பண்: பழம்பஞ்சுரம் பாடல் எண் : 1
வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆத மில்லியமணொடு தேரரை
வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே
பாதி மாதுட னாய பரமனே
ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
ஆல வாயி லுறையுமெம் மாதியே
பொழிப்புரை: உமாதேவியைத் தன் உடம்பில் ஒரு பாதியாக வைத்துள்ள பரமனே! தென் ஆலவாயில் வீற்றிருந்தருளும் எம் ஆதிமூர்த்தியே! வேதத்தையும், வேள்வியையும், பழித்துத் திரியும் பயனற்றவர்களாகிய சமணர்களையும், புத்தர்களையும் வாதில் வென்றழிக்க உம்மை வேண்டுகின்றேன். உமது திருவுள்ளம் யாது? உலகனைத்தும் உமது புகழே மிக வேண்டும். திருவருள்புரிவீராக!
மண்ண கத்திலும் வானிலு மெங்குமாம்
திண்ண கத்திரு வாலவா யாயருள்
பெண்ண கத்தெழிற் சாக்கியப் பேயமண்
பெண்ணர் கற்பழிக் கத்திரு வுள்ளமே.
மதுரை வாழ் சிவனே, சமணர் வீட்டு அழகிய பெண்களைக் கற்பழிக்க அருள் புரிவாயாக என திருஞான சம்பந்தர் பாடியுள்ளார் - இதற்கெல்லாம் சங்பரிவார்கள் என்ன கூறப் போகிறார்கள்?
- விடுதலை ஞாயிறு மலர், 27.7.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக