ஜாதி, மத, நிற, தேச வெறிகள் ஒழிவதெப்படி?
தேவகோட்டை, திருச்சி பக்கத்திலுள்ள கிராமங்களில் ஆதி திராவிடப் பெண்மணிகள் மேலாடை அணியக்கூடாதென்று தடுத்தும் அவர்களுடைய குடிசைகளைக்கொளுத்தியும் ஜாதி இந்துக்கள் என்பவர்கள் கொடுமைப்படுத்தி வருகிறார்கள்.
தேவகோட்டை, திருச்சி பக்கத்திலுள்ள கிராமங்களில் ஆதி திராவிடப் பெண்மணிகள் மேலாடை அணியக்கூடாதென்று தடுத்தும் அவர்களுடைய குடிசைகளைக்கொளுத்தியும் ஜாதி இந்துக்கள் என்பவர்கள் கொடுமைப்படுத்தி வருகிறார்கள்.
படகாரா என்னுமிடத்தில் ஒரு கோவில் குளத்தில் குளிக்கக்சென்ற தீண்டாதார்" என்பவர்களை ஜாதி இந்துக்கள் என்போர் அடித்துத் துரத்தினார்களாம். திருவாங்கூரிலுள்ள சுசீந்திரத்தில் பொது ரஸ்தாவில் ஆதிதிராவிடர்களை அனுமதிக்க மறுக்கிறார்கள். இது தான் ஜாதி வெறி.
கான்பூரில் இந்துக்களும் முஸ்லிம்களும் ரத்த வெறிபிடித்த மிருகங்களைப் போல் ஒருவரை யொருவர் கொலை செய்தும், வீடுமுதலானவைகளைக் கொளுத்தியும் அட்டகாசம் செய்துகொண்டிருக்கிரு.ர்கள்.
திருச்சியில் 'ஹிந்து'க் கடவுள் முஸ்லிம் கடவுளுடைய வீடாகிய மசூதிக்கு முன்பு போனதினால் இரண்டு கடவுளுடைய சிஷ்ய கோடிகளுக்கும் அடிதடி எற்பட்டு ரத்தஞ் சிந்தியிருக்கிறார்கள் மலையாள தேசத்துக் கும்பலாங்கி மாதா கோவில் வழியாக ஈழுவ வகுப்பார் தங்கள் சிலையை வாத்திய முழக்கத்துடன் எடுத்துச் சென்றதற்காக, கிருஸ்துவர்களுக்குக் கோபம் பிறந்து,
சிலையைக் தள்ளி மிதித்துக் கலகம் செய்ததற்காக 80 கிருஸ்துவர்கள் மீது வழக்குக் தொடரப்பட்டிருக்கிறது. இது தான் மத வெறி.
நாகரீகத்தில் மிகுந்த அமெரிக்கர்கள் "நாகரீகம் வேறு, மனுஷத்தன்மை வேறு என்பதை உலகத்திற்கு நிரூபிப்ப தற்காக நீக்ரோவர்களைக் தீயில் போட்டு வதைத்துக் கொடுமைப்படுத்துகிறார்கள். பெரிய புத்திசாலிகள் நிறைந்திருப் பதாகச் சொல்லப்படும் லண்டன் நகரத்தில் இந்திய மாணவர் களைச் சாப்பாட்டு விடுதிகளில் அனுமதிக்கமறுக்கிறார்கள். இது தான் நிறவெறி.
பர்மாவில் பர்மியர்களுக்கும் இந்தியர்களுக்கும் கொடிய சச்சரவுகள் ஏற்பட்டு நிராபாதிகளான பெண்டு பிள்ளை உயிருடன்வதைக்கப்படுகிறார்கள். அமெரிக்காவில் இந்தியர்களும் வேறு தேசத்தாரர்களும் நிரந்தரமாய்க் குடியேற முடியாதபடி சட்டங்கள் செய்து வைத்திருக்கிறார்கள். இது தான் தேச வெறி.
இம்மாதிரியான வெறிகள் மனித சமூகத்தைப் பிடித்துக் கொண்டு உலகத்தைப் பாழ்படுத்துகின்றன. இவ்விதவெறிகள் மேலும் மேலும் பெருகாமல் இருக்க வேண்டுமானால், திரு. காந்தியைப் போன்ற வர்ணாசிரமிகளும் திரு.ஷவுகத் அலியைப் போன்ற முரட்டுமதவைதீகர்களும்,
சர்ச்சிலைப் போன்ற தேசபக்தி வெறியர்களும், ராஜாபகதூர் கிருஷ்ண மாச்சாரியைப்போன்ற ஜாதிப்பித்தர்களும் சொல்லுகின்ற விஷயங்களை மக்கள் எதிர்த்துப்போராடவேண்டும். ஆனால் இந்த வெறிகள் ஒழிந்து மனிதன் மனிதனாகவே, மனுஷத் தன்மையோடு, இரக்கம் தைரியம் நல்லெண்ணம், சகோதரத்துவம் முதலிய குணங்களோடு வாழவேண்டு மென்றால் என்ன செய்யவேண்டும்.
லண்டன் அறிவு இயக்கத்தின் போஷகர்களுள் ஒருவராகிய ஆர்தர்கீத் என்பவர் அபர்டின் சர்வ கலாசாலையில் பேசியிருப்பதை வாசகர்கள் கவனிக்குமாறு கோருகிறோம். உலக ஒற்றுமைக்கு உள்ள "ஒரே வழியைப்பற்றி அவர் சொல்லுவதாவது:-
"உலகில் ஸ்திரமான சமாதானம் நிலவவேண்டுமெனில் உலகிலுள்ள வெள்ளை நிறம், கறுப்பு நிறம், புது நிறம், மஞ்சள் நிறமுடைய சகல ஜாதியினரும் கலப்பு விவாகம் செய்து உலகிலே ஒரே ஜாதியை உற்பத்தி செய்யவேண்டும்.
பூர்வீக காலக் திலிருந்து ஒவ்வொரு வகுப்பினரும் வழி வழி வந்த தனி வகுப்பினர்கள் ஒருவருக்கொருவர் பெண்களைக் கொடுத்தும் கொண்டும் வந்தால் உலகில் கூடிய சீக்கிம் ஒரே வகுப்பு ஏற்பட்டுச் சமாதானத்திற்கு வழி ஏற்பட்டுவிடும். அவ்விதம் செய்வதால் பூர்வீக காலந்தொட்டுத்தாங்கள் அநுபவித்து வரும் பாரம்பரிய நிலைமையை ஒருவருக்கொருவர் பங்கிட்டுக் கொண்டவர்களாவர்.
நமது நாகரீக உலகில் மனிதன் மனதில் துவேஷங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் அந்த உணர்ச்சியைப் பகுத்தறிவு கொண்டுகட்டுப்படுத்தவேண்டும். அப்படிக் கின்றேல் பல வகுப்பினர் கலந்து வாழும் நமது நாகரீக உலகம் சதா வகுப்புச் சண்டைகளாலும் போட்டிகளாலும், துன்புற்றுக்கொண்டே இருக்கும்.
(புதுவை முரசு, 20.7.1931)
-விடுதலை,18.9.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக