சனி, 22 பிப்ரவரி, 2020

சரஸ்வதி குறித்து அபிதான சிந்தாமணி

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

கூறும் புராண சரஸ்வதியின்

கும்பியைப் புரட்டும் ஆபாசக் கதை இதுதான்

சரஸ்வதி குறித்து அபிதான சிந்தாமணியில் கூறப்பட்டுள்ளதாவது:

சரஸ்வதி - A

1.     பிரமனால் சிருட்டிக்கப்பட்டு அவனால் மணக்கப்பட்டவள். வித்யாதிஷ்டான தேவதை. இவள் வெண்ணிறமாய், வெள்ளை வஸ்திரம் கைகளில் ஜப மாலை, புத்தகம், வீணை, எழுத் தாணி தரித்து எழுந்தருளியிருப்பள் எ-ம்., இவளுக்கு ஒரு கரத்தில் ஜபமணி, மற்றொன்றில் புத்தகம், இருகரங்களில் வீணை எ-ம், இவட்குப் பிரமவித்தை முகம், நான்கு வேதமும் கரங்கள், எண்ணும் எழுத்தும் கண்கள், சங்கீதசாகித்தியம் தனங்கள், ஸ்மிருதி வயிறு, புராண இதிகாசங்கள் பாதங்கள், ஓங்காரம் யாழ் எனவுங் கூறுப.

2.     தக்ஷயாகத்தில் காளியால் மூக்கறுப்புண்டு மீண்டும் பெற்றவள்.

3.     இவள் தன்னைச் சிருட்டித்துத் தன்னுடன்கூடப் பிரமன் வருகையில் பிரமனுக்கு அஞ்சிப் பெண்மான் உருக்கொண்டு ஓடினள். பிரமன் ஆண்மான் உருக் கொண்டு தொடர்ந்து சிவமூர்த் தியால் தடையடையக் கண்டு சிவமூர்த்தியை வேண்டிப் பிரமனைக் கணவனாகப் பெற்றவள்.

4.     பிரமன் தன்னை நீக்கி யாகஞ்செய்ததால் நதி யுருவாய் யாகத்தை அழிக்க வந்தவள்.

5.     ஒரு காலத்து அகத்தியரிடம் பிறந்தவள்.

6.     பிரமன் காயத்திரி, சாவித்திரி, சரஸ்வதி மூவரு டன் கூடிக் கங்காஸ்நானத்திற்குப் போக சரஸ்வதி ஆகாய வழியில் பாடிக்கொண்டிருந்த வித்யாதர ஸ்திரீயின் இசையில் மனம் வைத்திருந்தனள். சரஸ்வதி ஒழிந்த இருவரும் தம் நாயகருடன் கங்கையடைந்து ஸ்நானஞ் செய்தனர். சரஸ்வதி சற்றுத் தாமதித்துப் பிரம தேவனிடஞ்சென்று தான் வருமுன் ஸ்னானஞ் செய்தது பற்றிக் கோபித்தனள். பிரமன் உன்மீது குற்றம் இருக்க என்மீது பயனிலாது கோபித்தலால் (48) அக்ஷரவடிவாகிய நீ உலகத்தில் நாற்பத்தெட்டுப் புலவர் உருவாகத் தோன்றிச் சிவமூர்த்தியை பணிந்து அவர் தந்த சங்கப்பலகையில் இருந்து வருக எனச் சாபம் ஏற்றவள்.

7. ஒரு யாகத்தில் இவள் வரத் தாமதித்ததால் பிரமன் இடைக்குலக் கன்னிகையைத் தாரமாகப் பெற்ற தால் இவளால் தேவர் சபிக்கப்பட்டனர் என்ப.

8.     இவளும் இலக்குமியும் மாறு கொண்டு தங்களில் உயர்ந்தார் யாரென்று பிரமனைக் கேட்கப் பிரமன் இலஷ்மிதேவி என்ன மாறுகொண்டு நதியுருவாயினள்.

9. பிரமன் யாகஞ்செய்ய அந்த யாக கலசத்துக்குள் தோன் றியவள், புலத்தியரை அரக்கனாகச் சபித் தவள். சரத் காலத்தில் பூசிக்கப்படுதலால் சாரதை எனவும் பெயர்.

10.    இவள் பிரமனால் சிருட்டிக்கப்பட்டு அவரால் மோகிப்பக்கண்டு, அந்தமோகவார்த்தையு ரைத்த முகத்தை நோக்கி நீ இவ்வாறு தூஷித் துக் கொண்டிருந்ததால் ஒரு காலத்தில் சிவ பெருமானையும் அவ்வாறு தூஷித்து அவரால் சிரம் அறுபடக் கடவையெனச் சபித்தனள். (சிவமகா புராணம்)

11.    இவளும், கங்கை, லஷ்மி முதலியவர்களும் விஷ்ணுபத்னிகள். ஒரு கால் விஷ்ணு கங்கை யிடம்அதிக ஆசை கொண்டு அவளுடன் நகைமுகமாயிருந்தலைக் கண்ட சரஸ்வதி, பொறாமை கொண்டு லஷுமியை நோக்க லஷ்மி கங்கைக்குச் சார்பாயிருத்தலைக் கண்டு இவள் லஷ்மியைச் செடியாகவும் நதியாகவும் போகச் சபித்தாள். கங்கை சரஸ்வதியை நதியுரு வமாகவெனச் சபித்தாள். பின் ஸரஸ்வதி கங்கையை நோக்கி நீயும் நதியுருவமாய் உலகத்தவரது பாபத்தைச் சுமக்க என்றனள். லஷ்மியிதனால் தர்மத்வஜருக்கு குமாரியாகித் துளசியாகவும், பத்மாவதியெனும் நதியாகவும் பிறந்தனள். கங்கையும் சரஸ்வதியும் நதிகளாகப் பிரவகித்தனர். லஷ்மி சங்கசூடனை மணந்தனள். கங்கை சந்தனுவை மணந்தனள். சரஸ்வதி பிரம பத்தினி ஆயினள். சரஸ்வதி பாரத வருஷத்தில் நதியாக வந்தபடியால், பாரதி, பிரமனுக்குப் பத்தினியானதால் பிராம்மி, வாக்குகளுக்குத் தேவியாதலால் வாணி, அக்னியைப்போல் பாவத்தைக் கொளுத்தி யாவருங்காண மஞ்சணிறம் பெற்றிருத்தலின் சரஸ்வதியென அழைக்கப்படுகின்றனள். இந்த (3) தேவியரும் பூலோகத்தில் கலி (5000) வருஷஞ்சென்றபின் தங்கள் பதமடைவர். (தேவி-பா.)

- "அபிதான சிந்தாமணி", பக்கம் 723-724

- விடுதலை நாளேடு, 2.2. 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக