செவ்வாய், 10 ஏப்ரல், 2018

பெரியவாள்!'

காஞ்சி மடத்துக்கு ஏதோ ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே போகலாம் என்ற தவறான கருத்து நிலவி வந்த காலகட்டத்தில், இந்து மதத்தின் எந்தப்பிரிவினராக இருந்தாலும் சரி, இந்துக்கள் அல்லாதவர்களானாலும் சரி எவரும் அவரைத் தரிசிக் கலாம்;உரையாடலாம்என் னும் சூழ்நிலையை  ஏற்படுத் தியவர் ஜெயேந்திரர்.''

அயோத்திப்பிரச்சி னைக்குச் சுமுகமான ஓர் தீர்வுகாணவேண்டும்என்ற நோக்கத்துடன் அனைத்துத் தரப்பினரையும் ஒருங் கிணைத்த அவரது முயற்சி அவரதுவிசாலமானசமூகப் பார்வையின் வெளிப்பாடு தான். அவருக்கு மிகுந்த தமிழ்ப்பற்றுஉண்டு.அவர் ஆலோசனையின் பேரில், காஞ்சி மடம் சார்பில் தமிழ் இலக்கிய வகுப்புகள் நடத்தப்படுவது பலருக்குத் தெரியாது என்று நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் மூத்த பா.ஜ..க. தலைவரான இல.கணேசன்.''  - "கல்கி"

11.3.2018, பக்கம்.7

காஞ்சி மடாதிபதி ஜெயேந் திர சரஸ்வதி, யாரையும் வித்தியாசமாகப் பார்க்க மாட் டார் என்று கூறி, அவரை ஒருசமத்துவவாதிபோலதிரு வாளர்இல.கணேசன்சித் தரிக்கிறாரே-இது உண்மையா?

10.11.2002 அன்று மதுரை மாவட்டம், தும்பைப்பட்டிக்கு காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சென்றார். அது முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்த ஊர். அவ்வூர் வீரகாளியம்மன் கோவில் பூசாரி வெள்ளைச்சாமி என்ற பெரியவர்'' கொடுத்த பிரசாதத்தை இந்தப் பெரியவாள்'' பெற்றுக் கொள்ளவில்லையே!

மனிதனிடத்தில்மட்டு மல்ல - கடவுள் விடயத்தில் கூட உயர்ந்த ஜாதிக்கான கடவுள் - தாழ்ந்த ஜாதிக்கான கடவுள் என்று பிரித்துப் பார்ப்பவர் தான் பெரியவாளா?

திருப்பதி ஏழுமலையா னுக்கு மூன்று கிலோ எடையில் தங்கப் பூணூல் பூட்டியவராயிற்றே இவர். (மாலைமலர்', 16.3.2002).

அயோத்திப் பிரச்சி னைக்குச் சுமூகமான ஓர் தீர்வு காண வேண்டும் என்று விரும்பினாராம் இந்தப் பெரி யவாள்? உண்மைதானா? அவர் வாயாலே கேட்போமே!

அயோத்தியில் கட்ட டத்தை இடிப்பது கிரிமினல் நடவடிக்கை எனக் கூற முடியாது. இதற்காக மத்திய அமைச்சர்அத்வானி,முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் பதவி விலகத் தேவையில்லை'' (தினமணி', 27.11.200, பக்கம் 1) என்று சொன்ன இந்த சங்கராச்சாரியார்தான் அயோத்திப் பிரச்சினைக்குச் சுமூகத் தீர்வு காண விரும் பினாராம்!

எந்தக்கேடுகெட்டமனு சராகஇருந்தாலும்இந்தப் பார்ப்பனர்கள் சங்கராச்சாரி யார்களைவிட்டுக்கொடுக்க மாட்டார்கள். மாறாக மன தில் மகுடம் சூட்டி, ஆராதிப் பார்கள் என்பது மட்டும் ஞாபகத்தில் இருக்கட்டும்!

- மயிலாடன்

-விடுதலை நாளேடு, 9.4.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக