திங்கள், 24 ஜூன், 2019

‘ஹிந்து' வெள்ளைக்காரன் உபயமே!

கேள்வி: இந்து மதத்தினர் வன்முறையைஆதரிப்பதில்லை என்கிறீர்கள் நீங்கள். இந்து என்றமதமே இல்லை என்கிறார் கமல். இதற்கு என்னசொல்கிறீர்கள்?

பி.ஜே.பி. தேசிய செயலாளர்: ‘‘இவ்வளவு சிறப்பானபெரிய சனாதன தர்மத்துக்குத் தனிப்பெயரில்லையே என நான் கவலைப்பட்டிருக்கிறேன். (காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திரசரஸ்வதி) ஒருமுறை மடத்தில் இருக்கும் சிப்பந்திவந்து, ராமன் வந்திருக்கிறான் என்றார். நான்என்னை அறியாமல், எந்த ராமன் என்றுகேட்டுவிட்டேன். ஒரு ராமன்தானே மடத்தில்இருக்கிறான், எந்த ராமன் என்று கேட்கிறீர்களே எனசிப்பந்தி கேட்டார். என் கவலை நீங்கியது. நான்பிறந்த ஊரில் நான்கு ராமன்கள் இருந்தார்கள். அதனால், ஒருவரை நெட்டையான ராமன் என்றும், அடுத்தவரை குட்டையான ராமன் என்றும், மற்றவரைகருப்பு ராமன் என்றும், நான்காமவரை சிவப்பு ராமன்என்றும் கூறுவார்கள். ஒரே ராமன் மட்டும் இருந்தால்அப்படி வேறுபடுத்திக் கூறவேண்டிய அவசியம்இல்லை. அதுபோலத்தான் இந்து மதமும். இந்தஉலகில் வேறு எந்த மதமும் தோன்றுவதற்கு முன்பாகஇந்து மதம் மட்டுமே இருந்ததால், அதை தர்மம் என்றுபொதுவாக குறிப்பிட்டோம். பிற்காலத்தில் வேறுமதங்கள் தோன்றியதும், இந்து மதம் எனஅடையாளப்படுத்திக் கொண்டோம்.

‘குமுதம்', 29.5.2019, பக்கம் 10, 11

இதனைத்தான் பி.ஜே.பி. தேசிய செயலாளர்பேட்டியில் கூறியுள்ளார்.

வெள்ளைக்காரனை மிலேச்சர் என்றும், அவர்களின்மொழியான ஆங்கிலத்தை மிலேச்ச மொழி என்றும்ஒப்புக்குப் பேசிக்கொண்டு நாட்டில் அந்தவெள்ளைக்காரன் மொழிப் படிப்பதில்முன்னணியில் இருந்தும், அவர்களிடம் அண்டிப்பதவிகளைச் சுவீகரித்துக் கொண்டவர்கள்தான்பார்ப்பனர்கள் என்பது ஊருக்கும், உலகுக்கும்தெரியும். முதல் ஆண்டு காங்கிரஸ் மாநாட்டுக்குத்தலைமை வகிக்கும் வக்கீல் பார்ப்பனர்கள், அடுத்தாண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகளாகிவிடுவார்கள்.

உண்மை என்னவென்றால், இவர்களின் மதத்துக்குஇந்து என்று பெயர் சூட்டியவன் அந்த மிலேச்சவெள்ளைக்காரன்தான்.

தேசிய செயலாளர் இழுத்துப் பேசியிருக்கிற அந்தகாஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதிஎன்ன சொல்லுகிறார் - அவர் எடுத்துக்காட்டும்அந்தத் தெய் வத்தின் குரல் என்ன சொல்லுகிறது?

‘‘நமக்குள் சைவர்கள், வைஷ் ணவர்கள் என்றுவேறாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும், வெள்ளைக்காரன் நமக்கு ஹிந்துக்கள் என்றுபொதுப் பெயர் வைத்தானே - நாம் பிழைத்தோம் - அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது. அவன் மட்டும் ‘ஹிந்து' என்று பெயர்வைத்திருக்காவிட்டால், ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைஷ்ணவர், சாக்தர், முருக பக்தர், பிள்ளையார்உபாசகர், அய்யப்பன் பக்தர், எல்லையம்மனைக்கும்பிடுகிறவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டுதனித்தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம்! இப்போது ‘ஹிந்து சமுகம்' என்று பொதுப் பெயரில்சொல்லப்படும் சமுதாயத்தை இப்படி ஏழெட்டாகத்தனித்தனி மதம் என்று பிரித்துவிட்டால், அதற்கப்புறம்ஒவ்வோர் ஊரிலும் முஸ்லீம், கிறிஸ்தவர்கள் போன்றமதங்கள்தான் அதிகத் தொகை இருப்பார்கள். அதாவது இப்போது தேசத்தின் இரண்டு பகுதிகளில்மட்டும் பாகிஸ்தான் முளைத்திருப்பதுபோல்இல்லாமல் நம் தேசம் முழுவதுமேபாகிஸ்தானாகியிருக்கும். எத்த னையோகிருத்திருமங்கள் செய்து பாகிஸ்தானைப் பிரித்தஅதே வெள் ளைக்காரன்தான், எத்தனையோயுக்திகள் செய்து நம்மை ஆரியர் - திராவிடர்என்றெல்லாம் பேதப் படுத்திய வெள்ளைக்காரன் தன்னையும் அறியாமல் நமக்கு ஹிந்து என்று பொதுப்பெயரைத் தந்து, இன்று இந்தியா தேசம் என்றுஒன்று இருக்கும்படியான மகாபெரிய நன்மையையேசெய்திருக்கிறான்.''

- ‘‘தெய்வத்தின் குரல்'

முதல் பாகம், 267-268

வெள்ளைக்காரனில்லாவிட்டால் ஹிந்து மதம் கிடையாது - ஆம் என்க!

- மயிலாடன்
-  விடுதலை நாளேடு, 20.6.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக