான் அண்மையில் திருவருட்பா பாடிய வள்ளலாரும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டார் என்று சொல்கிறார்கள். அதேபோல் திருஞான சம்பந்தரும் குடும்பத்தோடு எரிக்கப்பட்டார் என்று நான் நம்புகிறேன். ஸ்மார்த்தர்களால் தங்கள் நலத்திற்கு எதிரி என்று கருதி எதிர்த்து அழிக்கப்பட்டவர்கள் நிறைய பேர் உண்டு.
பெண்களைக் கொடுக்கத் தயங்காதவர்கள்
அதைவிட முக்கியமானது. ஆட்சியிலுள்ள-வர்கள் தங்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக தங்களுடைய பெண்களை அவர்களுக்குத் திருமணம் செய்து கொடுக்கத் தயங்காதவர்கள் இந்த ஸ்மார்த்தர்கள்.
அக்பருடைய அரண்மையில் _ ஜஹாங்கீர் ஷாஜஹானுடைய அரண்மைகளிலே கண்ணனுடைய கோயில் இருந்தது. ஏனென்றால், அவர்களுடைய பல மனைவியர்-களில் தலைமை சான்ற ஆற்றல் வாய்ந்த மனைவியர்கள் இந்துக்கள்.
வெள்ளைக்காரரை எதிர்த்து சிப்பாய் கலகம் அல்லது முதல் இந்திய சுதந்திரப் போர் என்று சொல்கிறார்களே; அதைச் செய்தவர்கள் பெரும்பாலும் இந்த ஸ்மார்த்தர்கள்தான்.
சிவாஜி பரம்பரையை அழித்து ஆட்சிக்கு வந்தவர்கள் இவர்கள்.
என்னை ஆதிதிராவிடன் என்று நினைத்தே நடத்தியிருக்கிறார்கள். சைவர்களுடைய ஓட்டல்களில் என்னை வெளியிலே தள்ளி சாப்பிட வைத்திருக்கிறார்கள். நாடார்களுடைய ஓட்டல்களிலே என்னை வெளியிலே தள்ளி உண்ண வைத்திருக்கிறார்கள்.
இதெல்லாம் என்னுடைய சுயமரியாதை அனுபவங்கள், வாழ்க்கை வரலாறு எழுதினால்தான் இதையெல்லாம் எழுத முடியும்.
அதேபோல், ஆற்றுக்குக் குளிக்கப் போனால் அங்குள்ள பிராமணர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வார்கள்.
இங்கே ஒரு சூத்திரன் இந்தி கற்றுக் கொடுக்க வந்து விட்டானாம் என்று.
இராஜகோபாலச்சாரியார் ஆட்சியிலே இருந்தபோது ஒரு நான்-பிராமின் இந்திக் கற்றுக் கொடுப்பதா என்று ஒரு ஜி.ஓ.வே. போட்டார்கள்.
அது திருநெல்வேலி இந்துக் கல்லூரியைத் தவிர வேறு எந்தக் கல்லூரிக்கும் செல்ல-வில்லை. நான் பக்கத்திலே உள்ள மற்ற கல்லூரிகளிலெல்லாம் இந்த ஜி.ஓ. வந்ததா என்று விசாரித்தேன். வரவில்லை எனச் சொல்லிவிட்டார்கள்.
ஒரு தடவை எனக்கும், ‘அற்புத உலகம்’ என்ற நூலை எழுதிய அப்புசாமி அய்யருக்கும், நானே தலைவனாயிருந்த சங்கத்தில் பாராட்டுவிழா நடத்தினார்கள். அதற்குத் தலைமை தாங்க சி.பி. இராமசாமி அய்யரை அழைத்திருந்தார்கள். சி.பி.இராமசாமி அய்யர் வரும்பொழுது நாங்கள்இருவரும் முன் வரிசையிலே இருந்தோம்.
பேசிக்கொண்டே வந்த சி.பி.இராமசாமி அய்யர், அப்புசாமி அய்யரிடம் கைகுலுக்கி அய்ந்து நிமிடம் பேசிவிட்டு நேரே சென்று விட்டார்.
எனக்கு மேடையில் இடம் தராத சர்.சி.பி.இராமசாமி அய்யர்
மேடைக்குச் சென்றதும் அப்புசாமி அய்யரைக் கூப்பிட்டு பக்கத்திலமர்த்திக் கொண்டார்: அவர் என்னைக் கூப்பிட வில்லை. வலது பக்கம் அப்புசாமி அய்யர் இருந்தார், எனவே, விழா நடத்தியவர்கள் இடது பக்கம் ஒரு நாற்காலியைப் போட்டு என்னை அழைத்தார்கள்.
உடனே சி.பி.இராமசாமி அய்யர் கூட்டத்திலிருந்த ஒரு பிராமணப் பெண்ணை அழைத்து அதில் அமரச் செய்துக் கொண்டார். கூட்டத்திலிருந்தவர்கள் இன்னொரு நாற்காலியைப் போட்டனர். அதிலும் மற்றொரு பிராமணப் பெண்ணை கூப்பிட்டு அமர்த்திக் கொண்டார். இப்படி எனக்கு உட்கார இடம்விடாமல் செய்தார்.
நானே பின் பக்கத்தில் உட்கார்ந்து கொள்கிறேன் என்று சொல்லி பின்பக்கத்தில் அமர்ந்து கொண்டேன். மேடையில் பேசும்போது சி.பி.இராமசாமி அய்யர் என்னுடைய பெயரைச் சொல்லவில்லை. பாராட்டும்போது என்னுடைய பெயரைப் பாராட்டவில்லை. மாலை போடும் போதும் எனக்கு மாலை போடவில்லை.
அதேபோல், நான் பொன்னியில் ஆசிரியராக இருந்தபோது இராஜகோபாலச்சாரியாரிடம் வாழ்த்து வேண்டுமென்று கேட்டேன். பதிலே இல்லை.
எப்படியும் சந்தித்து விடவேண்டுமென்று ஒரு இடத்தில் சந்தித்தபொழுது எனக்கு வாழ்த்தும் வழங்கவில்லை என்று சொல்லி-விட்டார். இதிலிருந்து பிராமணர்கள் நமக்கும், நம் தமிழ் மொழிக்கும் எவ்வளவு கேடு செய்பவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு பன்மொழிப் புலவரவர்கள் பேசினார்கள்.
(விடுதலை 15.6.1983 - பக்கம்3) ஸீ
-உண்மை,16-28.2.16

-

’சரஸ்வதி’ படையெடுப்பு எப்படி? எப்போது?

- கி.வீரமணி
கல்விக் கடவுளாக சரஸ்வதி கற்பிக்கப்பட்டுள்ளதற்கும், திராவிடர்களுக்கும் எவ்வித ஒட்டோ, உறவோ கிடையாது. இது ஒரு வகை ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பின் கூறு, விளைவு ஆகும்.
நாம் நமது விழைவாகவோ, கற்பனையாகவோ இப்படி எழுதவில்லை.
தந்தை பெரியார் அவர்கள் நம்முடையதா, பிறரது பண்பாட்டுப் படையெடுப்பின் விளைவால் ஏற்பட்ட தாக்கமா? என்று கண்டறிய, ஒரு எளிய வழி, அச்சொல் அடி எங்கே உள்ளது? அது தமிழா?
பிற சொல்லா? என்று பார்த்தாலே தெரியும் என்றார். எடுத்துக்காட்டாக ‘ஜாதி’ என்பதும், ‘ஆத்துமா’ என்பதும் தமிழ்ச் சொற்கள் அல்ல. எனவே, இறக்குமதியானவை -_ புகுத்தப்பட்டவை என்பது விளங்குகிறது அல்லவா?
சரஸ்வதி என்பது தமிழ்ச் சொல்லா? அல்ல; அதுபோல, திராவிடர்களுக்கும் எந்தவிதத்திலும் உரியது அல்ல. இடையில் திணிக்கப்பட்டது _- அதுவும் புராண காலத்தில்.
வேத காலத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் எந்தக் கடவுளர்களும் இல்லை என்பது ஆய்வாளர்களின் தெளிவான நிலைப்பாடு.
பிறகு பாமர மக்களை வயப்படுத்த புராணங்கள் -_ இதிகாசங்கள் என்று கட்டுக்கதைகளை [(Mythology)- Myth என்றால் உண்மை அல்லாத இட்டுக் கட்டப்பட்டவை என்றுதான் பொருள்] உருவாக்கினர்.
வேதங்களை தங்களுடைய தனி உடைமையாக்கி, மற்ற வர்ணத்தவர் படிக்கவோ, படிப்பதைக் கேட்பதோ கூடாது என்றும், மீறினால் நாக்கறுப்பு, காதில் காய்ச்சிய ஈயத்தை ஊற்றல் தண்டனை என்று ஆக்கினர்.
அதன்படி வேதங்களில் சரஸ்வதி கிடையாது. பிறகு புராணங்களில்தான் வருகின்றாள்.
‘அபிதான சிந்தாமணி’ (தமிழ்க் கலைக் களஞ்சியம்) ஆ.சிங்காரவேலு முதலியார் _- (1910ஆம் ஆண்டு) ‘சரஸ்வதி’ என்ற தலைப்பில் தரப்படும் தகவல்கள் (பக்கம் 723, 2010ஆம் ஆண்டு பதிப்பு).
சரஸ்வதி: A.1 பிரமனால் சிருட்டிக்கப்பட்டு அவனால் மணக்கப்பட்டவள். வித்யாதிஷ்டான தேவதை. இவள் வெண்ணிறமாய், வெள்ளை வஸ்திரம், கைகளில் ஜபமாலை, புத்தகம், வீணை, எழுத்தாணி தரித்து எழுந்தருளியிருப்பவள் எ_-ம்., இவளுக்கு ஒரு கரத்தில் ஜபமணி, மற்றொன்றில் புத்தகம், இரு கரங்களில் வீணை எ_-ம் இவட்குப் பிரிமவித்தை, முகம், நான்கு வேதமும் கரங்கள், எண்ணும் எழுத்தும் கண்கள், சங்கீதசாகித்தியம் தனங்கள், ஸ்மிருதிவயிறு, புராண இதிகாசங்கள் பாதங்கள், ஓங்காரம் யாழ் எனவுங் கூறுப.
2. தஷயாகத்தில் காளியால் மூக்கறுப்புண்டு மீண்டும் பெற்றவள்.
3. இவள் தன்னைச் சிருட்டித்துத் தன்னுடன் கூடப் பிரமன் வருகையில் பிரமனுக்கு அஞ்சிப் பெண்மான் உருக்கொண்டு ஓடினள். பிரமன் ஆண்மான் உருக்கொண்டு தொடர்ந்து சிவமூர்த்தியால் தடையடையக் கண்டு சிவமூர்த்தியை வேண்டிப் பிரமனைக் கணவனாகப் பெற்றவள்.
4. பிரமன் தன்னை நீக்கி யாகஞ்செய்ததால் நதியுருவாய் யாகத்தை அழிக்க வந்தவள்.
5. ஒரு காலத்து அகத்தியரிடம் பிறந்தவள்.
6. பிரமன் காயத்திரி, சாவித்திரி, சரஸ்வதி மூவருடன் கூடிக் கங்காஸ்நானத்திற்குப்போக சரஸ்வதி ஆகாயவழியில் பாடிக் கொண்டிருந்த வித்யாதர ஸ்திரீயின் இசையில் மனம் வைத்திருந்தனள். சரஸ்வதி ஒழிந்த இருவரும் தம் நாயகருடன் கங்கையடைந்து ஸ்நானஞ்செய்தனர். சரஸ்வதி சற்றுத் தாமதித்துப் பிரமதேவனிடஞ் சென்று தான் வருமுன் ஸ்நானஞ் செய்ததுபற்றிக் கோபித்தனள். பிரமன் குற்றம் உன்மீது இருக்க என்மீது பயனிலாது கோபித்தலால் (48) அக்ஷரவடிவாகிய நீ உலகத்தில் நாற்பத்தெட்டுப் புலவர் உருவாகத் தோன்றிச் சிவமூர்த்தியைப் பணிந்து அவர் தந்த சங்கப்பலகையில் இருந்து வருக எனச் சாபம் ஏற்றவள்.
7. ஒரு யாகத்தில் இவள் வரத் தாமதித்ததால் பிரமன் இடைக்குலக் கன்னிகையைத் தாரமாகப் பெற்றதால் இவளால் தேவர் சபிக்கப்பட்டனர் என்ப.
8. இவளும் இலக்குமியும் மாறு கொண்டு தங்களில் உயர்ந்தார் யாரென்று பிரமனைக் கேட்கப் பிரமன் இலக்ஷமிதேவிஎன்ன மாறுகொண்டு நதியுருவாயினள்.
9. பிரமன் யாகஞ்செய்ய அந்த யாக கலசத்துள்தோன்றியவள், புலத்தியரை அரக்கனாகச்சபித்தவள். சரத்காலத்தில் பூசிக்கப்படுதலால் சாரதை எனவும் பெயர்.
10. இவள் பிரமனால் சிருட்டிக்கப்பட்டு அவரால் மோகிப்பக்கண்டு, அந்த மோகவார்த்தையுரைத்த முகத்தை நோக்கி நீ யிவ்வாறு தூஷித்துக் கொண்டிருந்ததால் ஒருகாலத்தில் சிவபெருமானையும் அவ்வாறு தூஷித்து அவரால் சிரம் அறுபடக் கடவையெனச் சபித்தனள். (சிவமகாபுராணம்)
11. இவளும் கங்கை, லக்ஷ்மி முதலியவர்களும் விஷ்ணுபத்தினிகள். ஒரு கால் விஷ்ணு கங்கையிடம் அதிக ஆசைகொண்டு அவளுடன் நகைமுக மாயிருத்தலைக் கண்ட சரஸ்வதி, பொறாமை கொண்டு லக்ஷ்மியை நோக்க லக்ஷ்மி கங்கைக்குச் சார்பாயிருத்தலைக்கண்டு இவள் லக்ஷ்மியைச் செடியாகவும், நதியாகவும் போகச் சபித்தாள்.
கங்கை சரஸ்வதியை நதியுருவமாகவெனச் சபித்தாள். பின் ஸரஸ்வதி கங்கையை நோக்கி நீயும் நதியுருவமாய் உலகத்தவரது பாபத்தைச் சுமக்க என்றனள். லஷ்மியிதனால் தர்மத்வஜருக்குக் குமரியாகித் துளசியாகவும் பத்மாவதியென்னும் நதியாகவும் பிறந்தனள். கங்கையும் சரஸ்வதியும் நதிகளாகப் பிரவகித்தனர். லஷ்மி சங்க சூடனை மணந்தனள். கங்கை சந்தனுவை மணந்தனள். சரஸ்வதி பிரமபத்தினி ஆயினள். சரஸ்வதி பாரத வருஷத்தில் நதியாக வந்தபடியால் பாரதி, பிரமனுக்குப் பத்தினியாதலால் பிராம்மி,  வாக்குகளுக்குத்தேவியாதலால் வாணி, அக்னியைப் போல் பாவத்தைக் கொளுத்தி யாவருங்காண மஞ்சனிறம் பெற்றிருத்தலின் சரஸ்வதியென அழைக்கப் படுகின்றனள், இந்த (3) தேவியரும் பூலோகத்தில் கலி (5000) வருஷஞ்  சென்ற பின் தங்கள் பதமடைவர் (தேவி -_ பா.)
சரஸ்வதி B.1 ஒரு நதி  It rises in the hills of Sirmur. It disappears at vinasanatirtha after taking a Westerly course from Thaneshar.
ஸரஸ்வதி நதி இது ருஷிகளின் யாகத்தின் பொருட்டு, சுப்ரபை, காஞ்சனாஷி, விசாலை, மனோரமை, ஓகவதி, சுரேணு,  விமலோதகையென பிரவகித்தது.
இதனைத் தமிழ்ப்படுத்தி கலைமகள் ஆக்கினர் பிற்காலப் புலவோர்.
பண்பாட்டுப் படையெடுப்புக்கு பிற்காலப் ‘புலவோர்’ ‘முகவர்களாகவே’ செயல்-பட்டுள்ளனர்.
தரவு: மறைமலை அடிகளாரின் ‘முற்காலப் புலவரும் - பிற்காலப் புலவரும்’ நூல்.
டபிள்யூ.ஜே.ஜான்வில்கின்ஸ் (W.J.Wilkins) என்ற மேலைநாட்டவர், 1882 இல் கல்கத்தாவிலிருந்து, சமஸ்கிருத மொழி பயின்று ஆங்கிலத்தில், ‘Hindu Mythology’ என்ற ஒரு நூலை எழுதினார்.
அதில் பல பிரிவுகளாக கடவுள்களை அறிந்து மதம் என்ற ஆரிய சனாதன வேத மதத்தில் எப்படி உள்ளனர் என்பதை விரிவாக எழுதியுள்ளார்.
1. வேத கடவுள்கள் _- வேத கடவுள்கள் சூரியன், வெளிச்சக் கடவுள், புயல் கடவுள்கள்,
2. புராண கடவுள்கள் என்றும் பகுத்து எழுதியுள்ளார்.
அதில் புராண கடவுள்களால்தான் மேற்காட்டிய பிரம்மாவும், அவர் உருவாக்கிய மகள் -_ மனைவி ‘சரஸ்வதியும்’ உள்ளனர்!
இந்த இரு கடவுள்கள்பற்றி கதைகள்,
மகாபாரதம்
பிரம்ம புராணம்
பத்ம புராணம்
வராக புராணம்
ஸ்கந்த புராணம்
மச்ச புராணம்.
இப்படி பலப்பலவற்றில் விசித்திரக் கதைகள் உள்ளன!
எப்படி பிள்ளையார் என்ற வினாயகன் வடக்கே இருந்து தமிழ்நாட்டிற்கு கி.பி. ஆறாம் நூற்றாண்டு இறுதி அல்லது ஏழாம் நூற்றாண்டில் இறக்குமதி செய்யப்பட்டானோ, அதுபோலத்தான் சரஸ்வதி என்ற கடவுளச்சியும் கொண்டு வரப்பட்டாள். கல்விக்கே கடவுள் என்று பிரச்சாரம் செய்யப்பட்டு, ‘சரஸ்வதி பூஜை’, ‘சரஸ்வதி வந்தனா’ - இவைகள் எல்லாம் திராவிடத்தில், தமிழ்நாட்டில் ஊடுருவின!
ஆரிய மா¬யையின் தாக்கம் அப்பட்டமான ஆரியப் பண்பாட்டின் விளைவு.
கல்வியைக் கண்ணாகக் காட்டினார் வள்ளுவர். கடவுளாகக் காட்டவில்லை - அவர் காலத்திலேயே பண்பாட்டுப் படையெடுப்பு தொடங்கியது என்ற போதிலும்கூட!
-உண்மை,16-31.1.16

வழிபாட்டில் பார்ப்பனர் பண்பாட்டுப் படையெடுப்பு

- கவிஞர் கலி.பூங்குன்றன்
கோயில்கள் _ வழிபாடுகள் உலகெங்கும் நடக்கக் கூடியவைதான். வீட்டில் பெரியவர்கள் செத்தால் அவர்களின் நினைவாகப் படையல் போடுவதுண்டு. போர்க்களத்தில் மாண்ட வீரர்களுக்கு நடுகல் நாட்டுவதுண்டு.
இப்படி ஒவ்வொரு நாட்டிலும் வழிபாட்டு முறைகள் உண்டு. தன்னைச் சுற்றிச் சுழலும் இயற்கையின் சீற்றங்களுக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளும் அளவுக்குப் புத்தி வளர்ச்சியில்லாத மனிதன் _ ஏதோ ஒரு சக்திதான் இதற்கெல்லாம் காரணம் என்று கற்பித்துக் கும்பிட ஆரம்பித்தான்.
காற்றுச் சுழன்றடித்ததால் காற்று வாயு பகவான் ஆனான். மழை வெள்ளம் மரணத்தைக் கொடுத்ததால் அதை வருணப் பகவான் ஆக்கினான். பாம்பைக் கண்டு பயந்து நாகராஜன் ஆக்கிக் கும்பிட்டான்.
தொடக்கத்தில் மரங்களுக்குக் கீழ்தான் உருவங்கள் உண்டாக்கப்பட்டன. ஏன், சில மரங்களே கூட கடவுளாகின. கோயில்கள் பிற்காலத்தில் அரசர்களின் போர் வெற்றியின் நீட்சியாக உருவாக்கப்பட்டவைதான்!

கோயில்களை பணம் தண்டுவதற்கான வழிமுறையாகக் கவுடில்யனின் அர்த்த சாத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
1.    மரங்களின் அடியில் அமைக்கப்பட்ட ஆலயங்கள் தல விருஷம்.
2.    மரம், செங்கல் முதலியவைகளால் கட்டப்பட்ட கோயில்கள்.
3.    குகைக் கோயில்கள், குடவரைக் கோயில்கள்.
4.    ஒரு பாறையில் செதுக்கப்பட்ட கல் ரதங்கள்.
5.    கற்களை ஒன்றின்மேல் ஒன்று அமைத்துக் கட்டிய கற்றளிகள்.
6.    கற்கள், சுண்ணாம்பு, மரம் இவைகளால் ஆன கோயில்கள்.
7.    மூலஸ்தான விமானங்கள் கோபுரம்போல் அமைந்தவை.
8.    வாயில் கோபுரங்கள் பெருமளவு.
9.    அம்பிகைக்குத் தனிக்கோயில், பரிவார தேவதைகள்.
10.    பிரகாரங்கள், மண்டபங்கள்.
இப்படியாகத்தான் கோயில்கள் படிப்படியாக உருப்பெற்றன.
சிவன் கோயில்களில் “பண்டாரம்’’ என்னும் வகுப்பாரும், திருமால் கோயில்களில் “நம்பியார்’’ என்னும் வகுப்பாரும், காளி கோயில்களில் “உவச்சர்’’ எனும் வகுப்பாரும் பூசைனயும், பொது வழிபாடும் தனித் தமிழில் நடத்தி வந்தனர். திருக்கோயிற் பணிகளைக் கவனித்தற்கு ஊரவைப் பிரிவு ஒன்று இருந்தது. பெரும் கோயில்களில் “முதுகேள்வி’’ (Supervising Officer), “இளங்கேள்வி’’ (Subordinate Supervising Officer) என்னும் அதிகாரிகள் இருந்தனர் என்கிறார் மொழி ஞாயிறு பாவாணர். (‘தமிழர் மதம்’ பக்கம் 194)
கி.பி.5ஆம் நூற்றாண்டில் பல்லவர்கள் இங்கே வந்தபோதுதான் பரத்வாஜ கோத்திர ஆரியர்கள்தான் வடமொழியோடு வந்தார்கள். அதிகாரத்தைப் பிடித்தபின் கோயில்களை சமஸ்கிருத மயமாக்கினார்கள். தமிழ் ஆகமத்தில் நடந்த அத்தனையும் வடமொழியில் மாற்றினர் என்கிறார் பொறியாளர் சத்திவேல் முருகன். (‘நக்கீரன்’ 23.12.2015)
ராஜராஜன் கட்டிய கோயிலில் பார்ப்பனர்கள் குடிகொண்டது மட்டுமல்ல. பெருவுடையார் கோயில் என்பது சமஸ்கிருத மயமாக்கப்பட்டு பிரகதீஸ்வரர் என்று ஆரிய மயமாக்கப்பட்டது. அருண்மொழித் தேவன் என்ற தனது தனித்தமிழ்ப் பெயரையே ராஜராஜன் என்று மாற்றிக் கொண்டான் என்றால் அவனின் ஆரிய அடிமைத்தனத்துக்கு அளவு ஏது?
வருணாசிரம தர்மத்துக்கு கொடி ஏற்றினான். அதன்படி தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள் சென்று கும்பிட முடியாது. அதுகுறித்த சாம்பசிவ சர்மா எழுதிய ராஜராஜசோழன் எனும் நூலில் கீழ்க்கண்டவாறு குறிக்கப்பட்டுள்ளது.
“வருணாசிரம தர்மங்களைக் கடைபிடித்தொழுகும் இந்துக்களில் சில ஜாதியார் கோயிலுக்குள் பிரவேசித்து இறைவன் உருவினைக் கண்டு தொழுவதற்கு இயலாதவராய் இருத்தலின், அன்னார் நெடுநிலைக் கோபுரங்களைக் கண்டு தொழுது நற்பிறப்பெய்துந் திருப்பெறவே வானளாவும் கோபுரங்கள் அமைக்கப்பட்டன’’ என்பது வீராதி வீரனான ராஜராஜப் பெருவேந்தன் வேதியத்தின் வருணாசிரமப் படுகுழியில் வீழ்ந்ததைப் பறைசாற்றவில்லையா?
பரம்பரைப் பழக்கம், குறிப்பிட்ட கோயில்களில் குறிப்பிட்டவர்கள்தாம் அர்ச்சகராக முடியும் என்று அடம் பிடிக்கிறார்களே _ அரட்டையடிக்கிறார்களே _ அது உண்மைதானா?
பழனி _ முருகன் கோயிலை உருவாக்கியோர் யார்? திருமூலர் வழிவந்த போகர் என்ற சித்தர்தானே! நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்ட சிலையாயிற்றே! பரம்பரை பரம்பரையாக அங்குப் பூசனை செய்து வந்தவர்கள் யார்?
போகருக்குப் பிறகு புலிப்பாணியாரும், தொடர்ந்து வந்த சீடர்களாலும் _ அதாவது பண்டாரம் எனப்படுபவர்களாலும்தானே பூசை செய்யப்பட்டு வந்தது. அதனை மாற்றியமைத்தவர் யார்? 1623_1659 வரை மதுரையினை ஆண்டு வந்த திருமலை நாயக்கர் ஆட்சியில் தளபதியாக இருந்த ராமப்பய்யன் என்ற பார்ப்பனர் பழனி முருகன் கோயிலுக்கு வந்தபோது, அக்கோயிலில் கருப்பர்களான சூத்திரர்கள் பூசை செய்யக் கண்டு, ‘பிராமணனாகிய நான் சூத்திரர்களிடம் பிரசாதம் வாங்க மாட்டேன்’ என்று கூறி உடனடியாக அவர்களை விலக்கிவிட்டு, கொங்கு நாட்டிலிருந்து அய்ந்து பார்ப்பன அர்ச்சகர்களை வரவழைத்து, அவர்களிடம் _ தமிழர்களின் கோயிலை ஒப்படைத்தானே. பழனி கோயில் தலப்புராணமே இதனைக் கூறுகிறதே! மரபு பின்பற்றப்பட வேண்டும் என்று பசப்பும் பார்ப்பனர்கள் இதற்குப் பதில் கூறுவார்களா?
“முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில், தமிழர்களிடையே முன்பு இருந்த சாதி வேறுபாடுகள் தொடர்ந்து வலுப் பெற்று வந்தன. வலங்கை இடங்கைப் பிரிவினர் என்ற புதிய சாதிப் பிரிவுகள் தோன்றின; மேல் சாதி, கீழ் சாதி என்ற பாகுபாடுகளும் தொடர்ந்தன.
சமுதாயத்தில் பிராமணர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. ஆனால் சங்க காலத்திலிருந்து தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்த தமிழ்ப் பிராமணர்களின் செல்வாக்கு குறைந்து, புதிதாக வடநாட்டிலிருந்து வந்து குடியேறிய வடமொழிப் பிராமணர்களின் செல்வாக்கு அதிகமாயிற்று. தமிழ்நாட்டில் தமிழன்கட்டிய கோயில்களின் கருவறைக்குள் செல்லும் உரிமையை தமிழன் பறி கொடுத்தான்.
சமுதாயத்தில் கோயில்களே ஆதிக்கம் செலுத்தின. ஆனால் அக்கோயில்கள் பிராமணர்களின் ஆதிக்க புரியாகவே காட்சி அளித்தன. அரசாங்க அதிகாரமும், சமயச் செல்வாக்கும் குவியப் பெற்றிருக்கும் கைகள் என்றுமே ஓய்ந்திருப்பதில்லை. அவ்வதிகாரத்தையும், செல்வாக்கையும் மென்மேலும் பெருக்கிக் கொள்ளவும், பெருகினவற்றை அழியாமல் பாதுகாத்துக் கொள்ளவும் அக்கைகள் பரபரத்துக் கொண்டிருப்பது இயல்பு.
எனவே, உழைப்பின்றியே தானமாகப் பெற்ற நிலங்களும், ஊர்களும், அரசாங்கச் செல்வாக்கும், வேள்வி வளர்க்கும் தனி உரிமையும் தம்மிடம் குவிக்கப் பெற்ற பிராமணர்கள் அவை யாவும், எக்காலமும் தம்மிடையே நிலைத்து நிற்கவும், மென்மேலும் வளர்ந்து வரவும், தம் குலத்தின் தலைமைப் பதவி நீடித்து வரவும் பல முயற்சிகளை மேற்கொள்ளலானார்கள். மன்னரின் முழு ஆதரவையும் அவர்கள் பெற்றனர்.
வேந்தர்களுக்கும், அவர்களைச் சார்ந்தவர்-களுக்கும் வமிசங்களையும், கோத்திரங்களையும், சூத்திரங்களையும் கற்பித்துக் கொடுத்தார்கள். மன்னர்களும் சாதி ஒழுக்கத்தை நிலை நாட்டுவதே நம் சீரிய கடமையாம் எனக் கூறும் மெய்க்கீர்த்திகளைப் புனைந்து கொண்டனர். ஆரிய பழக்க வழக்கத்தைப் பாராட்டிக் கூறும் சாத்திரங்களும், புராணங்களும் எழுந்தன.’’
(பேராசிரியர் அ. இராமசாமி எழுதிய ‘தமிழ்ப் பேரரசுகளின் சரிவும், வீழ்ச்சியும்’ _ பக்கம் 34--_35)
சிந்தனைச் செம்மல் கு.ச.ஆனந்தன் எழுதிய “வழிபாட்டில் வல்லாண்மை’’ நூல் என்ன கூறுகிறது?
“கி.பி.5ஆம் நூற்றாண்டின் பின்னரே மூவேந்தரையும் வயப்படுத்தி, ஆகமம், சங்கிதை, தந்திரம் என்னும் மூவகைத் தொழுமறைகளை இயற்றி, பிராமணர்களே திருக்கோயில்களில் வழிபாடு செய்து வருமாறு, திட்டம் செய்து விட்டனர்’’ _- மொழிஞாயிறு பாவாணர்
அடி பிறழாத முதல் ஆகமங்கள் இன்று நடைமுறையில் இல்லை. சைவாகமங்கள் 28இல் காமிகாகமம் மட்டுமே அடிக்கடி எடுத்தாளப்படுகிறது. மற்ற ஆகமங்களின் கருத்துக்களை 18 பத்ததிகளாகப் பின்னால் தொகுத்துள்ளனர். அவற்றினுள்கூட ‘சகலாகமசாரம், ‘வருணபத்ததி’ ‘நிர்வாகனப் பத்ததி’ ஆகியவைகளிலிருந்தே நெறி முறைகள் காட்டப்படுகின்றன.
முதல் ஆகமங்களில் பிற்சேர்க்கைகளும், இடைச் செருகல்களும் செய்யப்பட்டுள்ளன என்பதற்குரிய பல ஆதாரங்களும் தெரிகின்றன. குறிப்பிட்ட பிரிவினர்தான் ஆலய உள்துறைப் பணிகளைச் செய்ய வேண்டுமென்ற தனிநிலை உருவானதே வெகு பிற்காலத்தில் தான். ஏந்தான வாழ்க்கையும், வருவாய் வளர் நிலையும் கோயில் பூசகர்களுக்கு உறுதி ஆக்கப்பட்டவுடன், குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே பயன்பெறக் கருதி, வரையறைகள் செய்யப்பட்டன. அந்நிலையில்தான் பூசகப்பணிகளுக்கும், கோயில் வழிபாட்டுக்கும் தாழ் நிலைப் பிரிவினருக்கும் இடையே தடைச்சுவர் எழுப்பப்பட்டது.
மெய்ப்பொருள் மாற்றம்
வரலாற்றுப் பேராசிரியர் திரு.பி.டி.சீனுவாச அய்யங்கார் அவர்கள் தமது “தமிழர் வரலாறு’’ (பிவீstஷீக்ஷீஹ் ஷீயீ ஜிணீனீவீறீs) என்ற நூலில்,
“வைதீக சாத்திரங்கள், மக்களை நான்கு வருணங்களாக வகுத்து, நான்காம் வருணத்தைச் சார்ந்தவர்களை வேதம் மற்றும் வேதாந்தங்களைப் படிப்பதினின்று தள்ளி வைத்தன.... வைதீக முறைப்படி பிராமணர்கள் மட்டுமே மோட்சம் பெறலாம் என்பதாகும். ஆனால் ஆகமங்களே இந்தக் கோட்பாடுகளை எல்லாம் எதிர்த்து நிற்கின்றன: ஒரு சண்டாளனும்கூட ஆகமப்படி திருமால் அல்லது சிவனுடைய திருஉருவை பெற்று அதற்குப் பூசனைச் செய்யலாம் _ நான்கு வருணப் பாகுபாட்டை ஆகமங்கள் அங்கீகரிக்கவில்லை, ஆகமங்கள் எல்லோருக்கும் பொது, சிவதீட்சைப் பெற்ற பறையன் கூட ஒரு பார்ப்பனனுக்குத் தீட்சை கொடுத்து அவனுக்கும் குருவாகலாம்’’ என்று குறிப்பிடுகிறார். இன்று, வடமொழி ஆகமங்களை ஆலயங்களின் நடைமுறைக்குச் சான்றாகக் காட்டுவோர். அவற்றின் நால்வருண மூலத்தையே, முதன்மையாக வைத்து வாதிடுகின்றனர். ஆனால் ஆகமத்தின் மெய்ப்பொருள். அதனை முற்றும் ஏற்பதில்லை.
ஆகம மெய்ப் பொருளின் அடிப்படை, நால் வருணத்தை ஏற்கவில்லை என்றால் ‘வைகாநாச ஆகமத்தில்’ மட்டும் வருண, சாதி, அடிப்படைகளில்தான் ‘தீட்சை’ ‘சம்ப்ரோட்சணம்’ (தீட்டுக்கழியும் சடங்குகள்) ஆகியவை நடைபெற வேண்டுமென்று வரையறை செய்யப்பட்டிருப்பதேன்? முதனூலில் இடைச்சேர்க்கையா?
பார்ப்பன விதவையை மணந்து கொண்ட பிராமணர் ஒருவர் கோயில் கருவறையினுள் நின்று இறைவனைத் தொழுவதற்குத் தனக்கு உரிமை உண்டு என வழக்காடினார். ஆகமப்படி அந்த உரிமை அவருக்கு இல்லை என எதிர்தரப்பினர் மறுத்தனர். பதிதன் எனக்கூறி புகழ்பெற்ற முதலாவது இந்திய நீதிபதி என்றழைக்கப்படும் சர்.டி.முத்துச்சாமி அய்யர் அவர்கள் அவ்வழக்கை விசாரித்து,
“இந்த வழக்கில் வாதி கேட்கிற உரிமை கோயிலின் சில பகுதிகளில் நுழைய வேண்டும் என்பதாகும். ஒரு பிராமணன் என்ற நிலையிலும் ஒரு குடிமகன் என்ற நிலையிலும் இந்த உரிமையைக் கேட்க எப்பொழுதும் அவருக்கு உரிமை உண்டு’’ எனக் கூறினார். இக்கருத்தின்படி பார்த்தால் ஆகமங்களின் அடிப்படையே நிலைகுலைகிறதே!
(சிந்தனைச் செம்மல் கு.ச.ஆனந்தனின் _ ‘வழிபாட்டில் வல்லாண்மை’ _ பக்கம் 26_28)
தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழ் வெளியேற்றப்பட்டு சமஸ்கிருதம் ஆதிக்கம் பெற்றது.
தி.மு.க. ஆட்சியில் கோயில்களில் தமிழிலும் வழிபாடு என்று அறிவித்த நிலையில் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்றவர்கள் பார்ப்பனர்கள்.
‘எங்கே பிராமணன்?’ (அப்படி யாரும் இல்லையாம்) என்று எழுதும் திருவாளர் சோ.ராமசாமிகூட துக்ளக்கில் (18.11.1998) தலையங்கமே தீட்டினார்.
“மொழி ஆர்வமா? மத துவேஷமா?’ என்பது அத்தலையங்கத்தின் பெயராகும்.
“நாயன்மார்களும், ஆழ்வார்களும் இயற்றிய தமிழ்ப் பாடல்களை ஸம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தால் அர்த்தம் இருக்கும், அருள் இருக்காது. ரிஷிகளும், பக்தசீலர்களும் இயற்றிய ஸமஸ்கிருத துதிகளை தமிழில் மொழிபெயர்த்தால் பொருள் இருக்கும், புனிதம் இருக்காது. அதாவது இங்கு முக்கியத்துவம் மொழிக்கு அல்ல. ஒலிக்கு’’ என்று எழுதினாரே!
‘எல்லாம் வல்ல’ கடவுளுக்குக் கூட மொழி வித்தியாசம் தேவைப்படுகிறது. கடவுளையும் பார்ப்பனிய குடுவைக்குள் அடக்குகிறார்கள். தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்பதற்காகக் கூட திராவிடர் கழகம்தான் அதற்கான மாநாட்டை நடத்தியது. தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமை தாங்கிய அம்மாநாட்டை சென்னைப் பெரியார் திடலில் திராவிடர் கழகம்தான் நடத்தியது. (25.12.1980)
கரூர் மாவட்டம் திருமுக்கூடலூரில் உள்ள மணிமுத்தீசுவரர் கோயில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்பட்டது (9.9.2002) என்பதற்காக கோயில் தீட்டுப்பட்டுவிட்டது என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரசரஸ்வதி உட்பட குமுறினார்கள். தமிழில் அர்ச்சனை நியாயமில்லாதது என்று தமிழ்நாடு அர்ச்சகர்கள் சங்கத்தினர் (பார்ப்பனர்கள்) தீர்மானம் நிறைவேற்றினர். (‘தினமணி’ _ 2.9.2002) கோயிலை இழுத்துச் சாத்தி, தீட்டுக்கழித்தனர். சிதம்பரம் நடராஜன் கோயிலில் திருவாசகம் பாடிய ஆறுமுகசாமி என்ற பெரியவரை _ ஓதுவாரை கோயில் தீட்சதர்கள் அடித்து உதைத்தார்கள். (‘கல்கி’ _ 4.6.2007) பார்ப்பனர்கள் தமிழர்களே என்று கூறுவோர் இதற்குப் பிறகாவது சிந்திக்க வேண்டாமா?
