வியாழன், 1 மார்ச், 2018

பாப்பான் நெற்றியில் எதை வைத்து இருக்கிறான்

படித்து பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்

எவனாவது ஆண்குறியை  நெற்றியில் வரைந்திருப்பானா?

வடகலை, தென்கலை சண்டை

மன்னார்குடி சப்டிவிஷனல் மாஜிஸ்திரேட் திரு.வி. பொன்னுசாமிப் பிள்ளை வடுவூர் வழக்கு என்று பிரசித்தி பெற்ற வழக்கில் தீர்ப்புக் கூறினார். இவ்வடுவூர் மன்னார்குடியிலிருந்து 10 மைல் தொலைவில் உள்ளது. இவ்வூரில் வாழும் அய்யங்கார் எனப்படும் வகுப்பினரில் வைணவ மதத்தின் இரு பிரிவுகளையும் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். உள்ளூர்ப் பெருமாள் கோயிலின் தர்மகர்த்தா தென்கலைப் பிரிவைச் சேர்ந்தவர். கோயிலில் திருவிழா நடைபெற்றது. உற்சவ விக்கிரகம் வழக்கமான ஆள், அம்புகளுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

ஊர்வலத்தில் பயன்படுத்தப்பட்ட புனிதப் பெருமாள்களுக்குச் சேதம் விளைவித்ததாகவும் தர்மகர்த்தாவைத் தடுத்ததாகவும் வடகலைப் பிரிவைச் சேர்ந்த 16 பேர் மீது நீடாமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மன்னார்குடி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள்.

வடகலையினரின் குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு இதுதான் - கோயிலில் வணங்கப்படும் சிலைகளில் மணவாளசாமி என்னும் வைணவ முனிபுங்கவரின் சிலையும் ஒன்று. இந்தச் சிலை ஊர்வலமாகத் திருவிழாவின்போது எடுத்துச் செல்லப் பட்டது. ஊர்வலம் தென்கலைச் சம்பிரதாயப்படி நடத்தப்பட்டது. இதை வடகலையினர் எதிர்த்தனர். வடகலைச் சம்பிரதாயப்படியே விழா நடத்தப் பட்டிருக்க வேண்டும், ஊர்வலம் எழுந்தருளப் பண்ணியிருக்கவேண்டும் என்பது வடகலையினரின் வாதம்.

வடகலையினர்க்கே உரிமை

போலீஸ் தரப்புச் சாட்சிகளை விசாரணை செய்த பின் அறிவார்ந்த நீதிபதி வழக்கைத் தள்ளுபடி செய்தார். தமது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டதாவது:

தென்கலையினருக்கு மணவாளசாமியின் சிலையைத் தென்கலைச் சம்பிரதாயப்படி ஊர்வலமாக எழுந்தருளப் பண்ணி எடுத்துச் செல்ல எந்த உரிமையும் கிடையாது. இப்படிச் செய்தது, நன்கு நிலைபெற்ற சம்பிரதாய பழக்கத்துக்கு முரண்பட்ட செயலாகும். சிவில் கோர்ட்டுகளின் முந்திய தீர்ப்புகளுக்கும் இது முரணானதாகும். கோயிலினுள்ளே மணவாளசாமி வடகலைச் சடங்காச்சாரங்களுக்கிணங்கவே வழிபாடு செய்யப்படுகிறார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் செய்ததாகக் கூறப்பட்ட புகார்களை நிறுவிக் காட்டுவதற்குப் போதிய சான்றுகளும் இல்லை. எனவே, குற்றஞ் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்ய உத்தரவிடுகிறேன்.

இந்தச் செய்தியைப் படிக்கும் நமது வாசகர்கள் அனைவருக்கும் தென்னிந்திய மதப் பழக்க வழக்கங்களின் நுட்பங்கள் தெரிந்திருக்க நியாயமில்லை. எனவே, இத்கைய வாசகர்களுக்காக கீழ்க்காணும் விளக்கத்தை வெளியிடுகிறோம்.

பிளவுபடுத்தும் கோடு

இந்து மதத்தின் பெருங்கடவுளர் மூவர். இவர்களுள் ஒருவர் விஷ்ணு. இந்த விஷ்ணுவைக் கும்பிடுகிறவர்கள் வைஷ்ணவர்கள். வைஷ்ணவ பக்தர்களை வழி நடத்தும் பார்ப்பனப் பூசாரிகள் அய்யங்கார்கள் எனப்படுவார்கள்.

இந்துக்களில் ஏறத்தாழ பாதிப்பேர் வைஷ்ணவர்களே. மற்ற இந்து மதப் பிரிவுகளிலிருந்து வைஷ்ணவர்களைத் தனிமைப்படுத்திக் காட்டுவது அவர்கள் தங்கள் நெற்றியில் அணியும் மதக்குறி. இந்தக் குறியின் பெயர் நாமம் என்பது.

லிங்கத்துக்குப் போட்டி - நாமம்

நாமக்குறியின் உட்பொருள் சிருஷ்டி தத்துவம்தான். சைவர்களின் லிங்கத்துக்கு இணையான வைணவக் குறியே நாமம். சைவர்கள் என்பவர்கள் சிவன் என்னும் இந்துக் கடவுளை வழிபடுபவர்கள். சிவன் இந்துக்களின் முப்பெரும் கடவுள்களில் இன்னொரு கடவுள். லிங்க வழிபாடு என்பது பிறப்பு உறுப்பு வழிபாடாகும்.

நெற்றியில் செங்குத்தான இரண்டு வெள்ளைக் கோடுகள்; இந்த இரண்டுக்கும் இடையே ஒரு சிவப்புக்கோடு - இதுதான் நாமம்! இரண்டு வெள்ளைக் கோடுகளும் மகாவிஷ்ணுவின் தொடைகளைக் குறிக்கும். மத்தியில் உள்ள சிவப்புக் கோடு சிருஷ்டி தத்துவத்தைக் குறிக்கும். (அதாவது தொடைகள் இரண்டுக்கும் இடையிலே தொங்கும் உறுப்பு - ஆண்குறி).

வடகலை, தென்கலையைப் பிரிப்பது எது?

வைணவர்களில் இரண்டு பிரிவுகள் உள்ளன. இவை ஒன்றுக்கு ஒன்று எதிரும் புதிருமானவை. இவர்களை ஒருவரிலிருந்து மற்றவரைப் பிரித்து அறிந்து கொள்வது எப்படி? இவர்கள் நாமம் தீட்டிக் கொள்ளும் விதத்தின் அடிப்படையில்தான் - அதாவது நாமத்தின் இரண்டு வெள்ளைக் கோடுகளையும் எப்படி இணைப்பது என்பதில்தான்!

வடகலையினர் எனப்படுவோர் இரண்டு வெள்ளைக் கோடுகளையும் இணைக்கப் பரவளைவு ஒன்றினைத் தீட்டுகிறார்கள். தென்கலையினரோ இதற்குக் கீழே தனியான ஒரு தாங்கு காலைத் தங்கள் மூக்கின் மீதுவரைந்து கொள்கிறார்கள்.

கொட்டப்பட்ட குருதி கொஞ்சமா நஞ்சமா?

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டுகளாகத் தென் கலையினரும் வடகலையினரும் தங்களுக்குள் கலகம் செய்து வருகிறார்கள். மதவெறி பிடித்த இவர்களது உற்சாகம் காரணமாக தென்னகத்தின் வரலாற்றில் கொட்டப்பட்ட குருதிக்குக் கணக்கே இல்லை.

குருதி கொட்டும் இந்துக் கலகங்களை விட மோசமானது இவர்கள் பெரும் பணம் செலவிட்டு நீதிமன்றங்களில் நடத்தியிருக்கும் வழக்குகள்தாம். இந்த வழக்குகளின் பயன் என்ன? வழக்குரைஞர்களுக்கு நல்ல சம்பாத்தியம்; அய்ரோப்பிய நீதிபதிகளுக்கு நல்ல தமாஷ் பொதுமக்களுக்கோ ஓயாத தலை வேதனை!

மாஜிஸ்டிரேட் செய்திருக்க வேண்டியது என்ன?

மன்னார்குடி சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் இந்தக் குறிப்பிட்ட வழக்கில் வடகலையினருக்குச் சாதகமாகத் தீர்ப்புக் கூறியிருக்கிறார். ஆனால், ஊரில் அமைதி நிலவ வேண்டும் என்பதில் அக்கறை கொண்ட ஒரு நீதிபதி என்ன செய்திருக்க வேண்டும் என்ன செய்திருப்பார்?

இரண்டு தரப்பினரையும் கட்டுப்படுத்தி இருப்பார். தற்குறிப்பிண்டங்களான மக்களின் கீழ்த் தரமான உணர்ச்சிகளைக் கிண்டிக் கிளறித் தீ மூட்டி அனல் கக்கச் செய்யவல்ல கேடுகெட்ட சாமிச் சிலைகளை எழுந்தருளச் செய்யும் ஊர்வலத்துக்கே தடையல்லவா விதித்திருப்பார் - விதித்திருக்க வேண்டும்.

மன்னார்குடி மாஜிஸ்திரேட் இவ்வாறு செய்யாமல் தவறிவிட்டது ஏன்? அவர் தம்மைப் பொறுத்தமட்டிலும் இவ்வாறு செய்யக்கூடிய மனவெழுச்சி படைத்தவர்தான். ஆனால் ஓட்டை உடைசலான சட்டங்கள்தாம் அவரது கையைக் கட்டிப் போட்டிருக்கும்.

பிரிட்டிஷாரின் நடைமுறை

பிரிட்டிஷ் நிருவாகிகள் கையாண்டு வரும் நடைமுறைதான் என்ன? பூசாரிக்குலம் மக்கள் மீது பிடித்திருக்கும் பிடியை மேலும் இறுகச் செய்யும்படி அல்லவா பிரிட்டிஷ் நிருவாகிகளின் நடைமுறை அமைந்திருக்கிறது. இப்படிப்பட்ட கொள்கையைக் கடைப்பிடிப்பதற்கு அவர்கள் காட்டும் காரணம் என்ன? மத விவகாரங்களில் நடுநிலையைக் கடைப் பிடிக்கும் கொள்கையும் நினைவுக்கெட்டாத காலம் தொட்டு நிலவி வரும் மக்களின் பழக்க வழக்கங்கள் அப்படியே போற்றிக் காக்க வேண்டும என்னும் கொள்கையும் அல்லவா காரணம்!

மன்னார்குடியிலே நடைபெற்றதாகக் கூறப்படுவது போன்ற காட்டுமிராண்டித்தனமான காரியங்களில் தன்னையொத்த இந்துச் சோதரர்கள் ஈடுபட்டு அவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொள்வதைக் கண்டு இந்து ஒவ்வொருவனும் - துளியத்தனை சுயமரியாதையுள்ள இந்து ஒவ்வொருவனும் வெட்கித் தலை குனிய வேண்டியதிருக்கிறதே!

சுயமரியாதை உணர்ச்சி படைத்த இந்துக்கள் இந்தச் சட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் என்று கோரிப் போராடுவதற்காகக் கச்சை வரிந்து கட்டி, களங்காண உடனே கிளம்புவார்கள்என்று நம்புவோமாக! மாற்றியமைக்கப்பட்ட புதிய சட்டங்கள் இத்தகைய மத மவுடீகங்களைத் தண்டனைக்குரியவைகளாக ஆக்கும். இல்லை யென்றால், இந்த மத மவுடீகங்கள் இந்நாட்டின் பெருமை மிக்க பெயரைப் புதைச்சேற்றுக்குள்ளே இழுத்துப் போட்டு அமுக்கி விடாதா?
-ஈரோட்டு பூகம்பம், முகநூல் பக்கம்,
2.3.13

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக