புதன், 25 அக்டோபர், 2017

அவதாரங்களின் அவலங்கள்!

‘அறிவின் எல்லை’யாம் அய்யா அவர்கள் கடவுள், மதம், இதிகாசங்கள், புராணங்கள், நம்பிக்கைகள் ஆகியவை பற்றி எழுப்பிய வினாக்களுக்கு - அன்றும் - இன்றும் - விடையளிக்க, விளக்கம்தரத் துணிந்து வந்தோர் எவருமிலர். ஆனால் சங்கராச்சாரிகளும், ஆதீனங்களும், சின்மயாக்களும், கிருபானந்தர்களும், கீரன்களும் மற்றும் ‘இந்து’ - இதழ்ப் புகழ் விரிவுரை யாளர்களும் தங்கள் புரட்டுச் சரக்குகளை வெட்க மில்லாமல் விற்பனை செய்து கொண்டுதான் இருக் கின்றனர்!

அத்தகையதொரு புன்மைச் சரக்கே ‘தசாவதாரம்‘ என்பது. பழுத்த பக்திக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, இந்த வைணவக் கதைகளையெல்லாம் நன்கு கற்றுத் தேர்ந்து, தெளிந்தமையின் விளைவாகப் ‘பகுத்தறிவுப் பகலவன்’ கேட்டார்கள் இப்படி:

“இந்த மாதிரி அவதாரங்களால் மக்களுக்கு ஏற்படும் நன்மை என்ன? இதனால் மக்களுக்கு ஏற்படும் படிப் பினை என்ன?”

இதுபற்றி நடமாடும் தெய்வங்களோ, வைணவத் திருமேனிகளோ, வயிற்றுப் பிழைப்பு வாயாடிகளோ மூச்சுவிட்டார்களா? கிடையவே கிடையாது. காரணம்? எதுவும் செப்பவியலாது. ஏன்?

“விஷ்ணு அவதாரங்கள் அத்தனையும் ஆரியர் களின் எதிரிகளான அதாவது மனுதர்மத்துக்கு விரோத மாகவும் ஆரிய ஆதிக்கத்தை ஒடுக்கவும் தடுக்கவும் முயன்றவர்களைக் கொல்லவும் அழிக்கவும் சதி செய்யவும் ஏற்பட்டவை” என்பது ஏதோ அய்யா அவர்கள் ஆத்திரவுணர்வால் ஆராயாது அள்ளித் தெளித்தது அன்று. திறனாயும் எவருக்கும் எளிதாகத் தெளிவாகிவிடும் உண்மையே அது.

‘துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் செய்ய’ - அதாவது தீயவர்களைக் கொன்று, நல்லவர்களைக் காப்பாற்ற விஷ்ணு பூவுலகில் இறங்கிப் பல வடிவங்களில் தோன்றினார் எனப் பெருமையாகப் பேசப்படுகிறதே, அது சரியா...? பார்ப்போம்.

மச்சாவதாரம்

பிரம்மா விஷ்ணுவிடம், “ஸ்வாமி, உலகங்களை நான் எந்தச் சக்தியைக் கொண்டு சிருஷ்டிப்பேன்?” என்று மனுச் செய்ய அவர் “வேதங்களின் பலத்தைக் கொண்டு உலகங்களைச் சிருஷ்டிப்பாயாக” என்று வேதங்களை உபதேசித்து அவ்வேத கிருந்தங்களையும் பிரம்மாவிடம் வழங்கினார். பதினான்கு உலகங்களைப் படைத்து முடித்த பிரம்மா சயனித்துக் கொண்டார்.

அச்சமயம் சோமகன், அயக்கிரீவன் எனும் தைத் தியர் (அரக்கர்) இருவர். “பூலோகத்தில் நடக்கிற தேவ யாகம், பித்ருயாகம் முதலியவற்றால் திருப்தியும் பலமும் அடைந்து, தேவர்கள் நம்மவருக்குச் சத்துருக்களாகி நம்மைப் புறக்கணிப்பார்கள். இவற்றுக்கெல்லாம் மூல காரணமாய் இருக்கும் வேதங்களைத் தூங்கிக் கொண் டிருக்கின்ற பிரம்மாவிடமிருந்து திருடிக் கொள்வோ மானால் தேவர்களுக்குப் பிறப்பே இல்லாமற் போகும்” என்று தங்களுக்குள் ஆலோசித்து, வேதங்களைப் பிரம்மாவிடமிருந்து களவாடி சமுத்திரத்தினுள் பிர வேசித்துக் கொண்டிருந்தனர்.

பிரம்மா மகாவிஷ்ணுவை த்யானிக்க, ‘இப்படி நடக்கும் என்றுதான் நான் மச்சாவதாரம் எடுத்து, மகாசமுத்திரத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கையில் அவ்விரு தைத்தியர்களையும் சங்கரித்து வேதங்களைத் திரும்பக் கைக்கொண்டேன் என்று கூறி விஷ்ணு பிரம்மாவிடம் மீண்டும் வேதங்களை ஒப்படைத்தார்.

இக்கதையின்படி வேதங்களை மீட்டுக் கொண்டு வருவதற்காகவென மச்சாவதாரம் எடுக்கப்பட்டது.

வேதங்களின் தகுதி என்ன?

“பொய் வேதம் தன்னைப் பாராதே” என்று கடுவெளிச்சித்தரும், “சதுர்வேதம் ஆறு வகைச் சாத்திரம் வீணான நூல்களே” எனப் பாம்பாட்டிச் சித்தரும், “பார்ப் பனர் கட்டிய பாழான வேதம்'' என்பதாய்க் குதம்பைச் சித்தரும் “பொறித்த வேதம் சமயமெல்லாம் பொய்” என இராமலிங்க வள்ளலாரும், “வேதம் ஓதாதே” என்று அகப்பேய்ச் சித்தரும் திறனாய்வு செய்திருப்பதிலிருந்தே வேதங்களின் பெருமை பளிச்சிடுகிறது! ஏன் இவர்கள் இப்படித் தீர்ப்புச் சொன்னார்கள்?

வேதங்களின் தத்துவம் பொங்கி வழியும் ஸ்லோ கங்கள் சில:

“நம்மைச் சுற்றி நாலா பக்கங்களிலும் தஸ்யூக் கூட் டத்தினர் இருக்கிறார்களே, அவர்கள் யாகம் செய்வ தில்லை. அவர்கள் ஒன்றையுமே நம்புவதில்லை. அவர் களின் பழக்க வழக்கங்களே வேறாயிருக்கின்றன. ஓ, எதிரிகளை அழிப்பவனே! அவர்களைக் கொல்லு, ‘தஸா’ வம்சத்தையே அழித்து விடு” - ரிக்.

“ஓ கடவுளே! எனக்கு எது வலது, எது இடது, எது கிழக்கு, எது மேற்கு என்பதே தெரியவில்லை. நான் ஒரு குழம்பிய மனிதனாயிருக்கிறேன். நீதான் எனக்கு வழிகாட்ட வேண்டும்“ - ரிக்.

“சகோதரன் யமா, இவன் என்னுடன் புணர மறுக்கும் கெட்ட சகோதரனாயிருக்கிறான்! இதையெல்லாம் காமவேள்தான் உன்னிடம் இப்படி என்னைப் பேசச் செய்கிறவன். எனவே சகோதரா, வந்து என்னுடன் புணர்ச்சியில் ஈடுபடு” - ரிக்,

‘‘ஓ, மனிதர்களே! சொல்வன்மை பெற வேண்டுமாயின் ஆட்டுக் கிடாவுடன் புணருங்கள். இவ்வுலகத்திய வளமையெல்லாம் பெறவேண்டுமானால் எருது ஒன்றைப் புணருங்கள்'' - யஜுர்.

‘‘ஓ, அக்னிதேவா, சூரிய தேவா, சரசுவதி தேவி! இந்த மனிதனுடைய ஆண்குறியை ஒரு வில் போன்று விரைப்பாக்கி விடுங்கள்'' - அதர்வ.

“ஒரு பெண் நடக்கையில் அவளது பிறப்புறுப்பு ஒரு குருவியின் கிறிச்சொலி போல ஹல், ஹல் எனும் ஒலியினை எழுப்புகிறது. ஒரு ஆண்குறி அதனுள் நுழையும்போது கல், கல் எனும் ஒலியை உண்டாக்குகிறது” - யஜுர்,

இவைபோல எண்ணிறந்த தத்துவங்கள் வேதங்களில் கொட்டிக் கிடக்கின்றன.

பார்ப்பனர்தம் பண்பாடு எவ்வளவு இழிந்ததாயிருக் கிறது என்பது புலப்படுகின்றதன்றோ? இப்படிப்பட்ட வேதங்கள் தாம் ‘லோக சிருஷ்டி’க்கு ஆதாரமாய் அமைந்தவையாம், அவற்றை எடுத்துச் சென்றுவிட்ட அரக்கர்களைக் கொன்று வேத மீட்புப் புரியவென்று அரி, மீன் அவதாரம் எடுத்தாராம்!

கூர்மாவதாரம்

துர்வாச முனிவர் தேவேந்திரனுக்கு இட்ட சாபத் தின்படி, திரிலோகாதிபத்தியத்தை இந்திரன் இழக்க, பலி யெனும் அரக்கன் இந்திரலோகத்தின் முடிசூட்டிக் கொண்டு பலீந்திரன் ஆனான்.

பாற்கடலைக் கடைவதால் வெளிப்படும் அமுதத் தினை இந்திரனும் தேவர்களும் குடித்துவிட்டால், மூப்பும் சாக்காடும் நீங்கி மூவுலகாட்சியை அடைவர் என்று விஷ்ணுவிடம் கேட்டறிந்த தேவகுரு பிருகஸ்பதி, கடல் கடையும் செயலுக்கு அரக்கர்களையும் தேவர் களையும் ஏற்பாடு செய்தார். இருதரப்பாரும் கடைந்து கொண்டிருக்கையில் மத்தாயிருந்த மந்தரகிரி நாரா யணன் சங்கல்பத்தால் கடலில் ஆழ்ந்தது. அந்த மலையைத் தூக்கிவர முடியாமற்போன தேவ அசுரர்கள் விஷ்ணுவை வேண்ட, அவர், “பெரிய கூர்மத்தின் வடிவமேந்திக் கடலில் மூழ்கி மந்தர மலையைத் தன் மூக்கு நுனியில் தரிப்போம்” என்று சொல்லி, அப்படியே செய்தார்.

இரு சாராரும் மீண்டும் கடைய, இறுதியில் வெளிப் பட்ட அமுதத்தை விஷ்ணு மோஹினி உருவெடுத்து நடத்திய சூழ்ச்சி நாடகத்தால் தேவர்கள் மட்டுமே பருக முடிந்ததால், அரக்கரை வென்ற தேவேந்திரனே எப் போதும்போல மூவுலகையும் பரிபாலிக்கும்படி பட்டா பிஷேகம் செய்விக்கப்பட்டான்.

ஆக, இந்திரனுக்கும் தேவர்களுக்கும் இன்ப வாழ்வு கிடைக்கச் செய்வதற்கென்று தானே மந்தர மலையைக் கடலுக்குள் ஆழுமாறு செய்துவிட்டுத் தானே ஆமை உருவெடுத்து மலையை மீட்டதுடன், தானே மயக்கும் பெண் வடிவமேந்தி அரக்கர்கள் அமுதம் உண்ணவிய லாமலும் வினையாற்றிய விஷ்ணுவின் கதைதான் கூர்மாவதாரம்.

வராக அவதாரம்

கசியப் பிரஜாபதிக்கும் திதிக்கும் இரண்ய கசிபு, இரண்யாட்சன் எனும் ராட்சஸ இரட்டையர்கள் (?) பிறந்தனர். இருவரும் சோனபுரம் பட்டணத்தைத் தலைநகராய்க் கொண்டு பூலோகம் முழுமையும் ஸ்வாதீனப்படுத்திக் கொண்டனர்.

ஒரு நாள் நாரத முனிவர் இவ்விருவரிடமிருந்து பூமியைக் கைப்பற்ற விஷ்ணு தீர்மானித்த சூழ்நிலையை இவர்களிடம் வெளிப்படுத்த, இளையவன் இரண் யாட்சன், “நம் பூமி அவன் கையில் அகப்படாதிருக்கச் செய்ய வேண்டும்” எனக்கூறி, அக்கணமே எழுந்து பூமியைப் பாயைப் போல் சுருட்டிக்கொண்டு, கடலுக்குள் நுழைந்து, ரசாதலம் சென்று பூமியை வைத்துவிட்டு வெளிப்போந்தான்.

தேவர்களும், முனிவர்களும் பிரம்மாவின் தலை மையில் விஷ்ணுவிடம் சென்று, “இரண்யாட்சன் பூமியை ரசாதலத்தில் ஒளித்து வைத்துவிட்டான். தேவ யாகம், பித்ரு யாகம் எவையும் நடைபெறாமல், எங்கட்கு உணவாகிய அவ்விய கவ்வியங்கள் இல்லாமையால் தேவரீர் எங்களைக் காப்பாற்ற வேண்டும்” என்று முறையிட, அவர் அபயமளித்து வராக ரூபமெடுத்து, பாதாளத்திற் புகுந்து, பூமியைத் தன் கோரைப் பல்லினால் தூக்கிக் கொணரும்போது எதிர்ப்பட்ட இரண்யாட்சனைக் கொன்று, தேவர்களையும் முனிவர்களையும் ரட்சித்தார். அதாவது தேவர்களுக்கு உணவு கிட்டவேண்டும் என்ப தற்காக, நாராயணன் இரண்யாட்சன் மறைத்து வைத் திருந்த பூமியை மீட்டு வர பன்றியவதாரம் மேற் கொண்டார்!

நரசிங்க அவதாரம்

தன் தம்பி இரண்யாட்சன் ஒரு பன்றியால் அழி வுற்றதைக் கேள்வியுற்ற அண்ணன் இரண்யகசிபு அப்பன்றியைத் துண்டுதுண்டாய் நறுக்கக் கிளம்பி வேத அத்தியயன சாலைகளிலும், ஜபம் தபம் ஹோமம் முதலியன நடக்கும் இடங்களிலும் மகா நதிகளின் தீரங்களிலும் புண்ணிய ஊர்களிலும் தேடியும் அது அகப்படவில்லை. ஆங்காங்கே இவனால் முனிவர்கள் அழிக்கப்பட்டார்கள்; அவர்களின் யாகங்கள் கெடுக்கப் பட்டன.

நாரதர் மூலமாக நாராயணன் செய்த சூதால், இரண்யகசிபுவின் மகனும் மனைவியும் அவனுடைய எதிரியாக மாற, நரசிங்க உருவம் பூண்ட விஷ்ணு இரண்யனை எளிதாகக் கொன்றார்.

விஷ்ணுவினுடைய கொலைப் பண்பையும் முனி வர்களின் வேதவேள்விகளையும் எதிர்த்தமைக்காகப் பழிவாங்குதற்காக ஏற்பட்டதே நரசிம்ம அவதாரம்.

வாமன அவதாரம்

பிரஹ்லாதனின் பேரன் பலியெனும் அசுரன் தவமிருந்து பிரம்மாவிட மிருந்து வரம் பெற்று, இந்திரனுக்குத் தூது அனுப்பி, தன் முன்னோர் ஆண்டு கொண்டிருந்த திரிலோகாதிபத்தியத்தை மீண்டும் தன்னிடம் ஒப்படைத்து விடவேண்டும் எனக் கேட்க, தேவகுருவும் முனிவர்களும் விஷ்ணுவிடம் முறையிட, அவரும் உபேந்திரன் என்னும் வாமன மூர்த்தியாய் மாற்றுருக்கொண்டு பலியிடம் சென்று “நான் ஸ்வதந் திரமாய்த் தவம் செய்து கொண்டிருக்க மூன்றடி நிலம் மட்டும் வேண்டும் எனக் கேட்க, பலி ஒப்புக் கொள்ள, இரண்டே அடிகளில் அவனது உலகு முழுமையும் அளந்துவிட்டு மூன்றாம் அடிக்கு அவனின் தலைமீது ஒரு காலை வைத்து அழுத்தி அவனை ரசாதலம் அனுப்பிவிட்டு, இந்திரனை வரவழைத்துப் பட்டம் சூட்டினார்.

இந்தக் கதையில் வரும் பலி மன்னன் விஷ்ணு வினிடத்தில் நிறைந்த பக்தியுடையவனாய்க் காட்டப் படுகிறான். தனக்கிருக்கும் பக்தி குன்றவே கூடாது என விரும்பியவன் அவன். விஷ்ணு பிராமண பிரம்மச்சாரி வடிவந்தாங்கி, அம்மன்னனிடம் சென்றபோது அவன் வைஷ்ணவயாகம் செய்து கொண்டிருந்ததாகவே கூறப்பட்டுள்ளது.

தன்மீது நீங்காப் பற்றுடையவனாய்ப் பலிமன்னன் இருந்தாலும் அவன் அரக்கர் வழி வந்தவன் எனும் ஒரே நிமித்தம் அவனை அழித்து இந்திரனுக்குப் பட்டம் சூட்டிய விஷ்ணுவின் தர்மத்தைப் பறை சாற்றுவது தான் வாமன அவதாரம்!

பரசுராமன் அவதாரம்

விஷ்ணுவின் கையில் உள்ளதாய்க் கற்பிக்கப்படும் சுதரிசனம் எனும் சக்ராயுதத்தின் செருக்கையடக்கு வதற்காக ஜமதக்னி முனிவன் மகன் (பரசு) இராமனாக விஷ்ணு அவதாரம் ஆகினார் என்ற இந்தக் கதையிலுங்கூட, பிராமணப் பரசுராமன் இருபத்தியொரு முறை பூவலம் வந்து ஆயிரக்கணக்கில் சத்திரியர்களைக் கொன்று குவித்தான் எனும் ‘சிறப்புச் செய்தி’ காணப்படுகிறது!

இராமன் அவதாரம்

தேவர்கள் அனைவரும் விஷ்ணுவிடம் போய், “தேவரீர், இராவணன் எங்களுக்குத் தரும் துன்பங்களை எங்களால் பொறுக்க முடியவில்லை. தாங்கள்தான் எங்களைக் காப்பாற்றவேண்டும்” என்று முறையிட்டனர். அவ்வாறே விஷ்ணு இராமனாகவும் அவன் மனைவி இலட்சுமி சீதையாகவும் பூவுலகில் அவதாரம் செய்து, யாகங்களுக்குப் பெருந்தடையாகவிருந்த இராவணனின் குடும்பத்தினர் யாவரையும் - விபீடணன் நீங்கலாக - அழித்தொழித்தனர்.

பலராமன் - கிருஷ்ணன் அவதாரங்கள்

பூமி தேவி பிரம்மனிடம். இப்போது அநேக துஷ்டர்கள் பிறந்துள்ளதால், அவர்களின் பாரத்தைச் சுமக்கமாட்டாமல் துன்பப்படுகிறேன் என்று முறையிட, இருவரும் விஷ்ணுவிடம் சென்று வேண்டிக்கொள்ள,

“க்ரூத-த்ரேதா யுகங்களில் நான் சங்கரித்த காலநேமி கம்சனாகவும், கும்பகர்ணன் தந்தவக்ரனாகவும், இராவணன் சிசுபாலனாகவும் மறுபடியும் பிறந்துள்ளார்கள். நான் தேவகி-வசுதேவர் மகனாய்ப் பிறந்து கம்சன் முதலானோரைச் சங்கரிப்பேன். நீங்கள் எனக்கு சகாயர்களாக ஜன்மியுங்கள்’ என்று கூறிய நாராயணன், கிருஷ்ணராகத் தேவகியிடம் தான் அவதரிக்கு முன்னர், தன் அம்சங்களுள் ஓர் அம்சத்தைக் கொண்டு வசுதேவரின் முதல் மனைவி ரோகிணியிடம் பிறந்து, பலராமன் என்ற பெயருடன் வாழ்ந்து, சராசந்தன், முஷ்டிகன், வலன், பிரலம்பாசுரன், கூடன், கம்சனின் தம்பியர் என்பர் ஆகியோரைக் கொன்றார்.

கிருஷ்ணனாக அவதரித்த விஷ்ணு பூதனை, தேனுகன், அக்குரூரன், சானூரன், நரகாசுரன், கம்சன், டிம்பிகன், முரண், சால்வன், சிசுபாலன், வக்ரன் ஆகியோரை அழித்தார்.

கல்கி அவதாரம்

இது இனிமேல் விஷ்ணு மேற்கொள்ள விருக்கிற வொன்றாம்.

கலி புருஷன் பூலோகத்தில் அதர்ம சிங்காசன மேறி நல்லார்க்குக் கண்டகனாகவும் பொல்லார்க்கு ரட்சகனாகவும் இருப்பான். ஆகவே நன்மதங்கள் மங்கி மதிப்பிழக்கும்; வர்ணாசிரம ஆசாரங்களும் ஜாதி நீதிகளும் வேதம் முதலான சத் வித்தைகளும் நாசம் எய்தும்; சத்திரியர்கள் ராஜ்ய பதவிகளை இழப்பார்கள், மிலேச்சர் அரசராவார். பிராமண நற்குலத்தார் ஆசாரமில்லாதவர் ஆவர், விஷய ஞானமில்லாதோரும் வேதத்திற்குப் புறம்பான சண்டாளர் முதலானோரும் குருமார் ஆவார்கள்.

இப்படிப்பட்ட கலியுகத்தின் கடைசியில் விஷ்ணுகீர்த்தி எனும் சத்பிராமணனுக்கும் சுசீலை யெனும் நன்மனைவிக்கும் கல்கியெனும் பெயருடன் மகாவிஷ்ணு பிறந்து துர்மார்க்கங்களைக் கண்டிப்பார்.

தசாவதாரம் பற்றி அதிகாரம் படைத்த நூல்கள் தெரிவிக்கும் இவற்றின்படி ‘துஷ்டர்கள்’ யார்? ‘சிருஷ்டர்கள்’ எவர்? - என்ற தந்தை பெரியார் அவர்களின் இயக்கத்தின் கேள்விக்கு நிறைவளிக்கும் வண்ணம் விடையிறுக்கும் நாணயம் எந்த வைதீகருக்கேனும் உண்டா?

அரக்கர்களை துஷ்டர்கள் என்று கதைக்கப்படுவதில் உண்மையோ நேர்மையோ இருக்கிறதா? அரக்கர் என்போர் செய்ததுதான் என்ன?

வேதங்களை வெறுத்தார்கள்.

வேள்விகளை எதிர்த்தார்கள்.

தேவர் - முனிவர்களைப் பகைத்தார்கள்.

- இவை தவிர அசுரர் மீது வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட் டுள்ளனவா? இல்லையே..!

வேதங்களை ஏன் அரக்கர் வெறுத்தனர்? வேதங்களில் அவர்கள்மீது வெறுப்பு உமிழும் வரிகள் நிறைய இடம் பெற்றிருந்தன. மேலும் நாகரிக மாந்தர் எவருக்கும் அருவருப்பு ஊட்டக்கூடிய எண்ணற்ற கொச்சைக் கருத்துகள் அவற்றில் நிரம்பியிருந்தன. பண்பட்ட மனத்தோர் அனைவரும் வேதங்களை வெறுக்கத்தானே செய்வர்?

வேள்விகளை எதிர்த்தனர் என்பது அரக்கர்கள் உயிர்களின்மேல் இரக்கம் காட்டிய, ஈர நெஞ்சர்கள் எனும் உண்மையையல்லவா புலப்படுத்துகிறது.

யாகங்கள் என்னும் பெயரால் ரிஷிகள் இளங்கன்றுகளின் உயிர்நிலையைக் கையினால் திருகிக் கசக்கிக் கொன்று பிறகு நெருப்பில் பொசுக்கிச் சுவைத்துத் தின்றனர் என்ற உண்மையை எவரால் மறுக்க வொண்ணும்?

“அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத்து உண்ணாமை நன்று”

எனும் பக்குவ நிலையில் வாழ்ந்த அசுரர்கள் கொடுமையான வேள்விகளை வெறுத்தமை முற்றிலும் இயற்கையான உயர்ந்த செய்கையே.

இத்தகைய வேதங்களையும் வேள்விகளையும் தங்களது வாழ்க்கை நெறியாகவே கொண்டு ஒழுகி காட்டுமிராண்டித் தன்மையை விடாப்பிடியாய்ப் பின்பற்றி வந்த முனிவர்களையும் தாம் மேவன செய்தொழுகிய தேவர்களையும் மாந்தப்பற்று வாய்ந்த அசுரர்கள் பகையாமல் இருக்கமுடியுமா?

“கொலை, புலை, கட்குடி முதலிய தீ வினைகளைப் பெருக்கி ஆரியர் கொண்டாடிய வெறியாட்டு வேள்விகளில் வேளாளர் மிக்க வெறுப்புக் கொண்டு, அவ்வேள்விகளை அழித்தற்கும், ஆரியரோடு போர்புரிந்து அவரை அடக்குதற்கும் முன் நின்றமை ஒரு வியப்பன்று?” என்பது தமிழ்க் கடலாரின் ஆய்வுரையாகும்.

இந்த இடத்தில் இன்னொன்றும் குறிப்பிடத்தக்கது. அதாவது, “சதுர்முகன் தன்னுடைய வதனம், வட்சஸ்தலம், ஊரு, பாதம் என்கிற அவயவங்களினின்றும் பிறந்த பிரம, சத்திரிய, வைசிய, சூத்திரர் என்கிற ஜனங்களை யாகங்களுக்கு உபயோகமான காரியங்களிலே பிரவர்த்திக்கும்படி நியமித்தார். நால்வகை வருணத்தாரும் யாகங்களுக்கு அவசியமானவர்கள்” என்று பராசர பிரம ரிஷியானவர் மயித்ரேய முனிவருக்குத் திருவாய் மலர்ந்தருளியதாக சிறீவிஷ்ணு புராணத்தில் காணப்படுகிறது. இதன்படி வருணாசிரம முறையே யாகச் சடங்குகள் நிறைவேற்றுவதற்கென்றுதான் ஏற்படுத்தப்பட்டது என்று ஆகிறது.

இந்தக் கீழ்த்தரமான தத்துவத்தை உயர்வையே உள்ளிய அசுரர்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? எனவேதான் வெறுப்பு - எதிர்ப்பு - பகைமையெல்லாம்.

இறுதியாக அரக்கர் என்போர் தசாவதாரக் கதைகளின்படி, தம் நாட்டு மக்களுக்கு ஏதேனும் கொடுமைகள், துன்பங்கள், அச்சுறுத்தல்கள், விளைவித் துள்ளனரா? அவர்களின் ஆட்சிகளில் பஞ்சம்-பசி-பட்டினி எனும் தவிப்பு இருந்ததுண்டா?

மாறாக - இரணியகசிபு, இரணியாட்சன் ஆட்சியில் “பூமிகளெல்லாம் பயிர் பச்சைகளால் நிரம்பின. எல்லாப் பிரஜைகளும் எல்லாவிதமான அய்சுவரியங்களையும் உடையோராய், சுகமாக வாழ்ந்து கொண்டிருந்தனர். தேசத்தில் வறிஞன் ஒருவனுமேயில்லை” என்றுதான் சொல்லப்பட்டுள்ளது.

அதேபோல் - பலி மன்னன் பிரம்மாவிடம் பெற்ற வரம், உள்ள நெகிழ்வை உண்டாக்கத் தக்கதாகும்! “என் ஆளுகைக்கு உட்பட்ட குடிமக்கள் எல்லோரும் சகல சம்பத்துகளும் நிறைந்தவர்களாய், எப்போதும் சந்தோஷமான மனம் வாய்த்திருக்க வேண்டும்” என்பதாக வரம் கேட்டுப் பெற்றான் என்றால், எத்துணை இனிப்பும் உவகையும் ஊட்டும் செய்தி அது!

வேண்டுமானால், இந்திரன் நாராயணனிடம் முறையிட்டுக் கண்ட வண்ணம் தேவர்கட்கு அவ்வியமும் (தேவர்க்கென இடப்படும் உணவு) கவ்வியமும் (பசுவின் பொருள்கள்) கிடைக்க முடியாமற் போயிருக்கலாமே தவிர பொதுமக்கள் துன்புற்றார்கள் என்பதற்கு இடமே கிடையாது.

இதற்கு மேலும், அசுரர்களைத் துஷ்டர்கள் என விளம்ப எவரும் விரும்பினால் அது அறிவுடைமையாகுமா?

இவ்வாறு, அசுரர்கள் எவ்வளவுதான் நல்லவராயினும், வேள்விக் கொலைகளை எதிர்த்த அருளாளர்களாயிருந்தாலும், மக்கள் நலத்தில் பெருநாட்டம் கொண்ட சான்றோராய்த் திகழ்ந்தாலும், அத்தகையோர்மீது ‘துஷ்டர்கள்’ என்ற முத்திரையைக் குத்தி அவர்களை ஒழித்துக் கட்டுவதே தன் கடமையென அறிவித்து, மகாவிஷ்ணு என்பவர் பல அவதாரங்கள் எடுக்க முன்வந்து சூதும் சூழ்ச்சியும் புரிவதென்றால், அது கயமையிலும் கயமையல்லவா?

திராவிட அரசர்களையும் திராவிட மக்களையும் அச்சுறுத்துவதற்காகவே இது போன்ற அவதாரக் கதைகள் அவிழ்த்துவிடப்பட்டன என்பது இவ்வளவு தெளிவாகப் புலப்படும்போது, கற்றுத் துறைபோகிய நம் தமிழ்ப் புலவர் பெருமக்கள் மட்டும் இன்னும் ஏன் அவற்றைத் தூக்கி வைத்துக்கொண்டு கூத்தடிக்கின்றனர் என்பதுதான் நமக்குப் புலப்படவில்லை!

“தங்கள் இனத்தை இழிவுபடுத்துவதற்கென்றே இன எதிரிகளால் இயற்றப்பட்ட கற்பனைக் கதைகளில் வரும் பாத்திரங்களைத் தங்கள் கடவுள்களாகவும், அவற்றின் நடத்தைகளைத் தாங்கள் பின்பற்றும் கொள்கைகளாகவும், அவற்றைத் தங்கள் இலக்கியங்களாகவும் கொண்டு போற்றும்-பின்பற்றும் அவற்றில் புலவர்களாகப் பெயர் பெற்று வாழும் இழிமக்களைத் தமிழ்நாடு தவிர்த்து வேறெந்தக் காட்டுப் பிரதேசங்களிலுங்கூடக் காணமுடியாது” என்று தமிழின மானமீட்புப் போர்த் தலைவர் அய்யா அவர்கள், ஏக்கத்தோடு குறிப்பிடும் நிலை மாறவேண்டாமா?

-விடுதலை நாளேடு, 14.10.17

அவதாரங்களின் அவலங்கள்!-2

-விடுதலை நாளேடு,15.10.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக