பெண்களுக்கு மரியாதை தரும் நவராத் திரியாம் - நவராத்தி, வந்த கதையைக் கேட் டால் சுயமரியாதை உள்ள எந்த பெண்ணும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்.
மேற்குவங்க மாநிலத்தில் துர்கா பூசை அன்று சிலை செய்ய கங்கையில் இருந்து களிமண், பசுமாட்டுச் சாணம், பசு மூத்திரம், மற்றும் விலைமாதர் வீட்டு வாசல் மண் இவற்றை கொண்டு வந்து பார்ப்பனரிடம் கொடுத்து அவர்கள் அவற்றை யாகத்தில் வைத்து பூசை செய்த பிறகு அதில் துர்க்கை சிலை செய்யவைக்கப்பட்ட மண்ணுடன் கலந்து துர்க்கை செய்வார்கள்.
எப்போதும் போல் இதற்கும் பல கதைகளைச் சொல்வார்கள். மைசூரை ஆண்ட மகிசனை பல வேதங்களை கற்று தேவர்களுக்கு இணையான சக்திகளைப் பெற்றுவிட்டானாம் - ஆகையால் தேவர் களுக்கு அவனால் அழிவு வந்துவிடுமாம், ஆகவே அவனைக் கொல்லவேண்டும், வேதங்களைக் கற்றதால் படைக்கும் கடவுள் (பிரம்மா) காக்கும் கடவுள் விஷ்ணு, அழிக்கும் கடவுள் சிவன் அகியோர்களால் கொல்ல முடியாதாம்.
அவனே விரும்பி அதீத காதல் கொண்ட பெண் எவளோ அவளால் தான் அவனை கொல்ல முடியுமாம்! இந்திரன் முதல் அனைத்துத் தேவர்களும் தங்கள் பெண் டிரை மகிசனை காதலால் மயக்க அனுப்ப முன்வரவில்லை. ஆகையால் அழிக்கும் கடவுளான சிவனின் மனைவியான பார்வதி மற்ற பிரம்மனின் மனைவி விஷ்ணுவின் மனைவியுடன் சேர்ந்து துர்க்கையாக மாறி மகிசனை கொலை செய்ய முன்வருகிறாள்.
ஆனால் இங்கே என்ன சிக்கல் என்றால் அவனை காம இச்சைக்கு ஆட்கொள்ள முடியாமல் துர்க்காதேவி தவித்துவருகிறாள். இதனை அடுத்து காமதேவன் ஒரு யோசனை சொல்கிறான், அவன் ஏக பத்தினி விரதன், நீ அவனை காதலித்து திருமணம் செய்ய முடியாது,
ஆனால் அவனை விலைமாதராக மாறி அவனை உடலுறவுக்கு அழை! நான் கரும்புவில்லை அவன் மீது எய்து, அவனை காமவலையில் வீழ்த்துகிறேன், பிறகு அவனை கொலை செய்துவிடு என்று ஆலோசனை கூறுகிறான்.
ஆனால் காமதேவனால் கூட மகிச னுக்கு காம இச்சையைத்தூண்ட முடிய வில்லை. இந்த நிலையில் துர்க்கை “தான் ஒரு யாருமில்லா அபலை, தனது பிறவி வினையினால் பெரும் துன்பத்தில் ஆழ் கிறேன், என்று கூறி ஏகபத்தினி விரதனுடன் நான் கூடும் போது தனது பிறவிவினை தீரும்” என மகிசனிடம் கூறுகிறாள். துர்க் கையின் பேச்சை நம்பி அவளை காதலிக்க ஆரம்பிக்கிறான் மகிசன், 8 நாட்களாக தொடர்ந்து அவனுடன் கூடிய துர்க்கைக்கு அவனை கொலை செய்யமுடியவில்லை.
இதனை அடுத்து நாரதனை அழைத்து மகிசனை கொலை செய்ய யோசனை கேட்கிறாள், அதற்கு நாரதன் மகிசன் எல்லாவேதங்களையும் கற்று தேர்ச்சி பெற்றவன், வேதத்தைப் படைத்த பிரம் மனே பெண் இச்சை கொண்டு வேதத்தின் பெரும்பகுதியை மறந்துபோகும் அளவிற்கு சாபம் வாங்கியுள்ளான், ஆனால் மகிசன் அப்படி அல்ல - ஏகபத்தினி விரதன், ஆகவே அவனை வேதத்தின் புண்ணியங்கள் காப் பாற்றுகிறது, நீ அவனை மனம் மாற்ற வேண்டுமென்றால் அவன் கற்றவேதத்தை அவன் மறக்கச்செய்யவேண்டும் என்று கூறினான்.
இதனை அடுத்து 9 ஆம் நாள் மிகவும் துன்புற்றவள் போல் துர்க்காதேவி பஞ்சணையில் இருக்க அவள் மீது இரக்கம் கொண்ட மகிசன் ஏன் இப்படி இருக்கிறாய்? நான் தான் உனது பிறவிவினையை போக்க முன்வந்தேனே! என்று கூறினான்.
அதற்கு துர்க்கையோ இன்று ஒரு நாள் மட்டும் நீங்கள் கற்ற வேதங்களை என் வீட்டு வாசலில் விட்டுவிட்டு வந்து என்னு டன் கூடும் போது என்னுடைய பிறவி வினை முற்றிலும் நீங்கும் என்று கூறினாள்.
துர்க்கையின் சூழ்ச்சி அறியாத மகிசன் தன்னுடைய வேத புலமை அனைத்தையும் தன்னுடைய அங்கவஸ்திரத்தில் வைத்து பரத்தையாக உருமாறி இருந்த துர்க்கா தேவியின் வாசலில் வைத்துவிட்டார்.
அவர் வைத்த உடனே நாரதன் அவன் கற்றவேதங்களை மண்ணாக மாற்றி விட்டார். இந்த நிலையில் மகிசனுடன் கூடிய துர்க்கைக்கு நாரதன் அவன் கற்ற வேதங்கள் மண்ணோடு மண்ணாகிப்போன செய்தியைக் கூறியதும், காம மயக்கத்தில் இருந்த மகிசனை துர்க்கை கொலை செய்தாள்.
ஆகவே தான் இன்றும் அந்தப்புண்ணிய மண் அனைத்து விலைமாதர் வீட்டு வாச லில் இருப்பதாக நினைத்து அந்த மண்ணை எடுத்து துர்க்கை சிலைகளைச் செய் கின்றனர்.
எது எப்படியோ இந்து மதம் பெண்களை எந்த அளவிற்கு கீழ்த்தரமாக சித்தரித்துள் ளது என்று பாருங்கள், இந்துக்கள் வணங் கும் மும்மூர்த்திகளில் மனைவியை மகிசன் விவகாரத்தில் விலைமாதராக்கி வைத்துள் ளது. கீழ்த்தரமான பாலியல் வக்கிரத்துடன் கூடிய வடமொழி துர்க்கா புராணத்தை மொழிமாற்றம் செய்தால் பச்சைப் பாலியல் நூலை விட கேவலமான முறையில் எழுத வேண்டியிருக்கும், ஊடகத்தின் கண்ணியம் கருதி முக்கியமானவற்றை மட்டுமே மொழி மாற்றம் செய்துள்ளோம்.
-விடுதலை ஞாயிறு மலர், 21.10.17