புதன், 30 மார்ச், 2022

வெற்றிலையில் ஏன் காம்பை கில்லிவிட்டு வெற்றிலை போடுகிறோம் யாருக்காவது தெரியுமா????


இராமாயணத்தில் உள்ள உட்கதையில் வரும் கதைதான் இந்த கதை

தேவேந்திரனை அழைத்து மன்மதன் விருந்து ஒன்றை கொடுத்தான்

அந்த விருந்து மிகவும் தடபுடலாகவும் ஆட்டமும் பாட்டமுமாக இருந்தது

திலோதமா ஊர்வசி ரம்பா போன்றவர்களின் ஆட்டம் பாட்டம் படு ஜோராக இருந்தது "படு ஜோர்னா நிர்வான நடனம்" ஒரே குஜால்தான் 

ஒரு வழியாக விருந்து முடிந்தது
விருந்து முடிந்த கையோடு மன்மதன் தேவேந்திரனுக்கு தாம்பூலம் கொடுத்தார் மன்மதன்

அந்த தாம்பூலத்தில் உள்ள வெற்றிலையை ருசிபார்த்தார் தேவேந்திரன் 

வெற்றிலையின் ருசியை உணர்ந்த தேவேந்திரன் இது போல ருசியை நான் அனுபவித்தது இல்லை என்று சொல்ல இனிமேல் இந்த வெற்றிலை தேவலோகத்திர்க்கு தேவை என்றார் 

தேவேந்திரன் மன்மதனிடம் ஒரு கோரிக்கையை வைத்தார் நீங்கள் எப்படியாவது இந்த வெற்றிலையை தேவலோகத்திர்க்கு அனுப்பி வைக்கவேண்டும் என்றார் 

 தேவேந்திரனின் கோரிக்கையை "ஆசையை" மன்மதன் ஏற்றுக்கொண்டார் எனவே தினமும் தேவலோகத்திர்க்கு வெற்றிலையை பணியாட்க்கள் மூலம் அனுப்பி வைத்தார்

வெற்றிலையை எடுத்துகொண்டு சென்ற பணியாட்க்கள் திரும்பி வரும்போதும் அதே வெற்றிலையை எடுத்து வருகிறார்கள்
தேவலோகம் போவதர்க்குள் அந்த வெற்றிலை வாடிவிடுகிறது என்று

வரும் வெற்றிலை வாடிபோய் இருந்தால் அந்த வெற்றிலை வேண்டாம் என்று தேவேந்திரன் திருப்பி அனுப்பிவிடுகிறான்

இதனை கேட்டு கவலை அடைந்த மன்மதன் நாட்டில் தன்டோரா போட சொல்கிறார் யார் வெற்றிலையை வாடாமல் தேவலோகம் கொண்டுபோய் சேர்க்கிறார்களோ அவர்களுக்கு தக்க சன்மானம் {பரிசு} வலங்கப்படும் என தன்டோரா {விளம்பரம்} போட உத்தரவு போடுகிறார்  

இதை கேள்விபட்ட ஒரு பெண் ஒருவள் இந்த வெற்றிலையை நான் கொண்டுபோய் சேர்க்கிறேன் என்றாள்

மன்மதனுக்கு ஒரு சின்ன சந்தேகம் வந்தது யார் யாரோ பெரிய பெரிய பயில்வான் கூட எடுத்து சென்று தோல்வி அடைந்துவிட்டான் நீ எப்படியம்ம எடுத்து செல்வாய் என்று கேட்க அந்த பெண் உங்களுக்கு ஏன் அந்த கவலை நான் எடுத்து செல்கிறோன் என்று சொல்லி வெற்றிலையை எடுத்து செல்கிறாள் 


ஒரு வழியாக அந்த பெண் தேவலோகம் போய் சேர்ந்தாள் அவளை கண்ட தேவேந்திரனுக்கு ஆச்சரியம் பெரிய பெரிய பயில்வான் கூட எடுத்துகொண்டு வரமுடியவில்லை நீ எப்படி எடுத்து வந்தாய் என்று கேட்க நீங்கள் முதலில் எனக்கு கொடுக்க வேண்டிய பரிசை கொடுங்கள் நான் சொல்கிறேன் என்று சொல்கிறாள் 
உடனே தேவேந்திரன் அவளுக்கு சேர வேண்டிய பரிசை கொடுக்க உத்தரவுவிடுகிறார்

பரிசை பெற்றுக்கொண்ட அந்த பெண் வெற்றிலைய்டை வாடமல் எப்படி எடுத்து வந்தேன் என்று தேவேந்திரனுக்கு சொல்கிறாள்

மன்னரே வெற்றிலையின் காம்பை எப்போதுமே "ஈரப்பதம்" உள்ள இடத்தில் வைத்திருந்தால் வெற்றிலை வாரமல் வதங்காமல் இருக்கும்
எனவேதான் நான் என் உடம்பில் ஈரப்பதம் உள்ள இடத்தில் வைத்து எடுத்து வந்தேன் என்றால்
இதனால்தான் வெற்றிலை வாடாமல் இருந்தது என்றால் 

இதை கேட்ட தேவேந்திரன் அடிபாவி அங்க பொய் இதை வைத்திருந்தியா? என கோவம் கொள்ள 

உடனே நாட்டில் ஒரு உத்தரவை போட்டான் இந்த வெற்றிலையை "அந்த" இடத்தில் வைத்ததாள் இனி இங்கே யாரும் வெற்றிலை  போடக்கூடாது என சொல்லி உத்தரவிட்டார் 

பூலோகத்தில் போடுவார்களே அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்க அதர்க்கும் ஒரு உத்தரவை போட்டார் 

அசிங்கமான"அந்த"இடத்தில் வைத்திருந்ததால் இனி  வெற்றிலை போடுகிறவர்கள் காம்பை கிள்ளிவிட்டு வெற்றிலை போட வேண்டும் என்று உத்தரவு போட்டார்

எனவேதான் நம் மக்கள் வெற்றிலையை போடும்போது காம்பை கிள்ளிவிட்டு போடுகிறார்களாம்
வெறும் காம்பை மட்டும் திண்பவரும் உண்டு மறந்துவிடாதீர்

எனவே தோழர்களே இந்த கதைகளை பாருங்கள் உட்க்கதையாக இருந்தாலும் அதிலும் எப்படிப்பட்ட மோசமான ஆபாச கதைகள் நீங்கள் பின்பற்றும் ஒவ்வொரு இந்துமத பண்டிகைகளிலும் ஆபாசம் நிறைந்து இருக்கிறது   தெரிந்தும் இதை நாம் பின்பற்றலாமா? சிந்தியுங்கள் நன்றி வணக்கம்


                               -ஈரோட்டு பூகம்பம்-
முகநூல் பக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக