திங்கள், 5 ஜூன், 2017

கோமாதா பக்தர்களைக் கோபமாக சீறும் விவேகானந்தர்

பசுவதையும் - இந்துமதமும்"

கோமாதா பக்தர்களைக் கோபமாக சீறும் விவேகானந்தர்

ஒன்பது லட்சம் மக்கள் பட்டினி - உதவி செய்யுங்களே!

நரேந்திர பாபு போன பின்னர், பசுக் களைப் பரிபாலிக்கிற சபை ஒன்றினுக்குரிய ஊக்கமுள்ள பிரசாரகர் ஒருவர் சுவாமி ஜியைக் காணும் பொருட்டு வந்தார். அவர் தம் தலை யிலே காஷாயத் தலைப்பாகை அணிந் திருந்தார்; தோற்றத்தில் வட நாட்டினரைப் போலக் காணப்பட் டார். அவரது உடை ஏறக்குறைய சந்நியாசி களுடைய உடை போன்றிருந்தது. அந்தப் பசு பரிபாலன சபைப் பிரசாரகர் வந்தார் என்று கேள்விப்பட்டதும் சுவாமிஜி சாலை அறைக்கு வந்தார். பிரசாரகர் சுவாமிஜியை வணங்கிப்பசுத்தாயினுடைய படம் ஒன்றி னைச் சுவாமிஜிக்குக் கொடுத்தார். சுவாமிஜி படத்தைப் பெற்று அருகில் நின்ற ஒருவர் கையில் கொடுத்த பின்னர், பின்வரும் சம்பாஷணை நிகழ்ந்தது.

சுவாமி: உங்களுடைய சங்கத்தின் நோக்கம் என்ன?

பிரசாரகர்: நமது நாட்டிலுள்ள பசுத் தாய்களைக் கசாப்புக்காரர்களிட மிருந்து நாங்கள் பாதுகாக்கிறோம். நோயுற்ற பசுக் களும் வலுவிழந்தனவும் கசாப்புக்காரர்களி டமிருந்து வாங்கப்பட்டனவும் பரிபாலிக்கப் படுவததற்காகப் பசு வைத்திய சாலைகளை ஏற்படுத்தி யிருக்கிறோம்.

சுவாமி: அது மிக நல்லது. உங்கள் வரு வாய்க்கு வழி என்ன?

பிரசாரகர்: உங்களைப் போன்ற பெரிய மனிதர் அன்போடு கொடுக்கின்ற நன் கொடைகளைக் கொண்டே சபையின் வேலை நடந்து வருகின்றது.

சுவாமி: இப்பொழுது எவ்வளவு பணம் சேர்த்து வைத்திருக்கிறீர்கள்?

பிரசாரகர்; இந்த முயற்சிக்கு மார்வாடி வணிகர் கூட்டம் சிறந்த உதவி புரிகின்றது. இந்த நன்முயற்சிக்காக அவர்கள் பெருந் தொகை கொடுத்திருக் கின்றார்கள்.

சுவாமி: மத்திய இந்தியாவிலே ஒரு கொடிய பஞ்சம் எழுந்து விட்டது. ஒன்பது லட்சம் மக்கள் பட்டினியால் இறந்தார்கள் என்று இந்திய அரசாங்கத் தார் செய்தி வெளியிட்டிருக்கின்றனர். இதற்கு உதவி புரிவதற்கு உங்களுடைய சபை ஏதாவது செய்திருக்கின்றதா?

மக்களுக்கு இரங்கோம்:

மாடுகளுக்கே இரங்குவோம்

பிரசாரகர்: பஞ்சம் முதலிய துன்பம் வரும்பொழுது நாங்கள் உதவி புரிவ தில்லை. எங்கள் சபை பசுத்தாய் களைப் பரிபாலிக்கும் பொருட்டே ஏற்படுத்தப்பட்டது.

சுவாமி: உங்களுடைய சொந்தச் சகோதர சகோதரிகளாகிய லட்சக்கணக் கான மக்கள் பஞ்சத்தினால் துன்பம் அடைந்து மரணத்தின் வாயில் விழும் பொழுது அவர்களுக்கு எவ்வழியிலா வது உணவளித்துக் காப்பாற்ற வேண் டுவது உங்கள் கடமை என நீங்கள் நினைக்க வில்லையா?

பிரசாரகர்: இல்லை. இந்தப் பஞ்சம் மக்களுடைய பாவகருமத்தினாலே ஏற் பட்டது. கருமம் எப்படியோ, பயனும் அப்படியே. பிரச்சாரகர் இந்த வார்த்தை களைக் கூற, இவறறைக் கேட்டுச் சுவாமிஜி யினுடைய கண்களிலிருந்து நெருப்புப் பொறி பறப்பது போன்றிருந்தது. முகம் சிவந்தது. அவர் தம் சினத்தை அடக்கிக் கொண்டு, பின்வருமாறு சொல்லுவராயினார்:

தம்முடைய சொந்தச் சகோதரர் பட்டினியினால் இறக்க, அவர்களுடைய உயிரைக் காப்பாற்றும் பொருட்டு ஒருபிடி அரிசி கொடாமல், மனிதர் மேல் அனுதாப மின்றிப் பறவைகளுக்கும், விலங்குகளுக் கும் குவியல் குவியலாக உணவைக் கொடுக்கின்ற இத்தகைய சபைகளில் நான் புகுவதில்லை. மக்கள் சங்கம் இவற்றினால் நன்மை அடை கிறதென நான் எண்ண வில்லை. மனிதர் தம் கருமத்தினால் இறக்கின் றனரென்று நீர் வாதிப்பீராயின், இவ்வு லகத்திலே எதைக் கருதியும் முயல வேண்டுவதில்லை என்பது தீர்மானமா கின்றது. விலங்குகளைப் பரிபாலிப்ப தற்காக நீர் செய்கிற வேலையும் இவ் விதிக் குப் புறம்பாகாது. பசுத்தாய்களும் தம் முடைய கருமத்தினால் கசாப்புக் காரர் களுடைய கையிலகப்பட்டு இறக்கின்றன வென்று சொல்லிவிட்டுச் சும்மா இருக்க லாமே?

பிரசாரகர்: சிறிது நாணி, ஆம். நீங்கள் சொல்வது உண்மை. ஆனால், பசு நம் அன்னை என்று சாத்திரங்கள் சொல்லு கின்றனவே? என்றார்.

சுவாமிஜி: நகைத்துக் கொண்டே, ஆம், பசு நம் அன்னை என்பதை  நான் அறிந்து கொண்டேன்; இத்தகைய புத்திசாலிகளான பிள்ளைகளை வேறு யார்தான் பெறுதல் கூடும்! என்றார்.

இவர்கள் மனிதர்களா?

வடநாட்டுப் பிரசாரகர் அந்த விஷ யத்தைப் பற்றி பின்பு ஒன்றும் பேச வில்லை. சுவாமிஜி கேலி பண்ணிய கருத்தை அவர் அறிந்து கொள்ள வில்லை போலும்! தமது சபைக்காக ஏதாவது உதவ வேண்டுமென்று அவர் சுவாமிஜியை கேட்டார்.

சுவாமி: நான் ஒரு சந்நியாசி, பக்கிரி உமக்கு உதவி செய்ய எங்குப்பணம் பெறுவேன்? பணம் பெற்றாலும், முதலிலே மனிதருடைய சேவைக்காகச் செல வழிப்பேன். முதலிலே மனிதனுக்கு உணவு, கல்வி, ஆன்மிக வாழ்க்கை என்னும் இவற்றைத் தந்து காப்பாற்ற வேண்டும் அதற்குப் பின்பு ஏதாவது மிகுந்திருந்தால், உம்முடைய சபைக்குக் கொடுக்கலாம்.

இந்த வார்த்தைகளைக் கேட்டுப் பிர சாரகர் சுவாமிஜியை வணங்கி விட்டுப் போய்விட்டார். பின்பு சுவாமிஜி எங்களை நோக்கிச் சொல்லுகிறார்.

அந்த மனிதனுடைய சொற்களைப் பாருங்கள்! மனிதர் தமது கருமத்தினால் இறக்கிறார்கள் என்று சொல்கின்றான், அவர்களுக்கு உதவுவதனால் என்ன பயன் என்கிறான். நாடு நாசமாய்ப் போய்விட்ட தென்பதற்கு இது ஒரு தக்கசான்று. இந்துக் களுடைய கரும விசாரணை எவ்வளவு பழுதடைந்து விட்டதென்பதைப் பாருங்கள்! மனிதருக்கு இரங்காத இதயமுள்ளவர்கள் இவர்கள் இத்தகையோரை மனிதர் என்று எண்ணலாமா?

("சுவாமி விவேகானந்தர் சம்பாஷணைகள்" பக்கம் 5,7)

.-விடுதலை,29.5.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக