செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

அய்யப்பன் பிரம்மச்சாரியா? இரண்டு பெண்டாட்டிக்காரனா?



தமிழகத்தில் முருகனுக்கு கோவில்களில் திருவிழாக்களில் வள்ளித்திருமணம் ஆண்டுதோறும் நடத்தப்படுவதைப்போல், கேரள மாநிலம் ஆரியங்காவு அய்யப்பன் கோவிலில் ஆரியங்காவு தர்ம சாஸ்தா வுக்கும், புஷ்கலாதேவிக்கும்  நிச்சயதார்த்த விழாவாக பாண்டியன் முடிப்பு அதனைத் தொடர்ந்து திருமணம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறதாம்.

அய்யப்பன் சபரிமலையில் பிரம்மச் சாரியாகவும் குளத்துப்புழையில் பாலக னாகவும், இளைஞனாக புஷ்கலா தேவி யுடன் ஆரியங்காவிலும்,  அச்சன்கோவி லில் பூர்ணா, புஷ்கலா ஆகியோருடன் உள்ளான்.

கோவில் கேரளா பாணியில் இருந் தாலும் அங்கு நடைபெறும் உற்சவங்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் நடைபெறுவது போலவே கொண்டாடப்படுகிறது.  மதுரை பெண்ணான புஷ்கலா தேவியை ஆரியங் காவு அய்யப்பன் திருமணம் முடித்ததே காரணமாம்.

திருவிதாங்கூர் மன்னனுக்கென பட் டாடைகளை நெய்த நெசவு வியாபாரி, தன் மகள் புஷ்கலாவையும் அழைத்துக் கொண்டு பயணம் சென்றாராம்.

காட்டு வழியில் பெரும் ஆபத்து என்ப தால், ஆரியங்காவு சாஸ்தா கோயில் அர்ச்சகனின் வீட்டில் மகளை பாதுகாக் கும்படி ஒப்படைத்து விட்டுச் சென்றாராம்.

மலர்களை பறித்து அய்யப்பனுக்கு மாலை தொடுத்த புஷ்கலா, நாளடைவில் அய்யப்பன் மீது அபரித அன்பு கொண் டாளாம்.

மாயமான தர்மசாஸ்தா மன்னரிடம் ஆடைகளைக் கொடுத்து விட்டு நெச வாளியான வியாபாரி திரும்பும்போது, காட்டில் மத யானை ஒன்று, வியாபா ரியைத் தாக்க வந்ததாம். அப்போது ஒரு இளைஞன் யானையிடம் இருந்து அவரை காப்பாற்றினானாம். அப்போது வியாபாரி அந்த இளைஞனிடம் என்ன வேண்டுமோ கேள் என்றாராம்.  உங்கள் பெண்ணை திருமணம் செய்து தருகிறீர்களா? என் றதும், வியாபாரியும் சம்மதம் தெரிவித் தாராம்.

உடனே அந்த இளைஞர் திடீரென மாயமாகி விட்டானாம். குழப்பத்துடனேயே ஆரியங்காவு திரும்பிய அந்த வியாபாரி, அய்யப்பனாக கருவறையில் கோயில் கொண்டிருப்பது, தன்னை மத யானையிட மிருந்து காப்பாற்றிய இளைஞன் வடிவில் இருப்பது கண்டாராம்.

அய்யப்பனே நேரில் வந்து புஷ்கலாவை கரம் பிடித்ததாக கூறுகிறது புராணம். அந்த வகையிலேயே ஆரியங்காவு அய்யப்பன் கோவிலில் ஆண்டு தோறும் திருக்கல் யாணத் திருவிழா நடைபெற்று வருகிறதாம்.

திருவாங்கூர் மன்னர், தேவசம் போர்டார், சவுராஷ்டிரா மக்களை சம்பந்தி முறையில் அழைப்பிதழ் அனுப்பி சிறப்பித்து வருகின்றனராம்.

சவுராஷ்டிரா சமூகத்தினர் ஆரியங்காவு தேவஸ்தான சவுராஷ்டிரா மகா ஜன சங்கம் மதுரை என்ற அமைப்பை ஏற்படுத்தி சம்பந்தி உறவு முறையில் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்று திருவிழாவினை நடத்தி வருகின்றனராம்.

அய்யப்பன் பிரம்மச்சாரி என்கிறார் களே எது சரி? இதேபோல விநாயகன் பிரம்மச்சாரி என்பர். சத்தி-முத்தி இரு மனைவிகள் உண்டு என்பர்.

உளறலுக்கு ஓர் அளவே இல்லையா இந்து மதத்தில்?

-  விடுதலை ஞாயிறு மலர், 12.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக