புதன், 15 மே, 2024

வாயால் சிரிக்க முடியுமா? கடவுள்களின் கதைகளைக் கேளுங்கள்! கேளுங்கள்!!



விடுதலை நாளேடு
Published May 4, 2024

– கருஞ்சட்டை –

பூரி ஜெகந்நாதர் சிலை
பூரி தேர்த் திருவிழா முடிந்த பிறகு, அந்தச் சாமி சிலைக்குக் காய்ச்சல் எதுவும் உள்ளதா என்று சோதித்து மருந்து, மாத்திரை கொடுக்க நியமிக்கப்பட்ட எம்.பி.பி.எஸ். படித்த மருத்துவர்கள்.

அங்காள பரமேசுவரியைக் குளுமைப்படுத்தும் பக்தர்கள்!
கடுமையான வெயிலில் மேல்மலையனூர் கோவிலில் உள்ள கர்ப்பக் கிரகத்தில் அங்காள பரமேசுவரி தாங்கமாட்டார் என்பதற்காகக் கோவில் முழுவதும் பெரிய பெரிய அய்ஸ்கட்டிகளைக் கொட்டி கோவிலைக் குளுமைப்படுத்தும் பக்தர்கள்.

அழகருக்கு அசதியாம் – உடலைப் பிடித்துவிடும் பார்ப்பனர்கள்!
மதுரையில் சித்திரைத் திருவிழா முடிந்து அழகர் கோவிலுக்குத் திரும்பிய பிறகு அவருக்கு அசதியாக இருக்குமாம் – உடலைப் பிடித்துவிடும் பார்ப்பன அய்யங்கார்கள்!

இவற்றைப் படித்தால், கடுகளவு அறிவு உள்ளவர்களும் கைகொட்டி சிரிக்க மாட்டார்களா? நோய்களைத் தீர்ப்பார் கடவுள் என்று நம்பி விரதம் இருந்தும் கோவில் கோவிலாகத் தேடி அலைகிறார்கள்; நேர்த்திக் கடன் கழிக்கிறார்கள் பக்தர்கள். அந்தக் கோவில்களில் உள்ள கடவுள்களுக்கே டாக்டர்கள் வைத்தியம் பார்க்கிறார்களாம்! கடவுள் வெயில் தாங்கமாட்டார் என்று அய்ஸ் வைக்கிறார்களாம் – கடவுள் உடம்பை அய்யங்கார் பார்ப்பனர்கள் பிடித்து விடுகிறார்களாம்!
அய்யய்யோ, வாயால் சிரிக்க முடியவில்லையே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக