பசு குறித்த கட்டுக்கதை
பசு மாட்டின் உடலில் உள்ள உறுப்புகள், அமைப்புகள்குறித்து அறிவியல் ரீதியில் எவரும் சொல்லிவிட லாம். தலைப்பகுதி, கண், காது, வாய், கொம்பு, கழுத்து, வயிறு, உடல் உள் பகுதி, மேல்பகுதி, கால்கள், குளம்புகள், வால் மற்றும் பால் கறக்கும் மடி எனப் பலவாறாக எவரும் சொல்லிவிடலாம்.
ஆனால் இல்லாத இந்த மதத்தில் தான் பசு மாட்டின் உடலில் கண் ணுக்கே புலப்படாத வகையில் கடவு ளர்கள் பலரும் வாடகையே தராமல் பசு மாட்டின் உடலில் குடியிருந்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.
சிரம்(தலை) - சிவபெருமான், நெற்றி-சிவசக்தி, வலது கொம்பு-கங்கை, இடது கொம்பு - யமுனை, கொம்புகளின் நுனி-காவிரி,கோதாவரி, முதலிய புண்ணிய நதிகள், சராசை உயிர் வர்க்கங்கள், கொம்பின் அடியில்- பிரம்மன், திருமால், மூக்கின் நுனி- குமரக்கடவுள், மூக்கின் உள்ளே- விதயாதரர்கள், இருகாதுகளின் நடுவில்- அஸ்வினிதேவர், இருகண்கள்- சூரியர், சந்திரர், வாய்-சர்ப்பாசுரர்கள், பற்கள்-வாயுதேவர், நாக்கு-வருணதேவர், நெஞ்சு-கலைமகள், கழுத்து-இந்திரன், மணித்தலம்- எமனும் இயக்கங்களும், உதடு-உதய அஸ்த்தமன சந்தி தேவதை கள், முரிப்பு-(கொண்டை) - பன்னிரு ஆதித்யர்கள்(சூரியர்கள்), மார்பு-சாத்திய தேவர்கள், வயிறு - பூமிதேவி, கால்கள்- அனிலன் என்னும் வாயு தேவன், முழந் தாள்- மருத்துதேவர், குளம்பு-தேவர்கள், குளம்பின் நுனி-நாகர்கள், குளம்பின் நடுவில்-கந்தர்வர்கள், குளம்பின் மேல்பகுதி-அரம்பையர், முதுகு-உருத்திரர், யோனி-சப்தமாதர்(ஏழு கன்னியர்), குதம்-இலட்சுமி, முன்கால்-பிரம்மா, பின்கால்-உருத்திரன் தன் பரிவாரங்களுடன், பால்மடி-ஏழு சமுத்திரங்கள், சந்திகள்-அஷ்ட வசுக்கள், அரைப்பரப்பில்-பிதிர் தேவதை, வால்முடி-ஆத்திகன், உரோமம்- மகாமுனிவர்கள், எல்லா அவயவங்கள்- கற்புடைய மங்கையர், சிறுநீர்-ஆகாய கங்கை, சாணம்-யமுனை, சடதாக்கினி-காருக பத்தியம், வாயில் - சர்ப்பரசர்கள், இதயம்- ஆகவணியம், முகம்- தட்சரைக் கினியம், எலும்பு, சுக்கிலம்-யாகத் தொழில் அனைத்தும், பசுக்களின் மடிக் காம்புகள் நான்கும் முறையே சுவா ஹாரம், சுவதாஹாரம். வஷ்டஹாரம், ஷந்தாஹாரம் என்று அழைக்கப்படுகின்றன.
இவ்வாறு பசுவின் உடலில் பலரும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது
இவ்வாறு பசுவின் உடலில் பலரும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது
-விடுதலை ஞா.ம,2.1.16.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக