சங்கராச்சாரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சங்கராச்சாரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 19 மே, 2022

'காஞ்சி மகானின்' ''சபலம்!''


 'குமுதம்வார இதழ்  கிட்டத்தட்ட ஆன்மிக இதழாகவே மாறிவிட்டதுஒரு தமிழன் கையில் இருந்து வளர்ந்து வந்த குமுதம்இப்பொழுது ஒரு பார்ப்பனர் கையில் பலமாக சிக்கினால் என்ன ஆகும்?

'காஞ்சி மகான்புகழ் பாடத்தானே ஆரம்பிக்கும்ஒவ்வொரு வார இதழிலும் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் புகழ் அற்புதங்களை, 'அற்புதமாகக்கற்பனைப்படுத்தி சரடு சரடாக அள்ளி விடுவதுதான் அதன் பிழைப்பு.

ஒரு கதையைக் கேளுங்கள்:

''பரமாச்சாரியார் பட்டினியாய் இருந்தது ஏன்?'' என்பது தலைப்பு. ('குமுதம்', 30.3.2022, பக்கம் 96-98) திடுதிப்பென சங்கராச்சாரியார் உபவாசம் இருக்க ஆரம்பித்தாராம்இரண்டுமூன்று நாட்களாய் உபவாசம் தொடர்ந்ததாம்.

காஞ்சிமடப் பக்தர்கள் படபடத்தார்களாம்.

பெரியவர் இப்படி சாப்பிடாம இருக்கிறப்போ சிறீமடத்துல உள்ள நாம வேளை தவறாம சாப்பிடுறதை நினைச்சா மனமே கலங்குது'' - இப்படி ஆளாளுக்கு ஒன்றைப் பேசி மனம் கலங்கி குழம்பி வருந்தினார்களாம். (ஆனால்பக்தர்கள் சாப்பிடுவதை மட்டும் நிறுத்தவில்லை என்பது முக்கியம்).

''பெரியவாஎங்களில் யார் என்ன தப்பு செய்திருந்தாலும் மன்னியுங்கள்பிட்சை (உணவுஎடுத்துக் கொள்ளுங்கள்'' என்று பக்தர்கள் கெஞ்சினார்களாம்.

காஞ்சியார் என்ன பதில் சொன்னார்?

''தினமும் சந்திர மவுலீஸ்வர பூஜையில் சுவாமிக்கு நைவேத்யம் செய்யற சமயத்துல அந்தப் பிரசாதத்தோட பேரைச் சொல்றது பூஜா விதிபோன வாரத்துல ஒரு நாள் அப்படி நைவேத்யம் செய்தப்போ அந்தப் பட்சணத்தின் பெயரைச் சொன்னபோதுஎதிர்பாராத விதமா அதன் ருசியை நினைச்சி என் நாக்கில் ஜலம் வந்திடுத்துஅந்த நொடியே,ஒரு சன்யாசி இப்படி நாவடக்கம் இல்லாமல் இருக்கலாமாஅந்தத் தவறுக்குத்தான் இந்த உபவாசம்!'' என்றாராம்.

ஆககாஞ்சி மகான் ஜெகத்குரு சபலத்திற்கும்நாவடக்கம் இன்மைக்கும் உரியவர்தான்இதில் என்ன பெரிய மகான் - ஜெகத்குரு - வெங்காயம்!

மயிலாடன்

செவ்வாய், 25 மே, 2021

காஞ்சி மகாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

இன்றைய ஆன்மிகம்?

 அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்தானே...

உடல்நலம் பெற...

காஞ்சி மகாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்ம நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா!

பிரம்மாவைத் தோற்றுவித்தவரே!

நீயே நோய்களைப் போக்கி

நலம் தரவேண்டும்.

‘தினமலர்' ஆன்மிக மலர், 21.5.2021

அப்படியா! காஞ்சி மட சீட கோடிகள் மருத்துவர்களை நாடாமல், குருவாயூரப்பனை சேவிக்க வேண்டியதுதானே?

காமகோடியே சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்தானே!

திங்கள், 8 பிப்ரவரி, 2021

மாயாஜாலங்கள்பற்றி சங்கராச்சாரியார்!


கல்கத்தாவில் தங்கியிருந்த காஞ்சி சங்கராச்சாரியாரிடம் மந்திர மாயா ஜாலங்கள்பற்றி நிருபர்கள் கேட்ட கேள்விக்கு ஆச்சாரியார் அளித்த பதிலாவது: "மந்திரங்கள், மாயாஜாலங்கள் மதத் துறையைப் பிடித்த ஒரு சாபக் கேடு. ஆன்மீக உலகின் தூய்மைக்குக் களங்கம் விளைவிக்கும் இத்தகைய யுக்திகளும் தந்திரங்களும் சமயத் துறையின் அங்கங்களாகப் பாவிக்கப்படுவது பெருந் தவறு. இந்து மதம் வெறும் மாயவித்தைகளைக் கொண்டது அல்ல"

(23.10.1974 - செய்தித்தாள்களில்)

செவ்வாய், 10 ஏப்ரல், 2018

பெரியவாள்!'

காஞ்சி மடத்துக்கு ஏதோ ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே போகலாம் என்ற தவறான கருத்து நிலவி வந்த காலகட்டத்தில், இந்து மதத்தின் எந்தப்பிரிவினராக இருந்தாலும் சரி, இந்துக்கள் அல்லாதவர்களானாலும் சரி எவரும் அவரைத் தரிசிக் கலாம்;உரையாடலாம்என் னும் சூழ்நிலையை  ஏற்படுத் தியவர் ஜெயேந்திரர்.''

அயோத்திப்பிரச்சி னைக்குச் சுமுகமான ஓர் தீர்வுகாணவேண்டும்என்ற நோக்கத்துடன் அனைத்துத் தரப்பினரையும் ஒருங் கிணைத்த அவரது முயற்சி அவரதுவிசாலமானசமூகப் பார்வையின் வெளிப்பாடு தான். அவருக்கு மிகுந்த தமிழ்ப்பற்றுஉண்டு.அவர் ஆலோசனையின் பேரில், காஞ்சி மடம் சார்பில் தமிழ் இலக்கிய வகுப்புகள் நடத்தப்படுவது பலருக்குத் தெரியாது என்று நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் மூத்த பா.ஜ..க. தலைவரான இல.கணேசன்.''  - "கல்கி"

11.3.2018, பக்கம்.7

காஞ்சி மடாதிபதி ஜெயேந் திர சரஸ்வதி, யாரையும் வித்தியாசமாகப் பார்க்க மாட் டார் என்று கூறி, அவரை ஒருசமத்துவவாதிபோலதிரு வாளர்இல.கணேசன்சித் தரிக்கிறாரே-இது உண்மையா?

10.11.2002 அன்று மதுரை மாவட்டம், தும்பைப்பட்டிக்கு காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சென்றார். அது முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்த ஊர். அவ்வூர் வீரகாளியம்மன் கோவில் பூசாரி வெள்ளைச்சாமி என்ற பெரியவர்'' கொடுத்த பிரசாதத்தை இந்தப் பெரியவாள்'' பெற்றுக் கொள்ளவில்லையே!

மனிதனிடத்தில்மட்டு மல்ல - கடவுள் விடயத்தில் கூட உயர்ந்த ஜாதிக்கான கடவுள் - தாழ்ந்த ஜாதிக்கான கடவுள் என்று பிரித்துப் பார்ப்பவர் தான் பெரியவாளா?

திருப்பதி ஏழுமலையா னுக்கு மூன்று கிலோ எடையில் தங்கப் பூணூல் பூட்டியவராயிற்றே இவர். (மாலைமலர்', 16.3.2002).

அயோத்திப் பிரச்சி னைக்குச் சுமூகமான ஓர் தீர்வு காண வேண்டும் என்று விரும்பினாராம் இந்தப் பெரி யவாள்? உண்மைதானா? அவர் வாயாலே கேட்போமே!

அயோத்தியில் கட்ட டத்தை இடிப்பது கிரிமினல் நடவடிக்கை எனக் கூற முடியாது. இதற்காக மத்திய அமைச்சர்அத்வானி,முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் பதவி விலகத் தேவையில்லை'' (தினமணி', 27.11.200, பக்கம் 1) என்று சொன்ன இந்த சங்கராச்சாரியார்தான் அயோத்திப் பிரச்சினைக்குச் சுமூகத் தீர்வு காண விரும் பினாராம்!

எந்தக்கேடுகெட்டமனு சராகஇருந்தாலும்இந்தப் பார்ப்பனர்கள் சங்கராச்சாரி யார்களைவிட்டுக்கொடுக்க மாட்டார்கள். மாறாக மன தில் மகுடம் சூட்டி, ஆராதிப் பார்கள் என்பது மட்டும் ஞாபகத்தில் இருக்கட்டும்!

- மயிலாடன்

-விடுதலை நாளேடு, 9.4.18