வியாழன், 26 மே, 2022

பிரசவ வேதனையும்-மதமும்!

 


மருத்துவக் கலை விஞ்ஞான அடிப் படையில் அமையத் துவங்கிய காலத்தில்தான் மயக்க மருந்து களும் (Anaesthetics) அறிமுகமா யின. இன்னும் குறிப்பாகச் சொல் லப் போனால் அறுவை சிகிச்சை முறை நடைமுறைக்கு வந்த போது தான் மயக்க மருந்துகளும் பயன் படுத்தப்பட்டன. இதற்கு முன்பும் மயக்க மருந்துகள் ஓரளவு பயன் படுத்தப்பட்டது உண்மையே. ஆனால், சிகிச்சையின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக மயக்க மருந்து ஆகியது இப்போது தான்.

நோயின் வேதனையில் மனிதன் துன் புறக்கூடாது; அவனது வேதனையை அவன் உணராமல் இருக்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணம் காரணமா கவே இம்மருந்துகள் பயன்படுத்தப்பப்பட்டன.

இம்மருந்துகள் மிகவும் பயன்பட்டது பிரசவத்துறையில்தான், மனித குலத்தின் வேதனை மிக்க அனுபவமாகப் பிரசவம் கருதப்பட்டது. அதற்கு மத சம்பந்தமான தொடர்பும் அமைக்கப் பட்டிருந்தது. அதா வது பிரசவ வேதனை என்பது பெண்க ளுக்கு ஆண்டவனால் விதிக்கப்பட்ட தண்டனைகளில் ஒன்று; அதை மறக்கச் செய்யும் வண்ணம் யாராவது மயக்க மருந்து பயன்படுத்தினால் அது ஆண்டவனைத் தூஷித்ததற்குச் சமமாகும் என்று மதவாதி கள் கூறிவந்தார்கள்.

வேதனையை மறக்கக்கூடிய மயக்க மருந்து கொடுக்க முன்வரும் மருத்துவர் மட்டுமின்றி அம்மருந்தைத் துணிச்சலாக உட்கொள்ள முன்வரும் நோயாளிகள், குறிப்பாக பிரசவ வேதனையில் துடிக்கும் தாய்மார்களும் கூட மதவாதிகளின் தண் டனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

1591-ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறோம். பிர சவ வேதனையில் துடிதுடித்த பெண் ஒருத்தி மருத்துவரிடம் மன்றாடி தனக்கு மயக்க மருந்து தரும்படி கேட்டுக் கொண்டாள். இத்தகவல் மதத் தலைவர்களுக்குத் தெரிந்து போயிற்று.  அப்பெண் மீது தெய்வ நிந்தனைக் குற்றச்சாட்டைச் சுமத்தி அவருக்கு மரண தண்டனை விதித்தார்கள் அந்த மதவெறி யர்கள். பிரசவ வேதனை யில் துடிக் கத் துடிக்க அப்பெண்மணி மனித மத வெறியர்களால் உயிரோடு எரிக்கப் பட்டாள். எத்தனைக் கோரம்! எத்தனைக்  கொடூரம்!! (Dalyell) என்பவர் எழு திய Darker Superstitions of Scotland என்ற நூலில் இது விளக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு மதவெறியர்கள் கூறிய வாதத்துக்குக் கிறிஸ்தவ வேதாகமத்தில் ஆதாரம் உண்டா?

பைபிளில் ஆதிமனிதன் ஆதாம், ஆதி மனுஷி ஏவாள் பற்றிய ஏதேன் தோட்டத்துக் கதை இங்கே மதவாதிகளின் ஆதாரமாகப் பயன்படுகிறது.

சும்மா கிடந்த சிட்டுக் குருவிக்குச் சோற்றைப் போட, அது கொண்டையைக் கொண்டையை ஆட்டிக் கொண்டு கொத்த வந்த கதை போல சும்மா இருந்த ஆதாமிற்கு ஏவாள் பாலுணர்ச்சியை உண்டாக்க (நன்மை - தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைத் தானும் புசித்து அவனுக்கும் கொடுத்தது. வேறென்ன?) அதன் விளை வாக தேவன் சாபம் கொடுக்கிறார்.

ஏவாளுக்குக் கொடுத்த சாபம் என்ன தெரியுமா? நீ வேதனையோடே பிள்ளை பெறுவாய்! என்பது தான் அந்தச் சாபம்.

பெண்ணென்று பிறந்துவிட்டால் அவள் தாய்மைப் பேறு பெறவேண்டும் என்றால் வேதனையில்லாமல் அது நடக் காது என்று தேவன் சாபம் கொடுத்திருக் கும்போது, அந்த வேதனையே வரப்பிர சாதம் என்று தலைவணங்கி ஏற்பது தான் கடமை; தர்மம். இதை விடுத்து வேத னையை உணராமல் தடுக்க யார் முயன் றாலும் அது தேவ நிந்தனை ஆகும். தேவகோபத்துக்குப் பாத்திரமாவது முறை யல்ல; அல்லவா? - இவ்வாறுதான் அன் றைய மதவாதிகள் நம்பினார்கள்! அதன் விளைவாகவே ஸ்காட்லாந்து கர்ப்பிணி எரிக்கப்பட்டாள்.

மேற்கண்ட சாபம் - பைபிளில் ஆதியாகமம் 3ஆவது அத்தியாயம் 16ஆம் வசனத்தில் உள்ளது.

வியாழன், 19 மே, 2022

'காஞ்சி மகானின்' ''சபலம்!''


 'குமுதம்வார இதழ்  கிட்டத்தட்ட ஆன்மிக இதழாகவே மாறிவிட்டதுஒரு தமிழன் கையில் இருந்து வளர்ந்து வந்த குமுதம்இப்பொழுது ஒரு பார்ப்பனர் கையில் பலமாக சிக்கினால் என்ன ஆகும்?

'காஞ்சி மகான்புகழ் பாடத்தானே ஆரம்பிக்கும்ஒவ்வொரு வார இதழிலும் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் புகழ் அற்புதங்களை, 'அற்புதமாகக்கற்பனைப்படுத்தி சரடு சரடாக அள்ளி விடுவதுதான் அதன் பிழைப்பு.

ஒரு கதையைக் கேளுங்கள்:

''பரமாச்சாரியார் பட்டினியாய் இருந்தது ஏன்?'' என்பது தலைப்பு. ('குமுதம்', 30.3.2022, பக்கம் 96-98) திடுதிப்பென சங்கராச்சாரியார் உபவாசம் இருக்க ஆரம்பித்தாராம்இரண்டுமூன்று நாட்களாய் உபவாசம் தொடர்ந்ததாம்.

காஞ்சிமடப் பக்தர்கள் படபடத்தார்களாம்.

பெரியவர் இப்படி சாப்பிடாம இருக்கிறப்போ சிறீமடத்துல உள்ள நாம வேளை தவறாம சாப்பிடுறதை நினைச்சா மனமே கலங்குது'' - இப்படி ஆளாளுக்கு ஒன்றைப் பேசி மனம் கலங்கி குழம்பி வருந்தினார்களாம். (ஆனால்பக்தர்கள் சாப்பிடுவதை மட்டும் நிறுத்தவில்லை என்பது முக்கியம்).

''பெரியவாஎங்களில் யார் என்ன தப்பு செய்திருந்தாலும் மன்னியுங்கள்பிட்சை (உணவுஎடுத்துக் கொள்ளுங்கள்'' என்று பக்தர்கள் கெஞ்சினார்களாம்.

காஞ்சியார் என்ன பதில் சொன்னார்?

''தினமும் சந்திர மவுலீஸ்வர பூஜையில் சுவாமிக்கு நைவேத்யம் செய்யற சமயத்துல அந்தப் பிரசாதத்தோட பேரைச் சொல்றது பூஜா விதிபோன வாரத்துல ஒரு நாள் அப்படி நைவேத்யம் செய்தப்போ அந்தப் பட்சணத்தின் பெயரைச் சொன்னபோதுஎதிர்பாராத விதமா அதன் ருசியை நினைச்சி என் நாக்கில் ஜலம் வந்திடுத்துஅந்த நொடியே,ஒரு சன்யாசி இப்படி நாவடக்கம் இல்லாமல் இருக்கலாமாஅந்தத் தவறுக்குத்தான் இந்த உபவாசம்!'' என்றாராம்.

ஆககாஞ்சி மகான் ஜெகத்குரு சபலத்திற்கும்நாவடக்கம் இன்மைக்கும் உரியவர்தான்இதில் என்ன பெரிய மகான் - ஜெகத்குரு - வெங்காயம்!

மயிலாடன்