சனி, 15 நவம்பர், 2014

ஆதாம் ஏவாள் கதை

ஆதாம் ஏவாள் கதை
தந்தை பெரியார்
உலகம் எப்படிப் பிறந்தது? உயிர் எப்படி த் தோன்றியது? -என்ற கேள்விகள் பகுத்தறிவு வாதத்துக்கு எப்படி அடிப்படையான வையோ அதே போன்று மதம் மூடநம்பிக்-கைக்கும் அடிப்படையானது. ஒவ்வொரு மதமும் தனக்கென்று கற்பித்துக்கொண்ட வினோதக் கற்பனைக் கதைகள் உலக மதங்-கள் அனைத்திலும் உண்டு என்றாலும் கிறிஸ்-தவ மதத்தின் கதையே உலகின் பெரும் பகுதி-யில் உள்ள பக்தர்களால் தீவிரமாக நம்பப்-படு-கிறது.
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமி-யையும் சிருஷ்டித்தான் என்று தொடங்கி ஆறுநாட்களில் உலகத்தைப் பூரணமாக சிருஷ்டி செய்து முடித்தான் ஆண்டவன் என்று பைபிளின் ஆதியாகமம் கூறுகிறது. அந்த சிருஷ்டியின் கடைசிப்படிக்கட்டில் உள்ள ஆதாம், அவன் விலாஎலும்பிலிருந்து ஏவாள் சிருஷ்டி!
உண்மையில் இக்கதையின் பிறப்பிடம் கிறிஸ்தவ மதத்தின் பிறப்பிடமான அய்ரோப்-பாக்கண்டம் கூட அல்ல; கடவுள் களி மண்ணிலிருந்து மனிதனை உருவாக்கியதாகக் கதை கூறும் பழக்கம் சிறியசிறிய மாறுதல்-களுடன் உலகின் பல பாகங்களில் பூர்வ-குடி-யினரிடம் நிலவியது. குழந்தைத் தனமான இக்-கற்பனை பற்றி சர் ஜே. ஜி. பிரேசர் என்பவர் எழுதிய நூல் ஒன்றில் (ஊசநயவடி யனே நுஎடிடரவடி ஞசஅவைஎந ஊடிளஅடிடடிபல லெ ளுசை து. ழு. குசயணநச) ஏராளமான தகவல்களைத் தருகிறார்.
பாலினேசியா; தெற்கு ஆசியா, வடக்கு அமெரிக்கா பாபிலோனியா, எகிப்து, கிரேக்கம் ஆகிய நாடுகளில் இந்தக்கதை நிலவியது. பாலி-னேசியர்களில் தகித்தியர்களும் மவோரியர்களும் கூறிய கதைகளில் கடவுள் முதல் மனிதனை மண்ணினால் உருவாக்கியதாகவும், அவன் உறங்கியபோது அவனது எலும்பு ஒன்றை உருவி முதல் பெண்ணைச் சிருஷ்டி செய்ததாகவும் காணப்படுகிறது. இதை அப்படியே ஈயடிச்சான் காப்பி செய்துவிட்டது பைபிள்.
பைபிளை எழுதியவர்கள் செய்த ஒரே ஒரு வேலை இவர்கள் இருவருக்கும் பெயர் கொடுத்-ததுதான். ஆணின் பெயர் ஆதாம்; பெண்ணின் பெயர் ஏவாள். முதலில் பைபிள் எழுதப்பட்ட எபிரேயமொழியில் ஆதாம் என்றால் மனிதன் என்றுதான் பொருள். அதையே -அந்தப் பொதுப்-பெயர்ச் சொல்லையே, முதல் மனிதனின் பெயராகப் பின்னர் ஆக்கிக்கொண்டார்கள். இச்சொல் பொதுப்பெயர்ச் சொல்லா அல்லது ஒரு மனிதனின் பெயரா என்று திடமாக உணர-முடியாமல் கிரேக்க மொழியில் பைபிளை மொழி பெயர்த்தவர்கள் திண்டாடியிருக்-கிறார்கள்
இதேபோல், ஏவாள் என்பதும் குழப்பமான சொல். ஏவாள் என்றால் எபிரேய மொழியில் ஜீவன் என்றும், பாம்பு என்றும் பொருள்படும் ஒரு சொல். ஏதேன் தோட்டத்தில் பாம்பு உருவில் சாத்தான் வந்ததாகக் கதை பண்ணிய கோளாறு ஒருபுறம்; ஜீவவிருட்சத்தின் நன்மை தீமை அறியக் கூடிய கனியை உண்டதாகக் கற்பனை செய்தது மற்றொருபுறம்; ஆக, ஏவாள் என்ற குழப்பமான பொதுச்சொல் முதல் பெண்ணின் பெயரைக் குறிப்பதாயிற்று.
பகுத்தறிவுக் கண் கொண்டு பார்க்கும்போது எல்லாம் விஞ்ஞானத்துக்குப் பொருத்தமில்-லாத அஞ்ஞானக் குப்பைகள்; கற்பனையால் கட-வுளை மக்களின் மனதில் நிலைநாட்ட முயன்-றவர்களின் சரடுகள் என்று தெளிவாகும்.
ஆண்டவன் மீது ஆணை
சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பதவி ஏற்கும்போது தெய்வ சாட்சியாக என்று ஆண்டவன் மீது ஆணை-யிட்டுப் பிரமாணம் எடுப்பதுதான் பழைய பழக்கம்.
பகுத்தறிவாளர் கட்சியான திமுக ஆட்சிக்கு வந்தபிறகு இப் பழக்கம் கொஞ்சம் கொஞ்ச-மாக தமிழகத்தில் ஒழிந்து வருகிறது. கம்யூ-னிஸ்டு கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்கள், உறுப்பினர்களும் இப்பழக்கத்தைக் கடைப்-பிடிப்பதில்லை.
இவர்கள் எல்லாம் மனசாட்சியின் படி என்று கூறி பதவிப்பிரமாணம் செய்ய சட்டத்-தில் இடம் உள்ளது. இவ்வாறு சட்ட சம்மதம் எப்படிக் கிடைத்தது?
மதநம்பிக்கையற்ற பகுத்தறிவாளர்கள் பாராளுமன்றத்திலும், நீதி மன்றங்களிலும் பதவிப்பிரமாணம் எடுக்க புது வழி ஒன்றைக் காணவேண்டும் என்று இயக்கம் ஒன்றை இங்-கிலாந்தில் நடத்தினார் சார்லஸ் பிராட்லா. இதன் விளைவாக 1888 ஆம் ஆண்டு காமன்ஸ் சபையில் மசோதா ஒன்று நிறைவேற்றப்-பட்டது. இந்த மசோதாவை 1009 ஆம் ஆண்டு பிரமாணச் சட்டத்தில் இணைத்துக் கொண்டார்கள்.
சட்டமியற்றியதும் பிரச்னை தீர்ந்ததா? இல்லை. இதிலே ஒரு வேடிக்கையும் உண்டு. பல நீதிமன்றங்களில் பிரமாணம் எடுக்கும்-போது கடவுளைக் கைவிடத் தயாராக இருந்-தவர்களைக் கூட அவ்விதம் செய்ய விடுவ-தில்லை, புதுச்சட்ட விதிமுறை அடங்கிய புத்தகம் காணவில்லை என்று மேலதிகாரிகள் பொய் சொல்லிக் கடவுளையே திணித்து விடுவார்கள்.
இப்படிப்பட்டவர்களை வழிக்குக்கொண்டு-வர பகுத்தறிவு வாதிகள் ஒரு புதிய தந்திரத்தைக் கடைப்பிடித்தனர். இவர்களே தங்களுடன் ஒரு சட்டவிதிப் புத்தகத்தைக் கையோடு கொண்டு வந்துவிடுவார்கள். பழமையான மேலதிகாரிகள் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திணறுவார்கள்.
சீப்பை மறைத்துவைத்துக்கொண்டால் கல்யாணமே நின்று போகும் என்று கனவு காணும் பழக்கம் இன்று இங்குள்ள பழமை-யாளர்களிடம் மட்டும் தான் இருக்கிறதென்-பதில்லை; அது உலகின் மிகப் பழங்காலத்-தி-லேயே பிற்போக்கு வாதிகளின் கை வந்த கலை-போலும்!
இதையும் மீறி எந்த மேலதிகாரியாவது நீதிமன்றத்தில் பிரமாணம் எடுப்பது பற்றி சர்ச்சைகளைக் கிளப்பினால் அது நீதிமன்றத்-தையே அவமதித்த குற்றமாகும் என்று மிரட்டிய பிறகு தான் பழமையாளர்கள் பணிந்-தார்கள்
அன்று இங்கிலாந்தில் ஏற்பட்ட இந்தச் சீர்திருத்தம் அப்படியே இந்தியாவிலும் பின்னர் ஏற்கப்பட்டது.

உண்மை இதழ், ஜனவரி 01-15_2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக