சனி, 18 நவம்பர், 2023

முனிவர்கள் பிறப்பு மூலம்

சிங்கத்திற்கு  சிங்கமகாசூரன் பிறந்தான்
புலிக்கு   வீரீஞ்சிகன் பிறந்தான்
யானைக்கு விநாயகன் பிறந்தான்
குதிரைக்கு அஸ்வத்ராமன் பிறந்தான்
கழுதைக்கு காங்கேயன் பிறந்தான்
கரடிக்கு ஜம்புவந்தன் பிறந்தான்
எருமைக்கு மகிஷன் பிறந்தான்
பசுவுக்கு கவுதமரிஷி பிறந்தான்
ஆட்டுக்கு அசமுகி பிறந்தான்
மானுக்கு ரிஷ்யசீருங்கன் பிறந்தான்
நாய்க்கு சவுநகன் பிறந்தான்
நரிக்கு கேசகம்பலன் பிறந்தான்
பன்றிக்கு நரகாசூரன் பிறந்தான்
குரங்குக்கு சம்புகன் பிறந்தான்
மயிலுக்கு கண்ணுவன் பிறந்தான்
கிளிக்கு சுகர் பிறந்தான்
பட்சிக்கு சகுனி பிறந்தான்
ஆந்தைக்கு களிநாதன் பிறந்தான்
தவளைக்கு மாண்டவ்யன் பிறந்தான்
மீனுக்கு மச்சஹந்தி பிறந்தான்
பாம்புக்கு சோமாஸ்வன் பிறந்தான்
மண்டுகத்துக்கு மண்டோதரி பிறந்தாள்
பர்வதத்திற்கு பார்வதி பிறந்தாள்
மலைக்கு வசுவதத்தன் பிறந்தான்
துரோனியில் துரோணன் பிறந்தான்
கமண்டலத்தில் அகஸ்தியன் பிறந்தான்
ஆற்றில் பீஷ்மன் பிறந்தான்
காற்றுக்கு பீமன் பிறந்தான்
புற்றில் வால்மீகி பிறந்தான்
குட்டையில் ஸ்கந்தன் பிறந்தான்
தாமரையில் பத்மை பிறந்தான்
அண்டத்தில் வாதன் பிறந்தான்
கோபக்கணலில் லட்சுமி பிறந்தாள்
சூரியனுக்கு கர்ணன் பிறந்தான்
சந்திரனுக்கு அரிச்சந்திரன் பிறந்தான்
செவ்வாய் கோளுக்கு தோஷன் பிறந்தான்
புதன் கோளுக்கு புரூரவா பிறந்தான்
வியாழன் கோளுக்கு ஜகன் பிறந்தான்
சுடலை சாம்பலில் புரீசீரவன் பிறந்தான்
சுடலை எலும்பில் சல்லியன் பிறந்தான்
முகத்தில் பிராமணன் பிறந்தான்
தோளில் சத்திரியன் பிறந்தான்
தொடையில் வைசியன் பிறந்தான்
காலில் சூத்திரன் பிறந்தான்
வாயில் வேதவல்லி பிறந்தாள்
மூக்கில் அஸ்வினி பிறந்தாள்
மனதில் மன்மதன் பிறந்தான்
தொப்பிளில் வீரவாகு பிறந்தான்
கொட்டாவியில் செந்தூரன் பிறந்தான்
தும்மலில் தூபன் பிறந்தான்
நிழலில் சுந்தரன் பிறந்தான்
கண்ணீரில் வானரன் பிறந்தான்
உந்திகமலத்தில் பிரம்மன் பிறந்தான்
வலது கால் விரலில் கக்கன் பிறந்தான்
இடது கால் விரலில் தாணி பிறந்தான்
கை பெருவிரலில் விஷ்ணு பிறந்தான்
ரோமத்தில் ரோமாஞ்சன் பிறந்தான்
பேய்க்கு காந்தாரி பிறந்தாள்
கலியுகத்திற்கு சனீஸ்வரன் பிறந்தான்
காசீப முனிவனுக்கு சூரியன் பிறந்தான்
விஷ்ணுவுக்கு ஐயப்பன் பிறந்தான்
நாரதனுக்கு 60 ஆண்டுகள் பிறந்தது
ஊர்வசிக்கு விசுவாமித்திரன் பிறந்தான்
மேனகைக்கு சாகுந்தலை பிறந்தாள்
வண்ணாத்திக்கு நாரதன் பிறந்தான்
புலைச்சிக்கு சாங்கியன் பிறந்தான்
பார்பனத்திக்கு கிருஷ்ணன் பிறந்தான்
 - பழ.பிரபு முகநூல் பதிவு,17.11.2013

செவ்வாய், 7 நவம்பர், 2023

அர்ச்சகர் பிரச்சினை - பல்வேறு தகவல்கள் (பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி... )

 

 (இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

அர்ச்சகர் பிரச்சினை - பல்வேறு தகவல்கள்

தொகுப்பு: மின்சாரம்

5

பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி... 

ஆன்மிகப் பணியில் சத்தியபாமா

‘பெண்கள் கோயில் கருவறைக்குள் செல்லக் கூடாது’, ‘சாமி சிலைகளை பெண்கள் தொட்டால் தீட்டு’ என்றெல்லாம் சொல்லி ஆன்மிகத்தில் பெண் களுக்கு இந்தச் சமூகம் காலம் காலமாகப் பூட்டி வந்த கைவிலங்கு, ‘பெண்களும் அர்ச்சகராகலாம்’ என்ற தமிழ்நாடு அரசின் உத்தரவால் உடைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கடந்த பத்து ஆண்டுகளாக 243 பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சியையும், 108 பெண் களுக்கு தமிழ் வேதங்களை முழங்கி குடமுழுக்கு செய்யும் பயிற்சியையும் கொடுத்திருக்கும் சேலம் மாவட்டம், மேச்சேரியில் வசிக்கும் சத்தியபாமா பற்றி அறிய நேர்ந்தபோது, ஆச்சரியமாகிப் போனோம்.

‘சத்தியபாமா அறக்கட்டளை’ மற்றும் ‘அரசயோகி கருவூரார் தமிழின குருபீடம் தமிழ்வேத ஆகம பயிற்சி பாடசாலை’யின் நிறுவனர் சத்தியபாமாவிடம் பேசினோம். “எனக்கு சொந்த ஊர், சேலம் மாவட்டத் தில் உள்ள மேச்சேரி. திருமணமாகி, மூன்று பிள்ளைகள் இருக்காங்க. சின்ன வயசுல இருந்தே ஆன்மிகத்தில் எனக்கு மிகுந்த ஈடுபாடு. ஆனா, பெண்களை கோயில் கருவறைக்குள்ள அனுமதிக்க மறுக்கிற வழக்கங்க ளுக்கு எதிராக மனதில் பல கேள்விகள் எழும். ஆதி காலத்துல பெண்கள் கருவறை வரை சென்று வழிபடும் உரிமை இருந்திருக்கு. பக்தி வளர்த்த நாயகிகளுக்கு, கோயில்களில் சிலைகள் இருக்கு. திருவரங்கம் கோயிலில் உள்ள ஆண்டாள் நாச்சியார், தமிழ் பாக்கள் பாடி வைணவ வழிபாட்டை வளர்த்த பெண். தஞ்சை இராசராச சோழன் கட்டிய பெரிய கோயிலில், சோழ னின் சகோதரி குந்தவை நாச்சியாருக்கும் முக்கியத் துவம் கிடைக்குது. இப்படி, பெண்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கோயில் பூசைகள், மந்தி ரங்கள் ஓதுவதில் முக்கியத்துவம் இருந்ததை அறிய லாம்’’ என்று ஆதிச் சான்றுகள் சொல்லி ஆரம்பித்தார் சத்தியபாமா.

``காலப்போக்குல, பெண்களை கோயில் கருவறைக் குள்ள அனுமதிக்க மறுத்த பிற்போக்குத்தனம் ஆன் மிகத்தில் நுழைந்தது. அது என்னை ரொம்ப நாள் உறுத்திட்டே இருந்ததால, கடந்த 2007 முதல் பெண் களின் கோயில் கருவறை உரிமை, தமிழ்வேத வழிபாட்டு முறைன்னு ஆழமா இறங்கிக் கத்துக்கிட் டேன். சென்னை, காரனோடையில் சமாதியாகியிருக் கும் 12ஆவது பதினெண் சித்தர் பீடாதிபதி அரசயோகி கருவூராரை குருவாக ஏற்றுக்கொள்ளும் பாக்கியம் கிடைத்தது. 23 ஆண்டுகளுக்கு முன்பு இறைவனடி சேர்ந்த அவர், ‘பெண்களை மாதவிடாயின் காரண மாக தீட்டாகக் கருதுகிறார்கள். ஆனால், பெண்கள் சிவபூசை செய்யலாம்’னு சொல்லியிருக்கிறார். அவர் வழியில் இது தொடர்பா இன்னும் பல விடயங்களைக் கத்துக்கிட்டேன்’’ என்பவர், தன் பயிற்சி முறை பற்றி கூறினார்.

6

``காலம் காலமாக நம் கிராமத்துக் கோயில்கள்ல நம்ம அப்பத்தாக்கள், அம்மத்தாக்கள் பூசை பண் ணினாங்க. இப்போகூட சில இடங்கள்ல வயதான ஆத்தாக்கள்தான் பூசை பண்ணுறாங்க. இடைப்பட்ட காலத்துலதான், பெண்களுக்கான கோயில் கருவறை உரிமை மறுக்கப்பட்டது. அதை மாற்றும் விதமா, பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை செயல் படுத்த, 2010இல் இந்த அறக்கட்டளையை ஆரம்பிச்சு பெண்களுக்கு பூசாரி பயிற்சி, குட முழுக்கு செய்யும் பயிற்சி கொடுக்க ஆரம்பிச்சேன். ஆரம்பத்தில், பத்து வாரப் பயிற்சியாகக் கொடுத்தோம். இப்போ மூன்று நாள்கள் பயிற்சியாகத் தர்றோம். கடந்த பத்து ஆண்டு களில் பெண் அர்ச்சகர்கள் குழுவைக் கொண்டு, 20 கிராமக் கோயில்கள்ல தமிழ்வேத முறைப்படி குட முழுக்கு விழாக்கள் நடத்தி யிருப்பதை எங்களோட பெரிய சாதனையாகப் பார்க்குறோம்.

எங்ககிட்ட கத்துக்கிட்ட இன்னும் சில பெண்கள், தங்களோட குலதெய்வக் கோயில்கள்ல பூசை பண்றாங்க. இதுவரை 243 பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சியும், 108 பெண்களுக்கு குடமுழுக்கு பயிற்சியும் கொடுத்திருக்கோம். மருத்துவத்துறை, காவல்துறை, கல்வித்துறைன்னு பல துறைகள்ல பணிபுரியும் பெண் களும் இங்கு வந்து குலதெய்வ வழிபாடு பயிற்சி எடுத் திருக்காங்க. இப்போ ‘பெண்களும் அர்ச்சகராகலாம்’னு அரசே அறிவித்திருப்பதால், பெரிய சந்தோசத்தில் இருக்கோம். இனி பெண்கள், அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களிலும் கருவறையில் பூசை செய் யும் காட்சிகள் காணக் கிடைக்கணும்’’ என்றார் நெகிழ்ச் சியுடன்.

சமீபத்தில் கரூரில் சத்திய பாமாவின் அமைப்பு சார்பில், தமிழ் அமைப்புகள் உதவியோடு 30 பெண் களுக்கு மூன்று நாள்கள் அர்ச்சகர் பயிற்சி கொடுக்கப் பட்டு, சான்றிதழும் வழங்கப்பட்டன. அவர் களில் சிலரிடம் பேசினோம்.

உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் பவ்யா. “எங்க ஊரு தேனி மாவட்டம் தேவதானப்பட்டி. உசிலம்பட்டியில பூக்கடை வெச்சிருக்கோம். என் வீட்டுக்காரர் தேவ தானப்பட்டியில் உள்ள ஆத்தோர சுந்தர விநாயகர் கோயிலுக்கு பரம்பரை பூசாரியா இருக்காரு. உசிலம் பட்டி மாதரை பத்ரகாளியம்மன் கோயில்லயும் பத்து ஆண்டுகளாக பூசாரியா இருக்காரு. சத்தியபாமா அம்மா அர்ச்சகர் பயிற்சி தர்றதை பத்தி, என் கொழுந் தனார் என்கிட்ட சொன்னாரு. எனக்கு இதுல ஆர்வம் இருக்குறதால, முயற்சி எடுத்து கலந்துக்கிட்டேன். மந் திரம் சொல்றது, நைவேத்தியம் செய்வது, தீபாராதனை காட்டுறது, ஹோமம் வளர்க்குறது, தீர்த்த கலசம் ரெடி பண்றது, ஹோமகுண்டம் போடுறதுனு எல்லா பூசை முறை களையும் சொல்லிக்கொடுத்தாங்க. தமிழ்வேத மந்திரங்கள் அடங்கிய புத்தகத்தையும் தந்திருக்காங்க. வீட்டுல 48 நாள்கள் கலசத்தை வெச்சு, மந்திரங்களை ஓதி பூசை பண்ணினா, எல்லா மந்திரங்களும் மனப் பாடம் ஆகிடும்னு சொல்லி யிருக்காங்க. வீட்டுல கலச பூசையை ஆர்வமா பண்ண ஆரம்பிச்சுட்டேன்’’ என்றார்.

7

கேரள மாநிலம், வண்டிபெரியார் பகுதியில் வசிக்கிறார் செல்வி. ‘`நான் ஏற்கெனவே சத்தியபாமா அம்மா கிட்ட பயிற்சி எடுத்திருக்கேன். இப்போ மூணு நாள்கள் பயிற்சியில மறுபடியும் வந்து கலந்துக்கிட்டேன். கருவறை உயிர்ப்பு மந்திரம், சிவயோக பயிற்சி, காப்பு மந்திரம், குருமந்திரம், சந்நிதான மந்திரம், கிரகநிலை மந்திரம், குலதெய்வ மந்திரம், அந்தந்தக் கிழமைக்குரிய மந்திரம்னு பல பயிற்சிகள் கொடுத் தாங்க’’ என்றார் பரவசத்துடன்..

சென்னையைச் சேர்ந்த மீனா நமச்சிவாயத்துக்கு வயது 57. ‘`இளம் வயதில் இருந்தே ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகம். தேவாரம், திருவாசகம் பாடல்கள் எனக்கு அத்துபடி. அதையெல்லாம் சொல்லி வீட்டு பூசைகள் பண்ணுவேன். விரும்பி அழைக்கிறவங்க வீடு களுக்குப் போய், ‘இல்லந்தோறும் திருவாசகம்’னு பாடல்களைப் படித்து பூசை பண்ணுவேன். ஆதம் பாக்கம் முத்துமாரியம்மன் கோயில்ல பெண்கள் கூடி பூசைகள் செய்து, வழிபாடு நடத்துவோம். ஆனாலும், கருவறையில சிவனை வழிபடணும் என்பது என் ஏக்கம். இந்த நிலையில, முத்துமாரியம்மன் கோயில் குருக்கள் விக்னேஷ் மூலமா கரூர்ல அர்ச்சகர் பயிற்சி கொடுப்பதைக் கேள்விப்பட்டு ஆர்வமா கலந்துக்கிட் டேன். அர்ச்சகர் பயிற்சி யோடு, ஆன்மிகத்துல இன்னும் பல விஷயங்களையும் புரியவெச்சாங்க.

பெண்கள் சில கோயில்களுக்குள்ள நுழையவே இன்னும் தடை இருக்கும் சூழ்நிலையில, ‘பெண்களும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற தமிழ்நாடு அரசின் சமீபத்திய அறிவிப்பு எங்களுக்கு எல்லாம் பெரும் உற்சாகம் கொடுத்திருக்கு. கடவுளின் அருளை பெண் கள், ஆண்கள் வழியாதான் பெறணுமான்னு என் மனசுல இருந்த ஆறாத கேள்வி, இப்போதான் சமாதானம் ஆகியிருக்கு. எனக்கு தமிழ்வேத மந்திரங்கள் ஓதி சிவ பூசை செய்ய ஆசை. அந்த வாய்ப்பு கிடைச்சா ஜென்ம பாக்கியம் அடைவேன்” என்றார் உணர்ச்சி மேலிட.

பெண்களின் குரல்கள் மீண்டும் கோயில் கரு வறைகளில் ஓங்கி ஒலிக்கட்டும்.

- ‘அவள் விகடன்', 14.9.2021

- - - - -

சபரிமலைக்கு பக்தனாக வந்த நான் 

இன்று சபரிமலையில் அர்ச்சகர்

யது கிருஷ்ணா தன் வயதொத்த மற்ற குழந்தைகளில் இருந்து வேறுபட்ட அரிதான குழந்தையாக இருந்தான். அவனை கோவிலுக்கு கட்டாயப்படுத்தி அழைத்து செல்ல வேண்டியதில்லை. கோவில்களில் பின்பற்றப் படும் சடங்குகளால் ஈர்க்கப்பட்ட யது தனது ஆறாவது வயதிலேயே வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலில் தன்னாலான உதவிகளை செய்து வந்தான். இரண் டாண்டுகளுக்கு முன்னர் திருவிதாங்கூர் தேவசம் போர்டு நடத்திய அர்ச்சகர் நியமனத் தேர்வில் மொத்தமுள்ள 62 இடங்களில் 4 ஆவது இடத்தை பெற்று, திருவிதாங்கூர் தேவசம் போர்ட் நிர்வகிக்கும் 1200 கோவில்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒருவர் முதல் முறையாக அர்ச்சகராக தேர்வு செய்யப் பட்டார்.

அதன்படி 2017 ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட புலையர் வகுப்பைச் சார்ந்த இளைஞரான இவர் பத் தினம்திட்டா மாவட்டத்தின் வலஞ்சவட்டம் கிராமத் தில் அமைந்துள்ள மணப்புரம் மஹாதேவா ஆலயத் தின் கர்ப்ப கிரகத்தில் நுழைந்து வரலாறு படைத்தார். அர்ச்சகராக நியமிக்கப்பட்டு இரண்டாண்டுகள் கடந்த நிலையில் இம்மாதம் (டிசம்பர்) சபரிமலையில் சிறப்பு அலுவல் நிமித்தமாக தெரிவு செய்யப்பெற்றுள்ளார். "சபரிமலைக்கு அய்ந்து முறை பக்தனாக வந்துள்ள நான் இன்று இங்கேயே பணி செய்வதென்பது உண்மையில் நல்வாய்ப்புத்தான்" எனக் கூறும் யது கிருஷ்ணாவின் பெற்றோர்கள் தினக் கூலிகள் ஆவர்.

8
தன் பன்னிரண்டாவது வயதில் திருச்சூரில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள வடக்கு பரவூரில் அமைந் துள்ள சிறீ குரு தேவ வைதீக தந்த்ர வித்யா பீடத்தில் சேர்ந்து சமஸ்கிருதத்தையும் தந்த்ர சாஸ்திரத்தையும் பயின்றார். அர்ச்சகராக நியமிக்கப்பட்ட பின்னர் படிப்பை தொடர முடியாமல் நிறுத்திய யது கிருஷ்ணா "சமஸ்கிருதத்தில் முனைவர் பட்டம் பெறவேண்டும் என்பதே தற்பொழுது என் விருப்பம்" என தன் விருப்பத்தை தெரிவிக்கிறார். தான் அடைய எண்ணிய இலட்சியங்களை அடைவதற்கு தனக்கு "ஜாதி" எவ்விதத்திலும் தடையாக இருக்கவில்லை எனக் கூறும் யது அர்ச்சகராக தான் பொறுப்பேற்றதும் உயர் ஜாதி பிரிவைச் சார்ந்த பலர் ஒன்றிணைந்து தான் அர்ச்சகர் பணியை சிரத்தையுடன் செய்யவில்லை என புகார் அளித்தனர். எனினும் விசாரணைக்கு பிறகு அவர்கள் அளித்த குற்றச்சாட்டில் உண்மையில்லை என்பது வெளியானது என்று கூறுகிறார். "அர்ச்சகராக பொறுப்பேற்றது முதல் எவ்விதமான கசப்பான அனுபவங்களையும் தான் பெறவில்லை" எனக் கூறும் யது வருங்காலத்தில் புகழ்பெற்ற கோவில் ஒன்றின் தலைமை அர்ச்சகராக ஆக வேண்டும் என நம்பிக்கை கொண்டிருக்கிறார்.

- ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா', 29.12.2019