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்று சட்டம் இயற்றினால் பார்ப்பனர்கள் எடுத்த எடுப்பிலேயே உச்சநீதிமன்றம் செல்லுகிறார்கள்.
தமிழன் வீட்டு நிகழ்ச்சிகளைப் பார்ப்பனர்கள்தான் நடத்திட வேண்டும்; சமஸ்கிருதத்தில்தான் அவை நடைபெற வேண்டும். இந்த 2016ஆம் ஆண்டிலும் இந்த மனப்பான்மையில்தான் இருக்கிறார்கள். இவற்றைப் பெரும்பாலும் மாற்றியமைத்தது தந்தை பெரியாரும் திராவிடர் கழகமுமே!
படையெடுப்பில் மிக மோசடியானது பண்பாட்டுப் படையெடுப்பு. அது கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால், வேத இதிகாச சாஸ்திரங்களின் பெயரால், பக்தியின் பெயரால் தமிழன் மூளையில் மாட்டப்பட்ட விலங்காக இருக்கிறது.
அதனை உடைப்பதுதான் தந்தை பெரியாரியல் என்பது. திராவிடர் கழகம் இந்தத் தளத்தில்தான் தனித் தன்மையுடன் களம் அமைத்துப் போராடி வருவதுடன் வெற்றியும் பெற்று வருகிறது. முழு வெற்றியும் காண சூளுரைப்போம்!
தமிழா! இனவுணர்வு கொள்!
தமிழா தமிழனாக இரு!!
-உணவமை,16-31.1.16

கோயில் நகரம் என்றால்...


திருமாலும் சிவனும் குருதிப்பலி எதுவும் கோரவில்லை. ஆனால், அவர்கள் பண்புக்கியைய அவர்கள் ஒரு கன்னிப்பலி கேட்கின்றனர். பல வழிகளில் _ சில மிகவும் நடுக்கந்தரும் முறைகளில் _ சிறு பெண்கள் தேடித் திரட்டப்பட்டு, இறைவனுக்குப் பணிவிடை செய்யும் தேவதாசிகள் ஆக்கப்படுகின்றனர். தென் இந்தியாவில், ஒரு நகர் எந்த அளவுக்குச் சமய முக்கியத்துவம் உடையதோ, அந்த அளவுக்கு மேக நோய்கள் அதில் மிகுதி.
1917இல் கும்பகோண நகரின் வாழ்க்கைப் புள்ளி விவரங்களை (Vital Statistics) ஆய்ந்து மதிப்பிடும் பணியைச் சென்னை அரசியலார் எனக்குத் தந்தனர். பல ஆண்டுகளாகப் பிறப்பு விகிதம் மிகக் குறைந்த அளவாய் ஆயிரத்துக்கு 30க்குச் சற்று மேலும் கீழுமாக ஊசலாடிக் கொண்டிருந்தது. அரசியல் அலுவலகத்தார் பிறப்புகளிற் பெரும்பாலானவை ஒழுங்காகப் பதிவு செய்யப்படத் தவறிவிட்டனவோ என்று அய்யுறத் தொடங்கினர். நகரவை மன்றம் இதனை உறுதியாக மறுத்தது. மாவட்ட வரி முதல்வரும் (Collector of the district)  தனிப்பட இதைத் துருவி ஆராய்ந்து, நகரவையின் முடிவையே உறுதிப்படுத்தினார்.
நான் நகரத்துக்குச் சென்றதும் நகரவை அலுவலாளர்களிடம், “பிறப்பு விகிதம் குறைவாயிருப்பதற்குக் காரணம் என்ன?’’ என்று கேட்டேன். மறுமொழி உடனே வந்தது. “இங்கே பன்னிரண்டு பெருங் கோயில்கள் இருக்கின்றன. அவற்றிலெல்லாம் தேவதாசிகள் இருக்கிறார்கள்’’ என்று அவர்கள் கூறினார்கள்.  மருத்துவ விடுதியில் உள்ள உள்நோயாளி (In-Patients) களில் நேர்பாதிப்பேர் வெள்ளை, வெட்டை முதலிய மேகநோய் வகைகளில் முனைத்த நோயாளிகளாக இருந்தனர். முனைப்பற்ற பொதுநிலை நோயாளிகள் பலர் ஆயுர்வேத மருத்துவரால் வெளியே கவனிக்கப் பட்டிருந்தனர். ஒரு பிராமண இளைஞர், “பிராமண மாதரில் அய்ந்தில் நான்கு பேர் இந்நோய்க்கிரைப்பட்டே இருக்கிறார்கள்’’ என்று கூறினார்.
மருத்துவமனைக்கும் வெளி நோயாளித் (Out-Patient) துறைக்கும் பொறுப்பேற்று 30 ஆண்டு அறுவை மருத்துவராயிருந்த ஒருவர் இந்தக் கருத்தை ஆதரித்தார். அத்துடன் பிராமணர்களைவிட சவுராஷ்டிரரின் நிலை இன்னும் மோசமானது; ஏனென்றால் அவர்களிடையே ஆண்களும் பெண்களைப் போலவே ஒழுக்கங் கெட்டவர்கள்; அத்துடன் மற்றவர்கள் அறிவதுபோல நோயைத் தடுக்கும் முறைகளையும் அவர்கள் அறியாதவர்கள்’’ என்று கூறினார்.
- பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார்
நூல்: இந்திய நாகரிகத்தில் திராவிடப் பண்பு, பக். 92_93.
-உண்மை,16-31.1.16