வெள்ளி, 29 ஜூன், 2018

வியாதிக்கும் கடவுளுக்கும் ஒரு தொடர்பும் இல்லை


21.9.1930 - குடியரசிலிருந்து...

சீனாவையும், ஜப்பானையும், பிரஞ்சையும், இங்கிலாந்தையும், அமெரிக்காவையும், நினைத்துப் பாருங்கள். எந்த நாட்டுக்காரானாவது அவனுடைய வாழ்நாளையும், சொத்தையும், நேரத்தையும், இந்த மாதிரிக் கடவுளையும், மதத்தையும் காப்பாற்றுகின்ற முட்டாள் தனமானதும், பயனற்றதும், நாச வேளை யானதுமான வேலையின் ஈடுபடுத்துயிருக்கின்றார்களா என்பதை நடுநிலையில் இருந்துயோசித்துப் பாருங்கள்.

கடவுள் போய் விடும் என்று பயந்த மக்களால் வேறு என்ன வேலையாகும் என்று நினைக்கிறீர்கள்.  அவர்களை விட பயங்காளிகள், அறிவிலிகள் வேறு யார் இருக்கக்கூடும்? என்று எண்ணுகிறீர்கள்.  கடவுளுக்கும், சமயத்திற்கும், அடிமையான நாடு ஒரு நாளும் சுதந்திரத்திற்கு அருகதையுடையதாகவே ஆகாது. ஆகவே, நீங்கள் முதலில் அந்தப் பயத்தை ஒழியுங்கள். சமயத்தை வணங்க வேண்டாம் அதற்குப் பூசை செய்ய வேண்டாம் என்றால், உங்கள் மார்க்கம் போய்விடுமா? அப்படியானால் இந்து மதத்திற்கும், இஸ்லாம் மதத்திற்கும் வித்தியாசமென்ன? இந்து மதச் சம்பந்தமான கோவில் களெல்லாம் பெரிதும் சமாதுதான்.

அந்தக் கடவுளெல்லாம் அநேகமாய் அந்தச் செத்துப் போன ஆண்களைதான் என்பதே எங்கள் ஆராய்ச்சிக் காரர்கள் துணிவு.   அதனால்தான் பல புண்ணியஸ் தலங்களும், பல கடவுள்களும் ஏற்பட வேண்டியதாயிற்று.

அதையொழிப் பதற்குத் தோன்றியதுதான் இஸ்லாம் மார்க்கம் ஆகும். இஸ்லாம் மார்க்கத்தில்தான் ஒரே ஒரு கடவுள் என்பதும், அதற்கும் உருவமில்லை என்பதும்.  அதைத் தவிர வேறொன்றையும் வணங்கக் கூடா தென்பதுமான கொள்கைகள் சொல்லப்படுகிறது. அதற்கு நேர்விரோதமான நீங்கள் சமாதுகளையெல்லாம்  வணங் கவும், பூசிக்கவும், ஆரம்பித்துவிட்டீர்களானால் நீங்கள் எப்படி மற்றவர் களைக் குற்றம்சொல்ல யோக்கியதை யுடையவர்களா வீர்கள்? அது மாத்திரமல்லாமல், அல்லா சாமி பண்டிகையிலும், கூண்டு முதலிய திருவிழாக்களிலும் இஸ்லாமானவர்கள் சிலர் நடந்துகொள்வதும் மிகவும் வெறுக்கத்தக்கதாகும்.

இப்படிப்பட்டவர்களைக் கொண்ட மார்க்கம் எப்படி பகுத்தறிவு மார்க்கமென்றும், இயற்கை மார்க்க மென்றும் சொல்லிக் கொள்ளக்கூடும்?  என்பதை யோசித்துப் பாருங்கள்.

இவைகளையெல்லாம் ஒரு மார்க்கக் கட்டளை என்று சொல்லுவதானால் இந்த மார்க்கம் ஒரு நாளும் அறிவு மார்க்கமாகவோ உண்மையில் நன்மை பயக்கும் மார்க்கமாகவோ இருக்க முடியவே முடியாது.  அதோடு மாத்திரமல்லாமல் மார்க்கத் தலைவருக்கும், மார்க்க வழிகாட்டி யார்க்கும் கூட இது அவமானமும் வசைச் சொல்லுமாகும் என்றே சொல்லுவேன்.

இன்று இந்துவும், கிறிஸ்தவரும், பகுத்தறிவைக் கண்டால் பயப்படுகின்றார்கள்.  இஸ்லாம் மார்க்கத்தில் தான் தங்கள் மார்க்கம் பகுத்தறிவுக்கு ஏற்றது என்று நிரூபிக்க பந்தயம் கட்டி வருகிறார்கள்.

ஆனால், இப்படிப்பட்ட  சமாதான வணக்கமும், பஞ்சா வணக்கமும், கொடி வணக்கமும் கூண்டு உற்சவம், அல்லா சாமி பண்டிகையையும்  கொண்ட மக்களை ஏராளமாய் வைத்துக்கொண்டு அவற்றையும் மார்க்கக் கொள்கையோடு சேர்த்துக் கொண்டிருக்கின்றவர் களையும் வைத்துக்கொண்டு இஸ்லாம்மார்க்கம், பகுத்தறிவு மார்க்கமென்று எப்படி சொல்லிக்கொள்வது என்பது எனக்குத் தெரியவில்லை.

திராவிடச் சமுதாயத்திற்குச் சிறப்பாகத் தமிழ் மக்களுக்கு இன்று சமயம் இல்லை; வேத சாத்திரங்கள் இல்லை. அவை மாத்திரம் அல்லாமல் கடவுளும் இல்லை. கண்டிப்பாக இல்லை. அப்படி இருந்தும் திராவிடன் சமயத் துறையில் மேற்கண்ட வைகள் பேரால் கீழ்மகன் - சூத்திரன், சூத்திரச்சியாக இருந்துகொண்டு பெருந்தொல்லைகளையும் ஏழ்மையையும் அனுபவித்துக் கொண்டு காட்டுமிராண்டியாய் இருந்து வருகிறான். பூசைக்கும் பூச்சுக்கும் அள வில்லை; கோவில் குளத்திற்கும் கணக்கு இல்லை; அவைகளுக்காகச் செலவாகும்

பணம், நேரம், ஊக்கம் ஆகியவைகளுக்கும் எல்லை இல்லை.-      - தந்தை பெரியார்

- விடுதலை நாளேடு, 22.6.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக