புதன், 4 செப்டம்பர், 2019

"வீரமணி என்ன நினைத்திருப்பார்?" குருமூர்த்தி பதிலுக்குப் பதிலடி!



கேள்வி: அத்திவரதரையே சுற்றி வந்த தமிழக மக்களின் கூட்டத்தைப் பார்க்கும்போது வீரமணி என்ன நினைத்திருப்பார்?

பதில்: ஒரு ஆயிரம் கருப்புச் சட்டை போட்டவர்கள்கூட இல்லாத தி.க.வின் ஹிந்து கடவுள் எதிர்ப்பு, எப்படி அத்திவரதரையும், அய்யப் பனையும் சுற்றும் கோடிக்கணக்கான பக்தர்களை உருவாக்கியிருக்கிறது என்று நினைத்து, நினைத்து ஆச் சரியப்பட்டிருப்பார்.

('துக்ளக்' 4.9.2019, பக்கம் 17)

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி என்ன நினைத்திருப்பார்?

கல்லையும், மரத்தையும் காட்டி மக்களைச் சுரண்டும் இந்தப் பார்ப் பனீயத்தின் பித்தலாட்டத்தைப் பற்றி நினைத்திருப்பார்.  இந்தப் புரோகித சுரண்டலுக்கு எப்படி முடிவு கட்ட லாம் என்று யோசித்திருப்பார். பக்தி தனிச் சொத்து ஒழுக்கம் பொதுச் சொத்து என்ற தந்தை பெரியாரின் கருத்தினை மக்கள் மத்தியில் மேலும் கொண்டு செல்ல வேண்டும் என்று திட்டம் போட்டிருப்பார்.

பக்திப் போதையேறி சுருண்டு கிடக்கும் மக்களின் நிலையை எண்ணிப் பரிதாபப்பட்டு இருப்பார்.

பக்தியின் பெயரால் பொருளும், பொழுதும் இப்படி நாசமாக்கப்பட்டு வருகிறதே என்று பொறுப்புடன் சிந்தித்துப் பார்த்திருப்பார்.

அத்திவரதரை மய்யப்படுத்தி நடந்த கொள்ளைதான் எத்தனை எத்தனை! அத்திவரதரைத் தரிசிக்க சிறப்புப் பாஸ்கள் என்று சொல்லி கள்ளச் சந்தையில் ரூ.8000/-க்கு விற்கப்பட்டதே,  47 நாள்களில் இந்த வகையில் ரூ.1175 கோடி கொள்ளை நடந்துள்ளதே, அத்திவரதர் என்னும் மரக்கட்டைக்கு முன் அமர வைக்க ரூ.50 ஆயிரம், நிற்க வைப்பதற்கு ரூ.20 ஆயிரம், போட்டோ எடுத்துக் கொள்வதற்கு ரூ.10 ஆயிரம் என்று வசூல் வேட்டை நடந்திருக்கிறதே - இந்தப் பக்தியைப்பற்றி பெருமைப் பேசுவதற்குக் கிஞ்சிற்றும் 'துக்ளக்' வகையறாக்களுக்கு வெட்கம் இல்லையே!

பக்திஒழுக்கக் கேட்டைத்தானே வளர்த்து வருகிறது - இந்த மக்களை நேர் வழிக்கு - பகுத்தறிவுப் பாட் டைக்கு எப்படி கொண்டு வருவது என்பதுபற்றி சிந்தித்து இருப்பார்.

மகா மகக் குளத்தில் 28 சதம் மலக் கழிவும், 40 சதம் சிறுநீர்க் கழிவும் இருந்தது என்று தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவரே அறிக்கை கொடுத்துள்ளதையும் நினைத்துப் பார்த்து, நம் மக்களின் மூளை இப்படி சுகாதாரமற்ற சகதியாகி இருக்கிறதே - இதற்கு என்ன மாற்று என்றும்  திட்டம் போட்டிருப்பார்.

மருத்துவமனைகள் பெருகி என்ன பயன்? நோயாளிகள் அதிகரிக்கத் தானே செய்கிறார்கள் என்று குருமூர்த் திகளால் விளக்கம் சொல்ல முடியுமா?

பக்தியின் நடப்பும், யோக்கியமும் தான் எத்தகையன? இதோ அவாள் ஆதாரத்தைக் கொண்டே நொறுக்கித் தள்ளுவோம்!

'சோ'வின் பார்வையில் பக்தி

கேள்வி: அரசியல்வாதி ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்? ஆன்மிக வாதி ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்? நடிகராவதற்கு என்ன தகுதி வேண்டும்?

சோவின் பதில்: அரசியல்வாதி ஆவதற்குப் பொய் சொல்லத் தெரிய வேண்டும். ஆன்மிகவாதியாவதற்கு பொய்யை அருள் வாக்காக்க தெரிந் திருக்க வேண்டும். நடிகராவதற்கு உண்மையாகவே நடிக்கத் தெரிந் திருக்க வேண்டும்.

('துக்ளக்' 26.10.2016 பக்கம் 23)

இதைவிடஆன்மிகத்தைக் கேவலப்படுத்த முடியுமா?

கேள்வி: நீங்க முன்னே பார்த்த மாதிரி ஜனங்களிடம் பக்தி இருக் கிறதா இப்பொழுது?

சோவின் பதில்: பக்தியாவது ஒண்ணாவது? கோவிலுக்கு வர்றவன் சாமி தரிசனத்துக்கா வர்றான்? சைட் அடிக்கன்னா வர்றான். பொம் மனாட்டிகள் மட்டும் என்ன யோக் கியம்! அவாளும் புடவை, நகை, நட்டு இதெல்லாம் போக நேரம் இருந்தா சுவாமி அம்பாளை நெனச்சுக்கிறா!

('துக்ளக்' 1.6.1981 பக்கம் 32)

ஆயிரம் கருப்புச்சட்டை போட் டவர்கள்கூட இல்லாத தி.க. என்று எழுதி அற்ப சந்தோஷப்படும் 'துக்ளக்குகள்' திருச்சி கருஞ்சட்டைப் பேரணியையும், குடந்தை திராவிடர் மாணவர் கழக பவள விழா மாநாட்டுப் பேரணியையும், சேலம் திராவிடர் கழகப் பவள விழா மாநாட் டையும் பார்க்காத - அறிந்திராத  குருடர்களே!

தொகுப்பு: மின்சாரம்
-  விடுதலை நாளேடு, 1. 9 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக