ஓர் சம்பாஷணை 05.04.1931 -குடிஅரசிலிருந்து...
எதா : அய்யா தங்கள் வேதம் என்று சொல்லப்படும் பைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது.
போதகர் : பழைய காலத்திலே தேவ ஆவியால் ஏவப்பட்ட பல தீர்க்க தரிசிகளைக் கொண்டும் கிறிஸ்துவின் சீடர்களைக் கொண்டும் பிந்திய அப்போஸ்தலரைக் கொண்டும் எழுதப்பட்டது.
எதா : சரி தீர்க்கதரிசிகள் என்பவர் சில விடங்களில் தெய்வத்திற்கு பயப்படாத வர்கள் தானே
போதகர் : இல்லை சார் எப்பொழுதும் தெய்வத்துக்கு பயப்படுகிறவர்கள்தான்.
எதா : நல்லது அப்படியானால் ஆபிரகாம் ஒரு தீர்க்கதரிசிதானே.
போதகர் : ஆம். வாஸ்தவம்தான். ஆனால், அவ னை(ரை) சில ஆராய்சியாளர் தன் தகப்பனின் மறு மனையாட்டியின் மகளைக் கல்யாணம் செய்ததாகக் குறை கூறுவார்கள்
எதா : அதைப்பற்றி இப்பொழுது கவலை இல்லை. மானிடன் இயற்கையில் சகோ தரியைக் கல்யாணம் செய்தேதான் உற்பத்தி ஆகி இருக்கலாம்.
போதகர் : அப்படியானால் ஆபிரகாமைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியதென்ன? எதா : உண்மையாக அவன் ஒரு தீர்க்க தரிசிதானே.
போதகர் : ஆம், வாஸ்தவம்தான். ஆதி யாகமம் 2ஆம் அதிகாரம் 7ஆம் வசனத்தில் (கடவுளே) தேவனே அவன் ஒரு தீர்க்கதரிசி என்பதாய் சொல்லியிருக்கிறார்
எதா : அந்த ஆபிரகாமே தானே ஆதியா கமம் 21ஆம் அதிகாரம் 11ஆம் வசனத்தில் இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும் பொருள்படப் பேசி யதை தாங்கள் வாசித்த துண்டா? போதகர் : அ. ஆ.. ஆம் வாசித்ததுண்டு ஆனால், அவன் மனைவி சாரா அழகுள்ளவள். அதற்காகப் பயந்து சொல்லியதுண்டு.
எதா : மனைவி அழகானால் மனிதர்கள் மனிதர்களுக்குப் பயந்து தெய்வத்திற்குப் பயப்பட வேண்டியதில்லையா?
போதகர் : சார் அது பழைய ஏற்பாட்டில் உள்ளது. புதிய ஏற்பாட்டில் உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள்.
எதா : சரி அய்யா நான் படிக்கிறேன். அப் படிப்பட்டவர்களாலேதானே உங்கள் பைபிள் எழுதப்பட்டது. போதகர்: தெய்வமில்லாத காலமிது (என்ப தாய் முணுமுணுத்துக்கொண்டு நழுவி விடுகிறார்.)
எதா: பைபிள் காலத்தில் தெய்வப் பயமில்லாத இடமிருந்து இப்பொழுது காலம் வந்து விட்டது என்பது உங்கள் அனுபவம். ஆனால் எங்களுக்குத் தெய்வ கவலையில் லாத (காரியமே) வாழ்க்கையே வேண்டும் என்பது எங்கள் துணிபு.
- விடுதலை நாளேடு, 7.9.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக