திங்கள், 5 ஆகஸ்ட், 2019

காவிகளின் கண்மூடித்தன மதவெறி

தொலைக்காட்சி விவாதத்தின் போது இஸ்லாமிய ஊடகவியலாளரைப் பார்க்க மறுத்து கண்களை மறைத்துக்கொண்ட


மதவெறி பிடித்த இந்துத்துவ அமைப்பின் தலைவர்




புதுடில்லி, ஆக.5 இஸ்லாமியர் கொண்டு வந்த உணவை சாப்பிடமாட்டேன் என்று கூறி திருப்பி அனுப்பிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற் படுத்தி உள்ளது. மதவாதத்தின் கோரம் தற்போது சாமானியனை எந்த அளவு ஆட்கொண்டு விட்டதன் பாதிப்பை இந்தியா உணரத் தொடங்கிவிட்டது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து நாடு முழு வதும் பல்வேறு மொழிகளில் இயங்கி வரும் செய்தி நிறுவனங்கள் விவாதம் நடத்திக்கொண்டு இருக்கின்றன.  இஸ்லாமியர் கொண்டுவந்த உணவை திருப்பி அனுப்பியதை இந்துத்துவ அமைப்பினரும், பாஜகவினரும் சரி என்றே வாதித்துக் கொண்டு இருக்கின் றனர்.  இஸ்லாமியர் ஒருவருக்கு பன்றி இறைச்சியை இதேபோல் கொண்டுவந் தால் அவர் ஏற்றுக்கொள்வாரா என்ற முட்டாள் தனமாக எதிர்க்கேள்விகளை பாஜகவின் சார்பில் ஊடகங்களில் பங் கேற்பவர்கள் கேட்டுக்கொண்டு இருக் கின்றனர்.

''ஹம் ஹிந்து'' அமைப்பு


இந்நிலையில், நியூஸ் 24' என்ற இந்தி செய்தி தொலைக்காட்சியில் இந்த விவ காரம் தொடர்பாக விவாதம் நடை பெற்றது. அதில் ''ஹம் ஹிந்து'' என்ற அமைப்பின் நிறுவனர் அஜய் கவுதம் கலந்துகொண்டார். விவாதத்தின் நடுவே அமர் காலித் என்கிற இஸ்லாமிய ஊடக வியலாளர், குறிப்பிட்ட செய்தியை விரி வாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது விவாதத்தில் கலந்துகொண்ட ஹம் ஹிந்து என்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கிளைப்பிரிவின் தலைவர்  கண்ட அஜய் கவுதம், "இஸ்லாமிய தொகுப்பாளரை நான் பார்க்கமாட்டேன்" எனக் கூறி தன் கண்களை மூடிக்கொண்டார். அஜய் கவுதமின் இந்த செயலுக்கு சமூக வலை தளங்களில் கடும் கண்டனம் எழுந் துள்ளது.

இந்நிலையில் அஜய் கவுதமின் செயல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நியூஸ் 24 தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அனுராதா பிரசாத், "நியூஸ் 24 தொலைக்காட்சியின் செய்தியறையில் அஜய் கவுதம் நடந்துகொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தோம். பத் திரிக்கை நெறிமுறையின்படி இத்தகைய செயலுக்கு ஆதரவளிக்க முடியாது. இனிமேல் அஜய் கவுதமை எங்கள் தொலைக்காட்சிக்கு அழைப்பதில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது முறையாக பா.ஜ.க ஆட்சி அமைத்ததில் இருந்து மதவாத பிரச்சாரங்களும், சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்களும், தீண்டாமைகளும் அதிகரித்து வருகின்றன. பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் விஷமப் பிரச்சாரங்களின் விளைவு எப்படி இருக்கும் என்பதற்கு சோமேட்டோ விவகாரம் ஒரு சாட்சி.

- விடுதலை நாளேடு, 5.8.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக