செவ்வாய், 3 செப்டம்பர், 2019

"கிருஷ்ண லீலைகளுக்கு வக்காலத்து வாங்குபவர்களே, இதற்கென்ன பதில்?''



இன்றைய தினமலர்' (சென்னை செவ்வாய் 3.9.2019) நாளிதழில் பேச்சு, பேட்டி, அறிக்கை' என்ற நடுப்பக்கத்தில் வெளிவந்துள்ளவைகளில் ஒன்று இதோ:

சாமியார் ஆசாராம். நீதிமன்றத்தில்  பேச்சு'' என்ற தலைப்பிட்டு,

எங்களது கடவுள் கிருஷ்ணன், பல பெண்களுடன் ஒரே நேரத்தில் கூடியிருந்தார். அதை, தெய்வச்செயலாக ஹிந்துக்கள் பார்க்கிறோம்.

அதேபோல்தான் நாங்களும் பிரம்ம சொரூபமான சாதுக்களாகிய நாங்கள் பெண்களுடன் சேருவது தெய்வீகச் செயலுக்கு ஒப்பானது. மக்கள் என்னை தெய்வமாகப் பார்க்கின்றனர்.''

- எங்கே கூறுகிறார் இந்த தெய்வமானவர் ஆசாராம் என்ற கிரிமினல் குற்றவாளி - நீதிமன்றத்தில்!

பலே, பலே, திரைப்பாடல் ஒன்றை எழுதிய கவிஞர், மனிதன் என்பவன் தெய்வமாகலாம்' என்று எழுதி, பாட வைத்தாரல்லவா? அப்படி இந்த மனிதர்கள் சாதுக்களாகி எப்படி எந்த செய்கையின்மூலமாக தெய்வமாகி' விட்டார்கள் பார்த்தீர்களா?

கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற வாதமெல்லாம் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, இருக்கிறார் என்றே வாதத்திற்காக ஒப்புக்கொண்டால், அந்தக் கடவுள் ஒழுக்கத்தைப் போதிக்கும் கடவுளாக இருக்கவேண்டாமா? பக்தர்களே, சொல்லுங்கள்!

கிருஷ்ணலீலை பற்றி,   நாம் தேர்தல் பிரச்சாரம் தொடங்குமுன், பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமைகளுக்கு முக்கிய காரணம் பெரியார், வீரமணி, திராவிடர் கழகம் போன்றவர்கள்தான் என்று அர்த்தமற்று எழுதிய துக்ளக்' ஏட்டிற்குப் பதில் கூறவே, ஹிந்து மதத்தில் வணங்கும் கிருஷ்ண லீலைகள் - குளிக்கும் பெண்களின் சேலைகளைத் தூக்கி மரத்தில் வைத்துக்கொண்டு, குளத்திலிருந்து பெண்களை (நிர்வாண கோலத்தில்) கரையேறி வரச் சொன்ன லீலைகள் செய்வது பெரிய பாலியல் வன்கொடுமை அல்லவா என்றெல்லாம் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பேசியதை, தேர்தலில் வாக்கு வாங்க திசை திருப்பினார்கள்; பொங்கி எழுந்தனர் பூணூல் கூட்ட ஆண்களும், பெண்களும் நாக்கில் நரம்பின்றி, நாகரிக வரம்பின்றி வீரமணி யாருக்குப் பிறந்தான்' என்று பேசி, தங்களது உயரிய பண்பைப் பதிய வைத்தார்கள்.

தமிழக அரசும், ஆளுங்கட்சியின் கூட்டணித் தலைவர்களும், ஜாதியை வைத்து இழந்த செல்வாக்கை மீண்டும் பிடிக்கலாம் என்ற சில உதிரிகளும் ஓங்கி, ஓங்கி பேசினர்! மயிரைச் சுட்டால் கரியாகுமா, அட பிரகஸ்பதிகளே?''

தேர்தலில் படுதோல்வி கண்டனர்; முக்காடு இட்டு மூலையில் பதுங்கினர்!

நீதிமன்றத்திலேயே ஆசாராம் பாபு' (துடைப்பக்கட்டைக்குப் பட்டுக்குஞ்சம் கட்டியதுபோல) பட்டத்தோடு கிரிமினல் பேர்வழியான சாமியார், தனது ஆசிரமத்தில் ஏராளமான இளம்பெண்களிடம் பாலியல் வன்கொடுமை நடத்தியவர். அசிங்கத்திற்காகவோ, குற்றத்திற்காகவோ சிறிதும் வருந்தாமல், நியாயப்படுத்தித் தப்பிக்க முயலுகிறாரே - ஆணவத்தோடு.

அதற்கு எது துணை போகிறது? கிருஷ்ண லீலை என்ற கடவுள் லீலைதானே!

அன்று மயிலாப்பூர் மாமிகளும், மற்ற அவாளும் துடிதுடித்துக் கிளம்பினரே, இன்று ஆசாராம் பாபு'?வின் சாமியார் லீலைகள் பதிலுக்கு என்ன மறுப்புக் கூறப் போகிறார்கள்?

அட வெட்கங்கெட்ட மூளிகளே! அவர்களின் முந்தானையில் தொங்கிய துரவுபதை மைந்தர்களே! (பாரதப் புதல்வர்கள்' அல்லவா! அதனால்தான் அப்படி அழைக்கலாம்!)

வேளுக்குடி கிருஷ்ணன் என்ற ஒரு காலட்சேபக்காரர்; அது பகவான் சிறுவனாக இத்துணுண்டு' வாண்டுவாக இருந்தப்போ என்று சமாதானம் கூறினார் - பாகவதம் புராணத்தில் அதற்குரிய மறுப்பை ஆதாரப்பூர்வமாக நாமும் எடுத்துக்காட்ட முடியுமே!

கடவுள் இருந்து தொலைத்தால்கூட இப்படியா பாலியல் வன்கொடுமைக்கு ரோல்' மாடல்களாக, பாலியல் குற்றத்தைச் செய்யத் தூண்டுவோராக (abettor) இருக்கலாமா?

திராவிடம்' என்றால் என்ன தெரியுமா?

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்'

ஒழுக்கமிலார் ஏதிருந்தும் இலார்'

என்பதே!

பகுத்தறிவுவாதிகளின் பண்பு ஒழுக்கம் அல்லவா? பெரியார் சொன்னாரே, ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து, பக்தி என்பது தனிச் சொத்து' என்று.  அவரை இனியாவது சரியாகப் புரிந்துகொள்ளுங்கள், துள்ளித் திரியும் துன்மத்தர்களே!

குற்றங்களைத் தூண்டலாமா உங்கள் கடவுள்கள்

முன் உதாரணம்! மகாவெட்கக்கேடு!!

- ஊசி மிளகாய்

- விடுதலை நாளேடு, 3. 9. 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக