சனி, 13 டிசம்பர், 2014

இதுதான் மனுதர்மம்



அந்தப் பிரம்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம்தோள்துடைபாதம் இவைக ளினின்றுமுண்டான பிராமணசத்திரியவைசியசூத்திர வருணத்தாருக்கு இம் மைக்கும் மறுமைக்கும் உபயோகமான கருமங்களைச் தனித் தனியாகப் பகுத்தார். -
அத்தியாயம் 1, சுலோகம் 87
பிராமணனுக்கு ஓதுவித்தல்ஓதல்எக்கியஞ்செய்தல்எக்கியஞ் செய்வித்தல்தானம் கொடுத்தல்தானம் வாங்குதல் ஆகிய இவ்வாறு தொழிலையும் ஏற்படுத்தினார்.
-_ 
அத்தியாயம் 1, சுலோகம் 88
சூத்திரனுக்கு இந்த மூன்று வருணத்தாருக்கும் பொறாமையின்றி பணி செய்வதை முக்கியமான தருமமாக ஏற்படுத்தினார். இதனால் அவனுக்குத் தான் முதலியவையுமுண்டென்று தோன்றுகிறது.
அத்தியாயம் 1, சுலோகம் 91
பிராமணன் முதல் வருணத்தானான தாலும்பிரம்மாவின் முகமாகிய உயர்ந்தவிடத்தில் பிறந்ததினாலும் இந்தவுலகத்தில் உண்டாயிருக்கிற சகல வருணத்தாருடைய பொருள்களையும் தாமன் வாங்க அவனே பிரபுவாகிறான்.
அத்தியாயம் 1, சுலோகம் 100
பிராமணன் சம்பளங் கொடுத் தேனும் கொடாமலேனும் சூத்திரனிடத் தில் வேலை வாங்கலாம். ஏனெனில்அவன் பிராமணன் வேலைக்காகவே பிரம்மனால் சிருஷ்டிக்கப்பட்டிருக் கிறானல்லவா?
-
அத்தியாயம் 8, சுலோகம் 413
யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன்பக்தியினால் வேலை செய்கிறவன்தன்னுடைய தேவடியாள் மகன்விலைக்கு வாங்கப்பட்டவன்ஒருவனால் கொடுக்கப்பட்டவன்குல வழியாக தொன்று தொட்டு வேலை செய்கிறவன்குற்றத்திற்காக வேலை செய்கிறவன் என தொழிலாளிகள் எழு வகைப்படுவர்.
அத்தியாயம் 8, சுலோகம் 415
பிராமணன் சந்தேகமின்றி மேற் சொன்ன ஏழுவித தொழிலாளியான சூத்திரரிடத்தினின்று பொருளை வலிமையாலும் எடுத்துக் கொள்ளலாம். யஜமானனெடுத்துக் கொள்ளத்தக்கப் பொருளையுடைய அந்தச் சூத்திரர் தான் பொருளுக்குக் கொஞ்சமுஞ் சொந்தக்காரல்ல.
அத்தியாயம் 8, சுலோகம் 417
பிராமணன் தொழிலைச் செய்தா லும் சூத்திரன் பிராமண சாதியாகமாட் டான். ஏனென்றால்அவனுக்கு பிரா மண சாதித் தொழிலில் அதிகாரமில் லையல்லவாசூத்திரன் தொழிலைச் செய்தாலும் பிராமணன் சூத்திர சாதியாக மாட்டான். ஏனென்றால்அவன் ஈனத் தொழிலைச் செய்தாலும் அவன் சாதி உயர்ந்ததல்லவாஇப் படியே இந்த விஷயங்களைப் பிரம் மாவும் நிச்சயஞ் செய்திருக்கிறார்.
அத்தியாயம் 10, சுலோகம் 73
ஏர் பிடிக்கக் கூடாது!
பிராமணனும் சத்திரியனும் வைசி யன் தொழிலினால் ஜீவித்தபோதிலும் அதிக இம்சையுள்ளதாயும் பாரதீநமாயு மிருக்கிற பயிரிடுதலை அவசியம் நீக்க வேண்டியது.
அத்தியாயம் 10, சுலோகம் 83
சிலர் பயிரிடுதலை நல்ல தொழி லென்று நினைக்கிறார்கள். அந்தப் பிழைப்புப் பெரியோர்களால் நிந்திக்கப் பட்டது. ஏனெனில்இரும்பை  முகத்தி லேயுடைய கலப்பையும்மண்வெட்டி யும் பூமியையும்பூமியிலுண்டான பல பல ஜெந்துக்களையும் வெட்டுகிற தல்லவா?அத்தியாயம் 10, சுலோகம் 84
பெண்களும் மனுதர்மமும்
மாதர் ஆடவரிடத்தில் அழகையும் பருவத்தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மாத்திரம் முக்கியமாக எண்ணி அவர்களைப் புணருகிறாள்.
அத்தியாயம் 2, சுலோகம் 14
மாதர்கள் கற்பு நிலையின்மையும்நிலையாமனமும்நட்பு இன்மையும் இயற்கையாகவுடையவராதலால்கணவனாற் காக்கப்பட்டிருப்பினும் அவர்களை விரோதிக்கின்றார்கள்.
அத்தியாயம் 9, சுலோகம் 15
மாதர்களுக்கு இந்தச் சுபாவம் பிரம்மன் சிருட்டித்தபோதே உண் டானதென்று அறிந்து ஆடவர்கள் அவர்கள் கேடுறாமல் நடப்பதற்காக மேலான முயற்சி செய்ய வேண்டியது.
அத்தியாயம் சுலோகம் 16
படுக்கை,ஆசனம்அலங்காரம்காமம்கோபம்பொய்துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்.
அத்தியாயம் 9, சுலோகம் 17
மாதர்களின் சுபாவமே மனிதர் களுக்கு சிருங்கார சேஷ்டைகளினால் தோஷத்தையுண்டு பண்ணும். ஆதலால்தெரிந்தவர்கள் அவர்களிடத்தில் அஜாக்கிரதையாயிரார்கள்.
அத்தியாயம் 2, சுலோகம் 213
ஜிதேந்திரியனாயிருந்தாலும்மூடனாயிருந்தாலும் அவனை மாதர்கள் தன் சம்பத்தினால் காமக் குரோதத்துக்கு உட்பட்டவனாகச் செய்கிறார்கள்.
அத்தியாயம் 2, சுலோகம் 214
தாய்தங்கைபெண் இவர்களுடனும் தனியாய் ஒன்றாக உட்காரக் கூடாது. இந்திரியங்களின் கூட்டமானது மிகவும் பலமுள்ளது. அது தெரிந்தவனையும் மயக்கி விடும்.
அத்தியாயம் 2, சுலோகம் 215
தானியம்லோகம்பசுஇவைகளைத் திருடுதல்குடிக்கிற மனையாளைப் புணர்தல்ஸ்திரிசூத்திரன்வைசியன்சத்திரியன் இவர்களைக் கொல்லுதல் இவையெல்லாம் தனித்தனியே உபபாத கமென்றறிக. (சிறிய குற்றம்)
அத்தியாயம் 11, சுலோகம் 66
சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் அறிவைகல்வியைக் கொடுக்கலாகாது. மனுதர்மம் என்பதுதான் இந்துலா என்ற இந்துச் சட்டத்திற்கு முக்கிய அடிப்படையாகும்.
இந்துலா என்ற இந்துச் சட்டத்தைஇந்திய அரசியல் சட்டத்தின் 372ஆவது விதி ஏற்று அமுல்படுத்த அனுமதி அளித்துள்ளது. எனவேஇந்த நாட்டின் பெரும் பான்மை மக்கள் சாஸ்திரப்படிசட்டப்படி (இந்து லாபடி) சூத்திரர்கள் அதாவது பார்ப்பனரின் தேவடியாள் மக்கள்
சுலோகம் 415படி
இம்மனுநீதி மனித தர்ம நீதிக்கு முற்றிலும் முரணானதால்
எரிப்ம்! எரிப்போம்!! எரிப்போம்!!!

விடுதலை ஞாயிறு மலர்,பக்2,13.12.14

7 கருத்துகள்:

  1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. இப்போழுது ஒரு கூட்டம் வரும்...மனுதர்மம் எழுதியதே ஆங்கிலேயர் எனக்கூறிக்கொண்டு

    பதிலளிநீக்கு
  3. முதலில்இதைபுருஞ்சுக்கங்க !


    மேலும்,மனு அவர் வாழ்ந்த காலகட்டத்துக்கான சட்டம் உருவாக்கியிருக்கிறார். இது ஒன்னும் கடவுளால் உருவாக்கியதோ அல்லது புராணகருத்தோ இல்லை. இதை அப்படியே ஏத்துகிறதற்கு ?


    இது மனு என்கிற மன்னனால் தன நாட்டு மக்களுக்கு உருவாக்கிய சட்டம். இது ஒன்னும் புராணமும் இல்லை / வேதசாஸ்திரமும் இல்லை. இதை அப்படியே ஏத்திக்கிறதுக்கு ?


    மனு சட்டம் போல் இன்னும் பற்பல நீதி நூல்கள் உள்ளன. இவைகள் எல்லாம் இறைவனால் உருவாக்கப்பட்டது இல்லை. இது மனிதனை நெறிப்படுத்த பெரியவர்களால் உருவாக்கியது தான். எனவே, இப்படிப்பட்ட நூல்கள்கட்டாயம் ஏற்க வேண்டும் என்பதில்லை.


    எடுத்துக்காட்டாக, ஒரு மன்னர் ஒரு சட்டம் கொண்டு வருகிறார். ஆனால் அவர் போன பின்பு வேறு ஒரு மன்னர் வருகிறார் அவரும் இது போல் ஓர் சட்டத்தை கொண்டு வருகிறார். இப்படி கொண்டு வருபவைஎல்லாம் அந்த அந்த காலகட்ட மக்களின் நன்மையானது மட்டுமே.

    இது எல்லா காலகட்டத்திலும் ஏற்க வேண்டியதில்லை. இது போலவே தான் மனுவின் சட்டமும்.

    சும்மா, மனுசட்டத்தையேதூக்கிபிடிக்காதீர்கள் !

    பதிலளிநீக்கு
  4. மனிதர்களால் உருவாக்கப்பட்டு , காலத்திற்கேற்பமாறுவது ‘ஸ்மிருதி’ . அந்தந்தகாலகட்டத்திற்கும் , மக்களின் வாழ்க்கை முறைக்கும் ஏற்ப, பல்வேறு ஸ்மிருதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    இப்போது அனைவராலும் குறை கூறும் மனு ஸ்மிருதி கிருதாயுகத்திற்க்கானது . இதை கலியுகத்தில் பயன்படுத்தியது முன்னோர்கள் செய்த முதல் தவறு.

    இந்தயுகத்திற்கான ஸ்மிருதி வேதவியாசரின் தந்தையான பராஷரரால் உருவாக்கப்பட்ட ‘பராஷரஸ்மிருதி’. இப்படி ஒன்று இருப்பதே பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

    மேலும், இந்த மனு ஸ்மிருதி இந்தகலியுகத்திற்கு பொருந்தாது. இது அந்த காலகட்டமக்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடியது.

    எனவே, மனு ஸ்மிருதி கடைபிடிக்க வேண்டியதில்லை.

    பதிலளிநீக்கு
  5. விஷ்ணுவை வழிபடுவது மனித வாழ்வின் இலட்சியம் ஆகும். இதற்கான முதல் படியாக இருப்பதே வர்ணாஸ்ரம தர்மமாகும். இது மக்களுக்கு தவறான கருத்து ஏற்பட காரணம் ஆங்கிலேயர் மெக்காலே கல்வியாளர்களால் அத்தகைய கருத்துக்கள் திணிக்கப்பட்டதாகும். வர்ணாஸ்ரம தர்மம் மக்களை பிறப்பின் அடிப்படையில் பாகுபடுத்துகிறது என்னும் தவறான கருத்தினை பல தலைமுறைகளாக பிரச்சாரம் செய்த காரணத்தினால், மக்கள் இதை கண்மூடித்தனமாக எதிர்க்கின்றனர்.
    உண்மையான வர்ணாஸ்ரம தர்மம் பகவத் கீதையில் (4.13) கூறப்படுவது .

    'ஒருவனது குணத்தினையும், செயல்களையும் அடிப்படையாக வைத்து வெவ்வேறு மனிதர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளனர்.' பகவத் கீதையில் (4.13)

    அவர்கள் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு வகை வர்ணம்( சமுதாய பிரிவு ) அறியப்படுகின்றனர். இந்த பிரிவு கடவுள் உணர்வில் முன்னேறுவதற்கு பயிற்ச்சி அளிப்பதே வேத கலாச்சாரத்தின் நோக்கமாகும்.

    இந்த வர்ணாஸ்ரம பிரிவு முறை தற்போது இந்தியாவில் தலைகீழாக மாறியுள்ளது பிராமண குடும்பத்தில் பிறந்த காரணத்தினால் தான் பிராமணனாக ஒப்புக்கொள்ளவேண்டும் என்று ஒருவன் உரிமை கொண்டாடுகிறான். சூத்திரன் தன்னை சமுதாயத்தில் தாழ்த்தவனாக கருதி தனக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று உரிமை கொண்டாடுகிறான். ஆனால் இதை சாஸ்திரம் ஒப்புக்கொள்ளவில்லை. ஒருவனின் தந்தை பிராமணராக இருக்கலாம், ஆனால் அதுவே அவன் பிள்ளைக்கு பிராமணனாக மாத்திவிடுவதில்லை.

    உண்மையான வர்ணாஸ்ரம தர்மத்தில், ஒருவனின் வர்ணம் என்பது அவன் பெற்றுள்ள உண்மையான தன்மையை அடிப்படையாக கொண்டதே தவிர, பிறப்பு அல்லது கோத்திரத்தை வைத்து அல்ல. எடுத்துக்காட்டாக, ஒரு டாக்டரின் பையன் எப்படி படிக்காமல் டாக்ட்டர் அக்கா முடியாதோ அது போல, பிராமணரின் மகன் தகுதியை வளர்த்துக்கொள்ளாமல் இருந்தால் அவனை வேத கலாச்சாரம் பிராமனாக ஏற்பதில்லை.

    இதற்க்கு வேத சாஸ்திரங்களில் இருந்து உதாரணம் :

    1. ரிஷப தேவர் தனது 100 புதல்வர்களில் - முதல் 10 பேரை சத்திரியர்களாகவும், அடுத்த 9 பேரை பாகவத பேச்சாளர்களாகவும், மீதமுள்ள 81 புதல்வர்களை வேத வேள்விகள் செய்யும் அந்தணர்களாகவும் (பிராமணர்களாக) மாற்றினார் என்று ஸ்ரீமத் பாகவதம் ஐந்தாம் காண்டம் சொல்கிறது.

    2. அதே போல், பிராமணராக இருந்த அஜாமிளன் தனது கெட்ட நடத்தையினால் சூத்திரனாக மாறினான். - பாகவதம் 5 காண்டம்.

    3. சத்திரிய குடும்பத்திலிருந்து வந்த விசுவாமித்திரர் காலப்போக்கில் தகுதிகளை வளர்த்து கொண்டு பின்னர் பிராமணராக மாறினார்.

    4. இராவணன் பிராமண குடும்பத்தில் பிறந்திருந்த போதிலும், அவனது அசுரர் சுபாவதினால் அவனை எவரும் ஒருபோதும் பிராமணராக ஏற்கவில்லை.

    5. ஜபல உபநிஷத்தில், ஒரு சிறுவன் வேசிக்கு பிறந்தவனாக இருந்த போதிலும், அவனிடம் பிராமண தகுதிகள் இருந்த காரணத்தினால், அவனை கௌதம முனிவர் பிராமணராக ஏற்று கொண்டார்.

    இவ்வாறு, வேத சாஸ்திரத்தில் பல இடங்களில் குணம், மற்றும் தொழிலை அடிப்படையாக வைத்து வர்ணங்கள் பிரிக்க பட்டது .

    வேத காலத்தில் பிறப்பு என்பது ஒரு அடையாளமாக எடுத்து கொள்ளபட்டதே தவிர, அதுவே நியதியாக ஏற்கப்படவில்லை. பொதுவாக வேத காலத்தில் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறப்பவர் அக்குடும்பத்துக்குரிய குணத்துடன் இருப்பார் என்று எதிர்பாக்கப்பட்டது. ஆனால் கலியுகத்தில் அனைவரும் சூத்திரர்கள் என்றும், முறையான தகுதியினால் ஒருவன் பிராமணராக ஆக முடியும் என்று ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது.

    பதிலளிநீக்கு
  6. மஹாபாரதத்திலிருந்து சில கூற்றுகள்..

    மஹாபாரதம் வனபர்வம் பகுதி 311-ல், யுதிஷ்டிரர் யக்ஷனிடம் மேற்கொண்ட உரையாடலைக் காண்போம்.

    யக்ஷன் யுதிஷ்டிரரிடம் வினவினார், "மன்னா, எத்தகைய பிறவி, நடத்தை, (வேத) படிப்பு அல்லது (சாஸ்திர) கல்வியினால் ஒரு மனிதன் பிராமணனாகிறான்?

    யுதிஷ்டிரர் பதிலளித்தார், "யக்ஷனே, கேள்! பிறவியோ, படிப்போ, பிராமணத் தன்மைக்குக் காரணமில்லை. நடத்தையே பிராமணத் தன்மையாகும், இஃது எப்போதும் நன்கு பாதுகாக்கப்பட வேண்டும். நடத்தையைக் கெடாமல் பராமரித்தால். அவன் ஒருபோதும் கெடு நிலையை அடைவதில்லை. நான்கு வேதங்களைப் படித்தும், ஒருவன் இழிந்தவனாக இருந்தால், அவன் சூத்திரனிலிருந்து வேறுபட்டவன் அல்ல. புலன்களைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவனே பிராமணன் என்று அழைக்கப்படுகிறான்."


    அதேபோல ஒருமுறை பீமன் நகுஷன் என்ற பாம்பிடம் அகப்பட்டு, அதன் உணவாக இருந்த நிலையில், பீமனை விடுவிக்கவேண்டி நகுஷனிடம் யுதிஷ்டிரர் வேண்டினார். தான் கேட்கும் கேள்விகளுக்கு ஆதாரபூர்வமான பதிலளித்தால் பீமனை விடுவிப்பதாக நகுஷன் கூறினான். அவ்வுரையாடலில்,

    ஒரு சூத்திரன் பிறப்பால் மட்டுமே சூத்திரன் அல்ல என்றும், அதேபோல ஒரு பிராமணனும் பிறப்பால் மட்டுமே பிராமணன் அல்ல என்றும், யாரிடம் பிராமணருக்குரிய குணங்கள் இருக்கின்றனவோ அவரே பிராமணர் என்று ஞானமுள்ளோர் கூறியிருப்பதாகவும், யுதிஷ்டிரர் தனது முன்னவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நகுஷனிடம் பதிலளித்தார்.(வனபர்வம் பகுதி 83)


    மேலும், மஹாபாரதத்தின் வனபர்வம் பகுதி 211-ல் தர்மவியாதன் என்ற வேடனை கௌசிகர் அணுகி நுட்பமான விஷயங்கள் குறித்து கேட்டறிந்தபோது, வேடன் பின்வருமாறு கூறலானான்:

    "ஒரு மனிதன் சூத்திர ஜாதியில் பிறந்திருக்கலாம், ஆனால் அவன் நற்குணங்களைக் கொண்டிருந்தால், வைசிய நிலையையும் சத்திரியருக்கு ஒப்பான நிலையையும் அடையலாம். மேலும், அவன் நேர்மையில் உறுதியாக இருந்தால், பிராமணராக ஆகலாம்."

    மேலும், மனு சட்டத்திலும் ஒரு வசனம் ...

    ‘சூத்ரோ ப்ராமணதாமேதி ப்ராமணஸ்சைதி சூத்ரதாம்
    க்ஷத்ரியாஜ்ஜாதவேதம் து வித்யாத்வைச்யாத்ததைவ ச’

    அதாவது – ‘சூத்திரன் பிராமணனாகி விடலாம்; பிராமணனும் சூத்திரனாகலாம்; அதே போல், க்ஷத்ரிய மற்றும் வைசிய வர்ணங்களைச் சார்ந்தவர்களின் மகன்களும், மகள்களும் வேறு வர்ணத்தை அடையலாம்’. அவர்கள் வேதம் ஓதும் பிராமணர்கள் கூட ஆகலாம் என்று சொல்கிறது.

    பதிலளிநீக்கு
  7. அவன் சூத்திரனிலிருந்து வேறுபட்டவன் அல்ல

    அதாவது அவனும் சூத்திரன் என்பதாகப் பொருள் வருகிறது. அதாவது சூத்திரன் என்கிற வரையறை பிறப்பால் வருகிறது. குணத்தாலும் ஒருவன் சூத்திரனாகலாம் என்பதே இதன் பொருள்.

    பதிலளிநீக்கு