வெள்ளி, 4 மே, 2018

நெல்லையப்பர் கோவில் குடமுழுக்கு: மேலே ஏறிய பெண்கள் கீழே இறக்கப்பட்ட கொடுமை!



நெல்லை, ஏப்.29 நெல்லையப்பர் கோவில் குடமுழுக்கு பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே 27.4.2018 அன்று காலை 9.30 மணிக்கு மேல் 10.25 மணிக்குள் நடைபெற்றது. எந்தத் தேதியில் நடத்துவது என்ற சர்ச்சையிலேயே பல நாள்கள் நகர்ந்தன.

விழாவில் கலந்துகொள்ள வருகை தந்த இரண்டு அமைச்சர்களில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சரின் சொந்த ஊரில் தேரோட்டம் காண சென்றதால் காலதாமதம் ஏற்பட்டது.

மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்தி யானந்த் மற்றும் தென்காசி தொகுதி நாடாளு

மன்ற உறுப்பினர் வசந்தி முருகேசன் மேலே ஏறினார்கள்.

அப்போது இந்து அமைப்பைச் சேர்ந்த  கூச்சலிட பின்னர் அவ்விரு பெண்களும் கீழே இறக்கி விடப்பட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்து அமைப்புகள் விஜிலா விவகாரத்தை கையிலெடுக்க முடிவு செய்துள்ளனராம். கிறிஸ்தவர் எப்படி இந்துக்கள் ஆகம விதியை மீறலாம் என போராட முடிவு செய்துள்ளனராம்.

ஒருவர்தான் கிறித்துவர் என்றால், வசந்தி முரு கேசனும் கிறித்தவர்தானா? ஆண்கள் பலர் அந்த இடத்தில் இருந்தபோது, பெண்கள் மட்டும் இருக்கக் கூடாது என்பது என்ன நீதி?

பெண்கள் என்றால் கடவுளுக்கு ஆகாதா? கடவுள் படைப்பில் பெண்கள் வரமாட்டார்களா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அர்த்தமுள்ள இந்து மதத்தில் பெண்களுக்கான இடம் இதுதான்.

இவ்வளவுக்கும் தமிழ்நாட்டு பி.ஜே.பி.க்கு தலைவரும், செயலாளரும் பெண்கள்தான்! இவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்?

- விடுதலை நாளேடு, 29.4.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக