-மா. பால்ராசேந்திரம்
அரிதான அறன்எய்தி அருளியோர்க்கு அளித்தலும்
பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும்
தமிழர் தமிழராய் இருந்த காலை தமக்குக் கருணையோடு நற்பயன் ஈந் தோர்க்குச் செய்தற்கரிய நற்செயல் களைச் செய்து உயர் பண்பாளர்களாய் வாழ்ந்தவர்களாவர். தம்மிடம் நட் பின்றிப் பகையெண்ணிப் பகைப் போரைப் பகைத்து அழித்திடும் செயலையும் அஞ்சாது செய்து, சிறந்த வீரத்திற்குரியோராய் வாழ்ந்தோரே தமிழரென்பார் கலித்தொகையில் பாலை பாடிய பெருங்கடுங்கோ.
அந்நற்றமிழர், இந்துவாகத் தம்மை மாற்றிக் கொண்டதால் அடைந்த அவமானங்களை எடுத்துரைக்கின் விரியுமே அன்றி சுருங்கி நிற்காது. இனமானம் காத்திடப் புறப்பட்ட, அறிவாசான் தந்தை பெரியாரால்தான் இன்று சுயமரியாதையுள்ள தமிழராய் வாழ்ந்து வருகிறோம்.
இல்லையாயின் அத்தனைத் தமிழனும் பார்ப்பனரின் காலைக் கழுவிக் குடித்துக் கொண்டே தான் இருந்திருப்பான். இன்றோ எல்லோரும் மீண்டும் இந்துவாக வாழ்வோம்; தன்மானத்தைத் தானம் செய்வோம் வாரீர்! என்னும் ஓநாய் களின் ஓலமிகு அழைப்பு ஆடுகளுக்கு விடுக்கப்படுகிறது. ஆடுகள் எச்சரிக் கையாய் இருக்க வேண்டிய வேளை இது.
இந்துவாய் இருந்து சூத்திரன், பஞ்சமன் எனும் இழிநிலையைச் சுமந்து இழந்தது போதும். மக்களாய் இல்லாமல் மாக்களாய் வதிந்து வாழ்ந்த நிலைக்கு முடிவு கட்ட இளந்தலைமுறையினர் தயாராக வேண்டும்.
ஜெப ஸ்தப தீர்த்தயாத்திர பிரவர்ஜ்ஜய
மந்தர சாதனம், தேவதாராதனம்
சசய்வஸ்திரீ சூத்திர பததானிஷன்
மந்தர சாதனம், தேவதாராதனம்
சசய்வஸ்திரீ சூத்திர பததானிஷன்
இந்துவாக இருந்தாலும் ஜபம், தபசு, தீர்த்த யாத்திரை, சந்நியாசம், கடவுள் தோத்திரம், ஆராதனை இந்துப் பெண் களுக்கும், இந்து சூத்திரர்க்கும் கிடை யாது என்கிறது ரிக்வேதம், சூத்திரர் என்றால் யார்? பார்ப்பனரல்லாத உழைக்கும் இந்து மக்கள் தாம். அவர்கள் வேசி புத்திரர்களாம் இந்து சாஸ்திரங்கள் சொல்கின்றன. இந்த இந்துமதம் தேவையா?
சூத்திரர் பற்றி வைகானச ஆகமம், சூத்திரர், சாமி விக்ரகத்தைத் தொட் டால் தீட்டாகி விடும். அதற்கு 108 கலசங்கள் வைத்துப் பிம்பங்களுக்குச் சம்ப்ரோட்சணம் செய்ய வேண்டும். தொடர்ந்து மகாசாந்தி ஹோமமும், பிராமண போஜனமும் செய்ய வேண்டும் என்கிறது. தீட்டுத் தண்டம் என்பதிலுங்கூட ஏழைகளுக்கு அன்னதானம் செய் என்றில்லாமல் பிராமணர்க்குப் போஜனம் செய் என்பதிலிருந்தே இந்துமதம் யாருடைய நலனுக்காக ஏற்படுத்தப்பட்டது என்பது நம் மக்களுக்குப் புரிய வேண்டாமா?
இந்து ஆசிரமக் கொள்கைப்படி பிரம்மச்சரியம், கிரகஸ்தன், வானப் பிரஸ்தன், சந்நியாசி என்ற நான்கு கட்டங்களில் சூத்திரர்க்குப் பின்னிரு நிலைகள் கிடையாது. ஏன்? வனாந்திரம் சுற்றும் நிலை ஏற்படுமாயின் ஊரில், நாட்டில் அடிமைத்தொழில் செய்திட, விளை பொருள் விளைவித்திட ஆளில் லாச் சூழல் உருவாகி உடலுழைப் பிலாத செல்வர் உலகை ஆண்டுலாவ லும் கடவுளாணை என்று ஏமாற்றும் பார்ப்பனர்த் தொப்பை வற்றிச் சுடுகாடு நிரம்பிடுவாரே பிணங்களாக அதனால் தான்.
