முதல் கதை
‘மகாசிவராத்திரி' தொடர் புடைய இரு புராணக் கதை களைப் பார்ப்போம்...
ஏழைக் குடியானவன் ஒரு வன் விறகு பொறுக்க காட்டுக்குச் சென்றான். வேலையில் கண் ணும் கருத்துமாய் இருந்ததால் நேரம் போனது தெரியவில்லை. இருட்டிவிட்டது. விலங்குகளின் சத்தம் கேட்டு பயந்தவன், ஒரு மரத்தின் மீது ஏறினான். கிளைகளுக்கு நடுவில் அமர்ந் தான். 'தூங்கினால் கீழே விழுந்து விடுவோமே?' என்று பயந்தான்.
தூக்கம் வராமல் இருக்க... மரத்தில் இருந்த இலைகளைப் பறித்து சிவனின் பெயரை உச்சரித்தபடி கீழே போட ஆரம்பித்தான். இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்தவன், பொழுது புலர்ந்ததும் மரத்தைப் பார்த்தான். அமர்ந்திருந்தது ‘வில்வம்'.
அவன் போட்ட இலைகள் அனைத்தும் மரத்தின் கீழ் லிங்கத்தின் மீது குவிந்திருந்தது. அன்று மகாசிவராத்திரி என்பதும் அவனுக்குத் தெரியாது. பலனை எதிர்பார்க்காமல் செய்த பூஜை, இறைவனை மனம் குளிரச் செய் தது. அவனுக்கு காட்சித் தந்து அருளினார். அவன் பெரும்பேறு பெற்றான் என்கிறது புராணம்..
மற்றொரு கதை
ஒருமுறை பிரம்மனும், மகா விஷ்ணுவும் தங்களுக்குள் யார் சிறந்தவர் என்று விவாதித்தனர். அது அவர்களுடைக்கிடையே சண்டையாகமாறியது.அப் போது, எதிரில் லிங்கத் திருமேனி தோன்றியது. அதன் உச்சி அல்லது அடி பாகத்தை காண்பவரே உயர்ந்தவர் என்று லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட அசரீரி கூறியது.
லிங்கத்தின் மேல் பகுதியை நோக்கி சென்றார் பிரம்மன். விஷ்ணு பகவான், கீழ் பாகத்தை நோக்கினார். இருவராலும் எங்கே முடிகிறது என்பதைக் காண முடியவில்லை. மகாவிஷ்ணு இதனை ஒத்துக்கொண்டார். ஆனால், பிரம்மன்... லிங்கத்தின் மேல் பாகத்தை தான் கண்ட தாக பொய் சொல்ல, அதற்குச் சாட்சியாக தாழம்பூவை கொண்டு வந்தார்.
இதனைக் கேட்டு சிவ பெருமான் கோபமுற்று, ‘இனி பூலோகத்தில் உன்னை வணங்க மாட்டார்கள்' என்று சபித்தார். அனைத்துக்கும் தொடக்கமாக (ஆதி) விளங்கும் அவருக்கு முடிவே (அந்தம்) இல்லை, என்று புராணம் கூறுகிறது.
மகாசிவராத்திரி தரிசன பலன்
ரிஷிகளும், மன்னர்களும் நடத்தும் ‘அசுவமேதயாக' புண் ணியத்தை மகாசிவராத்திரி தரிசனம் தரும்.
வாழ்நாளில் ஒருவர் செய்த பாவங்கள், சிவனை நான்கு கால பூஜை செய்து வழிபடுவதால் நீங்கும்.
தொடர்ந்து 24 ஆண்டு கள்மகாசிவராத்திரிவிரதம் இருப்பவரின் 21 தலைமுறை களும் நற்கதி அடைந்து முக்தி அடைவார்கள்.
- வாராந்திர ‘ராணி‘ 18.2.2018, பக்கம் 30
இந்த இரு கதைகளும் எதைக் காட்டுகின்றன?
முதல் கதை கடவுள் தற் பெருமைக்காரர் என்பதைக் காட்டவில்லையா?
இரண்டாவது கதை கடவுள் களுக்குள்ளும் போட்டி உண்டு என்பதையும், கடவுள் பொய் சொல்லக் கூடியவர் என்பதையும் விளக்கவில்லையா?
மும்மலங்களையும் அறுப் பது (ஆணவம், கன்மம், மாயை) என்ற யோக்கியதை இந்துக் கடவுள்களுக்குக் கிடையாதா?
பக்தி ஒழுக்கத்தை வளர்க் குமா சொல்லுங்கள்!
- மயிலாடன்
- விடுதலை நாளேடு, 13.2.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக