வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

அண்ணா சொன்ன கடவுளர் கதைகள்

Image result for அண்ணா
ஆண்டவன் ரகசியம்
ஆதி காலத்தில் மனிதன் ஓயாத அலைகளைப் பார்த்தான். அதன் சீற்றத்தால் நாடு அழிவதைக் கண்டான்; கடும்புயல் வீசி பெருமரங்கள் சாய்வதைக் கண்டான்; இடி இடித்து அதன் ஓசையால் புற்றுக்குள் இருக்கும் நாகமும், புதரில் மறைந்து இருக்கும் புலியும் நடுநடுங்கி ஓடுவதை அவன் பார்த்தான்.
ஏன் இவை  ஏற்படுகின்றன என்று அவனுக்குப் புரியவில்லை. இது விளங்காத காரணத்தால் அவனுக்கு அச்சம் ஏற்பட்டது. ஏன் என்று புரியாது அச்சத்துடன் நின்ற அந்த மனிதனின் முன்னே ஒரு எத்தன் நின்றான். அவை என்ன தெரியுமா? அதுதான் ஆண்டவன் செயல் என்று அந்த எத்தன் கூறினான்.
அந்த ஆதி மனிதன் முன்னே நின்ற எத்தன்தான் உலகிலேயே முதலில் தோன்றிய பார்ப்பனன் அல்லது புரோகிதன். அச்சத்திலே ஏற்பட்டதுதான் ஆண்டவன் தத்துவம்.
முக்தி பெற்ற பார்ப்பான்!
மதுரை சோமநாதப் பெருமானின் ஒரு பார்ப்பன பக்தன் காமுகப்பட்டு, கருத்திழந்து தொட்டிலிலே வளர்த்தவளை கட்டிலுக்கிழுத்தான்- பெண்டாடினான்.  நடக்க கூடாத செயல்! ஆனால் நடந்திருக்கிறது.
தாய் அவனைப் பார்த்து பாவி அன்னையையா இந்த அக்கிரமம் செய்தாய் என்று கேட்க அவன் அப்பன் ஒருவன் இருப்பதால் அல்லவோ நீ எனக்கு அன்னையானாய் அவன் இல்லாவிட்டால்...! ஒரு பெண்தானே, என எண்ணி அவனை வெட்டி வீழ்த்தினான்.
இரு பாதகம் செய்த அவன் மருட்சி கொண்டு மதுரைக்கு வந்து  ஆலவாய் அப்பனிடம் அடைக்கலம் புகுந்தான் அலறினான். அப்போது சோம பெருமானும் மீனாட்சி அம்மையும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருக்க, அவன் குரல் கேட்ட பெருமான் ஆட்டத்தை நிறுத்த, உடனே அம்மை  பார்த்து ஏன் ஆடவில்லை என்று கேட்க அய்யன்,
அன்னையை பெண்டாடிய அடியாரின் கருத்தை விளக்க, அந்த மாபாவிக்கா அருள்புரிவது  என்று மீனாட்சி சிணுங்க உமையவளே, உற்றுக் கேள் எத்தகைய மகா பாதகம் என்றாலும் பிராமணன் என்றால் அருள்புரியத் தான் வேண்டும் என்று கூறினாராம். பிறகு அவன் முக்தி (மோட்சம்) பெற்றானாம்.
அக்கினியின் ஆசை!
ஒரு காலத்தில் சப்தரிஷிகள் யாகம் செய்தனராம். அந்த யாகத்திற்கு அவிர்ப்பாகம் வாங்கச் சென்ற அக்கினி பகவான் அந்த ஏழு ரிஷி பத்தினிகள் மீதும் காமமுற்றா னாம். இதனை வெட்கத்தை விட்டு தன் மனைவியிடம் சொன்னானாம்.
ஆண்டவனான அக்கினி பகவான் தன் மனைவியிடம் அதற்கு ஏற்பாடுகளையும் செய்யச் சொன்னானாம். அவன் மனைவியும் சப்தரிஷிகளில் ஆறு பேர்களின் மனைவியைப் போல உருவெடுத்து தன் கணவனின் காமத்தைத் தணித்தாளாம்.
ஆனால் ஏழாவது முனிவரின் மனைவியான அருந்ததியைப் போல மட்டும் உருவெடுக்க முடியவில்லையாம் அதற்குக் காரணம் அருந்ததி ஒரு ஆதி திராவிடப் பெண்ணாம்.
ஆதாரம்: பேரறிஞர் அண்ணா சொன்ன குட்டிக் கதைகள் 100 என்ற நூல்

ரஷ்யாவில் விஷ்ணுவின் மகன் விநாயகன்



 ரஷ்யாவில் உள்ள லெனின் கிராட் நகரில் உள்ள வினோதங்களில் ஒன்று 
அங்கு அமைந்திருக்கும் நாத்திகர்கள் காட்சி சாலை. உலகத்தில் உள்ள 
அனைத்து மதங்கள், கடவுள்கள் பற்றிய விளக்கக் குறிப்புகளும், கடவுள் 
உருவச் சின்னங்களும் அங்கு வைக் கப்பட்டுள்ளன.
மதங்களாலும், கடவுள்களாலும் அல்லது இவை பற்றிய நம்பிக்கையால் மக்களுக்கு ஒருவித பயனும் இல்லை என்பதை விளக்குவதே அந்த கண்காட்சியின் நோக்கம்.
அங்கு ஓரிடத்தில் விநாயகர் சிலைக்குக் கீழே விநாயகர் விஷ்ணுவின் மகன் என்ற குறிப்பு இருக்கிறது.
அந்தக் கண்காட்சியில் கடவுள், மதம் காரணமாக மனித குலத்துக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், அநீதிகள் பற்றிய விளக்கங்கள் காணப்படுகின்றன.

-விடுதலை,20.2.15,பக்-7

வியாழன், 19 பிப்ரவரி, 2015

ஆண்டாள் என்று ஒருவர் இருந்தாரா?

மார்கழி மாதம் - போட்டிப் போட்டுக் கொண்டு சில நாளேடுகள்

நாள்தோறும் ஆண்டாள் 

பாடியதாக திருப்பாவையிலிருந்து பாடல்களை வெளியிட்டு

வருகின்றன. உண்மையிலே 

ஆண்டாள் என்ற பக்தை இருந்தாளா? இல்லை என்று மறுப்பவர் யார்

தெரியுமா? வைணவப் 

பக்தரான சாட்சாத் ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) தான் அப்படி

சொல்லுகிறார் இதோ அவர்.

ஆண்டாள் என்னும் ஸ்திரி இருந்ததே இல்லை. நாலாயிர பிரபந்தத்தில்

ஆண்டாள் பாடியதாகச் 

சொல்லப்படும் பாசுரங்கள் அவர் பாடியவை அல்ல. பெரியாழ்வார்

என்னும் ஆழ்வார் சில 

பாசுரங்களைப் பாடி அப்பாசுரங்களை ஆண்டாள் என்னும் ஒரு பெயரால்

வெளிப்படுத்தினார் 

என்று திரிவேணி என்னும் ஆங்கில மாதப் பத்திரிகையில் (1946

செப்டம்பர் இதழில்) 

எழுதினாரே! இதற்கு என்ன பதில்?