இது மட்டுமன்று, இந்துத்துவா முழுமையையும் கைக்கொள்ள எல்லா ஜாதி இந்துக்களுக்கும் உரிமை கிடை யாது. ரிஷிகளின் வேதங்கள், சுருதிகள், ஸ்மிருதிகள், 16 வகைச் சடங்குகள், சாஸ்திரங்கள், புராணங்கள், ஆகமங்கள் இவற்றை நம்பி, ஏற்றுக் கொள்பவரே இந்து ஆவார். ஆராய்ந்தறிய முற்படு பவன் நாத்திகன் எனப் புறந்தள்ளப் படுவான். நம்புகிறவனிலுங்கூட அனைத்து இந்து ஜாதியினரும் எல்லாச் சடங்குகளையும் செய்திட உரிமை கிடையாது. ஏனிந்தப் பாகுபாடு என்று எவராவது சிந்திப்பது உண்டா?
வைதிக மதத்தின் அடிப்படையில் சனாதான தர்மத்தின் வழியில் கபிலர் கூறியது போல, நால்வகைச் சாதியை இந்நாட்டினில் நாட்டியோர் பார்ப் பனரே அதிலுங்கூடப் பார்ப்பனர் தவிர்த்தோரின் பிறப்பையும் கேவல மாகச் சித்தரித்துள்ளனர். ஜமதக் கினிக்கும், சத்யவதிக்கும் பிறந்த பரசுராமன், அர்ச்சுனனை வெட்டி அழித்தான்.
தொடர் பகையால் சத்திரியகுல ஆண் இனமே அழிந்தது. விதவைகளான சத்திரிய குலப் பெண் களுடன் பார்ப்பனர் கூடிப் பிறந்த இனமே சத்திரிய குலமாம். பார்ப்பனப் பெண்ணுக்கும் சூத்திரனுக்கும் பிறந் தோரே சண்டாளராம். இந்த இழிக் கருத்தையும் ஏற்று வாழ்வோரே இந்துவாம்.
இந்து என்போர் தம் ஜாதிக்குள் தனித்தே வாழ்கின்றனர். இன்ப துன்பங்கள் இந்துக்களுக்குள் அல்ல; அந்தந்த ஜாதிகளுக்குள் தாம். இறப்பிலும் இந்து இடுகாடு, இந்து சுடுகாடு கிடையாது. எல்லாமே ஜாதி வாரிதான். இதுவே, இசுலாமியர், கிறித்தவர் என்றால் ஒரே அமைவிடம் தான். பிறகெப்படி இந்து ஒன்றாக முடியுமென நினைக்கின்றனர்? இந்து ஒற்றுமைக்கு இந்துதானே எதிரியாக உள்ளார். பிற மதத்தவர் இல்லையே! இதனை ஏன் உணர மறுக்கின்றார்கள்?
இந்து என்போரின் தொழிலும், அவனவன் பிறப்பதற்கு முன்பே நிர்ணயிக்கப்படுகிறது. தொழிலுக்கும் அவனது திறமை, உளப்பாங்கிற்கும் எந்த உறவும் கிடையாது. மற்றைய ஜாதியாரின் விருப்பத்தை நிறைவேற் றிடக் கட்டாயப்படுத்தப்படுகிறான். உயர் ஜாதி இந்துக்களுக்கு ஊழியஞ் செய்யவே இந்து சூத்திரன் என்ற நிலை உறுதியாகி விட்டது. அவரின் இலட்சிய மும் அதுவே என்றாக்கி விட்டனர்.
கீழ் ஜாதித்தன்மை ஒழிய வேண்டு மாயின் அந்நியருக்காக நாம் உழைக்கப் பிறந்தோம் என்கின்ற எண்ணத்தைக் கைவிட்டு, நம் உழைப்பின் பயனைச் சோம்பேறிகள், பாடுபடாத மக்கள் அனுபவிக்கக் கூடா தென்ற உறுதி கொள்ள வேண்டும் என்பார் தந்தை பெரியார் அவர்கள். ஜாதியைப் போக்கிட முயலாமல் இந்துவாக வீரியத்துடன் ஆரியத்தை அணைத் திடுவது கொள்ளிக்கட்டை யால், தன் தலையைதானே சொரிந்து கொள்வதற்கு ஒப்பாகுந்தானே!
இந்துவாய் இதுவரைக் கண்ட பலன் யாது? சித்தம் துடிக்கின்ற சேயின் நிலைமைக்கு ரத்தவெறி கொண்டலை யும் நால்வருணம் ஏனிரங்கும்?
இரங்காதென்பார் புரட்சிக் கவிஞர் இன்றும், நிகழ்கிறதே! 2001இல் உத்தரப்பிரதேச மாநிலம், முசாபர்பூர் மாவட்டம், அலிப்பூரைச் சேர்ந்த விஷால் என்ற 20 வயதுப் பார்ப்பனப் பையன், சோனு எனும் 18 வயது ஜாட் இனப்பெண். இருவருமே ஒருவரையொ ருவர் விரும்பினர்.
ஊரார்க்குத் தெரிய வர இருவரையும் பிடித்துத் தூக்கி லிட்டுக் கொன்றனர் இந்துப் பெரிய வர்கள். இந்துக்கள் ஒன்றுபடுவோம் என்பதைத் தலையில் பிறந்த பார்ப்பனர்கள், முன்னிறுத்திக் காட்ட வில்லையே? இந்துத்துவா இந்துவையே சமத்துவ மனிதராக ஏற்றுக் கொள்ளாது என்பதுதானே உண்மை. ஜாதியால் தானே மனிதனின் மதிப்பும், இழிவும் காட்டப்படுகின்றது. ஜாதி நீங்கிய இந்து நிலைநிற்காதுதானே!
1927இல் பாலக்கோட்டில், காம கோடி பீடாதிபதி ஜகத்குரு சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், காந்தியாரிடம், இந்து அரிஜன ஆலயப் பிரவேசத்தில் சாஸ்திரங்களையும், பழைய வழக்கங்களையும் நம்பி, நாட்டில் பெரும்பாலோர் இருக்கின் றனர். அவர்கள் மனம் நோகும்படிச் செய்யும் எந்த ஒரு மாறுதலும் இம்சைக்கு ஒப்பானதாகுமென, தாம் முடிவுக்கு வர வேண்டியதுள்ளது என்றாரே! பழைய வழக்கம், சாஸ்திர மென்றால் என்ன?
மாதரமுபைத்ய கஸாரமுபைதி புத்ரார்தீத
சகாமார்த்தி நாபத்ரலோகா நாஸ்தீத
ஸ்வரம்பரவோ விந்துஹஃ தஸ்மாத் புத்ரார்த்தம்
மாதரம், ஸுரஞ்சதி, ரோஹதி
சகாமார்த்தி நாபத்ரலோகா நாஸ்தீத
ஸ்வரம்பரவோ விந்துஹஃ தஸ்மாத் புத்ரார்த்தம்
மாதரம், ஸுரஞ்சதி, ரோஹதி
புத்திரர் நிமித்தம் தாய், தமக்கை, தங்கை, மகள் யாரோடாயினும் புணரலாம். இந்த இழிந்த சாக்கடைச் சாஸ்திரங்களை நம்புகிறவர் மனம்தாம் நோகுமாம். இந்த இம்சைக்கு எதிராக அரியின் குழந்தைகளாம் அரிஜனங் களைக் கோயிலுக்குள் விட மறுத்தார் லோககுரு.
இன்று நுழைகின்றனரே யாரால்? தந்தை பெரியாரின் வைக்கம் போராட் டமே தெருவையும், கோயிலையும் விரியத் திறந்தது. கோவா அகதிகளாம் சரஸ்வதிப் பார்ப்பனருங்கூடக் கேரளக் கோவிலுக்குள் நுழைந்தது. பெரியா ராலே என்று வாய்விட்டுக் கூறி மகிழ்ந்தாரே.
மனிதநேயத்தை மறுப்பது இந்துத்துவா மனிதநேயம் காப்பது சுயமரியாதை இயக்கமே! இந்து எனும் கட்டு ஜாதிபேதம் கற்பித்து, உட்பகையாய்த் தலைவிரித்தாடி அரத்தால் தேய்த்திடும் இரும்பு, வலிமை குன்றுவதுபோல தமிழர் சமுதாயத்தை என்றுமே உயர விடாது தடுத்திடும்.
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி என்பது குறள் கூறும் நெறி.
உட்பகை உற்ற குடி என்பது குறள் கூறும் நெறி.
இந்துவில் வீழோம்; சுயமரியாதைத் தமிழராய் வாழ்வோம் என்று உறுதி யேற்போம்.
-விடுதலை ஞா.ம.18.4.15